அத்தியாயம் 12
பாய்ந்து வரும் ஆற்றை கட்டுப்படுத்தி தன்னுள் பதுக்கிக் கொண்ட கருங்கொடி தீவு களப்பு, அதன் புற்தரையில் இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்து, விண்மீன் நடுவே ஜொலிக்கும் வெள்ளி நிலவில் தன்னவளின் முகம் தேடியபடி படுத்து இருந்தான் வாகீஷன் .
அவனை கொலை வெறி ஆத்திரத்தில் முறைத்து பார்த்தபடி சிக்ரெட்டை வாயில் வைத்து வெம்மையான புகையை உள் இழுத்து வெளியேற்றினான் சுதாகரன்.
அடுத்த இழுப்பு வாயில் வைக்காமல் கோபமாகவே வாகீஷனிடம் நீட்ட, கண் மறைத்த தீ கங்கை பார்த்துவிட்டு, நண்பனின் கையை விலக்கியவன் "வேணாம்டா..." என்க
"ஏன்?..." என்றான் சுதாகரன் கடுப்பாக
"நேத்து நிராக்கு துணைக்கு போகும் போது எவனோ ஒருத்தன் இழுத்து புகவிட்டுடே சைக்கிள்ல போனானா.. அந்த நாத்தம் பிடிக்காம கையாள மூக்க பொத்திக்கிட்டா.. அதான் என்ட நிராக்கு பிடிக்காதத நான் இனி தொட மாட்டேன்..." என்று சொல்ல
சிகரட்டை தூக்கி தூர போட்டவன் "அடிங்க...!" என்றவாறு வாகீஷன் ஷர்ட்டை பற்றி தூக்க "ம்ச்! என்னடா...?" என்றான் சலித்துக் கொண்டு
"நானும் வந்ததுல இருந்து உன்ட காதல் கதைய கேட்டுட்டு இருக்கேன் அத சொல்லாம வெறுப்பா ஏத்துற..." என்று திட்ட
"என்ன காதல் கத.. எதுவுமில்ல.. இது உன்ன தவிர வேற ஆருக்கும் தெரியகூடாதுடா.. கீர்த்தனா உட்பட..." என்று வாகீஷன் சொல்ல
"அதெல்லாம் சொல்ல மாட்டேன்.. நீ எங்க, எப்படி ஆரம்பிச்சது அத சொல்லு..." என்று சுதாகரன் கேட்க
பிறந்தநாள் அன்று நிராளினியை பார்த்ததிலிருந்து நேற்று வரை சொன்னவன், "நீ எதிர்பாத்த மாதிரி சுவாரஸ்யமா எதுவும் இல்ல.. நான் பாத்தேன் அவ பாக்கல இப்படியே தான் போகுது..."
"எல்லாம் சரிடா.. ஆனா நிராளி இந்த ஊரிலேயே வசதியான குடும்பம்..." என்று சொல்ல
"ம்ம்.. நேத்து விட போனப்போ வீட்ட பாத்தேன்.. ரெண்டு மாடி வீடு..." என்றவன் நினைவில் நேற்றைய காட்சி,
நிராளினியின் வீடு நெருங்கும்போது மற்றவர்கள் கண்ணுக்கு உறுத்தக் கூடாது என்பதற்காக தூரத்தை கூட்டியே அவளை பின்தொடர்ந்தான்.
முடியை ஒதுக்குவது, செல்லும் வாகனத்தை பார்ப்பது என்று நிராளினி அவன் வருகின்றானா என்று திரும்பிப் பார்க்க, வாகீஷன் மனதில் அந்த நிமிடங்கள் மத்தாப்பு பூ சிதறியது.
ஒரு வழியாக வீட்டின் அருகே வந்தவள், அதன்பின் தலையைக் கூட திருப்பாமல் உள்ளே சென்றுவிட்டாள். தலையசைக்க வேண்டாம் ஒரு பார்வை பார்ப்பாள் என்று எதிர்பார்க்க, அவள் அப்படி எந்த வினையும் ஆற்றாமல் சென்றது வருத்தமாக இருந்தாலும்,
அவள் வீட்டு ஏடியா, திரும்பி ஒரு ஆண்மகனை பார்த்தால் வேறு ஏதும் பிரச்சனை வரக்கூடும் என்று தான் அப்படியே உள்ளே சென்று விட்டாள் என்பது புரிந்தது.
