நின் மத்தம் : 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
மான் விழி அவனைப் பற்றி கேட்க தன்னுடைய கடந்த கால காயங்களையும் கசப்புக்களையும் சொல்ல ஆரம்பித்தார். சுசீலா!

சில வருடங்களுக்கு முன்பு:

பள்ளி சீருடையின் நீல பேண்டும் அதற்கு ஏற்றார் போல் சட்டையும் அணிந்து கொண்டு தன்னுடைய பள்ளி புத்தகத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு சோர்ந்த முகத்துடன் உள்ளே வந்தான் செந்தூரன்!!

சோர்ந்த முகத்துடன் உள்ளே வந்தவனை “வா செந்தூரா ஏன் இப்படி டல்லா வர என்ன ஆச்சு" என்றார்.அவனின் அன்னை சுசீலா!

“ஒன்னும் இல்லமா வழக்கம் போல இந்த முறையும் மேக்ஸ்ல கம்மியா மார்க் எடுத்துட்டமா அப்பாக்கு தெரிஞ்சா என்னை என்ன செய்வார் என்று தெரியவில்லை அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு" என்றான்.

“ஏன் டா இப்படி பண்ணுற உன்னை எந்த டியூஷன் சேர்த்தாலும் மேக்ஸ் மட்டும் வர மாட்டேங்குது கொஞ்சம் அதில் நல்லா போகஸ் பண்ணலாம் இல்லை” என்றார்.

"அம்மா! அதுக்கு தான் இந்த மேக்ஸ் வேண்டாம்னு சொன்னேன் அப்பா தான் படிச்சா அது தான் படிக்கணும்னு சொன்னார். எனக்கு மேக்ஸ் சுத்தமா வரலாமா ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று நொந்து கொண்டான்.

ஆமாம் அப்போதெல்லாம் வரதன் என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்க வேண்டும். இத்தனை இட்லி தான் சாப்பிட வேண்டும் இந்தப் பள்ளியில் தான் சேர வேண்டும் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் அவனை கடிந்து கொண்டே இருப்பார்.

சுசிலாவும் அதெல்லாம் அவன் நன்மைக்குத்தான் என்று சொல்லி சொல்லி அவனை ஒரு அளவிற்கு தேற்றி வந்திருந்தார்.

இந்த கணித பாடப்பிரிவு வேண்டாம் என்று அவன் எவ்வளவு சொல்லியும் கெஞ்சியும் அவர் கேட்கவே இல்லை அவனுக்கு பிசினஸ் செய்ய வேண்டும் அதற்கு ஆடிட்டர் படிக்க வேண்டும் என்று ஆசை அதை அவரிடம் சொன்னான்.

அன்று நடந்ததை நினைத்தால் இப்போது கூட உடல் எல்லாம் நடங்கியது

அன்று தேர்வு முடிவுகள் வெளியானதும் “அப்பா நான் டென்த்துல நல்ல மார்க்ஸ் எடுத்துட்டேன்” என்றான்.

அவர் “ஹ்ம்ம் சரி என்ன படிக்க போற” என்றார்.

“எனக்கு பிசினஸ் பண்ண ஆசை அதனால அக்கௌன்ட்ஸ் எடுத்து படிக்கிறேன்” என்றான்.

அவர் உடனே “சரி” என்று சொல்லிவிட்டார் அதில் அவனுக்கு அதிர்ச்சியாகி தன் அன்னையைப் பார்த்து "நீ சொன்னீயா அம்மா" என்று கண்களாலேயே கேட்டான்.

“நான் எங்கடா சொன்ன எனக்கேது அவ்வளவு தைரியம்” என்று அவர் உதட்டை பிதுக்கி சொல்ல....

“அப்போ எப்படி இப்படி” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.

“எனக்கும் தெரியல டா அமைதியா இரு” என்றார்.

“டேய் என்கிட்ட பேச வந்துட்டு உங்க அம்மா கிட்ட என்னடா பேச்சு வேண்டி கிடைக்குது” என்று வேகமாக எழுந்து ஒரு அடியை விட்டார் வரதன்

அவனுக்கு ஒரு மாதிரியாகி “அப்பா இல்லப்பா” என்று திணறினான்.

அவன் பதில் சொல்வதற்குள் “சுசிலாவை இங்கு வா” என்று சைகை செய்ய அவரும் வந்து நின்றார். அவனுக்கு ஒருத்தர் கிட்ட பேசும்போது இன்னொருத்தர் கிட்ட சைகையில் என்ன பேச்சு இந்த சின்ன விஷயத்தை கூட சொல்லி கொடுத்து வளர்க்காமல் நீங்க வீட்ல என்ன பண்ணிட்டு இருக்க” என்று கேட்டார்.

“அப்படி இல்லைங்க என்கிட்ட தானே பேசினான்.” என்றார்.

“அப்போ என்னை விட நீ பெரிய ஆளா” என்றுக் கேட்டு பளார் என்று ஒரு அடியை வைத்தார்.

அவர் அதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க “நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லுடி” என்று மீண்டும் ஒரு அடித்தார். அடுத்து அவர் வாய் திறக்கும் முன்பே மீண்டும் ஒரு அடியை கொடுத்தார்.

“நம்ப பையன் நம்மகிட்ட தானங்க பேசுறான்” என்று சொன்னதற்கு “என்னை எதிர்த்து பேசுறியா” என்று அடித்தார்.

“அப்படி இல்லைங்க அவனுக்கு நம்மகிட்ட தானங்க சுதந்திரம் இருக்கும்” என்று அழுது கொண்டே சொல்ல “எனக்கே நீ பாடம் நடத்துறியா?” என்று மீண்டும் அடித்தார்.

அவர் அதற்கு வாயை மூடி வாயின் மேல் கையை வைக்க " இவன்கிட்ட எதுக்கு பேசணும்னு வாயை மூடிக்கிறியா” என்று அடித்தார்.

செய்கைக்கும் அடி விழுந்தது பேச்சுக்கும் அடி விழுந்தால் பாவம் அவர் என்ன தான் செய்வார் அதனால் அமைதியாக கொடுக்கும் அடிகளை வாங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் செந்தூரன் வந்து “அப்பா அம்மாவை அடிக்காதீங்க அப்பா என் மேல தான் தப்பு ப்ளீஸ்” என்று காலில் விழுந்து கெஞ்சினான்.

“உன்னை அடிச்சா அவளுக்கு தாங்க வில்லை அவளை அடிச்சா உங்களுக்கு தாங்காது” என்று அவன் காலை உதறி விட்டு சென்றவரிடம் "அப்பா நாம எப்போ ஸ்கூலுக்கு போய் ஜாயின் பண்றதுப்பா” என்று அழுது கொண்டே கேட்டான்.

“ஓ ஸ்கூல் ஜாயின் பண்ணனுமா” என்று நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று ஒரு பத்திரம் கொண்டு வந்து டேபிளின் மேலே போட்டு “இதுல ஒரு சைன் பண்ணு” என்றார்.

“என்னது பா இது” என்று கேட்டான்.

“ம்ம்ம்ம் உங்க அம்மா உனக்காக பெசன்ட் நகர் பீச்சை உன் பேர்ல் எழுதி வச்சிருக்காங்க அதை என் பேர்ல மாத்துறேன் நீங்க ரெண்டு பேரும் போடுற டிரஸ்லிருந்து திங்கிற சோறு வரைக்கும் எல்லாமே நான் வாங்கி கொடுத்தது நான் நீட்டுற இடத்தில கையெழுத்து போடணும் காட்டுற இடத்துல படுக்கணும் போடுடா கையெழுத்தை” என்றார்.

அவன் மீண்டும் தன் அன்னையைப் பார்க்க “போடு” என்று சொல்லவும் அதை பிரித்து பார்த்த போது தான் தெரிந்தது அது பள்ளியின் சேர்க்கை படிவம் அந்த படிவத்தில் பள்ளியும் வேறாக இருந்தது அவன் கேட்ட படிப்பு இல்லாமல் கணித பாட பிரிவை எழுதி இருந்தார்.

“அப்பா எனக்கு மேக்ஸ் வராதுப்பா” என்றான்.

“வருதோ வரலையோ இனி அதைத்தான் படிக்கணும் என்னோட பிசினஸ் பார்ட்னர் பசங்க எல்லாம் அதைத்தான் படிக்கிறாங்க அதனால நீயும் அதைத்தான் படிக்கணும்” என்றார்.

“அப்பா அவங்க எல்லாம் இன்ஜினியர்ஸ் ஆக விருப்பப்படுறாங்க நான் பிசினஸ் பண்ணனும்னு விருப்பப்படுறேன் அதுக்கு அக்கவுண்ட்ஸ் தான்ப்பா கரெக்டா இருக்கும்” என்றான்.

அவன் அதை சொல்லி வாய்மூடும் முன்னே தன் இடுப்பிலிருந்த பெல்டை கழட்டி அடி வெளுத்து எடுத்து விட்டார்.

அவன் அப்போதும் பிடிவாதமாக அக்கவுண்ட்ஸ் தான் படிப்பேன் என்று சொல்ல அவர் அடிப்பதை நிறுத்தவே இல்லை இறுதியாக சுசிலா வந்து அவன் முன் நின்று அவனுக்கு விழும் அடிகளை வாங்கிய பின் “இப்ப சொல்லு என்ன படிக்கிற” என்று கேட்டார்.

“நீங்க என்ன சொல்றீங்களோ அதையே செய்றேன்பா” என்று சொன்னான்.

“அது அப்படி வா வழிக்கு” என்று மூச்சு வாங்க பெல்ட்டை கீழே போட்டு விட்டு சென்று விட்டார்.

தன் கனவுகளையும் ஆசைகளையும் தன் தாய்க்காக புதைத்து விட்டு அங்கே சோகமாக தன் அறைக்கு சென்று படுத்துக் கொண்டான் .

ஆனால் வரதன் அதற்கு மாறாக தன் நண்பனுக்கு அழைத்து டேய் என் பையனையும் நான் நீ சேர்கிற அதே ஸ்கூலில் தான் சேர்க்க போறேன் அதுவும் நாம பேசின அதே படிப்பு அவன் என்னமோ ஆடிட்டர் அப்படி இப்படின்னு சொன்னான் நான் என்ன பண்ணேன் தெரியுமா அடி வெளுத்து எடுத்து கையெழுத்து போடா வச்சி இருக்கேன் இது என் சாம்ராஜ்யம் நான் சொல்றது தான் நடக்கணும் நடக்கும் என்று மீசையை முறுக்கி பெருமையாக பேசினார் .

அப்போது அவரை சாப்பிட அழைக்க வந்த சுசீலா எவ்வளவு கெஞ்சியும் அவர் ஒதுக்கவில்லை வேறு வழியின்றி அங்கிருந்து தன் மகன் அறைக்கு வந்து சோர்ந்து கிடக்கும் தன் மகனை சமாதானம் செய்ய அவனும் தன் தாய்காக ஒத்துக் கொண்டு

அவர் சொன்ன படிப்பையே சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கு கணிதம் எப்போதும் வருவதே இல்லை இருந்தாலும் படித்துக் கொண்டு இதோ அதில் குறைவான மதிப்பெண்ணை பெற்று தன் தந்தை என்ன செய்வாரோ என்று காத்துக் கொண்டிருந்தான்.

அவன் நினைப்பை பொய்யாக்காமல் அவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததும் சோபாவில் அமர்ந்திருந்தவன் சட்டென்று எழுந்து நின்று விட்டான் எப்போதும் அப்படித்தான் அவர் முன் உட்கார கூட கூடாது ஏதோ இருவரும் அடிமை போலே இருந்தனர்.

ஆனால் சுசிலாவிடம் வரதனை பற்றி குறை கூறினால் அவர் உன்னை அடிக்கலடா உன்னை திருத்துறாரு உன்னை வழி நடத்துகிறார் அவருடைய ஸ்டைல் அந்த மாதிரி அவருக்கு உன் மேல பாசம் இல்லாமையா உன்னை நல்ல ஸ்கூல்ல சேர்த்து நீ கேட்டதெல்லாம் வாங்கி தரார் என்பார்.

“ஆமா நல்லா வாங்கி தராரு” என்று அவன் சிலுத்துக் கொண்டாலும் அவன் சிகையை கலைத்துவிட்டு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டால் சமாதானம் ஆகிவிடுவான்.

உள்ளே வந்து அமர்ந்தவுடன் வரதன் அவன் முகத்தைக் கண்டு " என்ன தப்பு பண்ணா மூஞ்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு” என்று கேட்டார் .

அதற்கு அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க “நான் கேட்டா எனக்கு பதில் வரணும்” என்று கரகரத்த குரலில் கூறினார்.

அவன் தன் அன்னையைப் பார்க்க அவர் அமைதியாக இருந்தார்.

அவர்கள் இருவரும் மௌனமாய் இருக்க அவர் மீண்டும் “நான் என்ன ஆச்சுன்னு கேட்டேன்” என்று கத்தினார். “ஒன்னும் இல்லப்பா எக்ஸாம் ரிசல்ட் வந்து இருக்கு” ரகமாக இழுத்தான்

“அதுக்கு என்ன” என்றார்.

“மேக்ஸ்ல ரொம்ப கம்மி மார்க்” என்று சொல்லி முடிப்பதற்கு அவன் கன்னம் பழுத்து விட்டது.

அவன் கன்னத்தில் கை வைத்து நின்று இருக்க அவர் விறுவிறுவென்று அடுக்களைக்குள் சென்றார்.

அவன் அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவரோ கேஸ் பழுப்பைக் கொண்டு வந்து அடி வெளுத்து எடுத்து விட்டார்.

அவனால் வலி தாங்க முடியாமல் அடிக்கும் போதே மயங்கி விழுந்து விட்டான்.

அதன் பிறகு சுசீலா தான் வந்து அவர் காலில் விழுந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு மருத்துவர் சொன்னதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியாகினர்.
கதையின் போக்கு எப்படி இருக்குனு உங்கள் விமர்சனத்தையும் மதிப்பீட்டையும் கொடுத்து விட்டு செல்லுங்கள்
 

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.