அத்தியாயம்: 22
"வாப்பா..." என்று சுரத்தையே இல்லாது வரவேற்றார் ஆண்டாள்.
"கரிகாலன பாக்க வந்தேன் அத்தை."
"மாடில இருக்கான்ப்பா. போய் பாரு." என்றவர் முகத்தில் சங்கட்டம் தெரிந்தது.
"எதையும் நினைக்காதீங்க அத்தை. என்னைக்கா இருந்தாலும் இந்த வீட்டு மருமகனா இங்க தான் வரப்போறேன். அப்ப இப்படியெல்லாம் சோகம முகத்த வச்சிட்டு வரவேற்க கூடாது. ஹாங்... சந்தோஷமா சிரிச்சிட்டே 'வாப்பா...'ன்னு கூப்பிடணும்." என்று கன்னம் கிள்ளி விட்டுச்சென்றான் மாடிக்கு. செல்லும் முன் வானதியின் அறையான படிக் கூண்டை எட்டிப்பார்க்கத் தவறவில்லை.
ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வராது அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள். கால் செய்தாலும் எடுப்பதில்லை.
அவளிடம் யார் பேச முயன்றாலும், "ப்ளீஸ்... யாரும் கதைச்சு என்ட மனநிலைய கெடுக்காதீங்க." என்று கண்ணீருடன் சொல்ல, நெருங்க முடியவில்லை. ஆனால் நெருங்க கூடிய ஒரே ஆளாக கரிகாலன் இருப்பான் என்றார் வெண்மதி.
வானதி, வர்மாவின் காதலையே ஏற்காத போது கல்யாணம் என்றால் எப்படிச் சரி என்பாள். ஆதலால் அவளின் நிராகரிப்பை வெண்மதியும் வர்மாவும் எதிர்பார்த்தே இருந்தனர்.
"உங்களை யாரு அவசர அவசரமா கல்யாணப் பேச்ச எடுக்கச் சொன்னது?" என்று வீட்டிற்கு வந்தது வெண்மதியைக் கடிய, அவரும் அவனுக்கு நிகராக,
"உன்னை யாரு இடுப்புல கையப்போட்டு அந்தப் பிள்ளைக்கு அருவி காட்ட கூட்டீட்டு போச்சொன்னா!. அதுவும் அத்தனை பேர் முன்னாடி." என்க, சில நொடிகள் மௌனம் பீடித்தது அங்கு.
"சரி விடு... எல்லாம் நல்லதுக்கு தான். உன் லவ்வு மேட்டர போட்டுடைச்சாச்சு. என்ன உங்கப்பா தான் கொஞ்சம் கோபமா இருக்காரு. நான் பாத்துக்கிறேன். நீ என்ன பண்றன்னா... உடனே அந்தக் கரிகாலனப் பாக்குற."
"அவன எதுக்கு நான் பாக்கணும்?"
"அவன் தங்கச்சியத்தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற... மரியாதையா நடந்துக்க. அப்பத்தான் மச்சான் உறவு நீடிக்கும். மலை ஏறணும்னாலும் மச்சன் தயவு தேவை. அதை மறந்திடாத. போ... போய்... எதனால உம்மேல வச்ச காதல வாப்பஸ் வாங்குனான்னு கேட்டுட்டு வா. சும்மா வீட்டுலயே உக்காந்திருந்து அந்தாளு பிரசர்ரைக் கூட்டீட்டு. நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்காம இருக்குறது எனக்கு நல்லது. இல்லன்னா உம்மேல காட்ட முடியாத கடுப்பை எல்லாம், எங்கிட்ட வந்துகாட்டி என் உயிரை எடுத்திடுவாரு மனுஷன்." என்று புலம்பியபடி அவர் இருக்க,
"அவனுக்குத் தெரியுங்கிறீங்களா!"
"கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்…”
“எப்படி?”
“எப்படின்னா! வானதி உன்னை வேண்டாம்னு சொல்லும் போது அவனத்தவிர மத்த எல்லாருக்கும் அதிர்ச்சி." என்றதும் சற்று யோசித்த வர்மா புறப்பட்டுவிட்டான்.
