மேல்மாகாணம் கம்பஹா மாவட்டத்தின் 'ராகம' எனும் புறநகர் பகுதி அது. கொழும்பிலிருந்து பதினைந்தே கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த நகரம்.
அங்குள்ள பிரபலமான குளிரூட்டப்பட்ட பல்பொருள் அங்காடி தனில் ட்ராலி தள்ளி நடந்தாள் நிலானி.
சமையலுக்கான புத்தம் புதிய காய் கறிகளுடன், உலர் உணவு பொருள்கள், கொறிக்கும் பைட்ஸ் ஸ்நாக்ஸ் பைகளுமாக அவளுடைய தெரிவில் கூடை நிறைந்திருக்க, பில் போடும் வரிசையில் இணைந்தவள் யாரையோ தேடினாள்.
தேடலுக்குரியவனான அந்த இளைஞன், நாகரிகத்தில் கிழிந்த அரை டவுசரும் டீஷர்டுமாக தொலைவில் ஃபோன் பேசி முடித்து இவளைத் தேடி வேகமாக வந்தான்.
"காட் தாங்க ரிஷி" அவனிடம் அவள் கை நீட்ட,
"உன்னோட அக்கா வந்திருக்காங்களாம் நம்மள தேடி" என்றான் அவன் பரபரப்பாக.
"என்னோட அக்காவா?" நம்பமுடியாத அதிர்ச்சி அவளிடம்.
"ஆமா... உன்னோட அக்கா..."
"ஜோக் பண்றிங்களா…" சிரித்தாள்.
"ஷியாம் கோல் பண்ணான்.. உன்னய தேடிட்டு சிலாபம் போயிருக்காங்க"
"சிலாபமா.. ஷான்சே இல்ல. அக்கா என்னத் தேடி அதுவும் சிலாபம் போக வாய்ப்பே இல்ல"
"நீ அப்படி சொல்ற.. ஷியாம் வேற மாதிரி சொல்றா.. ஷாப்பிங் முடிச்சிட்டியா? ஷியாம் நம்மள வீட்டுக்கு கூப்பிடுறான்" என்றவன் கூடையை தள்ளி கவுண்டரில் கையளித்து, பணம் செலுத்த கடன் அட்டையை கொடுக்க, நிலானி குழப்பத்துடன் ஒதுங்கி நின்றாள்.
பிரார்த்தனா தன்னைத் தேடி வந்திருப்பாள் என்பதை நம்பமுடியவில்லை.
நினைவு தெரிந்து என்ன தேவை உனக்கு என்று கேட்டு வளர்க்கப்படவில்லை நிலானி. இது தேவை என்று கேட்டாலும் அது கிட்டுவதில்லை.
கிட்டாதாயின் வெட்டடென மற என்பது அந்த வீட்டில் முதலில் பிறந்த பிரார்த்தனாவுக்குப் பொருந்தும்.
இளையவளான நிலானிக்கு அது ஏக்கமாகவே தங்கி விடும்.
பத்து விரலும் ஒரு மாதிரி அல்ல!
ஏக்கங்கள் சேர்ந்து ஆசையாக வளர்த்து கனவுகளை விதைத்தே தவிர்த்து, விரலுக்கு ஏத்த வீக்கம் வாழத் தெரியாதவன் பேசும் உருப்படாத பேச்சு என்பது நிலானியின் கொள்கை.
முதலாம் வகுப்பில், பிறந்த நாளில், ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கொடுக்க முடியாது போன வருத்தம் இன்றும் உண்டு அவளுக்கு.
மூத்தவளுக்கு போதாமல் போகும் உடைகள் தாம் இளையவளுக்கு புதுத் துணி. அக்கா பாவித்து கழிக்கும் புத்தகப் பையே நிலானிக்கு புதுப் பை.
பொருளாதார நெருக்கடியை கூட விட்டாலும், வீட்டில் அன்றாடம் ஒவ்வொரு வடிவத்தில் நிகழும் வாய் சண்டையும் தர்க்கமும் பிணக்கும் வெறுக்க வைக்கும்.
வீட்டு சூழலுக்கு பிரார்த்தனா பழக, இனிய உரையாடல், அன்பான அக்கறை, பரிசு பாராட்டு எல்லாம் வாழ்வில் அடிப்படை அம்சங்கள் நிலானிக்கு.
