• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 2

STN - 57

New member
நின் மத்தம் : 2

சுசிலா தன் மகனை எண்ணியபடியே மேலே பார்வை பார்த்துக்கொண்டு வர மனம் முழுவதும் பாரமாக மாறியது அந்த பாரத்தை தன் கண்ணீர் வழியே கரைக்க முயன்றாரோ என்னவோ கண்களில் இருந்து தார தாரையாக கண்ணீர் வர அதை எல்லாம் துடைத்துக் கொண்டு, வந்தவருக்கு தலைசுற்றி மயக்கம் வந்து மயங்கும் வேளையிலும் "செந்தூரா" என்று கத்தியப்படியே மயங்கி சரிந்தார்.

இங்கு நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு கீழே தன் தாய் கத்தியது அவன் காதில் கேட்டதோ என்னவோ சட்டென்று எழுந்து அம்மா ஏதோ கூப்பிட்ட மாதிரி இருக்கே என்று ஒரு நிமிடம் யோசித்தான்.

'அம்மாக்கு ஏதாவது வேணும்னா போன் பண்ணுவாங்களே இது நம்மளோட பிரம்மையா இருக்கும்' என்று யோசித்தவன் தண்ணீர் குடித்து விட்டு தூங்கலாம் என்று தண்ணீர் பாட்டில் எடுக்க அதில் தண்ணீர் இல்லாமல் இருக்க கீழே வந்தான்.

வந்தவன் மாடியிலிருந்து இறங்கும் போது சுசிலாவின் கால் மட்டும் தெரிய அதை பார்த்து பயந்தவன் தண்ணீர் பாட்டிலை கீழே போட்டுவிட்டு மட மடவென்று கீழே இறங்கி சுசிலாவின் கன்னத்தை "அம்மா அம்மா " என்று தட்டினான் அவர் எழவில்லை....

உடனே அவர் அறைக்குச் சென்று மாத்திரை டப்பாவை எடுக்க அதில் மாத்திரைகள் தீர்ந்து போயிருந்தது. " ஐயோ நாளைக்கு தான ஹாஸ்பிடலுக்கு செக்கப் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன் இன்னைக்கு இப்படி ஆயிடுச்சே" என்று யோசித்தவன் தாமதிக்காமல் அவரை அள்ளித் தூக்கிக்கொண்டு காரில் கிடத்தி வேகமாக மருத்துவமனையை அடைந்து அவரை தூக்கிக் கொண்டே வந்து ஸ்டக்சரில் அழைத்துச் சென்றான்.

அங்கு வரவேற்பில் இருந்த பெண்களிடம், " எங்க அம்மா என்னன்னு தெரியல திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க இவர்களை பார்க்க சொல்லுங்க ஃபர்ஸ்ட்" என்று அதிகாரமாக சொன்னான்.

" சாரி சார் ஒரே ஒரு டியூட்டி டாக்டர் மட்டும்தான் இருக்காங்க அவங்க வேற ஒரு பேஷண்ட பாத்துட்டு இருக்காங்க அவங்கள பார்த்து முடிச்சுட்டு வந்ததுக்கப்புறம் பார்க்கலாம் பயப்படாதீங்க ஒன்னும் ஆகாது" என்று அங்கிருக்கும் செவிலியர்களை அழைக்க அவர்கள் வந்து ட்ரிப்ஸ் போட அழைத்து சென்றனர்.

" இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்ல ஒரே ஒரு டியூட்டி டாக்டர் மட்டும் வச்சுக்கறதுக்கு இடிச்சி தள்ளுங்க" என்றுக் கத்தினான்.

"சார் எப்பவுமே இந்த மாதிரி மிட் டைம்ல மூணு பேர் இருப்பாங்க சார் ரெண்டு பேருக்கு உடம்பு சரியில்ல அதனால தான் வரல சாரி ஒரு ஒரே ஒரு அஞ்சு நிமிஷம் சார் வந்துருவாங்க" என்று கூறினாள்.

சுசிலா இங்கு தான் தொடர்ந்து மருத்துவம் பார்ப்பதால், வேறு வழி இல்லாமல் அமைதிக் காத்தான்.

அதன் பிறகு அங்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரும் தான் ஏற்கனவே பார்த்திருந்த நோயாளியை பார்த்து முடித்துவிட்டு வரும்போது எதிரே ஒரு செவிலியர் வர அவரை நிறுத்தி, "அந்த 7 நம்பர் ரூம் பேஷண்டுக்கு மருந்து கொடுத்துட்டீங்களா!" என்றுக் கேட்டாள் மருத்துவர் மான் விழி!!

" இன்னும் கொடுக்கல டாக்டர்" என்றாள்.

"பேஷன்ட்க்கு மருந்து கூட கொடுக்காமல் என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்று தன் கண்களை உருட்டி கேட்டாள்.

"இதோ டாக்டர் இப்ப போய் குடுக்குறேன்" என்று சொல்லவும் தன் கோபத்தை குறைத்துக் கொண்டு "சரி போங்க" என்று சாதாரணமாக சிரித்துக் கொண்டு வந்தவளை வழி மறித்து, " எங்க அம்மாக்கு அங்க உடம்புக்கு முடியல உங்க பேச்சு வார்த்தைகள் எல்லாம் வச்சுட்டு கொஞ்சம் அவங்கள பாக்குறீங்களா" என்று கேட்டான்.

" சார் நானும் டியூட்டி பாத்துட்டு தான் வந்துட்டு இருக்கேன் இப்பதான் ஒரு பேஷண்டை பார்த்துட்டு வந்தேன் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் இருங்க" என்றாள்.

"அது நீங்க அந்த நர்ஸ் கிட்ட பேசறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும்" என்றான்.

" ஹலோ சார் இந்த ஹாஸ்பிடல்ல உங்க அம்மா மட்டும் பேஷன்ட் இல்ல மத்தவங்களும் இருக்காங்க அவங்களையும் பாத்துட்டு தான் வர முடியும் வெயிட்" என்று கூறிவிட்டு அவள் உள்ளே சென்று தன் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு முகத்தை கழுவிக் வெளியே வந்து "என்னாச்சு அவங்களுக்கு" என்றாள்.

"இன்னும் சாவகாசமா எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்து கேளுங்க அவங்க மயங்கிட்டாங்க" என்றான்.

ஒரு நோயாளியின் தொற்று இன்னொரு நோயாளிக்கு பரவக்கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருவனிடம் பேசுவது நேரம் விரயம் என்று புரிந்து கொண்டவள் மடமடவென்று அவள் அவன் அன்னையை அனுமதித்திருந்த அறைக்குச் சென்றாள் அங்கு பார்த்த போது தான் தெரிந்தது, தன்னுடைய பேஷன் தான் அங்கு படுத்துக் கொண்டிருப்பது என்று புரிந்தவளுக்கு வேறு எந்த விளக்கமும் தேவையில்லாமல் போக...

அவருக்கு எப்போதும் தரவேண்டிய மருந்தை கொடுத்துவிட்டு வெளியே வந்து "அவங்க மாத்திரை சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு" என்று கேட்டாள்.

" எனக்கு தெரியல இன்னைக்கு பார்க்கும்போது டேப்லட் இல்ல" என்று கூறினான்.

" அடுத்தவங்கள குறை சொல்றதுக்கு முன்னாடி நீங்க முதல்ல ஒழுங்கா இருக்கீங்களா பாருங்க உங்க அம்மாவோட செக்கப் டேட் முடிஞ்சு பத்து நாள் ஆகுது, அப்ப மாத்திரையும் முடிஞ்சு போய் இருக்கும் அது கூட தெரியாமல் நீங்க அவங்களோட பையன்னு சொல்லிட்டு என்கிட்ட வந்து சண்டை போடுறீங்க" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றாள்.

அவள் கேட்டுச் சென்ற பின்பு தான் தன் தவறு அவனுக்கு உரைத்தது. அதனால் எதுவும் பேசாமல் முகத்தை மூடி அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் சுசிலா கண் விழிக்க, செவிலியர் வந்து அவனிடம் சொல்லவும் உள்ளே சென்று தன் தாயைப் பார்த்தான்.

தன் மகன் உள்ளே வந்ததும் சுசிலா மெல்ல, "வா பா" என்றார்.

" ஏம்மா இப்படி பண்றீங்க பத்து நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு செக்கப் டேட் முடிஞ்சு போய் இருக்கு அது கூட எனக்கு தெரியல ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே கூட்டிட்டு வந்து காட்டி இருப்பேனே" என்றான்.

" நீ ரொம்ப பிசியா இருக்கப்ப இன்னும் தொந்தரவு பண்ண வேணாம்னு தான் நான் விட்டுட்டேன் இதுக்கு தான் சொல்றேன் ஒரு கல்யாணம் பண்ணிக்கோன்னு நீ தான் கேட்கவே மாட்டேங்குற" என்றார்.

" தயவுசெய்து அதை மட்டும் என்கிட்ட கேட்காதீர்கள் அம்மா" என்று சொல்லும் போதே," உள்ள வரலாமா" என்று கேட்டுக் கொண்டே மான்வழி உள்ளே வந்தாள்.

" வாமா" என்று சுசிலா அனுமதி கொடுக்கவும் அவள் உள்ளே வந்து "இப்ப எப்படி இருக்குமா" என்று கேட்டாள்.

"நல்லா இருக்கேன், "

"மாத்திரையை வாங்கிட்டு போனா மட்டும் பத்தாது சரியா சாப்பிடணும், சாப்பிடுறாங்களான்னு பார்க்கணும்" என்று செந்தூரனை ஒரு பார்வை பார்த்து கூறினாள்.

