சசி, காதல் மனைவியின் கால்களை வெந்நீரில் வைத்து எடுத்தவன், சிறிது நேரம் அவளது கால்களில் இருந்த ஈரத்தைத் துடைத்து விட்டு,"நேரம் ஆகுது... தூங்கு," என்றான்.
அவளும் அவனது நெஞ்சில் வந்து வாகாகத் தலை சாய்த்துக் கொண்டாள்.
அவனும் மெல்லிய சிரிப்புடன் அவளைத் தட்டிக் கொடுக்க, சிறிது நேரத்திலேயே தூங்கிவிட்டாள். அவளை மெதுவாகத் தலையணையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.
"தூங்கிட்டாளாடா?" என்றார் தெய்வானை.
"தூங்கிட்டா மா."
"சரிடா, நீ வந்து சாப்பிடு. நேரம் ஆகுது பாரு."
"சரி," என்று தன் தாய் பரிமாறிய உணவைச் சாப்பிட்டவன், சிறிது நேரம் தாயுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
"டேய், புள்ளைக்கு வயிறு இறங்கிட்டே வருது. எப்ப வேணாலும் பிரசவம் ஆகலாம் டா. அதனால்தான் அவளுக்கு ரொம்பவே உன்னைத் தேடுது. அதுக்காகத்தான் தினமும் எதையாவது சொல்லி உன் கிட்ட பாட்டு வாங்கிக்கிறா."
"சரிம்மா" எனத் தலை அசைத்துக் கேட்டுக் கொண்டான்.
"முடிஞ்ச அளவுக்கு கொஞ்ச நாளைக்கு சீக்கிரம் வரப் பாருடா," என்றார்.
சரி என்று தலையசைத்தான்.
"உன்கிட்ட சொல்றதுக்கு என் மருமகன் கிட்ட சொல்லிட்டுப் போயிடலாம்" என்று அவன் தலையில் தட்டிவிட்டு எழுந்து சென்றார்.
அவனும் சிரித்தவன், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அப்போதுதான் தனது போனையே எடுத்துப் பார்த்தான்.
வீட்டிற்கு வந்த பிறகு, அவளுக்கான நேரம் என்று முடிவு செய்திருந்ததால், போனை சைலண்டில் போட்டிருந்தான்.
இப்போதுதான் பாக்கெட்டிலிருந்து போனை எடுக்க, தனது நண்பன் ஒரே ஒரு முறை மட்டும் அழைத்திருப்பதைப் பார்த்து அவனுக்கு அழைத்தான்.
"பஞ்ச பரதேசி நாயே! வீட்டுக்குப் போயிட்டு தங்கச்சி என்ன சொல்லுதுன்னு கேட்கலாம்னு போட்டா, ஒரு வார்த்தை பதில் சொல்லிட்டு அந்த போனை அமுத்தி போட்டா என்ன ? ரொம்ப எகத்தாளம் கூடிப் போச்சுடி உனக்கு!" என்று முனங்கியவன்,
"தூங்கிட்டாளா? இல்லையா?" என்றான் அக்கறையாக.
"தூங்கின பிறகுதான் உனக்கு அழைக்கவே முடியும்," என்று இவனும் சொல்ல,
"சரிடா. இனி தினமும் சீக்கிரம் வீட்டுக்குப் போயிடு. அவளும் உன்னை வீட்டுக்கு வர வைக்க ஏதாவது ஒரு வேலை பண்ணி உன்கிட்ட திட்டு வாங்கிக்கிட்டே இருக்கா. இனி சும்மா சும்மா நிறைமாதமா இருக்கிற புள்ளையைத் திட்டாதடா.
அம்மா வீட்டுக்கு மதியம் வந்தாங்களாம். வயிறு இறங்கி இருக்கு. எப்ப வேணாலும் குழந்தை பிறக்கலாம்னு சொல்றாங்க. முடிஞ்ச அளவுக்கு சாயங்காலம் நாலு, அஞ்சு மணிக்கே கிளம்பிடு," என்றான்.
"டேய், என்ன குடும்பத்தோட நினைச்சுட்டு இருக்கீங்க? வீட்டுலதான் அம்மாவும் அப்பாவும் அவ கூட துணைக்கு எப்பவும் இருக்காங்க. பக்கத்திலேயே அத்தையும் நம்ம வினியும் இருக்கா. பின்ன என்ன?
