அத்தியாயம் 17
டைல்ஸ் பதிக்கப்படாத நீச்சல் குளம் நிறைய நீர் நிறைந்து இருக்க, ஒரு சோடி வெங்கய நிற நகப்பூச்சினால் அலங்கரிக்கப்பட்ட கால்களும், ரோமங்கள் சுரண்ட ஒரு சோடி கால்களும் முட்டிவரை நீரில் மூழ்கி ஊறிக் கொண்டிருந்தன.
அந்த இரு சோடி கால்களுக்கு சொந்தமானவர்கள் அவளவன் வாகீஷனும் அவனவள் நிராளியும்.
திருமணத்திற்கான திட்டங்கள் அனைத்தும் முடிய, மற்றவர்கள் கலைந்து விட, இரு அன்றில்களும் இரவு உணவை முடித்தனர்.
என்றும் போல் இன்றும் அறையில் அடைந்து கொள்ள பிடிக்காமல், என் வீடு என்ற உரிமையுடன் நிராளினி வீட்டை சுற்றிப் பார்க்க, பாவையின் பாதம் பின் தொடர்ந்தது பாங்கனின் பாதங்கள்.
வாகீஷன் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்த அந்த காட்சி, சிறிய மாற்றத்துடன் கண்முன் நிகழ்ந்தது. தனக்காக தன்னவன் கட்டிய தாஜ்மஹால் என்ற பெருமிதத்துடன் பூரித்த முகமாக வீட்டை சுற்றிப் பார்த்தாள் தலைவி.
பின்னோடு தலைவன் வருவது தெரியுமே, எனவே திரும்பி எது எது எந்த அறை, எந்த இடம் என்று கேட்டுக் கொண்டே வர, கள்ளப்பார்வை பார்க்க முடியாத காதல் கள்வன் ஓரப்பார்வை பார்த்தபடி விளக்கம் கொடுத்தான்.
நிராளினியும் ஒரு சில மாற்றங்கள் செய்யச் சொல்லி உரிமையுடன் கூறினாள். அவள் கண் ஜாடை செய்தாலே போதுமே காலடியில் கொண்டு வந்து வைப்பான்.
இப்போது வாய் திறந்து சொல்லி செய்யாமல் இருப்பானா என்ன, தலை தாழ்ந்து, நெஞ்சில் கை வைத்து "அப்படியே மகாராணி!..." என்று சொல்ல வெட்கமும் சிரிப்பும் ஒருங்கே வந்தது பெண்ணவளுக்கு.
மூன்று மாடிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு கீழே இறங்கும்போது, இரண்டாம் மாடியில் இருந்த நீச்சல் குளத்தை மீண்டும் ஒரு முறை சுற்றி வந்தவள்.
"டைல்ஸ் பதிச்சு தண்ணீ நிரப்பி இருந்தா ரொம்ப வடிவா இருக்கும்..." என்று சொல்ல
"ம்ம்.. உனக்கு நீச்சல் தெரியுமா?..." என்று அவன் கேட்க
"ஏன் உங்களுக்குத்தான் என்ன பத்தி எல்லாமே தெரியுமே.. இது தெரியாதா..."
"எனக்கு தெரிஞ்சு உனக்கு நீச்சல் தெரியாது.. ஆனா தண்ணினா ரொம்ப பிடிக்கும்.. கடல், குளம், ஆறு இந்த மாதிரி.. சரியா..."
"ம்ம்.. சரிதான்.. நீச்சல் பழகணும்..."
"நீ நீச்சல் பழகுற வரைக்கும் இங்க வர மாட்ட இல்ல..."
"ஏன் நீந்த மட்டும் தான் இங்க வரணுமா.. கால தண்ணிக்குள்ள விட்டு விளையாடிட்டே கத பேசலாமே..." என்று நிராளினி சொல்ல
விடுவானா காதல் கிறுக்கன், டைல்ஸ் பதிக்காத நீச்சல் குளத்தில் கூட நீரை நிரப்பி, தன்னவளை அருகில் அமர்த்தி, காலை நீரினுள் விட்டுக் கொண்டான்.
