• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

துணை - 4

STN - 95

New member
திறன்பேசியுடன் வெளியே வந்த தேவிபிரியா சுற்றி முற்றி, அவன் எங்கே இருக்கிறான் என்று பார்வையால் தேட, அப்போது அவனின்றி தனியாக வந்த தேவாவை கண்டு “மாமா..” என்றழைத்தாள்.

அவள் அழைப்பில் விழித்து வேற யாரையும் அழைக்கிறாளோ என்று பின்னே திரும்பி பார்தவனிடம் “உங்கள தான் தேவா மாமா கூப்பிட்டேன்” என்றதும் புருவம் உயர்த்தியப்படி அவளின் முன் வந்தவன் “என்ன எதுக்கு மாமான்னு கூப்பிற”

“அது நானும் சமும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் சின்ன வயசுல இருந்து.. சோ அவ யார எப்படி கூப்பிடுறாளோ
அப்படியே நானும் கூப்பிட்டு பழகிட்டேன்.. இப்போ அவளுக்கு நீங்க மாமான்னா எனக்கு மாமா தான.. அதுனால தான் நானும் மாமான்னு கூப்பிட்டேன் உங்களுக்கு பிடிக்கலன்னா நான் அப்படி கூப்பிடல” என்றவளுக்கு ஏனோ அவன் அப்படி கேட்டது சங்கடமாகி விட்டது.

அவளின் குணத்தை அன்னையின் மூலம் அறிந்தவனுக்கு, ஏனோ அவள் உரிமையாக அழைப்பது பிடிக்கவே செய்ய “ஏய் பியூட்டி.. நான் சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.. நீ மாமா கூப்பிடுறது நல்லா தான் இருக்கு அப்படியே கூப்பிடு” என்றதுக்கு பெண்ணவள் புன்னகைத்து தலையையாட்ட,

“அது சரி எதுக்கு கூப்பிட்ட”

“அவர் எங்க” என்றவள் தயங்கி துப்பாட்டாவை பிசக்கியப்படி நிற்க, பெண்ணவள் தன் சகோதரனை தான் கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டு இதழ் மடித்து சிரிப்பை அடக்கியவன் “எவர கேக்குற”

“அதான் அவரு.. உங்க பிரதர்”

“அவன் மாடி பக்கமா போனான்.. அவன எதுக்கு தேடுற”

“அது இன்னைக்கு ஸ்டேஷன்ல அவர தப்பா புரிஞ்சிக்கிட்டு ரூடா நடந்துக்கிட்டன்.. அதான் மன்னிப்பு கேக்கலாம்ன்னு” என்றதுக்கு புன்னகைத்தவன் “அவன் சொன்னான்..” என்று உண்மை நிகழ்வை அவளிடம் எடுத்து கூறினான்.

அதில் மேலும் சங்கடமாகியவள் “சாரி மாமா.. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டன்_

“இத அவன்கிட்டயே போய் சொல்லு” என்று அவன் வேலையை பார்க்க சென்று விட, பெண்ணவள் தயக்கத்துடன் மாடியேறி செல்ல,

அவ்விடம் புகைத்து கொண்டிருந்த விக்னேஷ்வரனோ தன்னருகில் நிழலாடுவதை உணர்ந்து புகையை கீழே போட்டு மிதித்துவிட்டு நிமிர்ந்தவன், பெண்ணவளை கண்டு முறைத்து அங்கிருந்து விலக எத்தனிக்க,

அவன் விலகியதும் குரலை செருமிய தேவிபிரியா “கொஞ்சம் தனியா பேசணும்” என்றும் கூட அவன் செல்ல போனதில் ‘ஹலோ பேசணும் சொன்னா போறீங்க” என்க,

அதில் நடையை நிறுத்தி பெண்ணவளை ஏறிட்டவன் “நீ தான தனியா பேசணும் சொன்ன” என்றவனின் வார்த்தையில் ‘மொக்க டயலாக் போட்டு படுத்துறான்’ என்று உள்ளுக்குள் முணுமுணுத்து விட்டு வெளியே அதனை காட்டிக் கொள்ளாமல் “இல்ல.. உங்ககிட்ட பேசணும்” என்க,

