• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 23

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 23

பேச நினைத்த விஷயங்களோடு நினைக்காத விஷயத்தையும் பேசி முடித்திருந்தனர் குமரனும் தேவயானியும் இப்போது இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் எண்ணத்தோடு கிளம்ப தனது காரிலேயே குமரனை விட்டு விடுவதாகச் சொன்னாள் தேவயானி.

முதலில் வேண்டாம் என்று மறுத்தாலும் தேவயானி வற்புறுத்த அதற்கு மேல் அவனால் மாட்டேன் என்று மறுக்க முடியவில்லை சரி என்று அவளுடனே கிளம்பி விட்டான்.

இளையராஜா துணையோடு அந்த பயணம் இதமாக தொடங்கியது. கார் கண்ணாடியை இறக்கி விட்டு வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான் குமரன். அதிகப்படியான மக்கள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் ஆதலால் அந்த மாநகர் முழுவதும் பயங்கர பரபரப்பில் இருந்தது, அதே பரபரப்போடு ரோட்டு கடைகளும் இயங்கி கொண்டிருந்தது. ஆவி பறக்கும் இட்லி, சுளிர் சத்ததோடு பொறியும் தோசை கல்லு, கட கடவென்று சத்தம் எழுப்பும் கொத்து புரோட்டா என்று அந்த கடைகள் பசிக்காத வயிரையும் பசிக்க வைத்துவிடும், அதை கொஞ்சமாக விரும்பும் குமரனுக்கு சாப்பிடும் எண்ணம் எழுந்த நேரம் அதை அதிகமாக விரும்பும் தேவயானி காரை சாலையில் ஓரம் கட்டியிருந்தாள்.

" ஹான் குமரன் இந்த ரோட்டு கடை சாப்பாடு உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன் அதனால நாம கொஞ்சமா சாப்டுட்டு போவோமா? " என்று கேட்க

" சாப்பிடுவோம் தேவா " குஷியாக வந்தது அவனின் குரல்,

" ஓ அப்போ நீங்களும் சாப்பிடுற எண்ணத்தில தான் இருந்தீங்களா குமரன்? உடனே போவோம்ன்னு சொல்லிடீங்களே "

" அங்க பாருங்க தேவா, எப்படி அறக்க பறக்க அருமையா வேலை பாக்குறாங்க அத பாக்குற நாம சாப்பிடாம போனா அந்த வேலையை நாம மதிக்கலன்னுல ஆகிடும் "

" ஆமா ஆமா..... சரி குமரன் வாங்க போய் அவங்க உழைப்புக்கு உண்டான மரியாதையை கொடுத்துட்டு வருவோம் " என்று காரிலிருந்து இறங்கி இருவரும் நடந்தனர்,

வாகனங்களின் இரைச்சல் இருந்தாலும் கூட அங்கு வீசிய இயற்க்கை காற்றில் அது காணாமல் போனது,

இருவரும் அங்கு போடபட்டிருந்த பலகையில் அமர்ந்தார்கள், உணவு பரிமாறும் அந்த சிறுவன் வந்து உணவு ரகங்களை ராகம் பாட தேவயானி மெல்ல யோசித்தாள்,

" குமரன் உங்களுக்கு என்ன பிடிக்கும்? "

" உங்களுக்கு என்ன பிடிக்குமோ அத சொல்லுங்க தேவா "

" ஹையோ குமரன் நமக்கு சாப்பாடுல இது அது எல்லாம் கணக்கு இல்ல, சாப்பாடுன்னாலே பிடிக்கும் " என்று சொல்ல குமரன் சிரித்து விட்டான்.

" சிரிப்போம் குமரா அந்த தம்பி கிட்ட சாப்பாட கொண்டு வர சொல்லிட்டு சிரிப்போம், இப்போ என்ன வேணும் சொல்லுங்க? "

குமரன் பெயருக்கு இரண்டு வகையான உணவை கொண்டு வர சொல்ல, தேவயானியோ சிறிது நேரத்திற்கு முன்பு அந்த சிறுவன் பாடிய அதே ராகத்தை அச்சு பிசறாமல் பாடி முடித்தாள்.

