அத்தியாயம் 15
அவனவள் கையில் கிடைத்ததை வைத்து ஓங்கி அடித்து மண்டையை உடைத்த போது கூட வலியில் கண்கள் கலங்கவில்லை காளையவன்.
ஆனால் தன் தங்க நிலவின் அழுகுரலை தாங்க முடியாமல் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
கீர்த்தனா நிராளினியை சமாதானம் செய்யும் பொருட்டு அறையை நோக்கிச் செல்ல, "வேணாம் கீர்த்தனா..." என்று கைநீட்டி தடுத்த வாகீஷன்
விழிகளை மேல் நோக்கி பார்த்தவாறு மூச்சை இழுத்து விட்டு, முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், மூடி இருந்த கதவின் அருகே சென்று, தன் ஒற்றை கையை எடுத்து அதில் வைத்தவன் "நிரா!..." என்று காற்றில் தவழும் ஆரோகணமாக அழைக்க
அவள் அழுகை கூடியதே ஒழிய குறையவில்லை. அவனின் கோபத்தை தாங்கிக் கொண்டிருப்பாளோ என்னவோ அவன் காதலை தான் அவளால் தாங்க முடியவில்லை.
வாகீஷனின் இடத்தில் வேற யாராக இருந்திருந்தாலும் அடித்து காயப்படுத்தியவளின் மீது இப்படி அன்பை செலுத்த முடியுமா என்று தெரியவில்லை.
அவளின் தந்தையாக இருந்திருந்தாலும் ஒரு நாள் சரி கோபமாக இருந்திருப்பார். இவள் மன்னிப்பு கேட்டிருந்தால் கூட மன்னிக்க நாட்கள் எடுத்து இருக்கலாம்.
ஆனால் இந்த காதல் கிறுக்கன் சிரித்துக் கொண்டே என்னை சமாதானப்படுத்துகின்றான். எப்படி முடிகின்றது! தன் மனதின் தாக்கம் தாள முடியாமல் கதவில் சாய்ந்தபடியே மடிந்து அமர்ந்து விட,
உள்ளிருந்து வந்த சத்தத்தை வைத்தே அவள் எப்படி இருக்கின்றாள் என்று புரிந்தவனாக, அவனும் ஒரு காலை மடித்து அமர்ந்தவன் "நிரா!..." என்றான் உயிரை உருக்கும் குரலில்
"நா..நான்.. வேணு..ம்னு.. செய்யல..." என்றாள் நிராளினி விசும்பலுடன். அது சரியாக வாகீஷனுக்கு கேட்கவில்லை.
"நிரா குளறாதடா.. கதவ திற.. நீ கஷ்டப்படுறத என்னால தாங்க ஏலல..." என்று அன்பாக சொல்ல
"சொரி! நான் வேணும்னு செய்யல.. பயத்துல என்ன பண்றேன்னு தெரியாம அடிச்சுட்டேன்.. சொரி.. சொரி..." என்று அழுகையை அடக்கிக் கொண்டு சொல்ல
"எனக்கு தெரியும்டா என்ட நிரா தெரிஞ்சே ஆரையும் காயப்படுத்த மாட்டா.. ஆனா இந்த சொரிய நான் ஏத்துக்கணும்னா குளறாம வந்து சாப்பிடு..." என்று வாகீஷன் சொல்ல
"இல்ல.. எனக்கு பசிக்கல..."
"ஓ சரி.. அப்ப நானும் உன்ன மன்னிக்க மாட்டேன்..."
"ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு..."
"எனக்கும் கஷ்டமா இருக்கு.. தல நோவுது.. சாப்பிட்டுத்து தான் குலிச போடணும்.. நீ சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன்..." என்று சொல்ல
நிராளினியின் சிறு விசும்பல் கூட நின்று போனது. தன்னால் உண்டான வலி தன்னாலே அதிகரிக்க வேண்டாம் என்று நினைத்தவள் "அஞ்சு நிமிஷத்துல வாரேன்..." என்று பதில் சொன்னாள்.
