• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 27 (நிறைவு பகுதி )

STN - 57

New member
வரதன் அடித்ததில் அவளுக்கு ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. இளங்கோ செந்தூரன் இருவரும் அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வரும் வழியில் வாகனங்கள் வருவதற்கு கூட வழி இல்லாமல் இருக்க, இருவரும் நொந்து விட்டனர்.

அவனோ அவளை பிடித்த கையை விடவே இல்லை, அவன் கண்களிருந்தும் கண்ணீர் நிற்கவே இல்லை... அவனுக்கும் அடிப்பட்டு ரத்தம் சுட்டி கொண்டுதான் இருந்தது ஆனால் அதை அவன் பொருட்படுத்தவே இல்லை...

அப்போது போனவர்கள் வராததால் சுசிலா அவர்களுக்கு அழைத்து அழைத்துப் பார்த்து, சோர்ந்து போய் இளங்கோவிற்கு அழைக்க "மச்சான் அம்மா போன் பண்றாங்க
டா "என்றான் .

"போன் எடுக்க வேண்டாம் இப்போ சொன்னா பயந்துடுவாங்க பாத்துக்கலாம் நீ முன்னாடி கார் மட்டும் கொஞ்சம் சீக்கிரமா ஓட்டிட்டு போடா" என்று சொல்லி விட்டு

அவளிடம் "நீ எதுக்குடி அந்த கத்தியை புடிச்ச அந்த ஆளு எதுக்குடி உன்னை எட்டி உதைச்சாரு என்று புலம்பி முதல் முறையாக கடவுளிடம் என் மனைவியை எனக்கு திருப்பி கொடுத்துவிடு,"என்று கேட்டான்.

பல தடைகளுக்குப் பிறகு, ஒரு மருத்துவமனை தெரிய விடியல் வெளிச்சம் போல மெதுவாக அந்த மருத்துவமனையின் முன் காரை நுழைத்தான் இளங்கோ!!

கார் நின்றது தான் தாமதம் தன்னவளை கையில் தூக்கிக்கொண்டு வரவேற்புரைக்குச் செல்ல அங்கு இருப்பவர்கள் ஸ்ட்ரக்சரை கொண்டு வந்து மடமடவென்று அவளுக்கு மருத்துவத்தை ஆரம்பித்தனர்.

அவளை பரிசோதித்த மருத்துவர் செந்தூரனிடம், " அவங்களுக்கு வயத்துல அதிகமா அடிபட்டு இருக்கு நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இல்ல சிசேரியன் தான் பண்ண முடியும் ஒரு சைன் மட்டும் போடுங்க" என்றார்.

கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு அவளுக்கு "ஒன்னும் ஆகாது இல்லை" என்று கேட்டான்.

"நாங்களும் அதுக்கு தான் ட்ரை பண்றோம் போக்குவரத்து பெஸ்ட், உங்களுக்கும் ரொம்ப அடிபட்டு இருக்கு இது ஆக்சுவலா போலீஸ் நாங்க எடுக்க மாட்டோம் ஆனால் பிரக்னன்ட் கேஸ் அதனால எடுக்கிறோம் நீங்களும் போய் ட்ரீட்மென்ட் பார்த்துக்கோங்க "என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அவனும் சென்று தன் காயங்களுக்கு மறந்துட்டுக் கொண்டு வந்து தன்னவளை அனுமதிருந்த அந்த வளாகமே தேயும் அளவிற்கு நடந்து விட்டான் கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுதுவிட்டான்...

இளங்கோவிற்கோ தன் நண்பன் இப்படி மனைவிக்காக பரிதவிப்பது ஆனந்தமாக இருந்தாலும் இந்த நிலையில் அவனைப் பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

என்ன ஆறுதல் சொல்வது என்று கூட தெரியாமல் அவன் தோளை வந்து மெதுவாக தொட யாரிடம் சென்று ஆறுதல் தேடுவது என்று தெரியாமல் தவித்திருந்தவன் தன் நண்பனின் தோளை இறுக்கமாக கட்டிக் கொண்டான் அவன் முதுகை தடவி விட்டு, " தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாதுடா பயப்படாதே" என்று சொன்னான்.

