• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நயவனின் நயவள் இவளோ - 11

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 11


உடல் அசதியோட, மனச்சோர்வும் சேர, படகும் ஏரியின் மெல்லிய அலைக்கு ஏற்றது போல் மெல்ல அசைய. அது தாலாட்டுவது போல் இருக்க, உடனே தூங்கி விட்டாள் அனன்யா.


கடைசியாக அஸ்வினின் வார்த்தைகளே மனதில் ஓடிக் கொண்டிருந்ததின் விளைவாக,


‘ பாப்பா…” என்றார் கவியரசி.


“அம்மா…”


“ஏன் டா பிறந்த நாள் அதுவுமா அழற?” என்றார்.


“நீ என் கூட இல்லையே மா.”


“நான் தான் எப்பவும் உன் கூட இருக்கேனேடா. வா அம்மா மடியில் கொஞ்சநேரம் படுத்துக்கோ.” என்றார்.


அவர் சொல்லியது போல் செய்தாள் அனன்யா. அவரின் கை இவளின் தலை முடியை கோதியது.’


கொஞ்சம் தூக்கம் கலைந்து கனவு நினைவிற்கு வந்தது அனன்யாவிற்கு. ஆனால், அவளால் அன்னையின் ஸ்பரிசத்தை இப்போதுக் கூட உணர முடிந்தது.


இந்த உணர்வை ரசித்தவள் கொஞ்ச நேரம் கழித்து, “சாரி மா.” என்றாள்.


அதன்பின் அவள் நன்றாக கண்ணை திறந்து பார்க்க. அவள் தலையணையில் தான் படுத்திருந்தாள். தூக்கம் கலைந்துவிட, மூச்சு முட்டுவது போல் உணர்ந்தாள். அருகில் இருந்தவர்களை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வெளியே வந்தாள்.


பால்கனி போன்ற அமைப்பை நோக்கி இவள் போக, அங்கு இருவர் நிற்பது இவளுக்கு தெரிந்தது. நடையை இவள் நிறுத்தினாள்.


“அஸ்வின்… நா என்ன படிச்சிட்டிருக்கிறேன்? எங்க அப்பாவோட பிசினஸ், வெல்த் பத்தியும், என்ன பத்தின மத்த டீடைல்ஸ் எல்லாத்தையும் உங்களுக்கு வாட்ஸ் அப் பண்ணியிருக்கேன். எனக்கென்னவோ நம்ம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது. ஆனா நீங்க ஏன் என்னோட காதலை நிராகரிக்கிறீங்கன்னு தெரியல?” என்றாள் சுவாதி.


“நான் வந்த அன்னைக்கே உங்க கிட்ட சொல்லிட்டேன். நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன்னு.” என்றான் அஸ்வின்.


“ஆமா… ஆனா என்னால என் மனசை தடுக்க முடியலையே. ட்ரிப் வந்ததிலிருந்து உங்கள பார்த்துட்டிருக்கேன், நீங்க எல்லா விஷயத்திலும் சரியா நடந்துக்கிறீங்க.”


“ இப்டி ட்ரிப் வந்த இடத்திலெல்லாம் உங்க பார்ட்னர தேடாதீங்க. உங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியும். இது மாதிரியான ஸ்ட்ரேஞ்சர் ட்ரிப்புல உங்க மனச இப்படி அலை பாய விடாதீங்க. உங்கவயசுக்கு இது நல்லதில்ல. நீங்க தான் உங்க மனசை கண்ட்ரோல் பண்ணனும். நானும் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவ இன்னும் எனக்கு ஓகே சொல்லல. அதுக்காக அவங்கிட்ட போய் நான் கெஞ்சவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டேன். காதல் உள் மனதில் இருந்து இயல்பா வரணும்.‌ கட்டாயப்படுத்தியோ, கெஞ்சியோ வந்தா அது காதலே இல்லை, அப்படியே வந்தாலும் அது ரொம்ப நாள் நிலைக்காது.” என்றான்.


“அந்த பெண் உங்க காதலை நிராகரித்தால். நீங்க என்னை கல்யாணம் செய்துக்கிறீங்களா?”


