• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 20

STN - 57

New member
அவனுக்கு பாடம் எடுக்க வந்த ஆசிரியர் உடன் வந்தவள் அவனை தொடரந்து வன் புணர்வு செய்து கொண்டிருக்க அங்கிருந்து வெளியில் வந்தால் நடு வீட்டில் அவன் தந்தையின் காதல் லீலைகள் வேறு தாங்க முடியாமல் இருந்த நேரத்தில், தன் தந்தையின் இறப்பு காரியம் முடிந்ததால் அன்று வீட்டிற்கு வந்தார்.சுசீலா!!

ஆனால் வரதனுக்கு அவர் அன்று வருவது ஞாபகம் இல்லாததால், தன்னை மறந்து அப்படியே உறங்கிக் கொண்டிருந்தார்.

சுசிலா வீட்டிற்கு வர அந்த வீடு வித்தியாசமாக இருந்தது. அதை அவர் பொருட்படுத்தாமல் உள்ளே வர செந்தூரன் அவள் இம்சையிலிருந்து மெல்ல எழுந்து குளித்து முடித்து வந்தான் தன் தாயை கண்டதும், எதுவும் பேசாமல் அப்படியே நின்று இருந்தவனின் அருகில் வந்து, "என்ன ஆச்சு பா ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க " என்று கேட்டார்.

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வர, அப்படியே நின்று இருந்தான்.

அவர் அவன் சிகையை கோதி மெல்ல அவனை அணைத்து அவன் நெற்றியில் முத்தமிடப்படும் நேரம் அவரை தள்ளிவிட்டு, " இப்போ எதுக்கு என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க வர" என்று கத்தினான்.

அவருக்கு அது புதிதாக இருந்தது அவன் எப்போதும் கோவப்பட்டாலோ அழுதாலோ இல்லை சோகமாக இருந்தாலும் அவனுக்கு தருவது இந்த சின்ன ஆறுதல் தான் அதையே இன்று வேண்டாம் என்று சொல்கிறானே என யோசித்தவர்.

அவனை சற்று பார்த்தார் முகம் எல்லாம் வீங்கியிருந்தது உதடடோ கோவை பழம் போல் சிவந்திருக்க அவர் அவனின் இதழை மெல்ல தடவி கொடுத்து, " இது என்னப்பா இவ்வளவு வீக்கமா இருக்கு " என்று கேட்டார்.

அவன் அவர் கையை தட்டி விட்டு "ஒன்னும் இல்லை "என்றான்.

"என்னடா உதடு ரொம்ப வீக்கமா இருக்கு எறும்பு ஏதும் கடித்துவிட்டதா" என்று கேட்டார்.

அது எறும்பு கடிக்கவில்லை ஒரு உடல் தின்னி கழுகு கடித்தது என்று எப்படி சொல்வான் அதனால் அமைதியாக இருந்தான் அவனுக்கு தன் தாய் தன்னை நம்ப மாட்டார் என்ற பயம் இல்லை மாறாக, அதை சொன்னால் தன் தாய்க்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலையும், அவள் தொட்ட இந்த தேகத்தை தன் அன்னை தொடக்கூடாது என்ற அக்கறையும் கூட அதனாலேயே அமைதியாக இருந்தான்.

இந்த மாதிரி சூழ்நிலைகளில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சமாளிக்க முடியாது.

அவன் அமைதியாக இருந்தாலும் ஒரு அன்னையாக அவருக்கு தெரியுமே தன்னுடைய மகனின் உடல் எப்படி இருக்கும் என்று அவன் உதடு வீங்கி இருக்கவும் அவனை மேலிருந்து கீழாக "பார்த்து என்னப்பா பத்து நாளில் இப்படி மெலிந்து போயிட்ட சாப்பிடுவது இல்லையா? " என்று கேட்டார் அப்போது அவன் சட்டையின் இடையில் நகக் கீறல் தெரிய "என்னாச்சு தங்கம் " என்று அந்த கீறலை தொட்டு கேட்டார்
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தபோது அரைகுறை ஆடையுடன் அவள் வந்து, அவனை இழுக்க அவன் வர மறுத்தான்.

