பிளிங் - அலைபேசி ஒலித்ததும் முட்டிக் காலில் முகம் புதைத்திருந்த தனா தலை தூக்கிப் பார்த்தாள்.
புதிய இலக்கத்தில் இருந்து 'குட் நைட்' வந்திருந்தது.
அத்துணை தீவிர யோசனைக்கு பிறகு வரோதயன் அவளுக்கு அனுப்பியது வெறும் 'Good night' தான்.
நமக்கு அது வெறும் குட் நைட்.
அவளுக்கு?
"இந்த உடம்பு ஒரு பொய். உறவு பொய். வாழ்க்கை பொய். மாயை. எல்லாம் மாயை. பிரபஞ்சம் ஒன்று தான் மெய். ஆத்மா ஒன்று தான் மெய்… பரம்பொருள் ஒன்றே..." வருணன் இன்று ஆன்மீகத்தை கையில் எடுத்திருக்க,
அலைபேசியை தனது கையில் எடுத்த தனா அந்தப் புது இலக்கம் யாராக இருக்கும் என்று யூகித்தும்,
"ஹூ?" என்று அனுப்பினாள்.
வெறிக்க வெறிக்க குட் நைட் நீல நிற டிக் காட்டியதை பார்த்திருந்த வரோதயன் சமநிலைக்கு வந்தான்.
புதிய இலக்கம் கண்டு கொள்ளப்படாமல் ப்ளாக் ஆகினால் என்ன செய்வது என்று பயந்து கிடந்தவன், "வரோதயன்" என்று உடனே பதில் தர,
"நம்பர் புதுசா இருந்தது.. அதான் கேட்டன்" என்றாள்.
வராவினுள் உற்சாகம் சுரந்தது.
குட் நைட் அனுப்புவதற்கு அவ்வளவு யோசித்தான் என்றால் காரணம், அது வெறும் குட் நைட் அல்ல. அலைவழி குறுஞ்செய்தி உரையாடலுக்கு அவன் அவளுக்கு விடுக்கும் அழைப்பு.
அதை ஏற்பதும், கண்டு கொள்ளாமல் கடந்து போவதும், முற்றாக இலக்கத்தை முடக்குவதும் அவளது விருப்பம்.
அதை பிரார்த்தனாவின் உள்ளுணர்வும் அறியும்.
'தூங்கல்லயா இன்னும்?' என்று எழுதியவன் உடனே அதை அழித்து "வெஹிகிள் சப்ஜெக்ட நான் செய்யணும் எண்டு நீங்களா ரெக்கமண்ட் பண்ணின.." என, அலுவலகமாக வினவினான்.
'தூங்கல்லயா?' என்பது தனாவை ஒதுங்க வைத்திருக்கலாம். ஃபோனை தூக்கி போடக் கூட வைத்திருக்கலாம்.
சப்ஜெக்ட் சம்பந்தமாக அவன் பேசிய சாமர்த்தியத்தில் "இல்ல" என்றாள்.
"எனக்கு வெஹிகிள் பத்தி ஒண்டும் தெரியாது அனுபவம் இல்ல. நான் எப்படி அந்த சப்ஜெக்ட் செய்ற?"
"வெஹிகிள் சப்ஜெக்ட ஜென்ஸூக்கு தான் சூட் ஆகும். நீங்க பர்மனன்டா இல்லயே டெம்ரரியா செய்யலாம்.."
"தெரிஞ்சா தானே செய்யலாம்.."
"கைட் பண்ண சொல்லி ஏ.ஓ சொன்னார்.."
அந்த ஏ.ஓ வுக்கு தான் மனதில் ஆயிரம் நன்றி உரைக்கிறான்.
"உங்களுக்கு எப்டி தெரியும்?"
"என்ன?"
"வெஹிகிள் பத்தி.. எனக்கு பைக் பத்தி தெரியும். ஒஃபிஸ்ல உள்ளதுகள் எல்லாம் மொடர்ன் பிக்கப் வேன் பஸ்.."
தனா புன்னகைத்தாள். அதை ஸ்மைலியாக அனுப்பாமல், "நீங்க மெக்கானிக் இல்ல.. சப்ஜெக்ட் க்ளார்க். ட்ரைவருக்கு வாகனங்கள அலகேட் பண்ற, ஃப்யூவல் அப்ரூவல் எடுக்கிற, பழுது வந்தா HOD அப்ரூவலோட ரிப்பேருக்கு அனுப்புற.. இதெல்லாம் தான் உங்கட மெயின் ட்யூட்டி.."
"இருந்தாலும் வெஹிகிள் பத்தி டெக்னிகலா தெரிஞ்சா நல்லது தானே?"
"நல்லம் தான். அதப் படிக்கலாம்.. சப்ஜெக்ட் எடுத்து செய்யுங்க.. அனுபவம் தான் ஆசான்.."
'உங்களுக்கு எத்தின வயசு?' என்று கேட்க நினைத்தவன் "நீங்க எவ்வளவு காலம் சேர்விஸ்?" என்று திருத்தினான்.
"எதுல?"
"எடுகேஷன் டிபார்ட்மெண்ட்ல.."
"மூணு வருஷம் முடியுது"
"எப்ப அப்பாய்ன்மண்ட் கிடைச்ச?"
"அதுவும் மூணு வருஷம்.."
"இங்க தான் ஃபர்ஸ்ட் அப்பாய்மன்டா.. எத்தின வயசுல வேலை எடுத்திங்க.."
"உங்கட வயசு என்ன எண்டு நேரடியாவே கேட்டிருக்கலாம்.."
வரா அசடு வழிந்தது நல்ல வேளை அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.
"அனுபவமே ஆசான் எண்டிங்க.. இந்த மாதிரி வசனம் கதைக்க அவ்வளவு வயசாகிட்டா எண்டு யோசிச்சன்.."
"வயசுக்கும் அனுபவத்துக்கும் என்ன சம்பந்தம்.. ஒரு பிள்ள பிறந்த காலம் மட்டும் இல்ல, சூழலும் தான் அனுபவத்த தீர்மானிக்கும்.."
"உண்மை தான்" ஏற்றுக் கொண்டவன் கூர்மையுடன் சாட் செய்யத் தொடங்கினான் காலத்தின் கையில் அடிபட்டு பல பாடங்களை கற்றுள்ள பிரார்த்தனாவுடன்.
"அம்மா எப்டி இருக்காங்க?" விடையத்தை மாற்றினான்.
"இருக்காங்க.. "
'ஒஃபிஸ்ல ஸ்டாப் பிள்ளைட அம்மாவுக்கு சுகம் இல்லம்மா, தலையில அடிபட்டு ஆஸ்பத்திரியில வச்சிருக்காங்க' என்று தாயார் காமாட்சியிடம் முதல் நாளே கூறி இருந்தான்.
'கடவுளே! என்ன நடந்தாம்.. குணமாகி வரட்டும்!' என்றவர் 'இப்ப எப்புடி இருக்காம்?' என்று தினமும் தவறாமல் கேட்கிறார்.
'அன்று உதவிக்கு வந்த பெடியன் யார்.. உன்னோடு பணி புரிபவனா.. தக்க சமயத்தில் வந்தான். அவனைக் கேட்டதாக சொல்.. நான் நன்றியாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறு' - இப்படி ஒரு வார்த்தை பிரார்த்தனாவின் தாய் கதைத்து இருக்க மாட்டாரா? நிச்சயம் கதைத்து தான் இருப்பார். அவரைத் தூக்கிய போது கண் திறந்து நன்றாக முகம் பார்த்தார்..
நன்றியுடன் நினைத்து தான் இருப்பார்.
அதைப் பற்றி இந்தப் பெண் அவனிடம் பகிர்ந்து கொண்டால் தான் என்ன?
