• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நயவனின் நயவள் இவளோ - 14

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 14

டே - 10

எல்லோரும் மகிழ்ச்சியோடு ட்ரிப் கடைசி நாளை ரசிக்க காலையிலே தயாராகி இருந்தனர்.

இவர்களின் பேக் மற்றும் டிராலிகளை வேனில் ஏற்றி விட்டு, வேனில் ஏறி உட்கார்ந்தனர்.

“காய்ஸ் பொன்முடி ஹில் ஸ்டேஷன் போக ரெடியா?” என்றுக் கேட்டாள் அனன்யா.

“எஸ்” என்று கத்தினர்.

வழக்கம் போல் கடைசி சீட்டில் ஹரிஷ் படுத்திருக்க, இவள் அஸ்வினோடு உட்கார்ந்துக் கொண்டாள்.

இம்முறை அவள் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. இன்று ஒரு நாள் தான், அதன் பின் அவனை சந்திக்க போவதில்லை என்ற எண்ணமே மேலோங்கியது.

போகும் வழி எல்லாமே அவ்வளவு அழகாக இருந்தது. தூங்காமல் அனன்யா இன்று வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் வந்தாள்.

மலை மேல் ஏறும் போது இருபத்து இரண்டு ஹார்பின் பெண்டு வந்தது. அனன்யாவிற்கு ஹார்பின் பெண்டில் பயணம் செய்வது ரொம்பவும் பிடிக்கும். இந்த பயணத்தை அதிகமாக ரசிப்பாள்.

சிலருக்கு இதுமாதிரி பயணம் ஒத்துக் கொள்ளாது, வாந்தி வரும். அதுபோல் ரோஜா வாந்தி எடுக்க வண்டியை நிறுத்த சொல்ல.

எல்லோருமே கீழே இறக்கி, பனி சூழ்ந்த சாலையை ரசித்து, ஃபோட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டனர்.

“இங்கிருந்தே நடந்து போகலாம் போல இருக்கு” என்றான் ஹரிஷ்.

“இந்த இடத்துக்கு பைக்ல போன சூப்பரா இருக்கும்.
அதுவும் நீ என் பின்னால் உட்கார்ந்து வந்தா செமையா இருக்கும்” என்றான் அஸ்வின் அனன்யாவிடம், அவளோ அவனை முறைத்தாள்.

ரோஜா வந்துவிட, மீண்டும் பயணம் தொடர்ந்தது‌. டிக்கெட் எடுத்துக் கொண்டுனர்.

ஒவ்வொரு வராக கீழே இறங்கினர். சுற்றிலும் மலைகள் இருக்க, பனி புகைப்போல் படர்ந்து, சென்றுக் கொண்டிருந்தது, கீழே மேகங்கள் பரவி இருந்தது.

பக்கத்தில் இருந்த சின்ன மலையின் மேல் வாட்ச் டவர் இருக்க. கொஞ்சம் கஷ்டப்பட்டு சின்ன மலையின் மேல் ஏறி, அங்கிருந்த டவரின் படிகளில் ஏறி மேலே நின்று பார்த்தால், சுற்று உள்ள மலைகளின் அழகையும் ரசிக்கலாம்.

அங்கிருந்து சுற்றி பார்க்க அழகாக இருந்தது. ஃபோட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டனர். நேரம் போவதே தெரியாமல் அங்கே உட்கார்ந்து, படுத்து என்று இயற்கையின் அழகில் மெய் மறந்து இருந்தனர்.

“இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு பியூட்டி.” என்றான் ஹரிஷ்.

“ ஆமா எப்பவுமே ரொம்ப ப்ளசண்டா இருக்கும்.” என்றாள் அனன்யா.

அங்கு பக்கத்தில் இருந்த கடைகளில் டீ, காஃபி, ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிட்டனர்‌.

இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

“காய்ஸ்… வாங்க போகலாம்.”

“பியூட்டி… இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே?”

“ஹரிஷ்… போகும் போது இன்னும் இரண்டு இடம் பார்க்கணும், ஈவினிங் கோவளம் போகணும். இப்போ போன தான் நேரம் சரியா இருக்கும். அடுத்த இடமும் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்.”

“சரி ஓகே.”

கொஞ்ச தூரம் வண்டி கீழே இறங்கியது. இம்முறை ரோஜாவோடு, ரோஷிணி, தீபக்கும் வாந்தி எடுத்தனர்.
வண்டியும் நின்று, நின்று தான் சென்றது.

கொஞ்ச தூரம் சென்ற பின் மீன்முட்டி அருவி (Meenmutty Waterfalls) வந்தது. இந்த இடத்துக்கும் டிக்கெட் வாங்கிட்டு தான் போகணும்.

“பிரண்ட்ஸ்… ஒன்றரை கிலோ மீட்டர் ட்ரக்கிங் செய்து தான் வாட்டர் பால்ஸ் கிட்ட போகணும்.” என்றாள் அனன்யா.

“சூப்பர்… இதை தான் எதிர் பார்த்தேன் பியூட்டி.”

“கொஞ்சம் கவனமா வாங்க. சூ, ஸ்லிப்பர்ஸ் கழட்டாதீங்க, அட்டை பூச்சி இருக்கும். சோ கேர்ஃபுல்லா இருங்க.” என்ற அனன்யா முன்னே சென்றாள். அவள் கைகளை பிடித்துக் கொண்டு நடந்தான் அஸ்வின்.

அவள் அவனை கேள்வியாக திரும்பி பார்த்தான்.

“ஒரு சேஃப்டிக்கு” என்றான்.

அவள் முறைக்க.

அஸ்வின் “என்னோட சேஃப்டிக்கு.” என்றதும் . மேலே அவள் நடக்க ஆரம்பித்தாள்.

சுற்றிலும் மரம், செடி தான். அடர்ந்த காட்டில் தான் நடந்துக் கொண்டிருந்தனர். பெரிய பாறையில் ஏறுவது, பிறகு இறங்குவது என்று போய் கொண்டே இருந்தனர்.

நீர்வீழ்ச்சிக்கு நூறு மீட்டர் இருக்கும் போது, ஆற்றை கடப்பது போல் இருந்தது.

ஒரு பக்க கயிற்றை பிடித்துக் கொண்டு தான் எல்லோரும் சென்றுக் கொண்டிருந்தனர்.

“பிரண்ட்ஸ்… இங்க கொஞ்சம் கவனமா வாங்க.” என்றாள்.

கயிறை பிடித்து ஒரு பக்கமாக அனன்யா நடந்தாள், அதே போல் மற்றவர்களும் செய்தனர். மறுபக்கம் சென்ற பின் கொஞ்ச தூரம் செல்ல அங்கு அருவி தெரிந்தது.

“வாவ்… சூப்பர்.” என்றான் ஈஸ்வர்.

“இவ்வளவு கஷ்டப்பட்டு வந்ததுக்கு இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு.” என்றாள் ரோஜா.

“இப்போ அருவியில் இறங்க அனுமதி இருக்கு போய் விளையாடணும்னா விளையாடுங்க.” என்றாள் அனன்யா.

எல்லோரும் இறங்கி நல்லா ஆட்டம் போட்டனர். அருவியில் கொஞ்ச நேரம் நின்று, பின் தண்ணீரில் ஆட்டம் போட்டு என்று நேரம் சென்றது.

“போதும் வாங்க அடுத்த இடத்துக்கு போகலாம்.” என்று அனைவரையும் இழுத்துக் கொண்டு வந்தாள்.

திரும்பி வரும் போது, ஆற்றை கடக்கும் போது, அனன்யா தடுமாறினாள்.

அஸ்வின் வேகமாக பிடித்துக் கொண்டான், இல்லை என்றால் இவள் பாறையில் தான் விழுந்திருப்பாள்.

“ஒன்னும் இல்லை, கவனமாக போ. நான் உன் கூட தான் இருக்கேன்.” என்றான் அஸ்வின்.

அதன் பின் அவள் கவனமாக மறுபக்கம் சென்றாள். அஸ்வின், ஹரிஷ் எல்லோருக்கும் உதவி செய்து இந்த பக்கம் வரவைத்தனர். மீண்டும் வந்தவழியில் சென்று வேனை அடைந்தனர்.

அடுத்த இடத்திற்கு இன்னும் கொஞ்ச தூரம் வேனில் சென்றனர்.

“கோல்டன் வெல்லி(Golden valley) , இந்த இடதுக்கு கல்லாருன்னு இன்னொரு பேரும் இருக்கு. பெரிய பெரிய கற்களுக்கு வழியா ஆறு போகும். இங்கு இரண்டு பாறைகளுக்கு இடையில் தண்ணீர் தேங்கி இருக்கும். அதில் விளையாடலாம். இது ரொம்ப சுத்தமான மலையின் மேலிருந்து வரும் தண்ணீர்.” என்றாள்‌.

கொஞ்ச தூரம் நடந்தவர்கள், செல்ஃபி, ஃபோட்டோ எடுத்துக் கொண்டு, தண்ணீர் ஆட்டம் போட்டனர். ஒரு மணி நேரம் தந்த அனன்யா. அதன்பின் மீண்டும் அவர்களை வேனில் அழைத்து கொண்டு மலையில் இருந்து கீழே சென்றனர்.

அரைமணி நேரம் சென்றிருக்க. “பியூட்டி… பசிக்குது.”

“இதோ நல்ல ஹோட்டலா நிறுத்த சொல்றேன்.” என்றாள் அனன்யா.

பத்து நிமிடத்தில, “பிரண்ட்ஸ்… ஈவினிங் கோவிலுக்கு போறோம். நான் வெஜ் சாப்பிடறவங்க சாப்பிடுங்க. இல்லனா சைவமா சாப்பிடங்க.அது உங்க நம்பிக்கையை பொறுத்தது.” என்றாள் அனன்யா.

“இங்கு கேரளா ஃபேமஸ் சைவ விருந்து சதியா(sadhya) கிடைக்கும். வேணும்னா அதை சாப்பிட்டுப் பாருங்க.” என்றாள் அனன்யா.

நடந்தது, தண்ணீரில் ஆட்டம் போட்டது, எல்லாம் சேர, எல்லோருமே நல்ல பசியில் தான் இருந்தனர். சைவ உணவாக இருந்தாலும் எல்லோருமே விரும்பி சாப்பிட்டனர். அதன் பின் என்ன இரண்டு மணி நேர பயணம் முழுக்க நன்றாக தூங்கினர்.

மாலை நான்கு மணி போல் கோவளம் வந்து சேர்ந்தனர்.

முதலில் லைட் ஹவுஸ் சென்றனர். இங்கு லிஃப்ட் வசதி இருந்தது. அதன் உதவியோடு மேலே ஏறி, உயரத்தில் இருந்து கடலை ரசித்தனர். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கடல் தெரிந்தது.

அடுத்ததாக ஆழிமலை சிவன் கோயில் சென்றனர். 58 அடி உயரம் கொண்ட சிவன் சிலை இருந்தது. அரேபியன் சீயை பின்புறமாக கொண்டு கட்டப்பட்ட சிவன் சிலை. கடற்கரையில் இருக்கும் இந்த கோவில் மனதுக்கு அமைதியை தந்தது. இங்கே கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். அதன் பின் பக்கத்தில் இருந்த கடற்கரையில் கொஞ்ச நேரம் விளையாடினர்.

அதன் பின் கோவளம் பீச் சென்றனர். அங்கு சர்ஃபிங் போட்டை பார்த்ததும், வேகமாக அங்கே சென்ற ஹரிஷ் ஒரு போட்டை வாடகைக்கு வாங்கினான்.

“டேய்… அதான் வரலையே விடமாட்டியா நீ?” என்றான் தீபக்‌.

கடலில் போட் வைத்து ஏறிய ஹரிஷ், நன்றாக அலையின் மேல் ஏறி, கீழே செல்ல.

அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.

கொஞ்ச நேரம் சர்ஃபிங் செய்து ஹரிஷ், கரைக்கு வர.

“டேய் மச்சான்… எப்போ டா சர்ஃப் பண்ண கத்துகிட்ட?”என்றான் ஈஸ்வர்.

“அதெல்லாம் வர்கலாவிலே செய்ய கத்துக்கிட்டேன். காலையிலே போய் ஒன் ஹவர் சர்ஃப்பிங் செய்ய கற்றுக்கொண்டேன்.” என்றான் ஹரிஷ்.

“சூப்பர் ஹரிஷ்.” என்றாள் அனன்யா. ஹரிஷ் அஸ்வினை நக்கலாக பார்த்தான்.

அவனை கண்டுக் கொள்ளவில்லை அஸ்வின்.

“இங்கு பாராசெய்லிங் (Parasailing) ஃபேமஸ். அதை ட்ரை பண்ணலாமா?” என்றாள் அனன்யா.

“அப்படினா?” என்றாள் சுவாதி.

“ஸ்பீடு போட்ல கொஞ்ச தூரம் கடல் உள்ள போயிட்டு, பாராசூட் மூலம் கடலுக்கு மேல் பறக்குறது.” என்றாள் அனன்யா.

“கண்டிப்பா போகணும், போக வேண்டாம்” என்று இரண்டு பதில்களும் வந்தது.

“யாருக்கு போக விருப்பமோ, அவங்க போங்க, மற்றவர்கள் இங்கேயே இருங்க.” என்றாள் அனன்யா.

ஹரிஷ், ரோஜா, ராஜேஷ், ஈஸ்வர், அனன்யா மட்டுமே பாராசெய்லிங் போக விரும்பினர். ராஜேஷிற்கு போக விருப்பமில்லை, ஆனா ரோஜாவின் கட்டாயாத்திற்காக போக நின்றான்.

இவர்கள் மட்டும் அந்த ஏஜென்சி இடம் பேசிக் கொண்டிருக்க.

“அனன்யா… நான் சும்மா போட் ரைடுக்கு மட்டும் வரேன்‌.” என்றான் அஸ்வின்.

“சரி.” என்றாள்.

அதன் பின் இவர்கள் ஆறு பேர் ஸ்பீட் போட் ஏறினர். முதல் ஆளாக அனன்யா வானில் கடலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தாள், அவளின்
பாராசூட்டை ஸ்பீட் போட்டில் கட்டி இருந்தனர்.

கீழே கடல், மேலே வானம், சுமார் பத்து நிமிடங்கள் வானில் பறவையை போல் பறந்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

பின் அனன்யாவை கீழே இறக்கிவிட்டனர். அடுத்ததாக ஹரிஷ் சென்றான்‌.

அதன் பின் ரோஜா ஏறினாள். அவள் மேலே ஏறியதும், திடீரென்று அவளை சுற்றி போடப்பட்டிருந்த பெல்ட், லூசாகி அவள் தவறி கடலில் விழ.

முதல் ஆளாக கடலில் குதித்தான் அஸ்வின், அவனோடு படகில் வந்த ஏஜென்சி ஆட்கள் இருவரும் கடலில் குதித்தனர்.

“ரோஸ்” என்று ராஜேஷ் கத்திக் கொண்டிருந்தான்.

அனன்யாவின் உடல் பயத்தில் நடுங்கியது. மற்றவர்களும் பதட்டமாக நின்றிருந்தனர்.

பத்து நிமிடங்கள் கழித்து மூவரும் ரோஜாவை கூட்டிக் கொண்டு வந்தனர்.

ரோஜாவை போட்டில் ஏற்றினர். அவள் அரை மயக்கத்தில் இருந்தாள்.

“ரோஸ்… ரோஸ்” என்று ராஜேஷ் அவளை கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஏஜென்சி ஆட்கள் சொன்ன முதல் உதவியை அனன்யாவும், சுவாதியும் செய்துக் கொண்டிருந்தனர்.

“அனன்யா… வேன் டிரைவரை ரெடியா இருக்க சொல்லு.” என்றான் அஸ்வின்.

இவளும் அவருக்கு அழைத்து, விபரத்தை சுருக்கமாக சொல்லி, ரெடியாக நிற்குமாறு சொல்லி இருந்தாள்.

போட் கரையை அடைய, ராஜேஷ் அழுதுக் கொண்டு நிற்க, அஸ்வின் மற்றும் ஹரிஷ் தான் ரோஜாவை தூக்கிக் கொண்டு வேனிற்கு ஓடினர்.

அவர்களுக்கு பின்னால் அனன்யா, ராஜேஷ் ஓடினர்.

வேன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது.

அவளை எமர்ஜென்சி வார்டுக்கு அனுப்பி வைத்தனர் அஸ்வின் மற்றும் ஹரிஷ்.

“நீ தான் ரோஜாவை வேண்டும் என்றே மேல் இருந்து கீழே விழ வைத்திருக்க. உனக்கு எப்படியாவது என்னை கல்யாணம் செய்துக்கணும் அதான் உன் திட்டம்.” என்றான் ராஜேஷ்.

லூசா என்பது போல் அவனை பார்த்த அனன்யா. “ நிறைய நாடகம் பார்ப்பியோ? இங்க வந்த நாள்லள இருந்து, நீ தான் என் கிட்ட தப்பா நடந்துக்கநினைதச்ச, என் பின்னாடியே செய்தாங்க. நான் உன்னை திரும்பி கூட பார்க்கவில்லை. ரோஜாவை கொன்று, உன் கூட வாழணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இனி நீ என்றுமே எனக்கு வேண்டாத ஆள் தான்.” என்றாள் அனன்யா.

அஸ்வினுக்கும், ஹரிஷிற்கும் கோபம் வந்தாலும், சூழ்நிலை கருதி அமைதியாக நின்றனர்‌

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர், “ஒன்னும் பயப்பட இல்லை. கீழே விழுந்த அதிர்ச்சியில் தான் மயக்கம். சரியான நேரத்திற்கு அவங்க கடலுக்குள் மூழ்காம காப்பாற்றியதால், உடம்புக்குள்ள தண்ணீர் போகலை.” என்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றான் அஸ்வின்.

“சார்… அவங்களை பார்க்கலாமா?” என்றான் ராஜேஷ்.

“அவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏறிட்டிருக்கு. அரைமணி நேரம் கழித்து போய் பாருங்க. எதுக்கு சேப்டிக்கு நாளைக்கு ஈவினிங் வரைக்கும் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.” என்றார்.

“ஓகே டாக்டர்.” என்றான்.

அரை மணி நேரம் கழித்து முதல் ஆளாக ராஜேஷ் உள்ளே சென்றான்.

அவன் பின்னால் அஸ்வின், ஹரிஷ் மற்றும் அனன்யா வந்தனர்.

ராஜேஷை பார்க்காது. மற்றவர்களை பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ்.” என்றாள் ரோஜா.

“இட்ஸ் ஓகே ரோஜா. நீங்க என்ன நம்பி வந்திருக்கீங்க, உங்க பாதுகாப்பு என்னோடது. எதனால் இப்படி ஆனதுனு, நான் அந்த ஏஜென்சி கிட்ட பேசுறேன். தப்பு அவங்க மேல் இருந்ததுனா, கண்டிப்பா நான் அவங்க மேல சட்டரீதியா கம்ப்ளைன்ட் செய்றேன்.” என்றாள் அனன்யா.

“இலலை வேண்டாம். தப்பு என்மேல் தான். நான் தான் அவங்க சொன்னதை ஃபாலோ பண்ணலை. அவங்க போட வந்த பெல்ட்டையும், அவங்களை போடவிடாம, நானே போட்டேன். அதான் அது சீக்கிரம் அவிழ்ந்தது.” என்றாள் ரோஜா.

“கண்டிப்பா அவங்க மேல் கம்ப்ளைன்ட் செய்யணும்.” என்றான் ராஜேஷ்.

அவனை முறைத்து பார்த்த ரோஜா, “தேவை இல்லை அனன்யா.” என்றாள்.

“ஓகே ரோஜா. நான் அப்புறமா வந்து, உங்களை பார்க்கிறேன்.” என்ற அனன்யாவோடு அஸ்வினும், ஹரிஷும் வெளியே வந்தனர்.

“ரோஸ்…”

“நீ பேசாதே ராஜேஷ். உனக்கு நீச்சல் தெரியும் தானே . ஆனா, நீ என்னை காப்பாற்ற முயற்சி கூட செய்யலை?” என்றாள் ரோஜா.

“எனக்கு கடல்ல நீச்சல் அடித்து அவ்வளவா பழக்கம் இல்லை.” என்றான் ராஜேஷ்.

“உனக்கு உண்மையா என்னை பிடிச்சிருந்தா, உனக்கு நீச்சலே தெரியலைனாலும் எனக்காக குதிச்சு இருப்ப. ஆனா, நீ நீச்சல் தெரிந்தும் என்னை காப்பாற்ற வரலை. இதில் இருந்தே நீ எப்படிப்பட்டவன்னு தெரியுது.

அந்த அஸ்வின் தான் தான் காதலிக்குற பெண்ணுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னு, ஓடி வந்து என்னை காப்பாற்றினான்.”

“அப்படியெல்லாம் இல்லை. நீ தான் என்னோட உலகமே.”

“போதும் நிறுத்து. நான் செல்லமா வளர்ந்ததால், ஒரு சில நேரம் உன் கிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன். ஆனா, உன் மேல அவ்வளவு அன்பு நா வைத்திருந்தேன். ஆனா அதுக்கு நீ தகுதியானவன் இல்லைனு நிரூபிச்சிட்ட.” என்றாள்.

“ரோஜா அப்படி இல்லை. ப்ளீஸ் ஐ அம் சாரி.” என்று அவன் சொல்லிக் கொண்டே இருக்க.

“எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கணும், என்னை டிஸ்டர்ப் பண்ணாதே.” என்றாள்.

அதன்பின் ராஜேஷ் அமைதியாக இருந்தான்.

அரைமணி நேரத்தில் எல்லோரும் ரோஜாவின் அறைக்கு வந்தனர்.

எல்லோரும் அவளிடம் நலம் விசாரித்தனர். “நான் நல்லா இருக்கேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அஸ்வின் சரியான நேரத்திற்கு என்னை காப்பாற்றினார். உங்க ட்ரிப்பை கெடுத்துட்டேன் போல்” என்றாள்.

“இல்லை ரோஜா. பீச்சோடு நம்ம ட்ரிப் முடியுறது தான் பிளான். எல்லோரையும் அனுப்ப தான் நான் போனேன். ஆனா, எல்லோருமே உன்னை பார்த்துட்டு போறோம்னு சொன்னாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன், உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே ” என்றாள் அனன்யா.

“இல்ல.” என்றாள் ரோஜா.

அதன்பின், “கெட் வெல் சூன் ரோஜா. பாய் டேக் கேர்.” என்றாள் சுவாதி.

அனைவரும் அதே போல் சொல்லுவிட்டு வெளியே சென்றனர்.

'இவர்களிடம் நான் திமிராக தான் நடந்துக் கொண்டேன். இவர்கள் என்னை பார்க்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இருந்தும் என்னை வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்.’ என்று நினைத்த ரோஜாவிற்கு குற்ற உணர்வாக இருந்தது.

பார்க்கிங் இல் வேன் அருகே, அனைவரும் கட்டி அணைத்து விடைப்பெற மனமே இல்லாமல் சென்றனர். ஒரு குடும்பம் போல் பத்து நாட்கள் சேர்ந்து இருந்துவிட்டு, திரும்பி செல்லும் போது கஷ்டமாக இருந்தது.

அனன்யாவிடம் அனைவரும் அவ்வளவு அன்பாக பேசினர். அவளுக்கு கண் கலங்க ஆரம்பித்தது. பொது இடம் என்பதால், தன்னை கட்டுப்படுத்தினாள்.

கனி, ஜெய், தேவ், தியா நால்வரும் பேருந்து நிலையம் சென்றனர்.

ஹரிஷ், தீபக், ஈஸ்வர், சுவாதி, ரோஷிணி ரயில் நிலையம் சென்றனர்.

அவர்களை அனுப்பிவிட்டு அனன்யா திரும்ப, அங்கு அஸ்வின் நின்றிருந்தான்.
 
Top Bottom