அவள் தூக்க கலக்கத்தில் இருந்ததால் சுசிலாவை பார்க்கவில்லை அதனால் "என்னடா வர மாட்டேங்குற நான் உன்னை மொத்தமாவா கேட்கிறேன் ஏதோ கொஞ்சம் பிஸிக்கல் டச் மட்டும் தானே அதுக்கே இப்படி பண்ணா எப்படி" என்றாள்.

சுசிலாக்கு புரிந்து விட்டது தன் மகனின் கோலத்திற்கு யார் காரணம் என்று தன் மகனை பெண் வடிவில் இருக்கும் பிசாசு பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருப்பதை புரிந்து கொண்டவர் அவள் கையை தட்டி விட்டு ஓங்கி ஒரு அரை விட்டதில் அவள் "அம்மா " என்று அலறினாள்.

அந்த அலறலில் மேலே தூங்கிக் கொண்டிருந்த வரதனும், அவரின் முன்னாள் காதலியும் அரைகுறை ஆடையுடன் வந்து நிற்க.... அந்த காட்சியை கண்டவர் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

தன் அன்னையை இந்த கோலத்தில் பார்க்க கூடாது என்பதற்காக மட்டும் தான் இவர்கள் செய்த அருவருப்பையும் கொடுமையும் தாங்கிக் கொண்டிருந்தான் இன்று தன் அன்னை அழவும் அதில் தெளிந்தவன் அவர் கண்களை துடைத்து விட்டு, "அம்மா ஒன்னும் இல்லம்மா " என்றான்.

அவன் ஆறுதலுக்கு எல்லாம் அவர் அசையவே இல்லை தன் வாழ்நாளையே அவருக்காக தொலைத்து விட்டு நின்று கொண்டிருக்கிறார் அதுவும் அவனிடமிருந்து எந்த பாசமும் கிடைக்காது என்று தெரிந்தும் அவர் இன்னொருவருடன் இருந்த கோலத்தை கண்டவருக்கு அழுகை வராமல் என்ன செய்யும்

ஆனால் வரதனுக்கு அந்த குற்ற உணர்வு எல்லாம் இல்லாமல் அந்த அறைகுறை ஆடையுடனே அவளையும் அழைத்து தோளில் போட்டுக் கொண்டு வந்து நின்று அவர் முன்னே அவளின் இதழுக்கு முத்தமிட்டார்.

அந்த பத்து நாட்களாக அந்த முத்தத்தை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு மேலும் அருவருப்பை தர தன் அன்னையை முதுகு காட்டி நிற்க வைத்துக் கொண்டான்.

இந்த கூத்துக்களை பார்த்த அந்தப் பெண் "அங்கிள் நான் கூட இந்த லேடிக்கு நீங்க பயப்படுவீர்கள் என்று நினைத்தேன் நீங்க பயப்படலையா இனிமே இவனை நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க" என்று அவன் கைபிடித்து இழுக்க இப்போது சுசிலா தனக்கு என்றால் தாங்கிக் கொள்வாள் தன் மகனுக்கு என்றதும் கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் கன்னத்தில் பளார் என்று அடித்தார். அவளை அடித்ததும் வரதன் வந்து அவர் கன்னத்தில் அடித்தார்.

அவரை அடித்த நொடி, எப்போதும் போல அடியை தாங்கிக் கொள்ளாமல் இம்முறை திருப்பி கொடுத்து விட்டார்.

அது அவருக்கு பலத்த அவமானம் ஆகி போக அவர் முடியை பிடித்து, "ஏண்டி இவ்வளவு நாள் நான் போட்டதை தின்னுட்டு இருந்த இப்ப என்னையவே அடிக்க பாக்குரீயா? உனக்கு இன்னும் திங்குற சோறும் போட துணியும் கிடைக்கிறதனாலதான இவ்வளவு பேச்சு பேசுற" என்று அவரின் சேலையை உருவ அதை கண்கொண்டு பார்க்க முடியாமல் சமையல் அறைக்குள் சென்று, கத்தியை கொண்டு வந்து அவரிடம் நீட்டி, " என் அம்மா மேல இருந்து எடுடா" என்றான்.

"ஏய் யாரை மிரட்டுற" என்று கேட்டதற்கு,

"யோவ் நான் மிரட்டலை உண்மையா சொல்றேன் இன்னும் ரெண்டு செகண்டுக்குள்ள எங்க அம்மா மேல இருந்து கை எடுக்கல உன் கையை வெட்டிடுவேன்" என்று சொல்லிக் கொண்டே இருக்காமல் அவன் கை கிழித்து விட அதில் பயந்து அவள் அவர் மேலிருந்து கையை எடுத்து விட்டார் அந்தப் பெண்,

" எவ்வளவு குட்டியா இருந்துகிட்டு இந்த வேலை எல்லாம் பாக்குறியா" என்று அவன் சட்டையை வந்து மெல்ல வருடி கொடுக்க அவள் கையை தட்டிவிட்டு பளார் என்று ஓங்கி ஒரு அரை வைத்தான்.

இருவரிடமும் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்காதவர் அவர்கள் இருவரையும் பார்த்து, " வீட்டை விட்டு வெளியே போ" என்று கத்தினார்.

சுசிலாவோ முகத்தை மூடி அழுதது அழுத வண்ணமே இருக்க... இதுவரை தன் கோபதாபங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தது தன் அன்னைக்காக மட்டுமே எப்போது அவரை அழ வைத்துவிட்டாரோ இனி இவர் தனக்கு தேவையில்லை என்று நினைத்து, " இது என் பெயரில் இருக்கிற வீடு, நீதான் வெளியே போகணும்" என்றான்.

"நீ மைனர் நீ மேஜர் ஆகுற வரைக்கும் உனக்கு கார்டியன் நான் தான் வெளியே போடா" என்று சொல்லிவிட்டு அந்த இரண்டு பெண்களையும் தோள் மீது கை போட்டு தன்னறைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

சுசிலாவிற்கு இதை பார்த்து நெஞ்சு வலி வராத குறை தான் ஆனால் தன் மகன் தான் அழுதால் அவனும் முடங்கி விடுவான் என்று தன் துக்கங்களை மறந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தார்.

இருவருக்கும் இதுவரை அவர் ஒருவரே உலகமென இருந்திருக்க இப்போது எங்கு செல்வது என்று திக்கு திசை தெரியாமல் நின்றிருந்த வேளையில், இளங்கோ எப்போதும் போல அழைத்து "எப்படா ஸ்கூலுக்கு வர " என்று கேட்க "நான் இனி ஸ்கூலுக்கு வர மாட்டேன் டா" என்றான்.

"டேய் ஏன்டா" என்று அவன் அதிர்ச்சியாக கேட்க, "எதுவும் கேட்காத மச்சான் எனக்கு ஒரு வீடு மட்டும் பார்த்து கொடு டா" என்றான்.

அவனும் தன் தந்தையிடம் சொல்லி அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அவர்களுக்கு ஒரு சின்ன வீடு பார்த்துக் கொடுக்க அவருக்கு தன் மகனை இந்த கோலத்தில் பார்க்க பார்க்க வயிறு எரிந்தது. அதனால் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் போகலாம் என்று சொன்னதற்கு நானே என்ன பாத்துக்கிறேன் நானே என்னை தேற்றி கொள்றேன் என்று அதற்கும் வர மறுத்து விட்டான் அதன் பிறகு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றான்.

கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து தனக்கும் தான் அன்னைக்குமான செலவுகள் போல போக மிச்சப் பணத்தை சேர்த்து வைத்தான்.

18 வயது முடிந்தவுடன், தன் வீட்டை அடைய என்னென்ன தேவையோ அதை திரட்டி கொண்டு வரதன் வீட்டு முன்பு நின்று அவனை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டான்.

