'கிர்ர்ர்' எனும் ஒலியுடன் அச்சேறிய காகிதத்தை சீராக துப்பியது தொலைநகல் எந்திரம்.
கிழிந்து விடாமல் அதை கவனமாக இழுத்தெடுத்துப் படித்தவன், எதேச்சையாக திரும்பும் போது கண்டான் கதவு திறந்து நின்றிருக்கும் பெண்ணை.
தன்னியக்க கதவுக்கு தடுப்பு போல, மூட விடாமல் பிரார்த்தனா நின்றிருக்க, காகிதத்துடன் எழுந்தவன் கண்ணாடிச் சுவர் வழி, பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களைப் பார்த்தான்.
ஆறே காலடி உயரம் பார்த்தீபன். பிரார்த்தனா அவன் தோளுக்கு கீழ் வருவாள். உயர்திற்கேற்ற பருமன், அடர் கேசம், மீசை தாடியை கன கச்சிதமாகப் பேணுவான்.
கடந்தோடிய ஆண்டுகள் அவன் ஆண்மை கம்பீரத்தை மெருகேற்றியே இருந்தது.
மினுங்கும் ஷூ, கருப்பு கால்சராய், வானத்து நீல முழுக்கை சட்டை, பழுப்பு கழுத்துப்பட்டி அவனது அதிகார தோரணையை காக்க, இடுப்பு பட்டியை மீறிய சின்னத் தொப்பையே அவர்கள் பிரிவின் ஆண்டுக் கணக்கையும், அவளுக்கும் அவனுக்குமான வயது வித்தியாசத்தையும் வெளிக் காட்டியது.
நான் எப்படி இருக்கிறேன்? பிரார்த்தனா சுய தோற்றத்தை பற்றி அவசரமாக யோசித்தாள்.
'பொம்பிளப் பிள்ளைகள் தங்கள பராமரிச்சிக் கொள்ள வேணும் தனா. நல்லா தண்ணி குடிக்கணும். பழங்கள் சாப்பிடணும். முடிய கவனிக்கிறது சரியான முக்கியம். கிழமைக்கு ஒரு தடவை வெந்தயம் ஊற வச்சி அரைச்சிச் பூசி காய விட்டு சீயாக்கா போட்டு தலை கழுவி, முகத்துக்கு மாசத்துக்கு ஒரு தடவையாவது ஆவி பிடிச்சி புருவத்த ஷேப் பண்ணி..'
'கால் சுத்தம் கடும் முக்கியம். சனி பிடிக்கும் எண்டு சொல்ல இல்ல, ஒரு வீட்டுட சுத்தம் அடுப்படிய பார்த்து தெரியுற மாதிரி நாங்க எந்தளவு சுத்தமா இருக்கிறம் என்றத எங்கட கால வச்சி சொல்லலாம்...'
கேட்கிறாளோ இல்லையோ, அழகு குறிப்புகளை அள்ளி வழங்கும் லோகேஷ் ரமணி நினைவு வர, சுத்தம் எல்லாம் சரி, எனது எழில்? என்று சுணங்கினாள்.
பள்ளிக் கூடம் படிக்கும் போதிருந்த அடர்த்தி முடி இன்றில்லை. பின்னிய ஒற்றை ஜடை ஒரு கையில் அடங்காது அன்று. இன்று விரித்து விட்டால் தான் அடர்த்தி தெரிகிறது.
எண்ணெய் வழியும் முகம், கருவளையம், ஒட்டிய கழுத்து கன்னம், மெலிவான தேகம் எல்லாம் வயது மூப்பாக காட்டுகிறதோ?
இந்த வெளிர் நிறச் சேலையின் மேலும் மங்கலாகத் தெரிவேனே. வெள்ளை ஜாக்கெட் என்னை மந்தமாகவே காட்டும்.
சுய தோற்ற அலசலின் பிரார்த்தனா தன்னைத் தாழ்த்தி மதிப்பிட்டுக் கொண்டிருக்க, பார்த்தீபன் அவளை நிமிர்ந்து பார்ப்பது போலவே தெரியவில்லை.
கையிலுள்ள பேப்பரை சுருளாக்கி முகாமையாளர் மேசையுடன் பொருந்திய மணி பொத்தானை அழுத்திப் பியோனை எதிர்பார்த்தான்.
