• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவின் அக ஒலி - 11

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 11

ஆரன் விஷ்வேஷ்வரனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த குருதேவ் வாயே திறக்கவில்லை, அவன் கண்கள் ஓரிடத்தில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. ஆரனும் அசரவில்லை அமைதியாக அவனைக் கவனித்தபடி தான் அமர்ந்திருந்தான்.

அந்நேரம் நிலாயினியிடமிருந்து அழைப்பு வர, "சொல்லுமா?" என எடுத்தான். சட்டென்று குருதேவ் கவனம் ஆரனின் மொபைலில் குவிந்தது.

"கிச்சன க்ளீன் பண்ணி வச்சுருக்கீங்க? இங்க காய்கறி, பலசரக்குன்னு ஒன்னுமே இல்ல, மதியத்துக்கு எதவச்சு சமைக்கிறதாம்?" என சமையலறையைச் சுற்றிப் பார்த்துக் கேட்க,

"கடை பக்கந்தான போய் வாங்கிட்டு வந்திடேன்டி" என்றான் அவன்.

"இங்க ஃப்ரிட்ஜ் கூட இல்ல, காயெல்லாம் வாங்கிட்டு வந்து எங்க வைக்க?"

"ஏன்டி ஊர் ஊரா சுத்துறவன் ப்ரிட்ஜயுமா தூக்கிட்டு திரிய முடியும்? என் ஒருத்தனுக்கு எதுக்குன்னு இதுவரை வாங்கல, இனி வாங்கி வைப்போம். நீ இப்போதைக்கு பக்கத்துல போய் இன்னைக்கு தேவைக்கு மட்டும் வாங்கிட்டு வந்திடு"

"ம்ம்ம் சரி" என ராகமாக இழுத்து, வாய்க்குள் எதையோ முனங்கியபடி வைத்துவிட்டாள்.

"கல்யாணம் பண்ணிக்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சுக்கோ மதுரா. இன்ஜார்ஜ் எடுத்ததும் ஆக்ஷன்ல தான்டா இறங்குறாங்க" என்றான் இங்கு திரும்பி மதுரனிடம்.

"நீங்க நல்லா பயந்துருப்பீங்க சார். நானும் நம்பிட்டேன். நீங்க மட்டும் குடும்பஸ்தனாகிட்டு ஹேப்பியா இருப்பீங்க என்னைய இந்தா இந்த நாதாரி மாதிரி சைகோ கூட குடும்பம் நடத்த விடுவீங்க. உங்க ப்ளான்லாம் எனக்கு இப்ப அத்துபடி ஆகிடுச்சு, நா சிக்க மாட்டேன். அடுத்த மாசமே சந்திராவ பாஸ் பண்ண வைக்கிறேன், அதுக்கு அடுத்த மாசம் கல்யாணம் பண்றேன், அடுத்த நாளே நானும் ஹனிமூன் போறேன்"

"விதி யார விட்டது. அப்புறம் அம்மா வலிக்குதே ஐய்யோ வலிக்குதேன்னு லீவு கேளு, மண்டையப் பிளந்துடுறேன்" என ஆரன் திட்ட, மதுரன் விழித்தான்.

"உன் பொண்டாட்டிய உனக்கு முன்னவே பொண்டாட்டியா பாத்தவன் நான்டா. அப்படிப்பட்டவகூட வாழ்ந்துட்டு என் முன்னவே பெருமை வேற பேசுற, அசிங்கமா இல்ல?" என நக்கலாக சிரித்தான் குருதேவ்.

"அஹான் அப்றம்?" என்றான் ஆரனும் நக்கலாக,

"சமாளிக்கிறியா? உள்ள எரியிது தான? ஆம்பளனா எரியணுமே?"


"உங்கம்மாட்ட வர்ற பேஷன்ட்டெல்லாம் பிள்ளை வேண்டி வந்து படுத்துருக்காங்கன்னு தெரிஞ்சும், வீடியோ எடுத்து பாத்தியே, ஒவ்வொரு பொண்ணுட்டையும் வேற வேறையா பார்த்த? அதே உடம்பு தான? அதே பிறப்புறுப்பு தான? முப்பது வருஷத்துக்கு முன்ன நீ பிறந்த அதே மாதிரி இடம் தான? அத வீடியோவா எடுத்துப் பாத்து, அத வச்சுப் பொண்ணுங்கள மிரட்டிருக்கியே அசிங்கமா இல்ல?" என்றான் சாவதானமாக.

"நா அப்படித்தான்டா பாப்பேன், இனியும் பாப்பேன், உன்னால என்னடா பண்ண முடியும்?"

"நாந்தான் உன் கண்ண நோண்டி காக்காய்க்குப் போட்ருவேனே அப்புறம் எப்படி பாப்ப? ஆமா உன்னால பாக்க மட்டுந்தான் முடியுமாமே, செயலுக்கு உள்ள பார்ட்ஸ்லாம் வேலை செய்யாதாமே கேள்விப் பட்டேன். உண்மையா?"

"ஏய்!" என அவன் எகிறவும், வேகமாக எழுந்த ஆரன், பளார் பளாரென்று நொடியில் நாலைந்து அடி வைத்துவிட்டான், "வீடியோவா அனுப்புற? எடிட் பண்ண கூட இனி தைரியம் வரக்கூடாது உனக்கு" என பட்டென்று அவனின் வலது கை விரல்களை எதிர்பக்கமாக மடக்கி ஒடித்துவிட்டான்.

"எதுக்குடா அடிக்குற, வலிக்குதுல்ல. கையையும் கட்டிப் போட்டுட்டு அடிக்குற நீ என்னைய ஆம்பளையான்னு கேப்பியா?"

"நா எப்ப உன்ன ஆம்பளயான்னு கேட்டேன்? அப்படி கேட்டு என்னைய மாதிரி இதோ மதுரன் மாதிரி ஆம்பளைங்கள எப்படி கேவல படுத்திப்பேன்? ஆம்பளனா யார் தெரியுமா நம்மகிட்ட உட்கார்ந்திருக்குற பொண்ணுங்க, அவங்களுக்கு நம்மள தெரியுமோ தெரியாதோ ஆனா அவங்களுக்குள்ள அவங்க சேஃபா ஃபீல் பண்ணணும். அந்த நம்பிக்கைய எந்த தனிமையிலையும் நாம குடுக்கணும். அம்மா, அக்கா, தங்கச்சி, மகள்னு என்ன சுத்தியுள்ள இந்த கேரக்டர்ஸ் எல்லாம் என்னால பெருமை படணும், படும். நா ஆம்பள. நீ?"

"சார் ஃவைப விட்டுட்டீங்க?"