கதை தான் பேசவில்லை. கன்னங்கள் இரண்டும் மின்ன அணங்கவளை ஆழப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
ஆழப் பார்வை சரி, கன்னங்கள் ஏன் மின்ன வேண்டும், மின்னதா பின்னே நிராளினி சம்மதம் கூறியதிலிருந்து விரிந்த புன்னகை இன்னும் மறையவில்லை.
உதடுகள் விரிந்தே இருக்க, கன்ன கதுப்புகள் குவிந்து மின்னிக் கொண்டிருந்தது. சாப்பிடும் போதும் இதே பார்வை தான், தவித்து போனது என்னவோ பெண்ணவள் தான்.
"என்னாச்சு.. நீங்க சரியே இல்ல.. ஏதாவது கதைங்க..." என்று நிராளினி தான் இருவரையும் இழுத்து பற்றி படர்ந்த மோனநிலையை கலைத்தாள்.
"ம்ம்..." என்றானே ஒழிய பேச்சு வரவும் இல்லை, பார்வை மாறவும் இல்லை.
"ப்ச்! ஏங்க இப்போ கதைக்க போறீங்களா இல்ல எழும்பி போகவா?..." என்று நிராளினி கேட்க
"ம்ஹூம்.. கதைக்க தோணல.. உன்ன தூக்கி வச்சு கொஞ்சனும் போல இருக்கு..." என்று மெல்லிய ஆழ்ந்த குரலில் ஆடவன் சொல்ல
திகைத்து விழித்தவள், மாலை அவன் அள்ளி வழங்கிய முத்தங்கள் நினைவு வர, கன்னங்கள் சூடேறி சிவக்க ஆரம்பிக்க,
முகத்தை திருப்பியவள் "கொஞ்சுவீங்க.. கொஞ்சுவீங்க.. நான் தொடாம நீங்க தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்கீங்க.. போனா போகுதுன்னு ஒரு தடவ மன்னிச்சு விடுறேன்.. இன்னொரு தடவ சத்தியத்த மீறாதிங்க..." என்று கரார் பேர்வழியாக கட்டளையிட
"ஹேய் இது அநியாயம் டா.. நீ சம்மதம் சொன்ன சந்தோஷத்துல எங்க கிஸ் பண்ணுனேன் எப்டி கிஸ் பண்ணுனேன் எதுவும் ஞாபகம் இல்ல.. ஆசையா ஒரு தடவ கொஞ்சலாம்னு பாத்தா அதுக்குள்ள தடையா..." லிட்டர் கணக்கில் அப்பாவித்தனம் முகத்தில் வழிந்தது.
"ஆசை எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான்..." குறும்புன்னகை அவள் முகத்தில்.
"பேச்ச மாத்தாத.. நீ தொட்ட நான் தொடலாம்..."
"ம்ம்ம்..." என்று இழுத்தவள் "ம்ம்..." என்று இமை சிமிட்டிட
'ஐயோ தலைக்கு மேல ஆயிரம் பிரச்சனை கத்தியா தொங்கினாளும், இவ ஒத்த அசைவு போதும் என்ன கொல்ல...' என்று மனதில் புலம்பியவன்
"சரி மொட்டையா ஏங்க வாங்கன்னு கூப்பிடுற.. ஆசையா ஏதாவது சொல்லி கூப்பிடலாமே..."
"கூப்பிடலாம்.. கூப்பிடலாம்.. என்ன அவசரம்.. சரி பிளான்படி நாளைக்கு உங்க அம்மாட்ட சொல்லி நாள் பாக்க சொல்ல போறீங்க.. கிட்டடியில நாள் இல்லனா என்ன பண்றது?..." என்று கேட்க
"அம்மாட மனசு நோக கூடாதுன்னு தான் அவங்கட்ட விஷயத்த சொல்லி நாள் பாக்க சொல்றது.. ஆனா நாலு நாளைக்குள்ள கல்யாணம் பண்ணிட்டு உங்க வீட்ட போகணும்.. அவங்கள இன்னும் தவிக்க வைக்க ஏலாது..."
"ம்ம்.. பிரச்சன ஒன்னும் பெரிசாகாதே..." என்று கலக்கமாக நிராளினி கேட்க
"நான் கடத்திட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டதா தான் சொல்ல போறேன்.. போலீஸ் கேஸ்சாகும் ஆனா கல்யாணத்தில உனக்கு சம்மதம்னு சொன்னா சுமூகமா முடிய வாய்ப்பு இருக்கு..." என்று வாகீஷன் சொல்ல
"ரெஜிஸ்டர் மேரேஜுக்கு ட்ரை பண்ணலாமே..."
"பண்ணலாம்.. எப்டியும் 14 நாள் ஆகும்.. உன்ட பர்த் சர்டிபிகேட் வேணும், அதோட ஜி எஸ்ட்ட சம்மத கடிதம் வேணும்.. தாலி போட முன்னாடி உன்ட வீட்டுக்கு தெரிஞ்சா நம்மல பிரிக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க.. ரிஸ்க் எடுக்க நான் விரும்பல.. எனக்கு என்ட செல்லம் வேணும்.. அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவேன்..."
"ம்ம் கடத்திட்டு வந்ததிலேயே தெரியுது.. அது என்ன செல்லம்..."
"அஹ், என்ட செல்லம், தங்கம், அம்மு கண்ணம்மா, குட்டிம்மா எல்லாம் நீ தான்..." என்று சொன்னவாறு இரு கைகளையும் விரித்து பெண்ணவள் கன்னம் ஏந்த போக,
முகத்தை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள் ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய
"போடா!..." என்றவன் முகத்தை சுருக்கி பாவமாக வைத்துக் கொள்ள
"அது என்ன போடா.. டீ வராதா?..."
"டீச்சர் அம்மாவ போடின்னு சொல்ல ஏலுமா.. என்ன பிரம்ப எடுத்து அடி வெளுத்துட்டா நான் என்ன பண்றது..."
"ரொம்பத்தான்...!"
"அது.. உன்ன முதல் முறை பாத்தப்போ வடிவான பெட்ட என்றத தாண்டி வடிவான சின்ன குட்டியா தான் தெரிஞ்ச.. குழந்த பிள்ளைகள டா போட்டு தான் கூப்பிடுவேன்.. அதான் உன்னையும் அப்டியே கூப்பிட்டு பழகிட்டு..." என்று வாகீஷன் சொல்ல
என்னவோ பல வருஷ பழக்கம் போல் அவன் சொல்லவும் "கூப்பிட்டு பழகிட்டா?..." என்று நிராளினி கேட்க
"ம்ம்..மனசுக்குள்ள கோடி முறை கூப்பிட்டிருப்பேன்..." என்று காதல் பொங்க கந்தர்வன் சொல்ல
மயங்கும் மனதை காட்டாமல் நீரை பார்த்தவள் 'எனக்குத்தான் ஒரு தடவ கூட கேட்கல...' என்று மனதில் பதில் கூறினாள் கந்தர்வகன்னி. தனக்கான உண்மை காதல் என்று ஒன்று இருந்தும் தான் அறியவில்லையே என்ற மனத்தாங்கல் அவளுக்கு.
"ம்க்கும்.. அதே மாதிரி மனசுக்குள்ளேயே கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த வேண்டியது தானே.. எதுக்கு கடத்திட்டு வரணும்..." என்று நிராளினி கேட்க
"அதெல்லாம் கல்யாணம் பண்ணி நாலாவது புள்ள வயித்துல இருக்கு..." என்றானே பார்க்கலாம்
நீர் அருந்தாமலே நிராளினிக்கு புறைஏறி விட்டது. "என்னது?..."
"ம்ம்..." என்று அவன் தோளை குலுக்க
"கேடி நாலாவது புள்ளையா..." என்று தண்ணீருக்குள் இருந்த அவன் காலை இவளும் உதைக்க,
"என்ட காதல், என்ட கற்பனை பத்து புள்ள கூட பெத்துக்குவேன்..." என்று சிரிக்காமல் சொன்னாலும் கண்களில் குறும்பு மின்னியது.
