• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 19

STN - 62

New member
அத்தியாயம் 19

நிரஞ்சன் வீட்டிலோ பேரமைதி. தேவராசாவை பொறுத்தவரை மகள் நன்றாக வாழ வேண்டும்.

அப்படி பார்க்க போனால் அவர் பார்த்த மாப்பிள்ளைக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை வாகீஷன்.

விட்டால் இன்னும் ஒரு வருடத்தில் அவர் தகுதிக்கு சொத்துக்களை திரட்டி விடுவான் என்பது புரிந்தது. அவனை ஏற்றுக் கொண்டால் மகள் வசதி வாய்ப்போடு மகிழ்ச்சியாக இருப்பாள் என்பதும் புரிந்தது.

ஆனால் மகள் தன் கைமீறி போன ஆத்திரம். அப்படி போக வைத்த வாகீஷன் மீது வெறுப்பு.

இன்று அவன் வசதியோடு இருக்கலாம், ஆனால் பின்புலம் என்று பார்த்தால் பெயர் சொல்லும் குடும்பம் கிடையாது. சாதி வேறு, என்று அவர் மனநிலையில் இருந்து யோசித்து வாகீஷன் மீது வெறுப்பை வளர்த்தார்.

நிரஞ்சன் யோசனையோடு இருந்த தேவராசாவின் கையின் மேல் கையை வைத்தவன் "அப்பா!..." என்று சற்று தளர்ந்த குரலில் அழைக்க

மகனை திரும்பிப் பார்த்தவர் "ஜனா இனி எப்டி வெளிய தல காட்டுவேன்.. மாப்பிள்ள வீட்ல என்ன சொல்லுவேன்..." என்று இடிந்து போய் கேட்க

"அப்பா நான் பாத்துக்கிறேன்.. பிரதீபன் வீட்டுல நான் கதைக்கிறேன்.. நிராளி நாளைக்கு நம்ம வீட்டுல இருப்பா.. ஆருக்கும் எந்த விஷயமும் தெரிய வராது.. கவலைப்படாதீங்க..." என்று ஆறுதல் சொன்னவன் எழுந்து செல்ல

"காதலிச்சு ஓடிப்போனவ எப்டி வருவா...?" என்று தேவராசா கேட்க

திரும்பி தந்தையை பார்த்தவன் "வருவா..." என்று மட்டும் அழுத்தமாக கூறிவிட்டு சென்றான்.

******
இங்கு வாகீஷன் வீட்டில், தன் காதல் நிலவு மனைவியாக கைக்கு கிடைத்த சந்தோஷம் இல்லை, அவன் போராடி பெற்ற பொக்கிஷம் அவள் ஆனால் பூரண திருப்தி கிடைக்கவில்லை.

அவன் கற்பனையிலோ, கனவிலோ இப்படி அவளை கைபிடிக்க நினைக்கவில்லை. சூழ்நிலைதான் காரணம் என்றாலும் தன் காதலை அடைய தன்னவளை அசிங்கப்படுத்தி விட்டேன். அவள் வளர்ப்பை, ஒழுக்கத்தை பெற்றவர்களே குறை சொல்லும் அளவிற்கு வைத்து விட்டேனே என்று உள்ளுக்குள் மருகி துடித்துக் கொண்டிருந்தான்.

நிராளினிக்கும் தன் வீட்டினர் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தமும், அவர்களை வேதனைப்படுத்திவிட்ட கவலையும் இருக்கத்தான் செய்தது.

ஆனால் எந்த நொடி வாகீஷனை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தாளோ, அப்போதே இது போல் தான் தன் வீட்டினரின் எதிர்வினை இருக்கும் என்று எதிர்பார்த்தாள் தான்.

சொல்லப்போனால் இதைவிட அதிகமாக எதிர்பார்த்தாள். ஏதோ தான் விரும்பி ஓடி வந்ததாக நினைத்து இந்த அளவோடு விட்டார்களே என்று தான் தோன்றியது .

இருப்பினும் ஜெயந்தி பேசிய வார்த்தைகளில் இருந்து அவ்வளவு இலகுவில் வெளிவர முடியவில்லை.

அதிலும் அவர் கூறியது போன்று நிரஞ்சனுக்கு தனது இந்த முடிவால் எத்தனை ஏமாற்றமும் வலியும் இருக்கும் என்று நன்கு தெரியும் அதனால் குற்ற உணர்வும் இருந்தது.

கோமதிக்கு இரவு தான் விடயம் கீர்த்தனாவால் சொல்லப்பட்டது. அவர் மதியத்திற்கு மேல் கணவன் பிள்ளைகளுடன் மாமியார் வீடு சென்று வந்திருந்தார்.

தகவல் தெரிந்த மறுநொடி புது ஜோடிகளை வந்து பார்க்க, ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து யோசனையில் இருந்தனர்.

இளையவர்களின் மனநிலை புரிந்தாலும் "அட என்ன இது.. காதல் கல்யாணம்னா சண்டை சச்சரவு வாரதுதான்.. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் போகப் போக எல்லாம் சரியாகிடும்.. எழும்புங்க சாப்பிட்டு நிம்மதியா நித்திரைய கொள்ளுங்க..." என்று இருவரையும் எழுப்பி இரவு சாப்பாட்டை வற்புறுத்தி உன்ன வைத்தார்.

"இப்போ என்னாச்சு.. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க தெரிஞ்ச உங்களுக்கு பெத்தவங்கள சமாதானப்படுத்த தெரியாதா என்ன.. கல்யாணமாகி இருக்கு அந்த சந்தோஷம் இல்லாம இருந்தா எப்பிடி.. பெரியவங்க கோபதாபம் எல்லாம் பேரப்பிள்ளைய பாக்கிற வரைக்கும் தான்..." என்று வழக்கமான அறிவுரையை கூறிவிட்டே சென்றார்.

கோமதி கூறியது நிராளினி மனதை வேறு விதமாக மாற்றியது என்றால், வாகீஷனுக்கு ஒவ்வொரு வார்த்தையும் சுருக்கென்று தைத்தது.

காதல் கல்யாணம் என்றால் இதெல்லாம் இருக்கும் தான், அதற்க்கு அவள் அம்மா கூறியது போல் அவளும் காதலித்து வீட்டை விட்டு வந்திருந்தால் பரவாயில்லையே.

ஆனால் தன் நினைப்பு கடுகளவும் இல்லாமல் இருந்தவளை கடத்தி வந்து, கட்டாயப்படுத்தி காதலை திணித்து, ஒழுக்கம் கெட்டவள் என்ற பெயரை எடுத்து கொடுத்து இருக்கின்றான்.

அவன் சேர்த்த செல்வம், வளர்த்த காதல் இது எதனாலாவது அவளுக்கு கிடைத்த தவறான பெயரை மாற்றி அமைக்க முடியுமா. நினைக்க நினைக்க தலை வெடித்தது, நெஞ்சடைத்தது.

நிராளினியோ அன்று நடந்த கலோபங்களில் மனம் துவண்டு போயிருக்க, வாகீஷனின் அசாத்திய மௌனம், இவள் முகம் கூட நிமிர்ந்து பாக்காத ஒதுக்கம், எதுவும் புத்தியில் உறைக்கவில்லை. அறையினுள் சென்று படுத்துக் கொண்டாள்.

ஆனால் கதவை சாத்தவில்லை சோஃபாவில் அமர்ந்து இருந்த கணவன் படுத்திருந்தவள் பார்வையில் விழுந்தாலும் உறக்கம் கண்ணை தழுவ தூங்கினாள்.

வாகீஷனால் தூங்க முடியவில்லை. காலத்திற்கும் ஓடிப்போனவள் என்ற கெட்ட பெயரை தன்னவளுக்கு பரிசாக கொடுத்திருக்கின்றோம் என்ற நினைப்பே கொலையையாய் கொன்றது.

கடத்தும் போது சாதாரணமாக தெரிந்த விஷயங்கள் இன்று நாகமாக படம் எடுத்து கண் முன் நிற்க, கண்ணுறக்கம் தொலைத்து தன் தூரத்து வெண்ணிலாவை வெறித்து இருந்தான்.

எத்தனை நேரம் என்றால் விடிய விடிய, நிராளினி எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டதால், தவறே செய்யாமல் பழிச்சொல்லை சுமக்க நீ தான் காரணம் என்று தன்னை வெறுத்து விடுவாளோ என்ற பயம் வேறு நெஞ்சை கவ்வி மூச்சடைக்க வைத்தது.

கொட்ட கொட்ட விழித்திருந்து விடிந்தது தான் மிச்சம். விடிவதற்குள் தன்னையே வெறுத்து விரக்தியின் உச்சத்தில் இருந்தான்.

******
புள்ளினங்களின் கீச்சுகளிலும், கதிரவனின் கலர் கலர் ஒளியிலும் கண் விழித்த நிராளினி முதலில் கண்டது, கண்கள் சிவந்து முகம் சோர்ந்து அமர்ந்து இருந்த வாகீஷனை தான்.

உள்ளம் திடுக்கிட 'இரவு முழுக்க இவர் நித்திர கொள்ளலையா?...' என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். செம்மை படிந்த அவன் விழிகளும், கசங்கிய முகமும் ஆம் என்று பதில் சொன்னது.

தாலி கட்டிய கணவனை கவனிக்காமல் விட்டதன் மடத்தனத்தை எண்ணி தன்னையே கடிந்து கொண்டாள்.

வேகமாக எழுந்தவள் வாகீஷனை நெருங்கி "ஏங்க இரவு இருந்து இப்படியேவா இருக்கீங்க? கொஞ்சமும் நித்திர கொள்ளலையா?..." என்று கேட்க

அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. "ஏங்க...!" அவன் தோள் தொட்டு உசுப்ப,

கீ கொடுத்த பொம்மை போல் முகம் மெதுவாக அவள் பக்கம் திரும்பியது. கண்கள் தாழ்ந்து தரையில் பார்வை விழுந்தது. அவன் சாதாரணமாக இல்லை, எதை நினைத்து இப்படி நிலை குலைந்து போய் இருக்கின்றான் என்று புரியவே இல்லை.

அவளை அன்றி அவனை அசைத்துப் பார்க்கும் ஆயுதம் வேறு எதுவாக இருக்கக் கூடும், அவளுக்கு அது தெரியவில்லை.

அவளுக்கும் ஆயிரம் மனக்கவலைகள், ஆனால் தூங்கி எழுந்த பின் ஒரு தெளிவு வந்திருந்ததே, வாகீஷனும் தூங்கி எழுந்தால் சரியாகிவிடுவான்.

தூங்க விடாமல் அவன் மனதை அழுத்தும் விடயம் என்ன என்று பிரித்து அறிய முடியவில்லை என்றாலும், நேற்று நடந்த விடயம் என்று நன்றாக புரிந்தது.

அதை சரி செய்ய, அவன் மனதை மாற்றியமைக்க தன்னால் மட்டுமே முடியும் என்பதும் அவள் அறிவாள்.

அதனால் இப்போது எதுவும் பேசாமல் முதலில் அவன் குழம்பித் தவிக்கும் மூளைக்கும் மனதிக்கும் ஓய்வு குடுக்க, அவன் பூஜத்தை பிடித்து தூக்கினாள்.

என்பது கிலோ ஆண் மகனை பூஞ்சை தேகம் கொண்ட பெண்ணவளால் தனியாக தூக்க முடியுமா என்ன, அவனாகவே தன்னவளின் கை இழுப்பிற்கு எழுந்து அவளுடன் சென்றான்.

தன்னவனை அழைத்து வந்து இரு தோள்களிலும் கையை வைத்து கட்டிலில் அமர வைத்தவள் "கொஞ்ச நேரம் கண்ண மூடி படுங்க.. நித்திர கொண்டு எழும்பின பிறகு கதைப்போம்.. எல்லாம் சரியாகும்..." என்று அன்பாக தேன் குரலில் சொல்ல

பிறகு கதைப்போம் என்றதே ஆடவன் நெஞ்சினில் பிரளயத்தை ஏற்படுத்தியது. (செய்யாத தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? உன்னை, உன் காதலை வெறுக்கின்றேன். உன்னை விட்டு போகின்றேன்) என்று சொல்லிவிடுவாளோ என்று திக்கென்று இருந்தது.

அமர்ந்து இருந்தவன் தன்னவளை இழுத்து அணைத்து, அவள் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அவன் கையில் இருந்த நடுக்கமே அவன் பதைபதைப்பை சொல்ல,

அவனது அணைப்பில் முதலில் திகைத்தாலும், பின் மனம் கனிய அவன் பரிதவிப்பு புரிந்தவள் போல், தனவனின் அடர்ந்த சிகையை தளிர் விரல்களால் கோதி "என்னாச்சு?..." என்று ஆதுரமாக கேட்க

அவனிடம் பதில் இல்லை. ஆனால் சில நிமிடங்களில் அவள் உடையையும் தாண்டி சூடான கண்ணீர் அவள் மேனியைத் தீண்ட, பதறியவள் அவன் முகத்தை நிமிர்த்த, அதற்கு அவன் ஒத்துழைக்க வேண்டுமே,

மேலும் மேலும் அவளுள் புகுந்து விடுபவன் போல் அவள் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொள்ள, மிகவும் சிரமப்பட்டு அவன் நாடியில் ஒரு கையும், கன்னத்தில் ஒரு கையுமாக கொடுத்து தன்னிலிருந்து பிரித்து அவன் முகம் பார்க்க,

கலங்கி சிவந்த கண்களில் கோடாக கண்ணீர். துடித்து போனாள் பாவை "ஏங்க என்ன இது.. என்ன ஆச்சு?..." என்று அவன் கண்ணீரைத் துடைத்து விட

அவள் குறுமலர் கரத்தை தன் தடித்த கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டவன் "என்ன வெறுத்திட மாட்டியே நிரா..நீ என்ன விரும்பல என்றத கூட தாங்கிக்க முடிஞ்சுது ஆனா நீ என்ன வெறுத்துட்டா செத்துடுவேன் டா..." என்று கரகரத்த குரலில் சொல்ல

"என்ன கதைக்கிறீங்க.. நான் எதுக்கு உங்கள வெறுக்கணும்..."

"நேத்து உன்ட அம்மா..." என்று ஒரு நொடி நிறுத்தி தன்னவள் கேட்ட கடுஞ்சொற்களை நினைத்து பார்த்தவனாக

"நீ செய்யாத தப்புக்கு தானே அத்தன ஏச்சும் பலிச் சொல்லும்.. உன்ன சந்தோஷமா வாழ வைக்கணும்னு எல்லாம் செஞ்சேன்.. ஆனா கௌரவமா வாழ வைக்கணும் என்றத மறந்து மடத்தனமா உன்ன கடத்தி வந்து.. உன் மேல அழியாத கலங்கத்த அள்ளிப் பூசிட்டேன்.. என்ன மன்னிச்சிடு டா.. நான்.. நான் என்ன மனுஷன்.. ஒரு சுயநல பேய்.. என்ன பத்தி மட்டுமே யோசிச்சிருக்கேன்.. எனக்கே என் மேல ஆத்திரமா வருது.. என்னால இத தாங்க முடியல.. நீயே என்ன கொன்னுடு நிரா..." என ஏதேதோ சொல்லி தன்னைத்தானே அறைந்து கொள்ள,

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவள், அவன் பிந்தலையில் கையை வைத்து விரிந்த நெற்றியில் அழுந்த இதழ் ஒற்றிக் கொண்டாள். இரண்டு நிமிடங்களுக்கு மேல் இதழை விலக்கவே இல்லை பெண்ணவள்.

அவனும் பற்றி எரிந்த காட்டில் சிக்கியவனுக்கு தனக்கு மட்டும் தனியாக பனி மழை பொழிந்தது போன்று சுகமாக லயித்து இருந்தான்.

தன்னையே வெறுத்து புலம்பியவனை வார்த்தையால் சமாதானம் செய்ய தோன்றாமல், முத்தம் கொண்டு சமன் செய்ய முயன்றாள் பூம்பாவை.

நெற்றியில் இருந்து பெண்ணவள் உதட்டை விலக்கவும் தான், விழி நிமிர்த்தி காரிகையின் கண்களை ஊடுருவினான்.

அவன் முகத்தை தாங்கி இருந்தவள் மீண்டும் குனிந்து கன்னத்தில் முத்தமிட்டாள்.அது அவனுக்கு வலித்திருக்க வேண்டும், ஏனென்றால் நிரஞ்சன் குத்தியதில் கண்ணுக்குக்கு கீழ் சிவந்து போயிருந்தது, அந்த இடத்தில் தான் முத்தம் வைத்தாள்.

ஆனால் அவன் உடல் சிலிர்த்து அடங்கியது. "கண்ணமூடி படுங்க..." என்று மென்மையாக நிராளினி கூற

தன் பிரியமானவள் இடையில் கையை வைத்து இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டவன் "நீ வேணும்.. நீ இருந்தா தான் நித்திர வரும்..." என்றவன்

கீழே தொங்கிக் கொண்டிருந்த மரகத கால்களை எடுத்து மெத்தையில் வைத்து, பெண்ணவள் பின்தலையில் கையை வைத்து அவளை கட்டிலில் சரித்து படுத்துக்கொண்டான்.

நிராளினிகோ பெண்களுக்கே உரிய கூச்சமும் படபடப்பும் வந்து ஒட்டிக்கொள்ள, இதயம் எம்பி குதிக்க, தன்னை கட்டிக்கொண்டு கிடப்பவனை விழியை நகர்த்தி பார்த்தாள்.

அவனோ அவளின் இரு கால்கள் மேலும் தன் ஒற்றை காலை போட்டுக்கொண்டு, இடையில் ஒற்றை கையை போட்டு அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு, அவள் வாலிப்பான தோளில் தலையை வைத்து கண் மூடி இருந்தான்.

இரவு முழுவதும் தூங்காமல் தவித்தவன் சுகமாக தூங்கட்டும் என்று எண்ணி, அவன் உடலுக்கு அடியில் கிடந்த அவள் ஒற்றைக் கையை எடுத்து அவன் முதுகை தடவி கொடுக்க, மற்றைய கை அவள் இடையில் கிடந்த அவன் கையை பற்றி இருந்தது.

தட்டிக் கொடுத்தால் தூங்கி விடுவான் என்று பார்த்தால், சிறுக சிறுக அவள் கழுத்தில் அவன் சுவாசக் காற்றின் வெப்பம் கூடிக் கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் அவன் குளிர் நாசியின் நுனி தீண்டி உரச, தேகம் சிலிர்க்க அவன் கரத்தோடு பற்றி இருந்த அவள் கரம் இறுகியது.

என்னவென்று உணர முன் ஈர இதழ் முத்தம் அவள் கழுத்தில் முகிழ்க்க, பெண்ணவள் உடல் உதறலெடுத்து விலகும் முன் அதே இடத்தில் மீண்டும் தடித்த ஆதாரங்கள் பதிந்து கடித்து இழுக்க

எங்கே விலகுவது கால்கள் தானாக ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள, முதுகில் இருந்த பெண்ணவள் கரம் அவன் முடிக்குள் நுழைந்து கொத்தாக பிடித்து இழுத்தது.

மங்கையவள் மலர் மேனியின் வாசத்தில் மயங்கி தான் கிடந்தான் மன்னவன்.

அவனை விலக்கி தள்ளத்தான் அவளால் முடியவில்லை. "ம்ம்!..." என தாபமாக சத்தமிட்டவன் சங்கு கழுத்தை விட்டு ஊர்ந்து சதைப் பற்றான இதழ் சுழையை கவ்வி கொண்டான்.

இனிக்க இனிக்க ஆழ்ந்து ருசிதான். பெண்ணவள் புதுவித உணர்ச்சியில் திண்டாட, ஆணவன் அவளை கொண்டாட ஆரம்பித்தான்.

மூச்சு முட்டும் அளவிற்கு...
எச்சில் வற்றும் அளவிற்கு... ஒரு முத்த பரிமாற்றம்.

இதழை விடுவித்தவன் முகம் எங்கும் மொச்சு மொச்சு என முத்தம் வைத்து, கழுத்தில் இறங்கி, மென்மலர் தொட்டு, உடலெங்கும் முத்தம் வைத்து மொத்தமாக கொள்ளை இட ஆரம்பித்தான்.

ஆடைகளை கலைந்த போதோ... தன்னுள் ஊடுருவி தன் பெண்மையை களவாடிய போதோ.... எதற்கும் தடை விதிக்கவில்லை பெண்ணவள்.

தன் கணவனின் தொடுகைக்கு தானாகவே உகந்து தன்னை கொடுத்தாள்.

அவள் வலியில் முகம் சுருக்கியதையோ...
உணர்வின் பிடியில் உதடு கடித்ததையோ...
அத்தான் என்று அவனை அழைத்ததையோ... கவனிக்கும் நிலையில் வாகீஷன் இருந்திருக்கவில்லை .

காட்டாற்று வெள்ளமாக கட்டவிழந்த உணர்வுகளின் மத்தியில் தன்னை உருக்கி தன்னவளின் உதிரத்தில் கலந்து விட்டால் நன்றாக இருக்குமே என அவளுடன் ஊனும் உயிருமாக கலந்து விடும் முயற்சியில் இருந்தான்.

அறை முழுவதும் மன்மத வாசம் வீச, இருவரின் மூச்சுக்களின் சத்தங்கள் சங்கமமாக...
உயிரின் மொழி உயிர் அறிய...
இரு உடல்களும் கூடி களைத்து ஓய்ந்தன.

ஆடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடக்க, ஒற்றைப் போர்வைக்குள் தன் சொந்தமானவளின் வெற்றுமேனியை கட்டிக்கொண்டு காதல் ஆட்டத்தின் களைப்பால் கண்ணயர்ந்தான் வாகீஷன்.
 
Top Bottom