மான் விழி தன் தந்தையிடம் திருமணம் செய்துக் கொள்வதாக ஒத்துக் கொண்டு மருத்துவமனையில் சுசிலாவின் தொலைபேசி எண்ணும் முகவரியும் சேகரித்து கொண்டு செந்தூரனின் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.
அங்கு வந்தவளை கண்டு கொண்டவர் "உள்ளே வா மா என்ன விஷயமா வந்திருக்க," காரணம் தெரிந்தும் அவள் வாயில் இருந்து வர வேண்டும் என்பதற்காகவே கேட்டார்.சுசீலா!
அவளும் சளைத்தவள் இல்லையே "நீங்க சொன்னதுக்கு நான் சம்மதிக்கிறேன் ஆனால், என்னை உங்க பையன் கூட சந்தோஷமா வாழனும் குழந்தை பெத்துக்கனும்னா சொல்லி கட்டாயப்படுத்த கூடாது," என்று நிபந்தனைகளை அடுக்கினாள்.
தனக்கடுத்து தன் மகன் தன் மகனுக்கு அடுத்து அவனுடைய மகன் என்று வம்சம் வளருவதற்கே இவள் முட்டுக்கட்டை வைக்க நினைக்கிறாள் அதை நினைத்து அவருக்கு வருத்தமாக இருந்தாலும் இப்போதைக்கு தன் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் அப்படி நடந்தால் அவர்களின் வாழ்க்கை ஒரு நாள் நிச்சயம் சிறப்பாக அமையும் என்று அவர் மனம் கூறியதால், "நான் எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன்" என்றார்.
"இதை நான் எப்படி நம்புறது" என்று கேட்டாள்.
அவளை இப்போது வாயடைக்க வேண்டும் என்பதால், "நான் சொல்றத சொல்லிட்டேன் நம்புவதும் நம்பாததும் உன்னோட விருப்பம் நம்புவதாக இருந்தால் அடுத்தது என்ன ஆகணுமோ அதை பார்க்கலாம் நம்பளைனா நான் ஒன்னும் பண்ண முடியாது," என்று வீம்பாக சொன்னார்.
தான் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்பட்டு வருவார் என்று வந்த மான்விழிக்கு அவர் வீம்பாக சொல்லவும், 'ஐயையோ இவங்க என்ன இப்படி சொல்றாங்க இப்போ இவங்கள விட்டா நமக்கும் வேற வழி இல்ல அதனால மான் விழி சைலன்ட்டா கால விழுந்திரு ' என்று மனதிற்கு சொல்லிக்கொண்டு,
" சரிங்க அம்மா நான் எல்லாத்துக்கும் ஒத்துக்குறேன் நம்பறேன் எங்க அப்பா கிட்ட நைட்டு நான் இதைப்பற்றி பேசினேன் ஆனால உங்க பையனை பத்தி கேட்டாரு எனக்கு எதுவுமே தெரியாது இல்ல அதனால் நீங்க வந்து நார்மலா பொண்ணு கேக்குற மாதிரி கேளுங்க" என்று தயங்கி தயங்கி சொன்னாள்.
"அப்படியா சரிமா இரு நான் ரெடி ஆகி வரேன் ரெண்டு பேரும் ஒன்னாவே போயிடலாம் நேரத்தை வீண் பண்ண வேணாம்" என்று சொல்லி சென்று விட்டார்.
அவளும் அமைதியாக அமர்ந்து அந்த பிரம்மாண்ட வீட்டை ஒரு முறை தன் கண்களை சுழல விட்டு பார்த்தாள். 'வீடு நல்லா பெருசா தான் இருக்கு ஆனா ரெண்டு பேருக்கு வீடு தேவையா என்ன 'என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அப்போது வேகமாக படி இறங்கும் சத்தம் கேட்டது அந்தப் பக்கம் திரும்பினாள்.
அங்கு ஆறடி உயரத்தில், கரு நீல சட்டையும், வெண்மை நிற கால் சட்டையும் அணிந்துக் கொண்டு வேக வேகமாக வந்தான். செந்தூரன்
அவனின் செதுக்கி வைத்தார் போல் இருக்கும் உடல் வாகும், செந்நிற தேகம் அதற்கு ஏற்றார் போல் உடையும் , அவன் இறங்கி வந்த வேகமும், அவளை என்னவோ செய்ய தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் மீது ஆளைத் துளைக்கும் பார்வை விழ யாரென்று பார்க்க அவள் அங்கு அமர்ந்துக் கொண்டிருக்கவும் அவன் முகம் அவளை கண்டதும் கோபத்தில் சிவந்து, 'இவ எதுக்கு இங்க வந்தா இவளை முதலில் துரத்தி விட வேண்டும் ' என்று வேகவேகமாக வரவும் சுசிலா தன் அறையில் இருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது, " ரெடியாகி வந்துட்டியா செந்தூரா, " என்றார்.
