பிரியா பேச ஆரம்பித்தவுடன், பல வருடங்களாக அவளின் மனதிற்குள் அடைத்து வைத்திருந்த காயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்தன.
தூங்கிக் கொண்டிருந்த தருணின் தலையை மெதுவாக வருடியபடி கூற ஆரம்பித்தாள்"நான்... அப்பா, அம்மா, ஒரு அண்ணன்..." என்று ஆரம்பித்தவளின் குரல் ஏற்கனவே உடைந்திருந்தது.
"சின்ன குருவிக்கூடு மாதிரி குடும்பம் சார்..." என்று கூறியபோது அவளது கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிந்தது.
பரத் எதுவும் பேசவில்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"எங்க அண்ணன் பாலா... அவரும் ஸ்வேதா அண்ணியும் காலேஜ் டைம்ல இருந்தே காதலிச்சாங்க. எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும்.ஒரு ஸ்டேஜ்ல அண்ணி வீட்டுல கல்யாணம் பத்தி பேச்சு வந்த உடனே, அண்ணனை விரும்புறதா சொல்லிட்டாங்க. அப்போ தான் பிரச்சனை ஆரம்பிச்சது."கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"எங்க அண்ணனை பத்தி விசாரிச்சவங்க, அவங்க வீட்டு வசதியோட ஒப்பிடும்போது நாங்க ரொம்ப சாதாரணம்னு தெரிஞ்ச உடனே...இந்த வீட்டுல என் பொண்ண கட்டி கொடுக்க மாட்டேன்ன்னு பிடிவாதமா நின்னுட்டாங்க..அண்ணி வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்,இல்லனா செத்துப் போயிடுவேன்னு வரைக்கும் சொல்லிட்டாங்க.
அண்ணனும் போய்ப் பேசினார்.
அப்பாவும் அம்மாவும் போய்ப் பேசினாங்க.எல்லாரும் போய்ப் பேசினாங்க.ஆனா..."என்று சிரிக்க முயன்றாள்.அந்த சிரிப்பில் வேதனை மட்டுமே நிறைந்து இருந்தது.
"'எங்க பொண்ணு நாங்க சொல்றவனை தான் கல்யாணம் பண்ணணும். இல்லன்னா எங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க."
அங்கு சில நொடிகள் அமைதி நிலவியது.
"அவங்க நினைச்சது என்ன தெரியுமா சார்? வசதியா வளர்ந்த பொண்ணு...எங்க வீட்டுல வந்து கஷ்டப்பட முடியாது. கொஞ்ச நாள் இருந்துட்டு திரும்ப ஓடி வந்துடுவானு அதுக்காக காத்திருந்தாங்க."பிரியாவின் உதடுகளில் இந்த முறை உண்மையான புன்னகை மலர்ந்தது.."ஆனா... எங்க அண்ணி அவங்க எண்ணத்தை தோற்கடிச்சிட்டாங்க. கல்யாணம் ஆன மூணே மாசத்துல மொத்தமா எங்க வீட்டு பொண்ணா மாறிட்டாங்க. எங்க வீட்டு வசதிக்கு தகுந்த மாதிரி வாழ்ந்தாங்க. எங்களோட சேர்ந்து சிரிச்சாங்க.
எங்களோட சேர்ந்து கஷ்டப்பட்டாங்க.அண்ணன் மேல மட்டும் இல்ல...என் மேல... அப்பா அம்மா மேல...எல்லார்மேலும் அவ்வளவு அன்பு வச்சிருந்தாங்க."
என கூறும் பொழுதே அந்த நினைவுகள் அவளது முகத்தில் சில நொடிகள் ஒளியை கொண்டு வந்தன.
"ரொம்ப சந்தோஷமா இருந்தோம் சார்.அதுக்கப்புறம் மூணு மாசம் கழிச்சு...அண்ணி கர்ப்பமானாங்க. வீட்டுல எல்லாரும் சந்தோஷமா இருந்தோம்.புது வரவுக்காக காத்திருந்தோம்." ஆனா அந்த மகிழ்ச்சி கொஞ்ச நாள் மட்டுமே நீடித்தது.
"அண்ணி கர்ப்பமா இருக்கிறது. அவங்க அப்பா அம்மாவுக்கு பேரிடியா இருந்திருக்கு. பொண்ணு எப்படியும் திரும்பி வருவான்னு நினைச்சுட்டு இருந்தவங்களுக்கு... அண்ணியோட இந்த கர்ப்பம் பெரிய அதிர்ச்சியா இருந்திருக்கு."
அவளது குரல் மீண்டும் கனத்தது.
"கர்ப்பமானதுக்கு அப்புறமும் அண்ணிய கூப்பிட்டு நிறைய பேசினாங்க. இப்படிப்பட்ட வீட்டுல நீ வாழணுமா? இப்படிப்பட்ட ஒருத்தனோட பிள்ளையை நீ சுமக்கணுமா? இன்னும் உனக்கான டைம் இருக்கு, திரும்பி வானு எவ்வளவோ சொன்னாங்க.
ஆனா அண்ணி..."என்ற பிரியாவின் குரலில் பெருமை , கர்வம் வெளிப்பட்டது..
"நீங்கதான் என்ன தலைமுழுகிட்டீங்களே.நான் உங்களைத் தேடி வரல.என்னை நிம்மதியா வாழ விடுங்கனு.. அவங்க முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க.அதுக்கப்புறம் அவங்க அப்பா அம்மாவும் கோபத்துல போயிட்டாங்க."
பரத் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
பிரியா மீண்டும் தொடர்ந்தாள்.
"ஒருநாள் ஆஸ்பிட்டல்ல அவங்களைப் பார்க்க நேர்ந்துச்சு.. அப்பவும் அண்ணியை திட்டிட்டு போயிட்டாங்க. அப்போ தான் வளைகாப்பு வைக்கணும்னு பேச்சு வந்தது. எப்படியும் பெத்தவங்க கூட இருக்கணும்னு அண்ணி ஏங்கினாங்க. அதைப் பார்த்து எங்க அப்பா அம்மா...அண்ணன்...
எல்லாரும் சேர்ந்து திரும்ப அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசினாங்க. ஆனா..."என்றவளின்
குரல் நடுங்கியது.
"அவ மாசமா இருந்தா எங்களுக்கு என்ன?புள்ள பெத்தா எங்களுக்கு என்ன?எங்களை விட்டுடுங்க.
இதை சாக்கா வச்சு காசு பணம் புடுங்க குடும்பத்தோட வந்திருக்கீங்களா?னு ரொம்ப கீழ்த்தரமா பேசினாங்க."
பரத்தின் புருவங்கள் சுருங்கின.
அவன் எதுவும் பேசவில்லை.
"அது தெரிஞ்ச உடனே அண்ணி மொத்தமா உடைஞ்சிட்டாங்க.
அவங்க மனசுல இருந்த கடைசி நம்பிக்கையும் போயிடுச்சு. அவங்க அப்பா அம்மா பேசுனதுல கோபமும் வந்துடுச்சு.. அதுக்கப்புறம் நேரா அவங்க வீட்டுக்கே போயிட்டாங்க.
என் குடும்பத்து ஆட்கள் உங்ககிட்ட வந்து பேசுனது, உங்க பணத்துக்காக இல்ல.
என் ஆசைக்காக.என் ஏக்கத்துக்காக.ஆனா நீங்க உங்க பணக்கார புத்தியதான் காட்டினீங்க.உங்க பணமும் வேணாம்.இனி உங்க உறவும் வேணாம்.இனிமே யாரும் எங்களைத் தேடி வராதீங்கனு
சொல்லிட்டு வந்துட்டாங்க."
அதன் பின் சில நொடிகள் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்தாள்.
தருணின் சிறிய விரல்களை தன் விரல்களுக்குள் பிடித்துக் கொண்டாள்.அந்த பழைய நினைவுகள் மீண்டும் அவளை நொறுக்கிக் கொண்டிருந்தன.
பரத் அவளுக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை மெதுவாக அவள் பக்கம் நகர்த்தினான்.
இன்னும் அவளது கதையின் வேதனையான பகுதி தொடங்கவே இல்லை என்பதை அவனால் உணர முடிந்தது.
"அண்ணிக்கும் குழந்தை பிறந்துச்சு..."என்று சொல்லியவளின் முகத்தில் முதல் முறையாக ஒரு மென்மையான புன்னகை தோன்றியது.
"அண்ணியோட அப்பா அம்மா வரவே இல்லை. குழந்தைய பார்க்க கூட வரல. ஆரம்பத்துல அண்ணிக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.ஆனா அவங்க பேசுன பேச்சுக்கு அப்புறம்...அவங்கள நினைக்கிறதையே நிறுத்திட்டாங்க.அண்ணனோட அன்பு...எங்க வீட்டோட பாசம்...