அவன் அதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக தந்துவிட்டு தன் அன்னையின் கையை மெல்ல பிடித்துக் கொண்டான்.

" பிபி ரொம்ப அதிகமா சூட்டப் ஆயிருக்கு அதனால இன்னும் ஒரு ரெண்டு நாள் மட்டும் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு போகலாம்" என்றாள்.

" ரெண்டு நாளா? என்னை நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணேன்மா" என்றார்.

" அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை இப்போதைக்கு தூங்குங்க " என்று சொல்லிவிட்டு "அவங்கள பார்த்துக்கோங்க சார் அவங்களோட மெடிக்கல் டீடெயிலும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று செந்தூரனிடம் சுருக்கென்றொரு வார்த்தை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

"நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்னு என்னை ஓவரா தான் பேசுற " என்று அவன் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுசிலாவிடம் "ரொம்ப திமிர் புடிச்சவ" என்று கூறினான்.

" இல்லப்பா ரொம்ப நல்ல பொண்ணு தான்" என்று அவர் அவளுக்கு புகழாரம் சூட்டினார்.

" உங்களுக்கு எல்லாருமே நல்லவங்க தான் இப்போ எத பத்தி யோசிக்காம தூங்குங்க " என்று அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவர் தலையை மெல்ல வருடிவிட ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றார் சுசிலா, அப்படியே அந்த கட்டிலில்லேயே அவனும் படுத்து உறங்கி விட்டோம்.

இப்படியே அந்த இரவு பொழுது கழிய, அவன் மறு நாள் காலை இளங்கோவிடம் சுசிலாவை இங்கு பார்த்துக் கொள்ள தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணியை அழைத்து வரச் சொல்ல அதன்படி அவனும் அழைத்து வர அவரிடம் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு, தன்னுடைய கம்பெனிக்கு சென்று விட்டான்.

மான் விழி தன்னுடைய வேலை நேரம் முடியும்போது மீண்டும் சுசிலாவை வந்து பார்த்து அவர் உடல் நிலை பரிசோதித்து விட்டு சென்றாள்.

வேலைக்கார பெண்மணி வந்ததும் அவரை நல்ல முறையில் பார்த்துக் கொண்டாள்.

அந்த நாள் அந்தி மாலை முடியும் நேரம், செந்தூரன் தன் பணிகளை முடித்துக் கொண்டு தன் தாயைப் பார்க்க வரவும் மான் விழி தனது வேலைக்கு வந்து கையெழுத்து போடவும் சரியாக இருக்க அவளிடம் "இப்போ எங்க அம்மா எப்படி இருக்காங்க " என்று கேட்டான்.

" காலையில பார்க்கும்போது நல்லா தான் இருந்தாங்க இப்ப போய் தான் பார்க்கணும் " என்றாள்.

" என்னது போய் தான் பார்க்கணுமா ஏன் வரும்போது அதெல்லாம் பாத்துட்டு வரமாட்டியா? " என்று ஒருமையில் கேட்டான்.

" ஹலோ மிஸ்டர் எங்களுக்கும் ரெஸ்ட் எடுக்க டைம் வேணும் நாங்க நல்லா இருந்தா தான் பேஷன்ட் நல்லா இருக்க முடியும்" என்று கையெழுத்திட்டு விட்டு முகம் கை கால்களை கழுவிக் கொண்டு சுசீலாவை பார்க்க வந்தாள்.

ஏனோ மான் விழியை பார்த்ததும் சுசீலாவிற்கு புது உற்சாகமே வந்துவிட்டது. "வாமா " என்று எழுந்து அமர்ந்து வரவேற்றார்.

இவரை கண்டதும் அவன் மேல் இருந்த கோவம் போய், இப்படி ஒரு நல்ல அம்மாக்கு அப்படி சிடுசிடுன்னு ஒரு மகன் என்று யோசித்துக் கொண்டு அவருடைய பிபி எல்லாவற்றையும் பரிசோதித்து விட்டு, அங்கு சற்று நேரம் அமரந்து அவரிடம் பேசினாள். அப்போது அவளுக்கு தொடர்ந்து அழைப்பு வந்துக் கொண்டே இருக்க
அதை அணைத்துக் கொண்டே இருந்தாள் .

"ஏன் மா தொடர்ந்து போன் வந்துட்டே இருக்கு ஏதாவது முக்கியமான போனா இருக்கும் அதை எடுத்து பேசுமா" என்றார்.

அவர் கூறியதால் மரியாதை நிமித்தமாக எடுத்துப் பேசியவள் மீண்டும் வந்து அமரும்போது மிகுந்த கோபத்துடன் போனை அந்த பெட்டின் மேல விசிறி அடித்து விட்டு வந்து அமர்ந்தாள்.

அப்படி என்ன சொல்லி இருப்பார்கள் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்.....

கதையைப் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க செல்லம்ஸ்....
 
Top Bottom