துணை - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
இரு ஆடவர்களுமே தாங்கள் வந்ததற்கான விளக்கத்தை கொடுத்து முடித்திருக்க விக்னேஷ் தான் “சரி அடுத்து என்ன” என்றதுக்கு தேவிபிரியா “குகை எங்கன்னு கண்டு பிடிக்கணும்” என்றாள்.

அதில் தாடையை தடவி சிந்தித்த தேவா “இவ்வளவு பெரிய காட்டுல நாலு பேரும் ஒரே இடத்தில தேடினா.. குகை கண்டு பிடிக்க முடியாது.. சோ ப்ரோ நீயும் தேவியும் ஒரு பக்கம் தேடுங்க.. நாங்க இன்னொரு பக்கம் தேடுறோம்” என்றதை கேட்டு சம்யுக்தாவை தவிர மற்ற இருவருக்கும் சரியென தோன்ற, சம்மதமாக தலையாட்டினார்கள்.

இப்போது சம்யுக்தா “நீ என்கூட வர வேண்டாம்.. நான் பாத்துக்கிறேன்”

“நான் வரவா வேண்டாமான்னு உன்கிட்ட பெர்மிஷன் கேக்கல..” என்று சகோதரனுக்கு கண்ணை காட்ட, அதன் அர்த்தம் உணர்ந்து காதில் ப்ளூடூத் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டவன், தேவாவுடன் அதில் அழைப்பு இணைத்து விட்டு தேவிபிரியாவுடன் அங்கிருந்து விடை பெற,

தன்னுடையதை காதில் மாட்டிக்கொண்டவன் வர மாட்டேன் என்று வீம்பாக நின்ற சம்யுக்தாவின் கையை பற்றி இழுத்து சென்றான்.
***
விக்கியுடன் நடந்து சென்ற தேவிபிரியா குரலை செரும,

அதன் அர்த்தம் உணர்ந்து “என்ன” என்று கேட்டிருந்தான் ஆடவன்.

அதற்கு தேவிபிரியா “அது நான் ஈவ்னிங் உன்கிட்ட சொன்னத நினைவு வச்சி இவ்வளவு தூரம் வந்திருக்கியே.. ஏன்னு தெரிஞ்சிக்கலாமா”

“நீங்க என் வீட்டு பொண்ணுங்க.. பல வருஷம் கழிச்சி எங்கள நம்பி வந்திருக்கீங்க சோ நீங்க காட்டுக்கு போறீங்க தெரிஞ்சி.. பொம்பள பிள்ளைங்கள எக்கேடு கேட்டா எனக்கு என்னன்னு இருக்க.. நானும் ஒன்னும் அரக்கன் இல்ல.. என் அம்மா ரெண்டு பேரும் அப்படி வளக்கல” என்றவனின் முகம் சற்று அன்னை நினைவில் வாடி விட,

அதை கண்டு கொண்டவளும் “இவ்வளவு தான் காரணமா” என்றவளின் பேச்சின் மாற்றத்தை உணர்ந்து கொண்டவனும்

“ஆமா.. இதான் காரணம் நீ ஓவரா கற்பனைய விடாத”

“ஓ..” என்றவள் அதற்கு மேல் அமைதியாக நடையை தொடர்ந்தாள்.

அவளின் அமைதி ஆடவனுக்கு வெறுமையானது போல் தோன்ற ‘ச்ச என்னாச்சி எனக்கு’ என்று எண்ணி தன் எண்ணம் போகும் போக்கில் நொந்து தன்னை கட்டுப்படுத்தி கொள்ள, ஏனோ அது தோல்வியையே கிட்டியதில் தானே மொளனத்தை கலைத்தான்.