ஏதாவது அவசரம்னாலும் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போக ஆள் இருக்காங்க. ஒரு போன் பண்ணா அரை மணி நேரம், மிச்சம் போனா முக்கால் மணி நேரத்துக்குள்ள வந்துடப் போறேன்," என்றான் அசட்டையாக.
அவனைப் பொறுத்தவரை, அவள் நிறைமாதமாக இருந்ததிலிருந்து அதிகமாக வேலையை விட்டுவிட்டு பாதி நேரம் வீட்டில்தான் இருக்கிறான். அவனது வேலையையும் பரத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அங்கும் வேலையை அவன்தான் அதிகமாகப் பார்க்கிறான். ஒரு சில நேரம் வீட்டிற்கு வந்தும் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறான். காலையிலும் நேரம் கழித்துத்தான் செல்கிறான் சசி. மாலையும் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விடுகிறான்.
திருமணம் ஆன புதிதில் கூட இரவு ஒன்பது, ஒன்பதரை மணி வரை இங்கிருந்து விட்டு அதன் பிறகுதான் வீட்டிற்குச் செல்வான்.
இப்போது அவள் நிறைமாதமாக இருந்ததிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான். அதுவும் ஆரம்பத்தில் அவள் மசக்கையில் வாந்தி எடுத்தபடி இருக்க, மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிடுவான்.
வாந்தி நின்ற பிறகு, ஒரு இரண்டு மாதங்கள் மட்டுமே இரவு எட்டு, எட்டரை மணி வரை இருந்திருப்பான். மீண்டும் ஆறு, ஏழு மணிக்கே அவனை வீட்டிற்கு வர வைத்துவிட்டாள்.
அவனுக்குப் போன் செய்து ஏதாவது வேண்டும் என்று கேட்டு அழைப்பாள்.
அவனுக்கும் தெரியுமே, தன்னைத் தேடுவதால்தான் நேரில் வர வைக்கிறாள் என்று. இல்லை என்றால் தந்தையிடமே வாங்கி வரச் சொல்லிவிடுவாள். அல்லது பரத்தின் தங்கை வினிதாவிடம் வாங்கி வந்து கொடுக்கச் சொல்லிவிடுவான்.
அதையும் தாண்டி, வீட்டில் பெரியவர்கள் இருவர் இருக்க, அவள் கேட்பதற்கு முன்பாகவே அவள் ஆசைப்பட்டதைச் செய்து கொடுத்து விடுவார்கள்.
அவளது நோக்கம் தன்னவனின் அருகாமை என்பதை உணர்ந்தவர்களும் அமைதியாகி விடுவார்கள்.
சசி பேசி முடிக்க, அருகில் இருந்தால் தன் நண்பனைப் பஸ்பமாக்கிவிடுவது போல எரித்திருப்பான் பரத்.
ஆனால் தூரத்தில் இருக்க, அமைதியைக் கடைப்பிடித்தான்.
"வீட்டுக்கு வந்துட்டியா மச்சி?"
"ஹம்... வந்துட்டேன் டா. வினி ப்ராஜெக்ட் சம்பந்தமா ஹெல்ப் பண்ணக் கூப்பிட்டு இருந்தா. அதான் நானும் கடையில இருக்கிற பையன்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டேன்."
"சரி," என்றவனுக்குக் கண்ணைச் சொக்க,
"சரிடா மச்சான், தூக்கம் வருது," என்று போனை வைத்துவிட்டான்.
பரத் சிரித்துக்கொண்டே தன் தங்கைக்கு உதவ ஆரம்பித்துவிட்டான்.
பரத்தும் சசியும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.
பரத்தின் அப்பா தெய்வநாயகம், அம்மா பானுமதி. தந்தை மூன்று வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்திருந்தார். இப்போது தாய் பானுமதியும் தங்கை வினிதாவும் மட்டுமே.
தந்தையின் இறப்பிற்குப் பிறகுதான் தாய்க்கும் தங்கைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெளியூரில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊரில் வந்து புதிதாகத் தொழில் தொடங்கியிருந்தான்.
உடன் சசியும் சேர்ந்துகொண்டான்.
"நீ வேலைக்கு போடா. நான் இங்க வேற ஏதாவது பார்த்துக்கிறேன்," என்று கூறியதற்கு, சசியின் முறைப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
அவனின் முறைப்பில் பரத் அமைதியாகிவிட்டான்.
அவ்வப்போது அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார் சசியின் அப்பா சுந்தரம்.
சசிக்கு உடன்பிறந்தோர் யாரும் கிடையாது.
சசியின் அப்பா சுந்தரம், அம்மா தெய்வானை.
மறுநாள் விடியலில் நண்பனின் வீடு தேடி வந்திருந்தான் பரத்.
"வாங்கண்ணா," என்று வரவேற்று அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் ரேகா.
வாங்கிக் குடித்துவிட்டு, அவளை உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டவன்,
"இப்போ எப்படி இருக்கு? லாஸ்ட்டா ஸ்கேன் பண்ணதுல என்ன சொன்னாங்க?" என்று கேட்டான்.
அவளும் அவனுக்கு விவரத்தைக் கூறினாள்.
தெய்வானை இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
"எனக்கு வேணாம் அத்தை. டீ, காபி குடிக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு. நெஞ்சு கரிக்கிற மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. நீங்க குடிங்க அண்ணா," என்றாள்.
சிரித்துக் கொண்டவன்,
"ஏதாவது பண்ணுதுனா சொல்லு," என்றான்.
"வீட்லதான் அத்தையும் மாமாவும் இருக்காங்களே அண்ணா. அப்புறம் என்ன?" என்றாள்.
அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன்,"அப்போ உன் புருஷன்?" என்றான்.
அவளும் சிரித்துக் கொண்டே,
"அவரும் தான். என்ன இருந்தாலும் அவரை நான் ரொம்பவே டிஸ்டர்ப் பண்றேன் இல்லையா? எனக்கே தெரியுது. ஆனா என்னால என்னைக் கன்ட்ரோல் பண்ண முடியல. வேணும்னு செய்யலண்ணா," என்றாள் சிறிது சங்கடமாக.
அவள் கையைப் பிடித்துக் கொண்டவன்,"இதுல என்ன இருக்கு? குழந்தை பிறந்து கொஞ்ச நாள் வரைக்கும் அவனும் உன்னைப் பார்த்துக்கட்டும். உங்களைப் பார்க்கிறதும் அவனோட கடமை தானே!" என்றான்.
"அப்படிச் சொல்லுடா என் மருமகனே! அதை மட்டும் சொல்லிட்டா போதும். உன் நண்பனுக்கு மூக்கு மேல கோபம் வந்துடும்," என்றார் தெய்வானை.
தாயையும் நண்பனையும் முறைத்துக் கொண்டே, வாட்சை கட்டிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தான் சசி.
"நீ ஒருத்தனே போதும்டா என்ன ஆஃப் பண்ண," என்று அவன் தோளில் தட்டிவிட்டு, அவன் அருகில் உட்கார்ந்து கொண்டவன், அவளுக்காக எடுத்துக் கொண்டு வந்த டீயை எடுத்து ஒவ்வொரு மிடறாகக் குடித்தான்.
"சூடு கொஞ்சம் கம்மியா இருக்கு," என்றான்.
"அது எனக்கு எடுத்துட்டு வந்தது," என்றாள் ரேகா.
"இருக்கட்டும். நீ குடிச்சா என்ன? நான் குடிச்சா என்ன?" என்றான்.
அவளோ முறைக்க, அதைக் கண்டுகொள்ளாமல்,
"சரி மச்சான், என்ன காலையிலேயே இவ்வளவு தூரம் வந்திருக்க? என்கூட வரப் போறியோ?" என்று சத்தமாக கேட்டவன்.
"ட்ரெயின்ல வந்தாதான் உன்னால மூச்சுவிட முடியும்," என்று அவன் காதைக் கடித்தான் சசி.
"வெளிய வாடி மாப்ள, உனக்கு இருக்கு," என்றான் பற்களுக்கு இடையில் வார்த்தைகளைத் துப்பி பரத்.
"என்னடா உங்களுக்குள்ள ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?" என்றபடி வந்தார் சுந்தரம்.
"ஒன்னும் இல்ல மாமா," என்றான் அவசரமாக பரத்.
"அதுவா? சொல்ற அன்னைக்கு சொல்றேன். அதுக்கு இன்னும் நேரம் வரல," என்றான் சசி.
ஒரு மார்க்கமாக தன் மகனையும் மருமகனையும் மேலும் கீழும் பார்த்தவர்,
"சரி சரி. அது வர அன்னைக்கு பார்ப்போம். இப்போ இரண்டு பேரும் வேலையை விட்டுட்டு இங்க என்னடா வந்து உக்காந்து இருக்கீங்க? நேத்து ரெண்டு பேருமே சீக்கிரம் வந்துட்டீங்க போல. கேள்விப்பட்டேன்," என்றார்.
"இவருக்கு மட்டும் எப்படித்தான் செய்தி வருமோ தெரியல," என்று சசி முனக,
"முணுகுறதை விட்டுட்டு சாப்பிட்டுக் கிளம்புற வேலையைப் பாருங்கடா," என்றவர் மருமகள் கையில் ஆப்பத்தை கொண்டு வந்து வைத்தார்.
"என்னப்பா இது? கடையில வாங்கித் தராதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது?"
"டேய்! நான் ஒன்னும் கடையில வாங்கிட்டு வரல. தங்கச்சிதான் கொடுத்து அனுப்புச்சு. கூப்பிடக் கூப்பிட இவன் காதுல வாங்காம வேகமா இங்க வந்துட்டானாம். அப்போ ஆப்பமும் ரெடி ஆகலையாம். இவன் வேலைக்குப் போகும்போது கொடுத்து அனுப்பலாம்னு பார்த்திருக்கா.
நேரம் ஆகவும் வினிதா எடுத்துட்டு வந்தா. நான் இருக்கவும் அவளுக்கு காலேஜுக்கு லேட்டாகுதுன்னு என் கிட்ட கொடுத்துட்டுப் போயிட்டா," என்றார்.
"சரி," என்று தலையசைத்துச் சாப்பிட்டுவிட்டு, மனைவியிடம் கூறிவிட்டு,
"டிஸ்டர்ப் பண்ணாதடி ரேக்ஸ்," என்று பொறுமையாகச் சொன்னவன், அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனின் கையைப் பிடித்தாள்.
"என்னடி? ஏதாவது பண்ணுதா?"
"இல்லை," என்று தலையசைத்தவள், அவனது நெற்றியில் இதழ் பதித்தாள்.
"சரி," என்று அவன் சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு, அவள் இதழில் பட்டும் படாமல் முத்தமிட்டவன்,
"ரேக்ஸ், டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னுதான் சொன்னேன். அதுக்காக வலி வந்து என்கிட்ட சொல்லாம இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. சரியா?
அப்பாவும் அம்மாவும் இருக்காங்கன்ற தைரியத்தில்தான் போறேன். லூசு மாதிரி ஏதாவது பண்ணி வைக்காத," என்றான் காதலாக அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து.
அவளும் தலையசைத்தாள்.
அவனின் கையை எடுத்து அவளது வயிற்றில் வைத்தாள். குழந்தையின் அசைவு அவனை ஒரு வித சிலிர்ப்பில் ஆழ்த்தியது.
கீழே குனிந்து வயிற்றில் முத்தமிட்டவன்,"குட்டிமா, அம்மாவை ரொம்ப தொந்தரவு பண்ணக்கூடாது சரியா?" என்று கூறி, அம்மா மகள் இருவருக்கும் மீண்டும் ஒருமுறை முத்தத்தைப் பரிசளித்தான்.
நேரமாவதை உணர்ந்து கிளம்பினான்.
"என்னடா, நீயும் இன்னைக்கு பைக்கிலே வரியா?" என்றான் சசி.
"ஆமா. நிறைய வேலை இருக்கு. வா, போகலாம்," என்றான் பரத்.
"அப்போ உன் இஷ்ட தெய்வத்தை தரிசிக்கப் போகலையா?" என்றான் நக்கலாக.
அவன் பின்மண்டையில் ஒன்று போட்டவன்,"மூடிட்டு வாடி," என்றபடியே பைக்கை உயிர்ப்பித்தான்.
இவனும் சிரித்துக்கொண்டே,
"ஒரு நாள் இல்ல, ஒருநாள் சிக்குவ. அன்னிக்கு இருக்கு," என்றபடியே நண்பனின் பின்னால் ஏறி அமர்ந்தான்.
இருவரும் வேலை செய்யும் இடம் நோக்கிக் கிளம்பினர்.