• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

துணை - 7

STN - 95

Member
தேவா கொடுத்த விளக்கத்தில் வாடி போன சம்யுக்தா, அடுத்ததாக தன் அனுமதியின்றி அவன் தொடுகையில் அதிர்ந்து பின் அவனை தள்ள முயற்சித்து தோற்றவள், ஓங்கி கன்னத்திலே ஒன்று வைத்தாள்.

அவளின் அடி வலித்தாலும் கூட சுகமாக அவற்றை பெற்று கொண்டவனுக்கு அவளின் முகத்தில் ஏற்பட்ட சோர்வு, தன் இதயத்தில் வலிப்பதை உணர்ந்து என்ன நினைத்தானோ பெண்ணவளின் நாடிபற்றி நிமிர்த்தி, அவள் முகத்தை மறைத்திருந்த திரையை விலக்கிவிட்டு கண்களோடு தன் கண்களை களக்கவிட்டவன் “ஐ லவ் யூ யுதா” என்று கூற வந்ததை நிறுத்தி “யுக்தா” என்று முடித்தவன் காதலையும் அவளிடம் இறக்கி வைத்துவிட்டான்.

அவன் கூறிய இரு பெயர்களையும் கண்டு கொண்ட சம்யுக்தாவின் கையில் அந்நேரம் தான் நவீன கடிகாரத்திலிருந்து தேவிபிரியா அவளுடையதை அழுத்தியதின் விளைவால் சத்தம் வந்திருக்க,

தோழி எதையோ கண்டு கொண்டால் என்பதை உணர்ந்து அவள் இருக்கும் இடத்தை அதன் மூலம் குறித்து கொண்ட சம்யுக்தா “பங்கு அலார்ட் கொடுக்குறா.. அனேகமா அந்த குகைய கண்டுபிடிச்சிருப்பாங்க நினைக்கேன்.. உடனே அங்க போகனும்” என்று கூறியவள் அவன் காதலை கூறியதை கூட கண்டு கொள்ளாதது போல் விலகி தோழியிருக்கும் இடத்தை நோக்கி விரைய,

அவளின் உதாசீனத்தில் மனம் காயப்பட்ட ஆடவனுக்கு, அப்போது தான் பேசியது அனைத்தும் சகோதரனும் கேட்டு இருப்பான் விளங்க, கடுப்பில் காதில் இருந்ததை எடுத்து தூக்கி வீசியவன் மனவலியை வெளியே காட்டிக்கொள்ளாமல் பின்னயே சென்றான்.
****
தேவிபிரியாவின் பேச்சை கேட்டு கொண்டிருந்தாலும் காது கருவி மூலம் எதிர்புறம் கேட்பதை கேட்டு கொண்டிருந்தவன், அடிக்கும் சத்தம் கேட்டு சகோதரன் பேச்சில் கடியாகி சம்யுக்தா தான் அவனை அடித்திருப்பால் என்பதையும் கணித்து விட்ட தேவா ‘இவனுக்கு தேவையா அவ தான் புரியாம பேசுறா.. அதுக்கு கூட கூட பேசி வாங்கி கட்டிக்குறான்’ என்று தனக்குள் நினைத்து முடிக்கும் வேலையில், அவன் காதலை உரைத்ததில் பேவெனப் முழித்தான்.

அவனின் முழியை அருகில் வந்த பெண்ணவளும் கவனித்து “என்னாச்சி என்ன ஒரு மாதிரி ஆயிட்ட”

“ஒன்னும் இல்ல” என்று தலையாட்டியவன் ‘ஆத்தி என்ன இவன் பொசுக்குன்னு காதல சொல்லிட்டான்’ என்று நினைக்கையிலே,

எதை குகையை கண்டு கொண்ட தேவிபிரியா முதலில் தன் கையிலிருந்த கடிகாரத்தை அழுத்தி தோழிக்கு அழைப்பு விடுத்தவள் பின் தான் “ஏய் அங்க பாரு” என்று விக்னேஷின் கையில் அடிக்க,