எங்கிருந்தோ விரைந்து வந்த ஊழியனுக்கு வழி விட்டு பிரார்த்தனா உள்ளே நகர,
“Fax எகாக் ஹம்புணா..” சிங்கள மொழியில் கட்டளை பிறப்பித்து பேப்பரைக் கொடுத்தவன், அவனை அனுப்பி விட்டு இவள் புறம் திரும்பினான்.
அதே அதிகாரம்! அதே அழுத்தம்! அவன் தொனியில் கேட்டிருந்த பிரார்த்தனா சளைக்காமல் அவனைப் பார்க்க, அவனுடைய கண்ணில் தயக்கம், தடுமாற்றம், அதிர்வெல்லாமே கொட்டிக் கிடந்தது!
நிமிடங்கள் சில ஆகி இருக்கும். இன்னும் ஒரு வார்த்தை பேசாத அவனது அமைதி வியப்பூட்ட, வகுப்புக்குச் சென்று வரும் போது வழி மறித்த பார்த்தீபன் ஒரு கணம் கண்ணில் வந்து போனான்.
"இங்க தான் வர்க் பண்றிங்களா?" மௌனத்தை தனாவே உடைத்தாள்.
அவனிடம் 'ஆம்' என்பதாக பாவனை மாத்திரமே கிடைக்க,
"எப்ப இருந்து.."
ஒரே நொடி அவளைப் பார்த்து "டெம்ரரி ட்ரான்சர்ல வந்து வன் வீக்.."
"எங்க இருந்திங்க இதுக்கு முதல்?" அடுத்து கேட்டாள்.
தென்னிலங்கையின் ஊர் பெயர் ஒன்றைச் சொன்னான்.
அது எந்த மாகாணம் எந்த மாவட்டம் என்று கூட அறியமாட்டாள் அவள்.
சுற்றிச் சென்று தனது மேசையில் அமர்ந்தவன் 'இரு' என்று அவளைக் கேட்கவில்லை.
"இவ்வளவு காலமும் அங்க தானா.. ட்ரிங்கோ வரல்லயா??"
"அம்மா அப்பா கனடா பொயிட்டாங்க. அக்காவோட"
ஒரே ஒரு சகோதரி அவனுக்கு. காதல் மணம் புரிந்து கனடாவில் வாழ்வதை அறிவாள்.
அவள் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் கொண்ட கோபத்தில் திருகோணமலையை விட்டே ஒதுங்கி இருக்கிறான் அவன். அல்லது, தேடி வந்து தொந்தரவு தருவார்கள் என்று பயந்தானோ..
யார் தேடிப் போவது, யார் தொந்தரவு செய்வது? எனக்கே என் வாழ்க்கையை பற்றிய அக்கறை இல்லை!
அவளுக்காக தேடிப் போக ஆளா உண்டு?
எண்ணிய நொடி வரோதயன் நினைவு வந்தான்.
நாடகம் ஆடி அழைத்து வந்திருக்கிறான் இங்கே. இவரைக் காணவே கூட்டி வந்திருக்கிறான். எப்படிக் கண்டு பிடித்தான் இங்கிருக்கிறார் என்று?
"நிக்கிறியே.. இரு!" பார்த்தீபனின் விளிப்பு வரோதயனிடம் இருந்து இங்கு இழுத்து வந்தது.
கைப்பையை மடியில் வைத்து அமர்ந்தாள்.
"குடிக்க டீயா, கூல்ட்ரிங்சா?"
"இல்ல, ஒண்டும் வேணாம்.."
"இது டீ டைம் தான்.. எனக்கு டீ வரும். சேர்த்து எடுத்து வரச் சொல்லலாம்.." என்றவன் இன்டர்கோமில் அழைத்து இரண்டு தேநீர் தரச் சொல்லி விட்டு, "எப்டி இருக்குறாய்.. லைஃப் எப்டி போகுது?" என மேலாக்காக விசாரித்தான்.
அவளை விட்டு அவன் வெகு தூரம் சென்று விட்டதை பிரார்த்தனாவுக்கு விளக்கியது அந்தத் தொனி.
புரிந்தவளாக "இருக்கிறன். லைஃப் போகுது.. நீங்க எப்டி இருக்கீங்க..." சம்பிரதாயமாக அல்லாமல், அக்கறையாகவே அவள் வினவினாள்.
அது அவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.