"ஒஃபிஸ்ல ஸ்டாப் எல்லாரும் உங்கட அம்மாவ வந்து சுகம் கேக்குற மாதிரி கதைச்சாங்கள். பிறகு அந்த கதையே இல்ல.. என்ன நடந்த?" என்று கேட்டான்.
"கேட்டாங்க. அம்மா இப்ப வீட்ட இல்ல.. வர வேணாம் எண்டு நான் தான் சொன்னன்.."
"அம்மா எங்க?"
"தன்ர தங்கச்சிட வீட்ட பொயிட்டா.."
"ஏன்?" கேட்கக் கூடாதோ
'ஒரு சேஞ்ச் வேண்டி போயிருக்காங்க' என்று கூறி இருக்கலாம். எழுதியதை அழித்து, "அடிச்ச அப்பாவோட கோபிச்சிட்டு பொயிட்டாங்க" என்றே அனுப்பினாள்.
தன் குடும்ப நிலவரத்தை மேல் பூச்சில்லாது வெளிப்படுத்துவது அவனை எட்டி நில் என எச்சரிக்கும் உள் நோக்கத்தில் தான். அதுவே அவனை நெருங்கி வர வைக்கும் என்பதை அறியவில்லை அவள்.
அவள் கருதியது போல சில வினாடிகள் மௌனம் காத்த வரோதயன், "எங்கட வீட்ட அம்மாக்கு கோபிச்சிட்டு போக ஆள் இல்ல.." என்றான்.
தனாக்கு புரியவில்லை.
"உங்கட அம்மாவுக்கு சகோதரம் இல்லயா?"
"இல்ல, அப்பா உயிரோட இல்ல. இனப்பிரச்சினையில மோசம் பொயிட்டார்.."
மௌனத்தில் வினாடிகள் கழித்தாள் தனா.
"உங்கட அப்பா நல்லவரா இருப்பார்.. அதான் டக் எண்டு பொயிட்டார்.."
வரோதயனை அந்த வார்த்தைகள் சமாதானத்துக்கு பதில் மகிழச்சி படுத்தின.
"அப்பா மிச்சம் நல்வர்.. அம்மாக்கு எங்களுக்கு ஊருக்கு எல்லாருக்கும் நல்லவர்.. நீங்க சும்மா சம்பிரதாயத்துக்கு சொன்னாலும் அது தான் உண்மை.."
"ஆகவும் நல்லவங்க டக் எண்டு கடவுள்ட போயிடுவாங்க. உதவாதவங்க தான் பூமிக்கு பாரமா இருப்பாங்க.."
"அப்டியும் சொல்ல ஏலாது. அம்மா இருக்காங்களே.."
இந்தக் கட்டத்தில் தனா தேங்கினாள். அவளுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மீதுள்ள வெறுப்பும் வஞ்சமும் சேர்ந்து பொத்தப் பொதுவாக பேசி விட்டது வெட்கமாகி போனது.
"நான் இருக்கன் நீங்க இருக்கிங்க.. நாமளும் நல்லவங்க இல்ல எண்டா டக் எண்டு செத்துருவமா.. ஆயுள் அதிகம் இருந்தா அவங்க நல்லவங்க இல்ல எண்டு அர்த்தம் இல்லயே.." என்றான்.
"போன ஜென்மத்தில பாவம் பண்ணினவங்க நீண்ட காலம் இருப்பாங்க பாவக் கணக்குக்கு ஏத்த மாதிரி கஷ்டங்கள அனுபவிக்க.. நன்மை செஞ்சவங்களும் இருப்பாங்க.. நன்மைக்கு ஏத்த மாதிரி சுகம் சந்தோஷம் அனுபவிக்க.. இதுல நான் முதல் வகை.. நீங்க ரெண்டாவது வகை எண்டும் வச்சிக்கொள்ளலாம்.."
வரோதயன் அந்த செய்தியை திருப்பித் திருப்பிப் படித்தான்.
ரமணியிடமாவது மூக்கை சிந்துவாள். கண்ணைக் கசக்குவாள்.தினம் தினம் வகை வகையான தொந்தரவு வந்தாலும் என்ர குடும்பத்தை நான் தான் பார்க்க வேண்டும் என்று விட்டுக் கொடாமல் முடித்து விடுவாள் கடைசியில்.
வரோதயனிடம் அவள் அடி மன அழுத்தங்களும் கசப்புகளும் அப்படியே வெளிப்படுகின்றன..என்று தெரியாமல் பேசுகிறாள்.
நீடித்த மெசேஜில் நேரம் பார்த்தது தனா தான். வருணனின் சத்தம் ஓய்ந்திருக்க, நள்ளிரவில் வீடு தட்டும் தம்பி சமையல் கட்டில் சட்டி பானையை உருட்டி சாப்பிட்டு பாய் விரித்து படுத்தும் இருக்க,
'குட் நைட்' போட்டவள் அலைபேசி டேட்டாவை அணைத்து விட்டு எழுந்தாள்.
அவன் அனுப்பிய குட் நைட் இல் ஆரம்பித்து தனா சொன்ன குட் நைட் வரை நிகழ்ந்த உரையாடலை வாசித்து வாசித்து மனப்பாடம் ஆகியது வரோதயனுக்கு.
மறு நாள் காலையில் அலுவலகத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தயக்கம் தடுமாற்றம் விலகி, உன்னை எனக்கு தெரியும் எனும் பார்வையும் என்னை நீ அறிவாய் எனும் புதுத் தெளிவும் இருவரிலும் கலந்திருந்தது.
"குட் மோர்னிங்" சொல்லி கடந்தவர்கள் அடுத்த மணி நேரமே சேர்ந்து பணியாற்றும் படி வாகன விடையத்தை வரோதயன் கைக்கு மாற்றி முக்கியதை அவனுக்கு சொல்லிக் கொடுத்தாள் தனா.
உள்வரும் அஞ்சல்களை பதிவு செய்யும் பணியை தன் தலையில் தானே தூக்கிப் போட்டுக் கொண்ட கெனீஷா எழுதி எழுதித் தள்ளி புகைச்சலுக்கு ஆளாகினாள்.
தனது சுழல் நாற்காலியை இழுத்துப் போய் பிரார்த்தனா அருகில் போட்டு சிஸ்டத்தில் அவள் காட்டும் கடிதங்களை படிவங்களை கவனித்துக் கொண்டிருந்த வரோதயனையும் அவனுக்கு விரல் காட்டி விளக்கம் கொடுத்த பெண்ணையும் பார்த்துப் பார்த்து புகைந்தாள்.
"வரோதயன், நீங்க வேணும் எண்டா மெயில் எழுதுங்களன்.. நான் பிரார்த்தனா மிஸ்ஸோட வேலை பழகுறன்.. உங்களுக்கு அங்க முன்னுக்கு அவைக்கு பக்கத்தில போய் இடிச்சிக்கொண்டு இருந்து பழக கம்பர்டபிளா இருக்காதே.."
"நான் என்ன சப்ஜெக்ட் எடுத்து இருக்கன் தெரியுமா?"
"இல்ல!"
"வெஹிகிள் சப்ஜெக்ட"
"அப்டி ஒரு சப்ஜெக்டா?"
"இங்க மொத்த கிழக்கு மாகாண கல்வி சார்ந்த வாகன விடயமும் நான் தான் பார்க்கணுமாம்.. எடுக்கிறிங்களா?"
"வேணாம்.. "
தனக்கு கிடைத்துள்ளது எத்துணை பெரிய தலையிடி சப்ஜெக்ட் என்பது புரியாமல் பிரார்த்தனா பக்கத்தில் இருந்து சொல்லித் தருவாள் எனும் இதத்தை அனுபவித்தான்.