அது காலை வேளை என்பதால், கரிகாலன் சயனத்தில் கிடக்க, அவனின் போர்வையை விலக்கி, எழுப்பி விட்டான்.
அலறி அடித்து எழுந்தவன், வர்மாவைப் பார்த்துவிட்டு, "நீயா!!!" என்றுபடி மீண்டும் படுக்க,
"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்." என்று போர்வையை உருகிக்கொண்டான்.
"என்ன பேசப்போற?"
"அது..."
"எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறு." என்றபடி எழுந்து குளியலறைக்குள் சென்றான். திரும்பி வரும்போது,"என்ன வேணும்?" என்ற கேள்வியுடன் வர,
"ரீசன் வேணும்."
"என்ன?"
"என்னோட நதி ஏன் என்னோட காதல ரிஜக்ட் பண்றாங்கிறதுக்கான ரீசன். உனக்குத் தெரியாதுன்னு சொல்லாத... நதி உங்கிட்ட எல்லாத்தையும் சேர் பண்ணிருக்கா. அவ எழுதி குடுக்குற லெட்டர போஸ்ட் பண்ணி எங்கைல சேக்குறது நீ தான்னு தெரிஞ்சிட்டு வந்ததுக்கு அப்றம் தான் கேக்றேன். என்மேல நதிக்கு என்ன கோபம்?"
"கோபமா!! ஹிம்... உம்மேல அவளுக்கு இருக்குறது கோபமே கிடையாது." என்றதும் மெல்லிய புன்னகை வர்மாவின் முகத்தில் படர்ந்தது.
"வெறுப்பு... ஆத்திரம்... பகை... உன்னை வஞ்சம் கட்டி வச்சிருக்கா... எப்ப வேணும்னாலும் பழி வாங்குவா!"
"ஓ!!!" என்றவன், 'என்ன காரணமும் சொல்லிட்டுத் தான் வஞ்சம் வச்சிட்டு திரிங்களேன்டா.' என்பதுபோல் பார்த்தவன் அவரிடம் அதைக் கேட்டும் விட,
"எனக்குத் தெரியாது." என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான் கரிகாலன்.
"ம்ச்..." என்று சுழித்த புருவத்துடன் சுவரைக் குதியவன், அதில் அயர்வாய்ச் சாய்ந்துகொள்ள, அவனைத் திரும்பிப்பார்த்த கரிகாலனுக்கு வர்மா புதியவனாகத் தெரிந்தான்.
அவன் அறிந்த வர்மாவிற்கு கெஞ்சுவதெல்லாம் ஆகாது. 'நான் ஏன் அவனிடம் போய் பேசவேண்டும்?' என்ற செருக்கு இருக்கும். 'இவனிடமெல்லாம் பேச என்ன உள்ளது?' என்பதுபோல் பார்ப்பான். கரிகாலனே சென்று பேசினாலும் திமிராய்க் கடந்துசெல்வான். இப்பொழுது அவனின் இயல்பை மீறி வானதிக்காக வந்ததே அவனின் காதலின் உறுதியைச் சொல்ல,
"நிஜம்மா நீ எங்க வானுவ லவ் பண்றியா?" என்றான். அவனை ஏறெடுத்துப் பார்த்தவன்,
"வெறும் லவ்ன்னு சொல்லிட முடியாது. நதி என்னோட ஜீவன். நான் வாழப் போற ஒட்டு மொத்த வாழ்க்கைக்கான ஏக்கம். மறந்து போயிருந்த என்னை எனக்கே மீட்டுத் திருப்பி கொடுத்த தேவதை. இந்த உலகத்துக்கு முன்னாடி மதிப்பு மிக்க ஒருத்தனா நிக்கிறேன்னா அதுக்கு காரணம் அவதான். 'மொழி ப்ளீஸ்... எழும்பு..'ன்னு அழுத அவளோட குரலும், எனக்கு அனுப்பி வைக்கிற மோட்டிவேஷன் வேர்ஸ்ஸும் தான் வாழணுங்கிற ஆசையத் தந்தது.