அவள் கையை தட்டி விட்டவன் “என்னடி மறுபடியும் யானை வந்திருச்சா” என்றதை கேட்டு முறைத்தவள் “நான் யானைக்கு இரையாகுறதுல அம்புட்டு ஆர்வம் துரைக்கு..” என்று பற்களை கடித்தவள்,

அவன் அசடு வழியவும் “சகிக்கல நிறுத்து.. அங்க பாரு நம்ம தேடி வந்த குகை” என்று அவன் கையை பற்றி இழுத்து கொண்டு அதன் அருகே விரையவும், மற்ற இருவரும் இணையவும் சரியாக இருந்தது.
***
நால்வரும் மெல்ல உள்ள நுழைய, சகோதரன் அருகில் நடந்தபடி வந்த விக்னேஷ் “தேவா..” என்று நக்கலாக அழைக்க,

அவன் நக்கல் எதற்கு என்று உணர்ந்த தேவா “இப்போ என்ன எழவுக்கு சிரிக்கிற”

“நான் சிரிக்கிறது இருக்கட்டும்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க.. ஏதோ பாஷா ரேஞ்ச் பில்ட்அப்லாம் கொடுத்த.. ஆனா நடக்கிறது எதுவும் சரியா இல்லையே” என்று அவன் காதில் கடித்தான்.

தன்னை கண்டுகொண்ட சகோதரனிடம் அதனை ஒத்துக்கொள்ள மனம் வராததால் “அதெல்லாம் இல்ல.. பிளான் படி தான் பண்ணிட்டு இருக்கேன்.. ஆனா நான் சொன்ன பிளான்ல கொஞ்சம் மாத்திருக்கேன் அவ்வளவு தான்” என்று மழுப்ப,

அதில் எழும் சிரிப்பை பெண்கள் பார்த்து விட கூடாதென்று கடினப்பட்டு அடக்கிய விக்கி “ஆமா ஆமா.. பிளான் மாறிட்டு தான்” என்றதில் அவனின் அனல் பார்வையும் பெற்று கொண்டான்.

இவர்கள் இருவரும் அவர்களுக்குள் பேசி சிரிப்பதை தோழியின் கையை பற்றி சென்ற தேவிபிரியா கண்டு “அங்க என்ன ரகசியம் ஓடுது” என்று குரல் கொடுக்க,

“ஒன்றுமில்லை” என்று தலையாட்டிய விக்கி “சம்.. நீயும் தேவாவும் வலது பக்கம் போங்க.. நானும் அவளும் இடது பக்கம் போறோம்” என்றவன் பெண்ணவள் பதிலை கூட கேட்காமல் தேவிபிரியாவின் கைபற்றி இழுத்து கொண்டு இடது பக்கத்தை நோக்கி சென்றான்.
**
விக்கி தன் தோழி கைபற்றியதையும் அதில் பெண்ணவள் மந்திரித்து விட்டது போல்,

அவன் பின் செல்வதையும் பார்த்த சம்யுக்தா ‘இதுங்களுக்குள்ள ஒரு ட்ராக் ஓடுது.. அவன் அவள முறைச்சது என்ன.. அவன பாத்து பங்கு பயந்தது என்ன.. அதுக்குள்ள எப்படி கனெக்ட் ஆனீங்க’ என்று எண்ணி தலையாட்டி கொண்டவள், தன்னுடன் ஒருவன் வருகிறான் என்று கண்டு கொள்ளாமல் அவ்விடத்தில் எதுவும் கிடைக்கிறதா என்று பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

ஏனோ அவளின் உதாசினம் மேலும் சினத்தை கொடுக்க, அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் காலை தரையில் உதைத்து கொண்டவன் “அவுச்..” என்று கத்தியப்படி அங்கிருந்த பாறையில் வலி தாங்காமல் சாய்ந்து விட்டான்.

