நின் மத்தம் : 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 57

New member
May 22, 2026
29
21
3
சுசீலாவிடம் தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிளையை ஓட விட்டக் கதையை சிரித்து மகிழ்ச்சியாக கூறியவளிடம், "என் பைனைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்றுக் கேட்டார்.

அவர் கேட்ட அந்தக் கேள்வியில் அவள் சிரிப்பு அப்படியே நிறுத்தி விட்டு தன் அகண்ட கண்களை மேலும் விரித்து, "மா என்ன சொல்லுறீங்க நானே எங்க அம்மா கல்யாணம் பண்ண சொல்லி ட்ராச்சர் பண்ணுறாங்கன்னு தான் அங்கிருந்து எஸ்கேப் ஆகி இங்க வந்தேன் நீங்க என்னை உங்க பையனை கல்யாணம் பண்ண சொல்லி அதை விட பெரிய படுகுழியில் விழ வைக்க பாக்குறீங்க," என்றுக் கேட்டாள்.

"என்னமா படுகுழின்னு எல்லாம் சொல்ற," என்று சோகமாகக் கேட்டார்.

"ஆமா பின்ன உங்க பையனை பத்தி உங்களுக்கே நல்லா தெரியும் அவரு எப்படின்னு அவரை நைசா என் தலையில் கட்டப் பாக்குறீங்களே!" என்று சிரித்துக் கொண்டே வார்த்தையில் விஷ ஊசியை மெல்ல ஏற்றி விட்டாள்.

சிரித்துக் கொண்டே ஏற்றினாலும் விஷம் ஏறத் தானே செய்யும் ஆனால் அந்த வலியை வெளியே காட்டாமல் புன்னகை செய்துவிட்டு, "என் பையன் ஒருத்தர் மேல அன்பு அவ்வளவு சீக்கிரம் வைக்க மாட்டான். வைத்தால் எப்போதும் மாற மாட்டான்.

அது பத்தி எல்லாம் உனக்கு இப்போ புரியாது இதோ பாரு உனக்கும் அன்பு பாசம் அப்படிங்கிற அந்த பந்தத்தில் இணைய விருப்பமில்லை என் பையனுக்கும் அதில் பெருசா விருப்பம் இல்லை ரெண்டு பேரும் ஊருக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க வாழலாம் உனக்கு என்னலயோ என் பையனாலயோ எந்த தொந்தரவும் இருக்காது " என்றுக் கூறினார்.

அவள் "அது எப்படி என்னை தொந்தரவு பண்ண மாட்டாருன்னு சொல்றீங்க" என்று கேட்டாள்.

"அது என்னால கண்டிப்பா சொல்ல முடியும் உனக்கும் ஒரு தேவை இருக்கு எனக்கும் ஒரு தேவை இருக்கு அதை இப்படி சரி பண்ணிக்கலாம் இன்னும் சொல்ல போனால்,

என்னை விட உனக்குத் தான் அதிகம் இருக்கு இந்த மாப்பிள்ளை போனா இன்னொரு மாப்பிள்ளை கூட்டிட்டு வந்து நிறுத்துவாங்க அதுக்கு நீ உன்னை மாதிரி இருக்கிற ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு தான் பிரச்சனை இல்ல,

உன் வீட்டில் இருந்து வர மாதிரி எங்க வீட்ல இருந்து வர போற உங்க அப்பா அம்மாவுக்கும் உனக்கு கல்யாணம் பண்ணி வச்ச திருப்தி இருக்கும் எனக்கு என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச திருப்தி இருக்கும் அதுக்கப்புறம் நீங்க சேர்ந்து வாழ்வதும் வாழாமல் போறதும் உங்களோட விருப்பம்," என்றார்.

அவள் அதற்கு, "உங்க பையனை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்லை அவரு ஒரு கோர்ட்டு போட்ட கொரிலா எனக்கு அவர் வேணவே வேணாம் நான் அதுக்கு எங்க அம்மா கிட்ட திட்டு

அடியே வாங்குகிறேன் அதுவும் இல்லாம என்னை பார்க்க வர மாப்பிள்ளை எப்படி துரத்தி என் வாழ்க்கை பார்க்கனும்மு எனக்கு தெரியும் நீங்க ஒன்னும் ஹெல்ப் பண்ண தேவையில்லை நீங்க எனக்கு பேஷண்ட் அப்படி மட்டும் இருங்க," என்று கொஞ்சம் முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டு கை எடுத்துக் கும்பிட்டு விட்டு சென்று விட்டாள்.

சுசிலாவிற்கு தான் அவமானம் ஆகவும், மேலும் மனதில் இன்னும் ரணம் கூடியதாகவும் இருந்தது. ஏனென்றால் அவர் மனதில் இவள் தன் மகனுக்கு சரியாக வருவாள் என்று தோன்றியது அதுபோக அவன் சொல்லும் கண்டிஷனுக்கு ஏற்றவளாகவும் இவள் இருந்தாள்.