அவன் அவளைப் பார்த்து பல்லை கடித்து விட்டு, தன் தாயின் புறம் திரும்பும் போது முகத்தை மாற்றிக் கொண்டு "அஹான் மா ரெடி ஆகி வந்துட்டேன் சாப்பிடலாமா" என்றான்.
"இன்னைக்கு ஒரு நாள் நீ எடுத்து போட்டு சாப்பிட்டு போப்பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு " என்று அவனிடம் சொல்லி விட்டு "வாம்மா போகலாம்" என்று அழைத்தார்.
'தனக்கு உணவு கூட எடுத்து வைக்காமல் அப்படி என்ன இவளுடன் அவசர வேலை' என்று யோசித்தவன், " இவ கூட என்னமா உங்களுக்கு வேலை," என்றான்.
அதைக் கேட்டவளுக்கு கோவம் வர, "ஹலோ என்ன இவ அவன்னு சொல்லுறீங்க," என்றாள்.
"ஏய், " என்று அவன் முடிப்பதற்குள்
"செந்தூரா நான் தான் நேத்தே சொல்லிட்டேனேப்பா இன்னும் உனக்கு விளக்கமா சொல்லனுமா" என்று சுசீலா கேட்டார்.
"இப்பல்லாம் நீங்க நல்லா பேச கத்துக்கிட்டீங்க மா செய்ங்க நீங்க நினைக்கிறது என்னைக்குமே நடக்காது " என்று சொன்னான்.
"அதையும் பார்க்கலாம் செந்தூரா நீ வா மா போகலாம்" என்று அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார்.
'ஒரு சாதாரண டாக்டர் இவ எப்படி என்ன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா என்ன பத்தி எல்லாமே தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கிறானா இவ பணத்துக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பா இவள் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்' என்று மனதில் நினைத்து ஒரு ஏகத்தாள புன்னகையை சிந்தி விட்டு, உணவு மேஜைக்கு சென்று தனக்கான உணவை சாப்பிட்டான்.
அவர் காரில் ஏறச் சொல்ல, "இல்லமா நான் வண்டில வந்து இருக்கேன் நீங்க என்ன பாலோ பண்ணிக்கோங்க" என்று சொல்லவும் அவரும் அவளை பின்தொடர்ந்து அவர் வீட்டிற்கு சென்றார்.
உள்ளே சென்றவள், "அம்மா அப்பா" என்று குரல் கொடுத்துக்கொண்டே செல்ல அவர் குரலுக்கு இணங்கி இருவரும் வெளியில் வந்தனர்.
சுசீலாவை அறிமுகம் செய்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு, "நீங்களே எல்லாமே பேசிக்கோங்க எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் போறேன்" என்று சொல்லி உள்ளே சென்றாள்.
சுசீலா எப்படி தொடங்குவது என்று தெரியாமல் சுற்றி சுற்றி பார்த்தவருக்கு அந்த வீடு சிறியதாக இருந்தாலும் அங்கே ஒரு அமைதியும் ஒரு ஆழ்ந்த அன்பும் இருப்பதை தெரிந்து கொண்டார்.
தன்னுடைய முடிவு சரிதான் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அவர்கள் இருவரும் இவரை பார்த்துக் கொண்டிருந்தனர் சுந்தரம் அதில் தெளிந்து, " மீனாட்சி போ அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்து தா, " என்று சொல்லவும்
அவர் மணக்க மணக்க டீயை கொண்டு வந்து கொடுத்தார் அதை வாங்கி கீழே வைத்தவர், " இப்போ டீ குடிக்கறதை விட முக்கியமான விஷயம் என்னன்னா என்னோட பையனுக்கு உங்க பொண்ணு கேட்டு வந்திருக்கேன், " என்று சொன்னார்.
"என் பொண்ணு நேத்து என்கிட்ட சொல்லிட்டாங்க நீங்க மேற்கொண்டு என்ன பேசணும்னு பேசுங்க " என்று சொன்னார் அவர் தனக்கும் தன் கணவரும் பிரிந்து இருப்பதை சொல்லி முடித்தார்.
"அது எல்லாம் பரவாயில்லங்க உங்க குடும்ப விஷயம் தம்பிய பத்தி மட்டும் சொல்லுங்க " என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
அவரும் தயங்கிக் கொண்டு, "என் பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது " என்று சொல்லவும் சுந்தரம் கோபமாக "அப்ப என் பொண்ணை இரண்டாவது கல்யாணத்துக்கு கேட்டு வந்திருக்கீங்களா இது அவளுக்கு தெரியுமா இல்லை ஏமாற்றிக் கூட்டிட்டு வந்து இருக்கீங்களா " என்று கேட்டார்.
