• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 10

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 10


நந்தினியின் மிரட்சியை கண்ட தேவயானி அதிவீரனை அழைத்தார்,

" அதி.... "

" ம்ம்ம் அம்மா "

" குமரா...... "

" சொல்லு தேவா "

" குமரா உனக்கு இப்போ எதாவது முக்கியமான வேலை இருக்கா? "

" ம்ம்ம், இல்ல தேவா ஏன் "

" அதி கூட போய் நந்தினி அப்பாவை பாத்து பேசிட்டு வரியா? "

" சரி தேவா போய்ட்டு வரேன், நீ சொல்லி மாட்டேன்னா சொல்ல போறேன். ஆமா தேவா இப்போ நந்தினி அப்பாவை பாக்குறேன் சரி ஆனா என்ன பேசணும் எத பத்தி பேசணும்ன்னு ஒன்னுமே சொல்லலையே "

" அட குமரா, நந்தினியோட அப்பா இப்போ அவளோட விடுதில தான் இருக்குறாரு "

" ஆஹா அப்படியா விஷயம். சரி தேவா அப்போ போய்ட்டு பேசிட்டு வரோம் "

" சரி குமரா போய்ட்டு வா "

இதை சற்றும் எதிர்பாராத நந்தினி மேலும் பயத்தில் மிரள ஆரம்பித்தாள்,

" அச்சோ அத்தை வேண்டாம், மாமாவும் அதியும் போனா அப்பா எப்படி இருப்பார், என்ன செய்வார்ன்னே தெரியல அதனால தயவு செஞ்சு வேண்டாம் அத்தை, என்ன நடந்தாலும் நானே போய்க்குறேன் "

" இங்க பாரு நந்தினி நீ யோசிக்குற அளவுக்கு எல்லாம் ஒன்னும் நடக்காது, விடு மாமா பாத்துக்குறேன் "

" இல்ல மாமா உங்களுக்கு அப்பாவை பத்தி தெரியாது, அவர் மரியாதை இல்லாம ஒருமையில கூட பேசிருவாரு "

" ஹா ஹா ஹா.... சரி மா ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா பாத்துக்குறேன், நீ பயப்படாம வீட்ல இரு நாங்க போய்ட்டு வந்துடுறோம், போலாமா டா அதி "

" ம்ம்ம் பாதர் போவோம் "

இருவரும் விடுதியை நெருங்கி இருந்தார்கள், அங்கு ரௌத்திரம் பொங்க வாசலை பார்த்து கொண்டிருந்தார் நந்தினியின் அப்பா கந்தசாமி.

அவரை பார்த்தவுடன் அடையாளம் காட்டினான் அதி,

" பாதர் அந்தா உயரமா உருண்டையா இருக்கார்ல அவர் தான் என் மாமனாரு "

" என்ன அதி ஆளு சரியான மொரடா இருக்காரு, நம்ம பேச்சு எடுபடுமா? "

" கொஞ்சம் கஷ்டம் தான் பாதர் ஆனாலும் முயற்சி செஞ்சு பாப்போம் " என்று சொல்லிக்கொண்டே அவரின் முன்னால் வந்து வண்டியை நிறுத்தினான் அதி.

வண்டியிலிருந்து கீழே இறங்கிய குமரன் கந்தசாமிக்கு வணக்கத்தை வைக்க பதில் வணக்கம் வைக்காமல் யார் இவன் என்பது போன்ற பார்வையை குமரன் மீது செலுத்த,

குமரன் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

" அய்யா வணக்கம் என் பேர் குமரன், உங்க பொண்ணு நந்தினி இப்போ என் வீட்ல தான் இருக்கா கொஞ்சம் என்கூட வாறீங்களா எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் "

" யோவ் யாரு யா நீ என் பொண்ண எங்க ய்யா? "

" அய்யா அதான் சொல்லிட்டேனே நா குமரன், உங்க பொண்ணு எங்க வீட்ல இருக்குன்னு. மறுபடியும் அதையே கேள்வியா கேட்டா நா என்ன பதில் சொல்லட்டும்? "

" என் பொண்ணு எதுக்கு ய்யா உன் வீட்ல இருக்கா? அவ எதுக்கு அங்க வந்தா? "

" அய்யா கொஞ்சம் சத்தத்தை குறைங்க, ஏன் இவ்ளோ சத்தம் "

" என் பொண்ண கூட்டிட்டு போய் உன் வீட்ல வச்சிட்டு சத்தம் போடுறேன்னு என்னையவும் சொல்லுறியா? இவன் யாரு யா உன் மவன் தான? "

" ஆமாங்க அய்யா ஒரே பையன் பேர் அதிவீரன். ஆளு அழகா இருக்கான்ல " குமரன் ஏன் அப்படி பேசுகிறார் என்பது அதிவீரனுக்கு புரியவில்லை,

" பாதர் ஏன் இப்படி? "

" என்னது ஆளு அழகா இருக்கானா? யோவ் வயசுக்கு வந்த பிள்ளைய அதுவும் அடுத்தவன் வீட்டு பிள்ளைய உன் வீட்டுக்கு கொண்டு போய் வச்சிட்டு இப்போ நக்கலா வேற பேசுறியா? " கந்தசாமி வெடிக்க

" தெரியுதுல வயசுக்கு வந்த பிள்ளை, அடுத்த வீட்டுக்கு போக போற பிள்ளை, அந்த பிள்ளை தங்கியிருக்குற விடுதிக்கு வந்து என்ன ஏதுன்னு தெரியாம இப்படி வார்த்தையை விடுறது மட்டும் சரியா இருக்கா? " குமரனின் கேள்வி கந்தசாமியின் கொதிப்பை அடக்கியது.

" கொஞ்சம் ஆவேசத்தை குறைச்சுட்டு என்கூட கிளம்பி வாங்க, பிள்ளை என் வீட்ல தான் இருக்கா அங்க போய் எல்லாம் பேசிக்கலாம் " நிதானமாய் சொல்ல கந்தசாமி அமைதியானார்.

" வாங்க எங்க வண்டியிலேயே வீட்டுக்கு போவோம் " குமரன் அழைக்க கந்தசாமி பேசாமல் முகத்தை திருப்பி நின்றார்.

" அய்யா வாங்க போவோம் " மறுபடியும் அழைத்த குமரன் இந்தமுறை அவரது கையை பற்றிக் கொண்டே,

" பொண்ணு பிள்ளை விஷயம் எந்த அளவுக்கு கோபம் வருதோ அந்த அளவுக்கு நிதானமும் தெளிவும் வரணும் ய்யா. பிள்ளைங்க என்ன சொல்லுது ஏது சொல்லுதுன்னு கேட்டா தான ய்யா நடந்த விஷயம் என்னன்னு தெரியும். வெறுமனே பிள்ளைங்களை பயம் காட்டி மட்டும் வளர்த்தா அந்த பிள்ளைங்களுக்கும் நமக்கு இடையில தூரம் பெருசா ஆகிடாதா? " கேள்வியில் நிறுத்தியவர்,

" நம்ம பிள்ளைங்களுக்கு எந்த சூழல் வந்தாலும் நம்ம கிட்ட வந்து தைரியமா சொல்ல கூடிய சுதந்திரம் நாம கொடுக்கணும்ல ய்யா. அப்போதான அந்த பிள்ளைங்க சின்னதா ஒரு பிரச்சனை வந்தா கூட நம்ம கிட்ட வந்து நிப்பாங்க. அப்படி நிக்க வச்சி அவங்களுக்கு நாம துணையா இருக்குறது தான சரி " என்று சொன்ன குமரன்,

" வாங்க ய்யா வீட்ல போய் நிதானமா பேசுவோம் " குரலில் தன்மை காட்டி பிடித்த கையை விடாமல் கனிவான பார்வையில் அழைக்க அவரின் பின்னால் நடந்தார் கந்தசாமி கூடவே அவரது மனைவி வள்ளியம்மையும்......

வண்டியை அதிவீரன் செலுத்தி கொண்டிருக்க குமரன் தேவயானிக்கு அழைப்பை விடுத்தார்,

" ஹான் தேவா கிளம்பிட்டோம், "

" சரி குமரா பத்திரமா வாங்க. "


நெஞ்சில் நிறைவாள்......
 
Top Bottom