‘இவளுக்கு மரியாதைலாம் பேச தெரியுமா’ என்று நினைத்தப்படி, அவள் முன்னே வந்த விக்கி “ம் சொல்லு” என்றதை கேட்டு இதழ் குவித்து ஊதிய பிரியா “ஆட்சுவலி நீங்க என்னோட ஷால கைல சுத்தி வச்சிருந்தத பாத்து தப்பா நினைச்சி அடிச்சிட்டன்.. ஐ அம் சாரி” என்றவளுக்கு அவனை தவறாக நினைத்து அடித்து விட்டதை நினைத்து இப்போது மெய்யாலுமே வருத்தமாகி விட்டது.

அவளின் வார்த்தையில் தெரிந்த கவலையை உணர்ந்த விக்கி “இப்போ மட்டும் எப்படி சரியா தோணுச்சு”

“அது அத்தமா நமக்குள்ள என்ன பிரச்சினைன்னு கேட்டாங்க நானும் சொன்னேன்.. உடனே என்ன நடந்ததுன்னு அவன்கிட்டயே கேட்டு இருக்கலாம் சொன்னாங்க.. அப்போ தான் நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டன் தோணுச்சு.. அப்புறம் தேவா மாமா நடந்தத சொன்னார்” என்றவள் தவறை உணர்ந்து தலையை குனிந்து கொள்ள,

அவளை கெத்தாக கண்டுவிட்டு இப்படி காண பொறுக்காத விக்கி “சரி விடு.. உன் தப்பு இதுல எதுவும் இல்ல.. அந்த நேரம் யாராயிருந்தாலும் அப்படி தான் ரியாக்ட் பண்ணிருப்பாங்க” என்றதை கேட்டு விருட்டென்று நிமிர்ந்தவள்,

அவன் தன் செயலுக்கு நியாயம் கூறியதில் விழிகளை விரித்து “அப்போ என்மேல கோவம் இல்லையா” என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் அவளின் விரிந்த விழிகளில் சிக்கி தொலைந்த ஆடவன், பின் தலையை உலுக்கி கொண்டு “இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்.. பட் முதல இருந்துச்சு இப்போ நீ சாரி கேட்டது நீ புரிஞ்சிக்கிட்டத எக்ஸ்பிளைன் பண்ணினதும் போயிடுச்சு”

“அப்போ நிஜமாவே இப்போ என்மேல கோவம் இல்லையா” என்று பெண்ணவள் நம்பாமல் மறுபடியும் கேட்க,

அதில் புன்னகைத்து இல்லையென்று தலையாட்டியவனின் சிரிப்பை கண்டு ‘சிரிச்சி அழகா தான்யா இருக்கான்’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பின் இருவருக்குள்ளும் மொளனம் ஆட்சி செய்ய, தானே அதனை களைத்த விக்கி “சரி அப்போ வேலை விஷயமா தான்.. இங்க தான் வந்தீங்களா”

“ஶ்ரீமா பங்ஷனுக்கும் சேத்து தான் வந்திருக்கோம்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்க” என்று கண் சிமிட்ட,

ஏனோ அவள் விழிகளில் மயக்கும் சக்தியை உணர்ந்தானோ, என்னவோ அதற்கு மேல் முடியாமல் பார்வையை வானை நோக்கி திருப்பி “ஓ சரி.. இங்க என்ன கண்டுபிடிக்க வந்திருக்கீங்க” என்றதும் முதலில் தயங்கிய பிரியா,

பின் அடித்ததில் ஏற்ப்பட்ட குற்றயுணர்வில் மறைக்க தோன்றாமல் இடம் நேரமென்று மொத்தத்தையும் அவனிடம் கூறியவள் “இத பத்தி யார்கிட்டேயும் சொல்லாதீங்க பிளீஸ்.. ஏனோ நீங்க கேட்கும் போது மறைக்க தோணல.. அதான் சொல்லிட்டேன்”

