அத்தியாயம் 08
என்ன இதுவோ...
என்னை சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்...
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்...
நேற்று பார்த்தேன் நிலா முகம்... தோற்றுப் போனேன் ஏதோ சுகம்... ஹேய் தென்றல் பெண்ணே இது காதல் தானடி...
உன் கண்களோடு இனி மோதல் தானடி...
சமையலறையில் இருந்த சின்ன ஸ்பீக்கரில் பாடல் ஓடிக்கொண்டிருக்க, மும்முரமாக கத்தரிக்காயை வெட்டி பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் போட்டுக்கொண்டு, பாடிக்கொண்டே வாகீஷன் சந்தோஷமாக தன்னவளுக்கான மதிய சமையல் வேலையில் இருக்க,
நிராளினியோ கோபத்தில் புசுபுசுவென மூச்சு வாங்க, அவனைத்தான் ஹாலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் கோபத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இந்த பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல், பாட்டில் முதல் வரி ஒலிக்கும் போதே மெல்லிய புன்னகையுடன் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.
அப்போதுதான் ஒன்று ஞாபகம் வந்தது. வாகீஷன் காதல் சொன்ன காலகட்டத்தில் இந்த பாடல் என்றால் பைத்தியமாக இருந்தாள். எத்தனை முறை கேட்டாலும் தெருவில் நடக்கும் போது ஏதேனும் கடையில் இந்த பாடல் ஒலித்தால் நின்று முழுமையாக கேட்டு விட்டு தான் செல்வாள்.
'ஆக என்னைப் பற்றிய அனைத்து விடயமும் தெரிந்து வைத்துக் கொண்டு கவுக்க பாக்குகின்றான்...' என்று கோபம் வந்தது. இருந்தும் பாடலை ரசித்தபடி இருந்தாள்.
ஆனால் மீண்டும் மீண்டும் அதே பாடல் இருபதாவது முறையாக ஒலிக்கின்றது அந்தக் கோபம் தான் இப்போது மேலோங்கி நின்றது. பிடித்த பாடலாகவே இருந்தாலும் தொடர்ந்து 20 முறை கேட்பது கொடுமை அல்லவா, அந்த கொடுமையை தான் நிராளினி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
அதிலும் நேற்று பார்த்தேன் (நிலா முகம்) என்று வரும் போதெல்லாம் (நிரா முகம்) என்று அவனும் சேர்ந்து பாட, அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்...
பூமியில் வாழ்வதாய் இல்லை நியாபகம்...
கோவிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்...
கண்டதும் நொடியிலே பக்தனாகுவேன் என்று பாடிக் கொண்டே அவன் திரும்ப,
முதுகுக்குப் பின்னால் உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்ற நிராளினி ஸ்பீக்கரை ஆஃப் பண்ணி விட்டு "பெரிய காதல் மன்னன் இவரு.. காதலி செருப்புக்கு பக்தன் ஆகுற மூஞ்ச பாரு..." என்று திட்டி விட்டுப் போக
"உன்ட செருப்புக்கு என்ன.. உன்ட கால தொட்டு உதிர்ந்த மண்ணுக்கும் நான் பக்தன்தான்.. உன்ட கைபட்ட இந்த கயிறு அதுக்கு சாட்சி..." என்று தனது வலது கையை தூக்கி காட்ட
நிறம் மங்கிய சிகப்பு நிற கயிறு, அதை புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு சரியாக நினைவு வரவில்லை.
"என்ன ஞாபகம் இல்லையா? நீயே அறியாம தொட்டு தந்தது.. அதனாலதான் எட்டு வருஷமா என் கையில இருக்கு..." என்று அந்த கயிற்றை கூட காதலாக பார்த்து கூற
நிராளினிக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது, எனக்கே தெரியாமல் நான் செய்த செயல்கள் இவனை இத்தனை பாதிக்கின்றதா என்று. எதுவும் கூறாமல் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.
வாகீஷன் சமைத்து முடித்துவிட்டு "நிரா பத்து நிமிஷம் இருடா.. குளிச்சிட்டு வாரேன்..." என்றவன் குளித்துவிட்டு, அவன் உடையுடன் அவள் புடவை ஜாக்கெட் பாவாடையையும் சேர்த்து துவைத்து எடுத்துக்கொண்டு,
வாளியுடன் ஹாலில் இருக்கும் நிராளினியை தாண்டி போக, ஒரு பார்வை பார்த்தவள் கண்டு கொள்ளாமல் அமர்ந்து டிவியை ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
வாகீஷன் கொடியில் தன் உடைகளை காய போட்டவன், அவள் புடவையையும் காய போட்டுவிட்டு, ஜாக்கெட் பாவாடையை காய போடுவதா வேண்டாமா என்று யோசனையில் நின்றான்.
