பிரியா கூறிய அனைத்தையும் கேட்ட பிறகு பரத்தால் உடனடியாக எதுவும் பேச முடியவில்லை.
அவனது மனம் கனத்துப் போயிருந்தது.
தன்னெதிரே அமர்ந்திருப்பவள் இத்தனை வலிகளையும், இத்தனை இழப்புகளையும் கடந்துவந்து நிற்கிறாள் என்பதை அவனால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவனை அறியாமல் அவனது கை முட்டிகள் இறுகின. தாடை அழுந்த மூடியது.
நெஞ்சுக்குள் ஏதோ பாரமான கல் ஒன்று அமர்ந்தது போல மூச்சு விடுவதற்கே சிரமமாக இருந்தது.
ஒரு பக்கம் விக்ரம் மற்றும் அவனது குடும்பத்தினர் மீது அடக்க முடியாத கோபம் எழுந்தது.
இன்னொரு பக்கம், இந்த வயதில் தனது வாழ்க்கையையே ஒதுக்கி வைத்து அண்ணன் மகனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரியாவின் மீது அளவில்லாத மதிப்பு தோன்றியது.
எவ்வளவு நேரம் கடந்தது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
அவனது பார்வை தருணின் மீதே நிலைத்திருந்தது.
தாய் தந்தை இருவரையும் இழந்தும், எதுவும் அறியாமல் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனைப் பார்த்தபோது அவனது மனம் மேலும் கனத்தது.
அப்போது திடீரென்று தூக்கத்திலிருந்த தருண் சிணுங்கினான்.
சிறிது நேரத்திலே,"அம்மா..."
என்று முனகியபடியே அழ ஆரம்பித்தான்.
உடனே தன் எண்ணங்களில் இருந்து வெளியே வந்த பிரியா வேகமாக அவனைத் தூக்கிக் கொண்டாள்.
"ஒன்னுமில்லை கண்ணா... நா இங்கதான் இருக்கேன்..." என்று அவனது முதுகை வருடிக் கொடுக்க, தருண் கண்களைத் திறக்காமலேயே அவளது தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
அந்தக் காட்சியை பார்த்த பரத்தின் நெஞ்சில் ஏதோ ஒன்று இறுகியது.
தாய் இல்லை.தந்தை இல்லை.
ஆனால் இவளின் அரவணைப்பில் அந்தக் குழந்தை தன் உலகத்தையே கண்டுபிடித்திருந்தான்.
"அதுக்கப்புறம் அவனும் ஃபாரின் போயிட்டான். அவன் போனதுக்கப்புறம் தான் எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.
அப்போ தம்பியோட முழுப் பொறுப்பும் என்னோடதான் இருந்துச்சு. நான் அப்போ காலேஜ் பைனல் இயர் படிச்சிட்டு இருந்தேன். ஒரு மாசம் வரை காலேஜ்க்கு கூட போகாம வீட்டில்தான் இருந்தேன்.
அதுக்கப்புறம் அப்பாதான் கொஞ்சம் கொஞ்சமா தெளிவடைஞ்சார்.
வீட்டை நான் பாத்துக்கறேன். நீ முதல்ல படிப்பை முடி. அம்மா வீட்டில்தான் இருப்பா. தருணை பாத்துப்பா...ன்னு சொல்லி என்னை காலேஜ்க்கு அனுப்பி வச்சார்.
அண்ணனோட நண்பர்களும் எங்களை விட்டுடலை. அப்பாவுக்கு அவரால செய்ய முடிஞ்ச ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தாங்க. அப்பாவும் மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சார்.
அம்மா வீட்டிலிருந்து தருணை பாத்துக்கிட்டாங்க. நான் காலேஜ் முடிச்சுட்டு வந்ததுக்கப்புறம் அவன் முழுக்க என் பொறுப்புதான்.
ஒரு வழியா என்னோட படிப்பும் முடிஞ்சுச்சு.
ஆனா, அப்பா எங்களுக்காக இந்த வயசுலயும் ஓடி ஓடி வேலை செய்றதை என்னால பாத்துட்டு இருக்க முடியல.
அண்ணன் வேலைக்குப் போக ஆரம்பிச்ச நாள்ல இருந்தே, நீங்க வீட்டிலேயே இருங்கன்னு கெஞ்சி கூத்தாடி மூணு மாசத்துக்கு முன்னாடிதான் அப்பாவை வீட்டில உட்கார வச்சிருந்தார்.
அப்படி இருக்கும்போது, எங்களுக்காக அப்பா மறுபடியும் வேலைக்குப் போறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
அதே நேரம் என்ன செய்யறதுன்னும் தெரியல.
