அத்தியாயம் 20
மணி 10:30 இருக்கும். கண் விழித்தும் கனவில் மிதக்கின்றோமா என கண்ணை சிமிட்டி சிமிட்டி தன்னவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் வாகீஷன்.
கூடலில் கலைந்த முடியும், சோர்ந்து களைத்த முகமும் பார்க்க பார்க்க சலிக்கவில்லை. நெற்றி வகுட்டில் இருந்த குங்குமம் கலைந்து, நடு நெற்றியில் இருந்த பொட்டு காணாமல் போனது அவன் மாயாஜாலத்தினால் தானே.
இன்னமும் நம்ப முடியவில்லை. அவளுடன் கூடி கழித்த நிமிடங்களை மீட்டு பார்க்கின்றான்.'டேய் என்னடா பண்ணி வச்சிருக்க.. ஏற்கனவே செய்யாத தப்ப தலையில தூக்கி சுமக்குறா.. இப்போ அவ மனநில என்னன்னு தெரியல.. இதுல அவ மேல பாய்ஞ்சு இருக்க...' என்று தனக்குத்தானே திட்டிக் கொண்டான்
'இதுவரைக்கும் என்ன லவ் பண்றேன்னு ஒரு வார்த்த சொல்லல.. நான் தான் அவ வாழ்க்கையின்னு ஏத்துக்கிட்டாளா தெரியல.. மற்ற விஷயம் தான் நான் நினைச்ச மாதிரி நடக்கல பஸ்ட் நைட், இதுவாவது நான் நினைச்ச மாதிரி நடந்து இருக்கலாம்.. அப்டி என்னடா அடங்காத உடம்பு.. ஐயோ!...' தலையைப் பிடித்துக் கொண்டான்.
வாகீஷனை பொருத்தவரை என்ன வெறுத்துட மாட்டியே என்று கேட்டதற்கு, உன்னை விரும்புகின்றேன் என்று வாய்மொழியாக நிராளினி சொல்லியிருக்க வேண்டும்.
அப்படி சொல்லாமல் அவள் அன்பின் அணுகுமுறைகளை புரிந்து கொள்ளவில்லை, பெண்களின் காதல் மொழி புரியாத முட்டாள் மாணவன்.
கூடலின் போது அவள் தடுக்காததை கூட தாலி கட்டியதால் பொறுத்துக் கொண்டாளோ, இல்லை என் ஆளுமையில் அடங்கிப் போனாளோ என்று தான் யோசித்தான்.
அவன் தான் உணர்ச்சியில் சிக்கி தவித்த பெண்ணவள் அவனை அணைக்க வந்த போது, அவள் கைகளை மெத்தையோடு அழுத்தி பிடித்து இருந்தானே. இப்போது யோசிக்கும் போது தடுக்க வந்த அவள் கைகளை இவன் அடக்கிப் பிடித்ததாக நினைத்துக் கொண்டான்.
'அய்யோ திரும்பத் திரும்ப தப்பு பண்றேனே...!" தன்னையே நொந்து கொண்டான்.
திரும்பி நிரிளினியைப் பார்க்க, அவள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். காளையவனை உறங்க வைக்க வந்து பாவையவள் பொன்மேனி கன்னிப் போனது தான் மிச்சம்.
கூடலின் களைப்பு கட்டழகன் அவனையே வாட்ட, வஞ்சியவள் பூந்தேகம் தாங்குமா என்ன, ஆழ்ந்த மோகன மயக்கத்தில் இருந்தாள் பெண்ணவள்.
மனைவியின் தூக்கம் கலையாமல் எழுந்து, அவசரமாக குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
காலை உணவு சாப்பிடவில்லை. அவன் செய்து வைத்திருக்கும் வேலைக்கு நிராளினி எழுந்து கொள்ள நேரமெடுக்கும். அவனுக்கும் இதற்கும் மேல் சமைக்க முடியும் என்று தோன்றவில்லை.
எனவே குளித்துவிட்டு கடையில் ஏதாவது வாங்கி வரலாம், சாப்பிட்ட பின்னர் புது மனைவியை சமாதானம் செய்ய புத்தியை தீட்டலாம் என முடிவு எடுத்தான்.
அதன் பின்னர் தான் தன் முன் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். புது கூடல் கண்ட புது மாப்பிள்ளை அல்லவா, மனைவியின் சீராக கன்னம் கழுத்து என குங்குமம் ஒட்டிக்கொண்டு பல்லை காட்டி இளிக்க, கொடுப்பு சதையை உள்பக்கமாக இழுத்துக் கொண்டு அழகாக வெட்க்கப்பட்டான் வேங்கையவன்.
அவனுக்கே அவன் புதிதாக தெரிந்தான். "அச்சோ! நான் கன்னி கழிஞ்சிட்டேன்..." தானே சொல்லிக்கொண்டு உடலை முறுக்கி கொண்டு சிரித்தபடி குளித்தான்.
குளித்து முடித்து தயாரானவன் நிராளினி அருகில் வந்து, அவன் எனிமியான ஒற்றை கல் மூக்குத்தியில் முத்தம் வைத்து "எதுவா இருந்தாலும் கூடவே இருடா.. உன்ன தவிர எனக்கு வேற எதுவும் பெருசு இல்ல..." என்று மெல்லிய குரலில்
கொஞ்சம் காதலாக...
கொஞ்சம் தவிப்பாக...
கொஞ்சம் ஏக்கமாக... கூறிவிட்டு போர்வையை இழுத்து நன்கு போர்த்தி விட்டு
"சாப்பாடு வாங்கிட்டு வாரேன்.. சாப்பிட்டு தெம்பா ஏசு, அடி வாங்கிக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு
அறைக் கதவையும் சாத்திவிட்டு வெளியேறி, வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, வாகனத்தின் சத்தம், வெளி கேட்டை இழுத்து சாத்தும் சத்தம் என்ன எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவள் கண் விழித்தாள்.
வாகீஷன் போர்வையை இழுத்து போர்த்தும் போதே தூக்கம் கலைந்து விட்டது. ஆனால் அவள் இருந்த கோலமும் அவன் முகம் பார்க்க வெட்கமும் வந்து தடுக்க அப்படியே தூங்குவதுபோல் நடித்தவள் எழுந்து அமர்ந்தாள்.
"எதுக்கு நான் ஏசணும் அடிக்கணும்..." என தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள், சற்று முன்னர் நிகழ்ந்த சங்கமத்தை நினைத்து வெட்க புன்னகை பூத்தாள்.
"ஓஹோ! என்ன கஷ்டப்படுத்தினதா நினைக்கிறாரோ..." என்று சொல்லிக் கொண்டவள் யோசனை பூ கசங்காமல் தேன் எடுத்த கந்தர்வனின் ஆளுகையை அசை போட்டது.
எப்போதும் எதிலும் அவன் கண்மணியை முகம் சுருங்க விட மாட்டானே, பூவை விட மென்மையாகவே அவளை கையாண்டு இருந்தான்.
பிறகு ஏன் அவள் அவனை கடிந்து கொண்டு அடிக்க வேண்டும். அவள் உடல் முழுவதையும் ஆராதித்தான் தான். ஆனால் அழுத்தி ஒரு பிடி கூட பிடிக்கவில்லை. லவ் பைட்ஸ், லவ் மார்க் என எந்த அடையாள சின்னமும் இல்லை .
அவளின் நாணச்சிவப்பும் முகத்தில் இருக்கும் புதுவித பொலிவும்தான் கூடல் முடிந்தவள் என்பதை பறைசாற்ற வேண்டும்.
எத்தனை நேரம் தன் மாயவனின் காதல் லீலைகளை மீட்டுப்பார்த்து மயங்கி இருந்தாளோ, சென்றவன் சாப்பாட்டுடன் திரும்பும் முன் எழுந்து குளித்து உடைமாற்ற வேண்டும் என்று மூளை எடுத்துரைக்க எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து தயாராகி, அறையை சுத்தம் செய்துவிட்டு, ஹாலில் சோஃபாவில் அமர்ந்து இருந்தாள். விழிகள் வாசலிலேயே இருக்க, செவிகள் கூர்மையாக வாகன சத்தத்தை கவனித்தது.
சாதாரணமாக அவன் முகம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. அவன் வீட்டினுள் நுழையும் போது சமையல் அறைக்குள் சென்று ஏதாவது வேலை செய்வது போல் இயல்பாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் வேறு.
ஆனால் அவள் கண்ணாளன் வந்தபாடில்லை. மணி ஒன்றைத் தொட்டதும் நிராளினிக்கு பயமும் சந்தேகமும் வர, அவனுக்கோ சுதாக்கோ அழைத்து பார்க்க அவளிடம் தொலைபேசி கூட இல்லையே .
உடனே வீட்டின் பின்புறம் சென்றவள் கோமதியை அழைத்து, காலை உணவு வாங்க சென்ற வாகீஷன் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் கடந்தும் வரவில்லை என்று கூற
"உன்ன தனியா விட்டுட்டு ரொம்ப நேரம் வெளியே இருக்க மாட்டானே.. அதுலயும் கால சாப்பாடு வாங்க போனவன் மதியமாகியும் வராம இருக்கான்னா என்னனு தெரியலையே.. இரு ஃபோன் பண்ணி பாக்குறேன்..." என்றவர் முதலில் வாகீஷனுக்கு அழைப்பை எடுக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை.
தவிப்பாக அவர் முகம் பார்த்திருந்த நிராளினியை பார்த்துவிட்டு, தம்பிக்கு அழைப்பு எடுக்க,
சுதாகரன் அழைப்பை ஏற்று "சொல்லுக்கா..." என்க
"டேய் எங்கடா நிக்கிற.. வாகீ எங்க?..." என்று கேட்க
"நான் வீட்டதான்.. நேத்து நடந்த பிரச்சினையால கீத்தி என்ன வெளியவே விடமாட்டேன் என்றாள்..வாகீ எங்கன்னா வீட்ட இல்லையா...?" என்று கேட்க
கோமதியும் அவன் சென்று வெகு நேரமானதை கூற, நேற்று அவன் அடி வாங்கியதில் இருந்து பயந்து போயிருந்த கீர்த்தனா தன் கைக்குள்ளாகவே கணவனை வைத்திருக்க, இப்போதும் அவள் மடியில் படுத்து இருந்தவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.
"என்னக்கா சொல்ற..நிராளிய தனியா விட்டுட்டு இவ்ளவு நேரம் வெளியே இருக்க மாட்டானே.. அவனுக்கு ஃபோன் போட்டு பாத்தியா?..." என்று கேட்க
"எடுத்தேன்டா.. என்னன்னு தெரியல போகல.. உன்னோட இருப்பான்னு நினைச்சேன்..."
"இல்லக்கா.. இரு நான் கால் பண்ணி பாக்குறேன்..." என்றவன் கோமதி அழைப்பில் இருக்கும்போதே வாகீஷன் எண்ணிற்கு அழைக்க, அழைப்பு செல்லவில்லை. ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது, மேலும் பதற்றம் தொற்றிக் கொண்டது சுதாகரனை.
அழைப்பிலிருந்த கோமதியிடம் "அக்கா நீ நிராளி கூடவே இரு.. அவன் ஃபோன் எடுக்கல, நான் என்னனு பாக்கேன்..." என்றவன் வேகமாக தயாராகி, தனது மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொண்டு நண்பனை தேடிச் சென்றான்.
சுதாகரன் அழைப்பை துண்டித்த பின்னர் நிராளினியை பார்த்த கோமதி "சுதா வெளிக்கிட்டு போறான்.. கையோட வாகீய கூட்டிட்டு வருவான்.. நீ யோசிக்காத..." என்று ஆறுதல் கூற
கண்கள் கலங்கி கண்ணீர் குளம் கட்ட, இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஏதோ தவறாக இருப்பதாக உள்ளுணர்வு எடுத்துரைக்க, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள 'கடவுளே என்ட அத்தான் வந்துடனும்...' என்று மனதில் வேண்டுதல் வைத்தவள், நடுங்கும் உடலோடு நிற்க முடியாமல் உள்ளே வந்து அமர்ந்தாள்.
கோமதியும் அவளுடன் வந்து அமர்ந்து கொண்டார். சுதாகரன் ஏதும் தகவல் சொல்வானா என்று அடிக்கடி ஃபோனை பார்த்துக் கொண்டார்.
நிரிளினியால் ஐந்து நிமிடத்திற்கு மேல் அமர்ந்து இருக்க முடியவில்லை. எங்கோ தன் உயிர் துடிதுடிப்பதை போன்ற பிரம்மை. எழுந்து நடந்து கொண்டிருந்தாள். எந்த பக்கமாக ஓடி சென்று தன்னவன் மார்பில் தஞ்சம் புகுவது என்று தெரியாமல் பரிதவித்தது காதல் கொண்ட மனது.
மணி இரண்டு இருக்கும் வாகீஷனின் வீட்டின் முன்பு வந்து நின்றது கருப்பு நிற கார். அதிலிருந்து இறங்கியவன் நிரஞ்சன்.
வீட்டின் முன்பு கார் சத்தம் கேட்கவும் கோமதியும் நிராளினியும் வெளியே வந்தனர். கார் கதவை திறந்து கொண்டு வந்த நிரஞ்சனை கண்டதும் கோமதியின் புருவம் சுருங்க
நிராளினி கண்கள் விரிந்து கொண்டது. "அண்ணா வாங்க!..." என்று வரவேற்றாள் தன்னைத் தேடி வந்த தமையனை.
"நீ ஆர தேடுரயோ, அவன பாக்கணும்னா வெளிக்கிட்டு என்னோட வா!..." என்று நிரஞ்சன் அழைக்க
கோமதி உடனே நிராளினி கையை பிடித்துக் கொண்டார். ஏதோ விபரீதம் என்று உள் மனது சொல்ல "இல்ல தம்பி.. எதுவா இருந்தாலும் வாகீ வரட்டும்.. நிராளிய தனியா அனுப்ப ஏலாது..." என்று சொல்ல
அவரை முறைத்து பார்த்தவன் "இவ என்னோட வந்தா தான் அவன பாக்கவே ஏலும்.. அதோட நேத்து வரைக்கும் இவ என்ட தங்கச்சி என்னோட வாரத தடுக்க நீங்க யாரு..." என்று கேட்க
கோமதி பதில் சொல்லும் முன் "அக்கா நான் போறேன்.. ஏதோ சரியில்ல..." என்று நிராளினி சொல்ல
"இல்ல நிராளி நானும் வாரேன்.. இல்ல எங்க கூட்டிட்டு போறாருனு சொல்ல சொல்லு..." என்கவும்
கடுப்பாக நடுவிரலால் நெற்றியை தேய்த்தவன் "சரி தெளிவா கேளுங்க.. அவன் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்.. இவள கூட்டிட்டு அங்க தான் போறேன்..." என்றவன் நிராளினி கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காரில் ஏற்றியவன் வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல,
அதன் பின்னர் தான் கோமதி அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தார் "ஐயோ! என்ன நடக்குது..." என்று பதற்றமானவர் உடனே சுதாகரனுக்கு அழைத்து விடயத்தை சொல்ல ,
கடைகடையாக வாகீஷனை தேடித்திருந்தவன் நண்பர்களிடமும் விசாரித்து விட்டு, இறுதியாக திலகத்தை தேடி செல்லலாம் என்று இருக்க, தமக்கை கூறிய செய்தியில் சர்வமும் ஆட்டம் காண வேகமாக கருங்கொடிதீவு போலீஸ் நிலையம் சென்றான்.
உள்ளே சென்று வாகீஷனின் புகைப்படத்தை காட்டி கேட்க, அவன் அங்கு உள்ளதாக தான் கூறினர். ஆனால் என்ன வழக்கு என்று கூறவும் இல்லை, அவனைப் பார்க்க விடவும் இல்லை.
கோமதி தகவல் சொல்லி, எங்கோ நின்றவன் போலீஸ் நிலையம் வந்து சேர்ந்து விட்டான். ஆனால் நிராளினி வரவில்லை.
காரணம் நிரஞ்சனின் கார் சென்று நின்றது அவனது வீட்டில் தான். கணவன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கின்றான் என்ற அதிர்ச்சியில் இருந்தவள், வாகனம் நின்றதும் தான் சுற்றம் உணர்ந்தாள்.
தன் வீட்டு வளாகத்தில் இருப்பதை உணர்ந்தவள் கேள்வியும் பயமும் கலந்த பார்வையை அண்ணனை நோக்கி வீச "உள்ளவா கொஞ்சம் கதைக்கோணும்.. அதுக்கு பிறகு போலீஸ் ஸ்டேஷன் போலாம்..." என்று கூறிவிட்டு முன் நடக்க
அவளுக்கா அவள் அண்ணனை பற்றி தெரியாது, இதை எதிர்பார்த்தேன் என்பது போல் வீட்டினுள் செல்ல,
மகளை கண்ட பெற்றவர்கள் பாசத்தில் ஓடிச் சென்று தழுவவில்லை. இன்னும் கோபத்தில் தான் இருந்தனர்.
நிரஞ்சன் தான் "உள்ளே போய் உடுப்ப மாத்திட்டு வா.. அதுக்கு பிறகு கதைப்போம்..." என்று சொல்ல
நெற்றி சுருக்கி "எதுக்கு?..." என்று கேட்க
"இது அவன் வாங்கி தந்தது தானே..." என்று கேட்க
அவளுக்கு புரிந்தது தமையன் ஒரு முடிவுடன் தான் இருக்கின்றான் என்று. எதுவும் பேசாமல் தனது அறைக்குச் சென்று வேறு உடையை மாற்றி விட்டு வெளியே வர
அறை முன்பே நின்று இருந்தான் நிரஞ்சன், கையில் பேக் ஒன்று "இதுல அந்த உடுப்ப போட்டு எடுத்துட்டு வா..." என்று சொல்ல
அண்ணன்காரனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள் அவன் சொன்னபடி செய்து விட்டு வெளியே வர, அந்த பையை வாங்கிக் கொண்டவன் "இரு..." என்று சொல்ல
ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். அவனும் அவளை பார்த்தபடி அமர்ந்தவன் "சொல்லு!..." என்று அவளிடம் தான் கேட்டான்.
எதை கேட்கின்றான் என்று புறிய, இழுத்து பெருமூச்சு ஒன்றை விட்டு, வாகீஷன் காதல் சொல்லி விட்டு கடல் கடந்து சென்று, திரும்பி வந்து கடத்தியதில் தொடங்கி தாலி கட்டியது வரை எல்லாமும் சொன்னாள்.
"ம்ம்..." என்று சொன்னவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்த்த பார்வை வேறு மாதிரியான தோரணையாக இருந்தது.
"சரி, அவன் உனக்கு வேணாம்.. இப்போ போலீஸ் ஸ்டேஷன் போறோம்.. உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, நடந்த கல்யாணம் செல்லுபடி ஆகாதுனு எழுதிக் கொடுத்துட்டு என்னோட வார.. அவன் உன்ன கடத்திட்டு போனது, இந்த தாலி, எதுவும் வெளிய தெரியக்கூடாது.. கொஞ்ச நாள் போனா நீயே எல்லாத்தையும் மறந்துடுவ.. அதுக்கு பிறகு மத்தத பாத்துக்கலாம்..." என்று அழுத்தம் திருத்தமாக கூற
"அது.. அது எப்படி ஏலும்.. நான் அவர விட்டு வர ஏலாது..."
"வந்து தான் ஆகணும்.. இல்லனா காலத்துக்கும் அவன் ஜெயில்ல தான் கிடக்கணும்.. ஆரு கண்டா அங்கேயே செத்தும் போகலாம்..." என்க
"அண்ணா!..." என உடல் நடுங்க குரலும் நடுக்கமாக ஓங்கி ஒலிக்க, எழுந்து நின்றே விட்டாள். இதயம் பட படவென அடித்துக் கொள்ள வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
"எதுக்கு டென்ஷனாகுற.. உண்மையத்தான் சொல்றேன்.. கஞ்சா கேஸ்ல அவன போலீஸ் புடிச்சிருக்கு.. குறைஞ்ச தண்டனையே 20 வருஷம்.. கூடுனது ஆயுள் தண்டனை, ஜாமீன் வேற கிடைக்காது.. கூடவே அவன் சொத்து மொத்தமும் பறிமுதல் பண்ணுவாங்க.. ஒத்த கேஸ் அவன்ட மொத்த வாழ்க்கையையும் முடிச்சுவிட்டுடும்.. அதே மாதிரி அவன்ட வாழ்க்கைய காப்பாத்த நீ ஒரு சைன் பண்ணுனா போதும்..." என்று சொல்ல
இடிந்து போய் அமர்ந்தாள் பெண்ணவள் "ஏன்ண்ணா இப்பிடி..." இயலாமையுடன் வந்தது அவள் வார்த்தைகள்.
"ஒரே ஒரு விஷயம் தான்.. அவன் உனக்கு வேணாம்..."
"அண்ணா அவர் ரொம்ப நல்லவர்..."
"ஸ்சூ.. என்ன கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாத.. பெட்டையல காதல்னு சொல்லி கவுக்கிறது ஈசி.. ஒரு ஆம்பளையா அவன் என்னலாம் பொறுக்கிதனம் பண்ணி இருக்கான்னு எனக்கு நல்லா புரியுது.. நீ இப்டி பதறுறது எல்லாம் அவன்ட மேலே இருக்கிற பரிதாபத்தால தான்.. காலப்போக்குல அது மாறிடும்..." என்று அவன் நிலையாக நிற்க
"அம்மா நீங்களாவது சொல்லுங்க.. என்ட கழுத்துல அவர் போட்ட தாலி இருக்கு.. சட்டப்படி இல்லாட்டியும் சம்பிர்தாயப்படி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..
...அப்ப நீங்க பாத்த மாப்பிள்ள பிரதீபன விட எந்த விதத்திலயும் வாகீ குறைஞ்சவர் இல்ல.. எல்லாத்துக்கும் மேல நான்னா அவருக்கு உசுருப்பா..." என்று தாய் தந்தையரிடம் வாக்ஷனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வாதிட்டாளே ஒழிய,
அவளுக்கு அவன் மீது உள்ள காதலை விளக்கிச் சொல்ல, அவன் மீது இவளும் இப்போது பித்தாகி இருப்பதை உணர்த்த தவறிவிட்டாள்.
அதனால் அவள் வீட்டினரைப் பொருத்தவரை கடத்தப்பட்டு கட்டாயத்தின் பெயரில் அவள் மீது திணிக்கப்பட்ட அன்பை ஏற்றுக் கொண்டுள்ளாள். காலப்போக்கில் அது மாறிவிடும் என்றே எண்ணினர்.
ஆனாலும் ஜெயந்திக்கு மகளின் கழுத்தில் இருந்த தங்க தாலியை இறக்க மனது ஏனோ சற்று முரண்டு பிடித்தது.
அருகில் இருந்த கணவனிடம் "அப்பா, ஒருக்கா யோசிக்கலாமே..." என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னரே தேவராசா பார்த்த தீ பார்வையில் வார்த்தைகள் முழுமை அடையவில்லை.
"உன்ட அண்ணன் சொல்றத கேளு.. இன்டைக்கு முளைச்ச காளான் அவன் அதுவும் வேத்து சாதி, பத்து வருஷத்துக்கு முன்னாடி பரதேசி குடும்பம், அவனையெல்லாம் மருமகனா நினைச்சு கூட பாக்க விரும்பல நான்..." என்று நிராளினியிடம் கூறிய தேவராசா
"ஜனா நீ சொல்றத கேட்டா நம்ம புள்ளையா கூட்டிட்டு வா.. இல்லையா அவன் ஒன்னுமே இல்லாம ஒழிஞ்சு போகட்டும்.. இவ எக்கேடும் கெட்டுப் போகட்டும்..." என்று நிரஞ்சனிடம் சொல்லிவிட்டு
மகளின் கண்ணீருக்கு கரைந்து விடும் மனநிலை இருந்த ஜெயந்தியை இழுத்துக் கொண்டு தேவராசா அறைக்கு சென்றுவிட,
நிரஞ்சன் தங்கையை தீர்க்கமாக பார்த்தான். தனக்காக ஆளானவன் தன்னாலே அனைத்தையும் இழந்து நிற்க வேண்டாம்.
அதிலும் அவன் காதல் மீது அலாதி நம்பிக்கை. ஒரு கையெழுத்து போடுவதாலோ...
கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டுவதாலோ... அவர்கள் ஏழேழு ஜென்ம பந்தம் முடிந்து விடாது.
முடிந்து விட்டால் அந்த காதல் தோற்றுப் போகுமே. காதலர்கள் தோற்கலாம் காதல் தோற்காதே. எனவே மனதை கல்லாக்கி கொண்டு தன் மனம் நிறைந்தவனின் மனதை உடைக்க சம்மதம் கூறினாள்.