எனக்கு அந்த லெட்டர் எழுதினது அவதான்னு தெரிஞ்சதால காதல் வரல. காதல் வந்தது, என்னோட கண்ணப்பாத்து நான் உன்னை hate செய்றேன்னு சொன்ன அந்த நொடி. அதுக்குள்ளயே சிக்கிக்கிட்டேன். எத்தனை தூரம் உன்னைக் காதல் செய்சேனோ அத்தனை தூரம் உன்னை வெறுக்கிறேன்னு சொன்னத என்னால ஈசியா கடந்து வர முடியல. அதுவரை அவமேல எனக்கு எந்த ஒரு உணர்வும் வரல. வந்த பின்னாடி அவள இழந்திடக் கூடாதுன்னு துடிக்கிறேன்." என்றவன்,
கரிகாலனைப் பார்த்து, "காலா ப்ளீஸ்... நதி எம்மேல வச்ச காதல எதுனால தொலைச்சான்னு மட்டும் சொல்லு. I'll fix it every thing." என்று இறைஞ்ச, கரிகாலன் தடுமாறித்தான் போனான்.
ஃபோனில் வானதிக்கு, 'மாடிக்கு வா.' என்று குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு, வர்மாவுடன் சேர்ந்து சுவரில் சாய்ந்துநின்றான்.
"நிஜம்மா எனக்கு தெரியாது." என்க, உச்சுக் கொட்டினான் வர்மா.
"உனக்கு ஆக்சிடென்ட் ஆனதே... அப்பத்தான் உன்னை வானு லவ் பண்ணிருக்கான்னே எனக்குத் தெரிஞ்சது. அழுத்தக்காரி. எதையும் வாய்விட்டு சொல்லல. நானா புரிஞ்சிக்கிட்டது தான் அதுவும். உன்னைய பாக்கணும்னு மிட் நைட்ல அடம்பிடிச்சா. வாட்ச்மேன்ல இருந்து ஐசியூ நர்ஸ் வரைக்கும் எல்லார்ட்டையும் கெஞ்சி கூத்தாடி உன்னை பாக்க அனுமதி வாங்கினா.” என்றபோது வர்மாவின் உதடுகளில் அத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து புன்னகை அழகாய் விரிந்தது.
இருவருக்குள்ளும் இலகுவான பேச்சுக்கள் தொடர, அது பொறுக்குமா வானதிக்கு!
குறுஞ்செய்தி வந்ததும் வெளியே வந்தவள், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வர்மாவின் பைக்கைக் கண்டுவிட்டு வேகமாக ஏறி வந்தாள். வந்தவள் வர்மாவின் சிரித்த முகத்தைக் கண்டுவிட்டாள்.
‘இவனால்தான் தான் வீட்டிற்குள்ளேயே சிறையிருக்கிறோம். அனைவரின் குற்றம் சாட்டும் பார்வைக்கும் ஆளாகிறோம்.' என்றவகையில் சிந்தனைகள் ஓட,
"இவனுக்காகத் தான் வரச்சொன்னிங்களா!" என்று கரிகாலனிடம் கத்தினாள்.
"வானு கொஞ்சம் பொறுமையா இரு. உங்கிட்ட பேசணும் சொல்றான். சில விசயங்கள க்ளாரிஃபைவ் பண்ணிக்க ஓப்பனா பேசுங்க."
"கதைக்கணுமா! என்ன கதைக்க வேணும். இவனுட்ட நான் ஆல்ரெடி எல்லாத்தையும் தெளிவா கதைச்சிட்டன். நமக்குள்ள காதல், கலியாணம் என்பதெல்லாம் நினைச்சுப் பாக்க கூடாத ஒண்டெண்டு. என்ர வார்த்தையை மதிக்காம... எல்லாப் பேரையும் கூட்டிக்கொண்டு... வீடுவந்து... என்னை... என்னை... அவமானமாய் நிக்க வச்சிட்டான். இப்ப இவனை வேணாம் எண்ட நான் குற்றவாளியாத் தெரியுறன்." என்று ஆவேசமாகப் பேசியவள், பெயருக்குக்கூட வர்மாவின் பக்கம் திரும்பவில்லை.