குடிகார தகப்பனின் பஜனையை சகித்து ஓசி சோறு தின்னும் தம்பியின் அலட்டலை பொறுத்து எத்தனை காலம் இருப்பது?
நித்தம் ஒரு வருத்தம் சொல்லி புலம்பித்தள்ளும் ராஜேஸ்வரிக்கு இரண்டு பெண் பிள்ளைப் பற்றி அக்கறையில்லை. இயலாத காலை வைத்துக் கொண்டு புருஷனுடன் மல்லுக்கு நின்று சண்டை வலிக்க மாத்திரம் என்றும் தெம்புண்டு.
வீடா அது?
மூச்சு முட்டும் கூட்டில் இருந்து விடுதலை பெற்று வந்தால், கூட்டுக்கு அக்கறையாம் பறவையை பற்றி?
அடைத்த ஷாப்பிங் பையுடன் வந்தவனை, "உண்மைக்கும் தான் சொல்றிங்களா, ரிஷி.. அக்கா வந்திருக்காவா?" என நம்பமாட்டாமல் கேட்டாள்.
"நீ ஏன்டா நம்ம மாட்டேன்கிற"
"என்ர வீட்ட பற்றி எனக்கு தான் தெரியும்"
"டிரைக்டா போய் பாத்துடலாம்.."
பார்க்கலாம்.
***
தேநீர் பருக அழைத்த ஷியாம் உள்ளே போய் விட்டான். பிரார்த்தனா தெளிவற்ற நெற்றி சுருக்கங்களுடன் அசையாமல் நின்றாள்.
"வீட்டுக்கு வந்தவங்களுக்கு குடிக்க தர கூப்பிடுறார்.. நாங்க இதுலயே நிக்கிறது அழகில்ல.." வரோதயன் எடுத்துச் சொல்ல,
"சொந்த அண்ணியா வரோதயன்.. சொந்த அண்ணாட வைஃபயா இவர் கல்யாணம் கட்டி இருக்கார்?" என்று அவள் தீவிரமாக கேட்டாள்.
அதைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாளா என்று நினைத்தவன் "ம்" என,
"இவருக்கு ஃபர்ஸ்ட் மெரேஜா, செகண்டா?"
"ஃபர்ஸ்ட் தான்.. இவருக்கு இவரோட மாமிட மகள பேசி இருந்ததாம்"
"எப்புடி வரோதயன் சொந்த அண்ணிய கல்யாணம் செய்ய ஏலும்.."
வரோதயன் அவளுடைய கண்ணை ஆழ நோக்கி, "ரெண்டு பேரும் இப்ப கணவன் மனைவி. அவங்கட முந்தைய உறவ பத்தி கதைக்கிறது சரி இல்ல. வந்த வேலை முடியல்ல நமக்கு..."
சுருக் எனத் தைத்தது தனாவுக்கு.
நாகரிகமாக நடந்து கொள் என்கிறான். ஓடிப் போன உன் தங்கையை பற்றி மறந்து போனாயா என்கிறான். இன்னும் அவளை கண்ணில் காணவில்லை அதைப் பற்றி நினை என்கிறான்.
அடிபட்டது போல முகம் சுருங்கிப் போனாள்.
இருவரும் வரவில்லை என்றதும் தேநீரை அவர்களைத் தேடி எடுத்து வந்தான் ஷியாம்.
அமர்ந்து பேச அமைத்திருந்த கல் மேடையில் வைத்தவன் "ரிஷியோட கதைச்சிட்டன். நீங்க வந்திருக்கிற நியூஸ் பாஸ் பண்ணிட்டன். ரெண்டு பேரும் லஞ்சுக்குள்ள வந்துடுவாங்க.." என்றவனை கடைக் கண்ணால் அளவெடுத்தாள்.
அவனது காதல் கதை அவளுள் அதிர்வை ஏற்படுத்தி இருக்க,
"வரோதயன்!" எனக் கூப்பிட்டு வராவுடன் தனியாக பேசினான் ஷியாம்.
இவளைப் பற்றி பேசுவது போல் தெரிய, பிரார்த்தனாவுக்கு அங்கிருந்து அகன்று விட வேண்டும் எனும் எண்ணம் வேரூன்றியது.
ஷியாம் சென்றதும் தேநீர் கோப்பையை சோசருடன் எடுத்து நீட்டிய வரோதயனை "நீங்க குடியுங்க" என மறுத்தவள் முகம் தெளியவில்லை.