சத்தம் கேட்டும் கூட திரும்பாத சம்யுக்தா அவன் தன்னை கவர நடிக்கிறான் என்று எண்ணத்தில் கண்டுகொள்ளாமல் சென்றவள், அவன் தன்னை பின் தொடராமலிருந்ததில் பார்வை அவன் புறம் திரும்பியவள், ஆடவனின் காலில் தகரம் இறங்கியிருக்க, அதனால் வரும் ரத்தத்தை கண்டு பதறி போய் அவன் அருகில் சென்றாள்.

பின் சாய்ந்து கிடந்தவனை மெல்ல அமர வைத்த சம்யுக்தா “ஒன்னும் இல்லடா.. நான் பாக்குறேன்” என்றபடி அவன் காலருகில் அமர்ந்த பெண்ணவளுக்கு வடிந்து கொண்டிருந்த குருதியில் தன் இதயத்திலே குருதி வந்த போல் பரிதவித்து விட, கூடவே கண்களும் சேர்ந்து கலங்கிவிட்டது.

பிறகு கண்களை மூடி பெருமூச்சு விட்டவள், மெல்ல அவனின் காலில் சொருகி இருந்த தகரத்தை மெல்ல மெல்ல எடுக்க முயற்சிக்க,

அதில் உண்டான வலியால் சத்தம் கூட போட முடியாத சுழல் என்பதால் பற்களை கடித்தவண்ணம் கண்களை இறுக்கி மூடி வலியை பொறுத்து கொண்டான்.

ஆனால் பெண்ணவளால் தான் அவனின் இத்தகைய நிலையை கண்டு பொறுக்க முடியாமல் மனம் வெதும்பியது.

பின் அவனுக்கு தெம்பூட்டும் விதமாக “கொஞ்சம் பொறுத்துக்கடா.. இதோ முடிஞ்சுது” என்று பேச்சு கொடுத்தப்படியே சட்டென்று தகர்த்தை பிடுங்கி வீசி எறிந்தாள்.

அதில், அவனின் வலியை உணர்ந்து முதலில் காலில் அதிகம் ரத்தம் வெளியேற விடாமல் தடுக்க துணியை இறுக்கி கட்டிவிட்டு எழுந்தவள், அவனை தன் தோளில் சாய்த்து மெல்ல தடவி கொடுத்து “ரொம்ப வலிக்குதுதா” என்றவன் அவள் கண்களில் தெரிந்த வேதனையில் அவனை அறியாமலே இல்லை என்று தலையை ஆட்டிருந்தான்.

தனக்காக வலியை கூட கூற மறுக்கிறான் என்பதை புரிந்து கொண்டவளின் இதழ் மெல்ல புன்னகைத்தது.

வலிலும் அதனை கண்டு கொண்ட தேவா “நீ சிரிச்ச தான” என்றதை கேட்டு உடனே முகத்தை மாற்றி கொண்ட சம்யுக்தா “அதெல்லாம் இல்ல..” என்றுவிட்டு தன் தோள்பையிலிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து, அவனின் குருதியை பஞ்சை கொண்டு துடைக்க தொடங்கியிருந்தாள்.

அவனோ “இல்ல நீ சிரிச்ச நான் பாத்தேன்” என்று விடாமல் அதிலே நிற்க, கைக்கு வேலை கொடுத்து இருந்த பெண்ணவளோ பதிலேதும் கூறாமல் அவனை முறைத்துவிட்டு செய்யும் பணியில் கவனமானாள்.

அவ்வேளையில் தன் காயத்தை கண்டு துடித்தது, தன் வலியை போக்க அவள் தன்னை தோளில் சாய்த்து அரவணைத்தது என்று ஒன்றாக கண்முன்னே கொண்டு வந்து நினைத்து பார்த்தவன்,

இப்போதும் கூட தன் குருதியை கண்டு அவள் தனக்காக படும் வேதனையில் சொல்லா முடியா உணர்வு, கூடவே இத்துணை நேரம் பெண்ணவள் மேலிருந்த கோவம் நீங்கி வலியை கூட மறந்து அவளையே விழிகள் இமைக்காமல் பார்த்திருந்தான்.

