• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 20

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 20


நாட்கள் மெதுவாய் கடந்து மாதங்களை தாண்டியிருந்தது, குமரன் தனது வேலையில் காட்டிய ஈடுபாடும், வேலை பார்ப்பவர்களிடம் காட்டிய கனிவும் அவனை அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதிக்க வைத்தது, ஆனால் அந்த பண்பு தான் தேவயானியை அவனை பற்றியே சிந்திக்க வைத்தது, அந்த சிந்தனையை நீடிக்க விடாமல் அவனை அழைத்து பேசிடும் எண்ணத்திற்கு வந்திருந்தவள் அவளின் எண்ணப்படி அவனை அழைத்தாள்,

" குமரன் கொஞ்சம் வாங்களேன் "

" சொல்லுங்க தேவா " அவனும் சாதாரணமாக வந்தான்,

" குமரன் நா உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ஆனா அத கேட்ட பின்னாடி நீங்க கோபமோ வருத்தமோ பட கூடாது " அவள் பீடிகை போட,

" எதுக்கு இந்த பீடிகை நேரடியாவே கேளுங்க, ஏன்னா நீங்க கேட்க போறது முக்கியமான விஷயம் அதே நேரம் எனக்கு சங்டமாவும் இருக்கலாம், உங்களுக்கு தர்மசங்கடமாவும் இருக்கலாம் " என்று ஓரளவு விஷயத்தை யூகித்து கொண்டு கேட்க,

" இல்ல குமரன் இப்போ எனக்கு தர்ம சங்கடம் எல்லாம் ஒன்னும் இல்ல இத கேட்காம விட்டு தான் தர்ம சங்கடம் ஆகிற கூடாது அதுக்காக தான் இப்போ பேச நினைக்குறேன் " அவள் இன்னும் அவனுக்கு முழுமையாக புரியாமல் பேசினாள்,

" தேவா இவ்வளவு வட்டம் எல்லாம் அடிக்க வேண்டாம் நேரடியா விசயத்துக்கு வாங்க அது தான உங்க வழக்கம் " அவனே எடுத்து கொடுக்கவும் செய்தான்

" சரி குமரன் அப்போ சாயங்காலம் ஒரு ஏழு மணிக்கு கபாலி கோவிலுக்கு வாங்க அங்க வச்சி பாக்கலாம் " என்று தேவயானி சொல்லவும் குமரன் சிந்தனை வசம் சென்றான் ஏன் அங்கே என்பது போல....

" இல்ல குமரன் இது உங்கள பத்தி இந்த அலுவலகத்தில் யாருக்கும் தெரியாத விஷயம் அதனால அலுவலகத்தில வச்சி பேச வேண்டாம், ஏன்னா வார்த்தையா வராத வரைக்கும் தான் அது ரகசியம் வந்துட்டா அதுக்கு கை கால் மட்டும் இல்ல றெக்கை கூட முலைச்சுரும் " என்று தேவயானி சொல்லவும் சரி என்று அங்கிருந்து கிளம்பினாலும் கூட அவள் என்ன பேச போகிறாள் என்ற சிந்தை மட்டும் அவனிடமிருந்தும் சிறிதும் குறையவில்லை.


நேரம் இரவு 7:00 மணியை நெருங்கி இருக்க கோவில் வாசலில் வந்து இறங்கினான் குமரன், அவனுக்கு முன்பாக அவளது வாகனத்தில் வந்து விட்ட தேவயானி அங்கு காத்திருந்தாள் குமரனை பார்த்து கையவும் ஆட்டினாள்.

இருவரும் கோவிலின் உள்ளே நடக்க,

" குமரன் நீங்க சாமி கும்பிடுவீங்களா? "

" ஏன் இப்படி கேக்குறீங்க எங்களை எல்லாம் பாத்தா சாமி கும்புடுற ஆள் மாதிரி தெரியலயா? "

" இல்ல "

" இல்லையா, ஏங்க நா தீவிர மாயாண்டி பக்தங்க "

" அச்சோ குமரன் எனக்கு சிவா ரொம்ப பிடிக்கும் அதனால தான் பாத்துட்டு வந்துடலாமான்னு கேட்டேன், ஏன்னா உங்களுக்கு வேற வேலை எதாவது இருக்க கூடாதுல "

" பிடிக்கும்னு சொல்லிட்டீங்க அப்புறம் பாக்காம இருந்தா நல்லாவா இருக்கும் வாங்க முதல்ல அவர பார்த்துட்டே வந்துருவோம் "

" ஹைய்யா வாங்க வாங்க குமரன் போவோம், சிவா அந்த இருட்டுல ஜொலிக்குற அழகே அழகு அத பாக்க பாக்க அம்புட்டு ஆனந்தமா இருக்கும் அப்படியே மனசுல இருக்குற பாரமெல்லாம் இறங்கி மனசு அப்படி ஒரு அமைதி நிலைக்கு போயிரும். அந்த அமைதியா முழுசா உணரும் போது தான் தெரியும் அவனை ஏன் முக்தி கொடுக்குற தெய்வம்ன்னு சொல்லுறோம்ன்னு " என்று தேவயானி குதூகளித்து குழந்தை போல அதே நேரம் முதிர்ச்சியாக பேசுவது குமரனுக்கு புதிய கோணத்தில் அவளை காட்டியது.

மீண்டும் அவளது சிந்தனையே அவனில் நிறைந்தது,
அவளின் பேச்சு ஆண்டவன் மீதான அன்பின் ஈடுபாட்டை காட்டியது. அவள் கேட்டுக்கொண்ட காரணத்தால் அவளுக்காக சரி என்று சம்மதித்து கோவிலின் உள்ளே வந்தவன் மீண்டும் ஒருமுறை அவளை புதிய கோணத்தில் பார்ப்பதை எண்ணி அவனுக்குள் கேள்விகளை அடுக்கி கொண்டான்,

" இப்படியும் கூட ஆண்டவனை ரசிக்க முடியுமா?
அவனை நினைக்கும் போது மனமானது இத்தனை குதூகளிக்குமா?
இது போன்ற ஒரு உணர்வு நமக்கு இதுவரை வந்துருக்கிறதா?
கடவுளையும் கூட இப்படி பார் என்று நமக்கு கற்று கொடுக்கிறாளா?
இவளை போல இப்படி யாரையும் பார்த்ததில்லையே...
இவளை போல ஆண்டவனை அணுகியதும் இல்லையே.... "
மனதில் எண்ணம் அலையாட அவளின் அணுகுமுறை அவனுக்கு இன்னொரு முறை தனித்துவமாக தெரிந்தது.

இவனின் சிந்தனையில் நிமிடங்கள் சில கடந்து இருக்க குதூகளித்துக் கொண்டு வந்தவள்,
திடீரென பரவச நிலையை அடைந்தது போல ஆண்டவனின் நாமம் சொல்லி சத்தமாக ஜெபிக்க ஆரம்பித்தாள்,

அவளது சத்தம் கேட்டு ஓரத்தில் நின்று கொண்டிருந்த அய்யரை உடனடியாக கருவறை நோக்கி ஓட செய்து தீபாராதனை காட்ட வைத்தது, சுற்றி இருந்த மக்கள் கூட்டம் அவளை பார்த்தது போலவே அவனும் அவளைப் வியந்து ரொம்ப பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்றைய கால கட்டத்தில் இதழ் அசைவு தெரியாமல் கடவுளை வணங்கும் மக்கள் கூட்டத்தில் தன் மனதில் இருக்கும் பக்தியை சிறிதும் தயக்கமில்லாமல் அவள் வெளிக்காட்டுவது அவனுக்கு தனித்துவமாக இருந்தது. ஏனென்றால் அவனும் மேலே சொன்ன ரகம் தான் அவன் அப்படி இருப்பதால் தான்,
சுற்றி இருக்கும் எவரையும் கணக்கில் கொள்ளாமல் அவளது மனதிற்கு ஆண்டவனை எப்படி துதிக்கத் தோன்றுகிறதோ அப்படியே துதிக்கும் அவளது பக்தியின் முழுமை விளங்கியது. அவன் பார்த்த வரையிலும் அவளின் ஈடுபாடு எதிலும் அரைகுறையாய் இல்லை அனைத்திலும் முழுமையாக தனித்துவமாகவே தெரிந்தாள், தெரிகிறாள்.....


நெஞ்சில் நிறைவாள்......
 
Top Bottom