அத்தியாயம் -1
காலை 8.10. அந்த ரயில் நிலையம் வழக்கம்போல பரபரப்புடன் காணப்பட்டது. மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த கூட்டத்தில் ஒருத்தி மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்தாள்.
மழை நனைத்த சாலையில் இருந்த சிறிய சிறிய தண்ணீர் குளங்களைத் தாண்டி, பையை தோளில் மாட்டிக்கொண்டு அவள் வேகமாக ஓடினாள். தூரத்தில் ரயிலின் ஹார்ன் ஒலிக்க, அவளது இதயம் இன்னும் வேகமாகத் துடித்தது.
"இந்த ட்ரெயின் மிஸ் ஆயிடுச்சுனா... எல்லாமே மிஸ் ஆயிடும்..." என்று வாய்விட்டு புலம்பினாள்.
தோளில் தொங்கியிருந்த ஹேண்ட்பேக்கை அவசரமாகச் சரிசெய்தபடி, அடிக்கடி கையைத் தூக்கி வாட்சைப் பார்த்துக் கொண்டே நடந்தாள். முன்னால் யார் வருகிறார்கள், பக்கத்தில் யார் நிற்கிறார்கள் என்று எதையும் கவனிக்க அவளுக்கு நேரமில்லை. அவளது கவனம் முழுவதும் நேரத்திலும், வரவிருக்கும் ரயிலிலும்தான் இருந்தது.
அவ்வப்போது கண்களை அலைபாயவிட்டு ரயில்வே டிராக்கை நோக்கினாள்.
"இன்னும் ரெண்டு நிமிஷம் தான்... ட்ரெயின் மிஸ் ஆகிடுமோ?" என்ற பதட்டத்துடன், தனது நடையை ஓட்டமாக மாற்றிக் கொண்டாள்.
மூச்சு திணறினாலும் கால்கள் நிற்கவில்லை. தூரத்தில் மீண்டும் ரயில் ஹார்ன் ஒலித்தது. அது அவளுக்கான எச்சரிக்கை மணிபோல் தோன்றியது. இன்னும் வேகமாக ஓடினாள்.
ப்ளாட்பாரத்தின் நுழைவாயில் கண்ணில் பட்டதும், அவளது கண்கள் ஒரு நொடி மின்னின. ரயில் மெதுவாக நகரத் தொடங்கியிருந்தது. மக்கள் கூட்டம் அசைந்தது. "சீக்கிரம்... சீக்கிரம்..." என்ற குரல்கள் பல திசைகளில் இருந்து ஒலித்தன.
"நிறுத்துங்க!" என்று அவள் சொல்ல நினைத்தாள்.
ஆனால் வார்த்தைகள் வெளியே வரவில்லை. ஓட்டமும் நடையுமாக வந்ததால், அவளது வாயிலிருந்து காற்று மட்டுமே வெளிவந்தது.
தினமும் இப்படித்தான் பயணம் செய்வதால் இருக்கலாம், கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் வேகமாக அவளுக்குக் கை கொடுத்து உதவினார். நன்றியுடன் புன்னகைத்தவள், அவர் கையைப் பற்றிக்கொண்டு உள்ளே ஏறினாள்.
அவரும் தன் வழியில் சென்று விட்டார்.
அவளும் மேலே இருந்த கைப்பிடிக் கம்பியைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் இருந்த கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தாள். நெற்றியில் வியர்வை முத்துக்கள் மின்னின.
ஆனால் அவளது கண்கள் மட்டும் அமைதியாக இல்லை. அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடியே இருந்தன. நொடிக்கு ஒரு முறை கை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அப்போது எதிரே, சற்று தூரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
அவனது பார்வை சாதாரணமானதல்ல.
நேராக அவளைத் துளைத்தது.