"டூயிங் வெல்.. " என்றான். ஆக்கிலம் குறுகிடும் போது பேசும் இருவருக்கும் தூரம் மேலும் அதிகமாகும். அதை அவனே நிர்ணயித்தான்.
அதற்கு மேல் என்ன பேசுவது என்று அறியாதவளாக இந்த சந்திப்பை ஒழுங்கு செய்தவன் எங்கிருப்பான் இப்போது என்று யோசிக்க,
"உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல்ல எண்டு கேள்விப்பட்டன்.." என்றான் பார்த்தீபன்.
நெற்றி சுருக்கிய பிரார்த்தனா அவனை நேருக்கு நேர் நோக்கினாள்.
இன்னும் அவன் அவளை நேர்கொண்டு காணவில்லை. பேப்பர் வெயிட் பாரத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தவனை, "எது, ரெண்டாவது கல்யாணமா?" எனக் கேட்டாள் பிசிறற்று.
இப்போது நிமிர்ந்து பார்த்தான். உடனே பார்வையை விலக்கியும் கொண்டான்.
பிரார்த்தனா எனும் புத்திசாலி "நீங்க வேற கல்யாணம் கட்டிட்டிங்க போல.." என நிறுத்த,
அதை ஆமோதிப்பாகவே எதிரில் உள்ளவன் உடன் மொழி பேசியது.
"எப்ப… கொஞ்ச நாளா.. நிறைய நாளா?" தொண்டை விட்டு குரல் மிக மென்மையாக வெளிவந்தது.
நிமிர்ந்து பார்த்தான் ஒரு நொடி.
"ஃபர்ஸ்ட் பேபி ஸ்கூல் போறா.. க்ரேட் வன். செகண்ட் பேபிக்கு மூணு வயசு ஆகுது"
ஓ...
ஓஹோ...
மளமளவென, சரிந்து மடமடவென முறிந்து, மொத்தமாக நொருங்கிக் கொட்டியது பிரார்த்தனாவினுள் ஒட்டிக் கிடந்த ஒன்று.
உதடுகள் ஒட்டிக் கொள்ள, இமை சிமிட்டி நெற்றி சுருக்கமோ புருவ நெரிப்போ இன்றி நிர்மலமாக அமர்ந்திருந்தாள்.
மூத்த குழந்தைக்கு ஆறு வயதாயின், அவளைப் பிரிந்ததுமே மறு திருமணம் செய்திருக்கிறானா?
அவர்களுக்குள் நிகழ்ந்த பதிவுத் திருமணம்??
இக் கணம் வரை இவள் சட்டபூர்வ மனைவி.
ஆண்கள் உலகம் எத்துணை இலகுவானது.
நினைத்தால் காதல், விரும்பினால் கல்யாணல், பிடிக்கவில்லையா உடனே பிரிவு! அதிரடியாக மறுமணம்!
"உனக்கு கோல் பண்ண பிறகு நீ வருவாய் எண்டு நிறைய நம்பினன். வெயிட் பண்ணின்.. நீ வரவே இல்ல.."
"எந்த வகையில நான் கேவலமா போனன் எண்டு பெரிய அடியா இருந்திச்சு எனக்கு அது.."
"என்ர அருமை தெரியாதவ எனக்கு தேவை இல்ல எண்டு முடிவெடுத்தன்.."
பிரார்த்தனா இமை சிமிட்டும் சிலை போல கேட்டுக் கொண்டிருந்தாள்.
"வான்டட்டா டரான்ஸ்பர் எடுத்து போன ஊர் ஒரு ரிமோர்ட் ஏரியா. தண்ணி வசதி இல்ல. கடை இல்ல. டவுனுக்கு முப்பது கிலோ மீட்டர் உள்ளுக்குள் இருந்து வரணும்.."
"சாப்பாடு தண்ணி ஒவ்வொண்டுக்கும் கஷ்டம்.."
"அம்மா அப்பா ரெண்டு பேரையும் தங்கச்சி கனடாக்கு எடுத்துட்டாள். பொண் பார்க்கிறன் நீயும் வா எண்டு என்னையும் கூப்பிட்டாங்க.."
"வெக்சாகி இருந்தன்.. ஒருவரும் தேவை இல்ல எண்டு இருந்தன்.."
"தண்ணி ஒத்துக் கொள்ளாம டைபொயிட் வந்து ஹொஸ்பிடல்ல அட்மிட் ஆகினன்..."
"பக்கத்தில ஒருவரும் இல்லாம அநாத மாதிரி ஃபீல் பண்ணண்.."
பிரார்த்தனா அவன் கண்ணையே பார்த்தாள்.
"அப்ப தான் அறிமுகமானா சந்தமாலி.. நான் வர்க் பண்ண பேங் ஸ்டாப். குவாடர்ஸ்ல பக்கத்துல இருந்தா. சுகம் இல்லாத டைம் அவ தான் கவனிச்சா..."
"கொஞ்ச நாள்ள புடிச்சிருக்கு எண்டு ப்ரபோஸ் பண்ணினா. கல்யாணம் செய்வமா எண்டு கேட்டா"
"கட்டினா என்ன பிழை எண்டு யோசிச்சன்.. எனக்குத் தேவைபட்ட மோரல் சப்போர்ட் அவ தான் தந்தா.."
"அவள்ட வீட்டு சம்மதத்தோட மேரேஜ் முடிச்சம்"
உதட்டோரமாக நுண்ணியளவு வளைந்தது பிரார்த்தனாவுக்கு. நல்லம் நல்லது என்பதாக சிரித்துக் கொண்டாள் மனசுக்குள்.
"வைஃப் பிள்ளைகள் ஊர்ல இருக்காங்க. இங்க பிராஞ்ல சில எக்கவுண்ட்ஸ் எரர்ஸ். டெம்ரரியா என்னச் செக் பண்ண அனுப்பி இருக்காங்க. டூ த்ரீ மந்த்ல பாணந்துறை போயிருவன்.."
மடியில் வைத்துள்ள கைப்பை பார்த்தாள் பிரார்த்தனா.
தன்னை இழந்துவிட்ட சோகத்தை அவள் வெளிக்காட்டாமல் சமாளிப்பதாக எண்ணியவன், "நீ ஏன் உனக்கு பொருத்தமான ஒரு வாழ்க்கைய அமைச்சி கெள்ளாம இருக்கிறாய் பிரார்த்தி?" எனக் கேட்டதும் நிமிர்ந்தாள்.
அந்தப் பார்வை அவனை சுட்டிருக்க வேண்டும்.
"நம்ம ரெண்டு பேருக்கும் நடந்த ரெஜிஸ்டர் மேரேஜ் பத்தி உங்கட ரெண்டாவது மனைவிக்கு தெரியுமா?"
முகம் கருக்க, "என்னப் பத்தி எல்லாம் தெரியும் அவளுக்கு. அவள்ட விருப்பப்படி பௌத்த முறைப்படி தான் எங்கட வெடிங் நடந்திச்சு.."
இலங்கை விவாக சட்டம், இந்து திருமணச் சடங்குகள் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு, பௌத்த வழியில் கரம் பிடித்திருக்கிறார்.
நல்லது! நல்லது!
"நான் சும்மா தெரிஞ்சி கொள்ள தான் கேட்டன். பயப்படாதிங்க.. உங்கள எந்த வகையிலயும் தொந்தரவு செய்ய மாட்டன். உண்மையிலே நீங்க இங்க இருக்கிறது எனக்கு தெரியாது.. நான் வேற ஒரு வேலையா வந்து.. சரி, நீங்க பிசியா இருப்பீங்க.. நான்" என எழுந்தாள்.
சம்பிரதாயத்ததுக்கு கேட்கப்பட்ட தேநீர் உபசாரம் நிகழாமலே மெல்லிய புன்னகையை சிந்திக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
பின்னால் அவன் ஏதோ சொல்ல வருவது போல் தோன்ற, இழுத்த கதவை பிடித்துத் திரும்பினாள்.
ஒரு அட்டையை நீட்டினான். "இது என்ர காட். சந்தமாலி உன்ன மீட் பண்ணணும் எண்டு அடிக்கடி சொல்லுவா..."
முகத்தில் அடித்ததை போல் மறுத்து விடலாமா?
அட்டையை வாங்கிக் கொண்டு வெளியேறினாள்.
விறு விறுவென வந்தவள் வரோதயனைத் தேடினாள்.
அலங்கார செடிகள் அரணாக அமைந்த வங்கியின் தானியக்க இயந்திர வரிசையில் பலர் காத்திருக்க வீதிக்கு இறங்கி இரு மருங்கும் நோக்கினாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரோதயனைக் காணவில்லை.
போய் விட்டான்.
விட்டுப் போய் விட்டான்.
சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து விட்டோம் இனி அவளாச்சு அவள் புருஷனாச்சு என்று நினைத்து விட்டான் போல.
இங்கிருந்து ஊருக்கு பஸ் எடுக்க வேண்டுமோ?
எந்தப் பக்கம் நிற்க வேண்டும்?
பேருந்து நிறுத்தம் உள்ளதா?
அதோ, நிழல் குடை தெரிகிறது.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் குளிரூட்டப்பட்ட வங்கியுள் வாசம் செய்தவளை வெயில் சுட, கைப்பையுள் குடையுள்ளதை மறந்து வீதியை கடந்தவளை, வங்கி வாகன நிறுத்தத்தில் ஃபோன் பேசியபடி நின்றிருந்த வரோதயன் கண்டான்.
நேரம் கழிக்க, பயிருக்கு நீர் பாய்ச்சும் பஞ்சுவையும் உரம் வாங்கச் சென்ற ராசுவையும் அலைவழி இழுத்து வைத்து அறுத்தவன் பேங் வீதியில் நடந்து செல்லும் பிரார்த்தனாவை கை நீட்டி கூப்பிட எடுத்து அந்த மடத்தனத்தை செய்யாமல் அவசரமாக பைக் எடுத்து மிதித்தான்.
இலங்கைமில் யுத்தம் நிகழும் போது வரோதயன் பள்ளிக் கூடம் படிக்கிறான். வன் செயல் நிகழ்கையில் முகாமில் இருக்கிறான். இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்திய போது செல்களை பரிமாறிக் கொண்ட போது வானத்தை அண்ணாந்து பார்த்து பயந்து இருக்கிறான். மரணத்தை தோளில் சுமந்து குடும்பத்துடன் அலைந்திருக்கிறான்.
அந்த கால கட்டத்தில் கூட இப்படி ஒரு உணர்வு நிலைக்கு ஆளானதில்லை அவன்.
பார்த்தீபனை சந்தித்து விட்டு செல்லும் பெண் பின்னால் ஓடும் அவனது கணங்களை விபரிக்க இயலாது.
வண்டியில் முந்திச் சென்று மறித்தவன் "எங்க போறிங்க.. அக்கம் பக்கம் பார்க்க மாட்டீங்களா?"
திடுக்கிட்ட பிரார்த்தனாவுக்கு பதில் சொல்ல வாய் வரவில்லை. உதட்டை அழுத்தி தன்னை சமன் செய்தவள் "நீங்க விட்டுட்டு பொயிட்டிங்க எண்டு நினைச்சி"
"விட்டுட்டு போறதா.. எப்டி நினைச்சிங்க அப்டி?"
அவளை சமாதானம் செய்தது அந்தக் கேள்வி. புன்னகைத்தாள்.
"நீங்க எங்க இருந்தீங்க, நான் காணல்ல.."
"பார்க்கிங்ல நிண்டன்.. தற்செயலா பாக்குறன் நீங்க அடிச்சு புடிச்சி போறிங்க.. எங்க போறிங்க இந்தப் பக்கம்?"
"பஸ் எடுக்க.."
"இந்த ரூட்லயா.. இது கொழும்பு ரூட்.. ஊருக்கு இப்புடி போகணும்"
"எனக்கு தெரியாது. யோசனையில.. வந்துட்டன்.."
அவளை சில நொடிகள் பார்த்தான் வரோதயன். ஓட விடும் அளவுக்கு உள்ளே நிகழ்ந்திருக்கிறதோ!
"மேனேஜர பாத்திங்களா?"
அவனை உரிமையாக முறைத்தாள். சற்று முன் நிகழ்ந்தவை கடகடவென காட்சியாக ஓட, நீர் திரையிட்ட விழியை இமை சிமிட்டிக் கலைத்தாள்.
"பிரார்த்தனா?"
"பொய் சொல்லி கூட்டி வந்திங்க என?"
"உண்மை சொன்னா வர மாட்டிங்க"
"வந்தா மட்டும் என்ன ஆகிரும் வரோதயன்?"
"உங்கட மிஸ்டர பாத்துட்டிங்க தானே? கதைச்சிங்களா.. என்ன சொன்னார்.. சமாதானம் ஆகுற மாதிரி இருக்கா.. உடனே இல்லாட்டியும் கொஞ்ச நாள்ளயாவது சுமுகமாகிரலாமா.. எங்க இருக்காராம்.. வீட்டக் கேட்டிங்களா.. ஃபோன் நம்பர் வாங்கினிங்களா.."
அவன் கண்ணில் ததும்பும் நம்பிக்கையை கண்டு சிரித்தாள். சத்தமாகவே சிரித்து கலங்கிய இடது கண் ஈரத்தை சுட்டு விரல் நகம் கொண்டு துடைத்தாள்.
வரோதயனை பிசைந்தது அவளது ஒவ்வொரு அசைவும்.
உச்சி வெயிலில், பிரதான சந்தியில், அத்துணை தீவிரமான சமயத்திலும் பயித்தியம் போல் சிரிக்கும் பெண் விநோதமாக தெரிந்தாள்.
பெற்ற தந்தையே முறையற்று பேசிய பிறகு தன்னுடன் இருசக்கர வண்டியில் அழைத்து வர அவனுக்கு இஷ்டம் இல்லை. அவளும் அதை விரும்ப மாட்டாள். பரஸ்பர புரிதலுடனே பிரார்த்தனா பஸ்ஸில் வந்திருக்க, விசித்திரமாக நடந்து கொள்ளும் இவளை தெருவில் வைத்து எதையும் கேட்டுக் கொள்ள முடியாமல் திருகோணமலைக்கு பஸ் ஏற்றி வைத்தவன் ரமணிக்கு அழைத்தான்.
*
அன்று சாயங்காலம் ஸ்கூட்டி ஹாரன் சத்தம் கேட்டு கேட் திறந்தாள் பிரார்த்தனா.
வண்டிக்கு சொந்தக் காரி ரமணி தான்.
வரோதயன் கதைத்து இருக்கிறான் என்று புரிந்து விட்டது. சிரித்தாள்.
"வாங்கக்கா" என்று சிரித்தாள்.
"படுத்திருந்திங்களா தனா..குழப்பிட்டனா..வரா கோல் எடுத்தார். என்னால ஒஃபிஸ்ல இருக்க ஏல இல்ல. ஷோட் லீவ் போட்டு ஓடி வந்துட்டன்.." வண்டியை பூட்டி விட்டு உள்ளே பிரவேசித்தவருக்கு தண்ணி தரப் போனவளை பிடித்து படுக்கை அறை இழுத்து சென்றவர் "மனிசனார பார்த்திங்களா.. கடைசியா பாணந்துறை பிராஞ்ல இருக்கிறதா அறிஞ்சி வந்து வரோதயன் சொன்னதும் நேர்ல போய் பாத்துட்டு வரச் சொன்னன். என்ர கதைய மதிக்கல்ல நீங்க. கடவுளா பாத்து அவர கந்தளாய் அனுப்பி வச்சிருக்கிறார். போனிங்களா பாத்திங்களா.. என்ன கதைச்சிங்க.. எப்டி இருக்குறார்?"
பரபரக்கும் அவரைப் பார்க்க வேதனையாக இருந்தது.
"நீங்க நினைக்கிற மாதிரி இல்லக்கா.."
"நெகடிவ்வா ஒண்டு சொல்ல கூடாது. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வரணும்.."
"என்ன சொல்லணும்?"
"மனம் திறந்து கதைச்சிங்களா.. இப்ப நீங்க தான் எனக்கு முக்கியம் எண்டு வெளிபடையாக சொன்னிங்களா.."
பிரார்த்தனா சிரித்தாள்.
"மன்னிப்பு கேக்கிற எண்டாலும் பரவால்ல. கேட்டிங்களா... ஏன் பிள்ள சிரிக்கிறீங்க.. இன்னும் கோபமா இருக்குறாரோ.."
"நீங்க நினைக்கிற மாதிரி, வரோதயன் கற்பனை செய்ற மாதிரி இல்லக்கா. என்ர வாழ்க்கை.. நான்…. எனக்கு முதல்லே இதெல்லாம் தெரியும்.." சிரித்துக் கொண்டே பேசியவள் உதடுகள் ஒரு பக்கமாக கோணின. உணர்ச்சியை அடக்கும் செயன்முறை அதுவென்று ரமணி அறிவார்.
"என்ன தனா?" ரமணிக்கு பயம் பிடிக்க,
"எல்லாம் முடிஞ்சுது அக்கா. மனசுல ஒரு ஓரத்தில ஒரு நம்பிக்கை இருந்திச்சு.. எங்கயோ என்ன நினைச்சிட்டு ஒரு ஜீவன் இருக்கு எண்டு நாளக் கழிச்சன்.. எல்லாம் பொய் அக்கா… என்னப் போல ஒரு பயித்தியம் இருக்காது.."
"என்ன தனா.. என்னதான் சொன்னார் அவர்?"
"அவர் வேற கல்யாணம் செய்துட்டார் அக்கா.. சிங்களப் பெட்டைய கட்டி இருக்கார்…"
வாயில் கை வைத்தார் ரமணி.
"நாசமா போவான். ஆம்பிளையாவது இத்தின வருஷம் சும்மா இருக்கிறதாவது. என்ர நினைப்ப பிழைக்க வைக்க இல்லயா அவன்... புத்திய காட்டிட்டான். துலைவான். நல்லா இருப்பானா அவன்! வேற கல்யாணம் கட்டினா அத சொல்ல மாட்டானாமா? உங்களுட்ட இருந்து டிவோர்ஸ் வாங்காம எப்டி இன்னொருத்திய கட்டுவானாம்.." கொந்தளித்தார்.
"அவர் கட்டிட்டார்.. கட்டி ரெண்டு பிள்ளைகளும் இருக்கு"
"ரெண்டு பிள்ளையா! நல்லா இருப்பானா அவன்! இப்புடி வாழ்க்கைய துலைச்சிட்டிங்களே பிள்ள! கையில வந்து விழுந்த வாழ்க்கைய யாருக்கோ சிங்களத்திக்கு வாரிக் குடுத்துட்டிங்களே… நான் உங்கள தான் பிழ சொல்வன் தனா..இப்புடி முட்டாளா இருந்தா யாராலையும் நம்மள காப்பாத்த ஏலாது.. எப்படியாவது அவன கண்டு பிடிச்சி சேர்த்து வைக்க நினைச்சம்.. வரோதயன் ஆடி ஓடியும் கண்டு பிடிச்சும் ஒரு பிரயோசனமும் இல்லாம பொயிட்டே. நீங்க சிரிக்கிறிங்க என.. என்ன தியாகச் செம்மலா நீங்க.. பயித்தியம் பிள்ளை நீங்க"
ரமணி தீவிரமாக திட்டியதும் வயிறும் நெஞ்சும் கசந்தது. உள்ள ஒரே அன்பர் அவர், ஆறுதல் அவர். அவரும் அவளை வெறுத்தால்?
"ஓம் அக்கா, நான் பயித்தியம் தான். தாலி கட்டாமலே, மனசுல ஒருத்தர சுமந்துட்டு இருக்கிறதா நினைச்சிட்டு இருக்கனே.. நான் பயித்தியம் தான். வரோதயனோட பழகுறதையே அவருக்கு செய்ற துரோகமா நினைச்சிருந்தனே..நான் பயித்தியம் தான். மனச அலைபாய விடக் கூடாது லிமிட்ல இருக்கணும், வரோதயன் ஃப்ரெண்ட், வரோதயன் எனக்கு ஃப்ரெண்ட் மட்டும் தான் எண்டு எனக்கு நானே சொல்லிட்டு… என்ன நானே ஏமாத்திட்டு இருக்கனே.. நான் பயித்தியம் தான்.. என்னப் பிரிஞ்சு போன அடுத்த மாசமே அடுத்த பொம்பிளைய தேடின அவரக் காரணம் காட்டி, உண்மையா நேசிச்ச ஒருத்தன வேணாம் எண்டனே, நான் பயித்தியம் தான். என்னப் பத்தி முழுசா தெரிஞ்ச பிறகும் அவன், கல்யாணம் செய்வம் வாங்க எண்டு கூப்பிட்டும், நீங்க எனக்கு ஃப்ரெண்டா மட்டும் இருங்க எண்டு தள்ளி வச்சனே, நான் முழுப் பயித்தியம் தான். பொம்பிளையா பிறந்தா எவ்வளவு பயித்தியக்கார தனங்களோட இருக்கணும் பாருங்களன்.. நான் பயித்தியம் தான் ரமணி.."
அழுகையுடன் அரற்றும் அவளை, ஆத்திரம் வற்றிக் கவனித்தார் ரமணி.

Last edited: