• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நயவனின் நயவள் இவளோ - 7

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 7

“ நாளைக்கு காலையில் ஆறு மணிக்கு கபில் பீச் போறோம்” என்று குரூப்பில் மெசேஜ் அனுப்பினாள் அனன்யா.

'ஒருவேளை அஸ்வின் அம்மா பார்த்த பையனா இருக்குமோ? அம்மாவும் கடைசி ஆறு மாசமா ஏ.ஹச் பேஷன் ஹவுஸில் தான் வேலை செய்து கொண்டு இருந்தாங்க.’ என்று யோசித்தாள்.

அவளே, ‘கண்டிப்பா இருக்காது. அவன் அந்த பிராண்ட் சட்டை தான் போட்டு இருக்கான். அம்மா பார்த்த பையன் கண்டிப்பா அஸ்வின் இல்லை. ஆனா, அவனும் டெய்லர்னு சொன்னானே? பார்த்தா அப்படி தெரியலையே. வேற எந்தவிதமான கேள்வியும் அங்கிருந்த யாருக்கோ தெரியக்கூடாதுன்ற மாதிரியே எல்லோரையும் அவசரமாக போகச் சொன்னானே. எதை மறைக்கிறாரு?யாரிடம் மறைக்கிறாரு?’
என்று யோசித்துக் கொண்டே தூங்கினாள் அனன்யா.

டே - 4

காலையிலேயே அனைவரும் விரைவாக கிளம்பி வந்திருந்திருக்க. வேனிலேயே சரியான நேரத்திற்கு கப்பில் பீச் சென்றனர்.

கடலில் இருந்து வெளிவந்த சூரியனை ரசித்தனர். என்னா தான் எல்லோமே அரேபியன் சியாக இருந்தாலும், ஒவ்வொரு பீச்சும் தனி தன்மை கொண்டதாக இருந்தது.

இந்த கப்பில் பீச்சின் சிறப்பே, இங்கு ஒரு புறம் கடலும், மறு புறம் பேக் வாட்டர் லேக்கும் இருக்கும், இரண்டுக்கும் நடுவில் ரோடு போகும். பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

என்ன இந்த பீச்சில் கால் நனைத்து விளையாடுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கடல் அலைகள் உயர்வாக வரும் என்பதால் பெரிய பெரிய பாறைகள் போட்டிருப்பார்கள். லேக்கில் கால் நனைத்து விளையாடலாம்.

“ரொம்ப பிளஸெண்ட்டா இருக்கு இந்த இடம்” என்றாள் கனி.

“ஆமா… ஆனா பீச்சில் விளையாட முடியலையே” என்றாள் ரோஷிணி.

“நாளைக்கு பிளாக் சாண்ட் பீச் போறோம், அங்கு விளையாடலாம். இல்லைனா இங்கேயே இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா பீச்சில் விளையாடுற மாதிரி இடம் வரும்” என்றாள் அனன்யா.

ஹரிஷ் பாறையில் ஏறி நின்று, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஈஸ்வர் தன் ட்ரோன் கேமராவில் ஹரிஷ்ஷை கிளாஸ் அப்பில் காட்டிவிட்டு, அப்படியே ட்ரோனை மேலே பறக்க விட.

ஒரு பக்கம் கடலும், மறுபக்கம் ஏரியும் நடுவில் பச்சை பசேல் என்று பல மரங்களும் காட்சி அளித்தது. அந்த ட்ரோன் வீடியோவே பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

தனித் தனியாக சென்று, அவர்களுக்கு பிடித்தமான இடங்களில் ஓய்வாக உட்கார்ந்து, புகைப்படம் எடுத்தனர்.

அனன்யா அஸ்வின் அருகே சென்றாள். “நாம இதுக்கு முன்னாடி பார்த்திருக்கமா?” என்று கேட்டாள்.

“பார்த்திருந்தா, உனக்கு என்னை தெரிந்திருக்குமே? நான் உன்னை கண்டிப்பா லவ்வர் பாய் மாதிரி எல்லாம் ஃபாலோ பண்ணலையே.” என்றான் அஸ்வின்.

“நீங்க ஏ. ஹச் ஃபேஷன் ஹவுஸ்ல வேலை செய்றீங்களா?”

“இல்லை.” என்றான் அஸ்வின்.

'இவனுக்கு கண்டிப்பா அம்மாவை பற்றி தெரிந்திருக்காது' என்று நினைத்தவள்.

“நீங்க டெய்லருனு சொன்னீங்க? அது பொய் மாதிரி எனக்கு தோணுது? நீங்க என்ன வேலை செய்றீங்க?”

“நீ என்னை லவ் பண்றீயா?”

வேகமாக, ‘இல்லை’ என்று தலை ஆட்டினாள்.

“நாம என்ன நண்பர்களா?”

“இல்லை.”

“பின்ன நான் எப்படி என்னை பற்றி உன் கிட்ட சொல்ல முடியும்?”

அனன்யாவிடம் பதில் இல்லை.

“அட்லீஸ்ட் நீ என்னை லவ் பண்ணலாம்னு யோசிக்கிற, அதுக்காக தான் இந்த விபரம் கேட்கிறேன்னு, நீ சொன்னா கூட நான் பதில் சொல்ல ரெடி.”

“எனக்கு எந்த விபரமும் தேவை இல்லை. நான் உங்களை லவ் பண்ணவும் இல்லை. இனி லவ் பண்ணவும் மாட்டேன்‌.” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

சின்ன புன்னகையோடு, “நோ வே. இனி லவ் பண்ணுவ.” என்றான் அஸ்வின்.

அவள் காதில் விழாதது போல் சென்றுவிட்டாள்.

ஒரு பக்கம் பேக்வாட்டர் லேக் ஆழம் இல்லாது இருந்தது. அந்த நீரில் இரு கால்களை நினையவிட்டு மண் தரையில் உட்கார்ந்திருந்தாள் அனன்யா.‌
இது அவள் அடிக்கடி உட்காரும் இடம். மனதில் இருக்கும் குழப்பம் மறைந்து, மனம் காற்றை போல் லேசாக இருக்கும்‌.

அந்த அமைதியை கெடுப்பது போல், அங்கு வந்தான் ஹரிஷ்.

“பியூட்டி… அம்மா உன் கிட்ட பேசணும்னு சொல்லுறாங்க. நீ பேசுறீயா?”

“வேண்டாம் ஹரிஷ்.”

“பிளீஸ் பியூட்டி… அம்மா ரொம்ப ஆசையா கேட்குறாங்க.”

ஏனோ அதன்பின் மறுக்க மனம் வரவில்லை அனன்யாவிற்கு, “ஹலோ ஆன்ட்டி ‌… எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி.”

“பார்க்க ரொம்ப அழகா இருக்கமா. ஹரிஷ் தான் என் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருந்தான். என்னையே தான் இத்தனை நாளா பியூட்டினு கூப்பிடுவான். இனிமே நான் அவனுக்கு பியூட்டி கிடையாதாம். உன்னை விட அழகான பெண்ணை பார்த்துட்டேன்னு சொன்னான். அதான் யாருடா நம்மை விட அழகா இருக்காங்கன்னு பார்க்க தான் உனக்கு வீடியோ கால் பண்ணேன். உண்மையிலே நீ ரொம்ப அழகா இருக்க டா. சென்னை வந்தா, கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வரணும்.” என்றார்.

“ஓகே ஆன்ட்டி.”

ஃபோனை வாங்கிய ஹரிஷ் சற்று தள்ளி சென்று மெதுவாக, “பெரிய ஐஸ் கட்டிய தூக்கி உன் மருமக மேல வெச்சிட்ட போல. அவளுக்கு சந்தேகம் வந்துட்டா அவ்வளவு தான் என் நிலைமை‌. ஓகே பாய் ஓல்டு பியூட்டி.” என்ற ஹரிஷ் காலை கட் செய்தான்.

அனன்யா அருகில் வந்த ஹரிஷிடம், “உங்க அம்மாவும் உன்னை மாதிரியே ஜாலி டைப். ஆனா, முக ஜாடை உனக்கும் உங்க அம்மாவிற்கும் ஒத்துப்போகவில்லை. நீ உங்க அப்பா மாதிரி போல. ஆனா, உங்க அம்மா முகம் ரொம்ப பரிச்சயமான முகம் போல இருக்கு.” என்றாள்.

“நான் எங்க அப்பா மாதிரி தான் இருக்கேன். அதான் உனக்கு அப்படி தோன்றுது. நேரில் பாரத்தா நல்லா தெரியும், வீடியோ கால் அவ்வளவு கிளரிட்டி இல்லை.” என்றான்.

“இருக்கலாம்.” என்றாள்.

அவள் அறியாமல் பெரும் மூச்சு விட்டான் ஹரிஷ்.

ஏரியில் ஆழம் இல்லாத இடத்தில் இறங்கி தண்ணீரில் ஆட்டம் போட்டனர். மதிய உணவுநேரம் நெருங்க, அனைவரையும் அருகில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள் அனன்யா.

“இந்த ஹோட்டல்ல பொறிச்ச மீன் ரொம்ப சூப்பரா இருக்கும். மீன் சாப்பிடறவங்க. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.” என்றாள் அனன்யா.

அனைவரும் விரும்பி உண்டனர். உண்ட கலைப்பில்,. தூங்க தயராக இருந்தவர்களிடம், “இப்போ போய் ரூம்ல நல்லா ரெஸ்ட் எடுங்க. ஈவினிங் த்ரி தெட்டி போல மாங்குரோவ் (mangrove) காட்ல போட்டிங் போகலாம்.” என்றாள் அனன்யா.

*****
அனன்யா நினைத்தது போல் மாலை நாலு மணிக்கு அந்த இடத்திற்கு சென்று சேர்ந்தனர்.

அந்த இடத்திற்கு செல்லவே முதலில் படகில் செல்ல வேண்டும். பின் வாட்டர் ஹெவன் போட்டிங் சர்வீஸ் வந்தது.

அங்கு முன்பே அனன்யா பல முறைவந்திருந்ததால், இவர்களுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வைத்திருந்தாள், அங்கிருந்த ட்ரெய்னரிடம் இவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.

“கயாகிங் பண்ணலாம் ப்ரெண்ட்ஸ். ரொம்ப நல்ல அனுபவமா இருக்கும்.” என்றாள் அனன்யா.

பின், ட்ரெய்னர் பத்து நிமிடங்கள் எப்படி துடுப்பை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி தந்தார். அனைவரும் கவனமாக கற்றுக் கொண்டனர்.

“இரண்டு மணி நேரம் போகணும். சோ தண்ணீர், ஸ்நாக்ஸ் எடுத்துக்கோங்க.” என்றாள் அனன்யா.

“அவ்வளவு நேரம் எங்களால துடுப்பு போட முடியாது. நாங்க இங்கே இருக்கோம்.” என்றாள் கனி.

“அக்கா… நீங்க கண்ட்ரி போட் ட்ரை பண்ணலாம். அந்த படகை ஓட்ட ஒருத்தர் வருவாரு. நீங்க நாலு பேரும் அதில் போகலாம்.” என்றாள் அனன்யா.

அதன் பின் தான் கனியின் முகத்தில் சிரிப்பு வந்தது‌.

அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் தரப்பட்டது. கயாகிங் போட் ஒருவர் செல்வது போலும் இருக்கும், இருவர் சேர்ந்து செல்வது போலும் இருக்கும்.

“இரண்டு பேர் சேர்ந்து போற போட் தான் எங்களுக்கு வேணும்.” என்றாள் ரோஜா. அதையே அவர்களுக்கு தந்தனர்.

ஒவ்வொரு வராக போட்டில் ஏறினர். கடைசியாக இருவர் சேர்ந்து செல்லும் போட் தான் இருந்தது. கடைசியாக நின்றிருந்தனர் அனன்யா மற்றும் அஸ்வின்.

அதை கவனித்த ஹரிஷ், ”அஸ்வின்… நீங்க இந்த தனி போட்ல போங்க. நானும் அனன்யாவும் ஒரே போட்ல வரோம்.” என்றான்.

“நீங்க தான் ஏறிட்டீங்களே இனி மாற்ற வேண்டாம். அனன்யா உங்களுக்கு என்னோடு வரதில் ஏதாவது பிரச்சனை இருக்கா?” என்றான் அஸ்வின்.

“இல்லை.” என்ற அனன்யா முன்னே ஏறிக் கொள்ள, அஸ்வின் பின்னே ஏறிக் கொண்டான்.

கால்களை முழுவதுமாக நீட்டுவது போல் கயாகிங் போட் அமைந்திருக்கும். இவர்களின் பாதுகாப்பிற்காக லோக்கல் கைட் ஒருவர் இவர்களோடு வந்தார்.

“யாரு ஃபர்ஸ்ட் போறாங்கன்னு பார்க்கலாமா?” என்றான் ஹரிஷ்.

“ஹரிஷ் இந்த விளையாட்டு எல்லாம் இங்க வேண்டாம்.” என்றாள் அனன்யா.

“அப்போ தான் செம்ம திரில்லிங்கா இருக்கும்.” என்றான் ஹரிஷ்.

“ஹரிஷ் இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் கண்டிப்பா திரில்லிங் வேண்டாம்.” என்றாள் அனன்யா கண்டிப்பான குரலில்.

“ஓகே” என்ற ஹரிஷ் அமைதியாக சென்றான்.

அவனின் அமைதி, அவளை என்னமோ செய்தது‌. அவன் அருகில் சென்ற போது அனன்யா, “இங்க இருக்கவங்களுக்கு தான் இதோட ஆபத்து தெரியும். உன்னோட வயசுக்கு எல்லாமே விளையாட்டா தான் தோன்றும். ஆனா எனக்கு இதில் இருக்கும் ஆபத்தும் தெரியும். ஒரு சின்ன தப்பு உயிரையே எடுத்துடும் புரியுதா. போன உயிரை திரும்ப கொண்டு வர முடியாது ஹரிஷ்” என்றாள்.

“என்ன ரொம்ப பயமுறுத்தாதே ப்யூட்டி, எனக்கு இப்ப தான் பயமா இருக்கு.” என்றான் ஹரிஷ்.

அவனை பார்த்து சத்தமாக சிரித்தான் அஸ்வின். அஸ்வினை திரும்பி முறைத்த அனன்யா. ஹரிஷிடம், “அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரி ஓட்டு போதும், ஒன்னும் ஆகாது.” என்றாள்.

ஒரு மணி நேரம் சென்றது சூரியன் அஸ்தமனமாகும் காட்சியை அனைவரும் பார்த்து ரசித்தனர். காலையில் கடலில் உதயமான சூரியனை, மாலையில் ஏரியில் வழி அனுப்பி வைத்தனர்.


“அனன்யா கொஞ்ச நேரம் நீ போட் ஓட்ட வேண்டாம். நான் ஓட்டுறேன், நீ இதை சாப்பிடு” என்றான் அஸ்வின்.

அவன் தந்ததை வாங்கியவளுக்கு அதிர்ச்சி தான், அவனை திரும்பி பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். அதற்கு மேல் அவன் கண்களை பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டாள் அனன்யா. அஸ்வினும் மெலிதாக சிரித்துக் கொண்டான்.

அனன்யாவிற்கு மிகவும் பிடித்த கோல்ட் காபியும், ஹார்ட் பிஸ்கட்டும். இது அவளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் காம்போ. உடல் நலத்திற்கு அவ்வளவாக நல்லதில்லை என்பதால் அனன்யா அடிக்கடி எடுத்துக் கொள்ள மாட்டாள்‌. அவளுக்கு இது பிடிக்கும் என்பது ராஜேஷிற்கு கூட தெரியாது.

'இவன் எதார்த்தமாக வாங்கி வந்தானா? இல்லை எனக்கு பிடிக்கும் என்று வாங்கி வந்தானா? அம்மாவை தவிர வேற யாருக்கும் இந்த ஸ்நாக்ஸ் காம்போ பற்றி தெரியாதே?’ என்று யோசித்தாள்.

“ரொம்ப யோசிக்காதே அனன்யா. அங்க பாரு மாங்குரோவ் டெனல் வருது.” என்றான் அஸ்வின்.

பெரிய மரங்களின் கிளைகளே மேலே சென்று எதிர்ப்புறம் இருக்கும் மர கிளைகளோடு சேர்ந்துக் கொண்டு இயற்கையான பாலமாகி உருவாகி இருந்தது. அதன் கீழ் படகுகள் சென்றது.

அதன் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை. மெய் மறந்து இயற்கையோடு இணைந்தனர்.

ரோஜா ஐந்து நிமிடம் மட்டுமே போட்டை ஓட்டினாள், அதுவும் தவறாக தான். அதன் பின் ராஜேஷ் தான் அவளுக்கும் சேர்த்து துடுப்பு போட்டான்.

“நான் சாப்பிட்டேன். இப்போ நீங்க சாப்பிடுங்க, நான் ஓட்டுறேன்.” என்றாள் அனன்யா.

“நான் சாப்பிட்டேன்.” என்றான் அஸ்வின்.

“நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நான் துடுப்பு போடுறேன்.”

“நீ இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நான் துடுப்பு போடுறேன்‌.” என்றான்.

“நான் வேணம்னா ரெஸ்ட் எடுக்குறேன். என்ன யாராவது கூட்டிட்டு போறீங்களா?” என்றான் ஹரிஷ் பாவமாக.

“ஃபர்ஸ்டே உங்க இரண்டு பேரையும் இந்த போட்டில் அனுப்பி இருக்கலாம்.” என்றாள் அனன்யா.

ஒரு இடத்தில் நிறுத்தி,“இங்கு தண்ணீரில இறங்கி விளையாடுறதுனா விளையாடுங்க.” என்றார் லோக்கல் கைடு.

“இல்லை வேண்டாம். எங்களுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். இதுமாதிரி ரிஸ்க் எடுக்க மாட்டோம்.” என்றான் ஹரிஷ்.

ஏரிக்குள் குதித்தாள் அனன்யா.

அவளை அதிர்ச்சியோடு பார்த்து, ‘திரு திருவென' முழித்தான் ஹரிஷ்.

“ஹரிஷ்… இந்த இடத்தில் இறங்கலாம். வர்ற டூரிஸ்ட் யாராச்சும் இறங்கி குளிக்கணும், நனையணும்னு ஆசைப்படுவாங்க, அவங்களுக்காகதான் இந்த ஏற்பாடு. இவங்களுக்கு தெரியும் எங்க ஆழமா இருக்கும், எங்க ஆழம் இருக்காது என்று. உங்களுக்கு விருப்பம் இருந்தால் இறங்கி என்ஜாய் பண்ணுங்க.” என்றாள் அனன்யா.

அதன் பின் என்ன அனைவரும் இறங்கி தண்ணீரில் ஆட்டம் போட்டனர். கனி, ஜெய் கூட இவர்களோடு இணைந்தனர். ராஜேஷ் தவிர மற்ற அனைவரும் ரிலாக்ஸாக மாலை நேரத்தின் குளுமையில் நீரில் மிதந்துக் கொண்டாடினர்.

ராஜேஷை பார்க்கும் போது அனன்யாவிற்கு பாவமாக இருந்தது. எப்போதும் தான்தான் ராஜா என்பது போல் இருப்பான். அவளிடம் ஒரு நாள் கூட இதுபோன்று இறங்கி போனதில்லை. இப்போது தான் அவளுக்கு புரிந்தது. பணத்திற்கு தான் இங்கு மரியாதை. ரோஜா பெரிய வீட்டு பெண் என்பதாலே அவளிடம் இறங்கி போகிறான் ராஜேஷ்.