அதனை உணர்ந்து நிமிர்ந்தவன் புறம் பார்வையை செலுத்திய சம்யுக்தா “எதுக்கு இப்படி பாக்குற”

“உண்மைய சொல்லணும்ன்னா நீ எனக்காக இப்படி துடிக்கிறது.. உனக்கு என்ன பிடிச்சிருக்குன்னு காட்டுது”

“என்ன பைத்தியம் போல பேசிட்டு இருக்க.. ஒரேநாள்ல காதலா.. அதுவும் உன்மேல எனக்கு” என்று கேலியாக சிரிக்க,

பதிலுக்கு தானும் புன்னகைத்தவன் “ஏன் ஒரே நாள்ல காதல் வராதா என்ன.. உன் உயிர் தோழியே எடுத்துக்க ஒரே நாள்ல அவளுக்கு என் தம்பிய பிடிக்கலயா?..”

“வாட்எவர் அவளுக்கு அவன பிடிச்சா.. எனக்கு உன்ன பிடிக்கணும்ன்னு என்ன ரூல்ஸ் மிஸ்டர் தேவா” என்று அவனின் காயத்திற்கு கட்டை போட்டுவிட்டு எழும்பி நின்று கைக்கட்டியவண்ணம் அவனை ஏறிட்டாள்.

“ரூல்ஸ் இல்ல யுக்தா.. பட் உனக்கு ஏதோ விதத்துல என்மேல ஈர்ப்பு இருக்கிறது உண்மை.. உன் மனச தொட்டு கேளு.. ஆமா சொல்லும்”

“நீ பைத்தியம் எதுவேனாலும் சொல்லுவ.. அதெல்லாம் நான் என் மனசுக்கிட்ட கேட்க முடியாது” என்றுவிட்டு தான் பையில் வைத்திருந்த தண்ணீரை குவளையை எடுத்து நீட்டிருந்தாள்.

அதனை மறுக்காமல் வாங்கி வாயில் ஊத்தி கொண்டவனும், தன் காயத்திற்காக அவள் கொடுத்த மாத்திரையும் விழுங்கி கொண்டான்.

பின் கையில் நேரத்தை பார்த்தவள் நேரம் நான்கை தொட போவதை கண்டு, இம்முறை அதனை அழுத்துவது அவள் முறையாகியது.

அடுத்ததாக தோள் பையை மாட்டிக் கொண்டவள் “கிளம்பலாம்” என்று அவனையும் புறப்பட கூற,

எதுவுமே கண்டுபிடிக்கலயே என்றவண்ணம் எழுந்தவனின் முகம் வலியில் சுணங்கி கொள்ள, அதனை குறித்தவளும் என்ன புடிச்சி நட என்றதை கேட்டு ஆடவனுக்கு கசக்கவா செய்யும், உடனே அவளின் தோளில் போட போனவன் சட்டென்று பின் வாங்கி “இல்ல வேணா.. நானே பாத்துப்பேன்” என்க,

அவன் தான் பேசிய வார்த்தையை மனதில் வைத்து தான் கூறுகிறான் என்று தெரிந்த சம்யுக்தா “சரி நீ புடிச்சா தான் எனக்கு பிடிக்காது.. சோ நான் புடிச்சிக்குறேன்” என்று அவனை பிடித்தவண்ணம் நடக்க தொடங்க,

அவன் தான் கூறியதை கேட்டு யோசனையாகியதில் “மணி நாலு தொட போகுது.. விடிஞ்சா நம்ம போகுறதா யாராவது பாத்துர வாய்ப்பு இருக்கு அண்ட் விடியுறதுக்குள்ள நம்ம வீட்டுல இருக்கிறது பெட்டர்” என்று அவன் முதல் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்து, இப்போதிருந்த யோசனையை கலைத்து வைத்தாள்.

அவனுக்கும் அதுவே சரியாக தோன்ற, மெல்ல அவளின் தாங்களில் நடந்தவன், அவள் கழுத்தில் வொய் வி என்று ரெண்டே எழுத்து ஆங்கிலத்தில் பொறிக்கபட்டிருந்த செயினை ஒரு நிமிடம் அழுத்தி நோக்கியவன் “வொய் வி என்ற சந்தேகத்தை கேட்டு வைத்தான்.

