நிலானிக்கு டெங்கு காய்ச்சல் இனங்காண பட்டதும் 'என்னத்த பாத்துட்டு இருந்தீங்க.. பிள்ளைக்கு வொமிட் பண்ற ஸ்டேஜ் வரைக்கும் காய்ச்சல வச்சிட்டு இருந்திருக்கிறீங்க.. இது சிவியர் ஸ்டேஜ். ஊருக்குள்ள டெங்கு கேஸ் மோசமா பரவுறத பத்தி தெரியுமா தெரியாதா? நேற்றும் ஒரு ஒன்பது வயசுப் பிள்ளை செத்தது..' சுகாதார தாதி பயமுறுத்த பிரார்த்தனா நடுங்கிப் போனாள்.
நான் வேலைக்கு போகிறேன். வீட்டில் அம்மா அசமந்தமாக இருந்து விட்டாள். சதா சர்வ காலமும் கணவனை திட்டுவதிலும் அடுத்தவர்களை குறை பேசுவதிலும் பொழுது போக்குகிறாள் என்று கூற முடியுமா அவளிடம்?
நிலானியை சிறுவர் நோயாளர் பிரிவின் தீவிர கண்காணிப்பில் ஒரு வாரம் வைத்து குணமாக்கி தந்தனர்.
ஒரு கிழைமையும் பித்து பிடித்தவள் போல் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்ததை நினைத்தால் நீளமாக பெரு மூச்சு வெளிவரும் இன்று.
கடமை நேரத்தில் அக்கா மகளை காண வந்த வசந்தாவை, மூத்த பெண்ணின் வாழ்க்கையை சிதைத்தவள் இளைய மகளை பார்க்க வரக் கூடாது என்று கொடி பிடித்த ராஜேஸ்வரி, அடுத்து சில வருடங்களில், காலில் காயம் உழைத்து சர்க்கரை வியாதியால் அது ஆறாமல் முற்றி விரலை நீக்க வேண்டும் என்று நிலைமை ஆனதும் 'ஐய்யோ! அம்மா! என்று ஒப்பாரி வைத்து இவங்கள் என்னை ஊனமாக்க போறாங்களடி வசந்தாவ கூப்பிடு நான் அவள பார்க்கணும்' என்று அழுதார்.
துரோகம் மறந்து அக்கா தங்கை பேச ஆரம்பித்த காரணம் அதுவே. பிற்காலத்தில் கணவன் கையால் அடி பட்டு மண்டை உடைந்தததும் தங்கை வீட்டுக்கு தானே போக ஆசைப்பட்டார்.
பலதையும் நினைத்து பார்த்து விரக்தியாக சிரித்துக் கொள்வாள் தனா.
அன்றும் தங்கை தங்கை என்று தவித்தவளுக்கு சொந்த வாழ்க்கை முக்கியமானதாக படவில்லை.
பக்குவப்பட்டுள்ள இந்த பிரார்த்தனாவுக்கு, அவ்வளவு பண்ணியும் நிலானிக்கு நன்றி உணர்வு கொஞ்சமும் இல்லையே. அந்தக் குழந்தை பதிலுக்கு அக்கா மீது அக்கறை காட்டவில்லை என்று மனம் மருகுவது நிஜம்.
பாசமும் கருணையும் பணம் காசைப் போலல்ல. அன்பை கடனாக கொடுக்க முடியாது. கடனாக திரும்ப பெறவும் இயலாது. கொடுத்து வாங்க அது பண்டம் அல்லவே.
நிலானிக்கு டெங்கு காய்ச்சல் குணமாக எடுத்த ஒரு வாரமும் பார்த்தீபன் பற்றிய சிந்தனை இந்தப் பெண்ணுக்கு வரவில்லை என்று அறியும் போது வரோதயனுக்கு ஆச்சரியமாக இல்லை.
காதலனுடன் ஓடிப் போனவளையே, வேறேதும் துன்பம் நேர்ந்ததோ என்று தவித்ததை அருகில் இருந்து அறிந்தவனே அவன்.
"ஹொஸ்பிடல் இருந்து வந்த பிறகாவது பார்தீபன பத்தி யோசிக்கல்லயா நீங்க?"
இருவரும் மணலில் அமர்ந்திருக்க, விரலால் வெள்ளை மண்ணை கீறி சிப்பி ஒன்றை கண்டெடுத்தவள், அதை வைத்து மணலை செப்பனிட்டு "ஒரு கிழமையும் டெக்ஸ்டைல்ஸூக்கு போகல்ல நான். வேற ஆள் போட்டு என்ன வேலைய விட்டு நிப்பாட்டிட்டார் முதலாளி.."
அதுவும் அப்படியா!!
"வருமானத்துக்கு என்ன செஞ்சிங்க??"
கையில் இருந்த வேலை போய், அடுத்த வேளை சமைக்கவும் அரிசி பருப்பு இல்லை என்பது தான் அப்போதைக்கு பெரும் பிரச்சினையா இருந்தது பிரார்த்தனாவுக்கு.
"காதுல கிடந்த தோட்ட அடகு வச்சன். வேலை கேட்டு கடை கடையா ஏறி இறங்கினன். ஒரு ஸ்டூடியோல ரிசப்ஷனிஸ்ட் வேலை கிடைச்சது. அதுவும் சரியா வரல்ல. சில அனாவசியமான தொந்தரவுகள். வெள்ளத் தோல் இருந்தா பொம்பிள பிள்ளைகள் எதிர்கொள்ற ப்ரொப்ளம் தான் எனக்கும் வந்திச்சு.." எனப் புன்னகைத்தாள்.
ஆணாக வரோதயனும் வெட்கித் தலை குனியும் இக்கட்டில்.
"பார்த்தீபன் கான்டாக்ட் பண்ணலயா?"
"எப்டி பண்ணுவார் வரோதயன்? நான் தான் அவருக்கு இருந்த கடைசி நம்பிக்கையையும் உடைச்சிட்டனே..."
"இல்ல பிரார்த்தனா. பண்ணணும். பண்ணி இருக்கணும். லவ் பண்ணி இருக்கார். கல்யாணம் பண்ணி இருக்கார். கை பிடிச்ச பிள்ளைய கை விட ஆயிரம் காரணம் இருக்கலாம். சேர்ந்து வாழ பொறுப்புணர்வு ஒண்டு போதும்..."
காதல் கத்திரிக்காய் என்றெலாம் வசனம் பேசாமல் அவன் பொறுப்புணர்வை குறிப்பிட்டது பிரார்த்தனாவை அசைத்தது.
வரோதயன் அவளுடன் முரண்படுவது அவனுடைய முகத்தில் தெரிந்தது.
சுற்றி சுற்றி வந்து காதலித்து இவள் தான் மனைவி என்று பதிவில் கையொப்பம் வைத்தால் எது வந்த போதிலும் கைவிடக் கூடாது.
முகம் அறியாத அந்த பார்த்தீபன் மீது அதிருப்தி எழ,
பிரார்த்தனா அமைதியாக இருந்தாள்.
அவனை குற்றம் கூறுவது அவளுக்கு பிடிக்கவில்லை என்று எடுத்துக் கொண்டவன், "அவ்வளவு தானா.. அவரும் விட்டுட்டார்.. நீங்களும் ஒதுங்கிட்டீங்க..?"
"அப்டி இல்ல, கொஞ்ச நாள்ள பயம் வந்திச்சு. தனிய இருக்கும் போது நிறைய யோசிச்சன். ஒரு நாள் தைரியமா அவருக்கு எடுத்துப் பாத்தன்.. " என மணலை கீறியவள் "நம்பர் வேல செய்யல்ல.. சிம்ம பர்மனன்டா மாத்திட்டார் எண்டு விளங்கிச்சு.."
ச்சீ! என்ன ஆண் அவன்? என வரோதயன் பார்தீபனை மனசுக்குள் தாழ்த்த,
"மெசேஜ் அனுப்பி உடனே ரிப்ளை வரல்லாட்டியே சரியா கோபம் வரும் அவருக்கு.. கோல் எடுத்து நோ ஆன்சர் ஆகினால் சண்டை பிடிப்பார். நான் எடுப்பன் எண்டு தெரியும் தானே ஏன் ஃபோன கையில வச்சிருக்கல்ல.. என்ன அலட்சியம் உனக்கு எண்டு கோபிப்பார். அளவுக்கதிகமான உரிமையோட உண்டாகின காதல் அது எண்டு பிறகு பிறகு விளங்கிச்சு.."
"ஏதாவது ஒரு கேள்வி அவர் கேட்டு, நான் அமைதியா இருந்தாலே அவர அவமானப்படுத்துற மாதிரி ஃபீல் ஆகுவார்.. டப் டப் எண்டு கோபம் வரும். பாசம் கோபம் எதைவும் உச்ச அளவுல தான் காட்ட தெரியும். அன்பு எண்டாலும் அக்கறை எண்டாலும் வீட்டுக்கு சாமான் வாங்கி போடுற எண்டாலும் கணக்கு வழக்கு இல்லாம குவிப்பார். தன்ர பேர்ல எழுதுப்படாத வீட்ட புதுப்பிக்கவே ஒருவரோடவும் கலக்காம அம்பது லட்சம் லோன் எடுத்தார் எண்டால் பாருங்களன்.."
"யோசிச்சு பாத்தன். எந்த வகைலயும் அவருக்கு நான் பொருத்தம் இல்ல. என்னிட்ட அவர் எதிர்ப்பார்த்த ஒண்டு கூட நான் திருப்தியா அவருக்கு குடுக்க இல்ல.." கையில் இருந்த சிப்பியை நழுவ விட்டு காலை கட்டிக் கொண்டவள் கடலலை தாலாட்டும் கரையில் கால் நனைப்பவர்களை வேடிக்கை பார்த்தாள்.
வரோதயனுள் அவளுடை உணர்வு பூர்வமான குரல் பதிவாகிக்கொண்டிருக்க,
"விட்டுட்டிங்க நீங்க... அவருக்கு அது சாதகமா பொயிட்டு.."
அவனைப் பார்த்தாள்.
"அப்டியே விடுறது தான் சில நேரங்கள்ள நல்லது வரோதயன். என்னை விரும்பினவருக்கு எனக்கு தெரிஞ்ச விதத்துல நான் திருப்பி செய்ற அன்பு அது தான். உங்களுக்கு இது விளங்காது.. நான் ஒரு குடும்பப் புழு வரோதயன். வீட்ட அறுத்துட்டு ஒருநாளும் போயிருக்க மாட்டன். போனாலும் அவரோட சந்தோஷமா இருந்து இருக்க மாட்டன். பிறகு என்னத்துக்கு? ரெண்டு பேருக்கும் கஷ்டம். வாழ்க்கை நரகமாகணுமா.."
"தியாகம்! சுயநலம் புடிச்ச குடும்பத்துக்காக செய்த தியாகம்.." அவனுக்கும் கோபம் வந்து விட்டது!!
அதில் தெரிந்த அக்கறையில் ஆத்மார்த்தமாக புன்னகைத்தவள் "ஒண்டுத்துக்கும் உதவாம குடிகார அப்பா, சின்ன கைத்தொழில கூட பழகாம குடும்பத்த காப்பாத்த வழி தேடாம வாய் சொல்லுல சண்டி ராணியான அம்மாவ, இவங்கள விட ஸ்கூல் படிக்கிற சின்ன ஆக்கள் ரெண்டு பேர் இருந்தாங்களே.. வளைச்சி வளைச்சு கடன் இருந்திச்சு. அடுத்த வேளைக்கு சாப்பாடு இருக்கா இல்லையா என்ற நிச்சயம் இல்லாத நிலைமைல இருந்தம். என்னவோ செய்றாங்க.. எப்டியோ போறாங்க.. போட்டுட்டு போவம் எண்டு நினைக்கிற ஆளா நான் இருக்கல்ல.."
"ஸ்டுடியோல வேலை செஞ்சிட்டே போட்டி பரீட்சைக்கு படிச்சி எக்சாம் எழுதி கவர்மென்ட் வேலை எடுத்தன். வேலை எடுத்த கையோட லோன் அப்ளை பண்ணி சேர்த்து வச்சிருந்த கடன்கள முடிச்சன். கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டன். இப்ப வரைக்கும் என்ர வீட்டு நிலைமைல பெரிய முன்னேற்றங்கள் இல்ல. உழைக்கிற பிள்ளை எண்டு அப்பா கொஞ்சம் மரியாதை தருவார். அம்மா தம்பி தங்கச்சி எல்லாம் என்ர உழைப்ப மதிச்சதில்ல.."
"அவங்களும் என்ன செய்வாங்க. வீட்டு சூழல் 24 மணி நேரமும் எரிஞ்சி விழுற மாதிரி தான் இருந்திச்சு. விட்டெறிஞ்சிட்டு எங்கயாவது போய் துலையணும் எண்ட எண்ணம் வரல்ல எனக்கு.."
"தீபன் அத்தான் கோபிச்சிட்டு போன புதுசுல சொந்த காரர்கள் ரோட்ல மறிச்சி கேப்பாங்கள். இப்புடி ஒரு அப்பா, அம்மா, இப்புடி ஒரு குடும்பத்துக்காக, அமைஞ்சி வந்த வாழ்க்கைய துலைக்காதிங்க பிள்ள. புருஷனோட கதைச்சி பேசி சேர்ந்து வாழ பாரு எண்டு பேசுவாங்க.."
"அவங்களுக்கு அப்போ சரியா பதில் சொல்ல தெரியாது எனக்கு.. பேசாம வந்திருவன்.."
"கூட பிறந்த தங்கச்சியே ஒரு தடவை சொன்னாள், உன்ர வாழ்க்கைய பாத்துட்டு நீ போ எண்டு. அப்டி போற கெட்டித்தனம் எனக்கு இருந்து இருந்தா, ஒரு வேளை நான் நல்லா இருந்திருக்கலாம்..ஆனா, அம்மா, அப்பா, தங்கச்சி, தம்பி சேர்ந்த ஒரு குடும்பம் சின்னா பின்னம் ஆகி இருக்கும்.."
"ரெஜிஸ்ரேஷன் மட்டும் வச்சதால முதல் இருந்தே குங்குமம் வைக்கிற இல்ல நான். கல்யாணம் ஆகின அடையாளம் இருந்தா, வீட்டு காரர் எங்க எண்டு கேள்வி வரும். அது வேற மாதிரி கரைச்சல்கள கொண்டு வரும்.. ஒவ்வொருத்தருக்கும் என்ர கதைய சொல்லி அனுதாபம் தேட விருப்பம் இல்ல.. நான் ஏமாளி மாதிரி மற்றவங்க பாக்குற பார்வையை அவொய்ட் பண்ண தான் ரமணி அக்காட்ட கூட என்ன பத்தி சொல்ல இல்ல நான்..."
"என்ர தோற்றம் தான் உங்களையும் குழப்பி இருக்கு. பிழையா யோசிக்க வச்சிருக்கு. அதுக்காக சொரி கேட்டுக் கொள்றன் வரோதயன்" தயங்காமல் இந்த இடத்தில் மன்னிப்பு கோரினாள்.
வரோதயன் வெறுமை பீடித்து பார்த்தான்.
கல்யாணம் ஆன அவளை மனதில் நினைத்ததை பிழை என்கிறாள்.
அவனுடைய பிரியத்தையே பிழை என்கிறாள்?!
பிரியம் எப்படி பிழை ஆகும். ஒருவர் மீது ஒருவர் பிரியம் வைக்க எவருடைய அனுமதியும் தேவையில்லை. எதிர்ப்பின்றி எதிர்பார்ப்பின்றி உருவாவதே பிரியம்.
"வரோதயன்.."
"ம்ம்"
"அம்மா உங்களுக்கு பொருத்தமான பிள்ளைய தான் பார்பாங்க. கல்யாணத்துக்கு ஓம் சொல்லுங்க"
"ம்ம்"
சட்டென அங்கே கடல் இரைச்சல், ஐஸ் வண்டிச் சத்தம், சிறுவர்கள் கூச்சல், கடந்து சென்ற பேருந்தின் ஹாரனையும் கடந்து இருவருக்கும் இடையே ஆழ் அமைதி நிலவியது.
"பிரார்த்தி.. " குளறல் குரல் கேட்டு திரும்பினர்.
வருணன் முளைத்திருந்தார். எண்ணெய் வடிந்த முகம், சரம் சட்டையில் கசங்கி இருந்தார்.
யார் அவர் என வரோதயன் பிரார்த்தனாவை பார்க்க, குடித்துவிட்டு அவர் மேயாத தெரு பாக்கி இல்லை போலவே என வெட்கமாக இருந்தது பெண்ணுக்கு.
"பிரார்த்தி மகள், இங்க என்ன மகள் செய்றிங்க.. தம்பி ஆரு?"
குனிந்து கைப்பை எடுத்து செருப்பை மாட்டினாள் பிரார்த்தனா.
"நிலானிய குறை நினைச்சன்.. நீயும் இப்ப கடற்கரைக்கு வந்திருக்கிறாய் பெடியனோட.. ஆர் தம்பி? என்ர மகள எப்டி தெரியும்? நான் ஆர் தெரியுமோ?"
"நடங்க போவம்"
"ஏன்? தம்பிய தனிமையில சந்திக்க வந்திருக்கிறாய்.. நீ நிண்டு கதைச்சிட்டு வா.. நான் போறன்.."
"வாங்க நீங்க.." அவரை அங்கிருந்து அகற்ற முயன்றாள்.
"பொம்பிளப் பிள்ளைகள என்னத்த வளர்த்திருக்கிறாள் கொம்மா! என்னோட சட்டம் கதைக்க தான் நேரம் அவளுக்கு. பிள்ளைகளுக்கு ஒழுக்கம் சொல்லி தந்திருக்கலாம்... வாய் பேசுவாள்.."
பிரார்த்தனா அதற்கு மேல் பேசவில்லை. இது தான் என் நிலைமை என்பதாக வரோதயனை பார்த்தவள் கடற்கரையில் காட்சி பொருளாக விருப்பாமல் தகப்பனை விட்டு நகர்ந்தாள். வீதியில் காத்திருக்கும் முட்சக்கர வண்டி ஒன்றை எடுத்துக் கிளம்பினாள்.
மகள் விலகியதும் மகளின் கள்ளக் காதலன் ரேஞ்சில் வரோதயனைப் பார்த்தவர் காத்திருக்கும் சகாவுடன் இணைந்தார்.
மழை நின்ற பிறகும் தூரல் நிற்பதில்லை. வீசிப் போயிருப்பது புயல். வரோயன் அங்கிருந்து கிளம்ப நேரம் எடுத்தான். கடற்கரை ஜனங்கள் கலைய ஆரம்பித்த பிறகே அவன் எழுந்தான். ராசு பஞ்சு மாற்றி மாற்றி அழைத்தனர். தாய் காமாட்சி அலைபேசி பாவிப்பதில்லை. நண்பர்களை வற்புறுத்தி அழைக்க வைத்திருந்தார்.
"ஏன் தம்பி சுணக்கம்?" என்று கேட்டவருக்கு வேலை என்றான்.
சாப்பிட்டு படுக்கை வந்தவன் "அவர் தான் அப்பாவா?" என பிரார்த்தனாவிடம் கேட்டான் புலனத்தில்.
"ஓம்!" உடனே வந்தது பதில்.
கோயிலில் அவள் குண்டு வீசிய பிறகு அவளைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு வரும் வரை ஒதுங்கி இருந்தவன், அவள் தான் மனைவி என்று முடிவெடுத்து பஸ்ஸில் பேசப் போய் தான் இன்றைய கடற்கரை சந்திப்பு நிகழ்ந்தது!
இதற்கு மேல் அவனுடைய பிரியம் தூய்மையானதாக மாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் சமைச்சிங்களா சாப்பிட்டிங்களா என்று சம்பிரதாயமாக வளைக்காமல் அமைதியாக படுத்தான்.
பிரார்த்தனாவின் நம்பருக்கு செய்தி அனுப்பும் போதும், பதில் படிக்கும் போது உள்ளார ஊர்ந்தோடும் ஊற்றுக் கண்கள் இன்று மூடிக் கொண்டிருக்க, தகப்பனின் அநாகரிகமான பேச்சு பிரார்த்தனாவுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று கவலை பிறந்தது.
“லேட்டாகினதுக்கு அம்மா கேட்டாங்களா?” மெசேஜ் வந்தது.
“ஓ.. OT செய்தன் எண்டு சமாளிச்சன். அங்க சிடுவேஷன் மோசம் போல. என்னாலயும் மனக் கஷ்டம் உங்களுக்கு..” என அனுப்பினான்.
“அத விடுங்க. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. நடந்தத நாளைக்கு மறந்திருவார் அவர்..”
வரோதயன் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தான். பாறாங்கல்லாய் அவனை அழுத்துவதை அவள் கூழாங்கல்லாய் தூக்கி போடுகிறாள்!
பாவம்! வெகுளி! அப்பாவி! புத்திசாலி! முட்டாள்! ஏமாளி என பல பரிமாணங்களில் அவளைப் பற்றிச் சிந்தித்தான்.
வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள என நான்கு இரவுகள் தடைபட்டிருந்த நட்பு புதுப்பிக்கப்பட்ட நிறைவில் “குட் நைட் வரோதயன்” போட்டவள் அவனுடைய தூக்கத்தையும் சேர்த்தெடுத்து இலகுவாக உறங்கி விட, வரோதயனுக்கு தூக்கம் தூரம் போனது.
*
"ஒரு உதவி செய்யணுமே நீங்க?” ஒரு திங்களன்று அலுவலகத்தில் வைத்து கோட்டான் வரோதயன் பிரார்த்தனாவிடம்.
“என்ன?” பட்டுள்ள கடனை அவனுக்கு திருப்பிச் செலுத்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாளே அவள்.
“பேங் லோன் எடுக்கிறான் ஃப்ரெண்ட். ரெண்டு கவர்மன்ட் சேர்வன்ட் காரண்டர் சைன் வைக்கணும்”
“உதவி உங்களுக்கு இல்லயா?”
“ஃப்ரெண்டுக்கு செஞ்சா எனக்கு செஞ்ச மாதிரி. ஒரு பொம்பிளப்பிள்ளைட வாழ்க்கைப் பிரச்சினை”
“என்ன சொல்றிங்க வரோதயன்?”
“தங்கச்சிக்கு வீடு கட்ட தான் லோன் எடுக்கிறான். வீடு கட்டினா கல்யாணம் நடக்கும்”
“ஓ! சரி! நான் என்ன செய்யணும்?”
விடுமுறை போட்டு பிரார்த்தனாவை கந்தளாய் பிரதேச தேசிய சேமிப்பு வங்கிக்கு அழைத்து சென்றான். அவள் பஸ்ஸிலும் அவன் பைக்கிலும் வந்து இறங்கினர்.
“ஊர்ல உள்ள பேங் எல்லாம் விட்டுட்டு இவ்வளவு தூரன் ஏன் வாரார் ஃப்ரெண்ட்?”
“மேனேஜர் தெரிஞ்சவர். க்யூக்கா ஃபோர்வாட் பண்ணி ஒரு கிழமைல கையில காசு வரும்”
சுற்றி முற்றி பார்த்தவள் “நாங்க மட்டும் தான் வந்திருக்கிறம்.. உங்கட ஃப்ரெண்ட் எங்க?”
“அவன்ர சைட் ப்ரொசீஜர் எல்லாம் முடிஞ்சுது. நாங்க காரண்டர் சைன வச்சிட்டு போனா சரி”
பேசிக் கொண்டே மேனேஜர் அறை அழைத்து வந்தவன் கண்ணாடி கதவு தள்ளி உள்ளே முதலில் அவளை விட்டான்.
‘மேனேஜருக்கும் லோனுக்கும் என்ன சம்பந்தம்? கடனுக்கு பொறுப்பான அதிகாரியை சந்தித்தால் போதுமானதே’ என வங்கி கடன் பெற்ற முன் அனுபவம் உள்ளவள் யோசிக்கும் போதே, அவளை விட்டு வரோதயன் அங்கிருந்து வேகமாக அகன்றான்.
என்ன இது
எனக் குழம்பியவள் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள். நகர முடியவில்லை.
சுழல் நாற்காலியில் புறம் காட்டி அமர்ந்து தொலைநகர் எந்திரத்தில் எதையோ தட்டிக் கொண்டிருப்பது, முகாமையாளன் பார்த்தீபன்.

Last edited: