அத்தியாயம் 11
மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே... என்பது போல் நண்பர்கள் இருவரின் நாட்கள் தங்கள் நங்கைகளை காண்பதிலேயே கரைய ஆரம்பித்தது.
இப்போதெல்லாம் வேலை முடியவும் அப்படியே வியர்த்து களைத்து போய், சீமெந்து கரையுடன் அந்திநேரம் மைதானத்தில் முன்பு நிற்பதில்லை.
வேகமாக வீட்டிற்க்கு சென்று, லைபாய் சோப் போட்டு தேய்த்து குளித்துவிட்டு, காலுக்கும் கைக்கும் தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு, அரக்க பறக்க, மூச்சு வாங்க சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்து, வாட்டசாட்டமாக நின்றாலும் எந்த பெண்களின் கண்களிலும் இரு இளங்காளைகளும் தெரிவதில்லை.
21 வயது வாலிப்பான பருவம் முகத்தில் மட்டுமே. ஒருவன் ஊதி விட்டால் பறந்து விடுவான், ஆனால் நெட்டை கொக்கு. மற்றவன் அவனை விட சற்று உயரம் குறைய ஆனால் சாலையில் செல்லும் வாகனத்தின் காற்று பட்டால் சுழன்று கொண்டு விழுந்து விடுவான், வேறு யாரு சுதாகரன்தான்.
அதனால் அவர்கள் நிற்கும் இடமே (கொஞ்சம் கால விரிச்சு நில்லுங்கடா.. இருக்கிற இடமே தெரிய மாட்டேங்குது) என்று சொல்லும் அளவுக்கு தான் இலவு காத்தனர் இருவரும்.
இதில் பரிதாபம் என்னவென்றால், தான் தன் காதலுக்காக பாடுபட, தன் நண்பன் ஏன் இதெல்லாம் செய்கின்றான் என்று சுதாகரனுக்கு புரியவில்லை.
அன்று தன் காதலுக்கு உதவி கேட்டதற்காகத்தான் உறுதுணையாக இருக்கின்றான் என்று தான் நினைத்தான். ஆனால் அந்த மரமண்டைக்கு தெரியவில்லை, தன் காதலியை பார்க்கத்தான் அவன் சீவி சிங்காரித்து வருகிறான் என்று.
வாகீஷன் அன்று நிராளினியை முதன் முதலில் பார்த்தபோது ரசித்தான் தான். ஆனால் அதை மேற்கொண்டு உறுதியான உறவுக்கு கொண்டு போக யோசிக்கவில்லை.
அவன் நிலைப்பாடு அவனுக்கு தெரியுமே, அதுவும் படிக்கும் பெண்ணிடம் இந்த மாதிரியான எண்ணங்கள் வரக்கூடாது என்றும், தன் வயதும் காதல் கல்யாணத்திற்கு சரியில்லை என்றும் மனதுக்கு கடிவாளம் போட்டுக் கொண்டான்.
அது இரவும் நிலவும் வரும் வரையில்தான். தூங்குவதற்கு படுக்கையில் விழுந்தால், அவன் கனவுகளை பறித்துக் கொண்டாள் அந்த பால்வண்ண பைங்கிளி. அவளின் வட்ட முகமே சுற்றி சுற்றி கண்களுக்குள் வர, கண் விழித்தே கிடந்தான் புதுவித அவஸ்தையால்.
அது போதாது என்று காலையில் பாடசாலை உடையில், மாலையில் பாடசாலையில் நடக்கும் வகுப்பிற்கு கலர் உடையில் என்று அவன் முன் உலா வந்து, உள்நெஞ்சை கொக்கி போட்டு இழுத்து விட்டாள் நிராளினி.
வாகீஷனும் இது எதுவரை போகின்றது பார்க்கலாம் என்ற நினைப்பில், அவளை பார்ப்பது மட்டுமே என் கடமை,பலன் என்னவாக இருந்தாலும் சரி என்று காதலிடம் முடிவை விட்டு விட்டான்.
"வாகீ! ஏதாவது கிரீம் பாத்து வாங்கணும் டா..." என்றான் சுதாகரன்
"கிரீமா! எதுக்கு? எந்த கிரீம் போட்டாலும் நீ குரங்கு, நான் கரடிதான்.. காக்கா வெளுக்காது..." என்றான் வாகீஷன்.
"அடேய்! ஏன்டா என் கிளமர டேமேஜ் பண்ற.. நான் அந்த கிரீம சொல்லல.. காலுக்கு கைக்கு போடத்தான், இங்க பாரு தேங்காஎண்ண பூசினா கால்ல மண் ஒட்டுது..." என்று சொன்னவாறு குனிந்து காலில் இருந்த மண்ணை தட்டி விட்டான் சுதாகரன்.
"பொறுமையா நடந்து வராம பாய்ஞ்சு வந்தா மண் அம்பும்தான்..." என்று சொல்லிவிட்டு பாடசாலையை பார்த்தான் வாகீஷன். வகுப்பு முடிந்து அவன் காதல் பூந்தளிர் வர வேண்டுமே என்ற தவிப்பு அவன் கண்களில்.
மூன்று மாதங்களாக யார் கண்ணையும் உறுத்தாமல் காதல் பார்வை வீசுகின்றான்.நிராளினிக்கு தான் இப்படி ஒருவன் இருப்பது கூட தெரியாது.
இரு ஆண்களின் எதிர்பார்ப்பிற்குரிய இளம் கோதைகள் இருவரும் ஒன்றாக கதை அளந்தபடி வந்தனர்.
நாயகர்கள் இருவரும் தங்களை கடந்து செல்லும் கன்னியின் கடைக்கண் பார்வை விழாதா என்றும், அவர்களின் மேனி தீண்டிய தென்றல் தங்களை தீண்டாத என்று ஆர்வமாக ஒவ்வொரு நொடிகளையும் நெட்டித்தள்ள,
நிராளினியும் கீர்த்தனாவும் இடையில் இருந்த ஒரு கடை அருகே நின்று விட்டனர். என்னவென்று வாகீஷன் ஊன்றி பார்க்க, அந்த கடையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி, ஒற்றை வெண்தாமரை பாதத்தை பூமி மகளின் மீது இசைக்கேற்றபடி தட்டிக்கொண்டு, ரசித்துக் கொண்டிருந்தாள் நிராளினி.
அவனும் அவள் மனதை கொள்ளை கொண்ட அந்த பாடலை செவிமடுக்க, (காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது... கண்களால் சுவாசிக்க கற்றுத் தந்தது... பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது, இன்றுதான் என் மனம் ஏற்றுக் கொண்டது... ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்... அட நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக்கொள்வேன்... கோடைகால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்... என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்....) என ஹரிஹரன் காந்த குரலில் வாகீஷனின் தற்போதைய நிலையை விளக்க
அவளை பார்த்துக் கொண்டே அதை ரசித்தவனுக்கு அவனுக்கு பிடித்த ஒரே பாடல் அதுவாகவே போனது.
"ஏன்டி என்ன ஒரு பைத்தியமோ உனக்கு.. இந்த பாட்ட எத்தன தடவ கேட்டு இருப்ப ஆனாலும் எங்க கேட்டாலும் நின்னு ரசிக்கிற..." என்று கீர்த்தனா கேட்க
"தெரியலடி இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எப்ப கேட்டாலும் புதுசா கேட்கிற மாதிரி ஒரு ஃபீல்..." என்று நிராளினி சொல்ல
"இது காதல் பாட்டு.. லவ் பண்றவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. உனக்கு ஏன் பிடிக்குது?..." என்று குதர்க்கமாக கீர்த்தனா கேட்டு வைக்க
அவள் தலையில் குட்டியவள் "படிக்கிற வயசுல என்ன கதை இது..." என்ற நிராளினி நடக்க
"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி..." என்றவாறு கீர்த்தனாவும் கூடவே நடக்க, இரு பெண்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டு ஆண்கள் இருவரையும் கடந்து செல்ல, ஆவென்று பார்த்து நின்றனர் காளையர்கள்.