அப்போதான் என்னோட பிரண்ட்ஸ் கிட்ட இதைப் பத்தி பேசினேன்.
அப்போ என்னோட ஒரு பிரெண்ட், அவங்க அண்ணன் வேலை செய்ற இந்த கம்பெனியைப் பத்தி சொன்னா.
நல்ல கம்பெனி... புதுசா வர்றவங்களுக்கு வேலை கத்துக்கொடுத்து நல்ல சம்பளமும் தருவாங்கன்னு சொன்னா.
நானும் அண்ணனோட நண்பர்கள் மூலமா விசாரிச்சேன். எல்லாமே சரியா இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் இங்க வேலைக்கு வர ஆரம்பிச்சேன்.
இப்போ ஓரளவுக்கு குடும்பமும் நல்லா போயிட்டு இருக்கு.
அம்மா தருணை பாத்துப்பாங்க. நான் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் அவனை நானே பாத்துப்பேன்.
அப்பாவை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னாலும், பொம்பள புள்ளைய வேலைக்கு அனுப்பிட்டு நான் வீட்டில உட்கார்ந்திருக்க முடியாதுன்னு அவரால முடிஞ்ச அளவுக்கு இன்னும் வேலை செய்றாரு.
இருந்தாலும் எனக்குத்தான் மனசு கேட்காது.இப்படியே நாலு வருஷம் ஓடிடுச்சு.
இந்த இடைப்பட்ட காலத்துல விக்ரம் பத்தி எந்த தகவலும் இல்லை. அவனும் எங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கல.
அதனால நாங்க கொஞ்சம் நிம்மதியா இருந்தோம்.ஆனா...
ஒரு வாரத்துக்கு முன்னாடிதான்,
ஃபாரின்ல இருந்து வந்துட்டேன்னு சொல்லிட்டு திடீர்னு என் கண்ணு முன்னாடி வந்து நின்னான்.
அது மட்டும் இல்ல...நேரா எங்க வீட்டுக்கே வந்துட்டான்...
வந்தவன் எப்படி போனானோ, அப்படியே தான் திரும்பி வந்திருந்தான். அவனோட முதல் பேச்சிலேயே அது புரிஞ்சிடுச்சு.
வீட்டுக்குள்ள வந்ததும், கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம என் பக்கத்துல வந்து என் கன்னத்தை தட்டி, நான் போகும்போது எப்படி இருந்தியோ, இன்னும் அப்படியே தான் இருக்க. வயசு கூட கூட இன்னும் அழகா மாறிட்டே போறன்னு பேச ஆரம்பிச்சான்.
அவன் பார்வையும் பேச்சும் எனக்கு அருவருப்பாக இருந்தது.
உடம்பே கூசிப் போன மாதிரி உணர்ந்தேன். உடனே அவன்கிட்ட இருந்து விலகி நின்னேன்.
அப்போ தம்பி வேகமா ஓடி வந்து என் காலைக் கட்டிக்கிட்டான்.
நானும் அவனைத் தூக்கிக்கிட்டு ஒரு ஓரமா போய் நின்னுக்கிட்டேன்.
அதுக்குள்ள அப்பா வந்து, எதுக்குடா இங்க வந்திருக்க?ன்னு கோபமா கேட்டாங்க.அக்கம் பக்கத்துல இருந்தவங்களும் சத்தம் கேட்டு கூட ஆரம்பிச்சாங்க.
ஆனா அவனோ எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா நின்னு,நான் சொல்றது ஒரே ஒரு விஷயம் தான். உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. அதுக்கு மேல எனக்கு வேற எதுவும் தேவையில்லைன்னு சொன்னான்.
அப்புறம் தம்பியைப் பார்த்து,
அவனைப் பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். அவனையும் சேர்த்து நான் பார்த்துக்கறேன்ன்னு சொன்னான்.
அந்த ஒரு நிமிஷத்துல எனக்கு அவன் மேல இருந்த கொஞ்சநஞ்ச மரியாதை கூட இல்லாம போயிடுச்சு.தன் அக்கா மகன் மேல ஒரு துளி பாசமோ, அக்கறையோ அவன் கண்களில் தெரியல.
தம்பி ஒரு குழந்தைங்கிற உணர்வே இல்லாம, என் வாழ்க்கைக்கு இடையூறா நிக்கிற ஒரு பொருளை மாதிரி தான் அவன் பார்த்தான்.அதுதான் என்னை ரொம்ப உடைச்சது.