"நீ வேறடா, நாந்தான் ஃப்ளோவா போயிட்ருக்கேன்ல?" என ஆரன் கடுப்பாக,

"இன்னும் வராத மகள சொல்றீங்க, அல்ரெடி வந்துட்ட லஷ்மி விட்டுட்டேங்களேன்னு ஞாபகம் படுத்துனேன்"

"இவங்களாம் நம்மட்ட பாதுகாப்ப எதிர்பாப்பாங்கடா, அந்த ஃவைப் கேட்டகரி இருக்கு தெரியுமா? அவங்க நம்மள மிரட்டி எடுத்துப்பாங்க. அந்த ஒரு கேரக்ட்டர் இருந்து மட்டும் நாம தான் நம்மள சேஃப் பண்ணிக்கணும். புரியுதா?"

"நாளே நாலு தான சார் ஆச்சு?"

"ஆமா ஆனாலும் குடும்பஸ்தன் ஆகிட்டேன்ல? நா தங்கமாடத்தி மகன்டா" என்றும் சொல்ல,

"ஆனா எனக்கென்னவோ லஷ்மிய நீங்க பயமுறுத்திட்டு இங்க வந்து கதைவிடுற மாதிரியே தோணுது சார்"

"நீ வேற ஏன்டா? கல்யாணத்துக்கு முன்னவே பயப்பட மாட்டா, இப்ப கைல பொண்டாட்டின்ற ஆர்டரோட இருக்கா, இப்பயா பயப்படுவா?"

"என்னைய விடுங்கடா" என கத்தினான் குருதேவ்.

"இவேன் மறுபடியும் கத்துறான்டா. இன்னும் ரெண்டு நாள் இங்கனயே கிடக்கட்டும். அந்த இருட்டு ரூம்லயே போட்டு அடைச்சிடு. தண்ணி கூட குடுக்காத" என சட்டையை சரிபண்ணிக்கொண்டு எழுந்துவிட்டான் ஆரன்.

"சார் சார் வேணா சார். விட்டுட்டுப் போயிடாதீங்க சார். நா எதுவுமே பண்ணல சார். இனி பண்ண மாட்டேன் சார். விட்ருங்க சார்" என சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு அழுதான் குருதேவ். அநியாயத்திற்கு உண்மையாக அழுபவன் போல கண்ணீரும் கொட்டியது.

"உன்னால எட்டுப் பொண்ணுங்க செத்து போச்சு எரும, சாதாரணமா விட்ருங்கன்ற?" என்றான் ஆரன்.

"நா யாரையும் கொல்லல சார்"

"இங்க பாரு. என்ன செஞ்ச என்ன நடந்ததுன்னு சட்டுன்னு சொன்னா வேலை முடியும். நீ வேற ஏதோ பிரச்சனைல இருக்கவன் மாதிரி தெரியுது. நீ முழு பைத்தியமா ஆகும் முன்ன உனக்கு வைத்தியம் பாக்கணும். இல்லனா இங்க தனியா இருக்க இருக்க சீக்கிரம் மென்டலாகி நீயும் அந்த பொண்ணுங்க மாதிரி தூக்குல தொங்கிடுவ. ஓகேவா உனக்கு?" என்றதும்,

"வேணா வேணாம். எனக்கு அப்படி நடக்க வேணாம். நா சாக மாட்டேன். வலிக்கும் வலிக்கும். நா அப்படி செய்ய கூடாது" என அவன் விடாமல் அனத்த,

"எனக்கு இவன் நடிக்குற மாதிரியே தோணுதுடா" என்றான் ஆரன் சலிப்பாக.

"கொஞ்சம் மரகழண்ட கேஸ் தான் சார்" என மதுரனும் சொல்ல,

"நீயே சமாளி. நா கிளம்புறேன்" என்றான் ஆரன்.

"ஆ! போகக் கூடாது. நிலா என் பொண்டாட்டி அவகிட்ட நீ போகக் கூடாது. நா விடமாட்டேன், போகாதடா" என அமர்ந்திருந்த சேரோடு எழுந்து நின்று கத்தியவனை, காதை குடைந்தவாறு திரும்பிப் பார்த்தான்.

"நிலாவ என்ட்ட அனுப்பிடு. அவ எனக்கு வேணும். அவள நா லவ் பண்றேன். எனக்கு மட்டுந்தான் நிலா. நீ அவளப் பத்திப் பேசக் கூடாது, அவகிட்ட பேசக்கூடாது. அவள தொடக் கூடாது. ஆ! தொட்ருப்பல்ல, இந்த ஒரு வாரமு அவள தொட்ருப்பல்ல. தொடக்கூடாதுன்னு தான அந்த வீடியோ அனுப்பினேன். இவ்ளோ மானங்கெட்டவனா இருக்கியே, சோறு தான திங்குற. எதுக்குடா தொட்ட? அப்ப அவளுக்கும் பிள்ள வந்துருமா? நோ வரக்கூடாது" என கத்தோ கத்தென்று கதறினான்.

"லவ் பண்ணியா நீ?" அதைமட்டும் திருப்பிக் கேட்டான் ஆரன்.

"ஆமா, ஆறு வருஷமா பண்றேன்டா. நேத்தைக்கு வந்தவன் நீ"

"எப்டி நம்புறது?"

"ஏன் நம்ப மாட்ட? அவ அப்பன் என் அக்காவ கூட்டிட்டுப் போய் குடும்பம் நடத்த ஆரம்பிச்சதும், வெட்டிப் போடாம ஏன் விட்டு வச்சுருந்தேன் தெரியுமா, நிலாக்காக, என் நிலாக்காக"

"ஓஹோ! உன் அக்காவ அடமானம் வச்சு நிலாவ தூக்கப் ப்ளான் பண்ணிருக்க?"

"ஆமா இப்ப என்னென்ற? அந்த கிழவனுக்கு என் அக்கா மேல ஆச வரும்போது அவேன் பொண்ண நா கல்யாணம் பண்ணக் கூடாதோ? அவன் பொண்ணக் கேட்டதும், பயந்தேரி பய என் அக்காவையும் விட்டுட்டு அங்க ஓட பார்த்தான், அதான் ஆள் வச்சு வண்டியோட தூக்கச் சொன்னேன். வந்த வெத்துவேட்டுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் கூட ஒழுங்கா பண்ணத் தெரியல, சொதப்பிட்டான். இல்லனா அவன கொன்னு அவன காமிச்சே மிரட்டி நிலாவ கல்யாணம் பண்ணிருப்பேன். அதுக்குள்ள இந்த கொலை கேஸெல்லாம் தூக்கிட்டு என்ன எழவுக்குடா நீ உள்ள வந்த. அந்தப்பக்கம் நிலாவையும் பிரிச்சுட்ட, இந்தப் பக்கம் தேவையில்லாம என் ஹாஸ்பிடல்லையும் நோண்டுற. உனக்கு எனக்கும் என்னடா பகை. எதுக்கு என்னையே சுத்தி வர்ற?" என குருதேவ் ஆக்ரோஷமாக கேட்க,

"இவேன் என்னடா நா இவன சுத்தி வர்றேன்றான்? நா போற இடத்துலலாம் வான்டடா வந்து வண்டீல ஏறுனது இவந்தான? இப்ப மாத்தி சொல்றான்?" என ஆரன் மதுரன் தோளில் கையிட்டுக் கேட்க,

"டேய் ஏசிபி. என்னைய ரொம்ப சாதாரணமா நினைக்கிற, என்ன பத்தி உனக்கு தெரியல"

"சொல்லேன் கேட்போம். உக்காந்து சொல்லு. நானும் பொறுமையாவே கேட்கேன். என் பொண்டாட்டி வேற இப்பதான் கடைக்கே போறா. இனி அவ வாங்கிட்டு வந்து சமைச்சு முடிக்க ரெண்டு மணிநேரமாது ஆகும். நமக்கு டைம் நிறைய இருக்கு, சோ உன்ன பத்தி எல்லாம் சொல்லுவியாம் நான் பொறுமையா கேட்பேனாம்" என மறுபடியும் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து, குருதேவையும் சேரோடு கீழே தள்ளினான்.