ஒலித்த பாடல் வரிகளைப் போல் கண்களால் சுவாசிக்க கற்றுக் கொண்டனர் போலும். கண்களில் காதல் கண்மணிகளை நிரப்பி கொண்டு, அவர்களை நினைத்து தலையணையை கட்டிக் கொள்ளாமல் உறக்கம் வருவதில்லை.
அப்படியே ஒரு மாதம் கடந்து இருக்கும் சுதாகரனின் பொறுமை கரைந்து அவன் காலடியில் உருகி ஓடும் அளவிற்கு வந்துவிட, வாகீஷனை உதவி செய்யச் சொல்லி நச்சரித்துக் கொண்டே இருந்தான்.
நிராளினியை கொஞ்ச நேரம் திசை திருப்பி விட்டால், தான் போய் கீர்த்தனாவிடம் காதலை சொல்ல முடியும் என்று கெஞ்சி கேட்க, வாகீஷன் முழி பிதுங்கி நின்றான்.
அவளின் இமை இவன் பக்கம் நிமிரும் முன், தன் இமைகளை தாழ்த்திக் கொள்வான். அப்படி இருக்க எப்படி அவளிடம் சென்று பேசி, நண்பனுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.
இருந்தும் இருக்கும் எல்லா கடவுளுக்கும் ஒரு கும்பிடு போட்டவன், நிராளினியிடமே சென்று 'என் பிரிண்ட் உன் பிரண்ட லவ் பண்றான்.. ப்ரொபோஸ் பண்ண ஹெல்ப் பண்ணு...' என்று கேட்டு விடுவோம் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நின்று இருக்க,
பாடசாலையில் இருந்து நிராளினியும் கீர்த்தனாவும் வெளியே வந்து, சுதாகரன் வாகீஷனை கடந்து செல்ல "டேய் மச்சான்!.. டேய் மச்சான்!..." என்று வாகீஷனின் தோளை சுதாகரன் சுரண்ட,
"இருடா சுரண்டியே புண்ணு வர வெச்சிடாத..." என்ற வாகீஷன் தன் சைக்கிளை உருட்டி கொண்டே நிராளினியின் பின் சென்றான்.
எப்படி அழைப்பது என்று தயக்கம் வேறு, தொண்டையில் முள் சிக்கிக் கொண்டது போல, அவன் மனசாட்சியே காரி துப்பியது. மனதோடு நிரா! நிரா! என்று லச்சம் முறை அழைத்து இருப்பான்.
இப்போது நாதம் வருவேனா என்றது. முயன்று வாகீஷன் முத்து உதிர்க்கும் நேரம், கீர்த்தனாவிடம் பேசிக் கொண்டிருந்த நிராளினி பின் திரும்ப, சட்டென சைக்கிளை திருப்பியவன் அதில் ஏறி, வேகமாக மிதித்து, சுதாகரனை தாண்டி செல்ல
"டேய் வாகீ!..." என்று சுதாகரன் காட்டு கத்தாய் கத்தியும் அவன் நிற்கவில்லை. வீட்டிற்கு வந்து கட்டிலில் விழுந்தவனுக்கு வியர்த்து கொட்டியது.
சைக்கிளை வேகமாக மிதித்ததால் மட்டும் இல்லை, அணங்கவளின் அயல்விழி பார்வையை எதிர்கொள்ள முடியாத படபடப்பிலும்.
அவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்கவே முடியவில்லை. இது சரி வருமா? வயதின் கோளாறா என்ற சிறு தடுமாற்றம் அவன் மனதில் இத்தனை நாள் இருக்க, இன்று அதையும் விரட்டி விட்டது இந்நிகழ்வு.
கண்ணோடு கண் பார்க்க முடியவில்லை, தவிக்கின்றான் என்றால் அது காதல் தானே.
சுதாகரன் தான் கடுப்பின் உச்சியில் இருந்தான். மறுநாள் ஒற்றை தம்மை இருவரும் பகிர்ந்து கொண்டு சமரசமானார்கள். ஆம் வாகீஷனும் புகை பிடிப்பான், நண்பனுடன் சேர்ந்து பழகிக் கொண்டான்.
அடுத்து வந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அருகில் இருந்த முருகன் கோயிலில் காத்திருந்தனர் ஆண்கள் இருவரும். வெள்ளிக்கிழமை என்றால் வகுப்புகள் முடிந்ததும் பெண்கள் இருவரும் கோயிலுக்கு வருவார்கள் என்று நன்கு தெரியும்.
எப்படியாவது சுதாகரன் இன்று தன் காதலை சொல்லிவிடும் முனைப்பில் இருக்க, வாகீஷனோ தன்னவள் விழிகளை நேருக்கு நேர் எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று இருந்தான்.
கீர்த்தனாவும் நிராளினியும் கோயிலுக்குள் நுழைந்து, சன்னிதியின் முன்பு வணங்கி விட்டு, கோயிலை சுற்ற தொடங்க,
சுதாகரன் துணைக்கு வாகீஷனை அழைக்க, அவனோ தன்னவளை தள்ளி நின்று ரசிப்பதே போதும் என்னும் வகையில் சிலையாக நிற்க,
"போடா இவனே!..." என்று திட்டி விட்டு சுதாகரன் பெண்களின் முன்பு போய் நிற்க, இருவரும் அவனை பார்த்து விட்டு, தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.
நிராளினி கண்களால் ஜாடை செய்து விட்டு விலகிச் சென்று நின்று கொள்ள, 'என்ன நம்ம சொல்லாமலே போய்ட்டா...' என்று நிராளினியை பார்த்துவிட்டு, கீர்த்தனாவை பார்த்து "கீ..கீத்து.. அ..அது.. நான்..." அவன் வார்த்தை கோர்க்க,
'இவன் தேற மாட்டான்...' என்று அவள் மனது கவுண்டர் கொடுத்தது. நூறடி தூரத்தில் இருந்தாலும் தன்னை தொடரும் பார்வையை பெண்கள் எளிதில் கண்டு கொள்வார்களே, கீர்த்தனாவும் கண்டுகொண்டாள்.
அதிலும் செல்வகுமாரின் வீட்டிற்கு வரும் சாக்கில் அவளை நோட்டமிடுவது நன்கு தெரியும். பின்னாடியே சுற்றுப்பவன் எப்போது முன்னாடி வருவான் என்று தான் அவளும் காத்திருந்தாள்.
"ஒரு நிமிஷம்..." என்றவன் அடி வயிற்றிலிருந்து காற்றை இழுத்து விட்டவன், "எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் கீத்து.. நான் உன்ன லவ் பண்றேன்..." என்றவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைகடிகாரம் ஒன்றை எடுத்து நீட்டி சம்மதம் சொல்வாளா இல்லையா என தாளம் தப்பி துடிக்கும் இதயத்துடன் நின்று இருக்க,
இப்பவாவது சொன்னானே என்ற திருப்தியுடன் அவன் பரிசை வாங்கிக் கொண்டவள் "தேங்க்ஸ்!..." என்று புன்னகையுடன் சொல்ல
கீர்த்தனா வாய் திறந்து சொல்லாத காதல் அந்த புன்னகையில் தெரிய, சுதாகரனின் மனதினுள் ஒரே கொண்டாட்டம்தான்.
நிராளினியிடம் கீர்த்தனா சுதாகரன் தன்னை விரும்புகின்றான் என்பதையும், தனக்கும் அவனை பிடித்து இருக்கின்றது என்றும் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாள்.
வாகீஷனை அவளுக்கு தெரியும். நண்பனுக்கு துணையாக நிற்கின்றான் என்ற எண்ணம்.
அன்றைய நாளின் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சுதாகரன் கீர்த்தனா காதல் வளர, காதல் கிளிகள் நேரில் சந்தித்து பேசிக் கொள்ளும் போது நிராளினி அந்த மூலையிலும், வாகீஷன் இந்த மூலையிலும் என்று நின்று கொள்வார்கள்.
வாகீஷனுக்கும் அவளிடம் பேச பழக கொள்ளை ஆசை. அவன்தான் காதலை சொல்ல நான் பார்த்து வைத்திருந்தானே.