அவனது பார்வை அவளது நெற்றியில் ஒட்டியிருந்த வியர்வைத் துளிகளில் இருந்து தொடங்கி, இரு புருவங்களுக்கிடையில் இருந்த சிறிய சிவப்பு வட்டப் பொட்டில் வந்து நின்றது.
அழகாக வளைந்து திருத்தப்பட்ட புருவங்கள்...சிறிய கண்கள்...
ஆனால் நேராகப் பார்த்தால் துளைத்துவிடும் பார்வை.
மனிதர்களை அளந்து பார்க்கும் பார்வை அவளுக்கே உரியது போல.கூர்மையான மூக்கு.
சற்றே சுருங்கிய உதடுகள்.
ஒட்டிய கன்னங்கள்.
காதில் சிறிய கல் ஜிமிக்கி மெதுவாக ஆடியது.
கழுத்தில் மெல்லிய செயின்.
அதில் இருந்த 'ஓம்' டாலர் அவனது கவனத்தை இன்னும் ஒரு நொடிக்கு பிடித்துக் கொண்டது.
'முருகன் மேல் ரொம்ப பாசம் போல... இஷ்ட தெய்வம் முருகனோ?' என்று உள்ளுக்குள் முணுமுணுத்தான்.
அதற்கு கீழே பார்வை செல்ல அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. அவனுக்கே ஏதோ தவறாகத் தோன்றியது.
அதே நேரத்தில் அருகில் நின்ற ஒருவன் இறங்க வேண்டி தள்ளியதும், அவன் திடுக்கிட்டு நினைவிலிருந்து வெளியே வந்தான்.
'என்னடா பரத்... இப்படி பார்க்குற? பொதுவெளியில ஆயிரம் பேர் இருக்கிற ட்ரெயின்ல, ஒரு பொண்ணைப் இப்படியா பார்ப்ப?' என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான்.
தலையில் லேசாகத் தட்டிக்கொண்டு புன்னகைத்தான்.
யாரோ ஒருவரின் பார்வை தன்னைத் துளைப்பதை அவள் உணர்ந்திருந்தாலும், அது அவளுக்கு புதிதாகத் தோன்றவில்லை.
இந்த ட்ரெயினில்...
இது தினசரி நடக்கும் விஷயம்தான்.
அத்தனை பார்வைகளையும் கடந்து தான் அவள் இங்கே நின்றிருக்கிறாள்.
அதனால் யாருடைய கவனத்தையும் அவள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
'நேராக வந்து சீண்டினால்... அப்புறம் பார்த்துக்கலாம்...'
என்பதுதான் அவளது எண்ணம்.
ஆகவே யாரிடமும் தேவையில்லாமல் வம்புக்குச் செல்வதில்லை. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுடன் வாதம் செய்ய அவளுக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.
அவளுக்கு முக்கியம் மனநிம்மதி.
இந்தப் பயணம்.அவ்வளவுதான்.
சுற்றி நடப்பவற்றில் இருக்கும் தீமைகளைத் தாண்டி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்பவள் அவள்.
சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, தான் இறங்க வேண்டிய நிலையம் வந்ததும் கீழே இறங்கினாள். உடைகளைச் சரிசெய்தவள், ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வேகமான எட்டுக்களுடன் முன்னேறினாள்.
அருகிலோ, சுற்றியிருந்தவர்களோ அவளது கவனத்தில் இல்லை.
அவள் பிரியா.
பிரியா என்ற பிரியதர்ஷினி.
வேகமாகச் சாலையைக் கடந்து, தான் வேலை செய்யும் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
ட்ரெயினில் இருந்து இறங்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த பரத், அவள் இறங்கியதும் அவளுக்குப் பின்னால் இறங்கினான். ஆனால் ஒரு நொடி மட்டுமே அவளைப் பார்த்துவிட்டு, தன் வேலையை நோக்கி வேறு பாதையில் நகர்ந்து விட்டான்.
அவள் மீதான அவனது பார்வை, ட்ரெயினில் இருக்கும் அந்த சில நிமிடங்கள் மட்டுமே.
