சாயங்கால கடலை வண்டியின் பிரத்தியேக மணி ஒலித்தது வீதியில்.
பூச்செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த பிரார்த்தனா கேட்டில் ஸ்கூட்டி சத்தமும் கேட்டாள்.
குழாயை மூடி விட்டு வர, வண்டி விட்டு இறங்கி ஸ்டான்ட் போட்டார் ரமணி.
"அக்கா.. வாங்க.. சொல்லல்லயே வாரன் எண்டு.. ஷாலுவ க்ளாஸ்ல விட்டு வாறிங்களா?"
முகம் பார்த்த ரமணியின் மௌனப் பார்வையில் வித்தியாசம் உணர்ந்து உள்ளே அழைத்து உட்காரக் கதிரை போட்டவள் சமையல் கட்டிற்கு நகர்ந்தாள்.
ஞாயிறுகளில் கையில் பிடிக்க முடியாது ரமணியை. அன்று ஒரு நாள் தான் எல்லோரும் வீட்டில் இருப்பர். காலை பலகாரம், மதியத்தில் ஸ்பெஷல் லஞ்ச், பின்னேரத்தில் ஒரு கண்ணுக்கு தூக்கம், துயில் எழுந்து டீ ஸ்னாக்ஸ், இரவு உணவு என ஆட விட்டு புற வாசல் வழியாக டாடா காட்டி இருக்கும் வார விடுமுறை.
இத்துணை நெருக்கடியில் இவளைத் தேடி அவர் வரும் அவசரமே இல்லை.
முகம் வேறு சரியில்லை!
மனம் தடக்கிட, தண்ணீர் எடுத்து வந்து தந்தவளின் சிவந்த கரம் கண்டு "இதென்ன தனா, நெருப்பு சுட்ட மாதிரி பொங்கிப் போய் இருக்கு?" எனப் பதறினார் இறுக்கம் தளர்ந்த ரமணி.
"அது ஒண்டும் இல்ல.. சுடு தண்ணி ஊத்திட்டுது அக்கா"
"சுடு தண்ணியா, கொதி தண்ணியா?"
"கொதி தண்ணி தான்?"
"எப்ப நடந்த, மருந்து போட்டிங்களா?"
"ஓம், எரிகாயத்துக்கு பூசுற ஒயின்மன்ட் போட்டன்"
"என்ன பிள்ள பார்த்து வேலை செய்ய மாட்டிங்களா.. இப்புடி பொங்கி இருக்கு.. எப்ப ஊத்தின?"
"முந்த நாள் இரவு.."
புருவங்கள் இடுங்க "வெள்ளிக்கிழமை இரவா?"
"ஓம்.. இதாலதான் நேற்று OT செய்ய வரல்ல. சரி அத விடுங்க.. நீங்க இந்த நேரத்தில இவ்வளவு தூரம் வந்திருக்கிறிங்க.... கோல் எடுக்கவும் இல்ல" தங்களின் திடீர் விஜயத்தின் நோக்கம் என்ன என்ற வினா அறுந்தறுந்தே வர,
அவளை உற்றுப் பார்த்த
ரமணி "நாம தனிய கதைக்கணும் தனா" என்றார்.
வயிற்றில் ஏதோ திரண்டது
பிரார்த்தனாவுக்கு.
ராஜேஸ்வரி மறு பக்கம் படுத்திருக்க, படுக்கை அறை அழைத்துச் சென்றாள் அவரை.
உரிமையாகவே அவளது கட்டிலில் அமர்ந்தவர் "ஒவ்வொருத்தருக்கும் அவங்கள சுத்தி நிறைய வட்டங்கள் இருக்கும் தனா. அதுல மிக குறுகின வட்டத்துக்குள்ள தான் அவங்க இருப்பாங்க. அதுக்குள்ள நுழைய வேற ஒருவருக்கும் அனுமதி இல்ல. பெத்த அப்பா அம்மா, கூடப்பிறந்த சகோதரம் பெத்த பிள்ளை கட்டின புருஷன் பொஞ்சாதிக்கு கூட இடம் இருக்காது அதுக்குள்ள. நமக்கான அந்தரங்கம் அந்த குறுகின வட்டத்துக்குள்ள தான் அடக்கம். அதப்பத்தின பகிர்தல் யாரோடவும் செய்து கொள்ள மாட்டம்.. இது எல்லோருக்கும் பொருந்தும். அத தெரிஞ்சி கொள்ள நினைக்கிறதும் அநாகரீகம்"
ஆழமாக பேசும் ரமணிஅக்காவை பார்த்தாள் பிரார்த்தனா. நெருடல் அவள் வயிற்றில் ஊர்ந்தது.