“யார்டயும் சொல்ல மாட்டேன்” என்று மறுபடியும் செல்ல போனவளை தடுத்தவள் “அப்புறம் ஒரு நிமிஷம்..” என்று அவன் நின்றதும் “சொல்லுறேன் தப்பா நினைக்காதீங்க.. இனி சிகரெட் பிடிக்காதீங்க”

“உன்கிட்ட அமைதியா பேசுறதுனால நீ சொன்னத கேட்க நான் அடிமை இல்ல.. சோ உன் லிமிட்க்குள்ள இருந்துக்க” என்று அவன் சென்று விட,

அவனின் பேச்சில் எழும் வலியை கட்டுப்படுத்தியவள் “நல்லது சொன்னா யாரு கேக்குறா.. அவன் எக்கேடு கெட்டா எனக்கு என்ன” என்று தன்னை தானே சமாதானம் படுத்தி கொண்டாள்.
***
இங்கு கீதாராணியுடன் விஜிதாயிருந்த அறைக்குள் நுழைந்த சம்யுக்தாவின் கண்களோ உணர்வின்றி படுக்கையில் கண்மூடியிருந்த தன் அத்தையை கண்டு, அவரின் இத்தகைய நிலைக்கு காரணம் நிகழ்வுகள் கண்முன் வந்து போக,

அவளையும் மீறி கண்கள் கலங்கி விட “இன்னும் எத்தன காலம் அத்த படுத்தே இருக்க போற.. உன் மருமகள பாக்க ஆசை இல்லையா.. கண்ண திறந்து பாருத்த.. எதையும் நினைச்சி கவலப்பட கூடாதுன்னு சொல்லுவியே

ஆனா நான் உன்ன நினைச்சி தான கவலப்படுறேன் எழுந்து வந்து கவலப்படாத நான் இருக்கேன் சொல்லு அத்த.. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் ஆனா உனக்கு என்ன பிடிக்கவே இல்ல தான.. அதான் நான் முன்னாடி வந்தும் மிஸ் பண்ணாம ஜாலியா தூங்கிட்டு இருக்க” என்று வடியும் கண்ணீரை துடைத்தவள் “இங்க பாரு.. ஶ்ரீமா பங்ஷன் முடிச்சி நான் வந்த வேலைய முடிச்சி போகிறதுக்குள்ள நீ என்ன தேடி வரலன்னு வச்சிக்க.. அப்புறம் நீயே ஆசைப்பட்டாலும் இந்த வீட்டு வாசப்படி.. நான் சாகுறவர மிதிக்க மாட்டேன்.. இது உன் மேல சத்தியம் அத்த” என்று அவரின் கையில் மேல் வைத்து சத்தியம் செய்தவள் முடியாமல் குலுங்கி அழுது விட,

மருமகளின் வார்த்தையை கேட்டு வேதனையடைந்த கீதாராணி, அவளை ஆதரவாக அணைத்து சீக்கிரமே அவ கண்ணு முழிப்பா நீ அழாதடா பப்பு என்றவள் கடினப்பட்டு மருமகளை சமாதானம் செய்து, அவளின் அறையில் படுக்க வைத்துவிட்டு நெற்றியில் இதழ் பதித்து எதையும் யோசிக்காம “ரெஸ்ட் எடு பப்பு” என்று அங்கிருந்து விடை பெற, இரவு வேலையை கருத்தில் கொண்டு சோகத்துடனே உறங்கி போனாள்.

விக்கியிடம் பேசிவிட்டு வந்த தேவிபிரியாவும் கூட தோழி தூங்குவதை கண்டு தானும் அவளை அணைத்தப்படி உறங்கி விட்டாள்.
****
இரவு தாமதமாகியும் இருவரும் உறக்கத்தை விட்டு கலையாததில், அசந்து உறங்கும் இரு பெண்களையும் எழுப்ப மனமின்றி ஹாட் பாக்ஸில் அவர்களுக்கான உணவை அபிராமி வைத்துவிட்டு சென்றார்.