“ ப்ச்… உங்களுக்கு நான் சொல்றது கொஞ்சமாவது புரியுதா?இல்லையா? இது ஒன்னும் பிஸ்னஸ் இல்ல. அவ வேண்டாம்னு சொன்னா உங்களுக்கு நா ஓகே சொல்ல. அவ எப்பவோ என் மனசுக்குள்ள வந்துட்டா, அவ நோ சொன்னாக் கூட, நான் அவளுக்காக வைட் பண்ணுவேன். அவள் இல்லைனா அடுத்த ஆப்ஷன்னுலாம் என்னால் போக முடியாது. என்றைக்காவது ஒருநாள் அவளுக்கு என்னடைய காதல் புரியும். நாங்க கல்யாணம் பணணிப்போம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. தயவு செஞ்சு இந்த உளறலை நிறுத்திட்டு, ஊருக்கு போய், நல்லாபடி. வேலைக்கு போ. உன்சேலரில பினான்ஷியல் இன்டிபென்ட்டாக வாழ கத்துக்கோ. அப்புறமா அம்மா அப்பாகிட்ட சொல்லி வீட்ல பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கோங்க. இல்லையா அப்போ யார் மேல் காதல் வருதோ அவங்களை கல்யாணம் செய்துக்கோங்க.”


அவள் பதில் சொல்லாமல் நின்றாள்.


“ எப்படி ஒரு பெண்ணிடம் ஆண் காதலை சொல்லி டார்ச்சர் பண்ணக் கூடாதோ அதே மாதிரி பொண்ணும் ஒரு ஆணை தொந்தரவு செய்ய கூடாது.


நான் உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்த போதே தங்கச்சியா தான் நினைச்சேன். என்னை விட நல்ல பையன் உனக்கு கட்டாயம் கிடைப்பான்.


இப்போ உனக்கு இந்த விஷயம் கஷ்டமா இருந்தாலும். கொஞ்ச நாள் கழிச்சு நீ வேலைக்கு போனதுக்கு அப்புறம் இதை நினைத்து பார்த்தால் உனக்கே சிரிப்பு வரும், அன்று உனக்கு நான் எடுத்த முடிவு சரின்னு தோன்றும்.” என்றான்.


கண்களை துடைத்தவள், “ஓகே. நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் லவ்.” என்றாள்.


“குட் கேர்ள். போய் தூங்கு.”


இருட்டில் அனன்யா நின்றது சுவாதிக்கு தெரியவில்லை, அவள் அறைக்கு சென்றுவிட, அனன்யா பால்கனி நோக்கி சென்றாள்.


'அடுத்தது யாரு' என்பது போல் அஸ்வின் திரும்பி பார்க்க, அங்கு அனன்யா இரும்பு கம்பியை பிடித்துக் கொண்டு, இருட்டில் ஏரியை பார்த்துக் கொண்டு நின்றாள்.


“இன்னும் நீ தூங்கலையா?”


“தூங்கினேன் ஆனா, கனவு வந்து தூக்கம் கலைஞ்சிடுச்சு, அதான் இங்க கொஞ்ச நேரம் நிற்கலாம்னு வந்தேன். வந்ததற்கு தேவை இல்லாததையும் கேட்டேன்.”


“இருந்தாலும் நீ இப்படி லவ் பண்ற பையனை சந்தேகப்பட்டு கண்காணிச்சிட்டே இருக்க கூடாது.” என்றான் அஸ்வின்.


“நான் உன்னை காதலிக்கவும் இல்லை, கண்காணிக்கவும் இல்லை. நீ ஏன் இன்னும் தூங்காம இங்கே இருக்க?” என்றாள்.


“எனக்கு தூக்கம் வரலை, அதான் இங்க இருக்கேன். ஏன் உன்னால நான் இல்லாம தூங்க முடியலையா, அதான் என்னை பார்க்க வந்துட்டியா?”


“நீ இப்ப சுவாதி கிட்ட சொன்னது தான் உனக்கும்.”


“இங்க பாரு அனன்யா, நான் டீன்ஏஜ் பையனும் இல்லை, நீ டீன்ஏஜ் பொண்ணும் இல்லை. நான் உன் அழகில் மயங்கி ஒன்னும் என் காதலை சொல்லலை புரியுதா?”


“சரி விடு இதை பத்தி இப்ப பேச வேண்டாம்.” என்றாள்.


“ அப்ப சரி. நீ போய் தூங்கு.”


“உன்னால தான் என் தூக்கம் போச்சு. இப்போ போய் தூங்குனா, நான் எப்படி தூங்குறது.”