"இல்லை உங்க பொண்ணுக்கு தெரியாது, அவளும் என் பையனும் காதல் எல்லாம் பண்ணல நான் உங்க பொண்ணோட பேசன்ட் எனக்கு அவளை பிடிச்சதுனால நான் தான் பொண்ணு கேட்டேன்,
உங்க பொண்ணோட குணமும் என் பையனோட குணமும் ஒரே மாதிரியா இருக்கு அதனால அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு நான் நம்புறேன். அதனாலதான் பொண்ணு கேட்டு வந்தேன்" என்று சொன்னார்.
"நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் ஒரு இரண்டாவது கல்யாணம் நான் எப்படி பண்ணி கொடுக்கிறது அவருக்கும் உங்க பையனுக்கு முதல் கல்யாணத்தில் என்ன பிரச்சனைன்னு எங்களுக்கு எப்படி தெரியும்" என்று கேட்டார்.
"ஒரு நிமிஷம் கோவப்படாம நான் என்ன சொல்ல வருகிறத முழுசா கேளுங்க கேட்டு முடிச்சிட்டு நீங்க எல்லாத்தையும் முடிவு பண்ணுங்க" என்று சொன்னார்.
அவர் வீட்டுக்கு வந்தவரை அவமதிக்கக் கூடாது என்பதற்காக "சரி சொல்லுங்க " என்று தன் பொறுமையை இழுத்து பிடித்து கேட்டார்.
அவர் பொறுமையாக கேட்டதால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது தன் மகனின் வாழ்க்கையில் நடந்தது என எல்லாவற்றையும் ஒருசேராக கூறி முடித்தார்.
அதைக் கேட்டவரின் கண்கள் தானாக கலங்கி கையெடுத்து கும்பிட்டு, "என்னை மன்னிச்சிருங்க என் பொண்ணுக்கும் இந்த மாதிரி ஒரு அதிர்ச்சியான சூழல் நடந்திருக்கு அதிலிருந்தே என் பொண்ணு இதுவரைக்கும் வெளிய கொண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் ஆனால் நீங்க அந்த வாழ்க்கையிலேயே இருந்திருக்கீங்க உங்க பையனும் அப்படி இருந்துருக்காரு எவ்வளவு வலிக்கும் எனக்கும் இப்போ இவங்களோட வாழ்க்கை நல்லா இருக்கும் நம்பிக்கை வருது நம்ம கல்யாணம் பண்ணி வைப்போம் " என்று சொன்னார்.
அவர் அப்படி சொல்லி மான் விழியின் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டு இருவருமாக ஒரு மனதாய் திருமண தேதியைக் குறித்து முடித்தனர்.
இருவருக்கும் அலாதியான மகிழ்ச்சியுடன் " இருந்து சாப்பிட்டுவிட்டு தான் போகணும், " என்று அன்பு கட்டளை இட அவரும் சிறிது நேரம் அமர்ந்தார்.
மீனாட்சி மடமடவென்று அடுக்களைக்குச் சென்று தனக்கு தெரிந்த சமையல் கலை வித்தை அத்தனையும் செய்து வடை, பாயாசத்துடன் ஒரு விருந்தே அமைத்து விட்டார்.
இவளும் குளித்து முடித்து ஒரு தூக்கமே தூங்கி எழுந்து வர, பாயாசம் வாசனை அவளை இழுத்தது, 'எப்படியோ நம்மளோட பிரச்சனையும் தீர்ந்தது' என்று அவளும் ஒரு கட்டி கட்டி விட்டு மீண்டும் உறங்கச் சென்று விட்டாள்.
அதன் பிறகு திருமண வேலைகள் மடமடவென்று நடந்தது.
இருவரும் எந்த ஒட்டுதலும் இன்றி எல்லா திருமண சடங்குகளையும் நடத்திக் கொண்டனர்.
திருமண நாளும் வர, அவள் ஊதா நிற சேலையில் அழகாய் வந்தாள்.
அங்கே மணமேடையில் அவனும் பட்டு வேட்டி சட்டையில் ஆண் மகனுக்கு உரித்தான தோரணையில் இருக்க இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்த நிமிடமே, ஒரு வெட்டு வெட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
ஐயரும் இவர்கள் செய்வது எல்லாம் கண்டும் காணாமல் மந்திரங்களை ஓதி மங்களநானை கொடுக்க அவன் பெரியவர்களின் சம்மத்துடன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன் மனைவியாக்கிக் கொண்டான்.
செந்தூரன்- மான்விழியின் திருமணம் இனிதே நடைபெற்று அடுத்தடுத்த சடங்குகளும் இனிதே முடிந்து அவர்களுக்கு சாந்தி முகூர்த்த ஏற்பாடு செய்ய ஒரே கொள்கையில் வெவ்வேறு திட்டத்துடன் சாந்தி முகூர்த்த அறைக்கு சென்றனர்.
என்ன செய்ய காத்திருக்கிறார்களோ பார்க்கலாம்....

Author: STN - 57
Article Title: நின் மத்தம் : 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.