பின் இரவு பதினொரு மணி போல் கண்விழித்த சம்யுக்தா, தன்னை கட்டிப்பிடித்து உறங்கும் தோழியை அடித்து எழுப்பினாள்.

அதில் தலையை சொரிந்தப்படி கண்விழித்த தேவிபிரியா “பேயே அர்த்த ராத்திரில ஏன்டி எழுப்புற” என்றதில் கடியாகிய சம்யுக்தா தன்னுடைய தலையணை தூக்கி தோழியின் மேல் வீசிவிட்டு “அடியே நம்ம இங்க என்ன வேலைக்கு வந்தோம் நினைவு இருக்கா.. நைட் போகனும் சொன்னேன் தான பக்கி” என்றதும் மொத்தமாக விழிகளை விரித்து எழுந்து அமர்ந்தவள்

“அட ஆமால.. இப்போவே மணி 11 ஆயிட்டு கொஞ்சம் முன்னாடியே எழுப்பி விட்டுருக்கலாம்ல”

“போடிங்..” என்று மேலும் கெட்ட வார்த்தை திட்ட வந்த தோழியின் வாயை மூடி “நோ பேட் வேர்ட்ஸ்டி உன் பங்கு பாவம்ல” என்றவளை தள்ளிவிட்டு எழுந்தவள் “அடிங் பீப்டீன் மினிட்ஸ் தான் டைம் அதுக்குள்ள கெட்அப் போட்டு வரல மவளே போற இடத்தில உனக்கு குழி தோண்டிடுவேன்” என்று கட்டயளையிட்டு விட்டு தானும் தயாராகும் பணியை காணலானாள்.

சம்யுத்கா கூறிய நேரத்திற்கு இருவருமே மொத்தமாக தங்களை மறைக்கும் உடை அணிந்திருக்க, சம்யுக்தா தன் தோள் பையை எடுத்து மாட்டிக்கொண்டு “சரி டி.. இந்த ஜன்னல் வழியா போயிடலாம்.. அப்போ தான் யாருக்கும் டவுட் வராது” என்று முகத்தை மறைக்க மாஸ்க்கை மாட்ட, எத்தனித்தவள் பாவமாக முகத்தை வைத்திருந்த தோழியை கண்டு “என்னாடி சில போல நிக்கிற வா” என்று அழைக்க,

அபிராமி வைத்து சென்ற ஹாட் பாக்ஸை ஏக்கமாக பார்த்த தேவிபிரியா சோறு என்று விட,

அதில் கடியாகி தன் தலையில் அடித்து கொண்டவள் “எப்படியும் போகிற இடத்தில திங்க தீணி எடுத்துட்டு வருவ தான”

“இப்போ பசிக்கும்ல நான் சாப்பிட வேண்டாமா.. அதோட அபிமா எதுக்கு சாப்பிடலன்னு கேட்டா மாட்டிப்போம் தான” என்றவளின் பாவனையில் சிரிப்பு வந்தாலும் இதழ் கடித்து அடக்கியவள் வெளியே வெறப்பாக சோத்து மூட்ட.. இப்போ என்ன திங்கனும் தின்னுட்டே போகலாம் என்று அவளுக்கு சாப்பிட அனுமதி கொடுக்க,

அதில் முத்து பற்கள் தெரிய சிரித்த தேவிபிரியா கையில் அணிந்திருந்த உரையை கழட்டிவிட்டு சாப்பிட அமர, பின் அவளின் வற்புறுத்தலுக்கு இணங்க சம்யுக்தாவும் உணவை கொறித்து வைத்தாள்.
***
சம்யுக்தா சாப்பிட்டு முடித்து மறுபடியும் கை உரையை மாட்டிவிட்டு தோழியை முறைத்தப்படி அவளுக்காக காத்திருக்க,

அவளின் முறைப்பை துசி போல் கண்டு கொள்ளாத தேவிபிரியா வயிறு நிறையும் வரை உணவை முடித்துவிட்டே எழுந்து கொண்டாள்.

அதற்கே அரைமணி நேரம் கடந்திருக்க, அவிழ்த்த கை உரையை திரும்ப மாட்டிகொண்டவள் வயிற் நிறைந்த திருப்தியில் பெரிய ஏப்பாம் விட்டு “ஹப்பா இப்போ தான் வயிறும் மனசும் நிறைஞ்சிருக்கு.. இந்த புலப்பு தான் நல்ல ருசி சாப்பிட கிடக்கு.. ஹா ஹா என்ன ருசி” என்று சாப்பிட்ட உணவை பாராட்டி தள்ள,

பிறகு தான் அனல் சுட்டதில் “ஆத்தி முறைக்குறாளே..” என்று பீதியை உள்ளுக்குள் மறைத்தவண்ணம் தோழியின் அருகில் வந்து தன்னுடைய தோல் பையை மாட்டிக்கொண்டவள் “என்ன பங்கு ஐ னோ.. நான் அழகு தான்.. அதுக்காக சைட் அடிச்சிட்டே இருந்தா வந்த புலப்ப யாரு பாக்குறது.. கொஞ்சமாவது டீ டிகாஷன் இருக்க வேண்டாம் சில்லி கேர்ள்” என்று தோழி கன்னம் “தட்டி டைமாகுது பங்கு.. நான் உன்கூட தான இருக்க போறேன் போயிட்டு வந்து ஆற அமர ஃபையர் விடு என்று முகத்தையும் மாஸ்க் போட்டு” மறைத்து கொண்டாள்.

அவள் தாமதமாகியதை விட, அதை சமளிப்பதற்கு பேசிய வார்த்தைகளில் கடியாகிய சம்யுக்தா நேரம் செல்வதை உணர்ந்து தோழியை முறைத்துவிட்டு “முத நீ ஜன்னல் வழியா இறங்கு.. நான் பின்னாடி வரேன்” என்க,

அதை கேட்டு நல்ல பிள்ளையாக தலையாட்டி ஜன்னல் அருகில் சென்று குனிந்து பார்த்த தேவிபிரியா, அதன் உயரத்தில் மிரண்டு “அடி ஆத்தி” என்றபடி நெஞ்சில் கைவைத்த “நிதி அடியே கொஞ்சம் மிஸ் ஆனாலும் எழும்பு கூட மிஞ்சாதுடி.. பேசாம நான் டோர் பக்கம் திறந்து வரவா”

“அசிங்கமா எதாவது பேசிட போறேன்.. மூடிட்டு அங்கங்க இருக்கிற செல்ஃப்ல நடந்து பைப் பிடிச்சி கீழ இறங்கிற வழிய பாரு.. இல்லன்னா நான் உனக்கு வேலை வைக்காம ஸ்ட்ரெய்ட்டா கீழ லிஃப்ட் பண்ணி விட்ருவேன்” என்றதில் ‘அட பாதகத்தி தள்ளி விட்டு கொல்ல பிளான் போடுறா.. இவ கூட சேந்ததுக்கு கன்னி கழியாம தான் சாக போறோம்’ என்று உள்ளுக்குள் மரண பீதியில் தத்தளித்த

தேவிபிரியா ‘முன்னபின்ன இந்த குரலி வித்தைலாம் காட்டிருந்தா தான தெரியும்.. எப்போவும் டோர் வழியா ஸ்மூத்தா போயிட்டு ஸ்மூத்தா வருவோம்.. இன்னைக்கு ஜாக்கி ஜான் போல சாகசம்லாம் பண்ண சொல்லுறா அப்பனே முருகா உன் பிள்ளைய காப்பாத்துபா’ என்று தோழி கேட்கும் வண்ணமே புலம்பிவிட்டு ஜன்னல் வழியே பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இறங்கினாள்.

- துயர் தொடரும்...
 
Top Bottom