• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நயவனின் நயவள் இவளோ - 16

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 16

எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பமான மனநிலையில் தான் இருந்தாள் அனன்யா‌.

'பத்து நாட்கள் கழித்து முடிவை எடுப்போம். இப்போது நம்ம மனசு ரொம்ப குழப்பத்தில் இருக்குது.’ என்ற முடிவை எடுத்தாள்.

ஒரு வாரம் சென்றிருந்தது. அனன்யா தன் முழுகவனத்தையும் வேலையில் திருப்பி இருந்தாள்.

இவளுக்கு அன்று போல் பல ரிசார்ட், போட்டிங் சர்வீஸ், போட் ஹவுஸ், சர்ஃபிங் கிளாஸ், மசாஜ் சென்டர் வரை அனைவரும் அழைத்துவிட்டனர்.

கேரளாவை தாண்டி பல டூரிஸ்ட் பிளேஸ்ஸிற்கு ட்ரிப் பிளான் செய்ய கேட்டனர், இந்தியா அருகில் உள்ள தீவுகளில் இருந்தும் அழைப்பு வந்தது.

வர்கலாவில் ஒவ்வொரு இடமாக சென்று, பார்த்து, குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்.

இந்த வேலைகளை செய்துக் கொண்டிருந்தவள். அப்படியே அடுத்த சோலோட்ரிப் எங்கு போகலாம் என்று தேடிக் கொண்டிருந்தாள்.

இந்தியாவின் கிழக்கு பக்கம் எங்காவது கொஞ்ச நாள் போகலாமா என்றும் யோசித்து அதுக்கான வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சும்மா இருந்தால் ஏதாவது யோசனை வருது என்று, தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டாள்.

நாட்கள் வேகமாக சென்றது, முடிவெடுக்கவே பயந்தாள் அனன்யா‌.

அனன்யாவிற்கு கால் வர, அதை எடுத்து காதில் வைத்தாள்,”ஹலோ.”

“ஹலோ அனன்யா. உங்க அம்மா என் கூட தான் வேலை செய்தாங்க. உன்னை கல்யாணம் செய்துக்க பெண் பார்க்கவே வரலாம்னு இருந்தேன். அப்புறம் ஆன்டி தான் நீ லவ் பண்றதா சொன்னாங்க. நீ என்னை மீட் பண்ண ஆஃபீஸ் வந்ததா சொன்னாங்க. நான் உன்னை பார்க்க வரவா?”

“ஓகே.” என்றாள்.

“நீ சோலோ ட்ராவலர். எங்க இருக்கன்னு கேட்காம என்னால் உன்னை பார்க்க வரமுடியாது.”

“நான் வர்கலால தான் இருக்கேன்.”

“ஓகே. நான் இரண்டு நாள்ல அங்கு வந்திருவேன். எதுக்காக என்ன பார்க்க வந்தனு சொல்ல முடியுமா?.”

“இல்ல…நீங்க இங்க நேர்ல வரும்போது அதபத்தி பேசட்டுமா. எனக்கே கொஞ்சம் குழப்பமாக இருக்கு.”என்றாள் அனன்யா.

“ அப்ப ஓகே. பாய் அனன்யா.” என்றான்.

“பாய்.” என்ற அனன்யா காலை கட் செய்தாள்.

'இனி என்ன செய்வது? எதாவது முடிவு எடுத்து தான் ஆகணும்.

நான் ட்ரிப்ல வந்தவர்களை மிஸ் பண்ணதை விட அதிகம் மிஸ் பண்ணது அஸ்வினை தான். மனசும் அவனை தான் தேடுது‌. அதை இந்த ஒரு வாரத்தில் நன்றாக உணர்ந்திருந்தாள் அனன்யா. இப்போ நான் யாரை கல்யாணம் செய்துக்க போறேன்?’

“அச்சோ… கடவுளே ஏன் தான் இந்த அஸ்வினை பார்த்தேனோ. இப்போ ஏன் தான் அந்த பையன் திரும்பி வந்தாரோ.” என்றாள் சத்தமாக.