"நிலானிட அட்ரஸ் கேளுங்க வரோதயன்.. நாங்க அங்க போவம்"
"அவங்க இங்க வாராங்களாம்.."
"இவர்ட தம்பியா நிலானிட லவ்வர்?"
'இவர்' என ஷியாம் மீதுள்ள மரியாதை ஏறியதை குறித்துக் கொண்டவன் "மச்சான்" எனத் திருத்தி,
"ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துட்டாங்களாம். உங்கட தங்கச்சி தப்பான வழியில போகல்ல. லீகலா கல்யாணம் செய்திருக்கா. நீங்க இப்ப பயம் இல்லாம கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா உங்கட தங்கச்ச பாத்துட்டே ஊருக்கு போகலாம்" என்றான்.
பிரார்த்தனா மௌனத்தை கடைப்பிடித்தாள்.
கோப்பை இரண்டும் ஆவி அடங்கி ஆடை கட்ட, நாகரீகம் கருதி ஒன்றை பருகியவன் தங்கையை பற்றி தெரிந்த பிறகும் ஏன் தளும்புகிறாள் என்று குழம்பினான்.
நிலானி மதியத்திற்கு முன்பு வந்து விடுவாள் என்று காத்திருந்தால், பாலர் பாடசாலைக்கு சென்ற மகனுடன் ஷியாமின் மனைவி திரும்பி வந்தாள்.
இவர்கள் குறி அவர்கள் இல்லை என்று அறிந்து அந்தப் பெண் தெளிந்திருக்க, மதிய சமையலில் இறங்கியவள் குடிக்க குளிர் பானம் கரைத்து வந்து கவனித்தது.
வரோதயன் தான் அதையும் பெற்றுக் கொண்டான்.
"ட்ராவல் வந்த டயர்ட் இருக்கும். ரூம் ரெடி பண்ணி இருக்கன். ரெஸ்ட் எடுக்கலாம். பாத்ரூம் சேர்ந்த மாதிரி உள்ளுக்கு இருக்கு" என்று பிரார்த்தனாவை கூப்பிட, வேண்டும் வேண்டாம் என்று ஒரு வார்த்தை பதில் பேசாதவளுக்கும் சேர்த்து வரோதயன் சங்கடப்பட்டான்.
ஷியாமை, அவன் மனைவி மேகலாவை அலட்சியம் செய்தவளால் பள்ளிக் கூடம் விட்டு வந்த அக்காவுடன் சேர்ந்து "ஆண்டி, சாப்பிட வாங்களே" என அழைத்த சிறுவனிடம் முகம் திருப்ப முடியவில்லை.
ஐந்து வயது பால் முகம் அது. மழலை மாறவில்லை. முன் வரிசை பல் இடைவெளி விட்டு காற்று வாங்க, "எங்க வீட்ட இன்னிக்கு சிக்கன் கறி" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவன் சாப்பிட வாங்க என்று ஒற்றைக் காலில் நின்றான்.
"எனக்கு பசி இல்ல. நீங்க சாப்பிடுங்க.." மெள்ளப் பேச,
"நீங்க தானே கெஸ்ட். நீங்க வராம நாங்க சாப்பிட முடியாதே.. அம்மா நீங்க சாப்பிட்ட அப்பரம் தான் எங்களுக்கு தருவாங்க.."
அது பெரியவர்கள் ஏற்பாடாக இருக்குமோ என்று சந்தேகம் வாராத அளவுக்கு அடம் குழந்தை தனமாக இருந்தது.
"ஃபிஷ் ஃப்ரை இருக்கு ஆண்டி.. பீட்சா மாதிரி எக் ஃப்ரையும் பண்ணி இருக்காங்க அம்மா.." மெனு கூறி ஆசை காட்டியவன் கதையில் வரோதயன் புன்னகைக்க,
"நீங்களும் வாங்க அங்கிள்" என போனால் போகிறது என்று அவனையும் சேர்த்துக் கொண்டனர்.
பிரார்த்தனாவின் கையை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கெஞ்சினர்.
உதற முடியாத பூ விலங்கு அது.
மொட்டுக்களால் தொடுத்த சரம் கொண்டு கையைப் பிணைத்தால் கையை உருவ முடியாது. உருவினால் சரம் உதிர்ந்து மொட்டுக்கள் உதிர்ந்து காலில் மிதிபடும்.
மேகலா உணவு பரிமாற, பிரார்த்தனாவை கை கழுவும் தொட்டிக்கு அழைத்து போய் தங்கள் கையையும் சுத்தம் செய்தனர் சின்னவர்கள்.
உணவு மேசையில் வரோதயனும் ஷியாமும் வெகு கால நண்பர்கள் போல பேசிக் கொள்ள, பரிமாறும் கரண்டிக் கரம் தாண்டி ஷியாமின் மனைவியை ஏறெடுத்தும் பார்கவில்லை பிரார்த்தனா.
போதும் என தனது தட்டில் பதார்த்தங்களை சுருக்கிக் கொண்டவளின் தொண்டையில் உணவு இறங்க படாதபாடு பட்டது.
காய்ந்து கிடந்த வயிற்றில் சிறிதளவு சாதம் போட்டு எழுந்ததும் பாத்ரூம் போக வேண்டிய அவசியம் உணர்ந்தவளுக்கு அதை கேட்கத் தயக்கம்.
அவளுடைய உடல் மொழி புரிந்ததோ என்னவோ "ஃபேஸ் வாஷ் பண்ணணும் எண்டால் வாங்க" என ரூம் காட்டினாள் மேகலா.
ஆசுவாசப்பட்டு வந்தவளுக்காக, துவாலை, பவுடர், சீப்பு எல்லாம் காத்திருந்தன.
"நீங்க ஃப்ரூட் சாலட் எடுக்கல்லயே ஆண்டி" என நறுக்கிய பழக் கிண்ணத்துடன் பிள்ளைகள் வந்தனர்.
வீட்டின் உள்ளேயே வர மாட்டேன் என்று மூச்சு முட்டி வெளிநடப்பு செய்தவள் அந்த அறையில் அமர்ந்து,
"இன்னும் எவ்வளவு நேரம் வரோதயன்?" என மெசேஜ் அனுப்பினாள் ஹாலில் இருப்பவனுக்கு.
"ஷியாம் கதைச்சார். வந்துட்டு இருக்காங்களாம்.."
"பக்கத்தில கடை இருக்குமா.. இந்த சின்ன ஆக்களுக்கு ஏதாவது வாங்கி குடுக்கணும்"
"நான் பார்த்துக் கொள்றன்" என்றவன் வரும் வழியில் கண்ட சில்லறை கடையை நினைவு வைத்து சின்னவர்களை அழைத்து கொண்டு கிளம்பினான்.
அவனது நோக்கம் புரிந்து ஷியாம், "அவங்கள நம்பி கூட்டி போகாதிங்க வரோதயன். கடையவே காலி செய்வாங்க.." என கிண்டல் செய்து "அங்கிளுக்கு அதிகம் தொந்தரவு குடுக்காதிங்க.." என சொல்லி அனுப்பினான் பிள்ளைகளை.
கடைக்கு போனவர்களும் வந்து விட்டனர். ஷியாம் மனைவி மேகலா மாலைத் தேநீர் ஊற்றினாள்.
"ஆண்டி இந்தாங்க!" என தாங்கள் வாங்கி வந்த சாக்லேட்டில் பங்கு தந்து அவளும் வரோதயனும் சாப்பிட வேண்டும் என அடம் பிடித்த பிள்ளைகள், ஷியாமை சுற்றி வந்து அவன் பேச்சுக்கு அடங்கும் சிறுசுகள் தந்தையை இழப்பது எவ்வளவு அநியாயம் என்று தோன்றியது.
ராஜேஸ்வரியிடம் இருந்து அழைப்பு வர, என்ன கோளாறோ என்று பயந்து வெளியே வந்தாள்.
அலைபேசியில் தாயார் அழுதார்.
"சொந்த காரர் வீட்ல நிக்கிறன் அம்மா. நிலானி இருக்கிற இடம் தெரிஞ்சிட்டு. வந்துட்டு இருக்காளாம். பாத்துட்டு வெளிக்கிடுவன். நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அங்க உள்ளவங்களுக்கு முன்னுக்கு மானத்த வாங்காதிங்க" என்றதும் ராஜேஸ்வரியின் ரூபமே மாறியது.
"புருஷன் புடிச்சிட்டு தான் போயிருக்கிறாவா... இப்படி பட்ட பிள்ளைக்கு பின்னால நீ போனியா பிள்ள..." என ஆக்ரோஷம் அடைந்தார்.
"அவள் எப்படியோ போகட்டும். நீ ஊருக்கு வா. தனிய நீ என்ன துன்பம் அனுபவிக்கிறியோ எண்டு தவிப்பா இருக்கு. சாமத்தில கனவு கண்டன் பிள்ள. மனசு நல்லா இல்ல. தகப்பன் சாப்பாடு இல்லாமல் வெறும் லயித்துல குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடந்தாராம்.. விமல் வந்து சொன்னான்.." ராஜேஸ்வரி அந்தப் பக்க நிலவரங்களை அறிவிக்க, பிரார்த்தனாவுக்கு தலை விறைத்தது.
வாசலில் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்க, உயரமான பைக்கின் பின்னால் இருந்து நிலானி இறங்கினாள்.
நெட்டை இளைஞனுடன் ஜோடிமாக நுழைந்தவளை ஷியாம் எதிர்கொண்டான்.
பிரார்த்தனா இருந்த பக்கம் கை காட்டி ஷியாம் கதைக்க, அவளுடன் வந்தவன் கழன்று, நிலானி மாத்திரம் பிரிந்து இங்கே வருகிறாள்.
வயிறு வேகமாக சுருங்கி விரிந்தது பிரார்த்தனாவுக்கு.
எதிர்முனையில் ராஜேஸ்வரி கத்திக் கொண்டிருக்க, நான்கு நாளில் நடை தவிர்த்து உடை பாவனை மாறிய தங்கையை பார்த்தாள்.
முட்டியில் கிழிந்த பேண்ட், தொள தொளா டாப், தலை முடி கத்தரித்து கலர் செய்து போட்ட போனிடெய்லில் நாகரீகம் மாறி இருந்தாள்.
நிலானி நெருங்க நெருங்க, ஏன் இங்கு வந்தோம் எதற்கு வந்தோம் என்று கேள்வி அம்பு பிரார்த்தனாவைத் துளைத்தது.
ஜோராக இருக்கிறாளே அவள்! இவள் தான் தூக்கம் தொலைத்து உணவு தவிர்த்து ஆண்பிள்ளையை கூட்டிக் கொண்டு அலைகிறாள்!
வெறும் நான்கே நாட்களில் அழகு நிலையம் சென்று பாலிஷ் ஏற்றி இருப்பவள் அருகில் வந்ததும், கல் மேடை விட்டு எழுந்த பிரார்த்தனா நிலானியைத் தாண்டி நடந்தாள்.
"அக்கா.." நிலானி அழைத்தது அவளுக்கு கேட்கவில்லை.
வரோதயன், ஷியாம், புதியவன் மூவரும் முற்றத்தில் பேசிக் கொண்டு நிற்க, அவர்களையும் கடந்து வீட்டினுள் சென்றவள் தனது தோள் பை, வரோதயனுடைய பேக்குடன் வந்து, "போவம் வரோதயன்" என்றாள்.
வரோதயன் அவளையும் பிரார்த்தனாவின் பின்னால் வந்த நிலானியையும் பார்க்க,
"வந்த வேலை முடிஞ்சுது வரோதயன். போவம்" என்று அழுத்தமாக பேசியவள் அவனுடைய பையை அவனிடம் கொடுத்தாள்.
"சிஸ்டரோட கதைச்சிட்டிங்களா?"
"நிலா.. நீ பேசினியா.. ஏதாவது தப்பா பேசினியா?"
"சேர், நான் கதைக்கவே இல்ல.."
சிறு குழப்பம் அங்கே.
அவர்கள் பேசித் தீர்க்க முயல, பிரார்த்தனா நடையை கட்டினாள்.
ஷியாமிடம் தலை அசைத்து விடைபெற்றவன் அவளைத் தொடர்ந்தான்.
***
கரு நீலமும், ஊதாவும் குழைத்து வண்ணம் பூசி இருந்தது வானம். இருண்ட இரவுக்கு வெளிச்சம் ஊட்ட வெள்ளிகளை விதைத்தது.
புறக்கோட்டை புகையிரத நிலையத்தில், திருகோணமலை புறப்பட தயாராகவுள்ள ரயிலின் முதல் வகுப்பில் ஜன்னல் பக்கம் சாய்ந்து கண் மூடி இருந்த பெண்ணை பார்த்திருந்தான் வரோதயன்.
ஷியாம் வீட்டில் இருந்து கிளம்பி நடையில் பேருந்து நிலையம் அடைந்து, அங்கிருந்து கொழும்பு பஸ் பிடித்து, கோட்டை ரயில் நிலையம் அடைந்து, ரயில் ஏறியதும் கண் மூடி சாய்ந்தவளை, அசந்து தூங்கியவளை எதிரில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.
வண்டி புறப்படும் , வேளையில் இரு சிங்கள சகோதர்கள் வந்து சேர்ந்தனர். வரோதயன் எழுந்து பிராத்தனா அருகில் உட்காரவும், ரயில் கூவலில் கலைந்து அவள் எழவும் சரியாக இருந்தது.
தூங்கி விட்டேனா என்ற சங்கோஜத்துடன் புதியவர்களையும் கண்டவள் நிமிர்ந்து அமர்ந்து முகத்தில் கலைந்து விழும் கூந்தல் முடி ஒதுக்கினாள்.
கிட்டத்தட்ட அரை மணி நேர ஆழ் தூக்கம் அவளுக்கு அமைதியை கொடுத்திருக்க, எதிர் ஆசனத்தில் சிங்களத்தில் எதைப் பற்றியோ காரசாரமாக விவாதம் போக,
"உங்களுக்கு என்னால கஷ்டம் வரோதயன்.." என்றாள் சின்னக் குரலில்.
வரோதயன் கை கட்டி இருந்தான் எதுவும் கூறாமல்.
"ரமணி அக்கா சொன்ன மாதிரி தேவை இல்லாத அலைச்சல் இது. இதுல மூணாவதா உங்களை இழுத்துட்டு வந்து மெனக்கெடுத்திட்டன்" என ஜன்னலில் ஓடும் காட்சிகளை பார்த்து பேச,
"உங்கட தங்கச்சி சேஃபா தான் இருப்பா.. லவ்வரோட தான் போயிருப்பா எண்டு முதல்லே தோணினது.. நீங்க பயந்த மாதிரி விபரீதம் ஒண்டும் ஆக இல்ல என்றது உங்களுக்கு தெரிஞ்ச தால தான் இப்ப உங்கள மறந்து தூங்க முடிஞ்சது.. அது போதும்.. கூடுதலா யோசிக்காதிங்க..."
பிரார்த்தனா அவனைப் பார்த்தாள்.
"ஒரு சந்தேகம் பிரார்த்தனா..கேக்கலாமா "
"தேடிப் போன பிள்ளையோட கதைச்சி இருக்கலாம் நீங்க.. சண்டையாவது போட்டிருக்கலாம்.. பேசாம விட்டுட்டு வந்தது தண்டன மாதிரி இருக்கு. 'நீ நல்லா தானே இருக்கிறாய். நான் பாத்துட்டன். அது போதும். இதுக்கு மேல உன்னோட எனக்கு கதை இல்ல. நான் கோபமாக இருக்கன்.. இவ்வளவு தூரம் தேடி வந்து உன்னோட கதைக்காம போறதே உனக்கு பெரிய தண்டனை' என்ற மாதிரி இருக்கு"
"தங்கச்சிக்காக பதறின பிரார்த்தனாக்கு வஞ்சம் வைக்கவும் தெரியுமா??"
பிரார்த்தனா ஓடும் காட்சிகள் புறம் பார்வையைத் திரும்பினாள்.
"நான் தங்கச்சோட மட்டுமா கதைக்க இல்ல? சாப்பாடு சேவ் பண்ணி நம்மள கவனிச்சாங்களே, ஷியாம்ர வைஃப்.. அவங்களோடவும் தான் கதைக்க இல்ல.."
வரோதயனும் அதை கவனித்திருந்தமையால் ஓம் மௌனமாக ஆமோதிக்க,
"கதைக்க கூடாது எண்டு இல்ல. எனக்கு கதைக்க வரல்ல. அது.... அவங்களுக்கு இருக்கிற அதிஷ்டம் எனக்கு இல்லையே என்ற பொறாமையால இருக்கலாம்.."
"எனக்கு மட்டும் ஏன் இப்புடி வாழ்க்கை அமையல்ல என்ற வயித்தெரிச்சலாலயும் இருக்கலாம்.." என்றாள்.
தோளுரசும் நெருக்கத்தில் இருக்கும் பெண்ணை கூர்ந்து நோக்கினான் வரோதயன்.