" ஏன் தேவா இவ்வளவு சொல்லுறீங்க? "

" சாப்பிட தான குமரன் வாழ்கை "

" சரி தான் ஆனா இது கொஞ்சம் அதிகமா இருக்கே "

" நொறுங்க தின்னா நூறு வயசு குமரன் "

" அளவுக்கு மிஞ்சினா நஞ்சு தான தேவா? "

" அந்த அளவுங்குறது நித்தமும் மீறப்படுவது இல்லையே குமரன் "

" அட போங்க தேவா எல்லாத்துக்கும் பதில பையிலயே வச்சிட்டு இருக்கீங்க " என்று பொய் முறைப்புடன் குமரன் சொல்லவும் சிரித்து விட்டாள்.

" பதிலை பையில வைக்கல குமரன் " என்று சொல்ல வந்தவள் தோசையை கொஞ்சமா பிய்த்து அதை கோழி குருமாவில் தொட்டு கொண்டிருந்த குமரனை பார்க்கவும்,

" குமரன் இத இப்படி சாப்பிட கூடாது இங்க பாருங்க நா சொல்லி தரேன் " என்று சொல்லிவிட்டு,
அவனை விடவும் கொஞ்சம் பெரிதாக அந்த தோசையை பிய்த்து அதன் மீது கொஞ்சமாக கறியை அள்ளி வைத்து கொழுக்கட்டை போல உருட்டி தனது வாயில் திணித்து விட்டாள். வாயில் விழுந்த தோசை வயிற்றை அடையும் வரை மூடிய கண்களை திறவாமல் அதன் ருசியை முழுமையாக உணர்ந்து உண்டாள். அவளது இந்த செய்கையை பார்த்து குமரன் அப்படியே உறைந்து போனான்.

அவள் கண் திறந்த போது உறைந்து போயிருந்த குமரனை தான் கண்டாள்,

" என்ன ஆச்சு குமரன் " என்று கேட்டபோதுதான் அவளது செய்கையே அவளுக்கு நினைவிற்கு வந்தது சாப்பாட்டை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஆர்வத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் குமரனின் இலையில் கை வைத்ததை அப்போதுதான் யோசித்தாள், அத்தோடு நில்லாமல் அவனது உணவை அவள் எச்சிலும் செய்து விட்டாள், அதை உணர்ந்த போது எத்தகைய சூழலையும் எளிதில் கை கொள்ளும் அவளும் கூட திணறி போனாள், ஏனென்றால் நம் செயல் எதிரில் இருப்பவருக்கு ஏற்ப்புடையதாக இல்லையோ என்ற எண்ணம் எழும் போதே ஏற்புடையது இல்லையென்றால் அந்த செயல் தவறாகிவிடுகிறதே என்ற எண்ணமும் தான் அவளை திணற செய்தது.
இப்போது குமரனிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற யோசனை மேலோங்கிய போதே முதலில் மன்னிப்பு கேட்பது தான் சரியானது என்ற தீர்க்கமான முடிவோடு கை கூப்பி மன்னிப்பு கேட்டாள் தேவயானி.

அதுவரைக்கும் உறைந்து போனவன் அவள் கை எடுத்து வணங்கவும் சட்டென உருகிப்போனவனாக,

" அய்யோ தேவா என்ன இது கை எல்லாம் கூப்பிட்டு "

" இல்ல குமரன் உங்க எண்ணம் புரியாம இலையில கை வச்சது தப்பு, கொஞ்சமும் யோசிக்காம செஞ்சுட்டேன் " அவள் வருத்தமாக சொல்ல

" தேவா நீங்க யோசிக்குற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல, டக்குனு நீங்க இப்படி செய்யவும் எனக்குள்ள ஒரு வியப்பு அந்த வியப்பு என்னைய பேச விடாம அமைதி ஆக்கிட்டு. மத்தபடி நீங்க செஞ்சது ரசனையா தான் இருந்தது " என்று அவளின் வருத்தம் கண்டு தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

" நீங்க என்ன சொன்னாலும் நா செஞ்சது தப்பு தான் குமரன் மன்னிச்சுக்கோங்க அப்படின்னு எல்லாம் சொல்ல தான் ஆசை குமரன் ஆனா ஏனோ உங்க கிட்ட அப்படி சொல்ல வரலை. ஏன்னு கேள்வி வந்தா அத நீங்களே வச்சிக்கோங்க ஏன்னா அதுக்கு தெரியலன்னு நா ஏற்கனவே பதில் சொல்லிட்டேன் " என்று அவள் சொன்ன போது இப்போது தான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான் குமரன்.


நெஞ்சில் நிறைவாள்......
 
Top Bottom