அது அவள் 18 ஆவது பிறந்தநாள். அதற்கு இன்னும் மூன்று மாதங்கள் என்ற நிலையில் அன்று சுதாகரன் வேலைக்கு வரவில்லை.
வாகீஷன் மட்டும் காலையில் பள்ளி சீருடையில் தன் பைந்தமிழ் பெண்ணை பார்வையால் தழுவி விட்டு வேலைக்கு சென்று விட்டான்.
எப்போதும் போல் மாலை வேலை முடியவில்லை. மேல் தளத்திற்கு காங்கிரிட் கலவை கொட்டும் வேலை, பத்து மணியானாலும் மொத்தமாக கொட்டி பரப்பி விட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
மாலையில் நிராளினியை பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வேலையை முடித்தால் அதிகப்படியான பணம் கிடைக்கும் என்பதால் வேலையில் மும்முரமாக இருந்தான்.
மணி ஏழாக இருபது நிமிடங்கள் இருக்க, அப்போது சுதாகரனிடமிருந்து விடாமல் அழைப்பு வந்தது. தான் போட்டிருந்த வேலை டி-ஷர்டில் கையை துடைத்தவன், வேலைக்கு வரும்போது போட்டு வந்த ஷர்ட்டில் இருந்த ஃபோனை எடுத்து அழைப்பை ஏற்க,
"மச்சான் வாகீ ஒரு ஹெல்ப் டா..." என்று பதட்டமாக சுதாகரன் கேட்க
"என்னடா என்னாச்சு? எடுத்ததும் ஹெல்ப் என்டுற.. காய்ச்சல் தானே உடம்புக்கு வேற ஏதும் பண்ணுதா?..."
"இல்லடா.. நான் நல்லா தான் இருக்கேன்.. நீ உடனே ஸ்கூலுக்கு போவேன்..."
மணியைப் பார்த்துவிட்டு "ஸ்கூலுக்கா.. எதுக்கு?..."
"ஓம்டா.. நிராளி தனியா நிக்கிறா.. அவ வீட்ட போற வரைக்கும் துணைக்கு போடா..." என்று சொல்ல
"என்னடா சொல்ற? எதுவும் புரியல..."
"மச்சான் வகுப்புக்கு வந்த கீத்து என்ன பாக்க வீட்டவந்துட்டா டா.. என்ன பாத்துட்டு வகுப்பு முடியிற டைமுக்கு நிராளி வீட்ட போய் இருப்பாள்னு கீத்துவும் வீட்ட போயிட்டாள்.. ஆனா கீத்து வருவாள்னு நிராளி ஸ்கூல் வாசல்ல காத்திருந்து பாத்துட்டு அவளுக்கு கால் பண்ணி கேட்கவும் தான் கீத்துக்கே நிராளி காத்திருக்கிறது தெரியும்டா..
...கீர்த்தனா இந்த நேரம் வீட்ட விட்டு வர ஏலாதுடா.. பாவம்டா நிராளி, இருட்டிருச்சு, தனியா பயந்து அங்கேயே நிற்கிறாள் போல.. அவ ஃபோன் வேற கதச்சிட்டு இருக்கும்போதே கட்டாகிட்டாம்.. அதுக்குப் பிறகு எடுத்தாலும் கால் போகல ஆஃப்ல இருக்காம்.. நீ கொஞ்சம் போய் என்னன்னு பாருடா.. வீட்ட தானே இருக்க?..." என்று கேட்டவனுக்கு பதில் சொல்ல வாகீஷன் அழைப்பில் இல்லை.
தன் அன்னக்கிளி தனியாக நிற்கின்றாள் என்பதை கேள்விப்பட்ட உடனே அழைப்பை கூட துண்டிக்காமல் ஷர்ட் பாக்கெட்டில் ஃபோனை போட்டவன், வேகமாக சைக்கிளை எடுத்து முடிந்த மட்டும் வேகமாக மிதித்தான்.
சுதாகரன் நினைத்தது வேலை முடிந்து வீட்டில் இருப்பான் என்று, ஆனால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் முள்ளம் தண்டு தெறிக்க வேலை செய்து கொண்டிருப்பான் என்று தெரிந்திருந்தால் அவனே சென்றிருப்பான்.
கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்தை தன் கால்களின் பலத்தைக் கூட்டி மிதித்து வந்து விட்டான். அவன் பலத்தின் அழுத்தம் தாங்காமல் அட போடா என்று விட்டு சைக்கிள் செயின் அறுந்து போக,
தடுமாறி நின்றவன் "ச்சே! இது வேற..." என்ற கடுப்புடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு, ஓட்டமும் வேக நடையுமாக மைதானத்தை நெருங்கி விட்டான்.
ஸ்கூல் வாசலில் சிகப்பு பிளவுஸ் கருப்பு பாவாடை அணிந்து, செத்துப்போன ஃபோனை கையில் வைத்துக் கொண்டு, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் பரிதாபமாக நின்றிருந்த நிராளினி மைதானத்தை கடந்து வரும் வாகீஷனை கண்டு கொண்டாள்.
கீர்த்தனா சொல்லி வந்திருப்பானோ என்ற எண்ணத்தில் அவன் முகம் பார்க்க, பத்து அடி தூரத்தில் நின்று கொண்டே முதல் முறையாக அவள் கண் பார்த்து, அதில் இருந்த எதிர்பார்ப்பை புரிந்து தலையை மேலிருந்து கீழ் அசைத்து முன் செல்ல சொல்லி சைகை செய்ய
நிம்மதியாக ஆழ மூச்சு விட்டவள் சிறு தலயசைப்புடன் முன் நடந்தாள். அதே பத்து அடி தூரத்தில் தன்னவளை பின் தொடர்ந்தான் காதல் காவலன்.
மூச்சு வாங்க ஓடி வந்தவனுக்கு அவளின் மென்னடையை பின்தொடரும் இடைவெளி ஆசுவாசமடைய போதுமானதாக இருந்தது.
சுதாகரன் வேறு திரும்பவும் அழைப்பை எடுக்க, அழைப்பை ஏற்றவன் "சொல்லுடா..." என்க
"என்னத்த சொல்ல.. அத்தானுக்கு ஃபோன் பண்ணுனா வேலையில இருந்து சொல்லாம கொள்ளாம ஓடுனியாமே.. இப்ப எங்க இருக்க..? வேலையில இருக்கேன்னு ஒரு வார்த்த சொல்றதுக்கு என்ன..." என்று கடிந்து கொள்ள
"நிராவ வீட்ட விட போயிட்டு இருக்கேன்.. நிலா தானே நாம போற இடத்துக்கு நம்மல பின் தொடர்ந்து வரும்.. ஆனா இங்க என்ட நிலா முன்ன போக நான் அவள பின்தொடர்ந்து போறேன்..." என்றான் சிலாகித்து.
நண்பனின் குரல் மாற்றம், வார்த்தை என்பனவற்றிலிருந்து விஷயம் புரிய "அடேய் இது எப்படா நடந்துச்சு?..." என்று கேட்க
"டேய் டிஸ்டர்ப் பண்ணாத.. நாளைக்கு எல்லாம் சொல்றேன்.. ஃபோன வை..." என்றவன் இருட்டு ரோட்டில் தன் வனக்குயில் முன் செல்ல, பாதுகாப்பிற்கு தான் பின் செல்லும் இதமான தருணத்தை ரசித்துக் கொண்டே செல்ல,
எங்கோ ஒரு வீட்டில் (ஐயையோ நெஞ்சு அலையுதடி... ஆகாயம் இப்போ வலையுதடி... என் வீட்டில் மின்னல் ஒழியுதடி... என் மேல நிலா பொழியுதடி... உன்ன பார்த்த அந்த நிமிஷம் நின்னு போச்சு நகரவே இல்ல... தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலப்புறேனே நானே... உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்குறதே... என் சேவல் கூவுற சத்தம் உன் பேரா கேட்குறதே...) என்று தேன் குரல் காதில் உருக, தானாக வாகீஷன் உதடுகளும் வெட்கப் சிரிப்போடு அதே வரிகளை முணுமுணுத்தது.