அவனுக்கு எந்த கூச்சமும் இல்லை. ஆனால் அவள் அந்தரங்க உடையை தான் தொட்டு உதறி காய போட்டேன் என்று தெரிந்தால் நிராளினி சங்கோஜமாக உணர கூடுமோ என்றுதான் தயக்கமாக இருந்தது.
அது சரிதான் என்பது போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென கண்கள் விரிய "அது என்ட சாரியல..." என்று அவன் கொண்டு போன வாளியில் லேசாக தெரிந்த புடவையை மனதில் கொண்டு வந்து, பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள்.
வாகீஷன் சாரி பாவாடையை எடுக்க, வேகமாக அவள் அதை பறித்து எடுக்க, கீழே சிந்திய தண்ணீர் வழுக்கி பின்பக்கமாக சாய, அவள் மெல்லிடையில் கையை கொடுத்து பிடித்துக் கொண்டான் காவலன்.
இருவரும் எதிர்பாராத ஒரு தருணம். "ஹேய் நிரா பாத்து..." என்றவாறு அவன் அவளை சரியாக நிற்கவைக்க,
நெஞ்சின் படபடப்பு குறையாமல் ஒரு நொடி அப்படியே நின்றவள், பின் தான் அவன் தன் இடையில் கையை வைத்து அணைத்தது போல் நிற்பதை உணர்ந்து "விடுங்க..." என்று விலக, அவனும் சமத்தாக கையை எடுத்துக் கொண்டான்.
"கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.. இதெல்லாம் நீங்க ஏன் கழுவுறீங்க?..." என்று நிராளினி கோபமாக கேட்க
"நான் கழுவல.. வாஷிங் மெஷின் தான் கழுவிச்சு..." என்று அவன் சொல்ல
"வாஷிங் மெஷினாளும் நீங்க தானே தூக்கி உள்ள போட்டீங்க.. இப்ப கூட தொட்டு காய போட போறீங்க..." என்று திட்ட
"என்னாச்சு இப்போ.. உன்னோட உடுப்ப கழுவி போடுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நீ இந்த மாதிரி கோவப்படுவேனு தான் உன்ன கூப்பிட்டு காய போடலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. நீயே வந்துட்ட.. நீயே காயப்போடு..." என்று சாதாரணமாக சொல்ல
அவனை முறைத்துக் கொண்டு தன் உடைகளை காய போட, வாகீஷன் அவ்விடம் விட்டு நகர, "ஒரு பொம்பள புள்ள என்ன நினைப்பாள்னு உணர்ந்தவர்தான் உள்ளுடுப்பு எல்லாம் வாங்கி வந்தார் போல.. செய்றதையும் செஞ்சிட்டு நல்லவருக்கு நடிக்க வேண்டியது..." என்று அவள் திட்ட
வீட்டினுள் செல்லப் போனவன் கதவு நிலையில் சாய்ந்து நின்று "நான் நல்லவன்னு எப்போ சொன்னேன்..." என்று கேட்க,
அவன் வார்த்தைகளில் அவள் அவனை ஆழ்ந்து பார்க்க
"நேத்து இரவு உன்ட நெத்தியில கொஞ்சுனேன்..." என்று அவன் மந்தகாச புன்னகையுடன் சொல்ல
"என்ன!..." என்று அவள் அதிர்ந்து கேட்க
"ம்ம்.. உனக்கு தெரியாதப்போ என்னால என்ன வேணா செய்ய ஏலும்.. ஆனா உனக்கு தெரிஞ்சு செய்யும்போது உன்ட உணர்வுகள் முக்கியம்..." என்று சொன்னவன் பிந்தலையை கோதிக் கொண்டு உள்ளே சென்றுவிட
பேய் அடைந்ததைப் போல் நின்றது என்னவோ நிராளினி தான். அவனுக்கு பட்சாதாபம் வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவள் காலை பிடித்து மன்னிப்பு கேட்டதையும் சேர்த்து கூறியிருக்கலாம். அவனுக்கு தேவை காதல்தான், அதனால் தான் தன் தவறை கூட தைரியமாக கூறிவிட்டு சென்றான்.
கோபமாக அவனை தேடி வந்தவள் "அதெப்பிடி என்ன கொஞ்சலாம்..." என்று கேட்க
"எப்பிடினு கொஞ்சி காட்டவா?..." என்று அவள் முகத்தை குறுகுறுனு பார்த்து அவன் குறும்பாக கேட்க
"உங்கள..." என்று அவள் அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று சுற்றி பார்க்க
அவள் கையில் சாப்பாட்டு தட்டை வைத்தவன் "சொரி! அது என்னையும் அறியாம பாசத்துல கொஞ்சிட்டேன்.. இந்தா முதல்ல சாப்பிடு.. சாப்பிட்டு தெம்பா உன்ட கையால அடி..." என்று மன்னிப்பு கேட்டவன் அவனும் தன் சாப்பாடு தட்டுடன் சோஃபாவில் அமர,
அவளும் அவனுக்கு எதிர் சோஃபாவில் வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் "அப்டி என்ன பொல்லாத காதல்.. உங்கட காதல் கதைய சொல்லுங்க கேட்போம்..." என்று கேட்டாள்.
அவளுக்கு அவன் காதலை பற்றி தெரிந்தாக வேண்டும். அவன் அவளை பார்க்கும் போது அந்த கண்களில் மின்னுவது காதல் தானே. எப்படி இத்தனை காதல் தன் மீது என்ற எண்ணத்தில் கேட்டு விட்டாள்.
வாகீஷன் அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் "சொல்லுல விவரிக்க ஏலாது என்ட காதல.. என்ட கண்ணுல தெரிஞ்சுக்க.. என்ட உணர்வுகள புரிஞ்சுக்க.. அந்த புரிதல் தான் எனக்கு வேணும்.. நான் எப்டி உன்ன லவ் பண்ணேன், என்னலாம் உனக்காக பண்ணுனேன்னு சொன்னா தான் என்ட காதல் புரியும்னா அது வேணாம் நிரா..." என்றவன் சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.
'என்ன இவன் பைத்தியமா?.. லவ்வ சொன்னாதானே புரியும்...' என்று அவன் சென்ற திசையை பார்த்து இருந்தாள் பாவை.
வாகீஷனுக்கும் அது தெரியும். இருந்தும் தான் எது கூறினாலும் மிகைப்படுத்தி சொல்லி, அவள் மனதை மாற்றத்தான் கூறுகின்றான் என்று நினைப்பாளோ என்று தோன்றவே,
நான் உன்னை காதலிக்கிறேன்... உன் ஒற்றை வார்த்தையை உயிர் மூச்சாகக் கொண்டு எட்டு வருடங்கள் காத்திருந்தேன்... என்பது தெரிந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டான்.
நிராளினி யோசனையுடனே டிவியில் படம் பார்த்துக் கொண்டிருக்க, வாகீஷனும் அவள் அருகில் வந்து அமர்ந்தவன் கண்கள் அவனின் நிலவானவள் மீதுதான் காதலாக பதிந்து இருந்தது.
அவன் தன்னை ரசிக்கின்றான் என்பது அவளுக்கும் தெரியும், உள்ளுக்குள் ஏதோ ஒரு மாதிரியாக குறுகுறுவென்று இருந்தது. இருந்தும் அவனை கண்டுகொள்ளாதவள் போல் படத்தில் கவனத்தை குவித்தாள்.
வாகீஷனின் கண்கள் அவள் நிலா துண்டு நெற்றி, நீலோற்பல கண்களென்று இறங்கி, முந்திரியம்பழ மூக்கிற்கு வர, அதிலிருந்து கொண்டு அவனைப் பார்த்து கண்ணடித்தது வெள்ளை கல் மூக்குத்தி.
அதன் மீது அவனுக்கு கோபமும் பொறாறையும் ஒருங்கே இருந்தாலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. பொறாமை சரி கோபம் எதற்கு? இருக்காதா பின்னே அவள் மூக்குகுத்தியது இருபது நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது.
"ஐயோ அவளுக்கு நோவி இருக்குமே..." என்று அவள் என்றோ அனுபவித்த வலிக்காக அன்றைய நாள் முழுவதும் அவன் கவலைப்பட்டது அவனுக்கு தானே தெரியும்.
தன்னவளை வலிக்க வைத்து அவள் மூக்கின் மீதே ஒய்யாரமாக வீற்றிருக்கும் ஒற்றை கல் மூக்குத்தி மீது அத்தனை கோபம்.
இப்போது முதலில் கேள்விப்பட்டதும் கவலைப்பட்டு, பின் தன்னவளை காயப்படுத்திய மூக்குத்தி மீது கோபப்பட்டதும் ஞாபகம் வர, கொஞ்சம் வெட்கமும் கொஞ்சமாக அசடு வழிய தன் கீழ் உதட்டில் ஒரு பக்கத்தை பற்களால் கடித்தபடி சிரித்துக் கொண்டான்.
அதே நேரம் தொலைக்காட்சியில் (மூக்குத்தியைப் பார்த்தாலே மூச்சு பறிபோகுமே... முத்தம் ஒன்று வைத்தாலே எல்லாம் சரியாகுமே...) என்ற பாடல் வரிகள் ஒலிக்க,
கண்கள் விரித்து டிவியை திரும்பி பார்த்தவன், மீண்டும் அவள் மூக்குத்தியை பார்க்க, முத்தம் வைத்தால் என்னவென்று தோன்ற, உள்ளுக்குள் திடுக்கிட்டவன் 'அச்சோ என்னாச்சு எனக்கு...' என்று நினைத்தவன் இடது கையால் பின் தலையை கோதிக் கொண்டு எழுந்து கொண்டான்.
இதற்கு மேல் அங்கு இருந்தால் சரிவராது என்று நினைத்தவன் தன் தொலைபேசியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான்.
அவன் வீட்டின் பின் வீடு சுதாகரனின் அக்கா கோமதியின் வீடு, அவரின் தொலைபேசி எண் இருக்க, அவருக்கு அழைத்து வீட்டின் பின்புறம் வரச் சொல்லவும் அவரும் இரண்டு வளவிற்கும் இடையில் வந்து போக இருந்த சிறிய வழியால் வந்தார்.
தன் முன் நின்ற கோமதியிடம் "அக்கா..." என்று ஆரம்பித்து நிராளினியை கடத்தி வந்து வைத்திருப்பது வரை கூறி முடித்தான்.
கோமதியோ அதிர்ச்சியின் உச்சத்தில் திகைத்துப் போய் நின்றார். அவரை கையைப் பிடித்து "அக்கா..." என்று உலுக்க,
"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?..." என்று அதிர்ச்சி குறையாமல் கேட்க
"எனக்கு வேற வழி தெரியலக்கா.. சுதா லவ்வுக்கு நீங்க தானே ஹெல்ப் பண்ணுனீங்க.. என் லவ்வுக்கும் ஹெல்ப் பண்ணுங்க..." என்று சொல்ல
"உனக்கு பண்ணலேன்னா அந்த லவ்வே கோவிச்சுக்குமே.. எத்தன நாள் கேட்டு இருப்பேன் யாருடா அந்த அதிர்ஷ்டசாலி பெட்டனு.. சொல்லவே இல்லல நீ..." என்று கோமதி கேட்க
"அவளுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னு தாக்கா..." என்று சொல்ல
அதற்கு இடையில் கோமதியின் கணவன் அழைக்க "சரிடா நான் பிறகு வந்து அந்த கொடுத்து வச்சவள பாக்கிறேன்..." என்றவர் சென்று விட்டார்.
அவர் சென்ற பின் சிறிது நேரம் அங்கு இருந்த நீர் நிரப்பும் சீமெந்து தொட்டியில் அமர்ந்தவன், நிராளினியை முதலில் பார்த்ததிலிருந்து இன்று வரை மனதில் ஓட்டிப் பார்த்து மகிழ்ந்தான்.
பின் நேரமாவது உணர்ந்து உள்ளே வந்தவன், அவன் காதல் நிலவுக்காக நெஸ்கஃபே டீ தயாரித்து எடுத்துக்கொண்டு, நேற்று வாங்கி வைத்த சாக்லேட் பிஸ்கட்டுடன் அவள் முன்பு கொண்டு போய் வைக்க
'எங்க வீட்ட சாப்பாடு போடலைன்னு சொன்னேனா.. என்ன கடத்திட்டு வந்து வேளாவேளைக்கு சாப்பாடு தாரான்...' என்று மனதில் திட்டியவள் டீயை எடுத்து ரசித்து குடித்தாள்.
அப்போது கீர்த்தனா உள்ளே வர "வாமா!..." என்ற வாகீஷன் அவளுக்கும் டீ கொடுக்க, வாங்கிக் குடித்தாள்.
"இப்பவாச்சும் வந்தேயடி.. தல வெடிச்சிடும் போல இருந்துச்சு..." என்ற நிராளினியிடம் "சொரிடி கொஞ்சம் வேல..." என்றவள் மேற்கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க,
வாகீஷன் இரவு சாப்பாட்டை செய்தான். மணி ஏழை தாண்ட சுதாகரனும் வந்தான். வந்தவன் நேராக சமையலறை சென்று "என்னடா காதல் மன்னா, ஆக்கிப்போட்டே உன் ஆள கவுக்குற பிளானா?..." என்று கேட்க
"வாடா.. பஸ் வந்தாச்சா...?" என்று அவனின் தொழிலைப் பற்றி கேட்க
"ம்ம் இப்பதான்..."என்க
"நாளைக்கு நகை கடைக்கு போகணும்.. நிராவ தனியா விட்டுட்டு போக ஏலாது.. கீர்த்தனாவ வந்து இருக்க சொல்றியா..."
"ம்ம் சரிடா.. நிராளிட்ட உன்ன புரியவைக்க ஏதாவது ட்ரை பண்ணுனியா?..." என்று சுதாகரன் கேட்க
பெருமூச்சு விட்ட வாகீஷன் "இல்லடா.. நாளைக்கு பாத்துக்கலாம்.. கடைக்கு போறதே அவளுக்கு என்ன புரிய வைக்கதான்..." என்று சொல்ல
நகை கடைக்கு எதுக்கு போக போகின்றான் என்று சுதாகரனுக்குமே புரிந்தது. அதன் பின் சுதாகரனும் கீர்த்தனாவும் நிராளினியிடம் சொல்லிவிட்டு சென்றுவிட,
இரவு உணவையும் இருவரும் அமைதியாக உண்டு முடிக்க, தூங்குவதற்கு அறைக்குப் போக போன நிராளினிக்கு மனதில் ஒரு விடயம் உருத்திக் கொண்டிருக்க,
சோஃபாவில் அமர்ந்து இருந்தவனிடம் "என்ட விருப்பமில்லாம எப்பிடி என்ன கொஞ்சலாம்.. இப்போ நித்திர கொள்ளவே பயமா இருக்கு.. நான் நித்திர கொண்டதற்கு பிறகு..." என்று சொல்ல வந்தவள் சொல்லாமல் நிறுத்த
அவள் கேள்வியில் கோபத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது. அதே சமயம் அவளின் சுயநினைவு இல்லாமல் அவன் செய்ததும் தவறு என்று பட,
எழுந்து அவள் அருகில் அவன் வர 'ஐயோ தப்பா ஏதாவது சொல்லி வெறுப்பேத்திட்டனோ.. என்ன பண்ணப் போறான்...' என்று அவள் மனது அலற
மிரண்டு போய் அவனை பார்த்தாள். அவளை நெருங்கியவன் ஒற்றை விரலை எடுத்து அவள் நெற்றிக்கு கொண்டு போக 'முருகா!.. முருகா!...' என்று அவள் மனது கூச்சல் போட, கண்கள் அவன் விரல் நுனியை பார்க்க,
அவள் முன் உச்சியை தொட்டு காட்டியவன் "இங்கதான்.. என்னையும் அறியாம, அன்பா, லேசா தான் ஒத்தி எடுத்தேன்.. தப்பான எந்த எண்ணத்திலயும் இல்ல.. இருந்தாலும் தப்புதான் சொரி..." என்று சொல்ல
"தப்பா எந்த எண்ணமும் இல்லையா!.. பிறகு எதுக்கு கடத்திக் கொண்டு வந்து வச்சிருக்கீங்க.. உங்க காதல் பிதற்றல் எல்லாம் கடைசில கட்டில்ல தான் போய் முடியும்.. அதுக்கு தான் இத்தன நாடகம்..." என்று நிராளினி சொல்ல
"வேணாம் நிரா.. உனக்கு என்ட காதல் புரியாமலே இருக்கட்டும்.. தப்பா கதைக்காத.. இனி நீயா என்ன தொடாம என்ட சுண்டு விரல் கூட உன்ன தொடாது.. இது சத்தியம்.. போய் படு..." என்று அவன் சொல்ல
"நான் உங்கள தொடவா.. இந்த ஜென்மத்துக்கு நடக்காது.. இன்னொருவாட்டி கை மேல பாடட்டும் அவ்ளவுதான்..." என்று மிரட்டியவள் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொள்ள
"படாது தாயே.. பயப்படாம படுத்து நித்திரைய கொள்ளு..." என்றவன் சோஃபாவில் படுத்துக்கொண்டான்.
நிராளினிக்கோ "என்ன திமிரு.. நானா அவன தொடணுமாம் இல்ல..." என்று கடுப்பாக இருந்தது.
சிறிது நேரம் தன் வீட்டைப் பற்றி யோசித்தவள், இதேபோன்று நாளைய பொழுதையும் நெட்டித் தள்ளிவிட்டு, வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற முடிவில் தூங்கினாள்.