நின் மத்தம் : 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
அவள் வீட்டுக்கு வர நேரமாக அவளை அழைத்துச் செல்ல அவன் வந்தான் காரில் ஏறி அமர்ந்த உடன் அவள் முகம் சோகத்தில் இருந்ததை கண்டு "என்ன ஆச்சு" என்றான்.

"ஒன்னும் இல்லை" என்றாள்.

"என்ன ஒன்னும் இல்ல அதுதான் நல்ல பணக்காரனா பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட இல்லை அப்புறம் என்ன இந்த நேரத்தில் உனக்கு இங்க என்ன வேலை" என்று கேட்டான்.

"என்ன பேச்சு பேசுறீங்க எப்ப பாத்தாலும் உங்களுக்கு பணம் தானா" என்று கேட்டாள்.

"எனக்கு இல்லடி உனக்கு தான் பணம் இல்லையென்றால் இவ்வளவு நேரத்துக்கு இங்க என்ன உனக்கு வேலை" என்று கேட்டான்.

"அது உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல நீங்க வண்டிய நிறுத்துங்கள்" என்றாள்.

"அதுதான் உண்மைய சொன்னா உடனே உனக்கு கோவம் பொத்திக்கிட்டு வருது இல்லை" என்றான்.

"எது உண்மை" என்றாள்.

"நீ பணம் பார்க்க இன்னும் வேற ஒரு ஆளுக்காக இங்க வெயிட் பண்ணிட்டு இருக்க உண்மை" என்றுக் கூறி நக்கலாக சிரித்தான்.

"ஆமா நான் வேற ஒருத்தனை பார்க்கத் தான் இங்க இருக்கேன் உங்களுக்கு என்ன " என்றாள்.

"உன் அம்மா, அப்பாவும் என்னோட அம்மாவும் ரொம்ப பயந்தாங்க அதனால் தான் போனால் போகட்டும்னு வந்து கூட்டிட்டு போறேன் " என்றான்.

"அப்படி ஒன்னும் என்னை யாரும் ஃபோனா போகட்டும் சொல்லி கூட்டிட்டு போகணும் எந்த அவசியமும் இல்லை நீங்க வண்டியை நிறுத்துங்கள்" என்றாள்.

"அப்படி எல்லாம் நீ சொல்ற நேரத்துக்கு என்னால நிறுத்த முடியாது உன்னை பத்திரமா கூட்டிட்டு வரேன்னு சொல்லி எங்க அம்மாவுக்கு நான் சொல்லி இருக்கேன் சரியா அத நான் எப்பவும் காப்பாத்துவேன் " என்றான்.

"நீங்க உங்க அம்மாக்கு வாக்கு குடுத்து இருந்தா எனக்கு எந்த கவலையும் இல்லை இப்ப வண்டியை நிறுத்த போறீங்களா இல்லை நான் ஓடுற வண்டியில் இருந்து குதிக்கட்டுமா?" என்று கத்தினாள்.

அவன் அதை காதில் வாங்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டே இருக்க அவள் கதவை திறக்க முயற்சி செய்தாள். அது முடியவில்லை... என்றதும் காதில் கையை வைத்து வண்டியை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று மீண்டும் கத்தினாள்.

"ஏய் இப்போ எதுக்கு டி இப்படி கத்துற " என்றான்.

நீங்க எது வேணாலும் கேட்பீங்க ஆனால் நான் கத்த கூடாது இல்ல நான் அப்படித்தான் கத்துவேன் இப்ப வண்டிய நிறுத்து போறீங்களா இல்லையா? " என்று அங்கிருக்கும் டேஷ் போர்டில் தனது தலையை முட்டிக்கொண்டாள்.

அதை பார்த்தவன் அவளை தன் புறம் திருப்பி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான் அதில் தெளிந்து அவன் நெஞ்சிலே சாய்த்துக் கொண்டு, "நான் வேலையை விட்டுடேன் செந்தூரன் " என்று அவனிடம் ஆறுதல் தேடினாள்.

அவனோ "அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ஒரு வேளை என்னையே கல்யாணம் பண்ணதுனால வேலையை விட்டுட்டியோ என்னமோ சரி விடு" என்று குத்தி காட்டினாலும் கைகள் தானாக அவன் முதுகை தட்டிக் கொடுத்தது.

அவன் கையை தட்டி விட்டு, "எப்பவும் உங்களுக்கு பணம் தான் பிரச்சனையா? உங்க பணத்தை நான் தொடாமலே வேற வேலையே தேடுகிறேன்" என்றாள்.

"அதெல்லாம் நடக்காத காரியம் நடக்கிற வேலை என்னமோ அதை மட்டும் பாரு" என்று கூறி நக்கலாக சிரித்தான்.

"உங்களுக்கு என் நிலைமை நினைச்சா சிரிப்பா வருது இல்ல நல்லா சிரிங்க ஆனா ஒரு நாள் உங்களோட துணையே இல்லாம நான் கண்டிப்பா வேலை வாங்கி காட்டுவேன்" என்றாள்.

"நீ காட்டு அப்புறமா பார்க்கலாம் இப்போ ஏதாவது சாப்பிட்டியா " என்று அக்கறையாக கேட்டான்.

"நான் சாப்பிட்டா உங்களுக்கு என்ன சாப்பிடலைன்னா உங்களுக்கு என்ன " என்று சிலுத்துக் கொண்டாள்.

"அதுதானே நீ சாப்பிட்ட எனக்கு என்ன சாப்பிடலைனா எனக்கு என்ன நான் ஏன் உன்னை பத்தி கவலைப்படறேன்னு எனக்கே தெரியல" என்று சொன்னாலும் கண்கள் உணவகத்தை தேட அதை கண்டதும் கைகள் தானாக வண்டியை நிறுத்திவிட்டு "வா " என்று அழைத்தான் .

"நான் எங்கேயும் வரல நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்று வீம்பாக சொன்னாள்.

"நான் உன்னை வரியான்னு கேக்கல வான்னு சொன்னேன் " என்று காரை கொண்டு போய் அந்த இடத்தில் விட்டுவிட்டு இறங்கி வந்து கதவை திறந்து "நீ இப்போ வரலைனா மகாராணிய தூக்கிட்டு தான் போக வேண்டி இருக்கும் பரவாயில்லையா?" என்றான்.

அவளை குத்தி பேசிக் கொண்டே இருந்தாலும் மனம் மட்டும் இவளிடம் செல்வதை அவனால் தடுக்கவே முடியவில்லை, அவளும் பிடிவாதமாக அமர்ந்து கொண்டு அவன் கண்களையே பார்க்க அவன் எதுவும் பேசாமல், "வா " என்று செய்கையால் சொல்லி கைகளை நீட்டினான்.

வார்த்தையால் அழைத்தபோது வராதவள் அவன் கண்களால் அழைத்ததும் மறு வார்த்தை பேசாமல் அவனுடன் சென்றாள்.
வார்த்தைகள் மௌனமாகிய பின் கண்களின் பேச்சுக்கு தான் அதிகமாக செவியும் மனமும் சாய்கிறது.

உயர்தர உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரியாமல் மெனு கார்டை அவளிடம் நீட்டி, "எது வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோ" என்றான்.

மருத்துவமனையில் நடந்ததும், காரில் இவன் பேசியதும் நினைவுக்கு வர அவளுக்கு உணவு உண்ண கூட பிடிக்கவே இல்லை அதனால், " எனக்கு எதுவும் வேணாம் உங்களுக்கு என்ன வேணுமோ சாப்பிட்டு வாங்க போகலாம்" என்றாள்.

" ஆர்டர் பண்ணு " என்று அதிகாரமாக சொல்ல, "என்னால முடியாது" என்று இவளும் பிடிவாதமாகச் சொன்னாள்.

அவர்கள் இருவருக்கும் இடையில் அந்த உணவகத்தின் ஊழியர் பாவமாக நின்று கொண்டிருக்க அவன் மேல் பரிதாபப்பட்டு செந்தூரன் சாப்பிடுவதற்காக மட்டும் எதையோ சொல்லி விட்டு அவளைப் பார்த்தான்.

அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு அவன் முகத்தில் ஒரு கோபமும் தீவிரமும் தெரிய அவளுக்கு அவள் முகத்தில் ஒரு பயமும் சோக இழையும் தெரிந்தது.

தன் கோவத்தை பொறுத்துக் கொண்டு, " உனக்கு ஏதாவது பிராப்ளமா " என்று கேட்டான்.

இதை அவன் முதலில் கேட்டிருந்தால் எல்லாவற்றையும் சொல்லி ஆறுதலுக்காகவாவது அவன் தோளில் சாய்ந்து இருப்பாள் இவ்வளவு பேசிவிட்டு கேட்கும் போது அவளுக்கு என்ன பதில் சொல்ல விருப்பம் இல்லாததால், "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அப்படியே எனக்கு பிரச்சினை இருந்தாலும் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை" என்றாள்.

"தட்ஸ் பைன்" என்றான்.

அந்த வார்த்தையில் அவளுக்கு கண்கள் கலங்க, "எஸ்கியூஸ் மீ" என்று சொல்லிவிட்டு, கழிவறைக்குள் சென்றாள்.

அவள் கண்கள் கலங்கி உள்ளே சென்றது அவனுக்கு ஒரு மாதிரியாகி போனது, ஆனால் அடுத்த நொடி அவன் மூளை 'அவஎப்படி போனால் நமக்கு என்ன வந்தது ' என்று சொல்ல தோள்களை குலுக்கி விட்டு அமைதியாக இருக்க காலையில் அவளை கிண்டல் செய்த தோழி வந்து, "நீங்க மான் விழியோட ஹஸ்பண்ட் தானே நான் அவ பிரண்ட்" தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

அவன் மரியாதை நிமித்தமாக ஒரு சின்ன சிரிப்பை மட்டும் சிரித்துவிட்டு, "உக்காருங்க" என்றான்

"மான் விழி எங்க சார் " என்றாள்.

"ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க," என்று கூறிவிட்டு சற்று நேரம் தயங்கி "அவங்க ஏன் ஒரு மாதிரியா இருக்காங்க உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான்.

"ஹாஸ்பிடல்ல ஒரு பிராப்ளம் சார்," என்றாள்.

"என்னாச்சு"

"எனக்கும் சரியா தெரியல சார் ஆனால் லாஸ்ட்டா எங்களோட டீன் ஓட பையன் கூப்பிட்டாருன்னு அவர் ரூமுக்கு தான் போனா அங்க தான் ஏதோ நடந்து இருக்கும்னு நினைக்கிறேன் அவர் கொஞ்சம் சரியில்லை என்ற மாதிரி கேள்விப்பட்டிருக்கேன் அவர் தான் வந்து எதையோ பண்ணி இருக்காரு நினைக்கிறேன் சார்,

ஆனால் அவரு இவ தான் எதோ பேஷண்ட் கிட்ட அதிகமா காசு வாங்குனதா எல்லார்கிட்டயும் சொல்லி பேக் நியூஸ் பரப்பிட்டு இருக்காரு அது என்ன ஏதுன்னு கேட்கத்தான் அவளை பாலோ பண்ணி நான் வெளியே வந்தேன் வரும்போது உங்க கார்ல ஏறினதுனால் நானும் அப்படியே பாலோ பண்ணிட்டு வந்தேன் நான் வண்டிய பார்க் பண்ணிட்டு உள்ள வரதுக்குள்ள அவ ரெஸ்ட் ரூம் போயிட்டா " என்றாள்.

அப்போ அவன் தான் அவ அழுததுக்கு காரணமா என்று யோசித்தவன், "ஷி இஸ் ஓகே நீங்க போங்க இந்த விஷயம் என்னிடம் சொன்னதா நீங்க வெளியே காமிச்சுக்காதீங்க நான் பாத்துக்குறேன், உங்க டீன் பையனோட போட்டோ இருந்தா எனக்கு ஷேர் பண்ணுங்க அவருடைய பெயர் சொல்லுங்களேன் "மேலும் விவரங்களை கேட்டுக்கொண்டு,

"நீங்க சேப்பா போய்டுவீங்க தானே" என்று கேட்டு அவள் வருவதற்குள் அவனை அனுப்பி வைத்துவிட்டு இன்பராஜிற்கு இன்பமான ஒரு இனிய இனிப்பை திட்டமிட்டு கொண்டு சாய்வாக அமர்ந்தான்.

அதன் பிறகு அவள் கழிவறையில் இருந்து வந்தவுடன் அவளிடம் எதுவும் பேசாமல் வந்த உணவை அவளிடம் நீட்டி திட்டி சாப்பிட வைத்து அழைத்துச் சென்றான்.

வீட்டிற்கு சென்றதும் அவன் காரை விட்டு வருவதற்குள் மீனாட்சி அவளை ஒரு திட்டு திட்டி தீர்த்து விட்டார்.

அவன் உள்ளே வந்து, "இங்க பாருங்கம்மா அவ டாக்டர் ஹாஸ்பிடல்ல முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும் எல்லாம் தெரிஞ்சு தானே படிக்க வச்சீங்க இப்ப வந்து அவளை திட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம் " என்று எதோ நல்லவன் போல் கேட்டவுடன் அவர் அமைதியாகிவிட்டார். சுசிலாவிற்கு அவர் மனம் தலைகீழாக குதித்துக் கொண்டிருந்தது.

அதாவது அவளை அவன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் வேறு யாரும் எதுவும் சொல்லக் கூடாது போல,,

இவர்களை திட்டி விட்டு அவளிடம் திரும்பி, "மேல போ" என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டான்.

அவளும் எதுவும் பேசாமல் உடலுக்கு ஓய்வு தேவையோ இல்லையோ மனதிற்கு ஓய்வு தேவைப்பட்டதால் அங்கிருந்து சென்று எதுவும் செய்யாமல் அப்படியே கட்டிலில் படுத்து உறங்கி விட்டாள்.

மேலே வந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அமைதியாக படுத்திருந்தவளின் மேல் ஒரு போர்வை போர்த்தி விட்டு இன்று சோபாவில் படுக்காமல் அவள் கட்டிலின் அந்த பக்கம் படுத்துக் கொண்டான்.

காலை பொழுது அழகாக விடிய அவன் செய்த செயலில் அவளுக்கு மேலும் கோவம் தான் வந்தது...
வேண்டாம் வேண்டும் என்று மறுத்து மறுத்து விலகிப் போனாலும் அவளிடம் இந்த இருப்பு ஏன் என்று அவனுக்கும் தெரியவில்லை...
அப்படி என்ன செய்திருப்பான் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்...
 

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
எப்பா சரியான டெரர் ஹீரோ...பாவம் மான்னு பார்த்தா....என்ன இவளோ carrying ஆ இருக்கான்🥰🥰🥰🥰🥰

வெயிட்டிங் for the இன்பனுக்கு தரும் இனிப்பு என்ன என்பதை அறிய🤩🤩🤩🤩🤩