நின் மத்தம் : 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
தன் தந்தையைக் கண்ட கோவத்தை தீர்த்துக் கொள்ள அவன் பெண்ணை நாட அவனால் முடியவில்லை, அதையும் மீறி அவளின் கழுத்தின் அருகே வந்து அவள் வாசனையை முகரும் போதும் அவனுக்கு மான் விழியின் முகமே நினைவுக்கு வர, அவளை தள்ளி விட்டான்.

இப்போது தன் தந்தையின் மேல் கோபம் விலகி அவள் முகம் ஏன் வந்து போகிறது என்று குழப்பத்துடன் அங்கிருக்கும் கட்டில் அமர்ந்து உழன்றுக் கொண்டிருந்தான்.

அந்த குழப்பத்திற்கு காரணமானவளோ இருள் நிறைந்த இந்த வேளையில் தனது மருத்துவமனை வாளாகத்தில் கண்களில் கண்ணீருடன் கையில் தன் கை பையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்று அங்கு ஏதாவது கையில் கிடைக்கிறதா சற்று நேரத்திற்கு முன்பு தன்னை துன்புறுத்தியவனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியில் நின்றுக் கொண்டிருந்தாள்.

அவனை எதுவும் செய்ய முடியாத தன்னுடைய கையறு நிலையை எண்ணி அவள் மீது அவளுக்கே கோவம் வந்து தன் காலை பூமியில் உதைத்து விட்டு மீண்டும் ஒருமுறை அந்த மருத்துவ மனையைப் பார்த்து விட்டு தன்னுடைய அடையாள அட்டையை தூக்கி வீசி எரிந்துவிட்டு நடந்து வந்தாள்.

அவளுடைய வண்டி அவள் வீட்டிலேயே இருக்க வேறு வழியில்லாமல் காலையில் கார் புக் செய்து வந்தாள். இந்த நேரத்தில் அவ்வாறு புக் செய்ய முடியாது என்பதால் நடந்து வந்து அங்கிருக்கும் பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்தாள்.

அங்கு வந்து நின்று பார்க்க பேருந்து வந்தபாடியில்லை நாற்காலியில் அமர்ந்து பேருந்துக்கு காத்திருக்கும் வேளையில் இன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

இன்று காலையில் பரபரப்பாக எனக்கு "ஒரு கேஸ் இருக்கு " என்று சொல்லி மருத்துவமனைக்கு வந்த மான் விழியையும் அங்கு வேலை பார்க்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.

ஆனால் இங்கு ஒரு வித்தியாசம் செந்தூரனை கேள்வி கேட்காமல் இருப்பது போல் மான் விழியை கேள்வி கேட்காமல் இல்லை மாறாக அவள் தோழி ஒருவள் வந்து "என்ன டி நேத்து தான் மேரேஜ் ஆச்சு அதுக்குள்ள ஹனிமூன் போவன்னு பார்த்தால் ஹாஸ்பிடல் வந்து இருக்க" என்று கிண்டல் செய்தாள்.

அதற்கு அவளை முறைத்துப் பார்த்து, "என்னைய பத்தி நல்லா தெரிஞ்சும் நீ இந்த மாதிரி கேக்குற பாரு" என்றாள்.

"ஏய் சும்மா கேட்டேன் டி நீ எல்லாம் கல்யாணம் பண்ணதே பெருசு அதே ஹாப்பி தான், ஆனால் ஒன்னு டி உனக்கும் உன் ஹஸ்பண்ட்டுக்கும் பொருத்தம் சூப்பர் உன் ஹஸ்பண்ட் சும்மா ஹீரோ மாதிரி இருக்கார்" என்று கண்களை விரித்து சிலாகித்து கூறினாள்.

மான் விழி அவளிடம் எதுவும் சொல்லாமல் ஒரு சிறிய இதழ் ஒரு சிரிப்பை மட்டும் தந்து விட்டு தனது அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அமரும் போது அவள் அவனை ஹீரோ மாதிரி இருக்கிறார் என்று சொன்னது நினைவுக்கு வர, அந்த கொரில்லா உனக்கு ஹீரோ மாதிரி இருக்கானா இவள் டேஸ்ட் ஏன் இப்படி இருக்கு என்று தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்தாலும் அவளையே அறியாமல் அவள் இதழ்கள் சற்று விரியத்தான் செய்தன.

ஆனால் அதை சிந்திக்கும் மனநிலையில் அவள் இல்லை...

அதன் பின் அடுத்தடுத்து அவளுக்கு நோயாளிகள் வர அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு மிகவும் நெருக்கமான நோயாளிகள் அவளை புதியதாக பார்த்து வாழ்த்துக்களை கூறியும் சென்றிருந்தனர்.

அன்று முழுவதும் அவளுடைய பணியை செவ்வனே செய்து முடித்து பணியில் இருந்து கிளம்பும் வேளையில் மருத்துவமனையின் முதலாளியிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

அதை ஏற்று அவனுடைய அழைப்புச் சென்றாள்.

அந்த மருத்துவமனையிலேயே அதுதான் மிகவும் பிரம்மாண்டமான அறை, அந்த அறையில் அவனுடைய ஓய்வுக்கு என்றே உள்ளே ஒரு அறை இருந்தது அவன் அதன் உள்ளே இருக்க இவள் உள்ளே நுழையும் போது, இன்பராஜ் பெயர் பலகையை தாங்கிய மேஜை மட்டும் தான் அவளை வரவேற்றது.

அதைக் கண்டவள் உள்ளே வராமல் அந்த அரையின் வாசப்படியில் நின்றுக் கொண்டே ' ஐயோ சார் வர சொன்னதா சொன்னாங்களே ஆளே இல்ல போல வேற ஏதாவது பேஷன்ட் பார்க்க போயிருப்பார் நம்ம கிளம்பலாம்' என்று கிளம்பும் நேரம் "ஒன் மினிட்" என்ற கரகரத்த குரலில் திரும்பிப் பார்த்தாள்.

என்ன சொல்வது என்று தெரியாமல் "ஹாய் சார்" என்றாள்.

அவனும் "ஹாய் " என்று சொல்லிவிட்டு, " வாங்க வந்து உட்காருங்கள்" என்றான்.

"இதோ சார்" என்று தயங்கி தயங்கி அந்த நாற்காலியில் வந்து அமர்ந்தவுடன் அவன் பார்வை மெல்ல அவளின் கழுத்துக்கு கீழே செல்ல அவள் சற்று அசௌகரியமாக உணர்ந்து தன்னுடைய துப்பட்டாவை இழுத்து கீழே போட்டாள்.

அவன் அதை கண்டு கொண்டு தன்னுடைய பார்வையை வேறு இடத்தில் சுழல விட்டு, "நேத்து தான உங்களுக்கு மேரேஜ் ஆச்சு அதுக்குள்ள வந்துட்டீங்க " என்று கேட்டான்.

அவள் அந்த அசௌகரிப்பில் இருந்து வெளியே வராமல் துப்பட்டாவை சரி செய்து கொண்டே, "ஒரு முக்கியமான கேஸ் இருந்தது சார் அதனால தான் வந்துட்டேன்" என்றாள்.

"ஒகே" என்று அவன் சாதாரணமாக பேசுவது போல், "அனிமூன் எல்லாம் எங்க பிளான் பண்ணி இருக்கீங்க" என்று கேட்டான்.

அவள் பட்டென்று, " சாரி சார் தட்ஸ் மை பர்சனல்" என்றாள்.

"ஓ பர்சனல் " என்று நக்கலாக சொல்லி விட்டு, மெல்ல எழுந்து வந்து அவள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் பின் புறம் வந்து இரு புறமும் பிடித்து நின்றான்.

அதில் அவளுக்கு மேலும் அசௌகரியம் தர எழ முயன்றவளை அவளின் இருபுறத்தூனை பற்றி அமர வைத்து, " என்னம்மா புது பொண்ணு இதுக்கெல்லாம் வெட்கப்பட்ட எப்படி நேத்து நைட்டு இதுக்கு எல்லாம் உங்க ஹஸ்பண்ட் ட்ரெய்னிங் குடுக்கலையா? " என்று கொச்சையாக கேட்டான்.

அந்த வார்த்தையில் அவள் வேகமாக எழுந்து, "சார் திஸ் இஸ் யுவர் லிமிட்" என்றுக் கேட்டு மெல்ல எழுந்து தூரம் நின்றவளின் அருகில் வந்து கலைந்திருக்கும் அவள் கேசத்தை ஒதுக்கி விட்டு, "நான் எப்பவும் இப்படி இன்பமாக இருக்கணும் என்பதால் தான் இன்ப ராஜா பேர வச்சாங்க அதை அனுபவிக்கலனா எப்படி" என்றுக் கூறிக் கொண்டே அவள் வாசனையை நுகர்ந்தான்.

அது அவளுக்கு அருவருப்பை தர "சார் என்னைய விடுங்க" என்று நகர முயன்றவளின் கையை பிடித்து இழுத்து மெல்ல, சுவரோம் சாய்த்து அவன் மூச்சுக் காற்று அவள் மேல் படும் படி நின்றான்.

அவள் அவனை தள்ளி விட அவள் இடையைப் பிடித்து நிறுத்தி, " இங்க பாரு என்னை அட்ஜஸ்ட் பண்ணி போனா அடுத்த சீப் டாக்டர் நீதான்" என்றான்.

" அப்படிப்பட்ட சீப் டாக்டர் போஸ்டர் எனக்கு வேணாம் நீங்க தள்ளி போங்க " என்று தள்ளி விட்டாள்.

"அது எவ்ளோ பெரிய போஸ்ட் தெரியுமா அதை போய் அசால்ட்டா வேணாம்னு சொல்லுவியா" என்று அவள் முகத்தை கைகளால் வருட அவளுக்கு தன் பழைய நினைவுகள் எல்லாம் வந்து அவனை வேகமாக தள்ளிவிட்டு, " இப்போ நீ என்ன விடலைன்னா கத்தி எல்லாரையும் கூப்பிடுவேன்" என்றாலும் அவள் கை கால்கள் எல்லாம் நடுங்கியது.

அவன் அதற்கும் நக்கலாக, "எங்க கூப்பிடு" என்று சொல்லவும் என்ன செய்வது என்று தெரியாமல் உதடுகள் நடுங்க அமைதியாக நின்றாள்.

அதில் என்ன நினைத்தானோ, "சரி சரி இது ஃபர்ஸ்ட் டைம்ங்கறதுனால உனக்கு சங்கடமா இருக்கும் ஒரு 2 டேஸ் நல்லா டைம் எடுத்துக்கோ, அதுக்கப்புறம் டிசைட் பண்ணு இல்லையா இந்த ஆஸ்பிட்டல்ல எதுக்குடா வேலை செய்கிறோம் என்று யோசிக்கிற அளவுக்கு உன்னை பண்ணிடுவேன் " என்று சொல்லவும் அவள் மடமடவென்று வந்து அந்த மேஜை மேல் மீது இருக்கும் பேப்பரை எடுத்து தன்னுடைய வேலை விட்டு விடுவதாக ஒரு கடிதத்தில் எழுதி அவனிடத்தில் வீசிவிட்டு தப்பித்தால் போதும் என்று வெளியே வந்து தன்னுடைய அறையில் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்து நின்றாள்.

இதெல்லாம் யோசித்துக் கொண்டு அமர்ந்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரா தாரையாக வர அது துடைத்துக் கொண்டே இருந்தாள்.

அப்போது அவளுடைய அம்மாவிடம் இருந்து அழைப்பு வர அது ஏற்று காதில் வைத்து சுரத்தையே இல்லாமல், "சொல்லுமா" என்றாள்.

"ஏண்டி என்னடி நினைச்சுட்டு இருக்க ஒரு வார்த்தை போன் பண்ணி லேட் ஆகும்னு எல்லாம் சொல்ல மாட்டியா நான் உன்னை காணோம்ன்னு பயந்துகிட்டு இருக்கேன்" என்றார்.

" நான் ஹாஸ்பிடல் கிட்ட இருக்க பஸ் ஸ்டாப்பில் தான் வெயிட் பண்றேன்" என்று சொன்னதும் "சரி வை" என்று சொல்லிவிட்டு சுசீலாவிடம் சொல்ல சுசிலா தன் மகனுக்கு அழைத்த அழைத்து ஓய்ந்து போது ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்து, "சொல்லுமா " என்று சிடுசிடுத்தான்.

"இப்ப எதுக்குடா இப்படி சிடுசிடுன்னு அப்படியே வரும் போது மான் விழி இன்னும் வரல அவளையும் கூட்டிட்டு வந்துடு " என்று சொல்லிவிட்டு அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் வைத்து விட்டார்.

அவனுக்கு "நானே அவளை பார்க்க கூடாதுன்னு இருக்கேன் இந்த அம்மா வேற அவளை கூட்டிட்டு வான்னு சொல்றாங்க" என்று மனதில் நினைத்துக் கொண்டு ரிசார்ட் அறையின் கதவை சடார் என்று திறந்து வேக வேகமாக அவனது காரை எடுத்துக் கொண்டு வழி முழுவதும் அவளை திட்டிக் கொண்டே வந்தாலும் 20 நிமிடத்தில் வர வேண்டிய மருத்துவமனைக்கு பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.

பேருந்திற்காக காத்திருந்த விழியின் முன்பு ஒரு கார் வந்து நிற்க அவள் மீண்டும் நடக்க தொடங்கினாள்.

அப்போது அவன் காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு சொடக்கிட்டு "உள்ள வா" என்றான்.

உள்ளே நடந்திற்கு இவனை கண்டதும் மனம் ஏனோ சொல்ல முடியாத மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக காரில் அமர்ந்தாள்.

அவள் முகம் சோகத்தில் இருந்ததை கண்டு "என்ன ஆச்சு" என்றாள்.

"ஒன்னும் இல்லை" என்றாள்.

அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு ஏற்கனவே இருந்த இடத்தில் வாழ்கிறோம் என்று தோன்ற இப்ப காரம் எடுக்க போறீங்களா இல்லையா என்று கத்தினாள்.

அப்படி என்ன கேட்டான். பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்....
 

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
என்னடா நீ மான்.... செந்துவையே அலற வைக்கும் நீ.....இந்த ஆள் இப்படி நடக்கிறான் நீ ஏன் இப்படி இருக்கு....ஒரு எத்து எத்துவிட வேண்டியது தானே😡😡😡😡😡😡
நல்ல முடிவு தான் மான்.....