• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 9

STN - 57

New member
மான் விழி அவள் போனை வாங்க அவன் உயர்த்திற்கு எட்டி வாங்கும் போது அவன் காலை மிதித்து விட்டாள். அவன் அப்போதும் தராமல் விளையாட்டு காட்ட இவள் மீண்டும் எட்டினாள். அப்போது கட்டிலில் கால் இடித்து அவன் விழ அவன் மேலே இவளும் விழுந்தாள்.

அவள் விழுந்த வேகத்தில் அவன் கைகள் தானாக அவள் இடையை பற்றி கொண்டது. அவளும் அவன் மேலே விழுந்ததில் சட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டாள் இருவரின் தேகமும் ஒன்றோடு ஒன்று இணைந்து அந்த கட்டில் மேலே விழுந்தனர்.

தான் கையில் வைத்திருந்த போனும் அந்த கட்டிலில் விழுந்து விட்டது. ஆனால், அதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லை...

அந்த அறையின் மலர்களின் மனமும் இரவின் தனிமையும், பால்கனியிலிருந்து வீசிய தென்றல் காற்றின் குளுமையும் அவர்களை ஏதோ செய்ய எவ்வளவு நேரம் அந்த மோன நிலையில் இருந்தனர் என்றே தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் தான் முதலில் தெளிந்து, "என்ன இப்படி புடிச்சிட்டு இருக்கீங்க என்னை முதலில் விடுங்க " என்றாள்.

"ஏய் நீதாண்டி என் மேல விழுந்து கிடக்குற ஏதோ, நீ கீழே ஏதாவது விழுந்துருவேன்னு புடிச்சா ஓவரா பண்ற எந்திரிடி மேல, "என்றான்.

"என்னால எந்திரிக்க முடியும் " என்று இவளும் வீம்புக்கு எழுந்து நிற்க அவன் விட்டதும் அவன் மேலேயே விழுந்து அவன் சட்டையின் மீது விழ அவள் இதழ் அவன் நெஞ்சின் மேலே பதிந்து முத்தமாக மாறியது.

அந்த முத்தம் அவனுக்கு வேறு பெண்கள் தரும் முத்தம் போன்று இல்லை இது ஏதோ அவனுள் மாயம் செய்தது அதில் ஒரு நொடி தடுமாறினாலும் அடுத்த நிமிடமே உடனே தூக்கி கீழே வீசி விட்டான்.

அவன் கீழே வீசிய வேகத்தில் தரையில் விழுந்தவள் "அம்மா " என்று அலறி இடுப்பை பிடித்துக் கொண்டு எழ முடியாமல் எழுந்து நின்றாள்.

அவள் வலியை கண்டு கொள்ளாமல், அருகில் வந்து தன் சுட்டு விரலை " நீட்டி இனிமே இந்த மாதிரி நடந்துகிட்ட உனக்கு அவ்வளவு தான்" என்றான்.

அவளுக்கு என்ன நடந்தது என்று புரியாமல் "நான் என்ன பண்ண நீங்க விட்டதால தானே அந்த மாதிரி நடந்துச்சு" பாவமாக கேட்டாள்.

"அது சரி உங்க பிளான் எல்லாம் எனக்கு தெரியாது கீப் டிஸ்டன்ஸ் வித் மீ " என்று சொல்லிவிட்டு, தலையணையை அவள் முகத்தில் மேலே வீசி எறிந்தான்.

"இப்படி வீசி எரிந்தால் நான் எங்க போய் படுக்கிறது," என்று கேட்டாள்.

"எங்கேயோ போய் படுத்து தொலை என்னைய விடு எனக்கு தூக்கம் வருது " எரிந்து விழுந்தான்.

"எனக்கு கீழ படுத்தா எல்லாம் தூக்கம் வராது நான் கட்டில் மேல தான் படுப்பேன்" என்று ஜம்பமாக ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

"ஏய் இங்க பாரு எனக்கும் கட்டிலில் படுத்தாத தூக்கம் வரும்" என்றான்.

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும் நான் எங்க வீட்டெல்லாம் விட்டுட்டு இங்க வந்து இருக்கேன் நான்தான் கம்பர்ட்டபிளா இருக்கணும் " என்றாள்.

"உங்க வீட்டை விட்டுட்டு யார் வர சொன்னது நீ போடி வெளியே" என்றான்.

"நான் இப்போ வெளியே போனா உங்க அம்மா உங்களை தான் கேள்வி கேப்பாங்க எனக்கு ஒன்னும் எந்த பிரச்சினையும் இல்லை" என்றாள்.