அவன் என்னைப் பத்திப் பேசிய விதமும், என்னைப் பார்த்த பார்வையும், என்னை உயிரும் உணர்வும் உள்ள மனுஷியா இல்லாம, ஏதோ ஒரு பொருளா நினைக்கிறானோன்னு அருவருப்பை ஏற்படுத்துச்சு.
அதுல இருந்து அவனைப் பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு."
"சுற்றி இருந்த அக்கம் பக்கத்தினரும், அண்ணனோட நண்பர்களும் எல்லாரும் சேர்ந்து அவனை வெளியே அனுப்ப முயற்சி செய்தாங்க.
போதும்! கிளம்பு வெளியே! என எல்லாரும் சத்தம் போட்டாங்க.
ஆனா அவன் அசரவே இல்லை.
ஆன,அப்போ தான் நாங்க யாருமே எதிர்பார்க்காத விஷயம் அது.
அதுவரைக்கும் தம்பியைப் பற்றி ஒரு வார்த்தை கூட , அக்கறையோட பேசாதவன், திடீர்னு அவனைப் பற்றிதான் பேச ஆரம்பிச்சான்.
இது என்னோட அக்கா பையன். உங்களை விட எனக்குத்தான் அவன் மேல உரிமை அதிகம். சட்டப்படி கூட நான் கேட்கலாம்..
நீங்க என்ன வசதி வச்சிருக்கீங்க? உங்களுக்கும் வயசாயிடுச்சு. உங்க பொண்ணுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு. நாளைக்கு அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னா இந்த பையனை யார் பார்த்துப்பாங்க?"னு கேட்டான்.
அவனோட வார்த்தைகள் எங்களுக்கு பேரிடியாக இருந்தது..
"ஆனா என்கிட்ட சொத்தும் இருக்கு, வசதியும் இருக்கு. என் அக்கா பையனை நல்லா வளர்க்க முடியும். வேணும்னா கோர்ட்டுக்கு போயி கேஸ் போடுவேன். அப்போ என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்னு மிரட்டினான்.
அந்த நிமிஷம் தான் எங்களுக்கு ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுச்சு.
அவனுக்கு தம்பி மேல பாசம் இல்லை. அவனை ஒரு காரணமா மட்டும் பயன்படுத்திக்கிட்டு இருந்தான்.
நான் ஏற்கனவே சொன்னேனே... எனக்கு உங்க பொண்ணு தான் வேணும். அவளை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. அவ கூட இந்த பையன் வந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை.
என்று சொல்லும்போது,
தம்பியைப் பற்றிய அக்கறை அவன் குரலில் இல்லை.
என்னை அடையணும் என்ற பிடிவாதம் மட்டும் தான் இருந்தது.
அந்த ஒரு நிமிஷத்தில் அவன் உண்மையான முகம் எங்களுக்கு முழுசாக தெரிஞ்சுபோச்சு.
அவன் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னை அருவருக்க வைத்தது."
"அவன் வந்து பேசிட்டு போனதுக்கு அப்புறம் ஒரு நாள் முழுக்க வீட்டிலேயே இருந்தேன்.
ஆனா அதுக்கு மேல என்னால வீட்டுக்குள்ள முடங்கிக்கிடக்க முடியல.அவனுக்குப் பயந்து வீட்டிலேயே இருந்தா எதுவும் சரியாகப் போகாது.
எங்க வாழ்வாதாரத்துக்கும் பணம் தேவைப்படுது. அதனால நான் வேலைக்கு போய்தான் ஆகணும்.
என்ன செய்யறதுன்னு புரியாம ஒரு நாள் முழுக்க தவிச்சேன்.
அதுக்கப்புறம் தான் யோசிச்சேன்...
எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்ன்னு.
அதுவரைக்கும் பயந்து இருந்த மனசு கொஞ்சம் தெளிவாக ஆரம்பிச்சது.
தம்பி பிறந்த நாளிலிருந்து, அண்ணி இறந்ததுக்குப் பிறகும் சரி, அவனை வளர்த்ததும், பார்த்துக்கிட்டதும், பாதுகாத்ததும் நாங்க தான்.
அதுக்கான சாட்சியும், ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு. அண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட நாளிலிருந்து அவங்க வீட்டு ஆளுங்களுக்கு அவங்க கூட எந்த தொடர்பும் இல்லை.
இப்போ திடீர்னு வந்து பேரன் மேல பாசம் வந்த மாதிரி நடிக்கிறதால எதுவும் மாறப்போறதில்லைன்னு புரிய ஆரம்பிச்சது.
அவன் கேஸ் போட்டாலும் பணத்தை வைத்து மிரட்டலாம்.
ஆனா உண்மை எங்க பக்கம் தான் இருக்குன்னு நம்பிக்கை வந்தது.
அதுக்கப்புறம் தான் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.
ஆனா இன்னொரு பயம் இருந்தது.
அப்பாவும் அம்மாவும் வயசானவங்க.அவங்களை நம்பி தம்பியை விட்டுட்டு வர மனசு வரல.வீட்டிலேயே இருந்தாலும் பயம்.வேலைக்கு வந்தாலும் பயம்.
அதனால தான் அவனை என் கூடவே கூட்டிட்டு வர ஆரம்பிச்சேன்.ஆபீஸ்ல காரணம் கேட்டப்போ, உடம்பு சரியில்லாத குழந்தை, வீட்டில் பார்த்துக்க ஆள் இல்லைன்னு சொல்லி சமாளிச்சேன்.
நல்லவேளையா அங்க இருந்தவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. அவன் தூங்குற நேரத்துல பாத்ரூம் கிளீன் பண்ற அக்காவும், டைல்ஸ் துடைக்குற அக்காவும் பார்த்துக்கறோம்னு உதவி பண்ணாங்க.
அதனால கொஞ்சம் நிம்மதியா இருந்தது.அவன் முழிச்சிட்டு இருக்க நேரம் முழுக்க என் கூடவே இருப்பான்.தூங்குற நேரம் மட்டும் அவங்களை நம்பி கொஞ்ச நேரம் விட்டுட்டு வேலை பார்ப்பேன்.
விக்ரமோட நோக்கம் தம்பி இல்லைன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு.அவனோட பார்வையும், பேச்சும், செயலும் எல்லாமே அதைத் தெளிவா காட்டுச்சு.
அதனால தம்பியை நெருங்கி ஏதாவது செய்வானோன்னு இருந்த பயம் கொஞ்சம் குறைஞ்சது.ஆனாலும் முழுசா நிம்மதி இல்லை.
வீட்டில் இருந்தா அப்பா அம்மாவை தம்பியை வச்சி மிரட்டிடுவானோன்னு பயமா இருந்தது.
அதனால தான் என் கையோடவே அவனை கூட்டிட்டு வர ஆரம்பிச்சேன்.முதல் மூணு நாளும் அவன் எங்க பின்னாடி வந்துடுவானோன்னு பயந்துட்டே இருந்தேன்...ஆனா அவன் வரல.
இப்போதான் ஃபாரின்ல இருந்து வந்திருக்கான். வேற வேலையில பிஸியா இருந்திருப்பானோன்னு நினைச்சேன்.
ஆனா இப்ப இரண்டு நாளா திரும்ப ட்ரெயின்ல வந்து மிரட்ட ஆரம்பிச்சுட்டான். நீங்க நேத்தும் இன்னைக்கும் பார்த்தது அதுதான்..." என்று சொல்லி முடித்தவள், இதுவரை அடக்கி வைத்திருந்த சோர்வை ஒரே மூச்சில் வெளியே விட்டாள்.
தலையை கைகளுக்கு கொடுத்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் தலையை உலுக்கி விட்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்து ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்..
மனதில் இருந்த அத்தனை பாரமும் குறைந்தது போன்று உணர்வு அவளுக்கு... யாரிடமாவது மனதை திறந்து அனைத்தையும் கொட்டி விடமாட்டோமோ ?என்று இருந்தாள். ஆனால் அந்த அளவிற்கு நெருக்கமான நட்பு வட்டம் அவள் அமைத்துக் கொள்ளவில்லை..
அண்ணன் இறப்பிற்கு முன்பு அவளுக்கு நட்பு வட்டம் இருந்தது . இருந்தாலும் அந்த அளவிற்கு நெருக்கமாக என்று யாரும் கிடையாது.இப்பொழுது அவளே யாரிடமும் பெரிதாக தேவைக்கு தாண்டி பேசுவதில்லை. அப்படி இருக்க யாரிடமும் மனம் திறந்து கூற முடியவில்லை.
அப்பா அம்மா வயசானவர்கள் அக்கம் பக்கத்தினரிடமும் கூற முடியாது என்று இத்தனை நாட்களாக மனதிற்குள் பூட்டி வைத்திருந்த அனைத்து வலிகளையும் எதிரில் நம்பிக்கையான ஒரு ஆள் கேட்கிறான் என்றவுடன் மொத்தமாக கொட்டி தீர்த்து விட்டாள்..