செந்தூரன் தன் அன்னையிடம் அலுவலகத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்குச் சென்றான்.
என்றும் இல்லாமல் இன்று அங்கு அவனை எல்லோரும் வித்தியாசமாக பார்த்தனர். ஆனால் எதையும் கேட்க முடியாதே, அதனால் பார்வையால் மட்டுமே அவனைப் பார்த்துவிட்டு தாங்கள் வேலையை தொடர்ந்தனர்.
ஆனால் அவனுக்கு அதைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை வேலை ஒன்று தான் முதல் காரியம் அதுவும் பணம் தான் எல்லாவற்றையும் விட பெரியது என்பான்.
அதன் மேல் கொண்ட தீராத வெறியால் தான் பள்ளிக்கு பயன்படும் ஸ்டேஷனரி பொருள்கள் தயாரிக்கும் தொழிலை தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளான்.
அதுவும் பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்து, தன் பெயருக்கு தந்தை என்று பெயர் சூட்டிக் கொண்டிருந்த வரதனை வீழ்த்தி இன்று வரை முதலிடத்தை தக்க வைத்துள்ளான்.
அவன் உள்ளே வரும்போது அங்குள்ள வரவேற்பாளிடம் "இளங்கோவை என் கேபினுக்கு வர சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு பரபரப்பாக சென்றான்.
அந்த பெண் "சார்" என்று அழைக்க... "என்ன வேணும் உங்க டவுட் சொல்ல எல்லாம் எனக்கு நேரமில்லை" அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்க கூட இல்லாமல் சிடுசிடுத்தான்.
ஆனால், அங்கு மாறாக சார் என்று அழைத்தவளுக்கோ அவன் உள்ளே சென்று பார்த்த பின்பு தன்னை என்ன செய்வானோ என்று யோசிக்க யோசிக்க கைகால்கள் எல்லாம் நடுக்கம் எடுத்து வேர்வை வழிய நின்று கொண்டிருந்தவளை காப்பாற்றவே அங்கு வந்து சேர்ந்தான் இளங்கோ!!
அவனை கண்டதும் இனி எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று தன் வேலையை பார்த்து தொடங்கி விட்டாள்.
தன்னடைக்கு வேகமாகச் சென்ற செந்தூரனை அதைவிட வேகமாக வந்து, "செந்தூரா " என்று அழைத்து தடுத்தான்.
"வா இளங்கோ உன்னைய தான் தேடி பார்த்தேன் அந்த கவர்மெண்ட் ஸ்கூல் பேக் காண்ட்ராக்ட் டீடைல் என்ன ஆச்சுன்னு பார்க்கணும்" என்றான்.
அவன் மெல்ல தயங்கிக் கொண்டே "அது ரிசல்ட் வந்துடுச்சு செந்தூரா" என்றான்.
"ஏ சூப்பர் டா வந்துடுச்சா நமக்கு சாதகமாக தானே வந்திருக்கு" என்று கேட்டான்.
அந்த டெண்டர் கிடைத்தது இளங்கோவிற்கும் மகிழ்ச்சி தான் ஆனால் அந்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல், " ஆமா டா ஒரு 1000 ரூபா வித்தியாசத்துல அது அந்த வரதன் குரூப் ஆப் கம்பெனியை பீட் பண்ணி நமக்கு கிடைத்து விட்டது" என்றான்.
இது கேட்ட செந்தூரனுக்கு அவனை நினைத்து அவனுக்கே ஒரு கம்பீரப் புன்னகை வர தன் மீசையை முறுக்கி கொண்டான்.
ஆனால் இளங்கோவிற்கு தான் ஏனோ அந்த குளிரூட்டப்பட்ட அலுவலகத்திலும் வியர்வை ஆறாக ஓடியது...
"டேய் நாம தான் வின் பண்ணிட்டோம்ல அப்புறம் ஏன்டா உனக்கு இப்படி வேர்த்து ஊத்துது வா என்னோட கேபினுக்கு போகலாம்," என்று அழைத்தான்.
இளங்கோ தயங்கி கொண்டு "அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான் வா நம்ம கேன்டீன் போகலாம்" என்று அழைத்தான்.
" டேய் என் கேபினுக்கே போனா அங்கிருந்து கேன்டீன் ல ஆர்டர் பண்ணா அங்கிருந்து வர வேண்டிய ஃபுட் வரப்போகுது நீ ஏன்டா கேன்டீன் கூட்டிட்டு போற வா நம்ப கேபினுக்கு போகலாம் " என்று இளங்கோவை அழைத்தான் செந்தூரன்!!
அதனால் வேறு வழியில்லாமல் "மச்சான் நான் ஒன்னு சொல்லுவேன் நீ கோபவப்படக்கூடாது மிஸ்டர். வரதன் உங்க அப்பா" என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே புரிந்துக் கொண்டவன்
தன் அறைக்கு சென்று பார்க்க அங்கு தன் அறுபது வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கண்களில் கண்ணாடியும் முகத்தில் ஒரு ஏளன புன்னகையுடனும் அங்கிருக்கும் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் வரதன்
அவரைக் கண்டதும் கோவம் தலைக்கு ஏறி " இப்போ எதுக்கு என்னோட ஆபிசுக்கு வந்த" என்று கேட்டான் இல்லை இல்லை கத்தினான்.
அவன் முகம் செங்காந்தளாய் சிவந்து இருப்பது அவருக்கு சிரிப்பை தான் தந்தது அதை பார்த்து நக்கலாக கைத்தட்டி சிரித்துவிட்டு, "நீதான் டென்டர்ல வின் வின் பண்ணிட்ட இல்ல அதனால தான் என்னோட சைடுல இருந்து ஸ்மால் டோக்கன் ஆப் கிப்ட் கங்கிராஜுலேசன்," என்றுக் கூறி ஒரு பூங்கொத்தை நீட்ட அவன் அதை தட்டி விட்டு,
" நான் உன்னை வெளியே போ ன்னு சொன்னேன்... "
அவர் அப்போதும் எந்த எதுவும் காட்டிக் கொள்ளாமல் பூங்கொத்தை அவனுடைய மேஜை மேல் வைத்துவிட்டு தன் இரு கைகளையும் தன்னுடைய கால் சட்டை பையில் வைத்துக்கொண்டு இவ்வளவு "டென்ஷன் வேணாம் மை சன்" என்று சாதாரணமாக சொன்னாலும் அவன் கோபம் அவருக்கு ஒரு போதை போல் இருந்தது.
ஆனால் அவனுக்கோ அவர் முகத்தை சாதாரணமாக பொது இடங்களில் கண்டாலே, கோவம் வந்து முகம் இப்படித்தான் சிவந்து தீப்பிழம்பாய் மாறி அந்த கோவத்தை போக்க பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வான் அது தெரிந்தும் வேண்டுமென்றே இன்று அலுவலகத்திற்கு வந்து நின்று அவனை வெறுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.
அவர் மை சன் என்று சொன்னதில் அவனுக்கு கோவம் வந்து, " ஐ ஆம் நாட் யுவர் சன், " என்றான்.
அவர் அதற்கும் சிரித்து, "நான் சாதாரணமா யூ ஆர் நாட் மை சன்னு சொல்லிடுவேன் ஆனா அது உங்க அம்மாவுக்கு தான் கெட்ட பேரு பரவாயில்லையா? " என்றுக் கூறி சோபாவில் தோரணையாக அமர்ந்து கால் மேல் கால் போட்டார்.
தன் அன்னையைப் பற்றி பேசியதும் கோபம் வந்து அவர் சட்டையை பிடித்து, " எங்க அம்மாவ பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதியும் இல்லை வெளியே போ" என்று கத்தினான்.
" நான் போக தான் போகிறேன் ஏன் நீ வந்து சும்மா கத்தி உன்னோட பிபியை இன்க்ரீஸ் பண்ணிக்கிற, " என்று அப்போதும் சாதாரணமாகவே சொன்னார்.
அவன் அவர் சட்டையை விட்டுவிட்டு தன் கைகளை அங்கிருக்கும் மேஜையில் ஓங்கி ஒரு குத்து குத்தியதில் அவன் கைகளில் ரத்தம் கொப்பளித்து வந்தது.
மகனின் கையில் ரத்தத்தை பார்த்தவுடன் தான் அவருக்கு திருப்தி ஏற்பட்டது போலும், " சூப்பர் வெல்டன் நான் என்ன நினைச்சு வந்தேனோ அது நடந்துடுச்சு பர்ஃபெக்ட்லி ஆல்ட்ரைட், " என்று சொல்லி சென்றார்.
தான் பெற்ற மகவுக்கு ஒன்று என்றால் துடிக்கும் தந்தைகளுக்கு மத்தியில் அவன் கையில் ரத்தம் வருவதை பார்த்து சிரித்து விட்டு செல்லும் இவர் என்ன விதமான தந்தையோ இல்லை மனிதனோ
அவன் அறையில் இருந்து சென்றவர் மீண்டும் உள்ளே வந்து, "திஸ் விக்டரி இஸ் லாஸ்ட் பார் யு நீ ஜெயிட்டன்னு ரொம்ப ஆட்டம் போடாத கண்டிப்பா ஒரு நாள் உன்னுடைய வெற்றிய நான் தட்டி பறித்துடுவேன், அதெல்லாம் பார்க்க உனக்கு இன்னும் வயசுல தெம்பு வேணும் பாத்து இப்பவே ரத்தத்தை முழுசையும் இழந்துடாத உங்க அம்மாவுக்கு வேற நீ ஒரே புள்ள" என்று சொல்லிவிட்டு அவன் தோளை தட்டி மேலும் வெறுப்பேத்தி விட்டு
சென்றதோடு மட்டுமில்லாமல் வெளியே வந்து இளங்கோவை சொடக்கிட்டு அழைத்து, " உள்ள உங்க முதலாளிக்கு கையில ரத்தம் வருது போய் என்னன்னு பாரு சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகவில்லை என்றால் செத்துருக்கிற போறான்" என்றார்.
அதுல அவனுக்கே கோவம் வந்து "நீங்க எல்லாம் மனுஷன் தானா" என்று கேட்டான்.
"அப்கோர்ஸ் மனுஷன் தான் மனுஷனுக்கு தான் ரெண்டு கை ரெண்டு கால் இருக்கு, உங்க முதலாளி காப்பாத்துற வழிய பாருடா" என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
அவன் கையில் ரத்தம் உன் வருகிறது என்று தெரிந்தவுடன் இளங்கோ ஒரே ஓட்டமாக அவன் அறைக்கு வந்து அவனைப் பார்க்க....
அவன் கையில் இருக்கும் ரத்தத்தின் வண்ணமும் அவன் கண்களில் இருக்கும் வண்ணமும் ஒரே செங்குருதி நிறத்தில் இருந்தது.
அவன் கோவத்தை குறைக்க வழி தெரியாமல், " மச்சான் அவர்தான் வேணும்னு பண்ணிட்டு இருக்காருன்னா நீயும் ஏன்டா இந்த மாதிரி உன்னையே வருத்திக்குற முதல் ஹாஸ்பிடலுக்கு போகலாம்" என்றான்.
" அந்த ஆள பார்த்தாலே எனக்கு வெறுப்பு எறுது நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன் நீ வெளியே போ" என்று சொன்னான்.
"அப்படியெல்லாம் போக முடியாது நீ வா" என்று அவனை மருத்துவமனைக்கு அழைத்தான்.
"லீவ் மீ அலோன்" என்று கத்தினான் செந்தூரன்.
இளங்கோ அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறையை வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவியை பார்த்து அமரும் நேரம், "ஐ வாண்ட் கோ ரிசார்ட் அரெஞ்ச் தட்" என்றான்.
"டேய் ரெஸ்டார்ட்க்கு இப்ப எதுக்கு போகணும்ங்கிற முன்னையாவது கல்யாணம் ஆகாம இருந்தது தான் கல்யாணம் ஆயிடுச்சுல உன்னைய நம்பி ஒரு பொண்ணு வந்திருக்கு அந்த வேலையெல்லாம் நான் செய்ய மாட்டேன்." என்றான்.
"டு வாட் ஐ சே, ஐ நீட்" என்று பிடிவாதமாக சொன்னான்.
" நான் பண்ண மாட்டேன்" என்று இளங்கோவும் பிடிவாதமாக இருக்க, மருந்து ஏறிக்கொண்டிருந்த கையில் இருந்து மருந்தை பிரித்து எடுத்தான்.
" டேய் என்னடா பண்ணிட்டு இருக்க என்று இளங்கோ அதட்ட,
" நான் கேட்டது செய்யலனா நான் இப்படி தான் பண்ணுவேன் " என்று அவன் அடம் பிடித்து அதை எடுத்துக் கொண்டிருந்தான்.
அதனால் இளங்கோ வேறு வழியில்லாமல், அவன் எப்போதும் அழைக்கும் பெண்ணிற்கு அழைத்து விட்டு ரிசார்டிலும் அறையை முன் பதிவு செய்து விட்டான்.
மருத்துவமனையில் ஒரு நாள் இருந்து செல்ல வேண்டும் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இன்றே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று சொல்லி வெளியே வந்து ரிசார்ட்டில் அந்த பெண்ணை நாட முயற்சிக்க, இன்று ஏனோ அவனால் முடியவில்லை, அவளிடம் செல்லும் போது மான் விழியின் முகமே நினைவுக்கு வர அவளிடம் பணத்தை எடுத்து நீட்டி, "ஐ டோன்ட் வாண்ட் யு நீ போ" என்று சொன்னான்.
அவளுக்கும் பணம் மட்டும் போதும் விட்டும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள்.
அவனுக்கு இப்போது தன் தந்தையின் மேல் உள்ள கோபம் எங்கோ காற்றில் மறைந்து சென்று எனக்கு ஏன் அவன் முகமே ஞாபகம் வருது என்று சிந்தனையில் உழன்று கொண்டிருந்தான்.
அவன் சிந்தனைக்கு காரணமானவளோ இருள் சூழ்ந்த வேளையில் கண்களில் கண்ணீருடன் மூச்சு வாங்கி நின்றுக் கொண்டிருந்தாள்.
கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்..

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.