மற்றபடி அவனது செயலோ, நடத்தையோ, பார்வையோ இதுவரை அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ததில்லை.
அவனது பார்வை பற்றி அவளுக்குத் தெரியுமா?
அதை உணர்ந்திருக்கிறாளா?
அதற்கான பதில் அவளுக்கு மட்டுமே தெரியும்.
இருவரும் தங்களது பாதைகளில், தங்களது வேலைகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள்.
அலுவலகத்திற்குள் நுழைந்த பிரியா, இவ்வளவு நேரம் இருந்த பதட்டத்தை சற்றே தணித்துக் கொண்டாள். பஞ்ச் மெஷினில் வருகையைப் பதிவு செய்தவள்,
"நேரத்துக்கு வந்துட்டோம்..."
என்று பெருமூச்சு விட்டாள்.
பின்னர் ஹேண்ட்பேக்கில் இருந்த ஐடி கார்டை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்.
எதிரில் வந்தவர்களுக்கு சிநேகப் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு, தன் இருக்கையை அடைந்தாள்.
அமர்ந்தவள், தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினாள்.
இதுதான் பிரியா.
இங்கு பரத்தும் வேறு பாதையில் சென்று, தான் வேலை செய்யும் இடத்திற்கு வந்தவுடன் பெருமூச்சு விட்டபடி ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான். தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் ஒற்றியவன், சோர்வைத் துடைத்துக் கொண்டான்.
"என்னடா மச்சான்? இன்னைக்கும் அவசர அவசரமாத்தான் ஓடி வந்தியா?" என்று அவனது நண்பன் அவன் முதுகில் தட்டினான்.
"கொன்றுவேன்! பார்த்துக்க..." என்று விரல் நீட்டி மிரட்டினான் பரத்.
"என்னத்துக்கு இவ்வளவு அவசர அவசரமா வரணும் சொல்லு? ஏன் இதுக்கு முன்னாடி வரும் ட்ரெயினைப் பிடிச்சு வர வேண்டியதுதானே? நேரத்துக்கு வீட்டுல உனக்குச் சாப்பாடும் கட்டிக் கொடுத்துடுறாங்க. அப்புறம் எதுக்காக இந்த ட்ரெயின்லதான் வருவேன்னு அடம் பிடிக்கிற? வீட்டிலிருந்து பைக்கில் வந்தா டிராஃபிக்கில் சிக்கி லேட் ஆகும்னு ட்ரெயின்ல வர்ற. அப்பவும் முன்னாடி வர்ற ட்ரெயினை விட்டுட்டு, இந்த ட்ரெயின்லதான் தினமும் வரணும்னு ஒத்தக் கால்ல நிக்கிற?" என்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்தபடி, ஆழமாக அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.
நண்பனைப் பற்றி அறியாதவன் அல்ல அவன்.
அவன் நண்பன் சசிதரன்.
"டேய் சசி! இந்தக் கேள்வியை இப்ப இல்ல, இன்னும் எத்தனை வருஷம் கேட்டாலும் பதில் கிடைக்காதுன்னு உனக்கும் தெரியும். அப்புறம் எதுக்குக் கேட்கிற? விட்டுத்தள்ளு. இப்போ வேலையைப் பார்க்கலாம் வா. இருக்கிற வேலையை விட்டுட்டு, என்னை நோண்டுறதையே ஒரு வேலையா வச்சுக்கிட்டு திரிய வேண்டியது..." என்று அவன் முதுகில் ஒன்றைப் போட்டவன், தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
"உன் கூட எல்லாம் பழக்க வழக்கம் வச்சுக்கிட்டு இருக்கிறதுக்கு எனக்குத் தேவை தான் டா.." என்று தன் தலையில் தட்டிக்கொண்டு அவனும் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.
இருவரும் சேர்ந்துதான் இப்போது ஒரு சிறிய கம்பெனியைத் தொடங்கியிருந்தனர்.
