நின் மத்தம் : 3
மான் விழி சுசீலாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் எண்ணுக்கு தொடர்ந்து அழைப்பு வந்துக் கொண்டிருக்க அதை எடுக்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தாள்.
அதை கவனித்தவர், " ஏன்மா போன் வந்துட்டே இருக்கு அதை எடுத்து பேசு" என்றார்.
"இல்லைமா பரவாயில்லை " என்று சொல்லி வாய் மூடும் முன்னே மீண்டும் அழைப்பு வர அவர், "போ மா அதை எடுத்து பேசிட்டு வா" என்றார்.
அவர் சொல்லுக்கு மரியாதைக் கொடுத்து வேறு வழியில்லாமல் அலைபேசியை வேகமாக எடுத்துக் கொண்டு அங்கிருக்கும் பால்கனிக்கு சென்று அடித்துக் கொண்டிருந்த போனை வேண்டா வெறுப்பாக எடுத்து காதில் வைத்து, "சொல்லுமா இப்போ தானே வந்தேன் அதுக்குள்ள ஏன் இப்படி கால் பண்ணிட்டே இருக்க," என்று சிடுசிடுத்தாள்.
"ஏய் நான் என்ன சொல்ல வரேன் கொஞ்சம் காது குடுத்து கேட்டுட்டு அப்பறம் பேசு" என்றார் அவளின் அன்னை மீனாட்சி!!
"சரி என்ன சொல்ல வந்தீயோ சொல்லிட்டு சீக்கிரம் போனை வை எனக்கு வேலை இருக்கு" அவரை பேசவிடாமல் பரபரப்பாக பேசினாள்.
"அது ஒன்னும் இல்லை டி உன்னை நாளைக்கு ஈவ்னிங் பொண்ணு பார்க்க வரேன்னு சொன்னாங்க இல்லை அவங்க அவங்க " என்று இழுத்தார்.
"என்ன அவன் செத்துட்டானா" என்றாள்.
"ஏன் டி உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா டி" என்றார்.
"இது மட்டும் சரியா சொல்லு," ' நான் தான் கல்யாணம் வேண்டாம் சொன்னா அதை மட்டும் கேட்காத' என்று தனக்குள் முணுமுணுத்தாள்.
"அது எப்படி விட முடியும்" என்று அந்த பக்கம் கத்தினார் அந்த கத்தலில் அமைதியானவள், " அம்மா இப்ப எதுக்கு இப்படி கத்துற இப்ப என்ன நான் நாளைக்கு ஈவினிங் பொம்மை மாதிரி ரெடியாகி வந்து நிக்கணும் அவ்வளவு தானே" என்று சலித்துக் கொண்டு கூறினாள்.
அந்த சலிப்பில் அவரும் அமைதியாகி விட்டு, " இங்க பாரு விழிமா இதெல்லாம் இப்ப கஷ்டமா தான் இருக்கும் பின்னாடி என் குடும்பம்னு சொல்லுவ பாரு அப்ப தெரியும் நாங்க ஏன் இப்படி அடிச்சிக்கிட்டோம்னு, "என்று அவர் பேசி முடிப்பதற்குள், "அம்மா தேவை இல்லாம பேசாத எத்தனை மணிக்கு இருக்கணும் மட்டும் சொல்லு அதுக்கேத்த மாதிரி ஹாஸ்பிடல்ல சொல்லணும்," என்றாள்.
"அது தாண்டி நான் சொல்ல வந்த நீ எங்க என்ன சொல்ல விட்ட காலைல 10 மணிக்கு அவங்க இருப்பாங்க நீ அதுக்கு ஏத்த மாதிரி வந்துடு," என்றார்.
"அம்மா ஈவினிங் தான சொன்ன இப்ப என்ன மார்னிங்ன்னு சொல்ற" என்று அவள் மீண்டும் கோவப்பட்டாள்.
"இங்க பாரு விழி அவங்களுக்கு ஏதோ வேலை இருக்காம் அதனால அவங்க காலைல வரேன்னு சொல்லிட்டாங்க நீ வந்து சேர்ந்திடு," என்றார்.
"எனக்கு டியூட்டியே பத்து மணிக்கு தான் முடியுது நான் பிளைட்ல வந்தா கூட வர முடியாதுமா" என்று சிணுங்கி கொண்டு சொன்னாள்.
"பெர்மிஷன் கேட்டு வந்துரு நான் வைக்கிறேன் வரலைனா உங்க அப்பா திட்டுவார் எனக்கு எதுவும் தெரியாதுப்பா" என்று இவள் சொல்வதை கேட்காமல் அவர் அழைப்பை துண்டித்து விட்டார்.
அவருக்கும் மாலை அவள் வேலைக்கு வரும் போதே தெரியும் அவர்கள் காலை தான் வருகிறார்கள் என்று அதை வீட்டிலேயே சொன்னால் காலுக்கு சலங்கை கட்டி விட்டது போல் வீடே இரண்டாகும் வரை ஆடுவாள் அதனால் தான் நேரம் பார்த்து காய் நகர்த்தி விட்டார்.
மான் விழி வீட்டிற்கு ஒரே மகள் பெற்றோர்கள் என்றால் உயிர் அவள் ஆசை பட்டது போலவே மருத்துவர் ஆக்கி விட்டனர் எல்லா பெற்றோர்களும் ஆசைப்படுவது போல தன் மகளுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பேராசை ஆனால் அவளுக்கு இந்த திருமணம் என்ற வார்த்தையை கேட்பது விட பாகற்காயை பச்சையாக சாப்பிட்டு விடுவாள் அந்த அளவுக்கு கசப்பு,
காரணம் அவளுக்கே விளங்கவில்லை
அழகில் ஒன்றும் குறைவு இல்லை, மாநிறம் என்றாலும், பெயருக்கு ஏற்றார் போல் மான் போன்ற கண்கள் எடுப்பான மூக்கு, சிவந்த அதரங்கள் அந்த அதரத்தின் மேலிருக்கும் சிறிய மச்சமும், அவளின் இடை வரை உள்ள கூந்தலை அள்ளி எப்போதும் ஒரு குதிரைவால் போட்டு இருப்பதும் கண்களில் அணிந்திருக்கும் கண்ணாடியும், பார்ப்பவர்கள் அனைவரும் அவளை ஒரு முறை திரும்பி பார்க்காமல் செல்ல மாட்டார்கள் அப்படி ஒரு அழகி!!
கல்லூரி படிக்கும் நாள் முதல் பல பேர் அவளிடம் காதலை சொல்லியும், "ஐ அம் நாட் இன்டெரெஸ்ட்டெட் " என்றுக் கூறி விடுவாள்.
காதல், கல்யாணம் என்றாலே என்னவோ கேட்க கூடாத வார்த்தை என்று காதை மூடிக் கொள்வாள்.
இங்கு அவர் போனை வைத்ததும் அங்கிருக்கும் பால்கனி கம்பியை தன் கால்களில் உதைத்து விட்டு, "ஏன் தான் இந்த அம்மா இப்படி என் உயிரை வாங்குதோ" என்று புலம்பி உதைத்த வேகத்தில் அவளின் மூக்கு கண்ணாடி கீழே இறங்க அதை சரி செய்து கொண்டு வேகமாக வரவும் செந்தூரன் தன் அன்னையை காண உள்ளே வருவும் சரியாக இருக்க அவன் மேல் மோதி நின்றாள்.
அவள் மோதியதும், " ஹலோ பார்த்து வர தெரியாது வாய் மட்டும் நல்லா காது வரைக்கும் பேசுற இல்ல" என்று சிடுசிடுத்தான்.
" தெரியாமல் இடுச்சிட்டேன் அதுக்கு ஏன்? இப்படி பேசுறீங்க, " என்றாள்.
"அதே மாதிரி தான் மத்தவங்க தெரியாம பண்ணதுக்கும் வாய் பேச கூடாது" என்றான்.
இதுவரை தன் அன்னையிடம் பேசியதிலிருந்தே வெளி வராதவள் இவனிடமும் வாய் கொடுக்க விரும்பாததால் கையெடுத்து கும்பிட்டு, "மன்னிச்சிடுங்க," என்றுக் கூறி தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு சுசிலாவிடம் வந்து, " அம்மா நாளைக்கு நான் எட்டு மணிக்கு எல்லாம் கிளம்பிடுவேன் உங்களுக்கு டிஸ்டார்ஜ் 10:00 மணிக்கு தான் நான் எல்லாத்தையும் எழுதி கொடுத்துட்டு போறேன் நான் எழுதி கொடுக்கிற மாத்திரைகளை எல்லாம் நீங்க கரெக்டா ஃபாலோ பண்ணிக்கோங்க குறைஞ்சது உங்கள பாக்குறதுக்காவது ஒரு ஆள் வச்சுக்கோங்க அம்மா, நாம நல்லா இருந்தா தான் மத்தவங்களை பார்க்க முடியும், " என்றாள்.
அவள் அப்படி சொன்னதும் மீண்டும் தன்னை தான் குத்தி காட்டுகிறாள் என்று தவறாக புரிந்துக் கொண்ட செந்தூரன், "ஏன் நாங்க எல்லாம் சரியா பாத்துக்கலன்னு இப்ப என்ன திரும்பவும் வம்புக்கு இழுக்கிறியா,," என்றான்.
அவள் அவன் புறம் திரும்பி இடுப்பின் மேல் கை வைத்து ஒரு பெருமூச்சு விட்டு, "அப்படி நீங்க நினைச்சா உங்க வேலை எல்லாம் விட்டுட்டு வீட்டுல இருந்து உங்க அம்மாவை பார்த்துக்கோங்க," என்றாள்.