"அக்கா... வரோதயன் கதைச்சவரா உங்களோட?" மெள்ளக் கேட்டாள்.
அவளை முறைத்த ரமணி "எங்க வாரன் எண்டு வடிவா விளங்குது என?" என்றார் கோபமாக.
"என்னப் பற்றி என்ர வீட்ல நடக்கிற குடும்பக் குழப்பம், அம்மாவோட உருவாகிற சண்டை பாலுட்ட கூட சொல்லாம மறைச்ச பல விஷயங்கள் ஷாலுட ஸ்கூல் டீச்சர் ரோங்கா கதைச்சது முதற் கொண்டு, கூட பிறக்காத தங்கச்சியா, எனக்கு பிறக்காத முதல் மகளா உங்கள பாவிச்சி நான் சொல்லி இருக்கிறன் தனா.. "
"ஓம் அக்கா.."
"உங்களோடு மனம் விட்டு பேசினா பாரம் குறையிற மாதிரி இருக்கும் எனக்கு. ஒரு ஆறுதல் கிடைக்கும். அந்த வகையில நான் மட்டும் தான் உங்கள நினைச்சிருக்கன்.. நீங்களும் எல்லாம் என்னிட்ட சொல்றிங்க பகிர்ந்து கொள்றிங்க எண்டு பிழையா நினைச்சிட்டு இருந்துட்டன்"
"அ-க்-கா.."
"எனக்கு இப்பவும் மனசுல ஒரு நம்பிக்கை, உங்கள்ள ஆர்வம் காட்டுற வரோதயன குழப்பி விடத் தான் கதையக் கட்டி சொல்லி இருப்பீங்களோ எண்டு.."
பிரார்த்தனா தலை குனிந்து "வரோதயன் என்ன சொன்னார் அக்கா?" என்று கேட்டாள்.
"கதைக்க இல்ல. என்னக் குற்றம் சாட்டினார்.. சந்தர்ப்பவாதியாம் நான். சுயநல வாதியாம். பட்டம் தந்திருக்கிறார் எனக்கு"
நிமிர்ந்து குழம்பினாள்.
"நீங்க கல்யாணம் கட்டிட்டிங்களாமே.. உங்கட வீட்டு காரன பிரிஞ்சி இருக்கிறிங்களாம்.. இதெல்லாம் எனக்கு தெரிஞ்சி இருந்தும் உங்கட வாழ்க்கையை சரி செய்ய நான் ஒரு முயற்சியும் செய்ய இல்லையாம்.. கதைக்கவும் சிரிக்கவும் சேர்ந்து சாப்பிடவும் என்ர வேலைகள சுமத்தி செய்து முடிக்கவும் தான் உங்கள பயன்படுத்துறனாம் நான்.. கூட இருக்கிறவங்களுக்கு நல்லது செய்யாத எனக்கு நல்லதே நடக்காதாம்.. அந்த பெடியன் என்னென்னனவோ அடுக்கிறார்.." ரமணி கொட்ட,
சோகமாக சிரித்த தனாவின் முகத்தில் சில புள்ளி சந்தோஷமும் தெரிந்தது.
'எனக்கு ஓல்ரெடி கல்யாணம் ஆகிட்டு வரோதயன்.. பத்தொன்பது வயசுலயே எனக்கு எல்லாம் முடிஞ்சுது' என்றவளுக்கு அவனது கண்ணில் தெரிந்த அதிர்ச்சி, சாமரமே வீசியது.
'
என்ன சொல்றிங்க.. எப்ப? யாரோட?' ஒரு கோர்வை வினாவை எதிர்பார்த்தாள் அவனிடம் இருந்து.
பாவம்! குண்டு வாங்கிய நிலம் மீள்வதற்கு காலம் வேண்டுமே!
வீடு வந்தவள் கோயில் இருந்து எடுத்து வந்த அன்னதான பொட்டலத்தை ராஜேஸ்வரியிடம் கொடுக்க மறந்தாள்.
புடவை மாற்றும் போது அவளது அசமந்த போக்கால் முந்தானை ஊசியில் விரலைக் கிழித்தாள்.
குமிழ் குமிழாய் கொதித்த உலையில் கழுவிய அரிசியை போடுகையில் அடுப்புக்கு வெளியே எரிந்த நெருப்புக் கொள்ளி சுட்டு, உதறிய கை தட்டுப்பட்டு பானையே சரிந்து ஊற்றியது.
மின்சாரம் எரிவாயு இரண்டையும் சேமிக்க சோறு சமைக்க மட்டும் விறகடுப்பை பயன்படுத்துவாள். கறிக்கு மாத்திரமே கேஸ் அடுப்பு. எப்போதேனும் சமைக்க வரும் நிலானியே ரைஸ் குக்கருக்கு வேலை கொடுப்பவள்.
கரண்ட் கட்டணத்தை யோசித்து ஃப்ரிட்ஜ் பாவனை இன்மையால் ஐஸ் கட்டிக்கும் வழியில்லை. கொப்பளித்த கையை பச்சை தண்ணீரில் அமிழ்த்தியும் வெளியே எடுத்ததும் எரிந்தது.
சிறு விபத்தும் நேராது நிதானமாக நடந்து கொள்ளும் பெண் 'நான் திருமணம் ஆனவள்!' என்று வரோதயனிடம் அறிவித்த பொழுதில் இருந்து நிதானம் தப்பினாள்.
வலி..
அதீத வலி..
மன வலியை மடை மாற்றும் கை எரிச்சலால் சில மணிநேரம் தாக்கு பிடித்தாள்.
சமையல் மேடையில் வைத்த அலைபேசியை அடிக்கடி கவனித்தாள்.
சமையல் முடிஞ்சிதா.. என்ன கறி வச்சிங்க.. கேள்விகள் கிடைக்கவில்லை. புலனம் சப்தம் இன்றி உறங்கியது.
கழுவிய அரிசியை குக்கரில் போட்டு பொரியலுக்கு கத்தரிக்காய் உருளைக்கிழங்கு அரிந்து மிளகாய் மஞ்சள் தூள் கலந்து கை எரிச்சலை அதிகப்படுத்தினாள்.
உணவு கொடுக்கும் போது கோயில் விசேஷம் பற்றி கேட்ட ராஜேஷ்வரி, 'விமலனுக்கு தொழில் செய்ய காசு தாரன் எண்டெல்லா, லோன் போட்டியா? வெளியில வட்டிக்கு எண்டாலும் கேட்டு பாரன். ஒரு தொழில் அமைஞ்சா தான் பொறுப்பு வரும் அவனுக்கு. தொழில் இல்லாம கெட்டு அலைஞ்ஞால் யார் பொண் தருவாங்க?' என்றதும்,
ஆஹா! கடைசி மகனின் கல்யாணம் பற்றிக் கவலை வந்து விட்டது பெற்ற தாய்க்கு என அவர் முகம் பார்ப்பதை தவிர்த்தவளுக்கு நெஞ்சு காந்துவது முதல் முறை அல்ல.
அன்றிரவு ஊண் உறக்கத்தை அலைபேசித் திரையில் தேடினாள்.
சாப்பிட்டச்சா... என்று ஒன்பது மணிக்கு வந்து விடும். அதுவும் தவறியது.
ஒரு நிமிடம் முன்பும் ஒன்லைன் வந்து போயிருந்தவன் இனி அக்கறைப்படப் போவதில்லை.
வெறும் நட்பாயின் என்றும் போல் பேசுவான்.
அவன் மனதில் உள்ளதை அறியாம
லா?
வயிறு வெளிவாங்கி அமுங்கி பெரு மூச்சு வெளிவர, படுக்கை முள்ளாகி, இமை இரண்டும் ஒட்டிக் கொள்ள மறுத்தது.
வருணன் பஜனை முடித்து குறட்டை விட, டீவியில் விமலன் வைத்த சினிமா ஓய்ந்திருக்க, எழுந்து வராண்டாவில் அமர்ந்தவள் இருவரும் பேசிய புலனச் செய்திகளை படித்தாள்.
உப்பு பெறாத அரட்டை தவிர்த்து, அவளை அறிய முற்பட்ட அவனது நுணுக்கமான வினாக்கள், அவள் அளித்த பதில்கள் பிரார்த்தனாவின் தூக்கத்தை தூரம் ஆக்கின.
'படுக்கல்லயா நீ?' இருபத்தி நான்கு மணி நேர விழிப்புணர்வுடைய ராஜேஸ்வரி ஜன்னலில் ஃபோன் வெளிச்சம் கண்டெழுந்து கேள்வி எழுப்பினார்.
'நித்திர வரல்ல..' என்றவளுக்கு, புதுப் புடவை உடுத்தி கோயில் போய் வந்தமையால் கண்ணூறு விழுந்துள்ளது, திருஷ்டி கழித்திருக்க வேண்டும். எனக்கு தான் எதற்கும் இயலாதே எனப் புலம்பினார். பனியில் உட்காராதே காய்ச்சல் வரும் உள்ளே போ என்று நச்சரித்தார்.
படுக்கைக்கு சென்றவள் சுவரில் சாய்ந்து மோட்டைப் பார்த்தாள்.
இப்போது என்ன வேண்டும் எனக்கு? கேட்டுக் கொண்டாள்.
வேண்டியதை அடைந்து கொள்ளும் தைரியமும் தெளிவும் இன்றித் தவித்தாள்.
வரோதயனின் ஆரம்ப நாள் குறுஞ்செய்திகளை மறுபடியும் மீட்டினாள்.
பெண்ணை அறிய முற்படும் போது ஆண் காட்டும் சுவாரஸ்யம் அலாதி ஆனது. வரோதயனின் சாட் ஹிஸ்ட்ரி நாக்கடியில் கற்கண்டாக இனித்தது. அதுவே அடி வயிற்றில் கசந்தது.
வெள்ளி இரவு விடிந்து, சனியும் கழிந்து, ஞாயிறு அந்தியும் மங்கி விட்டது. ஒரு தகவல் இல்லை வரோதயனிடம் இருந்து.
முடிந்து விட்டது அவன் சகவாசம்!
ச்சீ ச்சீ இந்தப் பழமும் புளிக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்பவள் ரமணியிடம் பேசி இருக்கிறான் என்று அறிந்து குளிர்வது விரோதமே!
"நேற்று வந்த பெடியன் ஒரு கொடுமையான சுயநலவாதி மாதிரி பேசுறான் என்னை என்றன்.. சிரிக்கிறீங்க பிள்ள நீங்க?"
"அது அவர்ட கருத்து அக்கா. நமக்குள்ள உள்ள ரிலேஷன்ஷிப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?"
"இந்த மழுப்பல் கதை வேணாம். நமக்குள்ள உள்ள ரிலேஷன்ஷிப் எந்த மாதிரி எண்டு எனக்கே சந்தேகம் வருது இப்ப..?"
"என்ன ரமணி??"
"அவன் சொன்னதெல்லாம் என்ன தனா.. ஏன் அந்த பெடியன குழப்புறிங்க.. விரோதயன் உங்கள விரும்புது தனா.. அந்த ஒரு விஷயம் மட்டும் க்ளீயரா விளங்குது எனக்கு. அந்த சந்தோஷத்த அனுபவிக்க ஏலாம விசர் மாதிரி கதை சொல்லி வச்சிருக்கிறிங்க நீங்க.." ரமணி ஆக்ரோஷமாக பேசினார்.
"அக்கா, கதை இல்ல.... யாராவது இந்த விஷயத்தில பொய் சொல்வாங்களா??" பிரார்த்தனாவின் குரல் வரட்சியடைய,
நிதானித்தார் ரமணி.
"நான் மெரீட் அக்கா.... எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சது உண்மை" என்றாள் வேகமாக.
வாயடைத்து போனார் ரமணி. மூன்று வருடங்களாக நகமும் சதையும் போல் பழகியவர் அவளைப் பற்றி அவள் வீட்டை பற்றி நன்கறிந்தவர், அதிர்ச்சி தாளவில்லை.
"அக்கா, உங்களுட்ட பொய் சொல்ல வராது எனக்கு. மறைக்க நினைக்க இல்ல நான். சொல்லப் பிடிக்கல்ல. என்ர பாஸ்ட் பத்தி கதைக்க பிடிக்கல்ல.. நானே கடந்து போக நினைக்கிறத சொல்லி கலகலப்பா பழகுற உங்கள பாவம் போல பார்க்க வச்சிரக் கூடாது எண்டு நினைச்சன்..."
ரமணிக்கு வெறுமை வியாபித்த ஸ்தம்பித்தது போல ஆனது மூளை.
வரோதயனை ஜோடி சேர்க்க ஆசைப்பட்ட அவரது எண்ணத்தில் மண் விழுந்து இனி இவள் கடந்த கால வாழ்க்கையை கேட்டறிந்து அவளது கணவனுடன் அவளை சேர்த்து வைக்கும் பொறுப்பையும் தூக்கி சுமக்க தயாராவதை போல,
"ரெஜிஸ்டர் மேரேஜ் மட்டும் தானா.. இல்லாட்டி..."
பிரார்த்தனா அந்தக் கேள்வியில் இறுகினாள். மறு புறம் திரும்பினாள். "வேணாம் அக்கா.. அத பத்தி கதைச்சி வீண் வேதனை தான்.. ஒரு நன்மையும் ஆக போற இல்ல.."
அவளை
நெருங்கிய ரமணி தோள் பற்றி திருப்பி அவளது நாடி தொட்டு நிமிர்த்தினார். கண்ணடி சிவக்க, அழுகை அடக்கப்படுவதை கண்டார்.
"பாருங்க அம்மாச்சி, உங்கள அப்டி எல்லாம் விட ஏலாது. என்ன பிறத்தி ஆளா நினைக்கிறிங்களா.. இல்ல தானே.. இவ்வளவு தூரம் ஆன பிறகு நான் பேசாமல் போனால் வரோதயன் சொன்னது உண்மை எண்டு ஆகும். நீங்க என்ன வெறுத்தாலும் சரி எனக்கு அடிச்சாலும் சரி, நடந்த கதை எல்லாம் தெரிஞ்சே ஆகணும் தனா எனக்கு. என்னமோ அநியாயம் நடந்திருக்கு எண்டு மட்டும் விளங்குது.. சொல்லுங்க" அவர் குரல் அவளுக்காக கசிந்து உருக,
என்னமோ அநியாயம் நடந்திருக்கிறது இந்தப் பெண்ணுக்கு என்பதை உணர்ந்த அவரது அணுகுமுறையில் கட்டுப்பாடுகள் உடைபட்டு அவர் தோளில் முகம் புதைத்தாள் பிரார்த்தனா.
அவளை விட உயரமும் பருமனுமான பெண்மணி அவர், அணைத்துக் கொண்டு முதுகை நீவி விட்டார்.
சிறு முடிச்சை அவிழ்த்ததும் முத்தாரமே உதிர்ந்து கொட்டுவது போல ஆறாத புண்ணை மனம் திறந்து பிரித்துக் காட்டினாள் தனா.
அவ்வப்போதே பதில் கொடுக்கும் ரமணி, அவள் கையை தன் கைக்குள் வைத்து அழுத்தி குறுக்கு கேள்வி கேட்டார். சந்தேகம் கேட்டார்.
தட்டிக் கொட்டி பாரத்தை
சிந்தி விட்டு அடங்கிய சில்வர் குடமாக,
"இதுக்கு பிறகு எனக்கு எப்டி அக்கா கல்யாணத்துல நம்பிக்கை வரும்? ரிலேஷன்ஷிப்ல நம்பிக்கை இருக்கும்? எனக்கு இப்டியே சிங்கிளா இருக்க புடிச்சிருக்கு.. எந்த எதிர்ப்பும் இல்லாம.. ஏமாற்றமும் இல்லாம.. அமைதியா போற வாழ்க்கை ஓகே எனக்கு. நிறைய அழுதுட்டன். நிலைக்குமா நிலைக்காதா கிடைக்குமா கிடைக்காதா யோசிச்சு யோசிச்சு பயந்து பயந்து... போதும் டா சாமி எண்டு இருக்கன்.."
"கல்யாணம் இல்லாத வாழ்க்கை ஒரு விடுதலை அக்கா.. நான் அந்த விடுதலைய லைஃப் லோங் அனுபவிக்க விரும்புறன்.."
முற்றும் துறந்த முனி போன்ற பேச்செல்லாம்
அருவி போல கொட்டும் அவளை குறுக்கிடாமல் விட்டார் ரமணி.
அவளுடைய நிலைப்பாட்டை அவர் ஆமோதிப்பதாக எடுத்துக் கொண்டு மூச்சு விட்டாள்.
ஈரம் காய்ந்த அவளது கன்னம் துடைத்து இறுக்கமாக அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து விடுவித்த ரமணி,
தேநீர் ஊற்றி தரச் சொல்லி கேட்டுக் குடித்து விட்டே அங்கிருந்து கிளம்பினார்.
இரண்டு நாள் சஞ்சலத்தில் உறக்கம் தொலைத்த பெண் அன்றிரவு நன்றாகவே தூங்கியது.
"விமல்! என்ன கடை போடப்போறா.. எவ்வளவு தேவைப்படும் எஸ்டிமேட் எடுத்து வடிவா தா.. காசு அரேஞ்ச் பண்ணணும்.." அலுவலகம் கிளம்ப முன் தம்பியிடம் நம்பிக்கையாக பேசினாள்.
முகம் கழுவி வந்து டீவியில் பத்திரிகை கண்ணோட்டம் வைத்த
வருணனுக்கும் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள்.
நெடு நாள் மறைத்து வைத்திருந்த ஒன்றை ரமணியிடம் இறக்கி வைத்த தெளிவுடன் அலுவலகம் வந்ததும் சுறுசுறுப்பாகவே இயங்க முற்பட்டாள்.
அவளுக்கு அடுத்து ஃபிங்கர் வைத்த வரோதயனைக் கடக்கும் போது இதயம் ஸ்ருதி தப்புவது பிடிக்கவில்லை.
பின்னால் அவன் அமர்ந்ததும் முதுகை துளைப்பதை போன்ற உணர்வை தடுக்க முடியவில்லை.
ப்ராஞ்ச் மாற வேண்டுமோ?
வாகன சப்ஜெக்டில் ஏதோ சந்தேகம் கேட்டு ரமணியிடம் நின்றவனை கண்டு கொள்ளவில்லை அவள். அதன் பிறகு அவனை அந்தப் பக்கமே காணவில்லை.
இது முதல் நாள். இது போல் இன்னும் எத்தனை எத்தனையோ கழிக்க வேண்டும்!
நான்கு நாற்பதுக்கு
பிங்கர் வைத்து கிளம்பியவள் அவளைத் தொடர்ந்து பெருவிரல் அழுத்தியவனை கவனிக்கவில்லை.
படி இறங்கி வாயிலுக்கு வந்து பஸ்ஸில் ஏறும் போது அவன் பார்க்கிங்கில் பைக் எடுப்பதை கண்டாள்.
முன்னால் சென்ற பேருந்து, அரை வட்டம் அடித்து திரும்பி வரும் போது, வரோதயனின் வண்டி வாயிலில் செக்யூரிட்டி கூண்டருகில் நின்றது.
அவன் எங்கே எனக் கண்ணால் தேடிய
வள் அருகில் அமர்ந்தவன் "என்னயா தேடுறிங்க.." என்றான்.
தோள் உரசிய அவனது மூச்சு காற்று தீண்டி செவிப்பறை சிலிர்க்க, "இல்ல.. என்ன நீங்க பஸ்ல?" தடுமாற,
"உங்களோட ஒரு முக்கியமான விஷயம் கதைக்கணும்.."
ஜன்னலுக்கு வெளியே பார்த்தவள் "என்ன?" முணுமுணுக்க,
"முறையா டிவோர்ஸ் வாங்கிட்டிங்களா நீங்க??"
திடுக்கிட்டுத் திரும்பினாள்.
"முதல் கல்யாணத்துல இருந்து சட்டபூர்வமா பிரிஞ்சிட்டிங்களா எண்டு கேக்குறன். ஏன் எண்டால் நாளைக்கு நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்ய போகும் போது பிரச்சினை வரக் கூடாதே.. "
"வ-ரோ-த-ய-ன்.." அவள் அதிர,
"ஓம்! நான் தான்" அவன் உதட்டில் மந்தகாசம்.