தலையை உலுக்கி, பழசை ஓரம் தள்ளி, நிகழ்வுக்கு வந்தவள், சுவாதி, கனி, ரோஷிணியோடு கைகளை கோர்த்துக் கொண்டு நீரில் குழந்தையை போல் ஆட்டம் போட்டனர்.

“ஹரிஷ்… நீ வேணும்னா நான் வந்த போட்ல போ” என்றாள் அனன்யா.

“இல்லை வேண்டாம் பியூட்டி நான் இப்ப ஓகே தான்‌. நீயே அந்த அஸ்வின் கூட போ.”

எப்பொழுதும் லாவகமாக படகில் ஏறும் அனன்யா அன்று லேசாக தடுமாறி அஸ்வினின் தோளில் கை வைக்க, அருகில் நின்றிருந்த அஸ்வின் அவளின் இடையில் கை வைத்து அவளை படகில் ஏற்றினான். அவனும் அருகிலிருந்த மூங்கில் வேர்களை பிடித்து அருகருகே இருந்த கிளைகளில் கால்களை வைத்து படகில் ஏறினான். அனன்யாவிற்கு ஏதோ ஒரு உணர்வு மனதிற்குள் பறந்தது.

அதன் பின் மீண்டும் பயணம் தொடர்ந்தது‌. வெயில் இல்லா நேரத்தில் இதுபோல் பயணம் செய்வது நன்றாக இருந்தது.

ஆரம்பித்த இடம் வந்தததும், ஒவ்வொரு வராக கீழே இறங்கினர்.

“டிரஸ் மாத்திக்க இடம் இருக்கு. வேணும்னா போய் மாத்திக்கோங்க.” என்றாள் அனன்யா.

இருபது நிமிடங்கள் கழித்து அனைவரும் தயாரான பின் வேனில் ஏறினர்.

“காய்ஸ்… கயாகிங் அனுபவம் எப்படி இருந்தது?”

“சூப்பர் ஆனா கை தான் வலிக்குது.” என்றான் ஈஸ்வர்.

“வர்கலா வந்துட்டு கயாகிங் செய்யலன்னா மிகப் பெரிய குற்றமாகும்.” என்றாள் அனன்யா.

“அப்படியா” என்று உண்மையென நம்பி ஆச்சரியமாக கேட்டார் கனி.

“இல்லை அக்கா. சும்மா சொன்னேன். கயாகிங் தனியா செய்யும் போது நமக்கு புது அனுபவம் கிடைக்கும். புதுசா ஒன்னு கத்துக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.” என்றாள்.

“நிறைய விதமான போட் இருந்ததே.” என்றாள் சுவாதி.

“இப்போ நாம வந்தது பரவுர் லேக் மாங்குரோவ் ஃபாரஸ்ட்க்கு. இன்னும் நிறைய லேக் போவோம், அப்போ மீதி போட்டில் போய் பார்க்கலாம்” என்றாள் அனன்யா.

“அப்ப ஓகே.” என்றாள் சுவாதி.

‘நல்ல வேளை அங்க போய் கயாகிங் செய்ய தேவை இல்லை.’ என்று நினைத்துக் கொண்டான் ராஜேஷ்.

“எனக்கு கயாகிங் ரொம்ப பிடிச்சிருந்தது.” என்றாள் ரோஜா.

“சும்மா உட்கார்ந்திருந்தா நல்லா தான் இருக்கும்.” என்றான் ஹரிஷ்.

அவனை முறைத்தாள் ரோஜா.

“உங்களை சொல்லல ஆன்ட்டி…” என்றான் ஹரிஷ்.

பல்லை கடித்தாள் ரோஜா.

“நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க ப்ரெண்ட்ஸ் நாளைக்கு பிளாக் சண்ட் பீச் போகலாம்.” என்றாள் அனன்யா‌.
 
Top Bottom