இதெல்லாமே அந்தக் காயத்த மறக்க வச்சிடுச்சு."என்று கூறியவள், தூங்கிக் கொண்டிருந்த தருணின் தலையை மெதுவாக வருடினாள்.
"அதையும் தாண்டி... குட்டிப் பையன்."என்று அவனைப் பார்த்து சிரித்தாள்.
"மொத்தமா அண்ணிய அவன் பக்கம் இழுத்துட்டான்.அவன் பிறந்ததுக்கப்புறம் எங்க குடும்பம் இன்னும் சந்தோஷமா மாறிடுச்சு.
உண்மையா சொல்லணும்னா...
அவன் தான் என்னோட உலகம்."
அந்த வார்த்தையில் இருந்த பாசம் பரத்தையே நெகிழ வைத்தது.
"பால் குடிக்கிற நேரம் தாண்டி...
மத்த நேரம் ஃபுல்லா என்னோட பொறுப்பு. காலேஜ் முடிஞ்சு வந்தா என் கூடத்தான் இருப்பான்.
வளர வளர... அம்மாவை விட என்னையே அதிகமா தேட ஆரம்பிச்சுட்டான்." என்று கூறியவள் தருணின் கன்னத்தை வருடினாள்.
அந்தத் தொடுதலில் ஒரு தாயின் பாசம் இருந்தது.ஆனால்...
அவள் சொல்லும் கதையில் ஏதோ ஒன்று பரத்தின் மனதைத் தட்ட ஆரம்பித்தது.
"தம்பி பிறந்து எட்டு மாசம் இருக்கும்.அப்போ அண்ணனோட பிரண்டுக்கு கல்யாணம்னு.. அண்ணனும் அண்ணியும் போறதா இருந்தாங்க. தம்பியையும் கூட்டிட்டு போறதா இருந்தாங்க.ஆனா அவன் ரொம்ப அழுதான். என்கூட தான் இருப்பேன்னு அடம்பிடிச்சான்.
நான் தான் இருக்கட்டும்.ராத்திரி நேரம். நீங்க கூட்டிட்டு போக வேண்டாம்னு சொன்னேன்."
அவ்வளவு நேரம் அமைதியாக பேசியவளின் குரல் திடீரென உடைந்தது.
தருணை தன்னோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டாள்."அன்னைக்கு... நா.."
என்று தொடங்கியவள் சில நொடிகள் பேச முடியாமல் தவித்தாள் வேதனையில் தத்தளித்தாள்.
"அன்னைக்கு நான் அவனை அனுப்பி வச்சிருந்தா... இன்னைக்கு அவனும் இருந்து இருக்க மாட்டான்."என்றாள்.
அந்த வார்த்தையைக் கேட்ட பரத்தின் இதயம் ஒரு நொடி நின்றது.
' தம்பி (குட்டி பையன்)... அண்ணன்... அண்ணி...
எட்டு மாச குழந்தை...'
என்று அவன் மனம் வேகமாக கணக்குப் போட ஆரம்பித்தது.
'ஒரு வேலை...அந்தக் குழந்தை...
தருணா...? அப்போது இவன் அவளுடைய மகன் இல்லையா...?'
என்ற எண்ணம் முதல் முறையாக அவன் மனதில் தோன்றியது.
ஆனால் அந்த எண்ணத்தை வளர்க்கும் முன்பே, பிரியா தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
தருணை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் தன்னோடு பிரியா.அவனது நெற்றியில் முத்தமிட்டவள், அவன் தலைமுடியை வருடிக் கொண்டே பேசத் தொடங்கினாள்.
"அன்னைக்கு நான் தான் அவனை என் கூட வச்சுக்கிறேன்னு சொன்னேன். அன்னைக்கு அவன் என் கூட இருக்கணும்னு அடம்பிடிக்கலைனா... அண்ணனோட கூட போயிருப்பான்.அன்னைக்கு...
அன்னைக்கு நான் அவனையும் இழந்திருப்பேன்." என்றவளின் குரல் உடைந்து போனது.
"எனக்கு இன்னொரு அப்பாவா இருந்து எல்லாமே செஞ்சவன் அண்ணன். சின்னச் சின்ன சண்டைகள் வரும்.ஆனா அடுத்த நிமிஷமே எனக்கு என்ன பிடிக்குமோ அதை வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்திடுவார். அண்ணியும் எனக்கு அண்ணியா இல்ல சார்... ஒரு நல்ல ஃப்ரெண்ட் மாதிரி இருந்தாங்க. எதையும் என்னிடம் மறைக்க மாட்டாங்க.
அவ்வளவு நெருக்கமா இருந்தோம்.ரெண்டு பேருமே எங்க வாழ்க்கையோட முக்கியமான ஆள் தான்."என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"அன்னைக்கு கல்யாணத்துக்கு கிளம்பும்போது கூட...போயிட்டு வரோம்ன்னு சிரிச்ச முகமாத்தான் போனாங்க.திரும்ப வீட்டுக்கு வரவே இல்ல. பொணமா தான் வந்தாங்க "என்றவளின் குரலில் தாங்க முடியாத வலி இருந்தது.
"அன்னைக்கு மழை ரொம்ப அதிகமா பெய்துச்சு.ரோட்டுல அங்கங்கே தண்ணீர் தேங்கி நின்னிருந்துச்சு. எதிர்ல வந்த ஆட்டோவை கவனிக்காம பைக் மோதி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.
கீழே விழுந்த வேகத்துல...
மழைத் தண்ணீர்ல பைக் வழுக்கியபடியே போய்...
எதிர்ல வந்த லாரிக்குக் கீழ விழுந்துட்டாங்க. "என்றவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அன்றைய நிகழ்வுகள் அவளது மனக்கண் முன் வந்து சென்றது.. அந்த நிகழ்வுகள் அவளை மொத்தமாக உலுக்கியது.. அவள் வாழ்வில் பெரிய இழப்பல்லவா! மொத்தமாக உடைந்து விட்டாள்.. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு இரண்டு உயிரை பறிகொடுத்து நிற்கிறாள்.. ஒன்று உடன் பிறந்தவன் இன்னொன்று அண்ணனின் உயிரானவள்..
கேவலுடன் மீண்டும் தொடர்ந்தாள்"அண்ணன்... அங்கயே...ஸ்பாட்லயே..."
என்று கூறியவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தாள். "அண்ணியை மட்டும் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருந்தாங்க. எங்களுக்கு தகவல் வந்த உடனே...நாங்க அடிச்சு பிடிச்சு ஓடிப்போனோம்.
ஆனா... நாங்க போய் சேர்றதுக்குள்ள அண்ணன் இல்ல.
அண்ணி மட்டும் தான் இருந்தாங்க. எங்களுக்கு போன் பண்ணவங்க ஆக்சிடென்ட் மட்டும் தான் சொல்லி இருந்தாங்க.." என்றவள் தருணை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
"அண்ணி...கடைசியா...என் கையைப் பிடிச்சிட்டு...அப்பா அம்மாவை பார்த்தாங்க.
அப்புறம் பையனைப் பார்த்தாங்க.
இனிமே அவன் உன்னோட பொறுப்பு பிரியா...
நாங்க இருக்கும்போதே உன்னைத்தான் அதிகமா தேடுறான். இனி அவனோட உலகம் நீ மட்டும் தான்...
என மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு மூச்சு வாங்கிய படி சொல்லிட்டு..."அவளது குரல் முற்றிலும் உடைந்தது.
"எங்களை விட்டுட்டு போயிட்டாங்க."கண்ணீரை அடக்க முடியாமல் அழுதாள்.
"அன்னைக்கு நாங்க எல்லாரும் மொத்தமா உடைஞ்சு போயிட்டோம் சார்.ஆனா...அந்த நிமிஷம் அவனோட அழுகையை கேட்டப்புறம் தான்... எங்களுக்கு நிதர்சனம் புரிஞ்சது.நாங்க அழுதுட்டே இருந்தா... அவனை யாரும் பார்க்க மாட்டாங்க. அன்னைக்கு இருந்து...
அவன் என் அண்ணன் மகன் இல்ல. என்னோட உயிர். என்னோட மொத்த உலகமும் அவன் தான்.. என் வாழ்க்கையோட அர்த்தமும் அவன் தான்... இப்போ அவனுக்காக தான் என்னோட மொத்த வாழ்க்கையும்.."
என்று கண்ணீருடன் கூறியவள், தூங்கிக் கொண்டிருந்த தருணின் நெற்றியில் மீண்டும் ஒரு முறை முத்தமிட்டாள்.
பரத்தின் மனதில்,'ஒரு வேலை... இந்த குழந்தை அவளுடைய மகன் இல்லையோ?' என்ற எண்ணம் தோன்றியது..