அத்தியாயம் 23
தேடித் திரிந்த திரவியம் கைக்கு கிடைத்த பின்னர் காதல் மன்னன் சும்மா இருப்பானா என்ன...
விடிந்ததுமே அவளின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை எடுத்தான்.
நிராளினியோ நேற்று இரவே அவன் அழைப்பை எதிர்பார்த்தாள். அவன் தான் புதுவித தண்ணி போட்டு புலம்பலில் இருந்தானே.
வாகீஷனுக்கோ வற்புறுத்தி தன் காதலை அவள் மனதில் திணித்து விட்டோமோ என்ற நெருடல்.
அவளே விட்டுவிட சொன்ன பின்னர் நெருங்க தயக்கம்.
நிராளினிகோ மீண்டும் தன் கணவனுக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது என்ற எண்ணம். அதனால் தமயன் மனம் மாறும் வரை தன்னவனை நெருங்க தயக்கம்.
(ஆக மொத்தம் இரண்டும் சேர்ந்து புதுசா லவ் பண்ண போகுதுங்க அவ்வளவுதான்.)
நிராளினியிடம் தொலைபேசி இல்லை. ஜெயந்திடம் மட்டுமே இருந்தது, நேற்று வாகீஷனை பார்த்த பின் என்ன நினைத்தாரோ மகளிடம் இருந்து ஃபோனை திருப்பி வாங்கவில்லை.
இந்த சுதந்திரம் பக்கத்து வீட்டில் இருக்கும் அவள் பெரியம்மா வரும் வரை தான். நிரஞ்சனின் மூன்றாம் கண் அவர்தான், நிராளினியை வேவு பார்ப்பது தான் அவர் தலையாய கடமை. நேற்று வாகீஷன் வந்த நேரம் அவரும் வீட்டில் இருந்திருக்கவில்லை, அதுவரை முருகன் கருணை காட்டி விட்டார் போலும்.
"ஹலோ!..." அழைப்பை ஏற்று அவன் வனக்குயில் கூவ
"நிரா!..." உயிரிலிருந்து அழைக்க முடியுமா அவளவன் அழைத்தான்.
"ம்ம்.. சொல்லுங்க..."
"எப்டி இருக்க..? நீயும் பிள்ளையும் சுகம் தானே?..." தன் உயிரான உலகமானவர்களின் அருகில் இருக்க முடியாத ஏக்கம் அவன் குரலில்
"ம்ம்.. நல்லா இருக்கோம்..."
"டீ குடிச்சியா?..." அவன் கேட்ட உடனே அவன் கையால் குடித்த டீ அடித்தொண்டையில் தித்தித்தது.
"இல்ல..."
"ஏன்?..."
"அது இப்பதான் எழுப்பினேன்.. இனிதான் குடிக்கணும்..."
"ஓ.. எனக்கு உன்ன பாக்கணும் டா.. அங்க வரட்டுமா?..."
"ஐயோ! இல்ல வேணாம்..."
வாகீஷனிடம் சில நிமிடம் அமைதி. பின் "நீ சொன்னதான், உன்ன விட்டுடுட சொல்லி.. ஆனா என்ட புள்ளைய விட ஏலாதே..."
'ஓஹோ!.. அப்போ என்ன விட்டுட்டு இருக்க ஏலுமா...' பெண்ணவள் மனது சுனங்கியது.
அவனிடம் வரம் பெற்று, உயிர்வதையை கொடுத்தது அவள்தான் என்பதை மறந்து போனாள்.
அவளை விட முடியுமா அவனால்! அவளை தேடி தானே ஆறு மாதங்கள் நாயாய் சுற்றினான்.
"நிரா!..." சிந்தனையில் இருந்தவளை அவன் குரல் கலைக்க
"ம்ம்.. புரியுது, ஆனா அண்ணாவ கோபப்படுத்த ஏலாது.. இங்க நீங்க வர வேணாம்..."
"சரி வெளிய எங்கேயாவது போகணும்னா சொல்லு.. நான் வந்து கூட்டிட்டு போறேன்..."
"ம்ம்.. சொல்றேன்.. நீங்க சரியா சாப்பிடுங்க..." என்று அவள் அக்கறையாக சொல்ல
அவன் மனதில் குளிர்ச்சாரல் வீச, "ம்ம்.. சரி.. எப்போ பாக்கலாம்..."
"நான் சொல்றேன்..."