அவனும் சைக்கிளை உருட்டிக் கொண்டே அவள் வீட்டை நிமிர்ந்து பார்த்தபடி தான் வீடு வந்தான். அப்போதே அவள் வசதி வாய்ப்பைப் பற்றிய கலக்கம் மனதில் குடிகொண்டு விட்டது.
அவனை பொறுத்தவரை தொட முடியாத தூரம் தான் அவள், அழகிலும் சரி, வசதி வாய்ப்பிலும் சரி அதெல்லாம் தெரியும் முன்பே கண்ணில் விழுந்து, காதலில் திளைத்து, உயிரில் கலந்து விட்டாளே எப்படி வேண்டாம் என்று விட்டு விலகுவது .
"அதுபோல ரெண்டு மாடி வீட்டுக்கு கொங்றீட் கலவை அள்ளிக் குடுக்கத்தான் நம்மளால ஏலும்.. மருமகனாக ஏலாது வாகீ..." என்று எதார்த்தத்தை சுதாகரன் சொல்ல
"நீ சொல்ல வாரது புரியுதுடா.. ஆனா மனசுக்கு தெரியலையே.. இதெல்லாம் பாத்துதான் நீ கீர்த்தனாவ லவ் பண்றியா?..."
"டேய் மச்சான்.. எங்க ரெண்டு வீட்டு நிலைப்பாடும் ஒன்னுதான்.. பிரச்சினை வரதா இருந்தாலும் கீத்து வீட்ட சாதிய வச்சு வரலாம்.. ஆனா உன்ட விஷயத்துல எல்லாமே பிரச்சனை டா..." என்று சுதாகரன் சொல்ல
"நிரா மட்டும் எனக்கு சம்மதம் சொன்னா போதும்டா.. எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் பாத்துப்பேன்..." என்று வாகீஷன் அழுத்தமாக கூற
"உன்ட விருப்பத்த எப்ப சொல்ல போற?..."
"அவள்ட பிறந்தநாள் வருது.. அன்டைக்கு..." என்று சொன்ன வாகீஷன் விட்ட வேலையாக நிலவை ரசித்து, எங்கே எப்படி என்ன பேச வேண்டும் என்று கனவில் மிதக்க
"முதல்ல காதல சொல்லுடா.. பிறகு கனவு காணலாம்..." என்ற சுதாகரனும் அவன் காதலி நினைவில் மூழ்கினான்.
அடுத்து வந்த நாட்கள் காதல் நிலவின் கடைக்கண் பார்வைக்காக காத்திருந்து கழிய, நிராளினியின் 18 வது பிறந்த நாளும் வந்தது.
எப்போதும் போல் காலை பள்ளி சீருடையில் பார்த்தான். விசேஷமாக நெற்றியில் பொட்டு சந்தனம் சிறு கீற்றாக இருந்தது.
18 வயது பருவ மங்கைக்கான பொலிவு புதிதாக இவன் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. தன்னை கடந்து சென்று பாடசாலையினுள் நுழையும் வரை ஏக்கமாக பார்த்து நின்று விட்டு வேலைக்கு சென்றான்.
அன்று சிறிது முன்கூட்டியே வீட்டுக்கு சென்று, குளித்து முடித்து, தன்னிடம் இருந்ததில் நல்லதான கருப்பில் வெள்ளை கோடுகளால் கட்டம் போட்ட செக் ஷர்ட், கருப்பு ரவுசர் அணிந்து கொண்டு,
இத்தனை நாட்கள் இடுப்பு எலும்பு தேய இரவு 10 ,11 மணி வரை உழைத்து, அதில் தாய்க்கு தெரியாமல் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தில் அவளுக்காக வாங்கிய பரிசை எடுத்து ஆசையாக பார்த்துவிட்டு, அதையும் பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன், சுதாகரனை இழுத்துக் கொண்டு மைதானம் வந்தான்.
நெஞ்சு திக் திக்கென்று படபடுத்துக் கொண்டிருந்தது. கண்களின் கருமணிகள் பரபரப்பாக அலை பாய்ந்தன. எந்த நிமிடத்துளியோ என்னவள் என் கண்மணிகளில் விழும்நொடி என காத்திருக்க,
கீர்த்தனாவுடன் சிரித்து பேசிக்கொண்டு வந்தாள் நிராளினி. சிகப்பு நிற கவுண் (பார்ட்டி ஃப்ராக்) கையில் கழுத்தில் லேஸ், வெள்ளை முத்துக்கள் கொண்ட வேலைப்பாடுகள். அடி பாதம் வரை குடை போல் விரிந்து இருந்தது அந்த சட்டை, அவள் நிறத்திற்கு தங்கத் தாரகை போல் ஜொலித்தாள்.
அவள் அணிந்து இருந்த நகைகள் எல்லாமே வெள்ளை கல்பதித்த தங்க நகைகள். அவள் சுருள் சுருள் கேஷம் விரிந்து கிடக்க, சைட் உச்சி எடுத்து இரண்டு பக்க முடியை எடுத்து பட்டாம்பூச்சி கிளிப் குத்தி இருந்தாள்.
நெற்றியில் கோபுர வடிவ ஸ்டிக்கர் பொட்டு, எல்லாவற்றுக்கும் மேல் இன்று தான் அவனைக் கொல்லும் அந்த விழிகளில் அஞ்சனத்தை காண்கின்றான். கருப்பு மை கொண்டு கத்தியை விட கூர்மையாக தீட்டி வைத்திருந்தாள் திருவிழிகளை.
(ஹேய் பதினேழு வயது முதல்வரும்.. பதினெட்டு வயது வரை பெரும்.. மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே... பார்வைக்கு பட்ட இடம் அங்கும்.. பார்க்காமல் விட்ட இடம் எங்கும்.. பாதாமின் வண்ணம் அது பொங்கும் கண்களுக்குள் சுடுதே... ஒரு ஐநூறு நாளான தேனானது அவள் செந்தூரம் சேர்கின்ற இதழானது...) பாடல் வரிகள் வேறு எங்கோ ஒலிக்கவில்லை வாகீஷனின் மனதில் தான்.
கடைசி வரிகளில் அவன் கண்கள் அவள் செவ்விதழில் படிய மூச்செடுக்க சிரமப்பட்டு நெஞ்சடைத்தது. இத்தனை நாட்களில் இப்படி ஒரு எண்ணத்தில் அவளை பார்த்தது இல்லை. இன்று என்ன என்னவோ மாற்றங்கள் அவனுள்.
கண்களை விரித்து அடி வயிற்றிலிருந்து காற்றை இழுத்து வாய் வழியாக வெளியிட்டவன், வெளிப்படையாகவே தன் வேட்கை தாளாமல், இரண்டு கைகளையும் தலையின் பின் கட்டி மைதானத்தை பார்த்தவாறு திரும்பி கொண்டான்.
மார்புக்கூடு இல்லை என்றால் வெளியே குதித்து விடுவேன் என அவன் இதயம் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. தலையில் இருந்த கையை அப்படியே முன்னெடுத்து முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டான்.
'வாகீ ரிலாக்ஸ்டா.. இன்னும் நீ அவள்ட கதைக்கவே இல்ல.. இப்டி இருந்தா எப்டி கதைப்ப...' என்று தனக்கு தானே தைரியம் கூறிக் கொண்டவன்,
சுதாகரனை பார்க்க "என்னடா பைத்தியம் முத்தி போச்சா.. என்ன என்னவோ செய்றாய்?..." என்று சுதாகரன் கேட்க
"அதெல்லாம் முத்தி பழுத்தாச்சு.. நீ சொன்னத செய்..." என்கவும், சுதாகரன் கீர்த்தனாவிற்கு கண்ணை காட்டிவிட்டு மைதான மேடையின் பின் செல்ல, அவளும் நிராளினியை இழுத்துக் கொண்டு அங்கு சென்றாள்.
எப்போதும் போல் சுதாகரனும் கீர்த்தனாவும் கதையளக்க, அவர்களைப் பார்க்காமல் திரும்பி நின்ற நிராளினியிடம் நெருங்கினான் வாகீஷன்.
அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது கீர்த்தனாவிற்கு தெரியக்கூடாது என்று அவள் பார்வையை மறைத்து தன் காதலில் மயக்கி வைத்திருந்தான் சுதாகரன்.
வாகீஷனோ பார்த்து பார்த்து அணிந்து வந்த ஷர்ட் நனைந்து போகும் அளவிற்கு வியர்வையில் குளித்து இருந்தான். ஒருவாறு தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டு "நி.. ம்ஹூம் நிரா!..." என்று அழைக்க
அவன் அழைப்பில் புருவம் சுருக்கி திரும்பி பார்த்தாள் நிராளினி. அவள் திரும்பும் அந்த ஒரு நொடிக்குள் 'அவ திரும்ப முன்ன ஓடிடுடா...' என்று அவன் மனது அவனுக்கு எதிராக கூக்குரலிட்டது.
அவள் திரும்பி அவன் முகம் பார்த்த மறு நொடி அவனால் சீரான மூச்சை கூட விட முடியவில்லை. தவறுதலாக அவள் விழிகளை பார்த்து விட்டான், பார்த்தவன் பார்த்த விழி அப்படியே நிற்க,
நிராளினி புருவம் சுருக்கி "ஹலோ!..." என்று அவன் முன் கைசைத்து, அவள் கருவிழிகளில் கட்டுண்டு நின்றவனை காப்பாற்றி விட்டாள்.
"ஹா, ஆ..அது.. கொஞ்சம் கதைக்கோணும்..."
"ம்ம், சொல்லுங்க..."
"அது.. சரியா ஒரு வருஷம் முன்ன இதே நாள் உன்ன முதன் முதலா பாத்தேன்.. அப்பவே இங்க என்னவோ பண்ணுச்சு..." என்று தன் இடது மார்பை வருடிவிட்டவன்
"ஏதோ வயசு கோளாறுனு தான் நானும் முதல்ல நினைச்சேன்.. ஆனா நாளாக நாளாக கண்ணுக்குள்ளயே நின்னு உறுத்த ஆரம்பிச்சிட்ட.. எனக்கு தெரியும் என் தகுதிக்கு நீ அதிகப்படி தான்.. காதல் மனசுக்கு தகுதி தராதரம் தெரியாதே.. எனக்கு நீனா உசுரு நிரா.. நீ மட்டும் சம்மதம் சொல்லிட்டா இந்த உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி நான் தான்.. என்ன பொறுத்த வரைக்கும் தூரத்து வான்நிலா தான் நீ ஆனா என் கைக்கு கிடைச்சா கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன்..." என்று தன் காதலை சொல்லி முடித்தவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய நகைபெட்டியை எடுத்து திறந்து நீட்டி "ஹாப்பி பர்த்டே நிரா..." என்று சொன்னான்.
அது ஒரு சிறிய தங்க மோதிரம், இரண்டு கிராம் கூட வராது என்பது அதை பார்த்ததுமே தெரிந்தது. ஆனால் அது விலை மதிப்பில்லாத அவனது வியர்வையில் விளைந்தது.
வாகீஷன் கூறிய காதலோ, அவன் வாங்கி வந்திருந்த பரிசோ நிராளினிக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனாலும் தங்க மோதிரம் பரிசு என்றதும் சற்று வியப்புதான்
ஆனால் அவன் காதல் வசனங்கள் அவ்வளவு தானா என்பதைப் போல் சலிப்பைதான் கொடுத்தது.
அந்த ஊரின் பெரிய தலைக்காட்டின் மகள் என்று தெரிந்து பாதி பேர், அவள் அழகில் மயங்கி பாதிப்பேர் என்று அவளிடம் 16 வயதிலிருந்து காதல் என்று பல்லை இளித்துக் கொண்டு வந்த ஆண்கள் ஏராளம்.
அதனால் காதல் என்று வந்து நின்றால் கடுப்பு தான் வரும் நிராளினிக்கு ஆனால் வாகீஷன் மீது சற்று கோபமும் பரிதாபமும் சேர்ந்து வந்தது.
அன்று அவளுக்கு துணைக்கு வந்து உதவிய மறுநாள், கீர்த்தனாவிற்கு பெரிய அர்ச்சனையாக செய்து விட்டு அவன் யார்? அவன் வேலை படிப்பு வீட்டு நிலவரம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
எனவே அவன் நிலைமை நன்கு தெரிந்தவள் என்பதால், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் காதல் என்று பிதற்றுகின்றானே என்றுதான் கோபம்.