அப்போதுதான் வாகீஷனின் உதடுகள் விரிந்தன. திரும்பி மற்றவர்களை பார்க்க, சுதாகரன் உதடு பிதுக்கி புருவம் உயர்த்தி "ஹூம்ம்...!" என்க
"போடா!.. போய் பார்சல பிரிச்சு எல்லாருக்கும் எடுத்து வை..." என்று கூறியபடி எழுந்து வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
"டேய் நீ எல்லா வேலையும் செய்றேன்னு என்னையும் வீட்டு வேலை செய்ய வைக்கிறயாடா?..." என்று சுதாகரன் கேட்க
"ஓமம் இவன் பொண்டாட்டிக்கு எந்த வேலையும் செஞ்சு குடுக்காத மாதிரி தான்.. நடிக்காம போய் எடுத்து வை டா..." என கோமதி தம்பியை மூக்கொடித்து விட
சுதாகரன் காதல் மனைவியை எப்படி தெரியும் என்பது போல் திரும்பி பார்க்க "நான் எதுவும் சொல்லல..." என்று வாய்விட்டு சொல்லியே அவளும் அவன் காலை வாரி விட ,
வெளிப்படையாகவே இரண்டு விரல்களை நெற்றி பொட்டில் வைத்து ஆட்டியவன் "எல்லாம் என்ட நேரம்.. சரி பாய எடுத்து கீழே விரிங்க எல்லோரும் ஒன்னா இருந்து சாப்பிடலாம்..." என கீர்த்தனாவிடம் சுதாகரன் சொல்ல
"சரி நீங்க சாப்பிடுங்க.. நான் வீட்ட போறேன்..." என்று கோமதி சொல்ல
"அக்கா என்ன கதை இது.. உங்களுக்கும் சேத்து தான் வாங்கி வந்தோம்.. வீட்டுல தான் ஒருத்தரும் இருக்க மாட்டாங்களே.. சாப்பிட்டு பொறுமையா போகலாம்..." என கோமதியிடம் கூறிய வாகீஷன்
"பாய் எல்லாம் வேணாம்.. நிலத்துக்கு மார்பில் பதிக்கல நிராவுக்கு கஷ்டமா இருக்கும்.. டைனிங் டேபிள்ல எடுத்து வை..."என்று சுதாகரனிடம் சொல்ல
சரி என அவனும் எடுத்து வைக்க, அனைவரும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தனர். வாகீஷன் நிராளினியின் மனநிலையை புரிந்து கீர்த்தனாவிடம் "என்னன்னு பாரும்மா..." என அறை கதவை கண்ணால் காட்ட
கீர்த்தனாவும் எழுந்து சென்றவள் "நிராளி!.. நிராளி வா சாப்பிடலாம்..." என்று கதவைத் தட்ட,
முகத்தை கழுவி விட்டு கண்ணாடியில் தன்னையே பார்த்து நின்றிருந்த நிராளினியும் வாகீஷனை சந்திக்கும் துணிவை மனதில் திரட்டி கொண்டு வந்து கதவை திறந்தாள்.
கீர்த்தனா எதுவும் பேசாமல் அவள் கையை பிடித்து கூட்டிக் கொண்டு தனது அருகில் அமர வைத்து, அவளுக்காக இரண்டு முட்டைகளுடன் வாங்கி வந்த பார்சலை பிரித்து வைக்க,
அடி கண்ணால் மற்றவர்கள் தட்டிற்கும் தன் தட்டிலும் இருந்த வித்தியாசத்தையும் கண்டு கொண்டாள். அவனுக்கு அவள எப்பவுமே தனித்துவமானவள் தான் என்பது எல்லாவற்றிலும் தெரியுமே.
வாகீஷன் அவளையே பார்த்து இருக்க, மெதுவாக விழியை மலர்த்தி அவன் முகம் கண்டாள், இதுவரை இல்லாத காந்தவிசை அவன் கண்களில்.
"சொரி!..." என்றாள் வருத்தமான குரலில். அவனும் கண்களால் சாப்பாட்டை காட்ட, சாப்பிட்டால் தான் மன்னிப்பேன் என்றானே, எனவே பார்வையை அவனிலிருந்து சாப்பாட்டில் பதித்து, ஒரு வாய் உணவை எடுத்து தலையை தாழ்த்திய படியே அவனை மீண்டும் பார்த்து, வாயினுள் வைத்தாள்.
அது போதுமே அவனுக்கு தெத்துப் பல் தெரிய புன்னகைத்தவன், தானும் சாப்பிட்டான்.
நீங்க என்னமோ பண்ணுங்கப்பா என்பது போல் சுதாகரனும் கீர்த்தனாவும் கோழி பொரியலை அவன் அவளுக்கு மாற்றி வைப்பதும், அவள் முட்டையை மாற்றி வைப்பதும் என அவர்கள் அன்பை பரிமாறி உண்டு கொண்டிருக்க,
கோமதி கருத்தே கண்ணாக கோழி பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடிய மாத்திரைகளை சுதாகரன் தான் எடுத்துக் கொடுத்து விழுங்க வைத்தான். "கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு..." என்று கூறிவிட்டு
மாத்திரைகள் அடங்கிய பையை நிராளினிடம் கொடுத்தவன் "உன்னோட கஷ்டமும் எனக்கு புரியுது நிராளி.. ஆனா உனக்காக அவன் மனசாலயும் உடம்பாலயும் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்ல.. உன்னோட வாழ முடியாதோன்னு ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கான்.. இப்டி அரைகுறையா வதைக்கிறதுக்கு பதிலா அவன மொத்தமா கொன்னுடு.. அப்பவாவது இந்த பைத்தியக்காரனுக்கு நிம்மதி கிடைக்குதான்னு பாப்போம்..." என்று தன் நண்பனுக்கான வருத்தத்தை குரலில் தேக்கி சொல்ல.
நிராளினிக்கு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை. உதடு கடித்து அப்படியே நின்று இருந்தாள்.
கீர்த்தனா தான் "போதும் சுதாப்பா அவள்ட இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க.. என்னதான் காதல் காதல் ஆயிரம் பக்கத்துக்கு கதைச்சாலும் அந்த காதல் அவ மனசுலையும் தானா வரணும்.. அண்ணா கடத்திட்டு வந்து கட்டாய கல்யாணம் பண்ணிடுவாரோன்னு பயத்துல செஞ்சுட்டாள்..
...நானா இருந்திருந்தாலும் அடிச்சு போட்டுட்டு தப்பிக்கத்தான் பாத்திருப்பேன்.. இவள் என்றதால உங்க பேச்சுக்கும் அண்ணா உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து இங்க இருக்காள்..." என தோழிக்கு சார்பாக பேசியவள்
"ரொம்ப போட்டு குழப்பிக்காதடி..." என்று நிராளினியின் கையில் அழுத்தத்தை கொடுத்துவிட்டு, சுதாகரனை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
"நிரா இருக்க நான் எப்டி நித்திர கொள்ள..." என்று முரண்டு பிடித்தவனை அறையில் தள்ளிக் கொண்டு போய் விட்டு, படுக்கச் சொல்லி கதவை அடைத்த கோமதி
"ஒரு அறையிலதான் கட்டில் இருக்கு.. வீட்ட வாரயா கொஞ்ச நேரம் நீயும் படுத்து எழும்பி வரலாம்.. உன்ட மனசும் மூளையும் ரொம்ப குழப்பத்துல இருக்கும் கொஞ்ச நேரம் ஓய்வெடு..." என்று அழைக்க
"இல்லக்கா வேணாம்.. மத்தியானத்துல நித்திர வராது.. நான் டிவி பாத்துட்டு இருக்கேன்..." என்று சொல்ல,
பின்பக்கம் இருந்து கோமதியின் பிள்ளைகள் அம்மா என்று அழைக்கும் சத்தம் வர "பள்ளி விட்டு வந்துட்டாங்க போல.. நான் போய் பாத்துட்டு வாரேன்.. ஏதுனா கூப்பிடு..." என்று சொன்ன கோமதி
இத்தனை நேரம் அவர் முகம் பார்க்காமல் குனிந்து நின்றவளின் முகத்தை ஒற்றை கையால் நிமிர்த்தி "ரொம்ப யோசிக்காதடா.. உன்ட மனசுக்கு எது சரின்னு படுதோ அத பண்ணு.. கல்யாண வாழ்க்க சாதாரணமில்ல.. உனக்கு ஆர் வேணும்னு யோசிச்சு முடிவு பண்ணு..." என்று அன்பாக கூறியவர் சென்றுவிட
நிராளினிக்கு தலைவலியே வந்துவிட்டது. அப்படியே வந்து சோஃபாவில் அமர்ந்தவள் டிவியை ஆன் செய்துவிட்டு, அதை பார்க்காமல் தலையை பின் சாய்த்து கண் மூடிக்கொண்டாள்.
*****
மாலையை நான்கரையை தாண்டி இருக்க, கட்டிலில் படுத்து இருந்த வாகீஷன் தூக்கம் கலைந்து கண்கள் விழித்தான்.
கோமதி நிராளினியை தான் பார்த்துக் கொள்வதாக சொன்னதாலோ இல்லை உடலோடு சேர்ந்து மனதும் ஓய்வு கேட்டதாலோ வெறுமனே படுத்து இருந்தவன் தூங்கி இருந்தான்.
கண் விழித்த பின்னர் தான் உணர்ந்தான் அந்த கட்டிலில் அவன் தங்க பூவின் வாசனை. இதழ்கள் தானாக புன்னகைக்க, கவிழ்ந்து படுத்து அந்த தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
அவளை நினைத்து எத்தனை நாட்கள் தலையணையை கட்டிக் கொண்டு புரண்டு இருப்பான். இப்போதும் அதேதான் செய்கின்றான், என்ன சற்று முன்னேற்றமாக அவள் வாசனை உள்ள தலையணையை.
ஏதோ அவளுக்கே முத்தமிடும் நினைப்பில் மொச்சு மொச்சு என்று அதற்கு முத்தங்கள் வேறு,
எங்கு எங்கு முத்தமிடுவதாக நினைத்தானோ நாக்கை கடித்து தலையில் தட்டி கொண்டவன் "கூடவே இருந்தும் தள்ளி வச்சு கொல்லுறாளே...!" என்று வாய் விட்டே புலம்பியவன் எழுந்து வெளியே வந்தான் .
சோஃபாவில் ஒருக்களித்து, காலை மடக்கி படுத்து, தூக்கத்தில் இருந்தாள் நிராளினி. டிவி அதுபாட்டுக்கு தனியாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.
சத்தம் கொடுக்காமல் மெதுவாக நடந்து வந்து, மென் இதழ் பிளந்து, கண்மலர் மூடி, குழந்தை குமரி எனத் தூங்கும் தன்னவளை ரசித்துப் பார்த்தான்.
கலைந்த தலையும் பொட்டு வைக்காத முகமுமாக இருந்தாலும் அவன் கண்களுக்கு அவள் பேரழகி தானே. முதல் முறை அவளை எப்படி பார்த்தானோ இப்போதும் அதே ரசனையான பார்வை.
அவள் முன் நெற்றியில் கொஞ்சி விளையாடிய முடிகளை ஒதுக்கிவிட நீண்ட கை ஒரு நொடி அந்தரத்தில் நிற்க, தன்னிடமே இழுத்துக் கொண்டான். காலையில் அவளின் மிரண்ட பார்வை நினைவுக்கு வர 'வேணாம் வாகீ.. திரும்பவும் அடி வாங்க தெம்பு இல்ல...' என்று மனதில் நினைக்க
அவன் ரோசக்கார மனசாட்சியோ 'இந்த அடிக்கே தெம்பு இல்லையா?...' என்று கேட்க
'அதெல்லாம் நிறையவே இருக்கு.. இவள சமாதானப்படுத்த தான் தெம்பு இல்ல.. எனக்கு அடிச்சிட்டு இவள் ஒப்பாரி வச்சு குளறுவாள்...'என்று மனசாட்சிக்கு பதில் சொல்லி அடக்கியவன்
சிரித்தபடி சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டான், அவன் காதல் ராதைக்கு காஃபி போட, அவளுக்கு பிடித்தது போன்று நெஸ்கஃபே டீ போட்டவன் டீபாயில் கொண்டு வந்து வைத்துவிட்டு, எப்படி அவளை எழுப்புவது என்று திணறி நிற்க
அவனின் அருகாமையிலா இல்லை காஃபியின் அரோமாவிலா தெரியவில்லை தானாக கண்திருந்தாள்.
அவள் விழித்து பார்க்க "குட் ஈவினிங் டா..." என்று மென்மையாக சொன்னவன்
டீ கப்பை அவள் பக்கம் சற்று நகர்த்தி வைக்க, எழுந்து அமர்ந்தவள் "குட் ஈவினிங்..." என்றாள். பார்வை அவன் காயத்தில் ஒரு முறை படிந்து வந்தது.
எதுவும் கூறாமல் மெல்லிய மௌனத்துடன் டீயை பருகினாள். அவனுக்கு தான் டீ குடிக்கும் பழக்கம் இல்லையே, எனவே பால் தேனீர் பருகும் பாவையை பார்வையால் பருகினான்.
அவன் பார்வை தன்னில் இருப்பதை உணர்ந்தவள் "நீங்க குடிக்கலயா?..." என்று கேட்க
"இதுவரைக்கும் குடிச்சு பழக்கம் இல்ல.. நீ தந்தா குடிக்கலாம்..." என்றவன் பார்வை அவள் இதழில் தான் இருந்தது .
அவன் மானமுள்ள மனசாட்சியோ 'மண்டைய உடச்சும் உன் புத்தி எங்க போகுது பாரு...' என்று திட்ட அவனோ அதை சட்டை செய்யாமல்
அவள் இதழ் கொண்டு உறிஞ்சும் அந்த பால் தேனீர் நானாக இருக்க கூடாதா என்று ஏக்கமாக பார்த்திருந்தான்.
அவள் பவள இதழ் தவழ்ந்து, பளிங்கு தொண்டையில் இறங்கி, மார்பின் நடுவில் உர்ந்து தட்டை வயிற்றில் பதுங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்குமே என எண்ணங்கள் எங்கெங்கோ போக
அதற்கு கடிவாளம் இடும் விதமாக "என்ன வேணும்னு சொல்லுங்க ஊத்தி தாரேன்..." என்று அவள் கேட்க
"ஹா!.. என்ன?..." என்று கற்பனை கலைந்து கள்ளணவன் கேட்க
"நீ தந்தா குடிக்கலாம்னு சொன்னீங்களே என்ன வேணும்னு சொன்னா ஊத்தி தாரேன்..." என்று சொல்ல
"இல்ல.. அது..." என்று தடுமாறியவன் இருக்கையில் இருந்து சற்று முன் நகர்ந்து, தீர்க்கமாக அவளை பார்த்து "நீ குடிச்சதுதான் வேணும்.. இந்த கப்ப தருவியா?..." என்று விழிகளாலும் கப்பையும் அவளையும் சுட்டிக்காட்டி கேட்க
அவனது மேனலிஷத்தில் ஒரு நொடி தன்னை மறந்து அவனை ரசித்திருந்தாள் பாவை. அவனும் பார்வையை விலக்கவில்லை... அவளும் பார்வையை தாழ்த்தவில்லை...
வாகீஷன் தான் அவள் பார்வையில் இருந்த ரசனை புரியாமல், அவள் எச்சில் டீயை கேட்டதில் திகைத்து விழுக்கின்றாள் என்று எண்ணி "சரி விடு..." என்று அவள் மோனநிலையை கலைக்க,
இமைகள் சிமிட்டி தன்னை சரி செய்தவள் மீதி தேநீரை அருந்த, இப்போது ஏனோ அதில் புதுசு சுவை இருப்பது போல் தோன்றியது.
"அப்போ நீ என்ன பாத்து பயப்படல.. எங்க தாலிய போட்டுடுவேன்னு தான் பயந்தியா?..." என்று வாகீஷன் கேட்க
"ம்ம்.. கீத்து, என்ன கூட வச்சுக்க என்ன வேணும்னாலும் நீங்க பண்ணுவீங்கன்னு சொன்னா.. கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க தாலியோட வர, எங்க போட்டுடுவீங்களோனு பயத்துல தான் அப்டி நடந்துகிட்டேன்..." என்று சொல்ல
லேசான சத்தத்துடன் புன்னகைத்தவன் "தேங்க்ஸ்..." என்றான்.
"எதுக்கு?..."
"உன்ன கூட வச்சுக்க எது வேணும்னாலும் பண்ணுவேன்னு தங்கச்சி சொன்ன பிறகும் கூட.. நீ என்ன பாத்து பயப்படல.. உன்னுட்ட தப்பா நடந்துப்பேன்னு நினைக்கல அதுக்கு தான்.. இந்த நிமிஷம் வரைக்கும் இவன் நம்மள தவறான முறையில எடுத்துப்பானோனு உனக்கு ஏன் தோணல?..." என்று வாகீஷன் கேட்க
"ஏன்னா உங்க கண்ணுல காதல் தான் இருக்கு.. எப்டியாவது அடையனும் என்ற வெறி இல்ல.. நான் தான் காலையில எதையும் உணராம குழப்பத்துல அப்டி முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்..." என்று சற்று வருத்தத்துடன் சொல்ல
"அத விடு.. என்ட கண்ணுல காதல நீ பாத்தியா?..." என்று ஆர்வமாக கேட்க
'கண்ணுல என்ன வாத்தைல கூட பொங்கி வழியுது...' என்று மனதில் நினைத்தவள் "கடத்திட்டு வரும்போது தொட்டதுக்கே வேர்த்து கொட்டுச்சு.. அப்படிப்பட்டவரால ஆபத்து வராதுன்னு ஒரு நம்பிக்கைதான்..." என்று அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் சற்று நக்கல் தொனியில் கூறிவிட்டு எழுந்து சென்று டீ கப்பை கழுவ,
அவள் பின் வந்தவன் "நான் கேட்டதுக்கு இது பதில் இல்ல.. என் காதல உன்னால உணர முடிஞ்சுதா? சொல்லுடா ப்ளீஸ்?..." என்று அவன் கெஞ்சி நிற்க
'உணரவா உயிரில் ஊடுருவி திக்கு முக்காட வைக்கின்றதே' ஆனால் ஒத்துக் கொள்ளத்தான் இன்னும் மனது வரவில்லை போலும்.
"உங்க காதல் எனக்கு மட்டுமா உங்கள சுத்தி இருக்குற எல்லோருக்கும்தான் புரியுது..." என்று மலுப்பலாக பதில் கூறியவள்
"மதியம் பிரியாணி சாப்பிட்டது ஹெவியா இருக்கு.. இரவைக்கு இடியாப்பம் அவிப்போமா?..." என்று கேட்டு அவனை திசை திருப்பி விட
அவளிடம் எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போனவன் "ம்ம்..." என்று சுருதியே இல்லாமல் சொல்ல
"மாவு இருக்கா?..." என்றவாறு அவள் சமைக்க தயாராக
"நிரா நீ இரு.. நான் செய்றேன்..." என்று சொல்ல
"ஏன் எனக்கும் சமைக்க தெரியும்..." என்று நிராளினி சொல்ல, அவன் கண்மணி கையினால் சமைத்து சாப்பிட கசக்குமா என்ன
"சரி நீயே சமை..." என்று கூறியவன் அவள் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டு ஓரப் பார்வையால் அவளை ரசித்துக்கொண்டே உதவி கொண்டிருக்க,
நிராளினியும் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். இடியாப்பமும் பால் சொதியும் சமைத்து முடித்தவள் சென்று குளித்துவிட்டு வர,
வாகீஷனும் தலையில் தண்ணீர் படாமல் குளித்து வந்தான். அவள் பரிமாற, முதல் வாய் உண்டவன் விழி மூடி ருசித்தான். நிராளினி பச்சை தண்ணீர் தந்திருந்தாலே ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருப்பான்.
பால் சொதி உண்டவன் விட்டு விடுவானா, அவன் பாராட்டுக்களில் சமைத்தது ஒரு குத்தமாடா என்றாகிப் போனது நிராளினிக்கு.
நேரம் கழிய "சரி நீ போய் படு..." என்று கூறிய வாகீஷன் சோஃபாவில் படுக்க தயாராக
தலையில் காயத்துடன் அவனை அங்கே படுக்க வைக்க மனது வரவில்லை நிராளினிக்கு "நீங்க உள்ள போய் படுங்க.. நான் இங்க நித்திர கொள்றேன்..." என்று அவள் சொல்ல
"அதெல்லாம் வேணாம்டா.. நீ உள்ள போய் படு..." என்று கூறியவன் தலைக்கு சிறிய தலையணையை வைத்து படுத்துக் கொண்டான்.
அவனையும் உள்ளே வந்து படுத்துக் கொள்ள சொல்லலாம் தான். ஆனால் அது தவறு என்பதால் மனமே இல்லாமல் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.