"இவன்ல எந்த ஃபீலிங்கும் இல்லாம இன்னும் என்ன கதைக்கச் சொல்றீங்க?." என்க,
அவளைத் தன்பக்கம் திரும்பியவன். "நதி, எதுவுமில்லன்னு பொய் சொல்லாத... நீ இன்னும் என்னை லவ் பண்ற நதி. அதை முதல்ல அக்சப்ட் பண்ணிக்க. நான் பாத்திருக்கேன் உன்னோட கண்ணுல. எங்கூட பைக்ல வந்தப்ப, கடைக்குக் கையப்பிடிச்சி போறப்ப, இந்த செயின நீ மாட்டி விட்டப்ப, அந்த அருவிக்கரைல என் மடி படுத்தப்பன்னு எல்லா இடத்துலயும் என்னால உங்காதல உணர முடிஞ்சது நதி. எதுவும் இல்லாமல என்னை நீ உன் பக்கத்துல கூட நெருங்க விட்டிருக்கமாட்ட. " என்றவனுக்குள்,
'காதல் இல்லை என்றால் ஏன் என்னுடன் ஊர் சுற்றினாய்? ஏன் நான் தந்த முத்தத்தில் திளைத்தாய்? ஏன் என் காதலுக்கு உன் பார்வையால் உரமிட்டாய்?' என்ற கேள்விகள் ஏழ, கேட்காது விழுங்கினான்.
“எல்லாம் என்ர ஆசையால செஞ்சன்... உன்னட பைக்ல போக, கைய பிடிக்க தோள்ள சாஞ்சி கொண்டு கிடக்க எனக்கு ஆசை. அது நிராசை ஆக விடாம பாத்தன். மற்றபடி அதெல்லாம் காதல் எண்டு அர்த்தம் இல்ல." என்று உறுதியாகக் கூற, சோர்ந்துதான் போனான்.
"உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு இறங்கி வர நான் தயாரா இருக்கேன் நதி. இன்னும் வேற என்ன எதிர்பாக்குறன்னு எனக்குப் புரியல. ப்ளீஸ் எதுவா இருந்தாலும் எங்கிட்ட ஓப்பனா பேசு. எது நம்ம காதலுக்கு தடையா இருக்குன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்று அழுத்தமாகக் கூறியவனின் முகம் பார்த்து,
"நீ கதைக்குற இந்தக் காதலை நான் ஒத்துக் கொண்டா இது எனக்கு மட்டும் தான் முதல் காதலா இருக்கும். உனக்கு அப்படியா?." என்க, இமை மூடித்திறந்தவன்,
"எஸ்... இல்லை தான். எனக்கு இது செக்கேன்ட் சான்ஸ் தான். என்னை இத்தனை வர்ஷமா லவ் பண்ண உனக்கு என்னோட பாஸ்ட் தெரிஞ்சிருக்கும். நான் அதை விட்டுடுட்டு தூரமா வந்திட்டேன்னும் தெரிஞ்சிருக்கும்." என்றவனின் செக்கேன்ட் சான்ஸ் என்ற வார்த்தையிலேயே வானதியின் காதுகள் இரண்டும் அடைத்துக் கொண்டது. மேற்கொண்டு அவன் கூறிய எதையும் கேட்கவிடாது,
'நான் யூஸ் பண்ணி வேண்டாம்னு தூக்கிப் போடுற செக்கேன்ட் ஹன்ட் ப்ராடெக்ட் தான் உனக்குன்னு அமையும் போல.' என நக்கலான ஒரு குரல் கேட்க, விறுவிறுவென கோபம் ஏறியது அவளுக்கு.