"சரி..." என்று வாகீஷன் சொல்லும்போதே ஜெயந்தி "நிராளி!..." என்று அழைக்க
"சரி.. எதுவும் என்டா நானே கூப்பிடுறேன்.. இந்த நம்பருக்கு எடுக்காதீங்க..." என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் பெண்ணவள்.
சொன்னது போன்றே ஜெயந்தியிடமிருந்து தொலைபேசியை வாங்கி இரவுகளில் சாப்பிட்டீங்களா என்று இவள் குறுஞ்செய்தி அனுப்ப, மறுநொடி அவன் அழைப்பான்.
இரவுகளில் இருவரும் இனிமையாக காதல் பயிரை வளர்த்தனர். மனம் விட்டு இருவரும் பேசிக் கொண்டனர். இருவருக்குமான புரிந்துணர்வு மேலும் மேலும் இறுகி போனது.
அக்கறை, காதல், அனுசரணை என்று அனைத்திலும் சிறந்து அணங்கவளை கட்டி இழுத்தான் அந்த காதல் ராஜன்.
நாட்கள் செல்ல கணவனின் அருகாமையை நிராளினி மனம் வெகுவாக தேடியது.
எனவே அது ஆறாம் மாதம் என்பதால் அப்போது இருந்தே பிரசவத்திற்கு தேவையான பொருட்கள், தனக்கு தோதாக அணிய உடைகள் என வாங்க கடைக்குச் செல்ல வேண்டும் என்று வாகீஷனையும் வரச் சொல்லி ஜெயந்தியுடன் கிளம்பினாள்.
வாகீஷனும் அதிகாலை சூரியனைப் போல் பளிச்சென்று வந்து இறங்கினான். முடிவெட்டி, தாடி மீசை எல்லாம் செப்பனாக திருத்தி, கட்டழகனாக மிளிர்ந்தான்.
அதிலும் தன் பிரியமானவளை பார்த்தபோது கண்களில் தோன்றிய ஒளியும், முகத்தில் இருந்த பிரகாசமும் காரிகையை கட்டி இழுத்தது.
மனைவி மாமியாரை அழைத்துக் கொண்டு, ஒரு பெரிய சாப்பிங் மால் வந்திருந்தான்.
நிராளினி தனக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும் போது, அவளுடன் இருக்க ஆசையாக இருந்தாலும், ஜெயந்தி கூட இருந்ததால் அவரை சங்கடப்படுத்த விரும்பாமல் சற்று தள்ளி நின்று தன்னவளை கவனித்தான்.
அவனுக்கு அவள் தூரத்து வெண்ணிலா தானே, சற்று தூரமாக நின்று ரசிக்க ஆரம்பித்து விட்டான்.
இடையே இருவருக்கும் ஜூஸ் வாங்கி வந்தான்.நிராளினிக்கு ஒன்றை குடுத்து விட்டு, களைத்து போய் சற்று தள்ளி, இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயந்தியை சற்று தயக்கமாக நெருங்கி ஜூசை கொடுக்க
"இல்ல வேணாம்..." என்றார் அவன் முகம் பார்க்காமல்
வாய் திறந்து காற்றை வெளியிட்டவன், அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.
"இங்க வச்சு இத கதைக்கிறது சரியில்லன்னு தெரியும்.. ஆனா இப்போதான் தைரியம் வந்துச்சு.. நான் உங்கள ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல.. என்னால மனசாலையும் உடம்பாலையும் கஷ்டப்பட்டு ஹாஸ்பிடல் வரைக்கும் போனீங்க.. என் கண்ணால பாத்தேன்.. எத்தன மன்னிப்பு கேட்டாலும் ஒரு தாய தவிக்க வச்ச பாவத்த என்னால கரைக்க ஏலாது..
...உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்னுதான் நினைச்சிருந்தேன்.. கண்டிப்பா ஒரு நாள் அப்டி கேட்பேன்.. இப்போதைக்கு என்ன மன்னிச்சு இந்த ஜூஸ வாங்கி குடிங்க.. உங்களுக்கு பிபி இருக்கு, குளிச போட்டு இருக்கீங்க.. ரொம்ப நேரம் இப்டியே இருக்கக் கூடாது..." என்று அக்கறையாக சொல்ல
பொது இடத்தில் வீம்பு காட்டாமல் ஜெயந்தியும் அதை வாங்கிக் கொண்டார். கடமை முடிந்தது என்று எழுந்து செல்லாமல்
"நிராவ பிரிஞ்சு நீங்க எவ்ளவு வேதனப்பட்டீங்களோ, அதே அளவு வேதனைய நான் இப்போ அனுபவிக்கிறேன்.. உங்களுக்கு என்டாலும் பாசத்த பிரிச்சு குடுக்க ரெண்டு பிள்ளைங்க இருந்தாங்க.. என்ட மொத்த நேசத்துக்கும் சொந்தக்காரி அவதான்.. நீங்க 26 வருஷமா வச்ச பாசத்த எட்டு வருஷத்துல அவள் மேல வச்சுட்டேன்.. அதனாலதான் எதப்பத்தியும் யோசிக்காம தப்பு பண்ணிட்டேன்.. இத நான் என்ன நியாயப்படுத்த சொல்லல.. நியாயம் என்ட பக்கமும் இல்ல.. என்ட நிலமயச் சொல்றேன்.. உங்களுக்கு அவளும் ஒரு புள்ள, எனக்கு ஒட்டு மொத்தமும் அவள் தான்..." என்றவன் எழுந்து செல்ல
தன் தாய் பாசத்தோடு அவன் நேசத்தை ஒப்பிட்டுப் பேசியவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டேன் ஜூஸை பருகினார் ஜெயந்தி.
எல்லாம் வாங்கி முடிய, பில்லை வாகீஷன் கொடுக்கப் போக "இல்ல வேணா.. அண்ணா எல்லாமே செக் பண்ணுவாரு.. கடைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. உங்க கூட போறேன்னு சொல்லல.. தெரிஞ்சா கஷ்டம் தான்.. அண்ணாட காட் இருக்கு..." என்றவள் பேங்க் கார்டை எடுத்து பில்லுக்கு கொடுக்க
அவன் முகம் கசங்கி நிற்க, "சரி, டெலிவரிக்கு வாங்குனதுக்கு நீங்க காசு குடுங்க.. எனக்கு வாங்குனதுக்கு நான் குடுக்கேன்..." என்று அவள் சொல்ல
சற்று மகிழ்ந்தாலும் 'உனக்கு செய்ய எனக்கு உரிமை இல்லையா?' என்று அவனும்
"பிள்ள மட்டும் போதும் என்டு சொன்னீங்க தானே' என்று அவளும் கண்களினாலே பேசிக்கொண்டது இருவருக்கும் புரியவில்லை.
நிராளினி சொன்னது போன்றே பாதி பாதி பணத்தை கட்டி விட்டு, கடையை விட்டு வெளியேறினர். இரு பெண்களையும் ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, சாப்பிட கூறிவிட்டு, அவன் மட்டும் அருகில் இருக்கும் கடைக்கு சென்று வந்தான்.
மனைவியும் மாமியாரும் சாப்பிட்டு முடிய, அவர்களை அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டான்.
ஜெயந்தி முதலில் இறங்கி சென்றுவிட, நிராளினி அவன் அருகில் இருக்க, வாகீஷன் பின் சீட்டில் இருந்த பழங்கள், நட்ஸ் இருந்த பையை எடுத்து அவளிடம் கொடுத்து "நல்லா சாப்பிடு.. வேற என்ன வேணும்னாலும் என்னுட்ட கேளு..." என்றவன்
சற்று தயங்கி, ஆர்வமாக "அடுத்த செக்கப்க்கு இன்னும் ஆறு நாள் இருக்குல்ல..." என்று கேட்க
"ம்ம்..." என்க
"நானும் வரவா?..." என்று ஆசையாக கேட்க
அவளுக்கும் ஆசைதான். ஆனால் அவனைப் பார்த்த பின்னர் அவனை விட்டு விலகி இருக்க முடியவில்லை. இந்த முறை தமையனின் மனதை மாற்ற தனது மாதாந்திர பரிசோதனையை தான் பிரம்மாஸ்திரமாக நினைத்து இருக்கின்றாள்.
இந்த ஒரு மாதம் கணவன் மனம் வாடட்டும், அப்போதுதான் அடுத்து உள்ள மாதங்கள் எந்த தடையும் இன்றி அவன் மகவுவை அவன் உரிமை கொண்டாட முடியும் என்று நினைத்தவள்
"இல்ல.. அண்ணா நாளையண்டைக்கு வந்துருவாரு.. செக்கப் நேரம் இங்க தான் இருப்பாரு.. அடுத்த மாசம் கூட வாங்க..." என்று சொல்ல
அவனுக்கு ஏமாற்றத்தில் முகம் சுருங்கியது. 'என்னை எதற்கு தள்ளி நிறுத்துகின்றாள்' என்று தனக்கே கேட்டுக் கொண்டான்.
