அத்தியாயம் 17
வேலையின் முதல் நாள்,
புது அலுவலகம் என்பதாலும் வேலை நேரத்தில் எந்த சமரசமும் கொள்ளாத குமரன், தனது வேலை தொடங்கும் நேரம் முன்பே அலுவலகத்தை அடைந்திருந்தான். ஆனால் அவனுக்கு முன்பாகவே அங்கு அமர்ந்திருந்த தேவயானி அவன் வணக்கம் வைக்கும் முன்பே அவனுக்கு வணக்கத்தை வைத்தாள்,
" வணக்கம் குமரன் என்ன சீக்கிரம் வந்துட்டீங்க போல "
" இல்ல மேடம் என்னோட பழக்கம் இது வேலை நேரத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடியாவது வேலை செய்கிற இடத்தில இருக்கணும்னு நான் நினைப்பேன் "
" அப்படியா உண்மையிலேயே எனக்கு வியப்பா இருக்கு குமரன் "
" நன்றி மேடம் "
" ஹையோ குமரன் எனக்கு உங்க வயசு தான் இருக்கும் என்னை மேடம் மேடம்னு கூப்பிட்டு வயசானவள் ஆக்காதீங்க, நம்ம அலுவலகத்தில எல்லாரும் கூப்டுற போல நீங்க என்னை யானிண்ணே கூப்பிடலாம் "
" இல்ல மேடம் அது சரியா இருக்காது "
":இல்ல அதுதான் சரியா இருக்கும் குமரன். எப்பவுமே நாம வேலை பாக்குற இடம் நமக்கு இணக்கமானதா இருக்கணும். அப்படி இணக்கமா இருக்கனும்னா எல்லாரும் நண்பர்களா இருக்கனும்.
எப்படி நண்பர்கள் வட்டாரத்துக்குள்ள இருக்கும்போது நம்ம மனசுல என்ன தோணுனாலும் அடுத்த நொடியே அதை பகிர்ந்து கொள்கிறோமோ அதே மாதிரி தான் வேலை செய்கிற இடத்தில இருக்கணும்னு நான் நினைக்கிறேன். என்னோட வேலை பாக்குற சக ஊழியர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்களா இருக்கணும் என்கிட்ட இருக்கக்கூடிய குறைகளா இருந்தாலும் சரி, என்கிட்ட என்ன தேவைப்படுதோ அந்த தேவையா இருந்தாலும் சரி உடனே கேட்கணும், அதுவும் எந்தவிதமான தயக்கமுமில்லாம கேட்கணும். அப்படி கேட்குற நண்பர்கள் தான் எனக்கு சக ஊழியரா வேணும். " என்று சொன்னவள் மேலும் தொடர்ந்தாள்,
" இதுவரைக்கும் என் அலுவலகத்தில முதலாளி தொழிலாளிங்குற வேறுபாடு இருந்தது இல்ல, இனிமேலும் நம்ம அலுவலகத்தில அந்த வேறுபாடு இருக்க கூடாது அவ்ளோதான் " அவளது பேச்சை கவனித்த குமரனுக்கு உண்மையில் இப்போது வியப்பாக தான் இருந்தது ஆனாலும் அதற்கு உடனே ஒப்புதல் கொடுக்காமல்,
" நீங்க சொல்லுறது எல்லாம் கேட்க நல்லா இருக்கு மேடம் ஆனா இதெல்லாம் திரைத்துறைக்கு தான் சரியா வரும் நிஜத்துக்கு சரி வராது " என்று சொல்ல,
" நிஜத்தில் இல்லாத ஒன்னு தான் திரையில வருதுன்னு நினைக்குறீங்களா குமரன்? "
" நிஜம் தான் திரைன்னு சொல்ல வாரீங்களா மேடம்? " கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டான் குமரன்
" நிஜத்தில இருக்குறவங்க எண்ணம் தான் திரையில காட்சியா வருதுன்னு ஏத்துக்குறீங்களா குமரன்? "
" என்ன மேடம் புரியல "
" நிஜத்தில இருக்க கூடிய ஒரு மனிதனோட உணர்வு தான் ஒரு படைப்பா வருதுங்குறத ஒத்துக்குறீங்களா குமரன்? " சிறிது நிதாணித்து விட்டு ஆமாம் என்று தலை அசைத்தான் குமரன்.