"ஓம்... நல்லா தெரியும். உங்கட காதல் பத்தியும் தெரியும். உங்களின்ட காதலி பத்தியும் தெரியும். எத்தனை தூரம் நீங்க ஜோடி போட்டுக் கொண்டு சுற்றி வந்திங்க எண்டும் தெரியும். கலியாணம் எண்ட ஒண்டில் நீங்க அறியப் போற முதல் பெண்ணா நான் இருக்க மாட்டன் எண்டும் தெரியும்." என்றதில் வர்மாவின் முகம் மொத்தமாக விழுந்துவிட்டது.
'தெரியுமா!!' என்ற அதிர்ச்சி விலகாது நின்றவனுக்கு, 'ஏன் உயிரோடு இருக்கிறோம்?' என்று கழிவிரக்கம் கொண்டு புத்தி பேதலித்து சுற்றக் காரணமாக இருந்த நிகழ்வுகள் நினைவிற்கு வந்தது. முகம் இருளாகிப் போக, நிலைகுழைந்து நின்றான் வர்மா.
"வானு..." என்று பேசிக்கொண்டே போனவளின் கரம்பற்றி அழுத்தினான் கரிகாலன். அவனுக்கு வர்மாவின் மாற்றம் உறுத்தியிருக்கவேண்டும். ஆணாய் ஆணின் மனம் புரிந்தது. ஆனால் அவனுக்காக பரிதாபப்படும் முன்,
"நான் பாத்தன் காலாண்ணா... நான் பாத்தன்..." என்றவள் ஒரு விடுதியின் பெயரைச் சொல்லி, "ஆரோ கதைச்சிருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன். பட்… பட் நானே என்ர கண்ணால கண்ட பிறகு… எப்டி எல்லாத்தையும் மறந்துட்டு… இவனோட காதல ஏத்துட்டு வாழ ஏலும்." என்று சொல்லி அழ, அவள் என்ன பார்த்திருப்பாள் என்பது கரிகாலனுக்குப் புரிந்ததோ இல்லயோ, வர்மாவிற்கு விளங்கியது.
இத்தனை நாள் அவள் தடையாய்ச் சுட்டிக் காட்டிச்சொன்ன தகுதி, அவனின் செல்வநிலைக்கானது அல்ல. உடல் தகுதி. 'அந்தத் தகுதியை நீ இழந்து விட்டாய்.' என்பதைத்தான் மறைமுகமாகக் கூறியிருக்கிறாள் என்ற உண்மை சுட, ஜீவனற்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அருள்மொழிவர்மன்.
கைபிடியை அழுந்தப்பற்றி, படிக்கட்டில் தள்ளாட்டத்துடன் இறங்கிய வர்மாவிற்கு ஆதரவாக தோள் கொடுக்க நினைத்த நேரம், மூச்சு விட சிரமப்பட்டு, மண்டியிட்டு கதறிக் கொண்டிருக்கும் தங்கை முக்கியமாகப் பட, அவளுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துவந்தான் வீட்டிற்குள்.
'housemaid!' என்று வர்மா சொன்னதிலேயே தன்னைப் பற்றிய அவனின் எண்ணம் புரிந்துபோக, அதன் பின்வந்த நாட்களில் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை வானதி. ரோசம் தடுத்தது. தன்மானமும், சுய கௌரவமும் முக்கியமாக அந்த வயதிலேயே பட்டது வானதிக்கு. ஆனால் அதையெல்லாம் முந்திக் கொண்டுவந்து சேர்ந்தது அருள்மொழிவர்மனின் மீதிருந்த ஈர்ப்பு.
விடலைப் பருவத்தில் ஆண்மையில் மிடுக்குடன், அழகனாக சுற்றி வந்தவனை நித்தமும் பார்த்து பார்த்து காதலா உருமாற்றிக் கொண்டவள். அந்தக் காதலுக்கு, எதிர்காலம் இருக்குமா என்றெல்லாம் யோசியாது, எதிர்பார்ப்பற்ற காதலை அவனிடம் வைத்தாள்.
