• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 24

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 24


தேவயானியின் பதில் கேட்டு என்ன மறுமொழி பேசுவது என்று தெரியாமல் விழித்த குமரனை பார்த்து,

" சாப்பிடுங்க குமரன், ஏன் பாத்துட்டே இருக்கீங்க? வேற தோசை சொல்லட்டுமா, டேய் தம்பி.... "

" அட அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தேவா, நா இதையே சாப்டுப்பேன் "

" நிஜமா தான் சொல்லுறீங்களா குமரன்? "

" நீங்க சாப்பிட சொல்லி கொடுத்த மாதிரியே சாப்பிடுறேன் பாக்குறீங்களா? " சிரித்து கொண்டே கேட்டவன் அவள் சொன்னது போல சாப்பிடவும் ஆரம்பித்தான்.
வழக்கமாக சாப்பிடுவதை காட்டிலும் அதிகமாக இரண்டு தோசை உள்ளே சென்றது குமரனுக்கு.
அவள் சொன்னது போல கொஞ்சம் கொஞ்சமாக உருட்டி உருட்டி உள்ளே தள்ள தள்ள வயிறு இன்னும் இன்னும் என்றது அதன் விளைவே அந்த அதிகபட்ச இரண்டு தோசை.
அவள் அளவிற்கு அவன் ரசனையாக அந்த தோசையை சாப்பிடவில்லை என்றாலும் கூட அவனது செயலில் இருந்த சிறுபிள்ளைத்தனம் அவளை வெகுவாக கவர்ந்தது. அவன் சாப்பிடுவதை தான் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு பார்த்தாள்.

அந்த தோசையில் கொஞ்சம் அதிகமாக கறியை வைத்து மடித்து வாயில் போட போன சமயம் அந்த தோசை கிழிந்து கீழே விழ அதிலிருந்த கறி துண்டுகள் சிதறி இலையில் விழுந்து குதித்து அவனது மேலிலும் விழுந்தது அதை கண்டு அச்சச்சோ என்று பதறி கையில் பிடிக்க நினைத்தவன் மொத்த தோசையையும் தனது மடியில் கொட்டிக் கொண்டதை பார்க்கவும் அவள் வாய் விட்டு சிரித்தாள், அந்த சிரிப்போடு அவனது முக பாவனைகளை ரசித்தாள் கண் கொட்டாமல்.

பின் ஒருவராக இருவரும் ரசனையோடு தங்களது இரவு உணவை முடித்து இருந்தார்கள். அந்த உணவிற்கான பணத்தை கொடுக்க குமரன் முன்வந்த போது சட்டென அவனது கையை பிடித்து தடுத்து தனது பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள் தேவயானி.
அவளது செய்கை நிச்சயமாய் குமரனுக்கு புதிது கல்லூரி காலங்களில் சில நண்பர்களுடனும் பெண் நண்பர்களுடனும் இதுபோன்று உணவகங்களில் உண்டிருக்கிறான், ஆனால் அதற்கான பணத்தை அவன் முந்தி வந்து கொடுத்து விடுவது தான் அவனது வழக்கம் அவனை தடுத்து யாரும் முந்திக் கொண்டு கொடுத்ததில்லை அப்படி கொடுக்க நினைத்தாலும் கூட அவர்களை தடை செய்துவிட்டு தானே கொடுத்து விடுவான். முதல் முறையாக தன்னை தடை செய்து பணத்தை கொடுத்து விட்ட நிகழ்வு அவனுக்கு புதிது.

" ஏன் தேவா நான் தான் கொடுத்திருப்பேனே "

" யார் கொடுத்தா என்ன குமரன். இந்த முறை நான் கொடுத்துட்டேன் அடுத்து வரும் போது நீங்க கொடுங்க அடுத்து வருவீங்க தானே? " அவள் சிரித்தாள்,
அவனும் சிரித்தான்.

அந்த சிரிப்போடு மீண்டும் தங்களது காரில் வந்து ஏறி அமர்ந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தவர்கள் கூடவே இளையராஜாவையும் அழைத்து கொண்டார்கள், ஆனால் இந்த முறை மௌனம் இல்லை குமரன் பேசினான், பேசும் முன்பாக நன்றாக உணவு உண்டதற்கு அடையாளமாய் ஒரு ஏப்பத்தை வெளியிட்டான் அந்த ஏப்பத்திலிருந்து அவனது பேச்சையும் ஆரம்பித்தான்.

" உண்மையிலேயே நல்ல சாப்பாடு தேவா ரொம்ப அருமையான சுவையோட இருந்துச்சு. கொஞ்சம் அதிகமாகவும் சாப்பிட முடிஞ்சது. அதுக்கு நீங்க சொல்லி கொடுத்த சாப்பிடும் முறையும் ஒரு காரணம். கொஞ்சம் கொஞ்சமா பிச்சு பிச்சு அதுல கறியை திரட்டி வச்சி அத உருட்டி உருட்டி சாப்பிட சாப்பிட இன்னும் இன்னும்ன்னு வயிறு கேக்குது, அடடா அப்படி ஒரு சாப்பாடு இங்க பாருங்க என் வயிறு கூட ஊத்தம்பட்டி போல ஊதி இருக்கு " அவன் காரின் இருக்கையில் அமர்ந்து தனது வயிறை தூக்கி காட்ட அது தேவயானிக்கு மேலும் சிரிப்பை கொடுத்தது வாய்விட்டு சிரித்தாள் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சிரிப்பு. அவளது சிரிப்பு அவனையும் இன்னும் அதிகமாக சிரிக்க வைத்தது அதே நேரம் தான் ஒரு குழந்தை போல வயிறை தூக்கி காட்டியது அவன் இன்னும் வளர வேண்டும் என்பதை சொல்லியது போல உணர்ந்தான்.

இப்படியாக இருவரிடமும் மன நிறைவாக நிறைந்தது அவர்களது அந்த முதல் பயணம்.

குமரன் இறங்க வேண்டிய அந்தப் பேருந்து நிறுத்தம் வரவும் அதன் ஓரத்தில் தனது காரை ஓரம் கட்டி நிறுத்தினாள் கீழே இறங்கிக் கொண்டவன்,

" அருமையான அனுபவத்தோடு அற்புதமான உணவு வாங்கித் தந்த தேவாவிற்கு நன்றி " குறும்போடு சொன்னான் அவளும் அதே குறும்போடு,

" நன்றி சொன்னதற்கு நன்றி " என்று சொல்லிவிட்டு தலையை ஒரு பக்கமாக சாய்த்து தனது கையை அவனுக்கு ஆட்டி விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து காரைக்கிழப்பினாள்.

செல்லும் அவளையே சில நிமிடங்கள் நின்று பார்த்தான்,
அவள் சென்ற அந்த கார் அவனது கண்ணில் இருந்து மறைந்த பின்பு தான் அவ்விடம் விட்டு வீட்டை நோக்கி நடந்தான் அந்த பேருந்து நிருத்தத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு நிமிட நடை பயணத்திலேயே குமரனின் வீட்டை அடைந்து விடலாம் அந்த ஒன்று இரண்டு நிமிடத்தையும் கூட விட்டு வைக்காமல் தனதாக்கி கொண்டாள் தேவயானி. குமரனின் நினைவில் முழுவதுமாக நிறைந்திருந்தது தேவயானியின் நினைவு.



நெஞ்சில் நிறைவாள்........
 
Top Bottom