அஸ்வின் அவளை நக்கலாக பார்க்கவும். அனன்யா வேகமாக, “நீ நினைக்கிற மாதிரி இல்ல. நீ தூங்க போகும் முன்னாடி அம்மா ஆத்மா அது இதுன்னு சொல்லவும் அம்மா கனவில் வந்தாங்க. அவங்க மடியில் தூங்குற மாதிரி இருந்தது. கண்ணை திறந்தா, அவங்க இல்லை. தூக்கமும் வரலை.” என்றாள்.


“சரி நான் செய்த தப்பை நானே சரி செய்றேன். வந்து என் மடியில் படுத்துக்கோ.” என்றான்.


அவனின் கண்களை பார்த்தவளின் எண்ணம் அன்று ஒரு நாள் அன்னையிடம் சொன்னதை நினைவுப்படுத்தியது, ‘அம்மா… எனக்கு ராஜா மாதிரி பையன் கிடைப்பதை விட உன்னை மாதிரி என் மேல் அன்பு வைக்கிற பையன் தான் வேணும்.’


அஸ்வின் அவளின் கையை தொட்டு, “என்ன யோசனை அனன்யா?”


“ஒன்னும் இல்லை.” என்றவள் அறை நோக்கி ஓடியே விட்டாள்.


அவளை திரும்பி பார்த்தவன், சத்தமாக சிரித்து, “மடியில் படுக்க தான சொன்னேன். என்னமோ கிஸ் கேட்டது போல், இப்படி ஓடுறா சில்லி கேர்ள்.” என்றான்.


டே-7


வழக்கத்தை விட இன்று தாமதமாக எழுந்த அனன்யா, குளித்து தயாராகி கீழ வரும் போது எல்லோருமே தயாராகி இருந்தனர்.


இவள், “சாரி… நான் தான் லேட் போல.” என்றாள் அனன்யா.


“அது ஒன்னும் பிரச்சினை இல்லை பியூட்டி. இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க. ஒன்ஸ் அகைன் ஹாப்பி பர்த்டே.” என்றான்.


“தேங்க்ஸ் ஹரிஷ்”


“நீ இங்க உட்காரு பியூட்டி. நான் உனக்கு டீ எடுத்துட்டுவரேன்.”


அஸ்வின் இன்னும் அவள் மேல் இருந்து பார்வையை எடுக்கவில்லை. அதுவே அனன்யாவிற்கு ஒரு மாதிரி இம்சையாக இருந்தது.


“அண்ணா… ஏற்கனவே கேரளா முழுக்க வெள்ளமா(தண்ணீர்) இருக்கு. இதுல நீங்க வேற போட் உள்ள வெள்ளத்தை வர வைச்சுடாதீங்க.” என்றான் ஈஸ்வர்.


“டேய்…” என்ற அஸ்வின், ஈஸ்வரின் முதுகில் அடிக்க.


“அண்ணா… மீ பாவம் விட்டுடுங்க. நீங்க சைட் அடிக்கிறது கண்டினியூ பண்ணுங்க. நான் உங்க வழிக்கே வரல.”


“அது தான் நல்ல பையனுக்கு அழகு.”


அதற்கு மேல் அங்கு உட்கார முடியாம‌ல் அனன்யா, கிச்சன் உள்ளே சென்றாள். ஹரிஷ் கையில் இருந்த டீயை வாங்கிக் கொண்டாள்.


அனன்யா டீயோடு டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்து அருந்தினாள். அதன்பின் தான் அனன்யா கொஞ்சம் இயல்பானாள்.


'இவ்வளவு அழகான வேலைபாடு கொண்ட டிசைனர் சுடிதார் இவளுக்கு எப்படி கிடைத்ததோ? இதன் விலை எப்படியும் பல ஆயிரங்கள் இருக்கும். ரொம்ப யுனிக்கா வேறு இருக்கு.’ என்று மனதில் நினைத்த ரோஜா வெளியே,


“இன்னைக்கு அனன்யாக்கு பிறந்த நாள் என்பதால் தான், போட் ஹவுஸ் புக் பண்ணி இருக்காங்க போல இருக்கு, அதுவும் நம்ம செலவுல.” என்றாள் ரோஜா.


“எனக்கும் அப்படி தான் தோணுது ரோஸ்‌.” என்றான் ராஜேஷ்.


ஹரிஷ் ஏதோ பேச வர, அவனின் கையை பிடித்த அனன்யா, “இந்த போட் ஹவுஸ்க்கு ஆன செலவு முழுக்க நான் பே பண்றேன். என்னோட பிறந்த நாளுக்கான ட்ரீட்.” என்றாள்.


அதன்பின் அவர்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. ஹரிஷ் தான் விசில் அடித்து, “செம்ம… சூப்பர் ஸ்லிப்பர் ஷார்ட் ரிப்ளை.” என்றான்.


காலை உணவை எடுத்து வைக்க. எளிமையான, அதே சமயம் மிகவும் ருசியான உணவு இருக்க. சொல்லவும் வேண்டுமா சைவ உணவையும் அவர்கள் விட்டுவிடவில்லை, நன்றாக சாப்பிட்டினர். பின் அவரவர் வேலைகளை செய்தனர்.


அனன்யா, “பிரண்ட்ஸ்… எல்லோரும் ட்ராலி ரெடியா வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் நாம முன்றோ ஐலன்ட் போயிடுவோம்.” என்றாள்.


சுவாதி, ரோஷிணி இருவரும் ஈஸ்வரை ஒரு வழி ஆக்கி விதம் விதமாக போட் முழுக்க நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர்.


அஸ்வின் கண் ஜாடை காட்ட, ஈஸ்வர், “அக்கா… ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன். இங்க வந்து நில்லுங்க.” என்றான்.


“இல்லை ஈஸ்வர், நீங்க எடுங்க.” என்றாள் அனன்யா.


“ப்ளீஸ் அக்கா. உங்க ஞாபகமா எடுத்துக்கிறேன். நா மிஸ் யூஸ் பண்ண மாட்டேன்.” என்றான்.


அதன்பின் பிகு செய்ய விரும்பாமல், அஸ்வினை சந்தேகமாக பார்த்துக் கொண்டே, ஈஸ்வர் சொன்ன இடத்தில் சென்று நின்றாள் அனன்யா.


அவனும் ஒரு ஃபோட்டோ எடுத்தான். “தேங்க்ஸ் அக்கா” என்றவன் சென்றுவிட்டான்.


அவள் அருகில் வந்தான் அஸ்வின், ஏனோ அவளுக்கு படப்படப்பாக இருந்தது காரணம் காலையில் இருந்து அவன் கவனம் முழுக்க அவளின் மேல் தான் இருந்தது.


“அனன்யா…” என்று அஸ்வின் கூப்பிட அவனை அவள் திரும்பி பார்க்க செல்ஃபி எடுத்தான், அஸ்வினும் அவளை பார்ப்பது போல் இன்னொரு செல்பி எடுத்துக் கொண்டான்.


“அஸ்வின்…” என்று இவள் பல்லை கடிக்க.


“அது எப்படி என்ன நடந்தாலும் என்னையே சந்தேகப்படுற? ஆமா நான் தான் ஈஸ்வரை ஃபோட்டோ எடுக்க சொன்னேன் இப்ப என்ன. எனக்கு வேணும்னா இப்படியும் வந்து எடுப்பேன். அதுமட்டுமல்ல இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்னு எனக்கு தெரியும். ஆனா, நேற்று நைட்டு கேக் கட் பண்ணது என்னோட பிளான் இல்ல. நான் எதாவது செஞ்சா உன்கிட்ட வந்து தைரியமா சொல்வேன். உன்கிட்ட எனக்கு எந்த பயமும் இல்லை.”


“நானும் அத தான் சொல்றேன் பியூட்டி. கேக் கட் பண்ணது என்னோட பிளான் தான். ஆனா, இவருக்கும் உன்னோட பிறந்த நாள் தெரிஞ்சிருக்கும் போல. அப்புறம் நீ நேற்று ரொம்ப எமோஷனா இருந்ததால சரியா கவனிக்கல, என்னமோ உங்க அம்மாவ இவருக்கு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரியே, நீ பிறந்தநாள் கொண்டாடலன்னு உங்க அம்மா எப்படி வருத்தப்பட்டு இருப்பாங்க. அப்படி இப்படின்னு இன்னும் நிறைய சொன்னார்” என்றான் ஹரிஷ்.


அஸ்வின் அவனை கண்களாலே எரிப்பது போல் பார்க்க, அனன்யா அஸ்வினை சந்தேகமாக பார்த்தாள்.


“நீயே நல்லா யோசித்து பார். நேற்று நான் பொதுவா அம்மாக்களோட மனநிலையை தான் சொன்னேன்.” என்றான்


மீண்டும் அனன்யா யோசித்தாள், ‘இவனுக்கு என் பிறந்தநாள் தெரியாத வரை. இவன் நேற்று பேசியது எல்லாம் பொதுவானது போல் தான் இருந்தது' என்று நினைத்தவள்.


“உனக்கு தெரிந்த மாதிரி கமெண்ட்ல என் பிறந்தநாளை பார்த்திருப்பார். இனி இதை பற்றி பேச வேண்டாம் ஹரிஷ்” என்றாள் அனன்யா.


“யாருக்குமே உன் பிறந்தநாள் தெரியாதுன்னு நேற்று எப்படி அவ்வளவு கான்ஃபிடன்டா சொன்ன. உன்னோட எக்ஸ்க்கு கூட தெரியாதா?” என்றான் ஹரிஷ்.


“தெரியாது. பன்னிரண்டு வயசுக்கு மேலே பிறந்தநாள் கொண்டாடுறதே இல்லை.புது டிரஸ் வாங்கிப்போட மாட்டேன். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் எங்கேயும் கொண்டாட மாட்டேன் சோ யாருக்குமே தெரியாது


ரதிக்கும் எனக்கும் ஒரே நாள் தான் பிறந்தநாள் என்பதால் அவங்களுக்கு என்னோட பிறந்த நாள் மறக்கவில்லை போல். ” என்றாள்.


“பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனிமே எல்லா வருஷமும் இன்னைக்கு மாதிரியே புது டிரஸ் போடணும்” என்றான் ஹரிஷ்.


“கண்டிப்பா ஹரிஷ்.” என்றாள்.


“இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. நான் கேக் ஆர்டர் பண்ணலைனா, நீ பிறந்தநாள் கொண்டாடி இருக்க மாட்ட. இப்போ தான் உன் மனசு மாறி இருக்கு. ஆனா, அப்புறம் எப்படி புது டிரஸ் போட்ட?” என்றான் ஹரிஷ்.


“இந்த டிரஸ் தான் அம்மா எனக்கு கடைசியா வாங்கி தந்தது. அவங்க ஞாபகமா எடுத்துட்டு வந்தேன். அப்போ போடணும்னு நினைக்கலை. இப்போ அவங்க சந்தோஷத்திற்காக போட்டிருக்கேன்.” என்றாள்


“ஓகே.” என்றான் ஹரிஷ்.


ஓய்வாக உட்கார்ந்து படகின் தாலாட்டை ரசித்துக் கொண்டே, ஏரியை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தனர்.


இரண்டு மணி நேர பயணமும் ஒருவித அமைதியில் செல்ல, முன்றோ ஐலன்ட் வந்தது.


இவர்கள் வந்த படகை விட மிகப் பெரியதாக நின்றிருந்த, ஃபெர்ரி போட் (ferry boat) என்பது கார், பைக், போன்ற வாகனங்களையும் ஏற்றி செல்லும் ஒரு வகையான படகு. அதில் பயணிகளும் ஏறிக் கொள்வர்‌.


இப்போது இவர்களும் அந்த ஃபெர்ரி போட்டில் ஏறிக் கொள்ள. அந்த படகு, இவர்களை முன்றோ ஐலன்ட் உள்ளே அழைத்து சென்று, இவர்கள் தங்கும் ஐலன்ட் ஸ்டே ரெசார்ட் முன்பு நிற்க, இவர்கள் இறங்கிக் கொண்டனர்.


“நாம நாளைக்கு காலைல வரைக்கும் இந்த லேக் வியு ஐலன்ட் ஸ்டே ரெசார்ட்ல தான் தங்கபோறோம். வாங்க உள்ள போகலாம்” என்றாள் அனன்யா.


ஜெய், ராஜேஷிற்கு இரண்டு தனி ரூம் சாவியை கொடுத்து அனுப்பினாள். ஹரிஷ், ஈஸ்வர், சுவாதி, ரோஷிணி, தீபக் ஆகியவருக்கு இரண்டு அறை கொண்ட பெரிய ரூம் தந்தாள்.


இரண்டு தனி அறை வாங்க போன அனன்யாவிடம் ஹரிஷ், “நீயும், அஸ்வினும் போட்ல தங்கின மாதிரி எங்களோடு தங்களாமே.” என்றான்.


“இல்லை ஹரிஷ். அது சரியா வராது, போட்ல ரூம் இல்லை அதான் அந்த ஏற்பாடு செய்தேன். இங்க அந்த பிரச்சனை இல்லை. அதுவும் இல்லாமல் சிலருக்கு லக்சுயூரியஸான தனி ரூமில் தனியா தூங்கி தான் பழக்கமா இருக்கும்.” என்றாள்.


“நீ என் கூட இருப்பனா சொல்லு டென்ட்ல கூட தூங்க நான் ரெடி” என்றான் அஸ்வின்.


“இந்தாங்க உங்க ரூம் கீ.” என்று தந்தவள், அவளின் அறை நோக்கி சென்றாள்.


ரூம் உள்ளே வந்தவள் ஃபோனில், ‘மதியம் சாப்பிட கேஃப்டெரியா வந்துடுங்க. ஈவினிங் போட் ரைட். போவோம்’ என்று மெசேஜ் அனுப்பினாள்.


ஒரு மணி நேரம் அப்படியே தூங்கிவிட்டாள் அனன்யா. அவளின் அறை கதவை யாரோ தட்டுவது போல் இருக்க. தூக்கம் கலக்கத்தோடு எழுந்து வந்து கதவை திறந்தாள். அங்கு நின்ற அஸ்வினை பார்த்தவளுக்கு தூக்கம் வெகு தூரம் சென்றது.


“என்ன அஸ்வின்?” என்றாள் கடுப்பாக.


“என்னோடு வா.”


“ஒரு இடத்துக்கு என்னோடு வா.” என்றான்.


“முடியாது நீங்க தனியா போ.” என்றாள்.


“இப்போ நீ வெளியே வரலைனா. நான் உன்னோட ரூமுக்குள்ள வருவேன்.”


“சரி வாங்க போகலாம்” என்றாள்.


“இப்படியேவா, போய் உன் டிரஸ்ஸ, கொஞ்சம் முடியை சரி செய்துட்டு வா.” என்றான்.


வேகமாக உள்ளே வந்து கதவை சாற்றியவள். 'ச்சை… இவன் முன்னாடி இப்படி போய் நின்னிருக்கேனே. தூக்க கலக்கம்னாலும் இப்படியா?’ என்று நினைத்தவள், ஃவாஷ் ரூம் போய்விட்டு, தலையை சரி செய்து, உடையை சரி செய்து துப்பட்டாவை போட்டுக் கொண்டு, ஃபோன், சாவியை எடுத்துக் கொண்டவள் வெளியே வந்து கதவை சாற்றினாள்‌.


அஸ்வின் அருகே சென்றவள், “எங்க போறோம்?” என்று கேட்டாள்.


“போனா தெரியும், இப்போ வா.” என்றவன் அவளை ஒரு படகில் ஏற சொன்னான்.


பத்து நிமிடம் சென்ற பின் போட் ஒரு இடத்தில் நிற்க, “வா போகலாம்.” என்றவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டான். கொஞ்ச தூரம்

நடந்து சென்றவர்கள் முன் கோவில் இருந்தது.


'கோவிலுக்கு தான் இவ்வளவு பில்ட்அப்பா.’ என்று நினைத்தாள்.


“அதுதான் பிறந்தநாள் கொண்டாடலாம்னு முடிவு செய்த பின், கோவிலுக்கு போகலன்னா எப்படி‌.” என்றான்.


“நான் வருஷா வருசம் கோவிலுக்கு போவேன்.”


“சரி அப்போ இந்த வருஷமும் போகணும்ல. வா போகலாம்.” என்றான்.


சிறிய கோவில் தான். சாமி கும்பிட்டு வெளியே வரும் போது மனது நிறைவாக இருந்தது.


“சரி கையை விடு.” என்றாள்.


“ரெசார்ட் போற வரைக்கும் கையை விட மாட்டேன். அங்க போனதும் விட்டுடுறேன்.” என்றான் அஸ்வின்.


அவளை மீண்டும் படகில் ஏற்றி, ரெசார்ட் கொண்டு வந்துவிட்டான். அவள் அறை வந்த பின்பே கையை விட்டான்.


“சாரி அஸ்வின், நேற்று கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். அதான் சட்டைய கோபத்தில் பிடிச்சிட்டேன்.”


“நமக்கு பிடிச்சவங்க கிட்டதான கோபத்தை காட்ட முடியும். அது பிரச்சினை இல்லை. இப்போ நீ சாரி கேட்டது தான், என்னை யாரோ போல ஃபீல் பண்ண வைக்குது.” என்றான் அஸ்வின்.


அவனை கோபமாக பார்த்துக் கொண்டே கதவை வேகமாக மூடினாள். அஸ்வின் விசில் அடித்துக் கொண்டே அவன் அறைக்கு சென்றான்.
 
Top Bottom