இவனுக்கு எப்போதெல்லாம் துன்பம் வருகிறது அப்போல அப்போதெல்லாம் ஆபத்துபாவனாக வந்து பக்கம் நின்று கொள்கிறான்.

சில மணி நேரங்கள் கழித்து குழந்தை அழும் சத்தம் கேட்க

இருவருக்கும் உயிர் வந்தது ஒரு வெண்மை நிறப் பூ மொட்டை ஒரு தூவலையில் சுற்றிக்கொண்டு வந்து, " சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு வாழ்த்துக்கள்" என்று செவிலியர் சொன்னார்.

அவன் அந்த குழந்தையை வாங்காமல் தன் நண்பனிடம் கொடுக்க சொல்லிவிட்டு, "என்னுடைய மனைவி எப்படி இருக்காங்க" என்று கேட்டான்.

"அவங்களுக்கு தலையிலையும் வயித்துலையும் கொஞ்சம் அடிபட்டு இருக்கு சார் அதுக்கு ஸ்டிச்சஸ் போட்டு இருக்காங்க மயக்கத்துல இருக்காங்க ஒன்னும் பயப்படத் தேவையில்லை

பிளட் கொஞ்சம் லாஸ் ஆயிருக்கு பிளட் ஏத்திட்டு இருக்காங்க ஒரு மணி நேரம் விட்டு நீங்க போய் பார்க்கலாம்" என்று சொன்னவுடன் தான் அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

இளங்கோ வந்து அவன் குழந்தையை கொடுக்க "இல்லடா நான் அவ கூட பாத்துக்குறேன் நீ அம்மாக்கு போன் பண்ணு" என்றான்.

அவனும் சுசிலாவிற்கு அழைத்து பெண் குழந்தை பிறந்திருப்பதாக கூறி மருத்துவமனைக்கு வர சொல்லி போனை வைத்து விட்டான்.

அவர்களும் சிறிது நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து தன் பேர பிள்ளையை அள்ளி தூக்கி கொஞ்சினர்.

சுசிலா செந்தூரனை பார்த்து "என்னாச்சு" என்று கேட்க அவன் நடந்ததை எல்லாம் சுருக்கமாக சொல்லி இனி பயப்பட வேண்டாம் என்று சமாதானப்படுத்தினான்.

அவருக்குத்தான் என்ன சொல்வது என்று தெரியாமல், "அந்த ஆளு இவ்வளவு மோசமானவரா இருப்பார் என்று நினைத்து கூட பார்க்கல நான் நினைக்கும் போது உடம்பெல்லாம் நடுங்குது" என்றார்.

"எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் விடுங்கம்மா இப்போ உங்க பேத்தியை பாருங்க " என்று சமாதானப்படுத்தினான்.

தன் பேத்தியின் முகத்தை கண்டு அவரும் அதை மறக்க முயற்சி செய்தார்.

அதன் பிறகு மான் விழி கண் விழிக்க, செவிலியர் வந்து அவர்களை பார்க்க சொல்லவும், ஒவ்வொருவராக முதலில் பார்த்துவிட்டு வந்தனர்.

ஆனால் அவள் கண்களோ செந்தூரனை தேட, அவர்கள் வெளியே வந்தவுடன் அவன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து அவளிடம் நீட்டி, "பாப்பா பிறந்திருக்கு " என்று சொல்லும் போதே அவன் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்து அந்த குழந்தையின் மேல் பட அந்த குழந்தை சிரித்தது.

"பாப்பா சிரிக்குது பாருங்க உங்கள மாதிரியே இருக்குல்ல அழகா" என்றாள் .

"இல்ல நம்மள மாதிரி " என்றான்.

