அத்தியாயம் 16
நேர்காணல் முடித்து வேலைக்கு தேர்வாகி இருந்த குமரன் தனது அம்மாவிடம் பேசிக்கொண்டே இரவு உணவை எடுத்து கொண்டிருந்தான்,
" ம்மா காலையில நேர்காணலுக்கு போனேன்ல, அங்க நேர்காணல் பண்ணுனது ஒரு சின்ன புள்ள தான் ம்மா, அநேகமா என் வயசு இல்ல எனக்கு ஒன்னு இல்ல ரெண்டு வயசு சின்ன புள்ளையா தான் இருக்கும், ப்பா என்னா தெளிவுன்னு பாத்த, செரியான காரியகாரி எவ்வளவு நேக்கா நேர்காணல் நடத்துனான்னு தெரியுமா? பொம்பளைங்க எப்பவும் விவரம் தான் இல்லம்மா " கேள்வி கேட்டவனே தொடர்ந்து பேசினான்,
" அந்த புள்ள முன்னாடியே எல்லாரோட சுய விவரத்தையும் மனப்பாடம் பண்ணி வச்சிட்டு, எல்லாரையும் ஒன்னா கூப்டு உட்கார வச்சிட்டு எனக்கு நேரம் கிடைக்கல செய்யலன்னு கத விட்டுட்டு இருந்துச்சு, நாங்க யாரும் கேள்வி கேட்கலைனா அவங்க அவ்ளோ பொறுப்பா வேலை பாத்தாங்கன்னு பெருமை பீத்தீக்க நினைச்சது,
ஆனா நா எந்திரிச்சி,
என்ன மேடம் தலைமை பொறுப்புல இருக்குற நீங்க இப்படி இருக்கலாமான்னு கேள்வி கேட்கவும், அப்படியே என் பேரை சொல்லி எனக்கு எல்லாமே தெரியும் என் வேலையில நா சரியா இருக்கேன்னு எங்களுக்கு தெரிய வைக்க அவங்க அவ்ளோ புத்திசாலிதனமா காட்டுறாங்களாம்.
நல்ல விவரம்ல " என்று குமரன் பேசி கொண்டிருக்க அவனது அம்மா எதுவும் பேசாமல் தோசையை மட்டும் ஊத்தி அவனது தட்டில் வைத்து கொண்டிருந்தார், அவரது முகத்தில் மகன் வேலைக்கு சேர்ந்த மகிழ்ச்சி துளியும் இல்லை, மாறாக கட்டுப்படுத்த முடியாத அளவில் வேதனை தான் தெரிந்தது.
" ம்மா என்ன ம்மா நா பேசிட்டே இருக்கேன் நீங்க அமைதியாவே இருக்கீங்க? " என்று கேட்டு கொண்டே அன்னை முகம் பார்க்க அவரது முக வாட்டம் அவனுக்கு அப்போது தான் தெரிந்தது,
" ம்மா ஏன் ம்மா முகத்தை இப்படி வச்சிட்டு இருக்க? நா வேலைக்கு போனதுல...., " என்று கேட்க வந்தவன் அப்படியே பேச்சை நிறுத்தி கொண்டான். சாப்பிட்டு கொண்டிருந்த தட்டயும் அப்படியே வைத்து விட்டு கையை கழுவி கொண்டு அதை தனது உடையில் துடைத்து விட்டு வெளியே வந்தான்
அலைபேசியை கையில் பிடித்து கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றான். சந்திரனின் மென்மையோடு வாயு தேவனின் குளுமையும் கூடி கொள்ள அதை வெகுவாக ரசித்தவன் கோபம் மறந்து கொஞ்சம் நிதானத்திற்க்கு மாறி தனது முகநூல் பக்கத்தை திறந்தான்.
பொதுவாக குமரன் முக புத்தகத்தில் தனது கருத்துகளை சமரசம் இல்லாமல் எழுதி பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டவன். அதெற்க்கன தனித்துவமாக ஒரு பக்கத்தையும் அதில் தொடங்கி வைத்திருந்தான்.
தனது மனதில் இருக்கும் நிதர்சனத்தை அப்படியே எழுதும் பழக்கத்தை கொண்டதால் தனது எழுத்துக்களை தன் ஆன்மாவாகவே கருதினான். பொதுவாக ஆன்மா என்பது உடலுக்குள் இருக்கும் அழியாத, நித்தியமான உயிர்ச் சக்தியைக் குறிப்பதாகும், மேலும் மரணத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கக்கூடியது. இத்தகைய ஆன்மா பெரும்பாலும் மனச்சாட்சி, உணர்வுகள் மற்றும் ஆளுமையின் மையமாகக் கருதப்படுவதால் தனது எழுத்து பக்கத்திற்கு ஆன்மா என்றே பெயர் வைக்க நினைத்து, பின் தன்னை யார் என்று அடையாளம் காட்ட நினைத்து தனது பாலினத்தை ஆன்மாவோடு சேர்த்து ஆன்மன் என்ற பெயரை வைத்திருந்தான்.
மனதிற்கு விரும்பிய, விரும்பாத எந்த செயல் நடந்தாலும் அதை எழுத்தாக வடித்து விடுவான், அது சரி தவறு என்ற பார்வை அவன் வரையில் அவன் மனம் சார்ந்தது மட்டுமே, இப்போதும் அதை செய்யவே அந்த ஆன்மன் பக்கத்தை திறந்தான்.
திறந்து பார்த்தவன் சில நிமிடங்கள் அதில் செலவு செய்தான் முந்தைய பதிவுகளுக்கு வந்த கருத்துகளுக்கு தனது பதிலை கொடுத்து கொண்டிருந்தவன் அப்போது மனதில் தோன்றிய, அவனது அம்மாவிடம் சொல்லிய விஷயத்தை அப்படியே எழுத்தாக பிரதிபலிப்பு செய்தான்.
# காரியக்காரி என்ற தலைப்பில்,
" சந்தர்ப்ப சூழலை தனக்கு சாதகமாக்கி எலும்பற்ற நாக்கை போல நெளிவு சுழிவாக வளைந்து, நெளிந்து தான் நினைத்த காரியமாக மாற்றி கொள்கிறாள் காரியக்கார பெண்கள்..... " என்று ஆரம்பித்தவன் சம்பவத்தையும் விளக்க ஆரம்பித்தான்,
" இன்று நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டேன்,
அங்கு அவளை கண்டவுடன் கண்டு கொண்டேன் அவள் ஒரு காரியக்காரி என்று....,
அதை அறிந்தும் கடந்து விட்டேன் இனிவரும் சில காலம் அவளின் தலைமையின் கீழ் என்பதால்....., "
எப்பவுமே தலைமை பொறுப்புல இருக்குறவங்க காரியகாரங்களா இருக்க கூடாதுங்குறது என்னோட எண்ணம்.
காரணம் என்னன்னா எப்போ ஒருத்தங்க காரியக்காரங்களா இருக்காங்களோ அவங்க கண்டிப்பா சுயநலவாதியா தான் இருப்பாங்க. அப்படி சுயத்தை பத்தி யோசிக்குறவங்க கண்டிப்பா தன்னோடு இருவங்களை பத்தி யோசிக்க மாட்டாங்க,
அவங்க பார்வை ரொம்ப சுருங்கிய அளவுல தன்னை சுற்றிய ஒரு வட்டத்தில தான் இருக்கும். தன்னை முன்னிலை படுத்தி தன்னை பெரிதா காட்டுறதயே பிரதானமா கொள்வாங்க, அதுக்காகவே தான் கிட்ட இருக்குற தப்பை மறைக்கவும் முயற்சி செய்வாங்க, அந்த முயற்சில தவறை சரி செய்ய மறந்து தானும் கவிழ்ந்து தன்னை சேர்ந்தவங்களையும் கவிழ்த்திருவாங்க....
அதனால இப்படி இருக்குற மக்கள தலமையா சந்திக்கும் போது தன்னை காக்கும் முயற்சியை தவறாம வச்சிக்கோங்க.... " என்று அந்த பதிவை முடித்து இருந்தான் குமரன்.
குமரனின் கூற்று சரியா என்பது தெரியவில்லை, அது சரியா தவறா என்பதை தேவயானி பார்க்கும் நாளில் நாமும் அறிந்து கொள்வோம்....
நெஞ்சில் நிறைவாள்.......