பக்கத்திலேயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, பிரிண்ட் அவுட், ஸ்கேனிங், லாமினேஷன், ப்ராஜெக்ட் பைல்கள் தயாரித்துக் கொடுப்பது, லோகோ டிசைன் செய்து கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
அருகில் கல்லூரி மற்றும் பள்ளிகள் இருந்ததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான வேலைகள் அதிகமாக வரும் என்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்து, இரண்டு வருடங்களாகக் கடையை நடத்தி வந்தனர்.
கடையின் தினசரி வேலைகளை கவனிக்க ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திவிட்டு, அருகிலேயே ஒரு சிறிய அலுவலகத்தை எடுத்து, தங்களது படிப்புக்கு ஏற்ற ஐடி சம்பந்தமான வேலைகளையும் ஆரம்பித்திருந்தனர்.
சிறு சிறு ப்ராஜெக்ட்களை எடுத்து நடத்திக் கொண்டிருந்தனர்.
இதற்கு முன்பு வரை வேறு ஒரு கம்பெனியில் வேலை செய்தவர்கள். செய்த வேலைக்குப் பலனாக லட்சக்கணக்கில் சம்பளமும் கிடைத்தது. ஆனால் வீட்டை விட்டு வெளியூரில் வேலை செய்ததால், குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசையில், சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு இப்போது தாங்களாகவே சிறியதாக ஒரு தொழிலைத் தொடங்கியிருந்தனர்.
தங்களது முழு உழைப்பையும் கொடுத்து, தங்கள் மீது நம்பிக்கை வைத்து, தனியாக ஆரம்பித்திருந்தனர் நண்பர்கள் இருவரும்.
சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்பதால், ஒருவருக்கு ஒருவர் மீது நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.
மணி இரவு ஏழரையைத் தொட்டது.
"மச்சி... மணி ஏழரைடா!" என்றான் சசி.
"அதுக்கு என்ன இப்போ? நீ என்ன மாச சம்பளத்துக்கா வேலை பார்க்கிற? டைம் ஆயிடுச்சுன்னா சோறு என்ற கணக்கா, நேரத்துக்கு வீட்டுக்குக் கிளம்ப?" என்று வேலை பார்த்துக் கொண்டே பதில் கொடுத்தான் பரத்.
நண்பனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன், "அதை நான் கேட்கணும் மாப்ள. நீதான் அப்பப்போ மாச சம்பளக்காரன் மாதிரி ஏழரை மணி ஆனதும் கிடுகிடுன்னு ஓடி, அரை மணி நேரம் கழிச்சு திரும்ப ஓடிவருவ. அதான் ஞாபகப்படுத்தலாம்னு நல்ல எண்ணத்துல சொன்னேன்..." என்றான்.
சிஸ்டமில் இருந்த கண்ணை அவன் பக்கம் திருப்பிய பரத், பார்வையாலேயே எரித்து விடுவது போல முறைத்தான்.
உடனே சசி வாயில் கையை வைத்து,"சரி சரி... பொத்திக்கிட்டு வேலையைப் பார்க்கிறேன்!" என்றான்.
"உண்மையைச் சொன்னா சாருக்கு அப்படியே பொத்துக்கிட்டு வந்துடுமே..." என்று முணுமுணுத்தான்.
"உனக்கெல்லாம் என் தங்கச்சிதான் டா சரியா இருக்கும். வாயைக் கூட கோணி ஊசி வச்சு தச்சி விடலாம்னு நினைக்கிறேன்!" என்று பரத் கூறி முடிப்பதற்குள், சசிதரனின் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.
"உன் தங்கச்சிக்கு நூறு ஆயுசு மச்சி! சொல்லி வாயை மூடல, அதுக்குள்ள கூப்பிட்டுட்டா பாரு..." என்று தன் சட்டைப் பையில் இருந்த போனை எடுத்தான்.
இவ்வளவு நேரம் இருந்த குரல் மாறி,"சொல்லு ரேக்ஸ்..." என்றான்.
"எனக்கு வரும்போது சிக்கன் பிரியாணி வாங்கிட்டு வாங்க..." என்றாள் அவள் எடுத்த எடுப்பிலேயே.
"அடியே! இந்த நேரத்துல யாராவது சிக்கன் பிரியாணி சாப்பிடுவாங்களா?"
"எந்த நேரமா இருந்தாலும் சாப்பிடணும்னா சாப்பிட்டுத்தான் ஆகணும்."
"வயித்துல புள்ளையை வச்சுக்கிட்டு ராத்திரி நேரத்துல பிரியாணி சாப்பிடக் கூடாதும்மா. உடம்புக்கு ஒத்துக்காது இல்ல..." என்றான் பாவமாக.
"நாளைக்கு மதியமா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டுப் போறேன்..." என்று கொஞ்சினான்.
"எனக்கு இப்பவே வேணும்!"
"அடம் பிடிக்காதடி. திரும்பத் திரும்ப சொல்ல மாட்டேன். இந்த நேரத்துல சாப்பிட்டுட்டு ஏதாவது பிரச்சனையை இழுத்து விட்டுட்டு இருக்காத."
"ப்ச்! இந்த நேரத்துலதான் புடிச்சதை சாப்பிடணும்னு சொல்றீங்க. ஆனா புடிச்சதை கேட்டா வாங்கி மட்டும் கொடுத்துடாதீங்க!" என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
"இவளை வச்சுக்கிட்டு..." என்று முணுமுணுத்தான் சசி.
"சரி... டென்ஷன் ஆகாத. விடுடா..." என்றான் பரத்.
"உன் தங்கச்சிக்கு இந்த நேரத்துல பிரியாணி வேணும்ன்றா. வாங்கிக் கொடுத்தா வீட்ல இருக்கிறவங்க திட்டுறது மட்டும் இல்ல. இவளே விடிய விடிய என்ன தூங்க விடாம படாதபாடு படுத்துவா.
வாங்கிக் கொடுத்தா விடியுற வரை வாந்தி எடுத்துட்டு, வயிறு வலிக்குதுன்னு உட்கார்ந்திருப்பா. அப்புறம் வீட்டுல இருக்கிறவங்க என்னைத்தான் பிடிச்சு திட்டுவாங்க. அவளை ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டாங்க.
அவ ஆசைக்காக வாங்கிக் கொடுக்கவும் முடியல. வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியல. இந்த மாதிரி நேரத்துலதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..." என்றான் வருத்தமாக.
"விடு மச்சான். எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவா தங்கச்சி."
"யாரு? உன் தங்கச்சியா? புரிய வச்சுக் காட்டு பார்க்கலாம்."
"தங்கச்சி வேணாம்னு இப்ப சொல்லிட்டா என்ன பண்ணுவ? இதை மொத்தமும் என் பேர்ல எழுதி வச்சிடுவியா?"
இப்போது அவனை முறைத்தான் சசி."கழுதை! எதுக்கு அடி போடுதுன்னு பாத்தியா? இதுக்கு நான் அவ கேட்ட பிரியாணியை வாங்கிக் கொடுத்துட்டே போயிடுவேன். போடா எருமை!" என்று அவன் முதுகில் தட்டினான் சசி.
பின் புன்னகையுடன்,"உனக்கு இல்லாததா மச்சான்? அதுக்கு ஏன்டா பெட் கட்டணும்? நானே உனக்குத்தான்!" என்று அவன் தோளில் கை போட்டான் சசி.
"ச்சீ! அவனா நீ!" என்று அவன் கையைத் தட்டிவிட்ட பரத், சிரித்துக் கொண்டான்.

Author: STN - 24
Article Title: நிழலை கடந்த காதல் -1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.