அவன் தன் குழந்தையின் இதழை கொண்டு வந்து தன் கன்னத்தில் வைத்து தனக்கு இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டான் அந்த இதழ் தன் மேலே பட்டவுடன் சொர்க்கமே வந்து தன் வசப்பட்டதாக உணர்ந்தான்

அதைப் பார்த்தவள் கண்கள் கலங்கினாலும், "பிராடு எனக்கு தான் முத்தம் கொடுக்க மாட்ட என் பொண்ணுக்கு மாடா கொடுக்க மாட்ட" என்றான்.

"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு கொடுங்க" என்றான்.

அவன் சட்டை காலரை இழுத்து அவனுக்கு இதழ் முத்தம் கொடுத்துவிட்டு அவன் இதழை எடுத்து நெற்றியில் ஒட்டி விலக்கி விட்டாள்.

பின் அவன் அங்கேயே அமர்ந்து இருக்க அவனையே குறுகுறுவென்று பார்த்தவள், " டேய் செந்தூரா எனக்கு ஒரு முத்தம் தா டா " என்றாள்.

அவன் எழுந்து பொதுவாக அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்த நேரம் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்தது.

அவளுக்கு உடல் நலம் நன்கு தேறிய பின் அவளை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

மூன்று மாதம் கழித்து தன்னுடைய மகளுக்கு ஆழினி என்று பெயர் சூட்டினார்.

எல்லோரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி தன் மகளுக்கு தன் மகனுக்கும், மகளுக்கும் திருமணமே ஆகாது என்று நினைத்திருந்த பெற்றோர்கள் இன்று குடும்பமாக குழந்தையோடு நிற்பதை பார்த்து கண்கள் பூரித்து நின்றனர்.

அவர்களோ தன் மகளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து வளர்த்தனர். அவள் அன்று பட்ட வலியின் காரணமாக அவன் ஒரு குழந்தையே போதும் என்று நினைத்து விட்டான்.

மூன்று வருடங்கள் கழித்து அந்த வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது காரணம் ஆழினிக்கு இன்று மூன்றாவது பிறந்தநாள், அதற்காக தன் அன்னையின் பிறந்த நாளை கொண்டாடிய அதே அன்னை இல்லத்தில் தன் மகளின் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்.

மான் விழி இளஞ்சிவப்பு வண்ண சேலையை கட்டிக் கொண்டிருக்க எப்போதும் போல அவன் கீழே அமர்ந்து அவள் சேலையை சரி செய்தான் அவனும் பட்டு வேட்டி சட்டையில் அழகாக மிளிற அவள் அவனை இழுத்து முத்தம் கொடுத்தாள்.

அவனும், " நீ முத்தம் கொடுத்தா மட்டும் எனக்கு சலிக்கவே மாட்டேங்குது இன்னொன்னு கொடு" என்றான்.

"ஆமா என்கிட்ட கேட்டே திருடுற உனக்கு அது சலிக்கவே சலிக்காது ஆனா நீ மட்டும் எனக்கு கொடுக்காதே " என்றாள்.

"கொடுக்க முடியாது போடி" என்று அவளை வெறுப்பேத்தி விட்டு கீழே சென்று விட்டான்.

அனைவருமாக அந்த அன்னை இல்லத்திற்கு சென்று அங்கிருக்கும் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதும் அங்கிருக்கும் குழந்தைகள் எல்லாம் அவளுக்கு வாழ்த்து கூறிவிட்டு செந்தூரனை சூழ்ந்து குழந்தைகள் முத்தமிட அதை இப்போது ஆழ்ந்து அனுபவித்தான்.

அவனின் இன்பமான முதல் முத்த அத்தியாயம் இங்குதானே தொடங்கியது. அதனால் அதை இனிமையாக இனித்துக் கொண்டிருந்த வேளை, " எனக்கு இன்னும் கொஞ்சம் சாப்பாடு கொடுங்களேன்" என்று கையில் தட்டுடன், ஒருவர் அங்கே கெஞ்சும் சத்தம் கேட்டது.