"உங்க கற்பனையினாலும் அது நான்.. என்ன கேட்காம எப்டி கண்ட மாதிரி கற்பன பண்ணலாம்..." என்று கேட்க
சட்டென அவள் இரு கன்னங்களையும் தன் விரிந்த உள்ளங்கைகளில் தாங்கியவன், மயக்கும் மோகப் பார்வை கொஞ்சம்... தகிக்கும் தாப பார்வை கொஞ்சம்... கசிந்துருகும் காதலில் கலந்து கண்ணோடு கண் பார்த்து "கற்பனையினாலும், நிஜம்னாலும் என்ட புள்ளையை நீ தான் சுமக்கணும்..." என்று காற்றோடு கலந்து சொல்ல
உலகில் உள்ள ஒட்டுமொத்த காதலையும் விழிவழி காளையவன் கடத்த, அதில் கட்டுண்ட கன்னியவள் என்ன எதிர்வினை ஆற்றிவிட முடியும்.
சுகமான சித்திரவதை காதல் தான் போதும்...
இதமான இம்சை இவன் தான் போலும்...
வாகீஷன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, அவன் மூச்சுக்காற்று அவள் சுவாசக் காற்றில் கலக்க, ஆண்மை வாசம் நாசியில் ஏற, திடுக்கிட்டு விழித்தவள் முகத்தை விலக்கிக் கொண்டு "எ..என்ன பண்றீங்க.. நான் தொடாம நீங்க என்ன தொட கூடாது..." என்று படபடப்புடன் சொல்ல
"நீ தொட்டதால தான் நான் தொட்டேன்..." என்றான் ஆழ்ந்த பார்வையுடன்
"ஹா! என்ன?..." என்று நினராலினி புரியாமல் கேட்க
அவனோ கண்களால் அவள் பொற்பாதத்தை காட்ட, நீருக்கு அடியில் பிணைந்து இருந்த அவள் கால்கள், அவன் கால்களை தொட்டுக் கொண்டுதான் இருந்தது.
நாக்கை கடித்துக் கொண்டாள், "அது உதைச்சேன்.. கால் தானே பட்டுச்சு..." என்று கேட்க
நீருக்குள் இருந்த அவள் வாழைத்தண்டு கால்களை தூக்கி தன் மடியில் வைத்து, இழுக்க, இடைவெளி குறைந்து ஆடவன் உடலோடு ஒட்டிக் கொண்டாள் கோதை.
"காலோ, கையோ தொட்டது தொட்டதுதான்..." என்று மூச்சுக்காற்று என்னும் ஏவுகணையை அவள் காது மடலில் மோத விட்டு, கடத்தி வந்தவன் சட்டம் பேச
நெஞ்சம் படபடக்க, இதயம் வேகமாக துடிக்க, பெரிய மூச்சுகளை இழுத்து விட்டவள், கண்கள் விரித்து கலவரமாக அவனைப் பார்த்தாள்.
நீரில் நனையாமல் இருக்க பாவாடையை வேறு முடங்கால் வரை சுருட்டி வைத்து இருந்தாள். கள்ளன் அவன் இழுத்த இழுப்பில் தாறுமாறாக அவன் தொடையில் அவள்.
கண்கள் அவன் முகம் பார்த்தாலும் கைகள் தானாக உடையை சரி செய்தது. வாகீஷன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவன் பார்வை அவள் அழகு வதனத்தில், அதுவும் அமுதம் ததும்பும் இதழ்களில்.