அம்மா என்று சொன்னவுடன் அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

இவள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படுத்து கண்களை மூடி தூங்குவது போல் மூடிக்கொண்டாள்.

அவனும் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தவனை கண்களை மெதுவாக திறந்து பார்க்க அவன் அமைதியாக இருந்தான்.

'அப்பாடா அம்மான்னு சொன்னவுடனே அமைதியாக இருக்கான் கொரில்லா இனிமே அதையே வச்சு மெயின்டெயின் பண்ணலாம் ' என்று நினைத்துக் கொண்டு கண்களை மூடி தூங்க அவனும் எங்கு சென்று படுப்பது வது என்று தெரியாமல் அங்கிருக்கும் சோபாவில் சென்று கை கால்களை குருக்கி படுத்துக் கொண்டான்.

அவள் நன்றாக உறக்கத்தில் சென்றிருந்தபோது நடுவில் ஒரு முறை எழுந்து பார்க்க அவன் சோபாவில் தன் கை கால்களை குறுக்கி கொண்டு படுத்திருப்பது பாவமாக தெரிந்தது.

அது மட்டும் இல்லாமல் ஏசியின் குளிர் வேறு அதிகமாக இருக்க போர்த்திக் கொள்ள ஒன்றுமில்லாமல் இருக்கவும் அவனுக்கு குளிரில் நடுங்க ஆரம்பித்தான்.

மனம் கேளாமல் போர்வையை கொண்டு போய் அவன் மேலே போர்த்தி விட்டு, ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்தால் அவன் தூங்குவது ஏதோ குழந்தை தூங்குவது போல இருந்தது.

அதைப் பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தன்னிச்சையாக அவள் கைகள் அவன் தலையை கோதிவிட்டு கழிவறைக்கு சென்றாள்.

குளிருக்கு அடக்கமாக போர்வை கிடைக்கவும் அதை போர்த்திக் கொண்டு நல்ல உறக்கத்திற்கு சென்றான்.

அவளும் கழிவறைக்கு சென்று விட்டு, கட்டில் மேலே வந்து படுத்துக் கொண்டாள்.

இருவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நல்ல உறக்கத்திற்கு செல்ல யாருக்கும் காத்திராமல் காலை பொழுது அழகாக விடிந்தது.

எந்த நேரத்திற்கு உறங்கினாலும், விடியற்காலையிலேயே எழுந்து கொள்பவன் இன்றைக்கும் எழுந்து கொண்டு பால் கனிக்கு சென்று அந்த ஐந்து மணி பனியின் ஏகாந்தத்தை ஒரு நிமிடம் ஆழ்ந்த மூச்சு எடுத்து சுவாசித்து விட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி முடித்துவிட்டு வந்து பார்க்கும்போதும் அவள் எழவில்லை....

அவளைப் பார்த்தவன் 'இந்த தூங்கு தூங்குறா இவளை எல்லாம் நம்பி எப்படித்தான் பேசண்ட் வராங்களோ தெரியல' என்று மனதில் நினைத்துக் கொண்டு குளியல் அறைக்கு சென்று தன் காலைக்கடன்களை முடித்து குளித்து கீழே வந்தான்.

வந்தவனை முதலில் மீனாட்சி தான் "வாங்க மாப்பிள்ளை" என்று அழைத்தார் அவர் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எண்ணி ஒரு சின்ன சிரிப்பை மட்டும் சிரித்து விட்டு, " அம்மா காபி கொடுங்க " என்றான்.

"அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க தம்பி அவங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் போட்டு தரேன்" என்றார்.

"இல்லை உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே காபி போட்டுக்குறேன்" என்று சமையல் அறைக்குள் சென்று அவனுக்கும் கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தான்.

அவனுக்கு திருமணம், முத்தம் என்பதில் மட்டும் தான் கசப்பான நிகழ்வுகள் நடந்ததால் அவனுக்கு வருத்தமே தவிர பெரியவர்களை அவன் எப்போது மதிக்க தவறியது இல்லை...

அவன் காபியை கொண்டு வந்து கொடுத்ததும், " உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்" என்றும் மீனாட்சி கேட்டுக் கொண்டே எடுத்தார்.

" பரவாயில்லை நீங்களும் எனக்கு அம்மா மாதிரி தான் இதில் என்ன இருக்கு" என்று சொல்ல அவருக்கோ மனம் கொள்ள மகிழ்ச்சியில் வாங்கி அதனை அருந்திக் கொண்டே மெல்ல தயங்கி கொண்டு, " அவ இன்னும் எழுந்து வரவில்லை தம்பி என்ன பண்ணிட்டு இருக்கா " என்று கேட்டார்.

"அவ நல்லா தூங்கிட்டு இருக்கா எழுந்து வருவா " என்று சொன்னான்.

அவள் தன் இடுப்பு வலியை பொறுத்துக் கொண்டு மெல்ல நொண்டிக்கொண்டே வந்து சோம்பலை முறித்து, " அம்மா காபி" என்றாள்.

அவள் கோலத்தைக் கண்டு கோவம் உற்றவர், " ஏண்டி வீட்ல இருந்தா தான் நேரத்துக்கு எழுந்து எந்த வேலையும் செய்யறது இல்லை... இங்க வந்து இதே மாதிரி செஞ்சா எப்படி" என்று கடிந்து கொண்டார்.

"இதுவும் வீடு தனமா சும்மா ஏன் என்னை போட்டு படுத்துற" என்றாள்.

" அடி வாங்க போற, ஒழுங்கா போய் குளிச்சு தெளிச்சுட்டு வா " என்றார்.

"முதல்ல காபி " என்றாள்.

"இல்லை முதலில் நீ பிரஷ் ஆகிட்டு வா" என்று சொல்லவும், அம்மா என்று தன் காலை உதைத்து விட்டு உள்ளே சென்றாள்.

அவள் செய்தது அவனுக்கு எரிச்சலை தந்தாலும் உதடுகள் மட்டும் தானாக சிரிப்பை தந்தது.

மூவரும் காபி குடித்து முடிக்கவும், அவள் குளித்து முடித்து வரவும், கோவில் சென்ற சுசிலா வீட்டுக்கு வரும் சரியாக இருந்தது.

இவன் சுசிலாவை பார்த்து "அம்மா எங்க அம்மா போயிருந்தீங்க காலையில சொல்லாமல் சரி எனக்கு ஆபீஸ் டைம் ஆகுது நான் கிளம்புறேன் உங்களுக்கு காபி வைத்து கிளாஸ்ல ஊத்திருக்கேன் குடிங்க " என்று சொல்லிவிட்டு, தன் பையை எடுக்க செல்லவும் கீழே இறங்கி வந்தவளின் மேல் மோதி நின்றான்.

அவள் அதில் முறைத்து தன் தலையை தேய்த்துக் கொள்ள... அவள் நெற்றியில் ஒற்றைத் துளி நீர் வழிய அதை வைத்த கண்கள் எடுக்காமல் பார்த்தான்.

அந்த நீர் துளியோ மெல்ல அவள் நெற்றியில் இருந்து மூக்கின் வழியே வந்து இதழைத் தொடும் போது, அவனுக்கு ரோஜா இதழில் பனித்துளி மெல்ல நழுவி வருவது போல் தெரியவும் அந்த நீரை தன் ஒற்றை விரல் கொண்டு துடைத்துவிட்டு அவளை திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.

இவளும் போகும் அவனையேப் பார்த்தாள்.

இவர்களின் இருவரின் தோரணைகளையும் சுசிலா பார்த்து கண்ணை காட்ட அவர்களும் கண்களை மூடித் திறந்தனர்.

அவனை திரும்பிப் பார்த்தவள் தன் அன்னையிடம் மீண்டும், "காபி கொடுங்கம்மா" என்று சிணுங்கிக் கொண்டே கேட்டாள்.

மீனாட்சி அதற்கு அமைதியாக இருக்க சுசிலா " இருமா நானே போட்டு தரேன் நீ உக்காரு," என்றார்.

"சரிமா" என்று அவள் அமைதியாக இருக்க, "அவங்க இப்பதான் வெளியே போயிட்டு வந்திருக்காங்க நீ அவங்களுக்கு போட்டுக் கொடு" என்றார்.

"மா," என்று ராகமாக இழுத்தாள்.

"பரவாயில்லை மா விடுங்க " என்றுக் கூறி சுசீலாவே சென்று தனக்கும் அவளுக்கும் காபியை தயாரித்துக் கொண்டு வந்துக் கொடுக்க, அதை ரசித்து ருசித்து குடித்துக்கொண்டிருக்கும் செந்தூரன் மடமடவென்று கீழே இறங்கி வந்து "அம்மா எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் கிளம்புறேன்" என்று சொல்லி அவர் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டான். அங்கு தனக்கு காத்திருக்கும் தலை வலி தெரியாமல்.....

இவளும் "எனக்கும் இன்னைக்கு முக்கியமான கேஸ் இருக்கு நானும் கிளப்புறேன் "என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

அப்படி என்ன அவனுக்கு தலை வலி காத்திருக்கிறது... பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்.....
 
Top Bottom