அங்கிருந்து அன்னை இல்லத்தின் உரிமையாளர், "இல்லப்பா இப்போ தான் முடிஞ்சி போச்சு" என்று சொன்னபோது ஆழினி தான் உண்டு கொண்டிருந்த உணவை கொண்டு போய் அந்த பெரியவரிடம் நீட்டினாள்.

அவர் பத்து நாள் சாப்பிடாதவர்கள் அந்த உணவை வாங்கி உண்டார்.

ஆழினிக்கு பார்க்கவே பாவமாக இருந்தது, " உங்களுக்கு யாரும் இல்லையா தாத்தா" என்று தன் மழலை மொழியில் கேட்டாள்.

அவரோ எதுவும் சொல்லாமல் அமைதியாக உண்டு கொண்டிருந்தார் தன் மகளை அழைக்க வந்த செந்தூரன் இந்த காட்சியை பார்த்து உரைந்து நின்றான் ஏனென்றால் அங்கு யாரும் இல்லாதவர் போல் உணவை வாங்கி உண்டது வேறு யாரும் இல்லை தன்னை பெற்ற மகராசன் தான்.

எந்த குழந்தையை கருவிலேயே அழிக்க நினைத்து ஒரு கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் கீழே தள்ளினாரோ அதே குழந்தையிடம் இன்று உணவை வாங்கி உண்ணும் அளவுக்கு கடவுள் வைத்துவிட்டார்.

என்பதை நினைத்து அந்த ஆளின் மூச்சுக்காற்று படுவது கூட பாவம் என்று தன் மகளை அழைத்து வந்து விட்டான்.

செந்தூரனை கண்டதும் இப்போது அவருக்கு கோபம் இல்லை மாறாக, குற்ற உணர்வு தான் அதிகமாக இருந்தது அவருக்கு மன்னிப்பு கேட்கும் அருகதை கூட இல்லாததால் அது எதுவும் கேட்காமல் அந்த உணவை அங்கேயே வைத்து விட்டு சென்று விட்டார்.

தன் மகள் பிறந்தவுடன் அவருக்கு மீதம் இருந்து அனைத்து சொத்துக்களையும் கண்டுபிடித்து அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்துவிட்டான்.

ஜெயிலிலிருந்து வெளியே வந்தவர் தன் இரண்டாவது மனைவியை பார்க்க அவரோ வேறொருவனுடன் உல்லாசத்தில் இருந்தாள்.

யாரிடம் சென்று வேலை கேட்டாலும் வேலை இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தனர் உண்ண கூட உணவு இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த அன்னை இல்லத்தின் விலாசம் தெரிந்து இங்கு வந்து சேர்ந்திருந்தார்.

நாம் என்ன விதைக்கிறோமோ அதுதானே முளையாக வரும் நல்லதை விதைத்து இருந்தால் நல்லது வரும் என்று நினைத்துக் கொண்டு அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.

வந்தவுடன் ஆழினி தன் தாய் தந்தை இருவரையும் கட்டிக்கொண்டு, " ஐ லவ்" என்றாள்.

அவர்களும் அவளை கட்டி அணைத்து முத்தமிட்டனர். அவள் அவர்களின் தாத்தா பாட்டியுடன் சென்று படுத்துக்கொள்ள...

இருவரும் பால்கனிக்கு செல்ல அவள் எப்போதும் போல அவனின் தோளில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் அப்போதே அப்படியே உறங்கி விட்டாள்.

அவனும் அவள் தலையை கோதி மெல்ல அவளை தூக்கி வந்து கட்டிலில் கிடத்தி தானும் அவளுடன் படுத்து அவளை அணைத்து உறங்கி விட்டான்.

இதுபோல எப்போதும் அவர்கள் பகலிலும் இரவிலும் வந்து ஏகாந்தத்தை அள்ளித் தூவி கொள்ளட்டும் என்று நாம் வாழ்த்தி விடை பெறுவோம்...

சுபம்......
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom