விக்ரம் பேசிய வார்த்தைகள் தொடர்ந்து பரத்தின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன.
'அவளுக்கென்ன பிரச்சனை?
அவளிடம் போய் கேட்கலாமா?
உதவி செய்ய முடியும்னா செய்யலாமா?' என்ற எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எழுந்தன.
ஏதோ ஒரு உந்துதல் அவனை அவளருகே செல்லத் தூண்டியது.
ஆனால் அடுத்த நொடியே தன்னைத் தானே நிறுத்திக் கொண்டான்.'நீ யாரு?
இத்தனை பேருக்கு நடுவுல உனக்கு மட்டும் அவளைப் பற்றிய அக்கறை ஏன்?என்ன உரிமையில கேட்கப் போற?' என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது.
அது மட்டுமல்ல.'ஒருவேளை இது அவர்களுடைய தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையாக இருந்தால்?அதில் தான் தலையிடுவது சரியாக இருக்குமா?என்னதான் அவளை நேசித்திருந்தாலும், அது ஒரு தலைக்காதல் தானே? அவள் தன்னை நேசிக்கவில்லை.
அவளுக்கு தான் யாரென்றே தெரியாது.'என இப்படி பலவிதமாக யோசித்தவன், இறுதியில் அமைதியாக நின்றுவிட்டான்.
ஆனால்...அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனை விட்டு அகலவில்லை.
அவன் இறங்குமிடம் வந்தது.
அனைவரும் இறங்க ஆரம்பித்தனர்.பரத்தும் இறங்கினான்.
வழக்கம் போல இப்போதும் பிரியா செல்லும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது தான் ஒன்று நடந்தது.
கூட்டத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்த பிரியா திடீரென தடுமாறினாள்.
ஒரு கையால் அருகில் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டாள்.
அவளது முகம் வெளிறிப் போயிருந்தது. கண்களை இறுக மூடியபடி நின்றாள்.
"அம்மா... அம்மா..." என்று தருண் சத்தமாக அழைத்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்த பரத்தின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.
அவளைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால் அவனது கால்கள் அவளருகே ஓடிவிட்டன தன்னை மீறி."பிரியா..." என்று அழைத்துவிட்டு அருகில் சென்று நின்றான்.
அவளும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
"என்னாச்சு? உங்களுக்கு ?" என்று பதட்டமாகக் கேள்வி எழுப்பினான்.
அவன் முகத்தில் இருந்த உண்மையான அக்கறையைப் பார்த்தவள், யாரோ ஒருவர் உதவிக்கு வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில்,"ஒன்னுமில்ல சார்..."
என்றாள் மெதுவாக..
ஆனால், அவளது குரலிலேயே சோர்வு தெரிந்தது. தன்னைச் சமாளித்துக் கொள்ள முயன்றாள்.
அப்போது தருண் மீண்டும் அவளது முந்தியை பிடித்து இழுத்தான்."அம்மா..."
என.
"என்னடா செல்லம்?"என்று அவள் அவனை அணைத்துக் கொண்டாள்.
"பப்பு..."என்று குழந்தை உதட்டை பிதுக்கினான்.
அப்போதுதான் அவனுக்குப் பசி என்று புரிந்தது.
"அம்மா வச்சிருக்கேண்டா தங்கம்..."என்று சமாதானப்படுத்த முயன்றாள்.
ஆனால் அவளது குரலிலும் சக்தி இல்லை.
அவசரத்தில் குழந்தைக்காக எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்பது அவளுக்கே அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
"சரி வாடா செல்லம்.அம்மா வாங்கித் தரேன்."என்று கூறியபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடக்க முயன்றாள்.
ஆனால் மீண்டும் தலை சுற்றியது.
ஒரு நொடி கண்கள் இருண்டது போல உணர்ந்தாள்.
விக்ரமின் மிரட்டல்கள்... தூக்கமின்மை... கடந்த சில நாட்களாக இருந்த மன அழுத்தம்...
ஒழுங்காக சாப்பிடாதது...
எல்லாமே சேர்ந்து அவளை முற்றிலும் சோர்வடைய வைத்திருந்தது.