அவனின் வெறுமனை வார்த்தையில் புரியாமல் விழித்த சம்யுக்தா “புரியல”

“அதான் போட்டுருக்கியே ரெண்டு எழுத்துல சேத்து செயின்.. அது என்ன கேட்டேன்” என்றதும் அவன் இப்போது எதை கேட்கிறான் என்பதை கண்டு கொண்டு ஒரு முறை தன் கழுத்திலிருந்த செயினை பற்றி விடுவித்தவள் “யுக்தா விஷ்வநாதன்” என்று அதற்கான விளக்கத்தை கொடுத்திருந்தாள்.

அப்பெயரை கேட்டு “ஓ” என்றவன் கேலியாக இதழ் வளைத்து பேச்சை முடித்து கொண்டான்.
***

தோழியிடம் விக்கி என்ன கூறினான் என்று தெரியாத பேதை, ஆடவன் தன் கையை பற்றியதும் அவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்து கொண்டே விக்கியின் இழுப்பிற்கு சென்றாள்.

சில வினாடிகள் பின் அமைதியே ஆட்சி செய்ததில் விக்கி ‘என்ன ஒரு அதிசயம் நல்ல பிள்ளையா சைலண்ட்டா வரா..’ என்று பெண்ணவளை நோக்கியவனுக்கு பிறகு தான் அவளின் பார்வை மாற்றம் புரிய, பட்டென்று கை விட்டான்.

அதில் தான் சுயம் பெற்றவள் அருகே தோழி இல்லாததில் “ஆமா என்னாச்சி.. தேவா மாமா பங்கு எங்க” என்க,

‘அவள் மனதை தான் கலைக்கிறோமோ..!’ என்று சிந்திக்க தொடங்கிய விக்கி பெண்ணவளின் கேள்வியில் “முத போல ரெண்டு ரெண்டு பேரா தேடினா வந்த வேலை சீக்கிரம் முடியும்ல அதான் கூட்டிட்டு வந்தேன்”

“சரி தான்” என்றவளின் பதில் ஒரு மார்க்கமாகவே வந்தது.

பின் சுற்றும் புற்றும் பார்வையை சுழலவிட்டவள் ஓரமாக இருந்த பாறையை கண்டு, அதில் அமர்ந்து கொண்டாள்.

அதில் விக்கி அவளுக்கு ஏதோ ஆகி விட்டதோ என்று பதறி ரியா “ஆர் யூ ஓகே” என்க,

அவனின் கண்களில் தனக்கான தவிப்பை கண்ட தேவிபிரியா “என்ன ரியானா கூப்பிட்ட.. ம் இது கூட நல்லா தான் இருக்கு” என்று புன்னகைத்து கண்ணடித்தாள்.

அப்போது தான் அவளை குறுகி அழைத்து விட்டோம் என்று அவனுக்கே புரிந்தது, அதோடு யானையிடமிருந்து அவளை காத்த பொழுது கூட ரியா என்று தானே பறிதவித்தவன், அடுத்து அவள் செய்த வேலையில் விழி பிதுங்கி நின்றான்.

- துயர் தொடரும்..
 

Gowri Karthikeyan

Active member
சம்முக்கும் காதல் இருக்கும் போலவே.....இல்லனா இந்த துடிப்பு எப்படி சாத்தியம்?????
அவ அப்பாவை இவனுக்கு பிடிக்காதா?????
இப்ப கூட அவர் அபி கூட இல்லையோ????
 

STN - 95

Member
சம்முக்கும் காதல் இருக்கும் போலவே.....இல்லனா இந்த துடிப்பு எப்படி சாத்தியம்?????
அவ அப்பாவை இவனுக்கு பிடிக்காதா?????
இப்ப கூட அவர் அபி கூட இல்லையோ????
Ava appa mettingkaaga veliya poi irukkanga.. நன்றி அக்கா
 
Top Bottom