"சொல்லலனா என்ன செய்வ?"

"உன் அம்மாக்கு ஃபோன் போட்டு, உங்க பையன் இப்படி இப்படி நீங்க ட்ரீட்மெண்ட் பாத்த பொண்ணெல்லாம் வீடியோ எடுத்து மிரட்டி அப்யூஸ் பண்ணிக் கொலைப் பண்ணிட்டான். இப்ப தலமறைவாகிட்டான். அவன தீவிரவாதியா கன்சிடர் பண்ணி ஷுட்டிங் ஆர்ட்ஸ் வேற வந்துருச்சு, சோ இப்ப கைல கிடைச்சவன ஷுட் பண்ணிட்டோம். உங்க பையன் பாடிய எப்ப வந்து கலெக்ட் பண்ணிக்கிறீங்கன்னு கேட்பேன்" என்றவன் தன் பிஸ்டலை எடுத்து, இடது கைப்பக்கமிருந்த சாப்பாட்டு மேசையில் வைக்க, வெடவெடவென நடுங்கிவிட்டான் குருதேவ். அவனைப் பற்றி தான் தெரியுமே, செய்யகூடியவனாகிற்றே!

"சார் வேணா சார். அம்மாட்ட சொல்ல வேணாம் சார். அம்மா பாவம். அம்மாக்கு தெரிஞ்சா அடிப்பாங்க சார். ஒன்னுந்தெரியாதுன்னு சொல்லுவாங்க சார். நா எதுக்கும் லாய்க்கில்லன்னு சொல்லுவாங்க சார். ப்ளீஸ் சார், என்னைய சுட்றாதீங்க சார். ஜெயில்ல போடுங்க சார் நா கண்டிப்பா திருந்திடுறேன்"

"கண்டிப்பா திருந்திடுறியா?"

"கண்டிப்பா சார்"

"சரி அப்ப என்ன செஞ்சன்னு சொல்லு. கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணிடுறோம். உங்கம்மாட்ட சொல்லி லாயர் வச்சு வெளிய எடுக்கப் ப்ளான் பண்ணிக்கோ. எங்களுக்கு அடுத்து நிறைய கேஸ் இருக்கு போய் பாக்கணும்"

"நீங்க என்னைய விட மாட்டீங்க எனக்கு தெரியும்"

"உன்னைய பிடிச்சு அடைகாக்குறது தான் எங்க வேலையா? இவன பாரு நாளு நாளைக்கே இப்படி ஆகிட்டான். இனியும் உன்ன கஸ்டடி வச்சுட்ருந்து எங்க டைம்ம வேஸ்ட் பண்ண முடியாது. உண்மைய சொல்லிட்டு கோர்ட்ல சரண்டராகிட்டுப் போயிட்டே இரு"

"அப்ப நிலா?"

"தொலைச்சுக் கட்டிருவேன். உசுரு வேணுமா வேணாமா?" என மிரட்டவும்,

"வேணும் வேணும்" என வேகமாக தலையை ஆட்டிக்கொண்டான்.

"அப்ப சீக்கிரம் சொல்லு, சொல்லிட்டு நீயும் கிளம்பு நானும் கிளம்பணும்" என்றவன் கையைத் திருப்பி மணியை பார்த்துக்கொண்டான். மதுரன் அவனைத் தூக்கி நேராக அமர வைத்தான்.