இப்போது இருவரும் வெவ்வேறாக இருந்தாலும் காலம் அவர்களை அன்பு இன்னும் வலைக்குள் சிக்க வைக்கும் என்று ஆணித்தரமாக நம்பினார்.

ஆனால் அவள் இப்படி சொன்னது ஒரு மாதிரியாகி விட லேசாக கண்கள் கூட கலங்கியது அப்போது செந்தூரன் வந்து, "என்னம்மா அந்த பொண்ணு உங்க உடம்பு ஏதும் பிரச்சனைன்னு ஏதாவது சொல்லிடுச்சா அழுதுட்டு இருக்கீங்க," என்று கேட்டான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல கண்ணா வா போகலாம்" என்று சாதாரணமாக அழைத்துக் கொண்டு வந்தார்.

ஆனால் அவர் வார்த்தையில் உள்ள சாதாரணம் முகத்தில் இல்லை என்பது புரிந்தது அவள்தான் தன் தாயை ஏதோ சொல்லி இருக்கிறாள் என புரிந்து கொண்டு, "அந்த டாக்டர் உங்களை ஏதாவது சொன்னாளா அம்மா " என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

"அது எல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா, உனக்கு ஏத்த மாதிரி நீ கேக்குற கண்டிஷனுக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணு கேட்ட இல்ல அது அந்த பொண்ணு தான் அந்த பொண்ணு தான் உன்னோட வருங்கால மனைவி இதுல எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.

"அந்த பொண்ணு ஒத்துக்கிட்டாளா!" என்று கேட்டான்.

"கண்டிப்பா ஒத்துக்குவா" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

"இவ்வளவு சீக்கிரம் எப்படிமா கண்டுபிடிச்சீங்க " என்று கேட்டான்.

"அதெல்லாம் உனக்கு தேவையில்ல உன்னோட கண்டிஷனுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு, நீ கேட்டதை நானும் கொடுத்துட்டேன் நான் கேட்டது நீ கண்டிப்பா செய்யணும் செந்தூரா இதுல எந்த மாற்றமும் இருக்கக்கூடாது அந்த பொண்ணு தான் எனக்கு மருமகளா வரணும்" என்று கூறிவிட்டு காரில் ஏறி ஜம்பமாக அமர்ந்து கொண்டார்.

'எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லி தான் இந்த மாதிரி ஒரு கண்டிஷன் போட்டேன் அவ எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கைக்கு ஒத்துக்கிடணும் நிச்சயம் என்கிட்ட இருக்குற பணத்துக்கு தான் ஒத்துக்குவா ஒரு வேளை என்னை கல்யாணம் பண்ணி வரட்டும் அப்போ அவளுக்கு இருக்கு' என்று நினைத்துக் கொண்டே வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

இவளுக்கு அவரை அப்படி பேசியது ஒரு மாதிரியாகி போக, தன் அறைக்கு வந்து அமைதியாக அமர்ந்து கொண்டாலும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போனது அதன் காரணம் தெரியாமல் போக அப்படியே அமர்ந்திருந்தவளின் சிந்தனையை, " டாக்டர் ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்திருக்கு நீங்க சீக்கிரமா வந்து பாருங்க" என்று செவிலியரின் குரல் மெல்ல எழுப்பியது.

தனக்குள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் மருத்துவர் நோயாளிகள் வந்தவுடன் முதலில் அவர்களுக்கு தான் முன்னுரிமை என்று விரைவில் ஓடி வந்து பார்க்க அங்கு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் வந்திருந்தது

அவளுடைய தந்தையின் நண்பன், தந்தையின் நண்பன் என்றாலும் வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று அழைத்ததால் அவரின் மேலும் அவளுக்கு அன்பு அதிகம் என்பதால், அதிர்ச்சியாகி அவரை அழைத்து வந்த தன் தந்தையிடம், "என்னாச்சுப்பா" என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்லமா நிறைய ஸ்ட்ரெஸ்னால ஹார்ட் அட்டாக் வந்திருக்கு அதுக்கான ட்ரீட்மென்ட் என்னனு பாரு" என்று சொன்னதும் உடனடியாக இதய மருத்துவரை வரவழைத்து வேகமாக மருத்துவம் பார்த்தாள்.

அவரை உள்ளே அனுமதித்து விட்டு தன் தந்தையிடம், "அப்பா மாமாக்கு அட்டாக் வர அளவுக்கு என்னப்பா ஆச்சு ஏன் இப்படி ஆனார்," என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்லை மா அவனுளுடைய பொண்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுனால அதை பத்தி யோசிச்சு யோசிச்சு இந்த மாதிரி ஆயிட்டான்மா, " என்றார்.

அந்த வார்த்தையில் தன் தந்தையை வேகமாக திரும்பி பார்த்து மீண்டும் அமைதியாகிவிட்டாள்.

சிறிது நேர அமைதிக்கு பிறகு "என்னோட நிலைமையும் கூடிய சீக்கிரம் இப்படித்தான் ஆகுமானு தெரியல, " என்று சொல்லிவிட்டு அவர் அமைதியாக அமர்ந்து கொண்டார்.

அந்த வார்த்தை அவளை ஏதோ செய்ய, அவரிடத்தில் தன் தந்தையை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாமல் போகவும் மெல்ல அவரை வந்துக் கட்டிக் கொண்டாள்.

அவர் அவளை மெல்ல வருடிக் கொடுத்து, "நான் பயமுறுத்த இப்படி சொல்லலாமா, எனக்கு தோணுதோ அதை தான் நான் சொன்னேன்," என்றார்.

"உங்களுக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன் பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா ஆனால் நான் சொல்ற மாப்பிள்ளையை தான் நீங்க கட்டி வைக்கணும்" என்றாள்.

வேண்டாம் என்று சொன்னவள் இன்று தான் சொல்லும் மாப்பிள்ளையை கட்டி வைக்க வேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஆனந்தமாக இருந்தது.

"நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதே பெரிய விஷயமா நீ யாரை சொல்றியோ அவங்களுக்கே நான் உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று கூறினார். அவள் தன் தந்தையின் தோளில் இன்னும் வாக சாய்ந்து கொண்டாள்.

அவளின் தலையை மெதுவாக வருடி "அந்த பையன் யாரு மா " என்று கேட்டபோதுதான் செந்தூரன் முகம் நினைவுக்கு வந்து சுசிலாவை தான் அவமானப்படுத்தி அனுப்பியது ஞாபகத்திற்கு வந்தது சட்டென விலகி நின்று, ' ஐயோ! அந்த அம்மா கிட்ட நம்ம ஒரு மாதிரியா பேசி அவங்கள இன்சல்ட் பண்ணி அனுப்பிட்டோமே இப்ப எப்படி போய் சொல்றது,' என்று யோசித்தாள்.

அவள் யோசனையில் இருக்க "என்னாச்சும்மா" என்று மீண்டும் கேட்டார்.

அவள் "அமைதியாக ஒன்றும் இல்லை பா நான் நாளைக்கு டியூட்டி முடிச்சுட்டு வரும்போது அவங்க அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் நீங்களே பாருங்க அவங்களே எல்லாரும் விவரமும் சொல்லுவாங்க, எனக்கும் ஒன்னும் தெரியாது" என்றாள்.

அவர் ஏதோ ஒன்றை புரிந்து கொண்டு, " சரிம்மா அப்படித்தான் செய் அவனுக்கு என்ன ஆச்சுன்னு போய் பார்க்கலாம் வா, " என்று இருவரும் காத்திருக்க அப்போது மருத்துவர் வெளியே வந்து, "அவருக்கு ஒன்னும் இல்ல சாதாரண ஹார்ட் அட்டாக் தான் ஆஞ்சியோ மட்டும் பண்ணி இருக்கோம் பயப்பட ஒன்றும் இல்லை," என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அது கேட்டவுடன் தான் இருவருக்கும் உயிரே வந்தது... " சரிமா நான் அவங்க வீட்டுக்கு சொல்லிவிட்டு அம்மாகிட்டயும் நீ சொன்னதெல்லாம் சொல்லிடுறேன் நீ இவரை கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்" என்று அவர் சென்று விட்டார் அதன் பின் அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்து உணர்ச்சிவசப்பட்டு ' அப்பா கிட்ட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோமோ ' என்று யோசித்தாள்.

அன்று செந்தூரன் அவன் அன்னையிடம் தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வர அவரும் என்னை மாதிரி தான் இருப்பார். அதனால எங்க ரெண்டு பேருக்குள்ள சரியா தான் இருக்கும் நான் நானா இருப்பேன் அவர் அவரா இருப்பார் சரியான முடிவுதான் ஒரு வருஷம் கழித்து விவாகரத்து வாங்கி ஒத்து வரலன்னு வெளியே வந்துடலாம் சிம்பிள் என்று தோளை குலுக்கி விட்டு தன்னிடத்திற்கு சென்று கொண்டு விட்டாள்.

மருத்துவமனையில் சுசிலாவின் வீட்டு முகவரியும் தொலைபேசி எண்ணும் வாங்கிக் கொண்டு அந்த வீட்டு வாசலில் சென்று நின்றாள்.

மான் விழியின் பேச்சுக்கு இணங்கி அவள் வீட்டுக்கு வந்து செந்தூரனை பற்றிய ஒரு உண்மை சொன்னதுக்கே சுந்தரம் வெளியே எழுந்து போங்கள் என்று கத்தி விட்டார் அப்படி என்ன சொல்லி இருப்பார் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்....
 
Last edited by a moderator:

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
383
83
Chennai
அச்சோ இவர் என்ன சொன்னாருனு தெரியலையே.....
இந்த அம்மாவும் அவனை போலவே இருக்கு.....
ஆன இவன் தப்பா நினைச்சி இருக்கான் அவளை