வீடு அவன் தாத்தா விடுவது என்பதால் எனக்கு உதவ வேண்டியது தான் அவருடைய உழைப்பில் வந்தால் அதை இவன் விட்டு விட்டான்.

இரவு பகல் பார்க்காமல் உழைத்தான் ஒரு சிறு தொழில் ஆரம்பித்து தில் முன்னேறினான். அதில் அவனுக்கு திருப்தி தரவில்லை தன் தந்தையை எதிர்த்து அவரை கீழே முடக்கி போட வேண்டும் என்பதில் முழுமூச்சாக இறங்கி அவர் எடுத்து நடத்தும் ஸ்டேஷனரி தொழிலை எடுத்து நடத்தி வந்தான்.

அப்போது சுசிலாவிற்கு தோழி மகள் என்று ஒருவள் செந்தூரனின் அழகிலும் பணத்திலும் மயங்கி அவனுக்கு மனைவியாக வேண்டும் என சுசீலாவை எப்படியோ தாஜா செய்து அவனை திருமணம் செய்து கொண்டாள். அவனும் அப்போது தன் தாய்க்காக திருமணம் செய்து கொண்டு

இல்லற வாழ்க்கையில் நுழையும் நேரம் அவள் வந்து அவனை தொடும் போதெல்லாம் அந்த பழைய நினைவுகளே வந்து அவனுக்கு அருவருப்பை தந்தது அதனால் அவன் அவளிடம் நாடவேயில்லை...

ஒரு நாள் "ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என்ன உங்களுக்கு புடிக்கலையா" என்று கேட்டதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் "எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு" என்று கேட்டான்.

ஆனால் அவளுடன் அவனுக்கு ஒன்று போகவே முடியவில்லை... அவளுக்கும் எப்படி வழிக் கொண்டு வருவது என்று தெரியாமல் இந்த அழகு தனக்கு கிடைக்காது என்று முடிவெடுத்தவள் அவன் ஆண்மையற்றவன் என்று கூறி விவாகரத்து வாங்கி சென்று விட்டாள்.

அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வரும் வேலையில், அவன் தந்தையாலே தொழில் ரீதியாக தோல்வியை சில சந்தித்தான் பிறகு அவர் வெறுப்பேற்றி அவன் தந்தையையோ அல்லது முதல் மனைவியையோ யாரை பார்க்க நேர்ந்தாலும் அவன் பெண்களை நாடிச் செல்ல ஆரம்பித்து விட்டான்.

அன்பின் மீது அரவணைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை பெண்கள் தொடுவது எல்லாம் காமத்திற்காக மட்டும்தான் தொடுவார்கள் என புரிந்து கொண்டவன் யாராவது இதழ் முத்தம் என்று கொடுத்து விட்டால் அவனுக்கு சொல்ல முடியாத அருவருப்பை தான் தருகிறது ம்

இதையெல்லாம் சொல்லி முடிக்கவும், மான் விழி அவரை வேகமாக கட்டிக்கொண்டு அழுதாள்.

சுசிலா அவரை மெல்ல தேற்றி "அது எல்லாமே கடந்து வந்துட்டாமா இனிமே அவனை நீ தான் சரி செய்யணும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்குது " என்றார்.

"என்னால் அது முடியாதுன்னு நினைக்கிறோமா ஏன்னா நானே தெளிவா இல்லையே ஒருவர் பாதிக்கப்பட்டிருந்து மற்றொருவர் தெளிவாக இருந்தால் அவர்கள் சரி செய்யலாம் ஆனால் நானும் அந்த மாதிரி பாதிக்கப்பட்டிருக்கிறேன்" என்று தன் கதையை சொல்ல சுசிலாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.
 

Gowri Karthikeyan

Well-known member
இது தான் சுசிக்கு ஆல்ரெடி தெரியுமே.....
அவ அப்பா சொன்னாங்க இல்ல
 
Top Bottom