நிராளினி சங்கடமாக நெளிந்து, அவன் பார்வையை தவிர்த்து, தலையை குனிந்து கொள்ள,
அவள் பின் தலையில் ஒற்றை கையை கொடுத்து, இழுத்து நெற்றியில் அழுத்தி இச் என்ற சத்தத்துடன் நீண்ட முத்தம் வைத்தவன் "எழும்பு போகலாம்..." என்று சொல்ல
ஏடாகூடமாக ஏதாவது செய்து விடுவானோ என்ற பதற்றத்தில் இருந்தவள் "ஹா!..." என்று முழிக்க
அவள் காலை தன் மடியில் இருந்து எடுத்து விட்டவன், எழுந்து கொண்டு குனிந்து பெண்ணவளை தூக்க "ஏங்க!..." என்று கூச்சலிட்டவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
மலர் கொத்தை தாங்குவதைப் போல் தூக்கி வந்தவன், அறையில் கொண்டு வந்து கட்டிலில் தான் இறக்கி விட்டான். குழந்தை போல் கட்டிலில் பாவையவளை அமர்த்தியவன்,
விலகிச் சென்று துண்டு ஒன்றை எடுத்து வந்து, நீரில் நனைந்த பாதத்தை ஒற்றி எடுத்து துடைக்க, கூச்சம், வெட்கம், சங்கடம் என பலவகை உணர்வுகளில் தாக்கப்பட்டவள் காலை இழுத்துக் கொண்டு "வேணாம்.. நானே தொடச்சிக்குறன்..." என்று விழிகள் படபடக்க சொல்லவும்
அவள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தானா, இல்லை அந்த நீர் துளிகளை தன் உதட்டினால் ஒற்றி எடுக்க தன்னுள் பொங்கி பெருகிய உணர்வுகளை கட்டி போட நினைத்தானா தெரியவில்லை
துண்டை அவளிடம் நீட்டியவன் மீண்டும் அவள் நெற்றியில் முத்தம் வைத்து "குட் நைட் டா..." என்று புன்னகையுடன் சொன்னவன், அவளை பார்த்தபடியே வெளியேறி கதவை அடைத்தவன், கைகள் இரண்டையும் விரித்து காற்றில் சுற்றி அப்படியே பொத்தென்று சோஃபாவில் விழுந்தான்.
நிராளினிக்கோ அவளை தூக்கிக்கொண்டு அறையினுள் வரவும், கூடவே தூங்குவேனோ, இல்லை அதிகப்படியாக எல்லை மீறுவானோ என்று மனதின் ஒரு ஓரம் என்ன அலைகள் சலசலக்க தான் செய்தது.
அது எதுவும் இன்றி அவன் எப்போதும் போல் வெளியே சென்று தூங்க, அழகிய புன்னகை அவள் இதழில். தலைவனின் காதலை சிலாகித்துக் கொண்டே படுத்து உறங்கினாள்.
வாகீஷனுக்கு என்னதான் நிராளினி சம்மதம் கூறியதில் சந்தோஷமாக இருந்தாலும், அவளிடம் அதிகப்படியாக நெருக்க முடியவில்லை. மனதினோரம் இருவரும் இருக்கும் சூழ்நிலையும், திருமணத்தின் பின் வர இருக்கும் பிரச்சினைகளும் பேயாக மறைந்து நின்று பயமுறுத்தியது .
தன்னவள் மனம் நோகாமல் அனைத்து சங்கடங்களையும் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் தான் முழுமனதாக தன் கண்மணியுடன் இளைய முடியும் என்று தான் தோன்றியது.
இருந்தும் ஒற்றை காலில் தவமிருந்து ஆதி சிவனின் காதலை அடைந்த பார்வதியைப் போல், தன் ஒருதலை காதலை தனியாக சுமந்து, தவமிருந்து தன்னவளின் காதலை அடைந்த மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாமல் இளையவளுடனான இனிய வாழ்வை இமைகளுக்குள் நிரப்பி கொண்டு இதமாக துயில் கொண்டான்.
*******
நிரஞ்சனோ சாப்பிடாமல் தூங்காமல் தங்கையை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான். அபிநயா சொன்ன மூன்று பேரிடம் விசாரித்து விட்டான்.
அவர்களில் இருவருக்கு நிராளினியை சரியாக ஞாபகம் கூட இல்லை. ஒருவன் மட்டும் கேட்டதும் பதில் சொன்னான். ஆனால் அவனும் திருமணம் செய்து மனைவி குழந்தைகள் என்று வாழ்பவன்.
இன்னொருவனை சந்திக்க முடியவில்லை. நாளை தான் வீட்டிற்க்கே சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்து இருக்கின்றான்.
லாவண்யா தான் ஜெயந்திக்கு துணையாக இருப்பதோடு, இரவில் தன்னை வீட்டிற்கு கொண்டு விட வருபவனை இழுத்து பிடித்து சாப்பிட வைக்கின்றாள்.
இதற்கு இடையில் பிரதீபன் வேறு நிராளினியின் ஃபோன் நம்பர் வேலை செய்யவில்லை என்றதும் நிரஞ்சனுக்கு எடுத்து என்னவாயிற்று என்று கேட்க
முதல் நாள் ஃபோன் தொலைந்து விட்டது என்று சொல்லி சமாளித்தான். ஆனால் பிரதீபன் விடுவதாக இல்லை, இத்தனைக்கும் இருவரும் தினமும் பேசிக்கொள்வதெல்லாம் கிடையாது.
ஆனாலும் ஃபோன் தொலைந்து போனால் புது நம்பர் வாங்கி தனக்கு தரவில்லையே, வருங்கால கணவனை மதிக்கவில்லை என்ற கோபம். அதனால் நிரஞ்சனிடம் சற்று காட்டமாக பேச
நிரஞ்சனும் இத்தனை நாட்கள் கடந்த நிலையில் மறைப்பது சரி இல்லை என்று உண்மையை கூறிவிட்டான்.
கேட்டு சில நொடிகள் மௌனமாக இருந்தவன் பின் தன் பங்கிற்கு தானும் தேடுவதாக தைரியம் கூறினான். என்ன இருந்தாலும் அதன் பின்பு பிரதீபனின் பேச்சில் ஒரு அந்நிய தன்மையும் மரியாதை இல்லாத தொனியும், நிராளினியை திட்டி குறை சொல்வதுமாக இருந்தான்.
முதலில் நிராளினி கிடைக்கட்டும், அதன் பின் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என கூறி பிரதீபனை அமைதியாக இருக்கச் சொல்லி விட்டான்.
நிரஞ்சன் தனது அறையில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தான். தூக்கம் வரவில்லை. அழுது கரையும் ஜெயந்தியை கூட அவனால் சமாளிக்க முடிந்தது. ஆனால் வாய்விட்டு வருத்தத்தை கூறாமல் மகன் மீது நம்பிக்கை வைத்து நடமாடும் தந்தையை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை.
ஃபோனில் குறுந்தகவல் வந்ததற்கான சத்தம் கேட்க, எடுத்துப் பார்த்தான் (லவி) என்ற லாவண்யாவின் செல்லப்பேருக்கு பக்கத்தில் இரட்டை இதயம் இருக்க, டிபி யில் நிச்சயத்தின்போது நிரஞ்சன் போட்டு விட்ட மோதிரத்தோடு அவள் பிச்சிப்பூ கை விரல்கள் காளையவன் கண்ணைக் கட்டி இழுத்தது.
(அத்தான்) என்று அனுப்பி இருந்தாள்.
(ம்ம்) என்று அனுப்பி (டிபி வடிவா இருக்கு.. ஏன் மாத்துன) என்று கேட்டு அனுப்பினான். இது நாள் வரை பூனை குட்டி, நாய் குட்டி, பூக்கள் என்று இருந்ததே அதனால் இந்த கேள்வி.
லா : (ம்ம்.. தேங்க்ஸ்.. சும்மா மாத்தினேன்...)
நி : (இப்பதான் நிச்சயமானது நினைவு வந்ததோ)
லா : (மறக்குற மாதிரியோ கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணுனேயல்..)
நி : (அப்போ எதையுமே மறக்கலையா நீ)
லா : (இல்ல)
நி : (சரி மறக்காத.. ஆனா இப்போ அன்பு கூடுன மாதிரி இருக்கே)
(அதெல்லாம் ஒன்டும் இல்ல.. முழிச்சி இருக்காம நித்திரைய கொள்ளுங்க..) என்று லாவண்யா அனுப்ப
(வாய திறந்து ஒத்துக்க மாட்டியே) என்று நிரஞ்சன் அனுப்ப
(அத்தான் எதையும் யோசிக்காதீங்க.. நான் இருக்கேன் நாளைக்கே நல்ல தகவல் வரும்.. கொஞ்ச நேரம் நித்திர கொள்ளுங்க) என்று கட்டிப்பிடிக்கும் இமோஜியுடன் அவள் அனுப்ப
இதுவரை மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்து, இதயத்தில் இதம் வீச, (குட் நைட் டி) என்று முத்த இமோஜியுடன் முகத்தில் புன்னகை தவழ அனுப்பி வைத்தவன், சரிந்து படுத்து தூக்கத்தை தழுவினான்.
லாவண்யாவும் இதுவரை இல்லாத ஏதோ ஒன்று மனதில் பூக்க, சுகமாக கண்ணுறங்கினாள்.