" நம்ம கிட்ட இருக்குற உணர்வு தான குமரன் படைப்பா வருது அப்படி பார்த்தா அந்த திரை காட்சி கூட நிஜத்தின் அடிப்படைல இருந்து வருவதுன்னு தான அர்த்தம்? " கேள்வியை திருப்பி பதிலை புடுங்கும் தனது வித்தையை குமரனிடம் காட்டி அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருந்தாள் தேவயானி.
" ஆமா தான் மேடம் ஆனாலும் அங்க இருக்குற விஷயம் எல்லாம் நிஜத்தில நடக்குறது இல்லயே "
" மறுபடியும் மறுபடியும் நின்ன இடத்திலையே நிக்குறீங்களே குமரன். சரி உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்குறேன் பதில் சொல்லுறீங்களா? "
" இப்போ வரைக்கும் அது தான் செய்யுறேன்னு நினைக்கேன் மேடம் " சிறிய புன்னகையோடு சொல்ல,
அவளும் சிரித்து கொண்டே,
" ஆமா குமரன், இப்போ இந்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லுங்களேன் "
" ம்ம்ம் கேளுங்க "
" நீங்க கல்லூரிக்கு போனப்போ "
" ஹையோ தேவா வேண்டாம் விட்டுருங்க நா உங்கள தேவான்னு பேர் சொல்லியே கூப்டுறேன் "
" தேவா வா? " கேள்வியோடு குமரனை பார்க்க
" யானின்னு சொன்னா பொம்பள பிள்ளை பேர் கொஞ்சம் இடைவெளி தெரியும் அதுவே தேவான்னு சொன்னா ஆம்பள பையன் பேர் இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும் அந்த நெருக்கம் நீங்க உங்க சாக ஊழியர்கள் கிட்ட எப்படி இருக்கனும்ன்னு நினைக்குறீங்களோ அப்படியே இருக்க வைக்கும். அது மட்டும் இல்லாம நண்பர்களாவே எல்லாரும் இருந்தோம்னா நம்ம நிறுவனத்தோட வெற்றி இன்னும் சிறப்பா இருக்கும், நிறுவனம் சிறப்பா இருந்தா நாம எல்லாரும் சிறப்பா இருப்போம்ங்குற உங்க மேன்மையான எண்ணமும் ஈடேறும் " என்று கோர்வையாக குமரன் சொல்லி முடிக்க,
" அய்யோ, அசத்திடீங்க குமரன், என்னோட எண்ணவோட்டத்தை படம் பிடிச்சு காட்டிடீங்க " என்று தேவயானி சிரிக்க, குமரனும் சிரித்து கொண்டே,
" சரி தேவா, நா கிளம்பட்டுமா? போய் என்னோட வருகையை நம்ம அலுவலக வருகை பதிவேட்டுல பதிவு செஞ்சு நானும் இந்த அலுவலகத்தோட ஒரு அங்கம்ன்னு காட்டிட்டு வந்துரவா? " என்று கேட்க,
" கண்டிப்பா கண்டிப்பா குமரன் போய்ட்டு வாங்க, உங்க வேலையை சிறப்பா செய்யுங்க " புன்னகை நிரம்பிய முகத்தோடு சொல்ல,
" நன்றி தேவா " என்று சொல்லிவிட்டு மீண்டும் அவளுக்கு தனது புன்னகை முகத்தை காட்டி விட்டு நடந்தான்.
ஏனோ அவனது தேவா என்ற அழைப்பு தேவயானிக்கு புது வித உணர்வை கொடுத்து இருந்தது. அவளை அறியாமலே அவள் அப்படி அழைக்கப்பட்ட போது அந்த அழகியலை அவள் அதிகம் ரசித்தாள் ரசனைக்கு ஏற்றார் போல சிரித்தாள்.
அந்த சிரிப்பின் ஊடாக அவளிடமும் வந்தது தேவா என்ற அழைப்பு. அதை அவளுக்கு அவளே சொல்லி சொல்லி கேட்டுக்கொண்டாள் எத்தனை முறை என்று தெரியவில்லை, ஆனால் முடிவின் போதெல்லாம் சொன்னாள்,
" தேவா, பேர் நல்லா தான் இருக்குல "
நெஞ்சில் நிறைவாள்........