அத்தியாயம் 18
தேவயானியிடம் பேசிவிட்டு உள்ளே வந்த குமரன் தெய்வத்தை வணங்கி விட்டு தனது இருக்கையில் அமர்ந்து கணினியை உயிர்ப்பித்தான், அது தனது இயக்கத்தை ஆரம்பித்தவுடன் பணியாளர்களுக்கு என்று தனியாக இருக்கும் வலைதளத்தில் நுழைந்து தனது சுயவிபரங்களை பார்த்து விட்டு, அதில் நிறுவனம் வேலையாட்களுக்கு வழங்கியிருக்கும் சலுகை விபரங்களையும் பார்த்தான். அணைத்து நிறுவனங்களும் கொடுக்கும் அதே சலுகைகள் நிறைந்து இருக்க அதில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் முகத்தை திருப்பி தனக்கு முன்னால் இருந்த கோப்புகளை கையில் எடுத்தான் அதை ஒவ்வொன்றாக புரட்டி பார்க்க தொடங்கினான். அதில் கையிருப்பு விபரங்கள் மற்றும் அடுத்ததாக வெளியே கொடுக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்த தகவல்கள் இருந்தது அதை கவனமாக கவனித்து குறைவாக இருக்கும் கையிருப்பு பொருட்களின் அளவை தனியாக ஒரு காகிதத்தில் குறித்து வைத்து கொண்டான்.
நேரம் மெல்ல நகர்ந்து உணவு இடைவெளியை நெருங்கி இருக்க அவனோடு அமர்ந்து இருந்த சக ஊழியர்கள் எழுந்து செல்வதை கவனித்தான். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது அதை சிறிது நேரம் அமர்ந்து முடித்துவிட்டால் உணவு இடைவெளிக்கு பின்பு வேறு வேலையை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் அந்த கோப்புகளுக்குள் தன்னை புகுத்தி கொள்ள அதற்கு இடைஞ்சலாக வந்து நின்றாள் மாதுரி.
" என்ன குமரன் எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க நீங்க இன்னும் போகலையா? "
" இல்ல கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு தான் போகணும் "
" அட வேலைக்கு வந்த முதல் நாளுலயே அப்படி என்ன வேலை பாக்குறீங்க? கொஞ்சம் கழிச்சு வந்து பாருங்க முதல்ல போய் சாப்டு வாங்க "
" இல்ல பரவா இல்ல இன்னும் ஒரு 10 நிமிஷம் முடிஞ்சுரும் அப்புறம் போய்க்குறேன் " என்று சொல்லிவிட்டு மீண்டும் கோப்புகளில் புகுந்து கொள்ள,
மாதுரி மறுபடியும் பேச்சு கொடுத்து பார்த்தாள், ஆனால் அதெற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை குமரன், செவுடன் காதில் ஊதிய சங்கை போல அவள் பேச்சுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னும் வகையில் இருந்தான்.
குமரனின் இத்தகைய செய்கை மாதுரிக்கு கடுப்பை ஏற்படுத்த அந்த கடுப்பை காட்டும் விதமாக அவனது மேஜையில் இருந்த கோப்புகளை கீழே தள்ளிவிட்டு விட்டு முறைப்புடன் அவனை பார்க்க அதையும் கண்டு கொண்டது போல தெரியவில்லை ஆதலால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே போய் விட்டவள் அடுத்து கத்த வாயை எடுக்க அவளுக்கு முன்பு அவளது அலைபேசி கத்த ஆரம்பித்து விட்டது அது தேவயானிக்காக அவள் வைத்திருக்கும் பிரத்யேக பாடலின் ஒலி எழும்ப, அவளிடம் எழும்பிய கோப ஒலி அடங்கியது அங்கிருந்து வெளியே கிளம்பினாள், அதையும் குமரன் கவனித்தான் தான் அப்போதும் கூட அவனது வேலையை தான் பார்த்து கொண்டிருந்தான் அடுத்த சில நிமிடங்களில் அவனது வேலையை முடித்து இருக்க தனது மதிய உணவை கையில் எடுத்து கொண்டு சாப்பிட கிளம்பி விட்டான் மாதுரி தள்ளி விட்ட கோப்புகளை அப்படியே போட்டு விட்டு.
நிமிடங்கள் சில கடந்து இருக்க தேவயானியிடம் பேசிவிட்டு வந்த மாதுரி குமரனை பார்க்க அங்கு அவன் இல்லை ஆனால் அவள் தள்ளி விட்ட கோப்புகள் கீழே கிடப்பதை பார்த்ததும் மேலும் ஆத்திரம் தான் வந்தது ஆனாலும் அதை பெரிது படுத்தினால் புலனாய்வு கேமராவின் உதவியுடன் தனது தவறு வெளிப்படும் என்பதால் அதை அப்படியே பெரிதுபடுத்தாமல் அவனை வசைபாடிக் கொண்டே அந்த கோப்புகளை சரி செய்து மீண்டும் பழைய நிலையில் வைத்தாள்., வேறு யாராவது பார்த்தால் கூட அது பிரச்சனை தானே,
ஏனென்றால் இது போன்ற பழக்கங்கள் தேவயானிக்கு அறவே பிடிக்காத ஒன்றாச்சே.
உணவை முடித்து விட்டு வந்த குமரன் கோப்புகள் மீண்டும் சரி செய்யப்பட்டு இருப்பதை கவனித்தான், இது இப்படி தான் நடக்கும் என்பதை அவன் யூகித்து தான் இருந்தான், தனது யூகம் சரி தான் என்பதால் அவனிடம் மெல்லிய ஒரு புன்னகையும் வந்தது, அந்த புன்னகையோடு வெளியே வந்தவன் உற்பத்தி பகுதியை பார்வையிடும் நோக்கோடு அங்கே நடக்க ஆரம்பித்தான்.
உணவு இடைவெளி முடிந்து அப்போது தான் உற்பத்தி இயக்கம் ஆரம்பித்ததால் பணியாளர்கள் முழுமையாக அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை வந்த ஒரு சிலரும் சோம்பல் இல்லாமல் வேலையை தொடங்கியிருந்தார்கள் இதுவரைக்கும் அலுவலகத்தில் அநேக நபர்கள் இளைஞர்களாக தான் அவனது கண்ணில் தெரிந்தார்கள் இந்த உற்பத்தி பகுதியில் நுழைந்த பின்பு தான் கொஞ்சம் வயதானவர்கள் தெரிந்தார்கள், அதை கவனித்து கொண்டே அந்த உற்பத்தி பகுதியை ஒருமுறை வலம் வந்தான். பின்பு அங்கே உணவை முடித்து வந்து இயந்திரத்தை இயக்க இருந்த ஒருவர் குமரனை பார்த்து அழைத்தார்,
" தம்பி யார் நீங்க இந்த பக்கம் புதுசா இருக்கு? "
" வணக்கம் அண்ணே என் பேர் குமரன், இன்னைக்கு தான் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கேன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை கண்காணிக்க கூடிய மேலாளரா "
" அப்படியா தம்பி ரொம்ப சந்தோசம். அண்ணன் பேரு காந்தி. இங்க தான் பன்னிரண்டு வருசமா இருக்கேன், நம்ம யானி பாப்பாவோட அப்பா நிர்வாகத்தில இருக்கும் போது வேலைக்கு சேர்ந்தேன், இப்போ யானி பாப்பா நிர்வாகத்துக்கு கீழயும் வேலை பாக்குறேன் "
" அப்படியா அண்ணே ரொம்ப சந்தோசம். வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு ண்ணே? "
" அதெல்லாம் ஒரு குறையும் இல்லாம போய்ட்டு இருக்கு ப்பா, "
" சரிங்க அண்ணே நல்லது "
" சரி தம்பி நீங்க அப்படியே அடுத்த வேலையை பாருங்க எனக்கும் வேலை கிடக்குது " என்று அவர் இரத்தின சுருக்கமாக பேச்சை நறுக்கிய விதம் குமரனுக்கு பிடித்து இருந்தது.
காந்தி என்ற அவர் பெயரை இன்னும் ஒருமுறை உச்சரிப்பு செய்து விட்டு மீண்டும் ஒருமுறை அந்த இடத்தை வலம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி பகுதியை நோக்கி நடக்க அவனின் எதிரில்பட்டாள் மாதுரி.
அவளை கடந்து செல்லும் நோக்கோடு குமரன் முன்னேற மாதுரி மீண்டும் குறுக்கீடு செய்தாள்,
" குமரன் கொஞ்சம் நில்லுங்க " அவள் அலுவலகத்தில் வகிக்கும் பதவிக்கு மரியாதை கொடுத்து அமைதி காத்து நின்றான்.
" வேலை நேரத்தில உங்க இடத்தில இல்லாம இந்த பக்கம் எங்க போறீங்க? "
" ஏற்றுமதி பகுதியை பார்வையிட " ஏனோ அவளிடம் பேச குமரனுக்கு பிடிக்கவில்லை. காரணம் அவளது முதல் அணுகுமுறையே அவன் விரும்பாத வண்ணம் அமைந்ததாக கூட இருக்கலாம்.
" அத இப்போ பார்வையிட அவசியம் என்னவோ? "
" அத பார்வையிட தனி நேரம் இருக்குதோ? "
" என்ன நீங்க எது பேசுனாலும் வம்பு பண்ணுற மாதிரியே பேசுறீங்க? நீங்க இன்னைக்கு தான் புதுசா வந்துருக்கீங்க அதனால இங்க இருக்க கூடிய வழக்கம் எதுவும் உங்களுக்கு தெரியாது, அதனால தான் உங்க கிட்ட கேள்வி கேட்டு நீங்க என்ன செய்யணும்ன்னு சொல்லுறது, இது கூட புரியாம இஷ்டத்துக்கு பேச கூடாது " பொறிந்தாள்.
மீண்டும் அவளது செய்கை அவனுக்கு எரிச்சலை கொடுத்தாலும் கூட அங்கிருந்து அமைதியாக நடக்க ஆரம்பித்தான் ஏற்றுமதி பகுதியை நோக்கி....
இதையெல்லாம் செய்ய சொல்லிய தேவயானி மாதுரியின் அலைபேசி வழியாக இதை நேரலையில் பார்த்து கொண்டிருந்தாள்.....
நெஞ்சில் நிறைவாள்........