அவளோ 'நீங்க தான் தள்ளி நிற்கீங்க' என்று குற்றம் சாட்டுகின்றாள். முன்பு சரி, இப்போதும் அவள் கையை கூட அவன் பிடிக்க தயங்குவது கஷ்டமாக இருந்தது.
என்னதான் ஃபோனில், நேரில் என்று பேசிக்கொண்டாலும். அண்ணனின் பேச்சைக் கேட்டு அவனிடம் தன்னை விட்டுவிட கூறியதும், குழந்தை உண்டானதை கூறாததும் என்று என் மீது கோபத்தில் இருக்கின்றாரா? என்ற எண்ணம்.
'உங்கட நிரா மேல உங்களுக்கு கோபம் வருமா அத்தான்...' மனதில் தான் கேட்டாள்.
வாய் திறந்து கேட்டு, இப்போதே இல்லவே இல்லை செல்லம் என்று அவனுடனே அழைத்துச் சென்றால் என்ன செய்வது.
தன் வீட்டினரின் முழு சம்மதத்துடன் தன்னவனுடன் சேர வேண்டும் என்ற அவள் எண்ணம் நிறைவேறாமல் போகுமே. அதனால் பொறுமையாக இருக்கின்றாள்.
"சரி, ஸ்கேன் ரிப்போர்ட்ட எனக்கு அனுப்பி வைடா..." என்ற வாகீஷன் கண்கள் அவள் மணி வயிற்றில் தான் இருந்தது. தொட்டுப் பார்க்க கைகள் இரண்டும் துடியாய் துடித்தது. மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவளும் சரி என்று கூறிவிட்டு இறங்கி சென்று விட்டாள். நிரஞ்சன் வந்தால் ஃபோனில் கூட பேச மாட்டாள் என்ற வருத்தம் இப்போதே வந்து ஒட்டிக்கொள்ள, மெதுவாக காரை ஓட்டிக்கொண்டு தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.
அவன் எதிர்பார்த்தது போன்றே நிரஞ்சன் வந்த பின்னர் அவள் அழைப்பது இல்லை. நானாக அழைக்கும் வரை இந்த பக்கமே வர வேண்டாம் என்று கூறிவிட்டாள்.
*******
அன்று அவளுக்கான மாதாந்திர பரிசோதனை நாள். இரவே ஜெயந்தியிடம் தன் மனதை கூறி, தன் திட்டத்திற்கு ஒத்துழைக்க கேட்க, அவருக்கும் மகள் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் என்பதால் மருத்துவமனை செல்லும் நேரம்
"ஜனா! நிராளி கூட என்னால ஹாஸ்பிடல் போக ஏலாது.. காலையில ஒரு மாதிரி இருக்க குளுசைய போட்டுட்டேன்.. நித்திரையா வருது கொஞ்சம் நீயே அவள கூட்டிட்டு போயிட்டு வாவேன்..." என்று சொல்ல
தாயை முறைத்தவன் "வரச் சொல்லுங்க..." என்று விட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு முன் சென்றான். தங்களிடம் நேரடியாக பேசுவது கிடையாதே.
நிராளினியும் இன்று எப்படியாவது தன் மனதை திடமாக கூறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணனுடன் மருத்துவமனை வந்தாள்.
மருத்துவரின் அறையின் முன்பு அவளின் எண்ணிற்காக காத்திருக்க, தாதியும் அவளை அழைக்க, நிரஞ்சன் ஃபோனை பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்து இருந்தான்.
அவனை உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும், கூப்பிட்டால் வரமாட்டான் என்பதால், எழுந்து கொள்ளும் போது தடுமாறுவது போல் தடுமாறி அவன் தோளை பிடித்துக் கொள்ள
"ஏய் நிராளி!.. என்னடி?..." என்று தன்னையும் மீறி பாசத்தில் தாங்கி பிடித்து கொண்டான்.
"தெரியல ண்ணா.. ஒரு மாதிரி இருக்கு..." என்று சொல்ல
"சரி வா!..." என தங்கையை அழைத்துக் கொண்டு உள்ளே வைத்தியர் முன்பு அமர வைத்தவன் வெளியேற பார்க்க,
அவன் கையைப் பிடித்துக் கொண்டவள் கூடவே அமரும்படி கண்களால் சைகை செய்ய, அவனும் தங்கை அருகில் அமர்ந்து கொண்டான்.
மருத்துவர் நிராளினியிடம் பொதுவான சில குறிப்புகளை கேட்டுவிட்டு, ஸ்கேன் செய்ய அங்கு இருந்த கட்டிலில் படுக்கச் சொல்ல, அவளும் எழுந்து சென்று படுத்துக் கொண்டாள்.
ஸ்கிரீனை மறைவாக எடுத்துவிட்ட மருத்துவர் ஸ்கேன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை அவதானிக்க, நிராலினியோ மருத்துவரிடம் "டொக்டர் பேபிட ஹார்ட் பீட் கேட்க ஏலும் இல்ல..." என்று கேட்க
அவரும் "ஷூர்..." என்றவர் அவள் வயிற்றில் இருக்கும் மழலை கண்ணனின் இதயத் துடிப்பை கேட்க வைக்க,
ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த மாமன் அவன் விரல்கள் அப்படியே நின்றது. காதுகள் இரண்டும் கூர்மையாக, மனது அந்த ஒலியை வாங்கி அவனையும் அறியாமல் பதிய வைத்துக் கொண்டது.
உள்ளுக்குள் ஏதோ சுருக்கென்று தைக்க, கைமுஷ்ட்டியை இறுக பொத்தியவன், விருட்டென எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.
அவன் எழுந்து செல்லும் அரவம் கேட்டு எட்டிப் பார்த்த நிராளினி 'அவ்ளவு கோபமா அண்ணா...' என்று மனதில் கேட்டுக் கொண்டாள்.
அவளுக்கு எங்கே தெரியும் அது கோபம் இல்லை, அதையும் தாண்டி அவன் மனதில் எடுத்து இருக்கும் விபரீத முடிவால் ஏற்பட்ட சலனம் என்று.
எதையும் மனதில் ஏற்றுக் கொள்ளாதே என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், வாகீஷனை மனதில் கொண்டு வந்து தன் குழம்பிய மனதை சீர்படுத்தினான்.
'கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணி பிள்ளைய குடுப்பான்.. நான் ஏத்துக்கணுமா...' நினைத்த மாத்திரத்தில் கோபம் தலைக்கு ஏற, அதன் பின்னர் தான் நிதானமானன்.
நிராளினியும் வரும் வழியில், வீட்டில் என்று அவனிடம் பேச முயற்சித்து விட்டாள். அவள் முகம் பார்க்காமல் தவிர்த்தவன் ஊர் திரும்பி விட்டான்.
நிரஞ்சன் கருங்கொடிதீவுக்கு சென்ற பின்னர் தான், தாயின் தொலைபேசியில் இருந்து தன்னவனுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டை அனுப்பி வைத்து, குழந்தையும் தானும் ஆரோக்கியமா இருப்பதாக கூறி, அதன் பின் ஆசையாக பேசினாள்.
******
நாட்கள் அப்படியே ஃபோனில் பேசிக் கொள்வது, பார்க்க வேண்டும் என்று தோன்றினால் வெளியே செல்வது போல் பார்த்துக் கொள்வதும் என்று சொல்ல
நிராளினிக்கு ஏழாவது மாதம் துவங்கியிருந்தது.
ஜெயந்திக்கு மருமகனை உரிமையுடன் வீட்டிற்கு வந்து பார்க்கச் சொல்ல தோன்றும், ஆனால் முடியாதே, நிரஞ்சன் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பான் எனவே மகளை எப்படியாவது உன் அண்ணனிடம் பேசி கணவனுடன் சேர்ந்து வாழ் என்று அடிக்கடி சொல்ல
எங்கே அந்த விடாக்கண்டன் தான் பிடி கொடுக்கவே மாட்டேன் என்கின்றானே. ஜெயந்திக்கு தேவராசாவிடம் சொல்லி நிரஞ்சனை சமாதானப்படுத்தலாம் எண்ணம் வந்தாலும்
நிராளினி "அப்பா சொன்னா அண்ணா கேட்பார் ம்மா.. ஆனா முழு மனசா எங்கள ஏத்துக்க மாட்டார்.. காலத்துக்கும் என்ன ஒதுக்கி வச்சிடுவாரு.. பாக்கலாம் இந்த மாசம் வரக்குல்ல எப்டியாவது கதைச்சு சமாதானம் பண்ணிடுறேன்..." என்று சொல்லிவிட்டாள்.
அதனால் அவரும் பொறுமையாக இருக்கின்றார். அவர்கள் எண்ணத்தின் நாயகனோ தங்கையின் மகனுக்கு கருணை காட்டாத கம்சனாக இருந்தால் என்ன செய்வார்களோ.