அவள் கல்லூரி சேர்ந்த சமயம். சகாயத்தின் குடும்பம், ஆண்டாளின் அண்ணனான நாராயணனின் வீட்டில் ஒண்டியிருந்த கடுங்காலம் அது.
ஏற்கனவே பணம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்குள் இருந்த குடும்பத்திடம், நான் இங்குதான் படிப்பேன் என்று பிடிவாதமாய், லட்சங்கள் பல செலவு செய்து, அவள் சேர்ந்த கல்லூரியில் தான் வர்மாவும் முதுகலைக் கடைசி ஆண்டில் இருந்தான்.
அப்பொழுது கரிகாலனுடன் வானதிக்கு இணக்கம் கிடையாது. வீம்பு மட்டுமே இருந்தது.
அதிகம் பணம் செலவாகாத கல்லூரிகளைக் காட்டிய கரிகாலனுடன் சண்டை போட்டுத்தான் கல்லூரிக்குச் சென்றாள், வர்மாவைக் காணவேண்டி. அநேக கடன்… உடல் உபாதைகள் எனச் சகாயமும் ஆண்டாளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, கரிகாலன் பணம் சம்பாதிக்க ஓடிக் கொண்டிருந்தான். ஆனால் வானதி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது தினமும் வர்மாவைத் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து சந்தோஷமாக இருந்தாள்.
என்ன ஒரு சுணக்கமென்றால் அவனைத் தனியாக எங்கும் பார்க்கமுடியாது. உடன் சுஜித்ரா இருந்துகொண்டே இருப்பாள், தோளில் தொங்கிக்கொண்டு. இருவரையும் நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் சொல்லவில்லை. காதலர்கள் என்று தான் அடையாளப்படுத்தினர்.
ஆனால் வானதிக்கு அப்படி நினைக்கத் தோன்றவில்லை. சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். ஆதலால் பிணைப்போடு இருக்கின்றனர் என்று தான் நினைத்தாள்.
ஆனால், கல்லூரி கலையரங்கம் அலங்கரிக்கப்பட்டு, திரைப்படங்களிலும் நாடகங்களிலும் வருவது போல் சுஜித்ராவின் முன் மண்டியிட்டு, வர்மா பூங்கொத்தை நீட்டி காதலைச் சொல்லி, இருவரும் கட்டிக் கொண்டு முத்தமிடும் வரை வர்மாவின் காதலியாக இருக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது வானதிக்கு.
உடைந்து போனாள் வானதி. வழமைபோல் தன்னைத் தானே தேற்றுக் கொள்ள முயன்றாள்.
முதல் ஏமாற்றம் தந்த வலி ஆறும் முன் அடுத்தது பெங்களூரில் கிடைத்தது.
மூன்றுநாள்கள் என்ற திட்டமிடலுடன் தொடங்கிய இன்பச் சுற்றுல்லாவில் முதல் நாளே பார்த்துவிட்டாள் இருவரையும். ஹோட்டல் வளாகத்தில் இருந்த பப்பில் இருவரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதீத போதையில் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு, முத்தமிட்டக் கொண்டே தள்ளாடிவாரே அவள் ஏறியிருந்த மின்தூக்கியை அடைந்தனர். அறைக்குச் செல்லும் வரை கூட காத்திருக்க முடியாத பொறுமையில், இருவரின் கரங்களும் அத்துமீறி இருந்தன.
அதையெல்லாம் பார்த்து, ஒதுங்கிச் செல்ல கால்கள் எதானித்தாலும், அவனின் மீது காதல் கொண்டிருந்த மனம் அழுதபடி அவனைப் பின்தொடர்ந்து சென்றது. சரிவர மூடப்படாத கதவு இருவரின் லீலைகளைப் படம் போட்டுக் காட்ட, அதைப் பார்த்து மேலும் மேலும் காயமாக்கிக் கொண்டாள் தன்னை.