அதிலும் ஒரு சிலரைப் போல் தன் தந்தையின் பணத்திற்காக காதல் என்று பொய் நாடகம் போடவில்லை என்பது புரிந்தது. எனவே இவனைப் போல் நியாயமாக வயது கோளாறில் வந்து காதல் சொல்பவர்களை திசை திருப்பி விட சொல்லும் அதே வார்த்தைகளை சொல்லி வாகீஷனை மடை மாற்றி விட வேண்டும் என்று எண்ணினாள்.
மற்றும் ஒன்று அவனையே நம்பி இருக்கும் அவன் குடும்பம். வெட்டுமுறுவாக வேண்டாம் என்று கூறி, இவன் ஏதாவது தவறான முடிவோ, இல்லை தவறான பாதையையோ தேர்ந்தெடுத்து விட்டால் என்ன செய்வது எனவே தான்,
"உண்மையா நீங்க இப்பிடி சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல.. நீங்க சொன்ன மாதிரி காதலுக்கு தகுதி தராதரம் தேவையில்லதான்.. ஆனா காதலிக்கிறது கல்யாணம் கட்ட தானே..." என்று கேட்க
அவனோ தன்னவள் திருவாய் மலர்ந்து, நீளமாக பேசியதை எட்டாம் அதிசயம் போல் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். மிக அருகில் அவள் தேன் குரல் அவன் காதில் புல்லாங்குழல் ராகமாய்.
"ஹலோ! காதலிக்கிறது கல்யாணம் கட்ட தானே..." என்று மீண்டும் அவள் சத்தம் கொடுக்கவும் தான்
"ஹா! ஓம்.. ஓம்..." என்று மேலும் கீழும் வேகமாக தலையை ஆட்டினான்.
"நான் இப்போ ஓகே சொல்றேனு வைங்க.. என்ன பண்ணுவோம்.. இரவு பகலா ஃபோன்ல கதைப்போம்.. கனவுலகுல மிதந்து காதலிப்போம்.. நீங்க கூலி வேலைக்கு போயிட்டு இப்டியே இருப்பீங்க.. நான் படிப்புல கவனம் செலுத்த ஏலாம ஏ.எலோட வீட்டுல இருப்பேன்..
...ஒரு நாள் வீட்ட விஷயம் தெரிஞ்சா ஓடிப்போக கூப்பிடுவீங்க.. கண்டிப்பா நான் வரமாட்டேன்.. சரின்னு என்ன பொம்பள கேட்டு வந்தா என்ட வீட்ட அப்பா அம்மா என்ன யோசிப்பாங்க.. நம்ம எந்தளவுக்கு சொகுசா வசதியா வளத்தமோ அதே அளவுக்கு கல்யாணத்துக்கு பிறகும் நம்ம மக இருப்பாளானு பாப்பாங்க..
...கண்டிப்பா கஷ்டப்பட்டு கூலி வேலைக்கு போற உங்களுக்கு கட்டி வைக்க மாட்டாங்க.. ரெண்டு பேரும் வேற வழி இல்லாம வேற ஆரையாவது கல்யாணம் பண்ணிக்கனும்.. இதுல நம்மள பெத்தவங்க தான் பாவம் பிள்ளைகளோட எதிர்காலம் ஏன் பாதியில நின்னுடுச்சுன்னு புரியாம தவிப்பாங்க.. அதுலயும் உங்க அம்மா தங்கச்சி இவங்கள பத்தி யோசிச்சீங்களா? உங்க தங்கச்சிய படிக்க வச்சு நல்லபடியா கட்டி கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு.. அது எதையும் யோசிக்காம காதல்னு என் முன்ன வந்து நிற்கிறீங்க.. நான் என்ன சொல்லணும்...?" என்று நிராளினி கேட்க
அவள் சொன்னதில் என்ன புரிந்ததோ இல்லையோ தன் குடும்பத்தை பற்றி யோசிக்கின்றாளே என்று இன்னும் இன்னும் அவள் மீது காதல்தான் பல்கி பெருகியது.