"எங்கம்மா மதி, ஒரு கைனகாலஜிஸ்ட். அக்கா ரஞ்சனி, அப்பா இல்ல. நா சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க வீட்ல, அம்மா வச்சுருந்த சின்ன க்ளீனிக்ல எந்த அவசரத்துக்கும், வயிறு வலின்னு பொண்ணுங்க வந்தா பிரசவம் பாப்பாங்க. எனக்கு அது பிடிக்கவே இல்ல. அப்படி வர்றவங்க எல்லாம் அவ்ளோ கத்தி அழுவாங்க. வாய மூடிங்கன்னு நானும் கத்துவேன், என்னைய ரூம் குள்ள போட்டு அடைச்சுடுவாங்க. ஆனாலும் அவங்க அலறுற சத்தம் எனக்கு கேட்டுட்டே இருக்கும். நா தூங்கும்போது கூட எனக்கு அந்த அலறல் உள்ள எங்கையோ கேட்கும். நாள் ஆக ஆக ரொம்ப எரிச்சல். அந்த எரிச்சல் போகவே இல்ல. டீனேஜ்ல அது ஏன் அப்படி அழுறாங்கன்னு தெரியல, அப்புறம் நேர்ல பாத்துட்டா சரியாகிடுமான்னு யோசிச்சு, அம்மாக்கு தெரியாம பிரசவம் நடக்குறதையும் பாத்தேன். ம்கூம் அதுக்கப்றம் கண்ண மூடித் தூங்கவே முடியாம போனது தான் மிச்சம். அவ்ளோ வலிச்சு ஏன் பிள்ளப் பெத்துக்கணும் சும்மா இருக்க வேண்டியது தானன்னு கோவமா வரும். இதனால பொண்ணுங்க மேலயே வெறுப்பாகிட்டு, எனக்கு பசங்களோட சேர்ந்து ஏ படம்லாம் பாக்க முடியாது அருவருப்பா இருக்கும், வாந்தி கூட எடுத்துருக்கேன். எல்லாத்துக்கும் காரணமா அந்த கர்ப்பமாகுற பொண்ணுங்க தானன்னு தோணும். குழந்தைங்கள பத்தி தெரிஞ்சுட்டா இந்த தொல்லை விடுமான்னு தெரிஞ்சுக்கத்தான் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட்டுக்கு படிச்சேன். ம்ச் எதுவும் யூஸ் ஆகல. என்னோட ஃபைனல் இயர், என் அக்கா ரஞ்சனிக்கும் நிலா அப்பா செல்வகுமாருக்கும் கள்ளத் தொடர்பு இருக்குறது எனக்கு தெரியவந்தது. அதுக்கு முன்னவே அவங்க தனியா ஒருவருஷமா வாழ்ந்துட்டுருக்காங்கன்னு அம்மா எனக்கு சொல்லவே இல்ல, அவ அந்த ஆளுக்கு கன்சீவ் ஆகி என் அம்மாகிட்டையே வந்து நிக்றா, அப்பத்தான் எனக்கு விஷயமே தெரியும். என் அக்கா ஒரு டிவோர்ஸி, டாக்டர் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்னு டாக்டர் மாப்பிளைய பிடிச்சுக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. நாலு மாசத்துல அந்த ஆளோட வாழ மாட்டேன் வந்துட்டா. எங்க மாமா ஒருத்தர் மூலமா தான் ஈபில அவளுக்கு வேலையே வாங்கிக் குடுத்தாங்க எங்கம்மா. அத ஒழுங்கா பாக்காம, அந்த கிழவன பிடிச்சுருக்குன்னு இழுத்துட்டு வந்துட்டா. நா வந்தப்ப கன்சீவ்னு நிக்றா, மாத்திரை மாத்தி குடுத்து நாந்தான் அபார்ட் பண்ணிவிட்டுட்டேன். உண்மை தெரிஞ்சப்போ காச்மூச்சுன்னு கத்திட்டு அந்த ஆளோடயே போய்ட்டா. தேடிப்போய் போட்டுத் தள்ளிடலாம்னு தான் நினச்சேன். அப்பத்தான் அவர் குடும்பத்த தெரிஞ்சுக்க தேடினேன். என் நிலா. அப்றம் மொத்த ப்ளானும் மாறிப்போச்சு. நிலா, என்ன பண்ணாலும் நிமிர்ந்தே பாக்க மாட்டா. படிச்சா, வேலைக்குப் போனா, எல்லாத்தையும் பார்த்து சந்தோசப்பட்டேன். எந்த பொண்ணோடயும் என்னால வாழ முடியுமான்னு தெரியாது, ஆனா நிலாவோட வாழ ஆசையா இருந்துச்சு. அவள கல்யாணம் பண்ணிட்டா என்னோட எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்னு கூட நினைச்சேன். எங்கம்மாட்ட கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன், இப்பத்தான் படிப்ப முடிச்சுருக்க மூணு வருஷம் போட்டும், ஹாஸ்பிடல் பொறுப்பெடுத்துக்கோ, உனக்கு முதல்ல பொறுப்பு பருப்பு வரட்டும்னு சொல்லிட்டாங்க. எனக்கு எதுவுமே தெரியாதுன்ற எண்ணம் எங்கம்மாக்கு. ரஞ்சனி அப்படி செஞ்சுட்டு போனதுல, ரொம்ப கஷ்டம் அவங்களுக்கு. அத சரிபண்ண என்னையவும் இந்த மதி ஹாஸ்பிலயும் வளர்த்துவிட்றனும்னு பாத்தாங்க. நானும், அக்காவோட இல்லீகல் அஃபைர் வச்சுருக்குறவரோட பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்ல நேரம் பார்த்துட்ருந்தேன். அம்மா அத ஈசியா ஒத்துக்கணும்னா நிலாவும் நல்ல பொஷிசன்ல இருக்கணும். நானும் ரொம்ப பொறுப்புன்னு பேர் வாங்கணும். அதுக்காக நா நாட்கள கடத்தினா, மறுபடியும் பிரசவம், ஹாஸ்பிடல், அந்த அலறல் சத்தம் என் வாழ்க்கைல விளையாட ஆரம்பிச்சது. கர்ப்பமாகி வர்றவங்களே எரிச்சல்னா, கர்ப்பம் ஆகணும்னு கேட்டு வர்றவங்கள பாத்து இன்னும் எரிச்சலா வரும் எனக்கு. அப்படி என்ன கர்ப்பமாகியே ஆகணும்னு வெறி அவங்களுக்குலாம்? கழுத்த திருகி போட்டுட்டா என்னன்னு ஆத்திரமா வரும். அப்டி ஒருநாள் ரத்னாவும் அவ புருஷனும் என் கண்ணுல சிக்குனாங்க. என் ரூம்கு வெளில உக்காந்துட்டு சிணுங்கி சிணுங்கி குசுகுசுன்னு ஒரே ரகசியமும் சிரிப்பும் தான். எனக்கு அப்படி பாக்கவே பிடிக்கல, அவ ப்ரெக்ணென்ட் ஆகிட்டா இன்னும்ல சிரிப்பா? ப்ரெக்னெட்டாக எங்கம்மா ஹார்மோன்ஸ் டேப்லெட் தான் குடுப்பாங்க, ரத்னாக்கு நானே மெடிக்கல்ல நின்னு வேற டேப்லெட்ட மாத்தி எடுத்துக் குடுத்தேன். அது வேற மாத்திரையா இருக்கேன்னு செக் பண்ணித் திருப்பி வந்தா மாறிடுச்சுன்னு சமாளிக்கலாம்னு இருந்தேன். லூசுங்க வரவே இல்ல. குடுத்தத அப்படியே திண்ணாச்சு. அது ரெகுலர் ப்ரீயட் வர வைக்க கூடிய மாத்திரை. என்ன முக்குனாலும் பிள்ள தங்காது, கசிஞ்சு வெளிய வந்துரும். இனி வரமாட்டாய்ங்கன்னு பார்த்தா தொடர்ந்து ஆறு மாசமா வர்றாங்க. ஒவ்வொரு மாசமு மாத்திரையவே குடுத்துட்ருந்தா இப்படித்தான் போலன்னு, வேற வழி யோசிச்சேன். உயிரோட இருந்தா திரும்பத் திரும்ப வரத்தான் செய்வா, பேசாம கொன்னுடுன்னு உள்ள ஒரு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. ஆனா அவள கொன்னுட்டு நா எப்படி என் நிலாவோட வாழ முடியும்? அவளா சாகணும், அதுக்கு ஒரே வழி சூசைட் பண்ண வைக்கணும், ஹாஸ்பிடல்ல ஐயூஐ ட்ரீட்மெண்ட்கு ட்ரெஸ் மாத்தும்போது அத வீடியோ எடுத்தேன். எங்கம்மா ஸ்கேன் பண்ணும்போது எப்பவுமே பொண்ணுங்க மேல துணி போட்ருவாங்க, எப்பவாச்சும் ரொம்ப ரேரா அந்த போர்வை மிஸ்ஸாகும், அதுக்காக வெயிட் பண்ணேன், அவ கெட்ட நேரம் அந்த மாசமே க்ளிக் அமஞ்சது. எடுத்தேன், ரெண்டையும் எடிட் பண்ணி அவளுக்கு அனுப்பி, உனக்கு பிள்ளையே பொறக்காது எங்கம்மா காசுக்காக உன்ன அலையவிடுறாங்க, பாத்தியா வீடியோலாம் எடுத்து வச்சுருக்கோம், நீ வருஷம் முழுக்க எங்களுக்கு ஃபீஸ் அழுதுட்டே தான் இருக்கணும். இத உன் புருஷனுக்கு அனுப்பினா என்ன பண்ணுவான். அது ஆஸ்பத்திரின்னு நீ சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டான். உன்ன கொன்றுவான் அதுக்கு கௌரவமா நீயே செத்துருன்னு சொன்னேன். உடனே செத்துட்டா. எனக்கு அது ரொம்ப புடிச்சுருந்துச்சு, ஆனா அடிக்கடி செஞ்சா மாட்டிப்போம்னு, தேர்ந்தெடுத்து தான் செய்வேன். நீ கண்டு பிடிச்சது, லெனின் ரோஸ் ஏரியால மட்டும் எட்டு, மொத்த திருநெல்வேலி மாவட்டத்தையும் அலசி பாத்தருந்தா ஷாக்காகிருப்ப, எவ்ளோ இருக்கும்னு கெஸ் பண்ணேன்?"

