அத்தியாயம் 11
" தேவா, தேவா " அழைத்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் குமரன்.
" ம்ம்ம் குமரா இதோ வந்துட்டேன் "
கையில் தண்ணீருடன் வெளியே வந்த தேவயானி,
" வாங்க வாங்க " என்று இன்முகத்தோடு கந்தசாமியையும் வள்ளியம்மையையும் வரவேற்றாள்.
பதிலுக்கு அவர்கள் இருவரிடத்திலும் சிரிப்பு இல்லை, தேவயானி கொடுத்த தண்ணீரையும் வாங்கவில்லை. அதை தவிர்த்து விட்டு,
" நந்தினி, ஏய் நந்தினி " கரகர குரலில் கடுமையாய் அழைத்தார் கந்தசாமி.
பயத்தோடு வெளியே வந்தாள் நந்தினி அவளை தொடர்ந்து ஷாலினியும் அஜித்தும் வந்தார்கள்.
" கிளம்பு வீட்டுக்கு போவோம் " நந்தினியை முறைத்து பார்த்து கொண்டே சொல்ல,
அவள் சற்று மிரண்டு கொண்டே அதிவீரனை பார்த்தாள், அவள் பார்வையை பார்த்த கந்தசாமியின் பார்வையில் ரௌத்திரம் கூடியது ஆனாலும் அதை அவர் அடக்கி கொண்டது அவரது உஷ்ண மூச்சில் தெரிந்தது. இதையெல்லாம் குமரன் தேவயானி இருவரும் கவனித்து கொண்டு தான் இருந்தார்கள், ஆனாலும் கூட அவர்கள் எதுவும் பேசவில்லை, அதிவீரனுக்கு தான் நந்தினியின் பய பார்வை உள்ளுக்குள் வரையறுக்க முடியாத வலியை கொடுத்து கொண்டிருந்தது.
இப்போது நந்தினியின் தந்தையிடம் பேசுவோமா? வேண்டாமா? அப்படி பேசினால் அவரது அணுகுமுறை எப்படி இருக்கும்? என்ற குழப்பம் அவனை தெளிவான முடிவு எடுக்க விடாமல் தடுமாற செய்தது.
அவனது தடுமாற்றம் குமரன் தேவயானிக்கு தெரிந்தாலும் கூட அவர்கள் இருவரும் அப்போதும் அமைதி தான் காத்தார்கள்.
அந்த இடைவெளியில் நந்தினியின் கையை பற்றிய கந்தசாமி, அங்கிருந்த எவரையும் சட்டை செய்யாமல் நந்தினியை அழைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
" ம்மா என்ன ம்மா இப்படி அமைதியா நின்னுடீங்க நீங்க எதாவது பேசி நந்தினி அப்பாவை சரி செய்வீங்க, சூழலை மாத்தி அவர அமைதி ஆக செய்வீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க ஏன் ம்மா எதுவுமே பேசல? நந்தினி பாவம் ம்மா அவர் வீட்டுக்கு போய் என்ன பேசுவாரு எப்படி பேசுவாரு என்ன செய்வாருன்னே தெரியாது ம்மா " தோழியை பற்றிய கவலையோடு சொன்னாள் ஷாலினி.
" அவளோட தோழி நீ அமைதியா இருக்க, அவளோட காதலன் அதியும் சும்மா இருக்கான் அப்படி இருக்கும் போது நா என்ன டா பேச? " கேள்வி கேட்டவளை நோக்கி கேள்வியை திருப்பி அனுப்பியிருந்தாள் தேவயானி.
" இல்ல ம்மா நா பேச நினைச்சேன், ஆனா, "
" ஆனா என்ன அதி? பேச நினைச்சவன் பேசியிருக்க வேண்டியது தான டா? " அவனுக்கும் அப்படியே திரும்பியது கேள்வி,
" இல்ல ம்மா நா பேசி பிரச்சனை பெருசா ஆகிற கூடாதுல " தயக்கமாக வந்தது அவன் குரல்,
" ஆமா ம்மா நாங்க பேசுறத விட நீங்க பேயிருந்தா வர பிரச்சனை கூட சுமுகமா முடிய வாய்ப்பு இருக்குது ம்மா " இது ஷாலினி.
" இங்க பாருங்க டா, எப்பவுமே பிரச்சனை வர கூடாதுன்னு நினைக்க கூடாது வர பிரச்சனையை எப்படி சமாளிக்கணும்ன்னு தான் யோசிக்கணும். அப்படி சமாளிக்கணும்னா பிரச்சனை வரணும், அப்படி அவசியம் இருக்க கூடிய பிரச்சனை தான் வரட்டுமே டா இப்போ என்ன கெட்டு போகுது சொல்லுங்க பாப்போம் "
இருவரும் அமைதியாக நின்றனர்.
" டேய் அதி, ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்க நமக்கானவனங்க தவறே செஞ்சிருந்தா கூட நாம அவங்கள விட்டு கொடுக்காம காப்பாத்த வேண்டியது நம்ம பொறுப்பு. அப்படி இருக்கும் போது அத செய்யாம வேடிக்கை பாத்துட்டு, இவங்க பேசுவாங்களா அவங்க பேசுவாங்களான்னு எதிர்பாக்குறது தப்பு. உதாரணத்துக்கு அப்பா உனக்கு ஒரு சம்பவம் சொல்லுறேன் கேளு.
அப்பா பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்த காலம், என் நண்பனோட தங்கைய ஒரு பையன் கேலி கிண்டல் பண்ணி அழுக வச்சிட்டான், இது ஒருநாள் மட்டும் இல்லாம சில நாளாவே தொடர்ந்து நடந்துட்டே இருந்துருக்கு, அவளும் பொறுத்து பொறுத்து பாத்துட்டு இதுக்கு முடிவே இல்லாம போகவும் அவ அண்ணன் கிட்ட வந்து விஷயத்தை சொல்லிட்டா, உடனே அவன் என்ன செஞ்சான் எங்க நண்பர்கள் கூட்டத்துல வந்து விஷயத்தை சொன்னான். அப்போ நாங்க எல்லாம் எங்களுக்கு தெரிஞ்ச வகையில பேசி, கேலி கிண்டல் பண்ணுன அந்த பயல அடிச்சே ஆகணும்ங்குற முடிவுக்கு வந்து அவங்க தெரு உள்ளயே போய்ட்டோம். நாங்க ஒரு கூட்டமா போகவும் அந்த தெருவுல இருந்த கொஞ்சம் பேர் கூடி வந்து எங்கள விசாரணை செஞ்சாங்க, நாங்களும் நடந்த சம்பவத்தை சொன்னோம், சத்தம் போடுறோம்ன்னு சொன்னாங்க, எங்களுக்கு அதுல உடன்பாடு இல்ல வந்தது வந்துட்டோம் இன்னைக்கு என்ன ஆனாலும் அந்த பிரச்சனையை முடிச்சே ஆகணும்ன்னு நினைச்சு இல்ல அவனை நாங்க அடிச்சே ஆவோம் அவன இன்னைக்கு விட்டுட்டு போனா நாளைக்கும் அவன் இதே மாதிரி தான் செய்வான்னு சொல்லி நாங்க நின்னோம், அப்போ அந்த எதிரணில இருந்த ஒரு பையன், தங்கையை கேலி செஞ்ச பையனோட நெருங்கிய நண்பன், கொஞ்சம் கூட யோசிக்கல தன் நண்பனை எங்க கண்ணு முன்னாடியே அடி உறிஞ்சி எடுத்துட்டான். அப்படி அடிச்சுட்டு போதுமா டா அவன் செஞ்ச தப்புக்கு நீ கொடுக்க நினைச்ச தண்டனையை கொடுத்துட்டேன், இனிமேல் அவன் அந்த பொண்ணு கிட்ட வம்பு பண்ண மாட்டான் இப்போ நீங்க கிளம்பி போங்கன்னு சொல்லி எங்கள அனுப்பி வச்சான். தான் நண்பன் செஞ்சது தப்பு தான் ஆனாலும் கூட அவன் நண்பனை அவன் தான் அடிச்சானே தவிர எங்கள அவன் கிட்ட நெருங்க கூட விடல.
அன்னைக்கு எனக்கு ஒரு விஷயம் விளங்குச்சு, சரியோ தப்போ நம்ம சார்ந்தவங்கள நாம தான் பாத்துக்கணும் அடுத்தவங்க கிட்ட அவங்களை விட்டு கொடுக்கவே கூடாதுன்னு புரிஞ்சிகிட்டேன். " என்று சொன்ன குமரனை விழி அசைக்காமல் பார்த்து கொண்டிருந்த அதிவீரன்.
" அவ என் காதலி பாதர் அவளை எந்த சூழல்லையும் பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. அதுக்காக எந்த பிரச்சனை வந்தாலும் நா சமாளிக்க தயாரா இருக்கேன். அவளுக்காக அவளுக்கு முன்னாடி அவ அப்பா கிட்ட நா நிக்குறேன் பாதர். " என்று சொல்லி அதிவீரன் கிளம்ப, அவனோடு தானும் வருவதாக சேர்ந்து கொண்டாள் ஷாலினி.
நெஞ்சில் நிறைவாள்.......