கண்ணின் பட்டை வீங்க, இரவு முழுவதும் அழுது முடித்திருந்தாள். 'போதை தான் காரணம். இல்லையேல் என் மொழி அப்படி நடந்து கொள்ளமாட்டான்.' என்று அப்போதும் வர்மாவிற்கு ஆதரவாக துடித்தது உள்ளம். ஆனால் மறுநாள் சென்ற புங்காவிலும் இருவரும் நிதானமான நடையுடன், ஒருவருடன் ஒருவர் பிணைந்து கொண்டு வந்ததைக் கண்டு, மயங்கிச் சரிய, வானதியின் வீட்டிற்கு தகவல் சொல்லப்பட்டது.
கரிகாலன் தான் அவளை வந்து அழைத்துச்சென்றான். திக் பிரம்மை பிடித்ததுபோல் இருந்தவளை, சுயத்திற்கு கொண்டு வந்தது கரிகாலன்தான்.
"வானும்மா…. வானு…” என்று அவளின் கன்னம் தட்டித் தட்டியே அவனை அவதானிக்க வைத்தான்.
“என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியல வானு. ஆனா நீ காயம் பட்டிருக்க. உன்னை இப்படி ஒரு நிலைல உன்னோட அப்பா பாத்தா வருத்தபட மாட்டாங்களா! உன்னோட அம்மா அப்பா ரெண்டு பேரும் நீங்க சந்தோஷமா இருக்குறதத் தான் விரும்புவாங்க." என்று என்னென்னமோ பேசினான். அவள் பிரம்மை நீங்கவில்லை என்றதும், அவளைக் கல்லடிக்குத் திரும்ப அனுப்பும் முயற்சியிலும் இறங்கினான்.
அவள் சந்தோஷமாக இருக்கும் இடத்திற்கே அவளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பணம் ஏற்பாடு செய்ய அழைய, முதல் முறை கரிகாலனின் தாய்மையில் சிலிர்த்துபோனாள்.
“உன்னோட படிப்பு முடியவும் இலங்கைல எங்கயாது வேலை ஏற்பாடு பண்ணித் தாரேன் வானு. நான் அப்பா அம்மாவ சமாளிச்சுப்பேன். ஆனா பார்த்திபன உங்கூட அனுப்ப மாட்டேன்.” என்றான்.
“நான் பாரமா போய்டேனா? துரத்தி விட பாக்குறிங்களா?” என்று சண்டைக்குச் சென்றதெல்லாம் வேறு கதை.
மெல்ல மெல்ல அவனின் இயல்பைப் புரிந்துகொண்டு, தோழமையோட பழகத்தொடங்கினாள். அவன் படும் கஷ்டங்கள் தெரிய, அவனுக்கு தோள் கொடுத்தாள். ஆனால் வர்மாவை மறக்கத்தான் முடியவில்லை.
சுஜித்ரா-மணிமாறன் திருமண என்பதில், வர்மா தப்பித்தான் என்ற நிம்மதியையும், எப்படி அதைத் தாங்குவான் என்ற கவலையையும் வந்தது.
அது நடந்த சில நாள்களில், அவனுக்கு விபத்து என்றதும் துடித்துப் போனவள், கரிகாலனின் முன் கண்ணீரோடு நின்றாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். சிகிச்சை முடிந்து மறுவாழ்வு மையத்தில் அவன் இருக்க, அங்கும் வானதியை கூட்டுக்கொண்டு வந்தான்.
அங்கிருக்கும் கல் மேடையில் கடலை வெறித்தபடி அமர்ந்திருப்பவனைக் கண்டு இருவருக்குமே வலித்தது. அவனைப் பழைய நிலைக்கு கொண்டுவந்தது இருவருமே தான்.
ஆனால் பாவம்!! திருத்தவே முடியாத தவறைச் செய்து விட்ட குற்ற உணர்ச்சியில் இருந்து அவனை மீட்டு வந்தாள்! அதே இடத்திற்கு அவனை, அவளே அனுப்பி வைத்துவிட்டாள்.

Last edited: