நின் மத்தம் : 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
அத்தியாயம் : 1

இரவில் மின்னும் நட்சத்திரத்தில் செயற்கை வெளிச்சமும் சேர்ந்து மின்னி வண்ணமயமாக காட்சியளிக்க விரல் விட்டு எண்ணும் பெரிய பணக்காரர்கள் மட்டும் வரும் அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலின் லக்ஸரி ரூமின் நடைபாதையில் கையில் முக்கியமான கோப்புடன் அந்த அறைக் கதவை தட்டலாமா வேண்டாமா என்று ஒவ்வொரு முறையும் தயக்கத்துடன் கதவு அருகே வந்து விட்டு, மீண்டும் பின்னே வந்தான்.

கதவை தட்டினால் தன்னை அவன் தட்டி விடுவான் என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த புறமும் அந்த புறமும் நடந்துக் கொண்டிருந்தான் இளங்கோ!!

அவன் பயத்திற்கு காரணமானவனோ உள்ளே அந்த பிரம்மாண்டமான அறையில் தன் செந்நிற தேகத்தின் முதுகில் அவளின் நக கீறல்கள் பட அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவளை தன்னுள் புதைத்து ஆட்கொண்டிருந்தான். செந்தூரன்!!

அவளும் அவனின் ஆட்சியில் கட்டுண்டு கண்கள் சொருகி அனுபவித்து விட்டு கண்கள் மெல்ல திறந்த வேளையில் அவனின் பரந்து விரிந்த மார்பை பார்த்தவளுக்கு அதன் மேல் ஆசை வர அதையும் மெல்ல தீண்டினாள் அதை மெல்ல தட்டி விட்டு தன் வேலையை செவ்வேனே செய்தான்.

அவன் மார்பின் மீது மோகம் கொண்டு அந்த மார்பில் தன் இதழ் முத்ததை வைத்தாள்.

அவள் இதழ் பட்ட அடுத்த நிமிடம் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறையை இடியென இறக்கி விட்டு, அவளை கீழே தள்ளி அவள் மீது பணத்தை எடுத்து வீசி விட்டு, "கெட் லாஸ்ட் " என்று கர்ஜித்தான்.

அவள் அவனை புரியாத பார்வை பார்த்து, "ஏன் இப்படி பண்ற நல்லா தானே போய்யிட்டு இருந்தது " என்றாள்.

" அது உனக்கு தேவையில்லாதது இன்னும் கூட பணம் வேணும்னா எடுத்துக்கோ, " என்று மேலும் சில கட்டு பணத்தை அவள் மீது வீசிவிட்டு குளியல் அறைக்குள் சென்று புகுந்து விட்டான்.

அவளுக்குத்தான் என்ன நடந்தது என்று புரியவே இல்லை 'ஒரு முத்தம் தா குடுத்தேன் அதுக்கு ஏன் இப்படி பண்றான். எனி வே நமக்கு பணம் வந்தது' என்று யோசித்துக் கொண்டு அவள் தனது ஆடைகளை அள்ளி போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

எப்போது அந்த அறையின் கதவு திறக்கும் என காத்திருந்த இளங்கோ சடார் என்று கதவை திறந்து வந்தவளை விட்டுவிட்டு உள்ளே தலையை எட்டி பார்க்க.... அவள் அவனை இழுத்து "இன்னொருமுறை இவனுக்காக என்ன புக் பண்ணனு வச்சுக்கோ உனக்கு அவ்வளவு தான் மரியாதை" என்று இளங்கோவிடம் திட்டி விட்டு மடமடவென்று கீழே சென்று விட்டாள்.

இளங்கோவிற்கு தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் அறையின் உள்ளே சென்று அவன் வருவதற்காக காத்திருந்தான்.

இங்கு குளியலறை உள்ளே சென்றவனுக்கு அவள் தந்த முத்தத்தால் குளிர் நீர் கூட நெருப்பு பிழம்பாய் இறங்கியது.

அவன் எப்போதும் இப்படி பெண்களை நாட மாட்டான், அதிகமான கோவம், அதிகமான மன அழுத்தம், இவையெல்லாம் வந்தால் தான் இந்த மாதிரி இடத்திற்கு வருவான். பெண்கள் மீண்டும் மீண்டும் அவனையே தேடும் அளவிற்கு அவன் தீண்டல் இருக்கும் ஆனால், இந்த முத்தத்தை மட்டும் பெறவும் மாட்டான், கொடுக்கவும் மாட்டான் அப்படி அவன் மேல் ஆசைக் கொண்டு முத்தம் செய்தால் இப்படி தான் நடந்துக் கொள்வான்.

அவள் முத்தமிட்ட இடத்தை எதைக்கொண்டு துடைப்பது என்று தெரியாமல் அந்த கழிவறையில் ஆசிட் பாட்டில் இருக்கிறதா என்று பார்த்தான். நல்லவேளை அந்த மாதிரி எதுவும் இல்லை, அதனால் சோப்பை மட்டும் போட்டு குளித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அங்கு இளங்கோ இருப்பதை கண்டுகொள்ளாமல் விறுவிறு என்று வெளியே வர அவன் கையைப் பிடித்து தடுத்து, "டேய் நான் ஒருத்தன் இங்க இருக்கேன் டா பைல்ல சைன் வாங்குறதுக்காக கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ என்னடானா என்னை பார்த்தும் பார்க்காம போயிட்டு இருக்க, " என்றான்.

"இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்ற நானே செம கடுப்புல இருக்கேன் ஏதாவது சொல்லி வாங்கி கட்டிக்காத" என்றான்.

" அப்படி இன்னைக்கு என்னதான்டா ஆச்சு" என்று கேட்டு வாயை மூடுவதற்குள், செந்தூரனின் அன்னையிடமிருந்து இளங்கோவிற்கு அழைப்பு வர
அதை பார்த்தவனுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

"பாரு டா அம்மா தான் போன் பண்ணி இருக்காங்க இப்போ நான் என்ன சொல்றது, " என்றான்.

" எதையாவது சொல்லு என்ன டிஸ்டர்ப் பண்ணாத" என்று அங்கிருக்கும் சோபாவில் தொப்பென அமர்ந்தான்.

"என்னை ஏன்டா இப்படி பண்ற " என்று புலம்பினாலும், போனை எடுத்து காதில் வைத்து "சொல்லுங்கள் அம்மா" என்றான்.

"இளங்கோ தம்பி எங்கப்பா" என்று தன்மையாக கேட்டார் சுசிலா!!

" அவனா மா "என்று செந்தூரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "அ அவன் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கான் மா " என்றான்.

" சரிப்பா சாப்பிட்டானா இல்லையான்னு கூட தெரியல என்னன்னு கொஞ்சம் பாத்துட்டு சீக்கிரமா வீட்டுக்கு வர சொல்லுப்பா!!" என்றார்.

சுசிலா மிகவும் தன்மையானவர் சுசீலாவிற்கு இருக்கும் ஒரே பிணைப்பு செந்தூரன் மட்டுமே எப்போதும் அவனை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்.

செந்தூரனுக்கும் அப்படி தான் அவன் அன்னை மட்டும் தான் உயிர் தன் அன்னையிடம் பேசும் மனநிலை அவனுக்கு இப்போது இல்லாததால் அதனை தவிர்க்கிறான் அவ்வளவே!!

சுசிலாவிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்த இளங்கோ செந்தூரனிடம் தன் கையில் உள்ள கோப்புகளை கொண்டு போய் கையெழுத்து வாங்கிக் கொண்டே, "ஏன்டா அம்மா நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப விருப்ப படுகிறார்கள் அதை கொஞ்சம் காதில் வாங்குடா" என்றான்.

" நான் தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்ல அது அவங்க கொஞ்சம் அவங்க காதுல கொஞ்சம் ஏத்தி விடுறியா " என்றான்.

"அவங்க நல்லது சொல்றாங்க அதனால கேட்கிறேன் நீ சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது " என்றான்.

"கேட்க முடியாதுன்னா மூடிட்டு வந்த வேலைய மட்டும் பாத்துட்டு கிளம்பு" என்றான்.

" இப்போ ஏன்டா இந்த மாதிரி பேசுற இந்த மாதிரி நடந்துக்கிற அப்படி என்ன நடந்துச்சு உனக்கு " என்று கேட்டான்.

"ஒன்னும் நடக்கல அந்த பிரைவேட் ஸ்கூல் ஸ்டேஷனரி டெண்டர் நமக்கு தானே ஓகே ஆயிருக்கு" என்று கேட்டான்.

" அது முதல்ல அந்த டி. கே. எஸ் கம்பெனிக்கு தான் போச்சு ஆனா அது எப்படி நமக்கு வந்துச்சுன்னு தெரியல, " என்றான்.

"அது எப்படிடா அந்த கம்பெனிக்கு ஒரு டெண்டர்னா போக விடுவேன் எல்லாம் என் வேலை தான்" என்றான்.

"அந்த ஆளு அதுக்கும் ஏதாவது பண்ண போறான் டா" என்று பயந்தான். இளங்கோ

"அவனதற்கு அந்த அறையே அதிரும் படி சிரித்து, அவ என் கண்ணு முன்னாடி வராம இருந்தா கூட அந்த டெண்டர் நான் விட்டுக் கொடுத்து இருப்பேன் அவன் என் கண்ணு முன்னாடி வந்தது தான் எனக்கு கோவமா வருது " என்று அங்கிருக்கும் டீப்பாவை எட்டி உதைக்க அது சில்லு சில்லாக உடைந்தது.

"செந்தூரா காம் டவுன் ஏன் இவ்வளவு கோவப்படுற, அந்த ஆளு உன்னோட அப்பா டா" என்றான். இளங்கோ!!

அப்பா என்று சொல்லி வாய் மூடும் முன்னே, " டோன்ட் சே லைக் தட்" என்று அங்கு சில்லாக உடைந்திருந்த கண்ணாடி தூண்டிலே காலை பதித்தான்.

அதில் இளங்கோ "பதறி டே ஏன்டா இப்படி பண்ற," என்று அவனை அதிலிருந்து இழுத்துக் கொண்டு வந்து அங்கிருக்கும் ரூம் சர்வீஸ் இருக்கு போன் செய்து அதை சுத்தப்படுத்துமாறு அறிவித்துவிட்டு அவன் காலில் பஞ்சை வைத்து துடைத்து முதலுதவி செய்து வலிக்கான மாத்திரையும் வாங்கி அவனுக்கு முழுங்க செய்து அவனை மெதுவாக அழைத்து காரில் ஏற்றி அவனே வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

அவன் தாங்கி தாங்கி நடப்பதை பார்த்த சுசிலா பதறி, " என்னாச்சுப்பா" என்று கேட்டார்.

"ஒன்னும் இல்லை மா மீட்டிங் முடிச்சுட்டு வரும்போது ஒரு தண்ணி டம்ளர் கீழே விழுந்திருச்சும்மா தெரியாம கால வச்சுட்டேன் வேற ஒன்னும் இல்ல, சாப்பிட்டீங்களா!" என்றுக் கேட்டான்.

"நான் என்னைக்கு பா நீ இல்லாம சாப்பிட்டு இருக்கேன்" என்று அவர் தவிப்புடன் கூறினார்.

" எனக்காக எதுக்குமா நீங்க காத்துகிட்டு இருக்கீங்க நான் எத்தனை வாட்டி சொல்ற நான் வரதுக்கு முன்ன பின்ன ஆகும் எனக்காக காத்துட்டு இருக்க வேணாம்னு எழுந்து வாருங்கள்" என்று அவரை வலுக்கட்டாயமாக உணவு மேஜிக்கு தன் வலிகளை கூட பொருட்படுத்தாமல் அழைத்துச் சென்றான்.

இதை பார்த்த இளங்கோவிற்கு அப்பா என்று சொன்னதும், அப்படி நடந்து கொண்ட செந்தூரனுக்கும் அம்மாவிற்காக தன் வலிகளை கூட பொருட்படுத்தாமல் செல்லும் செந்தூரனையும் பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை ஏதோ நல்லா இருந்தா சரி தான் என்று யோசித்தவனின் நினைவை "நீயும் வந்து சாப்பிடுப்பா" என்று சுசிலாவின் குரலில் தெளிந்து, " இதோ வரேன்மா என்று சொல்லிவிட்டு அவர் அருகில் அமர்ந்தான் அதன் பின் செந்தூரனும் தன் தாய்க்காக கொஞ்சமாக உணவை உண்டு விட்டு தாங்கி தாங்கி தன் அறைக்கு சென்று விட்டான்.

அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட சுசிலா இளங்கோவிடம் "என்ன நடந்துச்சு" என்று கேட்டார்.

அவன் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்ல... அவருக்கும் இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்.

"ஏன்மா அமைதி ஆயிட்டீங்க" என்று கேட்டான்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல இளங்கோ அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும் அது மட்டும் தான் எனக்கு இப்போ இருக்கு" என்றார்.

"அது அமைய அவன் கொஞ்சம் ஒத்துழைக்கணும், அன்பும் அரவணைப்பும் வாங்கவும் மாட்டேன் தரவும் மாட்டேன்னு சொல்றவனை யாரு தான் கட்டிப்பாங்க நீங்களே சொல்லுங்க அம்மா " என்றான்.

" அவனை கல்யாணம் பண்ண முதல் பொண்டாட்டி கூட இதையே தான் சொல்லிட்டு அவன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டு போயிட்டா!! அவனுக்கு ஏத்த மாதிரி பொண்ண தான் நானும் தேடிட்டு இருக்கேன் பாக்கலாம் இளங்கோ எனக்கு தூக்கம் வருது நாளைக்கு நான் ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போகணும்" என்றார்.

" நானும் எங்கேயாவது பார்த்து சொல்றமா நீங்க தான் வந்து கல்யாணம் பண்ணி வைக்கணும் வரேன்மா" என்று அவனும் கிளம்பி விட்டான்.

மேலே சென்ற செந்தூரன் உறக்கத்தில் இருக்க தன் மகனை எண்ணிய படியே மேலே ஒரு பார்வை பார்த்து விட்டு கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டு தன் அறைக்கு செல்லும் போது செந்தூரா என்றுக் கத்திக் கொண்டே மயங்கி சரிந்தார்.

கதையின் போக்கு எப்படி இருக்குன்னு காமென்ட் பண்ணுங்க செல்லம்ஸ்....
 
Last edited by a moderator:

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
அவ்வா ஆன்டி ஹீரோ 😳😳😳😳.....
ஓ முதல் மனைவிக்கிட்டையும் இப்படி தானா 🤔🤔🤔🤔🤔....ocd ஏதும் இருக்குமா.....
அப்பானா இப்படி வெப்பனா மாறி போயற்றானே 😳😳😳😳.....
ஏனோ????
 
  • Haha
Reactions: ஷமீம்