"ஸ்ரீலங்கா மாதா…
நம் ஸ்ரீலங்கா..
நமோ நமோ நமோ தாயே.."
திருகோணமலை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மாகாண பணிப்பாளர் ஏற்றிய சிங்கக் கொடி காற்றோடு தலை அசைக்க, நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் சூழ்ந்திருக்க, புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்காக அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை பிரின்ட் எடுத்து ஆண்டுக்கான சத்தியப்பிரமாணத்தை பிசிறில்லா குரலாளர் ஒருவர் ஒலிவாங்கியில் வாசிக்க, மற்றையவர்கள் திருப்பி அதை முணுமுணுத்தனர்.
ஓரத்தில் நின்றிருந்த பிரார்த்தனாவை இடித்து வந்து சேர்த்தார் லோகேஷ்ரமணி.
"குட் மோர்னிங் அக்கா!"
"குட் மோர்னிங், குட் மோர்னிங்! ஒரு நாளும் இல்லாத திருநாளா என்ர புருஷனுக்கு இண்டைக்கு தான் சேர்ந்து கோயிலுக்கு போக ஆசை வந்திருக்கு. கால சாப்பாடு மதியம் சாப்பாடு எல்லாம் சமைச்சி கட்டி கோயிலுக்குச் போய் இங்க வந்து சேர ஒன்பது ஆகிட்டு தனா. நான் ஃபிங்கர் வைக்கிறன் சரியா PD யும் வாரார்.. வெட்கமா பொயிட்டு" சின்னக் குரலில் படபடத்தார்.
"பிறகு.."
"சாரி இழுப்பட்டு வந்துட்டு. வொஷ் ரூம் போய் அத சரி செய்துட்டு வாரன். சாரி எப்டி இருக்கு. ப்ளவுஸ் தைக்க குடுத்த, எடுக்க நேரம் இல்ல. மெச்சிங்கா இருந்த இந்த ப்ளவுஸ போட்டு வந்தன்"
ரமணியின் வயதை கணிக்க முடியாது. முப்பது என்று கண்ணை மூடி நம்பலாம். நாள் தவறாது மஞ்சள் பூசி, திருத்திய புருவத்தை வரைந்து, நெற்றியிலும் வகிட்டிலும் வட்டக் குங்குமம் வைத்து, கட்டுக்குலையா இளமையில் மஹாலக்ஷ்மி படம் வரைய மாடலாக கேள் என்பார்.
இயற்கையாக அமைந்த லட்சணத்தை மெருகு மங்காமல் பெண்கள் பேணுவது முக்கியம் என்பது அவர் கொள்கை.
மாம்பழ மஞ்சளில் பச்சை ஜரிகை வைத்த சாஃப்ட் சில்க் சேலை அணிந்து அம்சமாக திகழ்ந்தார்.
"வடிவா இருக்கு அக்கா, க்ரீன் ப்ளவுஸ் மெச்சிங்கா இருக்கு.."
"அப்டியா.. பாலு ஒரு வார்த்தை சொல்ல இல்ல. நம்மள பார்க்க எங்க நேரம் அவங்களுக்கு. உங்கட சாரி புதுசு தானே?"
பிரார்த்தனா மத்திமமாக தலை அசைத்தாள். கத்தரி பூ நிற நூல் புடவையை ஒரே ஒரு முறை உடுத்தி இருக்கிறாள். மற்றவர்களுக்கு அது வித்தியாசம் தெரியாது. ஆனாலும் ரமணியை ஏமாற்ற முடியாதே.
கோபித்தார்.
"புது வருஷம், புது ஆரம்பம். முதல் நாள், பொம்பிளப்பிள்ளைகள் தலைக்கு குளிச்சி கோயிலுக்கு போய் வடிவா வரணும். உங்கள மாதிரி இளம் பிள்ளைகள் புதுசு உடுத்தி வடிவா வந்தா தானே அப்பாய்மன்ட் கிடைச்சி வாரவங்ளுக்கு ஒஃபிஸ பார்க்க ஒரு விருப்பம் வரும்"
ரமணி மனதில் ஒவ்வொரு வருடமும் தோன்றும் எண்ணம் இந்தப் பெண்ணுக்கு பொருத்தமாக ஜோடி அமைய வேண்டும். புது நியமனத்தில் எவனும் பொருந்தி அமைய மாட்டானா என்பது.
புது நியமனம் என்றதும் பிரார்த்தனாவுக்கு நீல பாக்சர் காரன் நினைவு வந்தான்.
உங்கட ட்ரெஸ் பின்னால டெமேஜ் ஆகி இருக்கு என்றவள் அவன் முகம் மாறியதை, ஒடுங்கியதை, பின்வாங்கியதை காண நிற்கவில்லை.
விறுவிறுவென வந்து விட்டாள்.
இங்கே குழுமியுள்ள கூட்டத்தில் அந்த நீலம் நிற்கிறதா தெரியாது.
தேசிய கீதம் முடிந்ததும் கலைந்த கூட்டம் இரண்டாம் தள மாநாட்டு மண்டபத்தில் ஒன்று கூடினர்.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டம் ஒழுங்கு படுத்தப்படும்.
திட்டமிடல், நிர்வாக, கணக்கு பிரிவுகள் தாங்கள் செய்து வந்த சிற்றுண்டிகளால் மேஜையை அலங்கரிகரித்தனர்.
"இனிய காலை வணக்கம்.. மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.." மாகாண பணிப்பாளர் மைக் பிடித்தார்.
இறுதி வரிசையில் அமரப் போன பிரார்த்தனாவை பிடித்து தன் அருகில் அமர்த்தினார் ரமணி.
"நம்மட டிபார்ட்மெண்டுக்கு புதுசா அஞ்சாறு பேர் வந்திருக்கணும். யார் யார் எண்டு வடிவா தெரியாது. வத்தலும் சொத்தலுமா இல்லாம வேலை காரரா வந்தா நல்லம்" முன் வரிசையில் இருந்த புது முகங்களை அளவெடுத்துச் சொன்னார் ரமணி.
பிரார்த்தனா இடம் இருந்து வலம் ஒரு சுழற்சி, வலம் இருந்து இடமாக ஒரு சுழற்சி பார்வை செலுத்தி பின்னால் திரும்பினாள். கடைசி வரிசையில் கடைசியாக அமர்ந்திருந்த நீலம் அவள் பார்த்த போது தன் பார்வையை விலக்கி கொண்டதை போல் தோன்றியது.
இரண்டு வருடங்களில் பென்ஷனுக்கு போகும் பணிப்பாளர் என்றும் போல அலுவலர்கள் ஒத்துழைப்பை இந்த ஆண்டும் வேண்டினார்.
இனிப்பு காரம் ருசித்து கலைந்தனர்.
"ஒரு உதவி செய்யணும் தனா.. புதுசா வந்தவங்கள எந்த எந்த யூனிட்ல போடணும் எண்டு P.D கேக்குறார். உடனேயே கடிதம் தர சொல்வார். பத்துக் கையுள்ள பத்திரகாளி தானே நம்ம அவங்கட கண்ணுக்கு. நேம் லிஸ்ட் தாரன் நான். கடிதங்கள தமிழ்ல ட்ராஃப் பண்ணி வையுங்க. யுனிட் மட்டும் போட்டுட்டு ப்ரின்ட் எடுக்கிற மாதிரி இருக்கும்"
புதிய வரவு பெயர் பட்டியலை பிராத்தனா கையில் தந்து A.O வுடன் பணிப்பாளர் அறை சென்றார் ரமணி.
பட்டியலில் ஆறு பேர் விபரங்கள் இருந்தன. இரண்டு ஆண்களும் நான்கு பெண்களுமாக.
இரண்டு ஆண் பெயரில் எது நீலத்தின் பெயர் என்று தெரியவில்லை.
ரமணியின் இடத்தில் அமர்ந்து கணினியில் கடித தலை தேடி பழைய ஃபோர்மட் பிடித்து டைப்பிய பிரார்த்தனா கடிதங்களை முடித்து தன் மேசைக்கு நகர்ந்தாள்.
என்ன செய்து இருப்பார் பேண்டில்?
பின் குத்தி இருப்பாரோ..
டக்இன் செய்த சட்டையை வெளியே எடுத்து விட்டிருக்கலாமோ..
இது எதுவும் சாத்தியமில்லை ஆயின், யாருக்கும் தெரியாமல் கடைசியாக நின்று சுவருக்கு முதுகு காட்டுவதே உத்தமம்.
"பிரார்த்தனா, பஞ்சர் கொஞ்சம் தாங்க.." பக்கத்து மேசை வசுமதி சிந்தனையை கலைத்தாள்.
மதியம் தொட்டு விட்டது பி.டி அறையில் நிகழ்ந்த டிஸ்கஷன் தீர்ந்து ரமணியுடன் ஏ.ஓவும் ஆறு புதியவர்களும் வெளியில் வர.
நீலம் கடைசியாக வந்தான். சங்கோஜமும் பவ்யமும் தெரிந்தது வருகையில்.
காசா முனையில் தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளை காணும் போது பரிதாபம் பிறப்பது போல அநியாயத்திற்கு நீலத்தை காண்கையில் பாவம் என்று தோன்றியது.
"கடிதம் அடிச்சதா தனா?"
"ஓம் அக்கா.."
மினிமைஸ் செய்து வைத்ததை எடுத்துக் காட்டினாள்.
"வரோதயன் கெனிஷா ரெண்டு பேரும் அட்மின். மற்ற நாலு பேரும் ப்ளானிங்கும் எக்கவுண்ட்சும்.."
இடங்களுக்கு விட்ட இடைவெளியை நிரப்பி பிரிண்ட் எடுத்தாள். நீலத்தின் பார்வை தன்னில் பாய்ந்து படிந்து விலகுவதாக உள்ளுணர்வு கூறியது.
கடிதங்களை சேகரித்து ஆறுபேரையும் பி.டி அறை அழைத்து போனார் ரமணி.
"யாராம் தனா, நம்மட ப்ராஞ்ச் வார?" முன் வரிசையில் கேட்டனர்.
"தெரியல்லயே.. வரட்டும் பாப்பம்.." என்றாள்.
பிரார்த்தனா வம்பு தும்பு பேசாத யார் பேச்சிற்கும் போதாத சாது என்பது நிர்வாக பிரிவின் கணிப்பு. நிர்வாகத்திற்கு சார்பாக நடக்கும் ரமணியுடன் ஆயிரம் உட்பூசல்கள் இருப்பினும் ரமணியின் வலது கையாக இயங்கும் இவளிடம் காழ்ப்புணர்ச்சி காட்டாது பிரியமாகவே நடப்பர்.
"இண்டைக்கு முதல் நாள் தானே.. ஸ்கூல் மாதிரி தான். பாடம் எல்லாம் இல்ல. எல்லாரோடவும் கதையுங்க. பழகுங்க. நாளைக்கு பாத்து சப்ஜெக்ட் தாரம்.." இருவருடன் திரும்பி வந்தார் ரமணி.
மானிட்டரில் மறைந்திருந்த பிரார்த்தனா ரோலிங் செயார் தள்ளி பார்த்தாள்.
நீலமும் வருகிறார் இங்கே. ஆயின், பெண் பெயர் கெனிஷா, இவர் பெயர் வரோதயன்.
வரோதயன்..
வரோதயன்..
பிரித்து உச்சரித்தால் வரங்கள் தருபவன் என பொருள் வருகிறது.
வரோதயன் நடையில் சங்கோஜ சங்கிலியால் பிணைந்திருந்தார்.
ட்ரெஸ்ஸை எதுவும் செய்ய முடியல்லையோ?
நிர்வாக பிரிவில் ஐந்து நிரையும் மூன்று நிரலும் வருமாறு ஒஃபிசர்ஸ் மேசைகள் போடப்பட்டிருக்கும், தனித் தனி கணினி பிரின்டர் வசதிகளுடன். தற்போதைக்கு முதல் நான்கு நிரைகளே நிரம்பி இருக்க, இறுதி வரிசையில் வரோதயன் கெனீஷா அமர்ந்தனர்.
மதிய உணவுக்கு கிளம்பியிருக்காத பழைய உத்தியோகத்தர்கள் அவர்களிடம் புன்னகை விசாரிப்பு நடத்த, ரமணியும் பிராத்தனாவும் டைனிங் அறை சென்றனர்.
இவர்கள் இருவர் தவிர்த்து ஏனைய உத்தியோகத்தர்கள் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு செல்பவர்கள்.
காய்ந்த ரொட்டியை ரமணி உண்ணுவது போல ஆகி விடக் கூடாது என்று சாப்பாட்டு சமைத்து வந்திருந்தாள் பிரார்த்தனா.
ரமணி வீட்டில் இன்று சிக்கன் கறி.
பீஸ்கள் பிரார்த்தனாவின் பாத்திரத்திற்கு இடம் மாற,
"என்னக்கா இது, அப்டியே வச்சிட்டிங்க?"
"நான் டயர்ட்ல இருக்கன் பிள்ள. உங்களுக்கு தான் எடுத்து வந்தன். சாப்பிடுங்க நீங்க"
பேச முடியாது காய்களை அவருக்கு அள்ளி வைத்தாள்.
"கெனீஷா நல்ல விபரம். இப்பவே லீவ் எடுக்கலாமா, லஞ்ச் டைம் வீட்ட போகலாமா, ஷோட் லீவ் எத்தின இருக்கு, கலையில என்ன டைம் வரணும் எண்டு சலுகைகள எடுக்கிறதுல குறியா இருக்கு. பெடியன் பார்க்க பாவம் மாதிரி இருக்கார். வாயே திறக்குறார் இல்ல. பேய் அறஞ்ச மாதிரி இருக்கார்"
"காலையில என்னோட தான் பஸ்ல வந்தார்.."
"யாரு, வரோதயனா?"
"ம்ம்! சொந்த இடம் மூதூராம்.."
"ஹா!" இதெல்லாம் தெரிந்து இருக்கிறதே உனக்கு, பேசினாயா நீ, அப்படி நீயாக போய் கதைக்கும் ரகம் அல்லவே நீ என்ற ஆச்சரிய பாவனையை ரமணி காட்ட,
"காலையில.." என்று நடந்ததை சொல்லி விட்டாள் பிரார்த்தனா.
"அச்சோ, பாவம்! இளந்தாரி பெடியன் எவ்வளவு வெட்கமா போயிருக்கும்.." இரக்கப்பட்ட ரமணி, காட்சியை கற்பனையில் கண்டு வெடித்துச் சிரித்தார்.
சிக்கன் குழம்புக் காரம் சுவாசக் குழாயுள் புகுந்து கண் கலங்கினார்.
"என்னக்கா.." தலையில் தட்டினாள் பிரார்த்தனா.
"சிரிக்காதிங்க அக்கா, பாவம்"
"பாவம் தான்! இருந்தாலும் அங்க எப்டி ஓட்ட வந்திருக்கும்? அயர்ன் பண்ணேக்குள்ள எரிஞ்சி இருக்குமோ? பிறகு என்ன நடந்த?" சந்தேகங்களை அடுக்கினார்.
"அதான் பெடியன் சுவர் ஓரத்திலயே பல்லி மாதிரி ஒட்டினானா.. பி.டி கடிதம் குடுக்கும் போது வாங்கினான் தானே.." ஆராய்ந்தார்.
"விடுங்க அக்கா பாவம்.."
"நீங்க அத கண்டு எப்டி பிள்ள தைரியமா சொன்ன நீங்க..கூச்சமா இல்லயா.. நம்ப ஏலாம இருக்கே.."
பிரார்த்தனா தலையை குனிந்து உணவை மெல்ல,
"எனக்கு நீங்க சொல்லாம விட்டு இருக்கலாம் தனா. இப்ப அந்த பெடியன பார்க்குற நேரம் எல்லாம் இதானே ஞாபகம் வரும். பொறுப்புள்ள CC ஸ்டாப்ப பாத்து சிரிச்சா நல்லாவா இருக்கும்?"
"மறந்திருங்க.."
"நீங்க சொல்றிங்க..நான் மறக்கணுமே"
திணைக்கள நிர்வாக ஓட்டத்தில் ஆயிரம் மண்டை இடிகளை தாங்க வேண்டும் ரமணி. தினம் ஒரு சிக்கல்கள் எதிர்நோக்க வேண்டும். அவர் வரோதயன் உள்ளாடை விவகாரத்தை மறந்தே போனார். நினைத்து சிரிக்க நேரமும் அமையவில்லை.
பிரார்த்தனாவுக்கு தான் சங்கடமாக இருந்தது அவனும் அட்மின் ப்ராஞ்ச் வந்ததில். அவன் புறம் திரும்புவதை தவிர்த்தாள்.
அன்று மாலை ஸ்டாப் பஸ்ஸிற்கு காத்திருக்கும் போது அவளுக்கு முன்பே நிறுத்தம் சென்ற வரோதயன், மறு புறம் தூரத்தில் நின்றான்.
அரை வட்டம் அடித்து பஸ் திரும்பி வரும் போது பிரார்த்தனா முன்னால் ஏற, அவன் பின்னால் தாவினான்.
மிஸ் மிஸ் என காலையில் எத்துணை ஆர்வமாக கதைத்தான்.
சொல்லாமல் விட்டிருக்கலாமோ..
நீலத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
இந்த மனநிலை வீடு சென்று சேரும் வரை தான்.
மூத்த மகளைக் கண்டதும் இளைய மகள், மகன், கணவன் பற்றி குற்றம் படித்தார் ராஜேஷ்வரி. இரும்பை போல் அவள் அகம் முகம் இரண்டையும் இறுக்கி விடும் சக்தி அந்த வீட்டிற்கு இருந்தது.
"பகல் சாப்பிட்டிங்களா?"
"இவ்வளவு கதைக்கிறன்.. என்ன ஏது எண்டு கேக்குறியா? ஆக்கி வச்சிட்டு போறத திண்டுட்டு வாய பொத்திட்டு இருக்கணும் என்றாய்.."
"வேற என்ன செய்ய சொல்றிங்க என்ன? நான் சென்னா மட்டும் கேட்பாங்களா.. திருந்துவாங்களா?"
"இதுக்கு முடிவு தான் என்ன.. வயசுக்கு வந்த பிள்ள விடிய போனா இருட்டின பிறகு திரும்புது. குடும்பத்த பார்க்க வேண்டிய இளந்தாரி பெடியன் வீடு வர இரவு பன்ரெண்ணு ஒரு மணி ஆகுது. பெத்தவன் சாராயம் கண்ட இடமே சொர்க்கம் எண்டு கிடக்கிறான். இதெல்லாம் கண் கொண்டு காண முடியுதில்ல எனக்கு. எங்கயாவது போய் துலையவும் ஏலாம கிடக்கன்.."
வேலை முடித்து இரவுணவு தயாரித்து தாய்க்கு எடுத்து வைத்தாள் பிரார்த்தனா. கேட்டில் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. யார் எனப் பார்த்தாள்.
பைக்கில் இருந்து இறங்கிய நிலானி கை அசைக்க, தலை அசைத்த சைக்கிள் காரன் முறுக்கிக் கிளம்பி மறைந்தான்.
அக்காவை கண்டு உண்டான சொற்ப அளவு அதிர்ச்சியையும் வெளிக்காட்டாமல் உள்ளே வந்தாள் நிலானி.
விஷயம் கை மீறி போகிறது! அம்மா சொல்வது போல் இது தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்கான பயணம் மாத்திரம் அல்ல!
"யார் அது?" மாற்றுத் துணியுடன் குளியலறை சென்றவளை கேட்டாள்.
"யாரு?"
"உன்ன பைக்ல இறக்கிட்டு போறானே.. அவன்?"
"மரியாதையா கதை.. யார் அவர் தெரியுமா?"
"நீ தான் சொல்லன்.." தங்கை சிலுர்த்து எழுவதில் பணிவாகவே கேட்டாள்.
"நீ நினைக்கிற மாதிரி இல்ல. அவர் டீசன்ட்"
உள்ளே கதை கேட்டுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி பொங்கினார். உடலில் தெம்பில்லை என்றாலும் அவர் நாவில் ரோலர் கோஸ்டரையே சுழற்றி அடிக்கும் சக்தி உண்டு. சின்ன மகளை கடுமையாக ஆட்சேபித்தார்.
"இப்ப என்ன என்றிங்க? எனக்கு அவர புடிச்சி இருக்கு. அவருக்கும் தான். நாங்க லவ் பண்றம். நீங்க ஒருவரும் தலையிடாதிங்க என்ர விஷயத்தில. முக்கியமா நீ தலையிடாத. உன்ர வாழ்க்கைய பாத்துட்டு நீ போ.."
தங்கை எச்சரித்ததும் அடித்து நொருக்கியது போல நின்றாள் பிரார்த்தனா.