வேலைகளை அப்படியே வைத்துவிட்டு, தூங்க போய்விட்டாள்.

காலை எழுந்தவள், தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பீச் சென்றாள்.

சரியாக அப்போது ஹரிஷிடமிருந்து கால் வந்திருந்தது.

“சொல்லு ஹரிஷ்.”

“என்ன ப்யூட்டி இவ்வளவு சோகமா பேசுற?”

“ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் ஹரிஷ்.”

“ஃபோன்ல பேச முடியாது ஹரிஷ்.”

“சரி ஓகே. நான் உடனே கிளம்பி வரேன்.”

“நான் பார்த்துக்கிறேன் ஹரிஷ்.”

“சரி இப்போ எங்க இருக்க?”

“என் ஆழ் மனசை கண்டுப்பிடிக்க கடல் ஆழத்திற்கு போக போறேன்.”

“ஹே பியூட்டி எந்த தப்பான முடிவும் எடுக்காதே. நான் உடனே கிளம்பி வரேன்.” என்றான் ஹரிஷ்.

“டேய்… லூசு பையா ஸ்கூபா டைவிங் போகப் போறேன்னு சொன்னேன்.”

“ஓ அப்படியா எங்கள மட்டும் கூட்டிட்டே போகலை.”

“இதுக்கு இரண்டு நாள் போய் பயிற்சி எடுக்கணும். அப்படியே நேரா போய் செய்ய முடியாது.”

“சரி ஓகே நீ போய் என்ஜாய் பண்ணு.”

“ஓகே பாய் ஹரிஷ்.”

இவளும் ஸ்கூபா டைவிங் உடையை போட்டுக் கொண்டு போட்டில் ஏறினாள்.

கொஞ்ச தூரம் போட்டில் சென்ற பின், ஒரு இடத்தில் போட்டை நிறுத்தினர். சிலிண்டரை மாட்டிக் கொண்டாள், கண்களுக்கு கண்ணாடியை போட்டாள், வாயிலும் ஏதோ டூயூப் போன்றதை வைத்துக்கொண்டவள். அப்படியே போட்டில் உட்கார்ந்து வாக்கிலே பின் பக்கமாக கடலில் விழுந்தாள். அதே போலவே கூடவந்தவர்களும் செய்தனர்.

கடல் ஆழத்திற்கு சென்றாள், கடல் அடிமட்டத்தில் நின்றாள். அங்கு சென்றுக் கொண்டிருந்த மீன்களை ரசித்தாள். அவளால் இன்று ஸ்டார் ஃபிஷ்ஷை பார்க்க முடிந்தது. அதன் பின்னே கொஞ்ச நேரம் மெதுவாக நடந்தாள்.

அரை மணி நேரம் சென்ற பின் அனன்யா, மேலே வந்து போட்டில் ஏறிக் கொண்டவள் கொஞ்சம் ரிலாக்ஸானாள். கண்ணாடி, வாயிலிருந்த டூயூப், பின்னால் இருந்த சிலிண்டரை கழட்டி கீழே வைத்தாள்.

போட் மீண்டும் கரையை நோக்கி சென்றது. அனன்யா போட்டிலிருந்து கீழே இறங்கி ஸ்கூபா டைவிங் உடையை கழட்ட செல்ல. அவள் அங்கு ஹரிஷ்ஷை பார்த்தாள்.

“டேய்… நீ எப்போ டா வந்த?”

“நான் வர்கலா வந்துட்டு தான், உனக்கு காலே பண்ணேன்.”

“சரி வைட் பண்ணு டிரஸ் மாற்றிவிட்டு வரேன்.”

ஐந்து நிமிடத்தில் வந்தவள், அப்படியே அவன் அருகில் உட்கார்ந்துக் கொண்டாள்.

“உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.” என்றாள்‌ அனன்யா.

“இப்ப என்ன குழப்பம் உனக்கு?”

“ஹரிஷ்… அம்மா பார்த்த பையன் நாளைக்கு என்ன பார்க்க வராராம்.”