அந்த வாரமே புதிய நியமனகாரர்களுக்கான அரச சேவை நிர்வாகம் தொடர்பான அறிமுக பயிற்சி நெறி ஆரம்பிக்க, அலுவலகத்தில் சந்திக்காமல் போனாலும் வாட்சப்பில் தினமும் அவளுடன் பேசினான்.
அதிகமில்லை. ட்ரெயினிங் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்பான். அதில் தொடங்கும். அவள் தெளிவுபடுத்துவாள். அது வளர்ந்து அம்மா வந்துட்டாங்களா… என்று வந்து நிற்கும்.
பேச்சு வாக்கில் அவள் வீட்டில் உள்ள நிலவரம் உறுப்பினர் விபரம் வரை அறிந்தவன், ஐந்து நாள் பயிற்சி முடிந்து அடுத்த வாரம் அலுவலகம் வந்தான்.
பொறுப்பேற்ற மறு நாளே அநாதையாக விட்டுப் போன சப்ஜெக்டை எடுக்க, ஓராயிரம் சந்தேகம் பிறந்தது அதில்.
நினைத்தால் ஏ.ஓவிடம் கேட்கலாம். சி.சி ரமணி கூட விளக்கம் தருவார் ஏ.ஓவை விடவும் தெளிவாக. வரோதயன் பிரார்த்தனா வரட்டும் என்று காத்திருக்க, அன்று தனா குறுகிய விடுமுறை என்றார் ரமணி.
"பிரார்த்தனா மிஸ்ஸூக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இன்னும் முடியல்ல போல.." வரோதயனைத் நாடி வந்திருந்த சாரதி சொல்ல,
"யாருக்கு பிறந்த நாள்?" என்று அதிர்ச்சி காட்டாமல் கேட்டான்.
"பிரார்த்தனா மிஸ்ஸூக்கு நேற்று பிறந்த நாள்.. ஒஃபிஸ் வெல்ஃபெயார் சொசைட்டியால கிஃப்ட் குடுத்தாங்க.."
வரோதயன் நேற்றும் பிரார்த்தனாவுடன் பேசினான். ஒரு வார்த்தை சொல்லவில்லை இதைப்பற்றி.
சந்தேகத்தை ஏ.ஓவிடம் கேட்டு வேலையை முடித்தவன் குறுகிய விடுமுறை எடுத்து, பத்து மணிக்கு அலுவலகம் வந்தவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
சாயங்காலம் பணி முடிந்து கிளம்பும் போது அவனிடம் இருந்து அழைப்பு வந்தது பிரார்த்தனாவுக்கு. குறுஞ் செய்தியாக, வாட்சப்பில் பேசினாலும் அவன் அழைப்பது இதுவே முதல் தடவை.
"ஹெலோ!" என்றதும்,
"என்ர டேபிள் லாக்கர்ல ஒரு பேக் இருக்கு. எடுங்களன்.." என்றான்.
ஏதோ அவசியமானதை விட்டுப் போய் விட்டான், எடுத்து தரக் கேட்கிறான் என நினைத்து அவனது மேசைக்கு சென்று திறந்தாள்.
"வெள்ள ஷொப்பிங் பேக் இருக்கு.. அதுவா?"
"ஓம்! அது உங்களுக்கு தான்" என்றான்.
வயிற்றில் குளிர் பரவ, "என்னது.. ஏன் எனக்கு?" என பதட்டம் கொள்ளும் போது வைத்து விட்டான்.
எடுக்காதே.. மனம் கட்டளை இட்டது.
தனா பையை எடுத்தாள்.
பிரிக்காதே.. கூக்குரல் இட்டது.
பிரித்தாள்
சந்தண வண்ணத்தில் அழகிய நூல் பட்டுப் புடவை, நான்காக மடித்த வெள்ளைக் கடிதத்துடன் சிரித்தது.
படக் படக் படக் என இதயம் தடக்கிட காகிதத்தைப் பிரித்தாள்.