அதைப் பார்த்த பரத்தால் இனியும் அமைதியாக ஒதுங்கி நிற்க முடியவில்லை.
"நீங்க வாங்க.பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு.அங்க போய் உட்காரலாம்.தண்ணீர் குடிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. அப்படியே குழந்தைக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பீங்க.."என்றான் மெதுவாக.
பிரியா ஒரு நொடி தயங்கினாள்.
அறிமுகமில்லாத ஆண்.இதுவரை பேசிப் பழகியதும் இல்லை.
ஆனால் அந்த நேரத்தில் அவளால் மறுக்கவும் முடியவில்லை.
"வேண்டாம் சார்..." என்று மெதுவாகச் சொல்ல முயன்றாள்.
"முதல்ல நீங்க வாங்க.. ரொம்ப சோர்வா தெரியுறீங்க.. பிள்ளையும் பசிக்குதுன்னு சொல்லுது.."என்று அவன் மென்மையாகக் கூறி அவளுக்காக இல்லையென்றாலும் குழந்தையை காரணம் காட்டினாள் வருவாள் என்பதால் குழந்தையை காரணம் காட்டினான்.
குழந்தையை வாங்கிக்கொள்ள கை நீட்டினான்.ஆனால் பிரியா உடனே தருணை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளது அணைப்பில் இருந்த பதட்டத்தை பரத் கவனித்தான்.
ஒரு நொடி அவனது மனம் வலித்தது.உடனே கையைப் பின்வாங்கிக் கொண்டான்.
"சரி...வாங்க."என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
இருவருக்கும் இடையில் தேவையான தூரத்தை வைத்தபடியே நடந்தான்.
பிரியாவும் தருணைத் தூக்கிக்கொண்டு அவனுடன் சென்றாள்.
சில நிமிடங்களில் அருகில் இருந்த சிறிய காபி ஷாப்பை அடைந்தனர்.
கதவைத் திறந்து விட்டு அவள் உள்ளே செல்ல வழிவிட்டான் பரத்.
அவள் மெதுவாக உள்ளே சென்று அமர்ந்தபோது, கடந்த பல நாட்களாக அவளை வாட்டிய சோர்வு முழுவதும் முகத்தில் தெரிந்தது.அதைப் பார்த்த பரத்தின் மனதில் மீண்டும் அதே கேள்வி எழுந்தது. 'உண்மையிலேயே இவளுக்கு என்ன பிரச்சனை?'
ஆனால் இம்முறை...அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்குக் கிடைக்கப் போகிறது என்பதை அவன் இன்னும் அறிந்திருக்கவில்லை.
முதலில் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து அவளிடம் நீட்டினான் பரத்.
"முதல்ல கொஞ்சம் தண்ணீர் குடிங்க."என்று கூற, பிரியாவும் மறுக்காமல் வாங்கிக் குடித்தாள்.
அதன்பிறகு அவனது பார்வை தருணின் மீது சென்றது. அவன் பசியோடு இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
"தம்பிக்கு.? பால் குடிப்பானா? இல்ல வேற ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"என்று மெதுவாகக் கேட்டான்.
உடனே தருணை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்ட பிரியா,"பால்... பிஸ்கட் இருந்தா போதும் சார்."என்றாள்.
"சரி."என்று தலையசைத்தவன், வேகமாக அங்கிருந்து எழுந்து சென்றான்.
சில நிமிடங்களில் ஒரு கப் சூடான பாலும், சில பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான்.
அவற்றை மெதுவாக அவளருகில் நகர்த்தி வைத்தவன்,"சூடு அதிகமா இருக்காது. பார்த்துக்கோங்க." என்று மட்டும் கூறிவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தான்.
பிரியாவும் எதுவும் பேசாமல் பாலை வாங்கிக் கொண்டாள்.
"தருண்... பால் குடிக்கலாமா கண்ணா?"என்று மெதுவாகக் கேட்க,
அவனும் பசியோடு இருந்ததால் அமைதியாக வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.
பிஸ்கட்டையும் சிறுசிறு துண்டுகளாக உடைத்து அவனுக்குக் கொடுத்தாள்.
பரத் அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியில் ஒரு தாயின் சோர்வும், பாசமும் ஒன்றாகத் தெரிந்தது.பசி அடங்கியதும் தருணின் கண்கள் மெதுவாக சொருக ஆரம்பித்தன.
காலையில் அவன் தூங்கும் நேரம் என்பதால், தூக்கம் அவனை இழுத்துக் கொண்டிருந்தது.
"தூக்கம் வருதாடா தங்கம்?"என்று அவன் தலையை வருடினாள் பிரியா.
தருண் பதில் சொல்லாமல் அவளது தோளில் சாய்ந்து கொண்டான். சில நொடிகளில் அவனது கண்கள் முழுவதுமாக மூடிக் கொண்டன.
அவளின் தோளில் முகம் புதைத்தபடியே உறங்கிப் போனான்.அவனது சிறிய கரங்கள் இன்னும் அவளது புடவையை பற்றியபடியே இருந்தன.
அதைப் பார்த்த பிரியாவின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்தது. அந்த புன்னகையில் தான் அவளின் உயிர்ப்பு இருக்கிறது.
அதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த பரத், எதுவும் பேசவில்லை.
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையையும், அவனை நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்திருந்த பிரியாவையும் பார்த்தபோது, அவனுக்குள் இருந்த கேள்விகள் மட்டும் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.
பிரியா அமைதியாக அமர்ந்திருந்தாள்.தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த தருணின் முதுகை மெதுவாக வருடிக் கொண்டே.
பரத் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்தாலும், அவளை சங்கடப்படுத்தாத அளவுக்கு மட்டுமே பேசிக் கொண்டிருந்தான்.
அவள் சற்று நிதானமான பிறகுதான் மீண்டும் மெதுவாகக் கேட்டான்."தப்பா எடுத்துக்காதீங்க... உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கலாமா? நானும் கொஞ்ச நாளாவே உங்களை கவனிச்சிட்டு இருக்கேன்.நீங்க சரியா இல்லன்னு தோணுது."
என்றான்.
பிரியா மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனது கண்களில் ஆர்வம் இல்லை.பரிதாபம் இல்லை.
அனுதாபம் இல்லை. உண்மையான அக்கறை மட்டும் இருந்தது.அதை அவளால் உணர முடிந்தது.
உண்மையில் அவளும் அவனை கவனித்திருக்கிறாள்.
எத்தனை மாதங்களாக இந்த ரயில் பயணம்.எப்போதும் தூரத்தில் நின்று பார்ப்பான்.
ஆனால் ஒருநாள்கூட எல்லை மீறி நடந்ததில்லை.தவறான பார்வையும் இல்லை. அநாகரிகமான அணுகுமுறையும் இல்லை.இன்று கூட அவளுக்கு பிரச்சனை என்று தெரிந்தவுடன் தான் அருகில் வந்து நிற்கிறான்.
அந்த எண்ணம் அவளுக்குள் ஒரு சிறிய நம்பிக்கையை உருவாக்கியது.ஆனால்...
நம்பிக்கை வந்தாலே எல்லாவற்றையும் சொல்ல முடியுமா?ஆழமாக ஒரு மூச்சை இழுத்துவிட்டாள்.
அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.
அதைப் பார்த்த பரத்,"சொல்ல விருப்பம் இல்லன்னா பரவாயில்லை."என்றான்.
"ஆனா ரொம்ப மனசுக்குள்ளேயே போட்டு அழுத்தி வச்சிருக்கீங்க போல.அதனால தான் இவ்வளவு சோர்ந்து போயிருக்கீங்க.டயர்டா இருக்கீங்க." என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்டவளுக்கு ஒரு கசப்பான சிரிப்பு வந்தது.
'சொல்லிட்டா மட்டும் என் பிரச்சனை தீர்ந்திடுமா?'என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்.
ஆனால், அதை வெளியில் சொல்லவில்லை.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன்,"சரி..."என்று பேச்சை மாற்றினான்.
"ஏதாவது சாப்பிடுறீங்களா?காலையில சாப்பிட்டீங்களா இல்லையா?" என்று கேட்டான்.
"எனக்கு எதுவும் வேணாம் சார்."
என்று மறுத்தாள் உடனடியாக.
உடனே பரத் சிரித்தான்."அப்போ...
என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை வரலையா?"என்று கேட்டான் உள்ளுக்குள் ஏற்பட்ட வலியுடன்,
அந்தக் கேள்வியில் குற்றச்சாட்டு இல்லை.வருத்தம் மட்டும் இருந்தது.
பிரியா ஒரு நொடி அவனைப் பார்த்தாள்.பின் மெதுவாக எழுந்து நிற்க முயன்றாள்.
அதைப் பார்த்த பரத்,"இப்பவும் எதுவும் சொல்லாம போறீங்களா?"
என்று சிறிய வலியுடன் கேட்டான்.
அந்த வார்த்தையில் அப்படியே அவள் நின்றுவிட்டாள்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,"நம்பிக்கை இருக்கா இல்லையான்னு சொல்ற அளவுக்கு மனநிலையில நான் இல்லை."என்றவள்,"ஆனா...என்னோட விஷயத்தை நான் தானே பாத்துக்கணும்.உங்ககிட்ட சொல்றதால எதுவும் சரியாகப் போறது இல்ல."என்று கசப்பாக கூறினாள்.
வேகமாக அவனோ,"ஏன் அப்படி நினைக்கிறீங்க? மனசு விட்டு பேசுனா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.உங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குதோ இல்லையோ... கொஞ்சம் பாரம் குறையும். ஒருவேளை தீர்வு ஏதாவது இருக்கான்னு நானும் யோசிக்கலாம்.இல்லன்னாலும்...
நீங்க தனியா சுமக்குற சுமைய கொஞ்சம் பகிர்ந்துக்கலாம்."
என்றான்.
பிரியா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தனக்காக ஒருவன் இவ்வளவு பொறுமையாகப் பேசுவது எத்தனை வருடங்களுக்கு பிறகு?
என்று நினைத்தாள்.
அவளுக்கே நினைவில்லை.
விக்ரமுடன் பேசிய ஒவ்வொரு உரையாடலும் சண்டையாகவே முடிந்திருந்தது.
அப்பா,அம்மாவிடம் சொல்ல முடியாது.உறவினர்களிடம் சொல்ல விருப்பமில்லை.
நண்பர்கள் யாரும் இல்லை.
இத்தனை வருடங்களாக எல்லாவற்றையும் தனியாகவே சுமந்து வந்திருக்கிறாள்.
இப்போது எதிரே அமர்ந்திருக்கும் இந்த இவன் மட்டும்... எந்த பலனும் எதிர்பார்க்காமல் அவளுக்காகக் கவலைப்படுகிறான்.
அந்த எண்ணமே அவளது கண்களை மீண்டும் கலங்க வைத்தது.
தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த தருணை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டாள்.
பிறகு மெதுவாக அவனைத் தூக்கி அருகில் இருந்த நீளமான பெஞ்சில் படுக்க வைத்தாள்.
குழந்தை அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தவள், அருகில் அமர்ந்தாள்.
ஒரு கையை தலையில் தாங்கிக் கொண்டு கண்களை மூடினாள்.
பல வருடங்களாக சுமந்து வந்த பாரம் மீண்டும் மனதை அழுத்தியது.
பரத் எதுவும் பேசவில்லை. அவளை அவசரப்படுத்தவும் இல்லை. அமைதியாக காத்திருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து...
கண்களைத் திறந்த பிரியா,
"எங்கிருந்து ஆரம்பிக்கறதுன்னே தெரியல..." என்று மெதுவாக கடந்த காலத்தை கூற வாய் திறந்தாள்.
அவளது குரலில் இருந்த சோர்வையும், உடைந்த மனதையும் கேட்ட பரத், அவள் முதல் முறையாக தனது மனக்கதவைத் திறக்கப் போகிறாள் என்பதை உணர்ந்தான்.