“ரொம்ப நல்ல விஷயம் தானே. நீ தான் அவரை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தியே”

“ஆமா.”

“அப்புறம் என்ன? அம்மா பார்த்த பையனையே கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா இருக்க வேண்டியது தானே.”

“ஹரிஷ்… நான் அஸ்வினை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்.”

“அப்போ அம்மா உனக்காக பார்த்த பையனுக்கு என்ன சொல்ல போற?”

“தெரியலை‌யே.”

“நான் அன்னைக்கே சொன்னேன், ஒரு நாள் நீ அஸ்வினை லவ் பண்றேன்னு வந்து சொல்லுவன்னு.”

“அவன் உன் கிட்ட இந்த இடைப்பட்ட நாட்களில் என்னைக்காவது பேசினானா?”

“இல்லை.”

“அப்போ விட்டது தொல்லைனு, அம்மா பார்த்த பையனையே கல்யாணம் செய்துக்க.”

“மனசு அஸ்வினை தான் தேடுது.”

“அப்போ அந்த ஆளுக்கு ஃபோன் போட்டு பேச வேண்டியது தான?”

“ஒரு தெளிவான முடிவு எடுக்குற வரைக்கும், அவன் கிட்ட பேச விரும்பவில்லை.” என்றவள் அமைதியாக மணலில் கோலம் போட.

“மின்னலே படத்தில் வர மாதிரி, கண்ணை மூடி யோசி பியூட்டி. யார் உன் மன கண்ணில் வராங்களோ அவங்களையே கல்யாணம் செய்துக்க.”

அனன்யாவும் கண்களை மூடி யோசித்தாள். பின் சிரித்துக் கொண்டே கண்ணை திறந்தாள்.

“சொல்லு பியூட்டி உன் மன கண்ணில் வந்தது மாதவனா? அப்பாஸ்ஸா?”

“டேய்‌.”

“அடச்ச… அஸ்வினா? அம்மா பார்த்த பையனா?”

“அந்த பையனுக்கு பேர் இல்லையா?”

“எனக்கு தெரியலையே. அன்னைக்கும் அம்மா கிட்ட கேட்கலை. நேற்று ஃபோன் பேசும்போதும் நா கேட்கல.”

“சரி விடு நமக்கு பெயரா முக்கியம். யாரு உன் மன கண்ணில் வந்தது?”

“நான் அப்படி யோசிக்கவில்லை. நீ சொல்ற மாதிரி யோசிக்க முதலில் நான் அவரை பார்த்திருக்கணும். நான் தான் அவரை பார்த்ததே இல்லையே.”

“ஓ இப்படி ஒன்று இருக்கா. அப்புறம் ஏன் உன் முகம் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் போல இருந்தது?”

“அதை எங்க டா சொல்ல விடுற?”

“சரி இப்போ சொல்லு.”

“அம்மாதான் இப்ப வந்தாங்க.அவங்க என்ன சொன்னாங்கன்னா, உன்னோட விருப்பம் தான் முக்கியம்னு சொன்னாங்க. அவங்க பார்த்த பையனை தான் நான் கல்யாணம் செய்துக்கணும்னு அம்மா எப்பவுமே சொல்ல மாட்டாங்க.”

“இப்போ நீ என்ன சொல்ல வர பியூட்டி?”

“நான் அஸ்வினை லவ் பண்றேன். அவனையே கல்யாணம் செய்துக்க போறேன்.”

“அஸ்வினை பற்றி உனக்கு என்ன தெரியும்?”

“அவன் என்னை நல்லா பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்கு. வேற எதுவும் தெரியாது.”

“அதை வைச்சு ஒன்னும் செய்ய முடியாது ப்யூட்டி.”

“எனக்காக நீ அஸ்வினை பற்றி விசாரிக்கிறீயா? நீ தான என்னோட ஃப்ரெண்டு.”

“நான் ஏற்கனவே விசாரிச்சிட்டேன்.”

“எப்போ?”

“நீ அவனை காதலிக்கிறதை கண்டுபிடிச்ச உடனே விசாரிச்சிட்டேன்.”

“நானே இப்போ தான் முடிவெடுத்தேன்.”

“நீ இந்த முடிவு தான் எடுப்பனு எனக்கு முனானாடியே தெரியும்.”

“சரி சொல்லு அஸ்வின் நல்ல பையன் தானே?”

“இல்லை. ரொம்ப ரொம்ப கேட்டவன்.”

“இல்லை நீ பொய் சொல்ற.”

“நீ ராஜேஷையே நல்லவன்னு தான நினைத்த?”

“அது அப்போ எனக்கு ஒன்னும் தெரியாத சமயம். இப்போ என்னால் மனிதர்களை நல்லா புரிந்து கொள்ள முடியும்.”

“அப்போ அஸ்வின் நல்லவன்னு நீ சொல்ற?”

“ஆமா அஸ்வின்.”

யாரோ எட்டி உதைக்க திடீரென ஹரிஷ் கீழே விழ, அனன்யா, “ ஹரிஷ்…” என்று சொல்லிக் கொண்டே திரும்பி பார்த்தாள்.

அங்கு நின்றிருந்தான் அஸ்வின், “அவளே இப்போ தான் தெளிவா ஒரு முடிவு எடுத்திருக்க. நீ வேற ஏன் டா அவளை மறுபடியும் குழப்பற?”

“பியூட்டி ஃபர்ஸ்ட் எனக்கு ஃப்ரெண்ட். அப்புறம் தான் அண்ணி.”என்றான்.

“என்ன அண்ணி? எப்போ அஸ்வின் வந்தான்?” என்று அனன்யா இருவரையும் குழப்பமாக பார்த்தாள்.

“அவன் போனாதான வரதுக்கு. வேலை வெட்டியே பார்க்காம உன் பின்னாடியே தான் சுற்றிக் கொண்டிருக்கான்.”

அனன்யா அவனை திரும்பி பார்க்க. அவனோ தலை முடியை கோதினான்.

அனன்யா தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

“பியூட்டி… நீ டென்ஷன் ஆகாதே. இதோ இந்த நல்லவன் தான் எனக்கு முன்னாடி என்கூடப்பிறந்த நொண்ணேன்ர சாரி என்னோட அண்ணன்.” என்றான்.

அனன்யா அதிர்ச்சியாக இருவரையும் திரும்பி பார்த்தாள்.

“ஒத்துக்க கஷ்டமா இருந்தாலும், இது தான் நிஜம்.” என்றான் ஹரிஷ்.

“டேய்” என்று பல்லை கடித்தான் அஸ்வின்.

“அப்புறம் ஏன் இரண்டு பேரும் எதிரிகள் மாதிரி நடிச்சீங்க. என்னை ஏமாற்றவா?” என்றாள் கோபமாக.

“சே! என்ன வார்த்தை சொல்லிட்ட. நாங்க எப்பவும் இப்படி தான் சண்டை போட்டுக்குவோம். எப்போவாவது தான் நாங்களே பாசமா நடந்துப்போம்.” என்றான் ஹரிஷ்.

“டேய்…” என்றான் அஸ்வின்.

“ஓகே. நான் சொல்றதை சொல்லிட்டு இடத்தை காலி செய்றேன்.” என்றான் ஹரிஷ்.

“அஸ்வினுக்கு உன்னை வீடியோவில் பார்த்ததும் பிடிச்சிடிச்சு. அவன் உன்னை காதலிக்கிறது எனக்கு முன்னாடியே தெரியும்.

ஆனா அவன் இந்த ட்ரிப்க்கு வரது எனக்கு தெரியாது. அதே போல் அவனுக்கும் நான் ட்ரிப்புக்கு வரது முன்னாடியே தெரியாது.

நான் எப்போதுமே உனக்கு நல்ல ஃப்ரெண்ட் தான். இப்போ உனக்கு இவனை பிடிக்கலைனு ஒரு வார்த்தை சொன்னா, நான் இவனை துரத்தி விட்டுட்டு, நாளைக்கு வர பையனையே உனக்கு கல்யாணம் செய்து வைப்பேன்.

உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். இவன் எல்லாம் எனக்கு எப்பவுமே கடைசி தான்.

ஆனா, இவன் உன்மேல உயிரையே வைத்திருக்கான் ப்யூட்டி. வேலையை விட்டு எங்கேயும் வரமாட்டான். உன்னை காதலிக்க ஆரம்பித்த பின் தான் இப்படி வேலைக்கு போகாம வர்கலாலேயே சுத்திட்டிருக்கான்.

என் அளவிற்கு நல்லவன் இல்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் நல்லவன் தான். இவன் கிட்ட பேசிட்டு உன் முடிவை சொல்லு பியூட்டி.” என்ற ஹரிஷ் சென்றுவிட்டான்.

அனன்யா அருகில் உட்கார்ந்த அஸ்வின் அமைதியாக இருந்தான். அவளுக்கும் கொஞ்சம் அமைதி தேவைப்பட்டது.

பத்து நிமிடங்கள் கழித்து.

“உனக்கு என்னை பார்த்தா பொய்யா நடிக்கிற மாதிரி தெரியுதா?”

“இல்லை.” என்றாள்.

அஸ்வின் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“நீ என்னை நம்பு. நாம கல்யாணம் செய்துப்போம். கண்டிப்பா உங்க அம்மா ஆசிர்வாதம் நமக்கு இருக்கும்.” என்றான்.

“நிஜமா அம்மா சந்தோஷம் படுவாங்களா அஸ்வின்?”

“உன்னோட சந்தோஷம் தான் உங்க அம்மாவோட சந்தோஷம்.” என்றான்.

அவன் தோளில் சாய்ந்த அனன்யா, “ஏன் இத்தனை நாளா எனக்கு கால் பண்ணலை?”

“எல்லாத்துக்கும் இந்த ஹரிஷ் தான் காரணம். நீ போன் போட்ட அனன்யா உன்னை தேட மாட்டாங்க. தெளிவா அவங்க ஒரு முடிவு எடுக்கும் வரை பேசாதேன்னு சொல்லிட்டான். நானும் உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான் மெசேஜ் செய்யல.” என்றவன் அவள் தலை முடியை வருடினான்.

“இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு அஸ்வின். பத்து நாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது.”

“சரி விடு டா. இனி எப்பவும் நான் உனக்கு துணையா இருப்பேன்.”

“டேய்… பேசி முடிச்சிட்டீங்கனா வாங்க போகலாம். எனக்கு பசிக்குது. சாப்பிட்டு வந்த பின் உங்க ரொமான்ஸ கண்டின்யூ பண்ணுங்க.” என்றான் ஹரிஷ்.

இருவரும் சிரித்துக் கொண்டே அவன் அருகில் சென்றனர்.

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான் னு சொல்லுவாங்க. ஆனா, நீ தான் டா எனக்கு பெரிய தொல்லையே.” என்றான் அஸ்வின்.

“டேய்… இப்பவும் உன் காதல் கைக்கூட நான் தான் முக்கிய காரணம்.” என்றான் ஹரிஷ்.

“கிழிச்ச. கொஞ்சம் விட்டிருந்தேன் இவள் காதல் சொன்ன போதே பிரேக் அப் சொல்ல வைச்சிருப்ப.” என்றான் அஸ்வின்.

“சரி போதும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. நான் என் சந்தேகத்தை கேட்கணும்.”

“சரி கேளு” என்றனர் இருவரும்.

“உங்க அண்ணன் பணக்காரன் மாதிரி பந்தாவா டிரஸ் பண்ணியிருக்கார். நீ இயல்பா மிடில் கிளாஸ் பையன் மாதிரி இருக்க.”

“அவனுக்கு அப்படி டிரஸ் பண்ணதான் பிடிக்கும். அதுவும் இல்லாமல் சார் பிஸ்னஸ் மேன், கோடிகளில் டர்ன் ஓவர் செய்வார். நான் எப்பவுமே சிம்பிளா தான் இருப்பேன். நான் வெறும் காலேஜ் ஸ்டுடென்ட்.”