"எழுபத்தெட்டு" என்றான் ஆரன். மதுரன் முகத்தில் ஈயாடவில்லை.

"ப்ரிளியண்ட். அதான் ஏசிபியா இருக்கியோ. அதிக வான்ட்டட் லிஸ்ட்லயும் இருக்க. இப்ப எழுபத்தெட்டுக்கும் ஆதாரம் இல்ல. என்னைய எப்படி அரெஸ்ட் பண்ணுவ? எட்டுப் பேருக்கு ஃபோனெடுத்துருக்கியே அவங்க எட்டு பேருக்கு கூட ஒரே நம்பர்ல இருந்து நா எதையும் அனுப்பல, வேற வேற நம்பர் வேற வேற லொகேஷன். என்ன பண்ணுவ? உன்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சு தான் நா எல்லாம் சொன்னேன். எப்பவும் ஜெயிச்சுட்டே இருக்கல்ல, ஒருதடவ இந்த குருதேவ்ட்ட தோத்து நில்லேன். ஆனா பாரு, ஒரு போலீஸா இப்படி கையாலாகாம இருக்கதுக்கு நீயும் சூசைட் பண்ணிக்கோ. நிலாவ நா பாத்துக்குறேன்" என்கையில்,

"நா பட்டன் கேமேரா வச்சுருந்தா?" என்றான் ஆரன்.

"அப்ப நீ வந்து நின்னதும் உன் மேல வந்து விழுந்தேனே, சும்மான்னா நினைச்ச? அப்பவே அத செக் பண்ணிட்டேன். நீ அதெல்லாம் எடுத்துட்டு வரல" என சிரித்தான்.

"ஓகே ரைட் போலாமா?"

"எங்க?"

"கமிஷனர் ஆஃபீஸ்கு"

"எதுக்கு?"

"அதான் வாக்குமூலம் குடுத்துட்டியே?"

"உன்ட்ட ப்ரூஃப் இல்லையே?"

"எவேன் சொன்னான்?" என்றவன், டைனிங் மேசையில் நடுவில் வைக்கப்பட்டிருந்த அலங்கார பூ ஜாடியிலிருந்து அந்த பட்டன் கேமிராவை எடுத்தான். மதுரன் அப்போது அவனைத் தூக்கி அமர வைக்கையில் கேமராவைப் பார்த்து தான் சரியாக அமர வைத்திருந்தான்.

"இது உன் ஹாஸ்பிடல்ல நீ ஸ்கேனிங்க் ரூம்ல வச்சுருந்தது தான். குவாலிட்டி கரெக்ட்டா இருக்கும்ல? உன்ன நம்பி தான்பா அப்படியே ஃபிக்ஸ் பண்ணிட்டேன், இதுல ரெகார்ட் ஆகுறது உன் மொபைல்ல ட்ரைக்டா டவுன்லோட் ஆகும்ல? ஈசி ப்ராசஸ்" என்றவன், கேமிராவை பத்திரபடுத்திவிட்டு, "இப்ப இங்க நீ பேசினதெல்லாம் எங்க க்ரைம் ப்ரான்ச்க்கு உன் போன் மூலமே லைவ் டெலிகாஸ்ட் தெரியும்ல" என்றவன், சேரிலிருந்து அவன் கயிறை எல்லாம் கழற்றி விடுவிக்க, அடிக்கப் பாய்ந்தான் குருதேவ்.

இரண்டடி பொளேர் பொளேரென வைத்தான் ஆரன். மதுரனும் மற்றபக்கம் வந்து பிடிக்க, "ஓடினா ஓடட்டும். தப்பிக்கப் பாத்தான் சுட்டோம்னு சொல்லிக்கலாம்" என்ற ஆரன் அவனைப் பிடிக்கவே இல்லை. மதுரனும் விட்டுவிட, குருதேவ் பயத்தில் அப்படியே நின்றான்.

"ஓடேன்டா!" என பிடித்துத் தள்ளியவன், அவனைத் தாண்டிக்கொண்டு வெளியே வர, மதுரனும் அவனைத் தள்ளியபடி வெளியே வந்தான். சிலர் ஆங்காங்கே நின்று வேடிக்கைப் பார்த்திருந்தனர்.

"இந்த வீட்டையும் நிலாக்காக பிடிச்சு, அப்பப்ப வரப்போக இருந்துருக்கன்ன? பரவால்ல இப்ப உன்ன அடைச்சு வைக்கவாச்சு ப்ரயோஜனம் ஆச்சே" என அவன் வண்டியை எடுக்க, அங்கே போலீஸ் ஜீப் வந்து நின்றது. மதுரனும் அவனை அதில் ஏற்றி உடன் ஏறிக்கொள்ள, ஆரன் விஷ்வேஷ்வரன் அவன் நிலா பொண்ணைத் தேடி வீட்டிற்கு வந்துவிட்டான்.

அவள் வீட்டுஉடை எப்போதுமே நீள பாவடையும், குட்டிப் டாப்பும் தான். அதை தான் இப்போதும் அணிந்திருந்தாள். சாதம் வடித்து, சாம்பார், கேரட்பீன்ஸ் பொரியல் வைத்து முடித்திருக்க, பாயாசம் ஒரு அடுப்பிலிருக்க, அப்பளம் ஒரு அடுப்பில் பொறித்துக் கொண்டிருந்தாள். மாடி வீடு அதும் போலீஸ்காரன் வீடு என்பதால், கேட்டை மட்டும் சும்மாவேணும் சாற்றிவிட்டு, உள் கதவை திறந்தே வைத்திருக்க, சத்தமில்லாமல் அதை திறந்துகொண்டு வந்திருந்தான் அவள் கணவன்.

வந்த வேகத்தில் பாவாடையை பிடித்திழுக்கத்தான் நினைத்தான், அடுப்பிலிருக்கும் எண்ணெய் சட்டி அவனை நிதானித்திருந்தது. அப்படியே ஓரம் தள்ளி, சமையல் மேடையில் சாய்ந்து நின்றுவிட்டான்.

"கடைக்குப் போய்ட்டு வந்து நானே சமையலயே முடிச்சுட்டேன். ரெண்டு மணிநேரத்துல வர்றேன்னுட்டு போனவங்கள இன்னும் காணும்" என்றபடி அடுப்பை அணைத்து அனைத்தையும் எடுத்து வைத்து தட்டைப் போட்டு மூடினாள்.

பின் பாயசத்தை ஒரு சின்ன டம்ளரில் எடுத்தவள், அப்படியே வெளியே வந்து, சற்று முன் செட் செய்து வைத்திருந்த பூஜை அறையில் சாமி முன் கொண்டு வைத்தாள்.

"பாயசத்தத் தூக்கிட்டு எங்கப் போறா இவ?" என அவள் பின்னயே வந்தவன், அந்த சிறிய பூஜை அறையை கண்டுவிட்டு, "பார்ரா!" என தான் பார்த்தான்.

அங்கிருந்து கிளம்புபோதே, தங்கமாடத்தி சொல்லி தான் அனுப்பியிருந்தார்.

"அங்க பூஜைக்குன்னு ஒரு செல்ஃப் இருக்கும்மா, ஆனா இவன் அத சும்மாத்தான் வச்சுருக்கான். நீ அதுல உன்னோட விளக்கையே கொண்டு ஏத்து. நீ வாழ்ற இடத்துல வச்சுக்குறது தான் உனக்கும் நல்லாருக்கும்" என அவள் திருமணத்திற்கு வாங்கிய பெரிய விளக்குடன் குட்டி அஷ்டலஷ்மி விளக்கும் இருக்க, அதை குடுத்துவிட்டார் அவளும் எடுத்து வந்திருந்தாள். அதனுடன் அவர்களின் குலதெய்வ படத்தையும் தந்துவிட்டிருந்தார் மாடத்தி. இப்போது கடைக்கு சென்றபோது குட்டி பிள்ளையார் சிலை இவளே வாங்கி வந்திருக்க, அப்படித்தான் அந்த மினி பூஜையறை தயாராகி இருந்தது. பாயசத்தை வைத்தவள், முன் வாசல் சென்று கதவைத் திறந்து அவன் வருகிறானா என எட்டியும் பார்த்துவிட்டு வர, அதற்குள் ஆரன் உள் அறை சென்று கைகால் முகம் கழுவி, உடை மாற்றினான்.

அவன் அறையிலிருந்து வெளியே வரும்போது, இங்கு இவள் விளக்கேற்றி, பத்தி, சாம்பிராணி ஏற்றி வைத்து கை கூப்பி கண் மூடி நிற்க, தானும் வந்து உடன் சேர்ந்து நின்று கை கூப்பினான். அவனுக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் உண்டு. மனதார வணங்கவும் செய்வான். ஆனால் விளக்கேற்றி அதை பராமரிக்கும் பொறுமை இருந்ததில்லை. செல்லும் இடங்களில் கோவிலில் வணங்கிக்கொள்ளும் பழக்கமுடையவன்.

"வந்தா சேர்ந்து சாமி கும்பிடலாம்னு பாக்றேன். ஆள காணும்" என முனங்கி, சூட தட்டை கையிலெடுத்தவள், அருகில் தெரிந்த நிழலில் பட்டென்று திரும்ப, ஆரன் புருவம் உயர்த்தினான்.

"எப்டி சத்தமே இல்லாம வந்து நிக்றீங்க. ஒரு செக்கென்டல பகீர்னு ஆகிடுச்சு எனக்கு" என்றாள்.

"நா உள்ள வந்து அரைமணி நேரம் ஆச்சு. வீட்டுக்குள்ள ஆள் வந்தது கூட தெரியாம சுத்தி வந்துட்டுப் பேச்சப் பாரு"

"இருங்க கும்பிட்டுட்டு பேசிக்கிறேன் உங்கள்ட்ட" என்றவள், கற்பூரம் காட்ட, இல்வாழ்க்கை அவன் நிலவுடன் செழிப்புடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான் ஆரன்.

அவள் விபூதி இட்டுக்கொண்டு அவனிடம் நீட்ட, எடுத்து பூசிக்கொண்டவன், அவளுக்கு கண்ணை மூடி ஊதிவிட்டான்.

"சாப்பிடுவோமா?" என அவள் சூட தட்டை வைத்துவிட்டு திரும்ப, அள்ளிக்கொண்டான் ஆரன்.

அவன் அவளை இடுப்போடு அணைத்திருக்க, அவள் அவனைக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள். மோப்பம் பிடித்தவன் அவள் தோளில் முத்தமிட்டு, காதில், பின் கன்னத்தில், என உதட்டிற்கு வர, கண்மூடி ஒத்துழைத்து நின்றாள் நிலாயினி. சிரித்தபடி அவள் உதட்டை குவித்துபிடித்தவன் தன்னிதை அதில் அழுத்தமாக பொறுத்திக்கொண்டான். அது அடுத்த நிலைக்குச்சென்று கரை கடந்து, செயல் கடந்து, உடை மாற்றிடம்பெற்று, சுவாசங்கள் சீர்நிலை பெற நேரமும் கடந்துச்சென்றிருந்தது.

எப்படி, எப்போது அறைக்குள் வந்தோம் என்றே நினைவில்லை அவளுக்கு, சிறிதுநேரம் அப்படியே அவன் கைவளைவில் இருந்தவள், மெல்ல நிமிர, அவளை பார்த்தபடி படுத்திருந்தான் ஆரன்.

"ச்சோ" என அவன் கண்ணை மூட,

"போடி, இன்னும் பத்து வருஷம் கழிச்சு மூடு, அதுக்குள்ள முப்பது பிள்ளையும் பெத்துக்குறேன் நான்" என அவள் கையைத் தட்டிவிட்டு இழுத்தணைக்க,

"ஐயையோ வாச கதவே மூடல" என ஞாபகம் வந்தவளாக அவன் தோளில் அடித்துத் தள்ளிவிட,

"போலீஸ்காரன் வீடுடி எவன் வருவான்" என்றான் ஆரன் கெத்தாக.
 

Vishakini

Moderator
Staff member
"நானும் அப்படித்தான் நினைச்சேன் நீங்க அரவமில்லாம வந்து நிக்கல? வழியவிடுங்க. எந்திரிச்சி போய் ஃப்ர்ஸ்ட் கதவ சாத்துங்க"

"ஏன்? மறுபடியுமாடி?" என கண்ணடித்தான்.

"உங்கள!" என தானே தள்ளிவிட்டு எழுந்தவள், மெத்தை ஓரத்தில் கிடந்த அவன் சட்டையை எட்டி எடுத்து மாட்டிக்கொண்டு, முடியை அள்ளி கொண்டையாக்கிவிட்டு எழுந்தாள். நமுட்டுச்சிரிப்புடன் பார்த்திருந்தான் ஆரன். ஓடியேவிட்டாள் நிலாயினி.

மறுபடியும் குளித்து, மறுபடியும் சாமியை வணங்கி, திருநீறு, குங்குமம் இட்டுக்கொண்டு, விளக்கை குளிரவைத்தவள், சாப்பாட்டை எடுத்து வைக்க, தானும் குளித்து உடைமாற்றி தலையைத் துவட்டியபடி வந்துவிட்டான் ஆரன்.

"நான் சமைப்பேன் தான். ஆனா உங்கம்மா, எங்கம்மா ஏன் என் தங்கச்சி அளவுக்குலாம் இருக்காது. சாப்பிடுற அளவுக்கு இருக்கும்" என்றபடியே எடுத்து வைக்க,

"நிலா சோறு சாப்பிட கசக்குமா? எனக்கு உன் சாப்பாடு தான் தேவாமிர்தம்" என அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்சிவிட்டே சாப்பிட சம்மணமிட்டு அமர, சந்தேகமாக பார்த்தாள் நிலாயினி.

"என்னடி நம்பமாட்டியா?"

"நீங்க சொல்ற டோன் அப்படி இருக்கு" என்றவள் அவளுக்கும் எடுத்து வைத்துகொண்டு அவனுடனே அமர,

"என் நிலாபொண்ணு" என மேலும் கொஞ்ச, லேசாக சிரித்தவள், "என்னங்க?" என்றாள்.

"அன்னைக்கு அந்த குருதேவ்வ பிடிச்சோம்ல? அவனபத்தி கேட்கவே இல்ல நீ?"

"ஆமா ஆனா அன்னைக்குக் கேட்டேனே நீங்களே பாத்துக்குறேன்னு சொன்னீங்களே? இன்னொரு விஷயமு புரிஞ்சது, உங்கம்மா, அப்பா, புனிதா அண்ணி அவங்க ஃபேமிலின்னு யாருமே உங்கள்ட்ட அவன பத்தி கேட்கல. அவன் கத்திட்டுப் போனதுல தான அப்பா விஷயம் தெரிஞ்சது, அத்தைக்கும் உங்களுக்கும் பயந்து அதபத்தி என்ட்ட யாரும் பேசல ஓகே. ஆனா அவன் வீடியோ, நா லவ் பண்ணதாவும் இன்னும் அசிங்கமாலாம் பேசிட்டு போனான்ல எதையும் அவங்க யாரும் பேசல, கேட்கலன்னு கவனிச்சேன். யாருமே பெருசா நினைக்காத விஷயத்த நான் மட்டும் எதுக்கு நினைச்சுட்டே இருக்கணும்? எனக்கு என் பிரச்சனையே போதும்னு தோணுச்சு. அதனால அவனையே மறந்துட்டேன்"

"உன் அப்பா பத்தி கூட அவன் சொன்னதும் நம்பல, என் அம்மா தனியா விசாரிச்சுக் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. மத்தபடி நா செலக்ட் பண்ண பொண்ணு நீ, ஐயா சூப்பரா தான் செலக்ட் பண்ணுவேன்ற நம்பிக்கை" என்றான் பெருமிதமாக.

"ம்ம்ம்" என தலையை உருட்டினாள்.

"சரி. உனக்கு அவன பத்தி தெரிய வேணாமா?"

"சொல்லுவீங்களா உங்க ஆபீஸ் சீக்ரெட்டெல்லாம்?"

"நிலாக்கு மட்டும் ஸ்பெஷல்" என்றவன், குருதேவ் பற்றி சுருக்கமாக பகிர்ந்தான், அதிர்ந்து தான் போனாள் லஷ்மி நிலாயினி.
"அதெப்டிங்க யாருக்கும் சந்தேகம் வரல? எவ்வளவு கொலை, அம்மாடி, நம்பவே முடியலங்க. இப்படிலாம் செய்ய முடியுமா?"

"ம்ம் பலவிதமா இருப்பானுங்க. எங்களுக்கு, இதுக்கு அது பரவால்ல அதுக்கு இது பரவால்லன்னு தான் எல்லா கேஸும்"

"ஒருத்தருக்கு கூடவா சந்தேகம் வரல?"

"உன் ஃப்ரெண்ட் ஆண்டாள், அந்த பொண்ணும் இப்ப லாஸ்டா சேம் மெத்தட்ல தான் இறந்துருக்கு, உனக்கு ஏதாவது டவுட் வந்ததா?"

"இல்லதான் ஆனா எங்களுக்கு நடுவுல வருஷங்களா கேப்பாகிடுச்சு. கூடவே இருந்த அவ ஹஸ்பண்ட், அவ அம்மா, அப்பாக்குலாம் தெரியணும்ல? ஏன் தெரியல?"

"எப்படி தெரியும்? அந்தப் பொண்ணுங்க தான் எதையும் காமிச்சுக்கவே இல்லையே?"

"அதான் ஏன்?"

"ஏன்னா? அவன் வீடியோ, ஃபோட்டோன்லாம் சொன்னதும், ஃபோட்டோவ பாக்காமலே, அதுல என்ன இருக்குன்னு தெரியாமலே நீ பதட்டபட்ட தான? அவங்க அவங்களையே அந்த ஃபோட்டோல பாத்ருக்காங்க. உனக்கு அதுல இருக்கது நீ இல்லன்னு தெரியும். அவங்களுக்கு அதுல இருக்குறது அவங்க தான்னும் தெரியும். அப்ப பயம், பதட்டம், மானம், மரியாதை, புருஷனே என்ன சொல்வானோன்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து பட்டுன்னு அந்த முடிவ எடுக்க வச்சுருச்சு"

"அப்ப அவங்க ஃபோன்ல அவன் அனுப்பின ஃபோட்டோஸ், வீடியோஸ் வச்சே அவன பிடிச்சுருக்கலாமே?"

"சிலர் பயத்துல அவங்களே டெலிட் பண்ணிருக்காங்க. அண்ட் அவனும் ஒன்டைம் ஓபன் பண்ற மாதிரிதான் அனுப்பிருக்கான்"

"இப்படிலாம் டெக்னாலஜி யூஸ் பண்ணி தப்பு பண்ணா, எப்படித்தான் பிடிக்கிறது?"

"இப்படி என்னைக்காது ஒருநாள் தானா மாட்றப்ப தான் பிடிக்க முடியும். அத்தன பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணு சுதாரிச்சு கம்ப்ளைண்ட் குடுத்துருந்தாலும் எப்பவோ மாட்டிருப்பான்" என்றான். இருவரும் சாப்பிட்டபடி தான் பேசிக்கொண்டிருந்தனர்.

"ச்ச எருமாடு, அவன்லாம் நல்லாவே இருக்க மாட்டான். இப்ப அவன என்ன செய்வீங்க?"

"என்ன செய்யணும்?"

"என்கவுண்டர் பண்ணிடுங்க. இல்லனா தூக்குல போடுங்க" என்றாள் கடுப்புடன்.

சிரித்தபடி தலையசைத்த ஆரன், "அவனுக்கு உன்ன எப்படி தெரியும்னு தெரியுமா?" என்க,

"ஆமால்ல, இதுல என்னைய எங்க பாத்தான் இவன்? நா அவன் ஹாஸ்பிடல் பக்கமே போனதில்லையே?"

"உங்கப்பாவோட கீப்போட தம்பி தான் இவன். வடிவேல் ஒரு படத்துல அக்காவ வச்சு பேக்கரி வாங்குவான்ல அதே மோட்ல இவன் உன்ன வாங்க ப்ளான் பண்ணிருக்கான்" என சொல்லி சிரிக்க, பட் பட்டென்று அவன் தொடையில் அடித்தாள் நிலாயினி.

ஒருவித எரிச்சல் மண்ட, "இனி அவனபத்தி பேசாதீங்க சொல்லிட்டேன். எரிச்சலா வருது. சிரிக்காதீங்க" என இன்னும் இரண்டு அடி அடித்தாள். பேச்சோடு பேச்சாக இருவரும் சாப்பிட்டும் முடித்திருந்தனர்.

மாலையில், தீக்ஷி, சந்திராவும் வந்துவிட, குருதேவ்வை அப்படியே மறந்துவிட்டு அவர்களோடு ஐக்கியமாகிவிட்டாள் லஷ்மி நிலாயினி.

மறுநாளும் லீவ் என்றாலும், ஆரனை கமிஷ்னர் அழைத்துவிட, கிளம்பிச் சென்றான். குருதேவ் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது, மதி, ரஞ்சனி இருவரும் வந்து அவனை வசைபாடிவிட்டு சென்றுவிட்டனர். தங்கள் பங்கிற்கு கம்ப்ளைண்ட்டும் குடுத்துச் சென்றனர்.

"தெய்வமா பாக்குற என் வேலைல உன் கேவலமான புத்திய காட்டிட்டல்ல? என் வயித்துல தான் பொறந்தியாடா நீ?" என அவன் முதுகில் மொத்திய மதி, "கொன்னு போட்ருங்க சார் இவன" என அழுதபடி சொல்லி சென்றுவிட்டார்.

நேரம் ஆக ஆக, ஆக்ரோஷமாகிக் கொண்டிருந்தான் குருதேவ். அருகில் வருபவர்களை கடித்தெல்லாம் வைக்கத் துவங்கினான்.

"இவன மனநல காப்பகம்ல தான் கொண்டு சேக்கணும் ஆரன்" என்றுவிட்டார் கமிஷ்னர்.

"நடிக்கிறானோ சார்? எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணேன்னு தெளிவா வாக்குமூலம் குடுத்துருக்கான். இப்படியும் பண்றான்" என மதுரன் கேட்க,

"மனசுல நினச்சது நடக்கலனா, சிலர் போகுது போ அடுத்தென்னன்னு பாப்போம்னு போவான், சிலர் அதுலயே கிடந்து புலம்பி தன்ன தானே பாழாக்கிக்குவான். சிலர் எப்படியும் அடஞ்சே தீரணும்னு வெறியா மாறிடுவான். இவன் மூணாவது ரகம் போல" என்றான் ஆரன்.

"விடுங்கடா என்னைய" என கத்திக்கொண்டே இருந்தான் குருதேவ்.

விசாரணைக்கென்று அங்கேயே மூன்று நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். கமிஷனர், "அவன எதுவும் பண்ணிடாதீங்க ஆரன்" என நாளுக்கு மூன்று முறை அச்சுறுத்தல் (வார்னிங்) கொடுத்தபடி தான் இருந்தார்.

"நா சும்மா இருந்தாலும் இந்த மனுஷன் என்னைய சும்மா இருக்க விட மாட்றாருடா மதுரா" என்றுவிட்டு போவான் ஆரன்.

நான்காம் நாள் காலை, 'குருதேவ் என்ற சைகோ கொலையாளி, ஒரு குழந்தைநல மருத்துவன், கர்ப்பமாக வேண்டும் என அவன் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண்களை, ஆபாசமாக வீடியோ, படம் எடுத்து மிரட்டி அவர்களை தற்கொலைக்கு தூண்டியுள்ளான். அவனுக்கு மனநிலை சரியில்லாமல் இருந்தது கவனிக்கத்தக்கது. விசாரணைக்கென்று கமிஷ்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். பல பெண்களுக்கு அவன் செய்தது அவனுக்கே முடிவாகிவிட்டதாக, மக்கள் கூறுகின்றனர். மதி ஃபெர்டிலிட்டி மருத்துமனை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது' என்ற தலைப்பு செய்தியில் தான் நிலாயினிக்கு விடிந்தது.

"என்னங்க பண்ணீங்க?" என நிலாயினி துவங்கி, "என்ன சார் பண்ணீங்க?" என மதுரன் வந்து, "அவ்ளோ சொன்னேனே? ஏன் ஆரன் இப்படி பண்ணீங்க?" என கமிஷ்னர் வரை, எல்லாரும் அவனையே கேட்க,

"வெளுக்கப் போறேன் எல்லாரையும். அவன நானா தூக்கிக் கொண்டு கயித்துல கட்டி இறக்குனேன்? ஆளாளுக்கு என்னையே கேட்குறீங்க? நீங்களே இப்படினா விசாரணை கமிஷன்ல வர்றவங்க எப்டி நம்புவாங்க என்னைய?" என்ற அவன் உருட்டலில் அமைதியாகிவிட்டனர்.

ஆரன் அவனைத் தூண்டி மட்டுமே விட்டான், அவன் முன் நிலாவிடம் பேசுவது, அந்த பெண்களைப் பற்றி பேசுவது, 'பிரசவம்னா என்னனு இவனுக்கு பாடம் எடுங்க', என இரு காவலர்களை வைத்து பேச வைத்து அவனை எரிச்சலூட்டினான். ஏதோ வகையில், யாரின் மூலமாகவாது அவனைத் தூண்டி விட்டபடியே இருந்தவன், அவன் இறந்த அன்று, காலையில் தான் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வந்தான்.

"மதுரா, கார்ல ஒரு புடவை இருக்கு. அது இருக்கட்டும் நா அப்றமா எடுத்துக்குறேன். இவன உள்ள கூட்டிட்டுப் போ, நா கமிஷ்னர பாத்துட்டு வரேன்" என குருதேவ் முன்னவே சொல்லிவிட்டு, இறங்கி சென்றிருக்க, குருதேவ் அது, நிலாவின் சேலையாக இருக்கும் என நினைத்து அதை சட்டைக்குள் மறைத்து தூக்கிக் கொண்டு வந்திருந்தான். அதை அவள் சேலையாகவே நினைத்து தூக்கிட்டும் கொண்டான்.

ஆனால் அது அவன் அம்மாவினது. மதியோடது. ஆரன் திட்டமிட்டே அதை செய்துமுடித்திருந்தான். விசாரணை கமிஷனுக்கு இந்த முறை அவன் எந்த வரைபடமும் கொடுக்க வேண்டியதில்லாமல், சுலமபாகவே வேலை முடிந்திருந்தது. அன்றே குருதேவ்வின் அத்தியாயம் முடித்து வைக்கப்பட்டிருந்தது.
 
Top Bottom