அவளை எப்படியோ ஒரு வழியாக சமாதானப்படுத்தி அழைத்து வந்து உணவருந்த வைத்தான்.
அவன் சொல்லில் உள்ள வன்மையில் கரைந்து அவளும் தன் உணவை உண்டுக் கொண்டிருக்கும் போது அவளின் மனநிலையை மாற்ற வேண்டி, " ஃபர்ஸ்ட் நாள் டூட்டி எப்படி இருந்தது" என்று கேட்டான்.
"ம்ம்ம்ம்... நல்லாத்தான் இருந்தது" என்றாள்.
"தட்ஸ் பைன்" என்றான்.
அதன் பின், இருவரிடம் பலத்த மௌனம் நிலவியது. அவன் அவளின் கண்களை தாண்டி எங்கும் பார்க்கவே இல்லை அதில் இனி தனக்கு யாரும் இல்லை என்ற உணர்வு மெல்ல வர அதை புரிந்து கொண்டவன், "மானு" என்று அழைத்தான்.
அவன் முன்பு அழைத்தப் போது அவள் அழுது கொண்டிருந்ததால் அவன் அழைத்தது தெரியாமல் போக இப்போது அழைக்கவும் யாரையோ தான் அழைக்கிறான் என்று திரும்பி திரும்பி பார்க்க, " உன்னை தான் கூப்பிடுறேன்" என்றான்.
"சொல்லுங்க" என்று சுரத்தையே இல்லாமல் சொன்னாள்.
"உங்க அப்பா அம்மாக்கு எதுவும் ஆகாது எல்லாத்துக்கும் உனக்கு நான் இருக்கேன் சரியா" என்று அவள் கைகளை பிடித்து அழுத்தமாக சொன்னான்.
அவளும் அவன் கைகளைப் பிடித்து விட்டு, " தாங்க்ஸ்" என்றாள்.
அவள் நன்றி என்று சொன்னது அவனுக்கு ஏதோ வேறு ஆளை பார்ப்பது போல் தோன்றி கோபம் வந்தாலும் இப்போது அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவள் கைகளை இறுக்கிப் பிடித்தான்.
அந்த இறுக்கம் அவளுக்கும் பிடித்ததால் அமைதியாக இருந்தாள்.
முதல்முறையாக அவளின் கையை உணர்வு பூர்வமாக தொடுகிறான் அவளுக்கும் அந்த உணர்வு பிடித்ததால் அமைதியாக இருந்தாள்.
இருவரும் உண்டு விட்டு சுசிலாவிற்கு சாப்பிட வாங்கிக் கொண்டு அங்கு சென்றனர்.
இருவரும் ஒன்றாக வருவது சுசிலாவிற்கு பேரானந்தத்தை கொடுத்தது ஆனால் அதை அனுபவிக்கும் ஒரு நல்ல சூழ்நிலை தான் அவருக்கு இல்லை...
சுசிலா மான்விழியின் முகத்தை இப்போது உற்றுப் பார்க்க அதில் முன்பிருந்த குழப்பம் இப்போது இல்லை, ஒருவர் தன்னுடன் எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்பது இல்லை ஆனால், ஆறுதல் தேவைப்படும்போது நான் இருக்கிறேன் என்று சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை மலையையே புரட்டிப்போடும் அளவிற்கு ஒரு தெம்பை தரும் அதை இப்போது அவளும் உணர்ந்து கொண்டாதால் குழப்பம் இல்லாமல் இருந்தாள்.
நிச்சயம் தன் தாய் தந்தை பிழைத்துக் கொள்வார்கள் என்ற உறுதி இருந்தது.
சுசிலா தன் மகனிடம் கண்களாலேயே, "இப்போ ஓகே வாடா" என்று கேட்க "ஓகே" என்று சொன்னான்.
ஒரு காலத்தில் அவனுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாதவன் இன்று இன்னொருவருக்கு நான் இருக்கிறேன் என்ற உறுதியுடன் ஆறுதலும் சொல்லி அவர்களை தெளிவடைய செய்திருக்கிறான் என்றால் அவள் அவனுடைய இருப்பு அவளுக்கு எவ்வளவு தேவை என்றும் அவளின் அழுகை அவனை எவ்வளவு பாதித்திருக்கிறது என்றும் ஒரு பெரிய மனிதராய் அவருக்கு தெரிந்தது.
எத்தனை முறை யோசித்தாலும் தன் மகனின் வாழ்வு இனி சிறப்பாக இருக்கும் என்பது மட்டும் அவருக்கு தெளிவாக தெரிந்தது.
சிறிது நேரம் கழித்து அவர்களை அனுமதிக்கப்பட்ட அறையிலிருந்து மருத்துவர்கள் வந்து, "அவங்க இப்போ கொஞ்சம் ரெஸ்பான்ஸ் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க ஒரு அந்த சாருக்கு மட்டும் தலையில கொஞ்சம் அடிபட்டு இருக்கு அது ஒரு சின்ன மைல்டு ஆப்ரேஷன் பண்ணா சரியா போய்விடும்" என்றார்.
இவள் இப்போது மருத்துவராக, " எதற்காக சர்ஜரி பண்றீங்க பிரைன்ல" என்று கேட்டாள்.
"மைல்டா ஒரு பிளட் கிளாக் ஆயிருக்கு அது சின்ன இன்சூரி தான் சர்ஜரி பண்ணா சரியா போயிடும்" என்றனர்.
"நான் வேணும்னா சர்ஜரி செய்யட்டுமா ஐ அம் அ நியூராலிஜஸ்ட்" என்றாள்.
அதைக் கேட்டதும், "ஹோ தட்ஸ் ஃபைன் வாங்க" என்று அவளையும் அழைத்துச் சென்றனர் அவள் தன் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்னே அவள் தாய் கண் முழித்து விட்டார்.
இந்த மருத்துவமனைக்கு உள்ளே வரும்போது கண்கள் கூட தெரியாமல் கலங்கிய நிலையில் வந்தவளை அணைத்து நான் இருக்கிறேன், என்ற ஒற்றை வார்த்தை தெளிந்து சர்ஜரி செய்யும் அளவுக்கு மாற்றுமா? என்று முதல் முறையாக ஒற்றை அணைப்பு இத்தனை மாயம் செய்யுமா என்று முதல்முறையாக செந்தூரன் யோசித்தான்.
இதுவரை எத்தனையோ பெண்களை காமமாக அணைத்து இருக்கிறான் ஆனால், அவனுக்கு தெரியவில்லை அணைப்பு என்பது காமத்திற்காக மட்டுமல்ல காதலுக்காக மட்டுமல்ல, இன்னொரு மனிதனின் ஆறுதல்காகவும் அப்பழுக்கற்ற அன்பின் வெளிப்பாடும் அணைப்பு என்பது இப்போது தான் அவனுக்கு சிறு துளி புரிந்தது.
அவளின் தந்தைக்கான அறுவை சிகிச்சைக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அறுவை சிகிச்சை உடையை உடுத்திக்கொண்டு செந்தூரனிடம் வந்து நின்றாள்.
அவனும் அவள் வந்து நின்றதனால் எழுந்து நிற்க சட்டென அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு, "செனு" என்றாள்.
அந்த அணைப்பில் வார்த்தைகள் வர மறுத்து, "ம்ம்ம்ம்" என்றான்.
"என்னால சர்ஜரி பண்ண முடியுமான்னு தெரியல செனு" என்றாள்.
"உங்க அப்பாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு கண்ணை மூடி யோசிச்சு பாரு கண்டிப்பா உன்னோட உலகமே அவரத்தான் இருப்பார் உன்னோட உலகத்துல நீ வாழனும் அந்த வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்னு யோசிச்சு அதுக்கப்புறம் போய் உன்னோட சர்ஜ்ரிய ஆரம்பி உன்னோட உலகம் உனக்கு கண்டிப்பா நல்லது தான் செய்யும் போ" என்றான்.
அவளுக்கு தன்னுடைய உலகம் தன்னுடைய தந்தை தான் என்று புரிந்து பயத்தையும் தன்னால் முடியாது என்பதையும் ஒதுக்கி வைத்து விட்டு சர்ஜரி செய்யணும் என்று சொல்லி சென்றாள்.
பத்து நாட்களுக்கு முன்பு எதிலும் ஈடுபாடு இல்லை என்று சொன்னவர்கள் இன்று ஒருவரின் துணைக்காக இன்னொருவர் ஏங்குகின்றனர்.
இதுவரை எத்தனையோ மூளை அறுவை சிகிச்சைகளை இந்த சிறு வயதிலேயே செய்திருந்தாலும், தன் தந்தை என்று வந்தவுடன் அவளுக்கும் உணர்வுகளின் அடிப்படையில் வராமலிருக்க இன்று அவன் தந்த தைரியத்தில் அறுவை சிகிச்சைக்காக உள்ளே சென்றாள்.
தன் தந்தையின் மீசை ஒருமுறை முறுக்கிவிட்டு அவரின் உலகத்தில் இவளையும் அனுமதித்துக் கொண்டு அறுவை சிகிச்சையை ஆரம்பித்தாள்.
நல்லபடியாக அறுவை சிகிச்சை முடித்துவிட்டு வெளியே வர, "சுசிலா ஆப்ரேஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா அம்மா" என்று கேட்டார் அவள் எதுவும் பேசாமல் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டு," நல்லபடியா முடிஞ்சதுமா" என்று கண்ணீரை சிந்தினாள்.
"என்ன விழி மா இது பாரு அம்மா கண்ணு முழிச்சுட்டாங்க அப்பாக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது அப்புறம் இனி ஏன் இப்படி " என்று கேட்டார்.
செந்தூரனும் அவன் அருகில் வந்து நிற்க அவள் அவனிடம் எதுவும் பேசாமல், "இல்லமா நான் என்ன பண்ணுவேன்னு தெரியாம இருந்தேன் ஒரு ரெண்டு மணி நேரத்தில் என்னென்னமோ நடந்திருச்சு ரொம்ப நன்றிமா " என்று கையெடுத்து கும்பிட சுசிலா அவள் கையை தட்டி விட்டு, " நானும் உனக்கு அம்மா தானே எனக்கே தேங்க்ஸ் சொல்லுவியா? " என்றார்.
அந்த வார்த்தையில் அவரை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.
அவர் மெல்ல அந்த முதுகை வருடி கொடுக்க செந்தூரன் பொறாமையாக பார்த்தான்.
செந்தூரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை, புரிந்து கொண்டு சுசிலா அவர்கள் இருவருக்கும் தனிமையை தந்து விட்டு சென்றுவிட்டார்.
அவர் சென்றவுடன் கைகளை பிசைந்து நின்று கொண்டிருந்தாள் அவன் மெதுவாக இப்போ, " உங்க அப்பா ஓகேவா" என்று கேட்டதும், "ஒகேங்க, அப்பா அம்மா இன்னைக்கு கண்ணு முழிச்சதுக்கு நீங்க தான் காரணம் ரொம்ப தேங்க்ஸ்ங்க" என்று ஒரு மெல்லிய அணைப்பை கொடுத்தாள்.
அந்த அணைப்பு அவனுள் பல மாற்றங்களை கொடுத்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்க அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், "சரி சரி அதான் உங்க அப்பா, அம்மா எல்லாம் வந்து நல்லா இருக்காங்களா அப்புறம் ஏன் தள்ளி போ " என்றான்.
ஆமா, இவரு பெரிய மன்மதரு, "நாங்க அப்படி கட்டிக்கிறோம் " என்று அவளுக்கே உரிய நக்கல் தோணியில் சொல்ல, "போடி அடிச்சிட போறேன்" என்றான்.
"போடா " என்று சொல்லி நாக்கை கடித்து விட்டு ஒரே ஓட்டமாக தன் தாயைப் பார்க்க சென்று விட்டாள்.
அவளின் குழ்ந்தை தனத்தை எண்ணி அவனுக்குள் ஒரு குறு நகை வந்தது.
தன் தாயை பார்க்க வந்தவள் உள்ளே வந்து, "என்ன மா ஆச்சு, "என்றாள்.
"ஒன்னும் இல்லை ஒரு லாரி வந்தது கார் பிரேக் பிடிக்காமல் போச்சு ரொம்ப பயந்துட்டீயா " என்றாள்.
"ஆமா மா, எனக்கு கண்ணு கூட தெரியல மா அவரு தான் கூட இருந்து எல்லாமே பார்த்தாரு, " என்றாள்.
"ம்ம்ம்ம்ம்... விழி மா மாப்பிளை ரொம்ப நல்லவரா இருக்காரு, இவ்ளோ நாள் நீ கல்யாணம் பண்ணிக்காமல் இருந்ததுக் கூட இந்த தம்பியை கல்யாணம் பண்ண தான் போல, அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அதில் ஏதோ மன வருத்தம் போல அது என்ன ஏதுன்னு பார்த்து அதை சரி பண்ணி ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணு எனக்கு எதாவது ஒன்னு ஆச்சுன்னா கூட உன்னை பார்த்துக்க ஒரு ஆள் இருக்கின்ற தைரியம் இப்போ இருக்கு " என்றார்.
முதல் திருமணத்தைப் பற்றி தன் தாய் சொன்னதும் அதிர்ச்சியாகி "என்னம்மா சொல்ற அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா" என்றாள்.
"ஆமாம்மா இது உனக்கு மாப்பிள்ளை சொல்லலையா" என்று கேட்டார்.
இல்லை என்பது போல் தலையை ஆட்ட, "அது கசப்பான நிகழ்வு இருந்திருக்கும் அதனால சொல்லாமல் இருந்திருப்பாரு அப்பறமா பொறுமையா கேட்டு தெரிஞ்சுக்கோ" என்றார்.
'அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சா, எனக்கு ஏன் யாருமே சொல்லல, ' யோசித்துக் கொண்டே தன் தாயின் தலையை மெல்ல வருடி கொடுத்து "பார்த்துக்கோங்க அம்மா நான் அப்பாவை போய் பார்த்துட்டு வரேன்" என்று சொல்லி தன் தந்தையின் அறைக்குள் நுழைய அவர் அப்போதுதான் கண்களை நல்ல உருட்டி கண் விழித்தார்.
அவர் கண் திறந்ததும் தன் மகள் தன் முன்னே நின்றதும், தன் கையை கொண்டு அவள் கையை பிடித்துக் கொண்டார். அவளும் குனிய அவள் நெற்றியில் முத்தம் வைத்து, " உன்னை விட்டு எங்க போயிடும்னு நெனச்சேன் கண்ணா!" என்று சொன்னார்.
"அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுட்டு போக முடியாது சுந்தரம்" என்று மிரட்டி விட்டு அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு வெளியே வந்தாள். அதன் பிறகு ஒவ்வொருவராக சென்று பார்த்துவிட்டு வந்தனர்.
அதன் பின் 15 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து அவனும் தன் பணிகளை மருத்துவமனையில் அமர்ந்து பணிகளை பார்த்தான்.
அவளுக்கு அவன் மேல் ஒரு நல்ல எண்ணம் வந்தாலும் ஏனோ அந்த முதல் திருமணம் பற்றி தன்னிடம் சொல்லாதது ஒரு மாதிரியாகவே இருந்தது.
அவர்கள் இருவரும் தேறி வர மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்து உடல்நலம் சரியாகும் வரை இங்க தான் இருக்க வேண்டும் என்று சுசீலா அன்பு கட்டளை இட இங்கேயே இருந்தனர்.
நாட்கள் இப்படியே நகர மான் விழி செய்த ஒரு செயல் அவன் கோவம் முற்று அடித்து விட்டான் அவன் அடித்து அடியில் அவள் கண்ணாடி கீழே விழுந்து எங்கிருக்கிறது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருந்தாள்.
அப்படி என்ன செய்து இருப்பாள்.

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.