“இப்போ தான் எனக்கு புரியுது ஹரிஷ். அன்னைக்கு உங்க அம்மா ரொம்ப தெரிந்த முகமா இருந்தாங்க ஆனா, உன்னை போல் இல்லைனு சொன்னேனே.”

“ஆமா.”

“அது உங்க அம்மா பார்க்க அஸ்வின் மாதிரி தான் இருந்தாங்க.”

“நல்ல வேளை இதை நீ அன்னைக்கே கண்டுப்பிடிக்கல. கண்டுப்பிடிச்சிருந்த எங்க அண்ணன் என்னை கொன்று இருப்பான். ஆமா பியூட்டி அஸ்வின் அம்மா மாதிரி நான் அப்பா மாதிரி‌.”

பேசியவாறே சாப்பிட்டு முடித்திருந்தனர். அதன்பின் மூவரும் காரில் ஏறினர்.

“என்னை பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடு அஸ்வின்” என்றான் ஹரிஷ்.

“ஏன் டா அதற்குள்ள போற நாளைக்கு இருந்துட்டு போகலாமே” என்றான் அஸ்வின்.

கண்ணாடி வழியாக அவனை நக்கலாக பார்த்து ஹரிஷ், “உன்னை மாதிரி நான் வெட்டி ஆபிஸர் இல்லடா. எனக்கு காலேஜ் இருக்கு‌.” என்றான்.

பஸ் ஸ்டாண்டு வந்து விட, “இரண்டு பேரும் சீக்கிரமா எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு கல்யாணம் செய்துக்கோங்க” என்றான் ஹரிஷ்.

அவனை குழப்பமாக பார்த்த அனன்யா, “ஓகே பாய் ஹரிஷ்.” என்றாள்.

“பாய்” என்ற ஹரிஷ் சென்றுவிட்டான்.

அனன்யாவை அவளின் ஹாஸ்டலில் விட்ட அஸ்வின், “ஒன்னும் இல்லை அனன்யா. நிம்மதியா போய் தூங்கு, நாளைக்கு மீதி எல்லாத்தையும் பேசிக்கலாம்.” என்றான்.

“ஓகே பாய் அஸ்வின்.” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.

நீண்ட நாட்கள் கழித்து அனன்யா அன்று நன்றாக தூங்கி எழுந்தாள். சோம்பல் முறித்தவள், ஃபோனை எடுத்து பார்த்தாள்.

“xxx ரிசார்ட்ல தான் இருக்கேன். பத்து மணிக்கு வா. நான் உனக்காக வைட் பண்ணிட்டிருப்பேன்.” என்று மெசேஜ் வநதிருந்தது.

அதை பார்த்ததும் படப்படப்பானால் அனன்யா, கொஞ்சம் ஒட்டியிருந்த தூக்கமும் கலைந்து போனது.

'என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கார். நான் போய் அவரை நேரில் பார்த்து பேசணும். அது தான் மரியாதையா இருக்கும். அவரை நான் எதுக்காக தேடினேனு அவருக்கு தெரியாது.’ என்று முடிவெடுத்தாள்.

குளித்து தயாரானவள், அஸ்வினுக்கு, “நான் அந்த பையனை பார்க்க போகிறேன். போயிட்டு வந்து உங்களுக்கு கால் பண்றேன்.” என்று மெசேஜ் அனுப்பியவள் ரிசார்ட் நோக்கி சென்றாள்.

அந்த ரிசார்ட்டின் உணவகத்தின் உள்ளே சென்ற அனன்யா, அந்த நம்பருக்கு கால் செய்தாள்‌.

சத்தம் கேட்ட திசை பக்கம், இவள் திரும்பி பார்க்க. அங்கு அஸ்வின் உட்கார்ந்திருந்தான்.
 

Gowri Karthikeyan

Active member
ஹே பாவம் டா அவ.....அவளை போட்டு ஏண்டா இப்படி படுத்தர🤣🤣🤣🤣🤣
இப்ப இருக்கு டி உனக்கு
 
Top Bottom