நின் மத்தம் : 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
மருத்துவர்கள் அவனை உடல் அளவில் தேற்றினால் இளங்கோ அவனை மனதளவில் தேற்றி வீட்டிற்கு அழைத்து வர வரதன் நடு வீட்டில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த சுசிலா உறைந்து தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு வேகமாகச் சென்று அவர் காலடியில் அமர்ந்து "என்னாச்சுங்க ஏன் இந்த மாதிரி புது பழக்கம் பழகுறீங்க" என்று கேட்டார்.

"எல்லாம் உன்னாலயும் உன் பையனாலும் தாண்டி" என்றார்.

அவரதற்கு மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனை அழைத்து, " இனிமேல் நான் நல்லா படிக்கிறேன்னு சொல்லு" என்று சொல்லவும், " நான் நல்லா படிக்கிறேன் அப்பா" என்று மனமே இல்லாமல் சொன்னான்.

"அப்போ நா ஒரு டியூஷன் டீச்சர் அரேஞ்ச் பண்ற வீட்ல படிக்க சொல்லு அவங்களோட அவங்க பொண்ணும் வரும் ஒழுங்கா பார்த்து இருந்துக்கோங்க " என்று சொல்லி சென்று விட்டார்.

அப்போது சுசிலாவிற்கு தன் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது அதை ஏற்று காதில் வைத்து "சொல்லுங்க அம்மா," என்றார்.

அந்த பக்கம் அவர் விசும்பிக் கொண்டே, " உங்க அப்பா இறந்துட்டாருடி" என்றார்.

அவருக்கு தன் தந்தையை நினைவு வந்து கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்து" வரேன்மா" என்றார்.

"உங்க அப்பன் சாவுக்காவது வந்து இருந்துட்டு போ டி "என்று சொல்லி வைத்து விட்டார்.

அவரும், திருமணமாகி வந்ததிலிருந்து ஒருமுறை மட்டுமே தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். தன் கணவருக்கு பிடிக்காது என்பதற்காக அவர் எதையுமே செய்ததில்லை...

ஆனால், இது அவரின் விருப்பு வெறுப்பை பார்க்க வேண்டிய விஷயம் இல்லையே அதனால் மெல்ல தயங்கி வரதனிடம் சொல்ல மூவருமாக சென்று சுசிலா தந்தையின் இறப்பை பார்த்துவிட்டு, மற்ற காரியங்கள் முடியும் முறை சுசிலாவை அங்கேயே இருந்து விட்டு வருமாறு சொல்லி இவனை மட்டும் அழைத்துவிட்டு வந்தார்.

அவனும் தன் அன்னையுடன் இருந்து விட்டு வருகிறேன் என்று சொன்னதை கேட்காமல் அழைத்து வந்தார். மறுநாளே அவர் சொன்ன டியூஷன் ஆசிரியரும் அவர் மகளும் வந்து நின்றனர்.

அந்த ஆசிரியரின் மகளின் பார்வை இவனை எப்போதும்குறு குறு வென பார்ப்பாள். அது அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது.

தன் தாய் சுசீலா இல்லாததால் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வந்த ஆசிரியர் சமையல் செய்து தருகிறேன் என்று சமையல் அறை உள்ளே சென்று வேலை பார்ப்பாள்.

அவளிடம் மட்டும் வரதன் சிரித்து சிரித்து பேசுவார். அதை பார்க்கும் போதெல்லாம் தன் அன்னையிடம் ஒரு நாளாவது இப்படி சிரித்து பேசினால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவான்.

அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை இவன் பார்த்தாலும் வரதன் உள்ள போ என்று சொல்லிவிடுவார்.

அவனும் அமைதியாக சென்று விடுவான் ஒருநாள் இப்படி என்றால் ஒரு நாள் அவர்கள் வீட்டில் யாரும் இல்லை அதனால் இங்கேயே தங்குகிறேன் என்று தங்குவார்கள்.

அவர்களை வரதன் தன் அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்க வைப்பார். அந்த ஆசிரியரின் மகள் என்று சொல்லி வந்தவளை இவன் அறையில் தங்க வைப்பார்.

இப்படியே சென்று கொண்டிருக்க ஒரு நாள் அவனின் மகள் இவன் தூங்கிக் கொண்டிருந்த வேளை அறை குறை ஆடையுடன் வந்து நின்றாள்.

அதை பார்த்தவன் வேகமாக எழுந்து வெளியே செல்லும் போது அவன் காலை தட்டி கட்டிலில் விழ வைத்து அவன் மேலே அவளும் விழுந்து அவன் சிகையை கோதி விட்டு நெற்றியில் முத்தம் வைத்தாள்.

அவளை தள்ளி விட அவள் கைகள் மெல்ல அவனின் நாசி, கழுத்து என எல்லா இடத்திலும் பாய்ந்து, அவன் இதழ்களை தன் வசப் படுத்தி அவன் அங்கங்களை எல்லாம் தீண்ட அதில் கோவம் வந்து அவளை தள்ளி விடும் நேரம் அவள் மேலே விழுந்தான்.

அப்போது அவன் சட்டை காலரை இழுத்து பிடித்தது அவனுக்கு அருவருப்பை தர அவளை அடித்து விட்டு எழுந்து, "இங்க பாரு குறுகுறுன்னு பாக்குறது இந்த மாதிரி பண்றதெல்லாம் வச்சுக்கிட்டா அவ்வளவுதான் என்று வாசல் படி வரை சென்றவனை சொடுக்கு போட்டு அழைத்து,

" நான் இங்க படிக்க வரல இது பண்றதுக்கு தான் வந்தேன் இங்க பாரு" என்று தன் போனை எடுத்துக்காட்ட அதில் அவன் அவள் மேல் இருப்பது போல் இருக்க, "இதில் நீதான் என்னை தப்பு பண்ண கூப்பிடுற மாதிரி தெரியுது இதை நான் உங்க அப்பா கிட்ட காட்டினேனா உன் நிலைமை என்ன ஆகும்னு மட்டும் கொஞ்சம் நினைச்சு பாரு" என்றாள்.

அவனுக்குத்தான் தெரியுமே அவன் தந்தை அவனை நம்ப மாட்டார் என்று இவள் காட்டியதும் அவனுக்கு அடி விழுவது மட்டுமல்லாமல் தன் அன்னைக்கும் அடி விழும் என்பதால் அதை அவளிடம் இருந்து பிடுங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், அவளிடம் சென்று, " மரியாதையா அந்த போனை என்கிட்ட கொடுத்துடு" என்றாள்.

"கண்டிப்பா குடுக்கிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்று பீடிகை போட்டாள்.

"என்ன கண்டிஷன் " என்றான்.

"பெருசா எல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு வேணும் போது நீ வரணும்..."

"எங்க" என்றான்.

"நான் கூப்பிடுற இடத்துக்கு " என்றாள்.

"நான் எல்லாம் வர மாட்டேன், நீ சின்ன பொண்ணு இப்படி எல்லாம் பண்ணாத " என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு சென்றவனை,

"ஓ நான் சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டு இருக்கியா எனக்கு 25 வயசு ஆகுது இதெல்லாம் உன்னையும் உங்க அப்பனையும் ஏமாற்றப்பட வேண்டும் என்பதற்காக தான் வந்தோம் " என்று பொய் சொல்லி சிரித்தாள்.

இதைக் கேட்டவன் தன் தந்தையை ஏமாறக்கூடாது என்று யோசித்து தன் தந்தையின் அறைக்குச் சென்று கதவைத் தட்டும் போது அந்த கதவு தானாக திறந்துக் கொண்டது.

அங்கு கண்டு காட்சியில் அவன் சிலை என ஆகிவிட்டான்.

அவள் தந்தையின் அறையில், தன் அன்னை இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு பெண் அதுவும் தன் தந்தையின் மனைவி இடத்தில்,, இவனைப் பார்த்ததும், அவர் தந்தை கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அவள் இடையை இறுக்கி வேண்டுமென்றே அவள் இதழை கடித்து சுவைத்தார்.

அதைப் பார்க்க கண்கள் கூசி அந்த பக்கம் திரும்ப, அவளை இடையோடு அணைத்துக் கொண்டு வந்து, அவன் முகத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவள் இதழை தன் இதழால் சுவைத்தார்.

இது தன் தந்தை கோவக்காவும் நின்று மட்டும்தான் நினைத்திருந்தான் ஆனால் இன்று அவன் கண்ட காட்சியில் மனம் சில்லு சில்லாக உடைந்து கண்ணீர் வர, அவர் கையை உதறிவிட்டு வந்தவனை பின் சட்டையைப் பிடித்து இழுத்து, "இப்போ எங்க போற, ஓ எங்க அம்மா கிட்ட சொல்ல போறியா" என்று கேட்டார்.

அவன் வேகமாக அவர் கைகளை தட்டிவிட்டு "ஆமா இப்போ அதுக்கு என்ன பண்ண போற" என்று அழுது கொண்டே கேட்டான்.

அவரதற்கு தன் கைகளை விரித்து சிரித்து "போய் சொல்லு போ உங்க அம்மா இதை கேட்டவுடன் அப்படியே நெஞ்சு வெடித்து செத்துப் போய்டுவா? அதுதானே உனக்கு வேணும், உனக்கு வேணுமோ இல்லையோ அதுதான் எனக்கு வேணும் அப்பதான் நான் இவளை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க முடியும்.

உங்க அம்மாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது இவளைத்தான் நான் காதலிச்சேன் எங்கப்பா சொத்து தர மாட்டேன்னு சொன்னதுனால தான் வேற வழி இல்லாம உங்க அம்மாவை கட்டிக்கிட்டேன் இப்போ எங்க அப்பாவும் செத்துட்டா என் சொத்தும் எனக்கு வந்துருச்சு இனிமே நீயும் வேணாம் உங்க அம்மாவும் எனக்கு வேணாம் எனக்காக இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்த இவ தான் எனக்கு வேணும்..

என்ன இந்த வீடு உனக்கு தான் வரும் அதனால் உன்னைய இங்க இருக்க விடுறேன்" என்று சிரித்தார்.

"இல்லை, இந்த விஷயத்தை உங்க அம்மா கிட்ட சொல்லாமல் இருந்தா இந்த வீடும், உன் பெயரில் நடத்துற பிசினசும் உனக்கு தரேன்... இல்லை சொல்லி தான் தீர்வேன் நீ சொன்னால் உங்க அம்மாவை நானே கொன்னுடுவேன்" என்று கண்கள் சிவக்க சொன்னார்.

"இந்த 10 நாள் மட்டும் தான் இவள் இங்க இருப்பா, அதனால தான் உங்க அம்மாவை அங்க விட்டுட்டு வந்தேன்.. எப்படி நம்ம பிளான்" என்று கண்ணாடியை கீழே இறக்கி விட்டு கேட்டார்.

ஆனால் இத்தனைக்கும் திட்டம் போட்டு செய்தவர் தான் ஒரு பதின்ம வயது பையன் அதுவும் தன் மகனிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார். இந்த நிலையில் தான் எதை விதைக்கிறோமோ அதுதானே முளையாக வரும் என்பதை அவர் மறந்து விட்டார்.

அவன் தன் அன்னையை கொன்று விடுவேன் என்று சொன்னது மட்டும் மனதில் பதிய வெறும் சருகாக கீழே இறங்கி வந்தவனை உள்ளிருந்து இழுத்தாள் அவள்!!

அவன் விலக முயற்சி செய்ய அவனுக்கு முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாள்.

அவனை ஒரு இயந்திரம் போல ஆக்கி விட்டு , "நீ சின்ன பையன் என்பதால் இதோட விடுறேன்.. இல்லனா எனக்கு எல்லாம் நீ பத்தவே மாட்டா" என்றாள்.

அவனை அடைய மட்டும் மாட்டாள்.. ஆனால், அவனின் மேனியில் ஊர்வலம் நடத்துவாள். எல்லாம் முடிந்து விட்டது நானே குளிக்க வைக்கிறேன் என்பாள். அவனோ எனக்கு அது தெரியும் என்பான்.

அது சரி இது தெரியலையே அதுவும் தெரியாதுன்னு நினைத்து விட்டேன் என்றுக் கூறி கண் அடிப்பாள்.

அறையில் தான் இந்த போராட்டம் என்று வெளியில் கூடாரத்திற்கு வந்தால் நடு வீட்டீலேயே வரதன் அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டிருப்பார் அதுவும் இதழோடு இதழ் அதை அதுவும் இவனை பார்த்து விட்டால் வேண்டுமென்று அதிகமாக கொடுப்பார்.

அவனால் இதை எல்லாம் வெளியில் சொல்லவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை...

எல்லோரும் பள்ளிக்கு சலித்துக் கொண்டு வந்தால் இவன் மட்டும் தனக்கு கிடைத்த வடிகால் பள்ளிக்கு செல்வது மட்டுமே என்று நினைத்து வருவான்.

அவனின் சோர்ந்த முகத்தைக் கண்டு இளங்கோ எத்தனை முறை கேட்டும் சொல்லாமலே இருப்பான் சில நேரம் "என்னடா உதடு இப்படி வீங்கி இருக்கு" என்று கேட்டால் கூட கதவில் இடித்துக்கொண்டேன் என்று பொய் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியே வந்து கழிவறையில் சத்தம் வாராமல் அழுது விட்டு செல்வான்.

தன்னால் கொடுக்க முடியாமல் ஒரு நாள் கத்தியுடன் நின்றான்.
 

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அச்சோ என்ன கருமம் இது🤮🤮🤮🤮🤮🤮
இப்படியா ஒரு அப்பன் இருப்பான்🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
பாவம் செந்து