அவன் அவள் இடுப்பில் இருக்கும் கையைத் தட்டி விட்டு, "எங்க அம்மாவை எப்படி பார்த்துக்கணும் எனக்கு தெரியும் நீ உன் வேலையை மட்டும் பாரு ஒரு டிஸ்டார்ஜை கூட இருந்து பாக்குறதுக்கு முடியல நீ பேசுற பேச்சு," என்றான்.
"ஹலோ நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் ஒர்க் பண்ற உங்ககிட்ட ஒன்னும் ஒர்க் பண்ணல," என்று இவளும் வீம்புக்கு பேசினாள்.
அதில் கடுப்பாகி அவன், " ஏய்" என்றதும், " செந்தூரா விடுப்பா அந்த பொண்ணு என் நல்லதுக்கு தான சொல்லுது அதுக்கு தான் சொல்றேன் நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை தனியா பார்த்துக்கொள்வதற்கு என்று ஒரு ஆள் தேவைப்படாது இல்ல, " என்று சொன்னதும், " அம்மா நீங்க எப்ப பார்த்தாலும் இதிலேயே நிக்காதீங்க, " என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியே சென்று விட்டான்.
சுசீலா போன அவரையே பார்த்துக் கொண்டிருக்க, "அம்மா அம்மா," என்று அழைத்தாள். மான் விழி
அவள் புறம் திரும்பி, "சொல்லுமா," என்றார்.
" உங்க கை குடுங்க பிபி செக் பண்ணிடுறேன், உங்க ரிப்போர்ட் எல்லாம் சரியா எழுதி வச்சுட்டேனா நாளைக்கு சீக்கிரமா போக எனக்கு வசதியா இருக்கும்" என்று அங்கு நடந்ததுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தன் வேலையில் மும்பரமானாள்.
போன் பேசுவதற்கு முன்பும் இப்போவும் அவளுடைய முகம் மாறியதை கண்டவர் "கேட்கலாமான்னு தெரியல என்னமா போன் பேசிட்டு கோவமா வந்த," என்றார்.
அவள் அவரிடம் எதுவும் சொல்லாமல், "ஒன்னும் இல்லை மா" என்றாள்.
"சரி நாளைக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா சீக்கிரமாவே போறியே" என்று கேட்டார்.
இவங்க எப்படியும் சொல்லாமல் விட மாட்டார்கள் என்று உணர்ந்தவள், "நாளைக்கு என்னை பொண்ணு பாக்குறதுக்கு வராங்களாம் முதல்ல ஈவினிங் தான் வருவதா சொன்னாங்க இப்போ அவங்களுக்கு வேலை இருக்காம் அதனால் மார்னிங் வராங்களாம் அதுக்காக எங்க அம்மா வர சொல்லி கொஞ்சம் டார்ச்சர் வேற ஒன்னும் இல்ல," என்றாள்.
"நல்ல விஷயம் தானே மா அப்போ மாப்பிள்ளை உனக்கு புடிக்க என்னோட வாழ்த்துக்கள் மா,"என்றார்.
"இதுக்கு அப்படியே இந்த கல்யாணம் நின்னுடனும் வாழ்த்துங்க ரொம்ப நல்லா இருக்கும்," என்றாள்.
"ஏன்மா கல்யாணம்னா உனக்கு பிடிக்காதா"
" எனக்கு பிடிக்காதுமா நாளைக்கு வரவனை எப்படி வேண்டான்னு சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்" என்று கூறினாள். இதைக் கேட்டவருக்கு அதிர்ச்சி தான் வந்தது.
"என்னமா நீயும் இப்படி தான் இருக்க என் பையனும் அப்படி இருக்கான். இந்த காலத்து பசங்கள் எங்க மனக் கஷ்டத்தை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க," என்று நொந்து கொண்டார்.
"உங்களோட கஷ்டத்த மட்டும் பாக்குறீங்களே எங்களோட விருப்பம்ன்னு ஒன்னு இருக்கு அதை ஏன் பார்க்க மாட்டேங்குறீங்க, உங்க பையன் எப்படி இருந்தாலும் அவரோட இந்த விருப்பம் கரெக்ட் தானே கல்யாணம், இந்த குழந்தை பெத்துக்கிறது இதெல்லாம் சுத்த மனசு கோளாறான விஷயம் தான், " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு பெரு மூச்சு விட்டு, மெல்ல கண்களை மூடினார்.
அவரிடம் பேசி விட்டு தன்னறைக்கு வந்து சுத்தப்படுத்திக் கொண்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்து, நாளை வரவிருக்கும் மாப்பிள்ளையை எப்படி விரட்டுவது என்று யோசிக்க தொடங்கினாள்
ஆனால், அது கிடைக்கவேயில்லை....
மறுநாள் காலை விடிந்து தன் வீட்டிற்கு சென்று தன்னை அலங்காரம் பண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தாள்....
வந்த மாப்பிளை அவள் சொன்னதைக் கேட்டு தனக்கு என் பெண் பிடிக்கவில்லை என்று ஓடி விட்டான்.
அப்படி என்ன செய்தாள் பார்க்கலாம்