“அது சரி பயம் இருக்கிறவளுக்கு எதுக்கு இந்த வேலை கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா என்னயாகிருக்கும்”

“செத்து போயிருப்பேன்” என்றவள் ஒரு கணம் நிறுத்தி “கூடவே அவளும் செத்து போயிருப்பா” என்றவளின் பேச்சில் அதிர்ந்து தன்னை நோக்கி திரும்பியவனை கண்டு “என்ன அப்படி பாக்குற.. நான் உண்மைய தான் சொல்லுறேன்.. எனக்கு எதாவது ஒன்னுன்னா அவளும், அவளுக்கு எதாவது ஒன்னுன்னா நானும் உயிரோடவே இருக்க மாட்டோம்.. நாங்க வெறும் பெருமை பீத்திக்குற ப்ரெண்ட்ஸ்ன்னு நினைச்சியா.. ஒன்னாவே வளந்தோம் ஒன்னாவே வாழ்ந்தோம் ஒன்னாவே செத்துருப்போம்” என்றாள்.

அவனுக்கோ பெண்ணவளின் பேச்சில் தெரிந்த உறுதியிலே கண்டிப்பா செய்வேன் என்பது போல் தான் இருக்க, என்ன மாதிரின்னா நட்பு என்று ஆடவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் மட்டும் இல்ல, அவன் காதில் மாட்டிருந்த கருவி மூலம் இவர்கள் இருவரும் பேசி கொண்டதை கேட்டு தேவாவின் எண்ணமும் அதாக தான் இருந்தது.

பின் பெண்ணவளே பேச்சே தொடர்ந்து “அவ எப்போவுமே ஸ்டெடியா தான் இருப்பா.. வேலை நேரத்துல எப்போவுமே அவ ஃபோகஸ் மிஸ் ஆகாது.. அது மட்டுமில்ல அவளுக்கு இந்த ஊருக்கு வர கொஞ்சமும் இஷ்டம் இல்ல.. அட்லீஸ்ட் ஶ்ரீமா பங்ஷன் முடிச்ச அடுத்த செகண்ட் கிளம்புற பிளான் தான்.. ஆனா அத்தமா அபிமா ஶ்ரீமா பாட்டிலாம் அவ உடனே ஏன் கிளம்பனும் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க..

அப்போ தான் இந்த மிஷன் பத்தி எனக்கு தெரிஞ்சிது.. சோ சார்கிட்ட நானே பேச்சி எங்கள இதுல கோர்த்து விட்டுட்டேன்.. அதோட அவ இந்த மிஷன் எடுக்க மாட்டேன் சொன்னா.. நான் தான் அவ மண்டைய கழுவி இதுக்குள்ள இழுத்து விட்டுருக்கேன்..” என்றவளின்

முகம் சற்று வாடி “நான் அவ ப்ரெண்ட் தான் கூடவே தான் இருந்துருக்கேன் ஆனாலும் எனக்கு அவ கருப்பு பக்கம் எதுவுமே தெரியாது.. அதிக நேரம் ரொம்ப டிப்பெரேஸ்ட் ஆகிடு வா.. முன்னாடி போல சிரிச்சி கூட பேச மாட்டா சொல்ல போனா அவ பேசுறதே கம்மி தான்.. இன்னைக்கு அவ ஃபோகஸ் தப்ப காரணம் கூட நான் பேசினது எதாவது அவளுக்கு பழச நினைவுப்படுத்திருக்கும்..

ஊருக்கு வந்ததுல இருந்து அவ சரியேயில்ல.. ஊருக்கு கூட்டிட்டு வந்து அவள மொத்தமா சரி பண்ணிடலாம் தான் நினைச்சேன்” என்று முடித்து ஆடவனின் முகம் பார்த்தவள் “ஏன் விச்சு நீயும் அவ ஃபேமிலி தான.. அவ பாஸ்ட்ல என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா”

“நான் தேவாக்கு சித்தப்பா பையன் தான்.. நானும் அவனும் ஒன்னாவே சுத்தினாலும் சம் வீட்டு பக்கமே வந்தது இல்ல..” என்றவன் ஏதோ சொல்ல வந்து விழுங்கி கொண்டான்.

அவள் இருந்த கவலையில் அதனை கவனிக்க தவறி விட்டு “ம்.. அவ பிறந்து இப்போ தான் அத்தமா இங்க வந்திருக்காங்க எனக்கு தெரியும்.. அதுலயும் ஸ்கூல் டைம்ல அவ அப்பாக்கு தெரியாம அத்தமா பாக்க வருவா கூடவே நானும் வந்திருக்கேன்..” என்றவள் ஒரு நொடி சிந்தித்து “அப்போ தேவா மாமாக்கு கூட தெரிய வாய்ப்பு இல்ல தான” என்றதுக்கு ஆடவனும் இல்லையென்று தலையாட்டினான்.

“ஆமா.. நான் அத்தமா பாக்க அடிக்கடி வந்திருக்கேன்.. ஆனா உன்ன பாத்ததே இல்லையே.. அதோட உன் ஃபோட்டோ கூட அங்க இருந்தபோல இல்ல.. ஏன் தேவா மாமா ஃபோட்டோ கூட இல்ல ஆனா அவர் பேபி ஃபோட்டோ மட்டும் பாத்திருக்கேன்” என்றவளின் கேள்வியில் எழும் புன்னகையை இதழ் கடித்து அடக்கியவன் “அது அப்போ அம்மா அப்பா இருந்ததுனால கீதாமா பாக்க அப்போ அப்போ வந்துட்டு போவேன்” என்றவனின் இதழ் அந்த நாட்களை எண்ணி கசந்த முறுவல் பூத்தது.

ஏனோ வாடிய முகம் காண சகிக்காத மங்கை இனி பழயவை கேட்க கூடாது என்ற தீர்மானத்துடன், பேச்சை மாற்றி கொண்டாள்.
***
மறுபுறம் தன் கை பற்றி இழுத்த தேவாவின் கரத்தை உதறிய சம்யுக்தா “எனக்கு நடந்து வர தெரியும்.. நீ என்ன தொடாம தள்ளியே வா” என்றப்படி நடக்க,

அவளின் வார்த்தையில் சினம் எழுந்தாலும் இருக்கும் நிலை கருதி கட்டுப்படுத்தி கொண்டு, அவள் பின்னே தொடர்ந்தவன் “ஏய் உன்னலாம் அந்த யானைகிட்ட பழியாகி சாகுன்னு விட்டுருக்கணும்டி காப்பத்தினா தேங்க்ஸ் சொல்லலனாலும் திமிரு எடுத்து பேசுற பாத்தியா”

“இந்த மாதிரி ஆபத்துலாம் வரும் தெரிஞ்சி தான்.. இந்த துறைல இறங்கிருக்கோம்.. தவளை சாக போறோம் தெரிஞ்சி கத்தாமலா இருக்கு.. அது போல தான் உயிருக்கு பயந்தா இங்க டாக்டர் போலீஸ் அரசியல்ன்னு எதுவுமே நாட்டுல பாக்க முடியாது.. எப்படியும் சாக தான் போறோம்..

அது புடிச்ச வேலைய பாத்துட்டு கெத்தா உயிர் போகிறது எந்த பிராப்ளமும் இல்ல எங்களுக்கு” என்றவளின் தைரிய வசனத்தில் பெண்ணவளை இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தவன், அப்போது தான் மறுமுனையில் இருவரும் பேசியதை கேட்டு அவர்கள் நட்பு ஆடவனை வியப்பில் ஆற்றியது.

அதோடு சம்யுக்தாவை பற்றி கூறியதை கேட்டு கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எண்ணியப்படியே அருகே வந்து கொண்டிருந்த முகத்தை பார்த்தவனுக்கு அவளின் இறுக்கமே ஏதோ இருக்கிறது என்று உணர்த்தியது.

பிறகு அவள் புகைப்படம் பற்றி கேட்டதும் தன் சகோதரனின் புன்னகை உணர்ந்த தேவாவிற்கும் கூட புன்னகையை அறும்ப, சட்டென்று வேற ஏதோ நினைவை நினைத்து நொடியில் புன்னகையை விரட்டி விட்டான்.

அதன் பின் அவர்கள் வேறு வேறு கதைகள் பேசியதில் ‘இவ வாய் மூடுறது ரொம்ப கஷ்டம் போலவே’ என்று தேவியை பற்றி எண்ணி கொண்ட தேவா சம்யுக்தாவிடம் “நீ சொன்னதுலாம் கரெக்ட் தான்.. ஆனா உன்னோட ஃபோகஸ் கொஞ்சம் மிஸ் ஆகினாதுல தேவிக்கு எதாவது ஆகிருந்தா.. அவ வீட்ட பத்தி நினைச்சி பாத்தியா” என்க,

அவனின் கேள்வியில் புன்னகைத்த சம்யுக்தா “அத நினைச்சி பாக்க.. எனக்கு டைமிருக்குமா என்ன.. போனா ரெண்டு பேரும் சேந்து தான சொர்க்கத்துக்கு போவோம்.. வெல் நான் உயிர் வாழ காரணமே அந்த குடும்பமும் என் நட்பும் தான்.. எப்படி என்னோட ஃபேமிலிலயும் அவள ஒருத்தி பாக்காங்களோ அப்படி தான் அவ ப்ரண்ட்ஸ் என்ன அவங்க பொண்ணா பாத்தாங்க.. அவங்களுக்கு தெரியும் ஒருத்தருக்காக இன்னொருத்தர் எப்போவும் உறுதுணையா இருப்போம்ன்னு.. அது எப்படிப்பட்ட உறுதுணைன்னு அவங்களுக்கு புரியாம இல்ல.. அண்ட் அவ உயிரு போனா கூட அதுக்கு நானே காரணமா இருந்தாலும் அத அவங்க ஏத்துக்க மாட்டாங்க..

அதை போல தான் நம்ம வீட்டுலயும் எனக்கு எதுவானாலும் கூட அவள பழி சொல்ல மாட்டாங்க.. இப்படி எங்கள புரிஞ்சிக்கிட்ட அவங்களுக்காக கண்டிப்பா ரொம்ப வருஷம் ரெண்டு பேருமே உயிரோட ஒத்துமையா இருப்போம்” என்க,

தேவியின் பதிலும், இவளின் ஒன்றாக உறுதியாக வந்ததை கேட்டு மலைத்து போன தேவாவோ “எப்படி கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி யானைக்கு புட்டாக பார்த்து போலயா” என்று வாரி விட,

அவனை முறைத்தவள் “கரெக்ட் தான்.. ஆனா அதுக்குள்ள சூழ்நிலைய தேவி கைல எடுத்துருப்பா.. அவளுக்கு பயம் உண்டு தான் ஆனா அதே அளவு தைரியமும் இருக்கு.. எனக்காக பயந்த மாதிரி பேசுவாளே தவிர ரெண்டு பேருக்கும் எங்கள பாதுக்காக்க தேவையான பயிற்சிகள் இருக்கு..” என்றவளின் வார்த்தை சத்தியமான உண்மை தோழியின் நிலை உணர்ந்து தான், தன்னுடைய துப்பாக்கியை எடுத்திருந்தாள் பெண்ணவள்,

இதில் குறை என்னவென்றால் எப்போதும் இருவரும் பயன்படுத்தும் ஆயதத்தை தனியாக பயன்படுத்திருப்பாள்.

அதோடு அருகே வரும் யானை சத்தத்தில் கொஞ்சம் அள்ளு விட்டிருந்தாலும் கண்டிப்பாக தன்னையும் தன் தோழியையும் யானைக்கு இறையாக்கிருக்க மாட்டாள் என்ற தோழியின் கணிப்பு சரி என்றும் விதமாக, விக்னேஷிடம் தன் விளக்கத்தை கொடுத்து கொண்டிருந்தாள் தேவிபிரியா.

அதில் இரு ஆடவர்களின் இதழ்களும் அவர்களின் ஒற்றுமையான வார்த்தை மற்றும் நட்பை கேட்டு ரசனையாக விரிய, இரு ஆடவர்களுமே காது கருவி மூலம் இரு பெண்கள் பேசுவதை கேட்டததாலே அவர்களின் நட்பின் ஆழத்தை காணவே ஒரே கேள்வியே மாறி மாறி கேட்டு கொண்டு இருவரின் பதிலும் ஒரே போல் வந்ததில் அவர்களின் மனமோ சொல்ல முடியாவண்ணம் திருப்தியாகவே இருந்தது.

சில நிமிடம் இருவரும் அமைதியாக கண்களுக்கு மட்டும் வேலையை கொடுத்து கொண்டிருக்க, அப்போது அக்காட்டியில் நரி ஊழையிடும் சத்தம் கேட்டு நொடியில் சம்யுக்தாவை இழுத்து கொண்டு ஒரு பாறையின் மறைவில் மறைந்து கொண்டான்.

அதோடு நரி செல்லும் திசையை பெண்ணவளை தன் கைவளைவுக்குள் வைத்தபடியே நோட்டமிட்டவன் அது வந்த வழியாக சென்றதும் மூச்சை விட்டிருந்தான்.

அதை உணராத பாவையோ, அவனின் அணைப்பிலிருந்து விலக முயற்சித்து ஆடவனின் மார்பிலே அடிக்க, நரியின் மேல் கவனம் வைத்திருந்ததால் அவ்வலியை உணராத தேவாவோ, பிறகு தான் கண்டு கொண்டு அவளை விடுவித்திருக்க,

அதில் எரிச்சலுடன் அவனை பார்த்த சம்யுக்தா “இனி என்மேல கை வச்ச அப்புறம் மரியாதை கெட்டுரும்..”

“ரொம்ப சீன் போடாதடி.. அந்த பக்கம் நரி போனதால தான் இழுத்து வந்தேன்”

“அதுகிட்ட கடியாகி வாங்கி செத்தாலும் சாகுறேன்.. ஆனா நீ என்ன தொடாதடா” என்றவள் “கொஞ்சம் கேப் கிடைச்சாலும் உரசுற பொறுக்கி புத்தி தான் போல எல்லா ஆம்பளைங்களுக்கும்” என்று இதழ் கடித்து முனுமுனுத்து கொண்டாள்.

காடே அமைதியாக இருந்ததில், அவளின் முனுமுனுப்பு சத்தம் கூட தேவாவின் காதுக்கு நன்றாகவே விழ, அவளுக்கு தன்னை பற்றிய எண்ணம் இவ்வளவு தானா என்று மனம் சுணக்கம் கொண்டான்.

அடுத்த கணம் அவளை இழுத்து மரத்தில் சாய்த்து கைகள் ரெண்டையும் அவள் நகர முடியாதப்படி சிறை வைத்த தேவா,

பெண்ணவளின் கண்களை பார்த்து “என்ன பத்தி சீப்பா தான் உன் எண்ணமாடி.. என்ன சொன்ன கேப் கிடைச்சா உரசுறேனா” என்றுவிட்டு நக்கலாக புன்னகைத்தவன் “எனக்கு ஓவராவே கேப் கிடைச்சிருக்கு.. சோ இப்போ நான் நினைச்சாலும் இந்த காட்டுல கூட என்னால ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட முடியும்.. என்ன பத்தின எண்ணம் உனக்கு இப்படியே இருந்தா அத உண்மையாக்கி ப்ரூஃப் பண்ண வேண்டியது என்னோட உரிமை தான” என்று பெண்ணவளின் இடையை அழுத்தமாக பற்றினான்.

தான் கூறியதற்கு அவனிடம் வந்த இத்தகைய பதில் பெண்ணவளின் முகத்தை சோர்வடைய செய்ய, பின் அவன் அடுத்தடுத்த கொடுத்த அதிர்ச்சியை கண்டு உறைந்து நின்றாள்.

- துயர் தொடரும்...
 

Author: STN - 95
Article Title: துணை - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
வாவ்....சம்மு - தேவி ஃப்ரெண்ட்ஷிப் செம்ம cute 🥰 🥰 🥰 🥰 🥰
சம்மு இப்படி வெறுக்க காரணம்????
ஏதும் சைல்ட்வுட் டிராமா வா இருக்குமா?????
அவளே இப்படி இருக்கா...நீ வேற ஏண்டா தேவா
 

STN - 95

Member
May 5, 2026
53
43
18
வாவ்....சம்மு - தேவி ஃப்ரெண்ட்ஷிப் செம்ம cute 🥰 🥰 🥰 🥰 🥰
சம்மு இப்படி வெறுக்க காரணம்????
ஏதும் சைல்ட்வுட் டிராமா வா இருக்குமா?????
அவளே இப்படி இருக்கா...நீ வேற ஏண்டா தேவா
நன்றி அக்கா 😍😍